என் உயிரே !!! என் உறவே !!! 13

அத்தியாயம்: 13

அன்று வழக்கம்போல்தான் காலையில் எழுந்தாள் கீர்த்தி. ஆனால் எழும் போதே ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை எச்சரிக்கை செய்ததோடு ,என்னவென்று தெரியாத ஏதோ ஒன்று அவளது மனதைப் பிசைந்தது. அப்படியும் இப்படியுமாக அலைபாய்ந்த மனதைச் சமாதானப் படுத்தியவள் சோர்வாகத் தன் தாயிடம் வந்தாள்.

கிச்சனில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம் ஏனோ தன் இயல்பான குறும்பைக் காட்ட நாட்டமின்றி மீண்டும் ஹாலுக்கே வந்து பேப்பரில் ஆழ்ந்தவள் சற்று நேரத்தில் இன்னும் கண்ணில் படாத தனது தந்தையைத் தேடி, சிந்தித்தபடி இந்நேரம் வாக்கிங் முடிந்து வந்திருக்க வேண்டுமே என்று மைதிலியிடம் வினவினாள்.

அம்மா அப்பா எங்கே வழக்கம் போல வாக்கிங்னு டேரா போட்டுடாராஎன்று ஆரம்பித்தவள் காபி எடுத்து வந்த தன் தாயின் முறைப்பில் சட்டென்று அடக்கி வாசித்தாள்

இல்ல என்ன ராகவ் நடமாட்டத்தையே காணோமே என்று கேட்டேன். என் பட்டு அம்மாவிற்கு ஆத்துக் காரரைச் சொன்னவுடன் கோபம் மூக்கில் வருதா என்றபடி தாய் கொடுத்த காபியை பருகினாள்.

மேற்கொண்டு அவளிடம் பதில் ஏதும் வாராமல் போக

அம்மா அப்பா எங்கேனு கேட்கிறேன்ல அதற்கு பதில் காணவே இல்லை. நீங்க பாட்டுக்கு போனால் எப்படி? ,”

இப்போ என்ன மாதம். அதனால் அவருக்கு பேங்கில் கணக்கு வழக்குகள் எல்லம் முடித்து அடுத்த வருடத்திற்கான் கணக்கீடுகளை ஆரம்பிக்க வேண்டும் . ஒவ்வொரு வருடமும் உனக்கு இதைத் தனியாகச் சொல்ல வேண்டும்என்றபடி உள்ளே போனாள் மைதிலி.