என் உயிரே !!! என் உறவே !!! 11

அத்தியாயம் 11:

பாலா அன்று சற்று உற்சாகமாக காணப்பட்டான். அவனது அப்பாவிற்கும் அவனுக்குமான பிரச்சனைகள் சரியானதாலா அல்லது தற்காலிகமாக ஒரு முடிவு எடுத்ததாலோ தெரியவில்லை. மேலும் பணியினை காரணம் காட்டி சௌந்தர்யாவினுடன் 10 நாட்களுக்குள் பேசுவதாக தந்தையிடம் கூறியவன் , அதற்கடுத்த சில நாட்களிலே சிம்பிளாக கோவிலில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றும், தான் சௌந்தர்யாவிடம் பேசும் வரை அவர்கள் வீட்டில் பேச வேண்டாம் என்றும் தந்தையிடம் சொல்லி வைத்திருந்தான். எப்படியோ அவன் திருமணம் முடிந்தால் போதும்,அதன் பிறகு ஆபரேசனில் உயிர் போனால் கூட நிம்மதியாக போகலாம் என்றவாறு ஜெகனாதன் நினைத்தான்

அன்றைய வேலைகள் என்ன என்று சில நிமிடங்கள் ஆராய்ந்தவன் கீர்த்தியை அழைத்தான். சில நிமிடங்களில் கீர்த்தியும் வந்தாள்.அவளிடம் கார்த்திக்கை பற்றி விசார்த்தவன் அவனை US அனுப்ப நினைப்பதையும் கூறியவன் , கார்த்திக் முன்னே இருந்த அலுவலகத்தில் அவனுக்கு அந்த அனுபவம் இருந்ததால் அதில் கார்த்திக்கு பிரச்சனை இருக்காது என்பதை கூறியவன் கீர்த்தி மிகவும் அஃபீசியலாக பேசியது போல், பார்த்தது போல் இருந்தது. கடைசியாக வெளியேறும் போது தனக்கிருந்த சந்தேகத்தைக் கேட்டவனுக்கு ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது.

கீர்த்தி அவனிடம் விடைபெறும் போது கீர்த்தி ஏதோ ஒரு வித்தியாசம் உங்களிடம் தோன்றுகிறது. பழகிய சில நாட்களிலேயே முதலில் நீங்கள் என்னிடம் பேசியதற்கும் , இந்த ஒரு வாரமாகப் பேசியதற்கும் ஒரு மாறுதல் இருக்கிறது. என்ன விசயம் என்று உண்மையிலயே தெரியாமல்தான் கேட்டான்.

அப்படியா சார்என்று அர்த்த புன்னகையினை விரித்தவள் ஓருவேளை முதலில் எல்லாம் யாரை பற்றியாவது ஹிஸ்டரி சொல்லிட்டு இருந்திருப்பேன். ஒருவர் என்னிடம் சொன்னதிலிருந்து அதை விட்டு விட்டேன். அதனாலும் இருக்கலாம் என்றவள் பொய்யான வருத்ததுடன், ஆனால் குரலில் கடுபடித்தது.

அதைக் கேட்ட பாலா சட்டென்று சிரித்து விட்டான். இதுவரை அவனிடத்தில் புன்னகையினை மட்டுமே கண்ட கீர்த்திக்கு, இப்படி அவன் வாய் விட்டு சிரித்து அவள் பார்த்தே இல்லை.முதலில் அவன் சிரிப்பைப் பற்றின ஆராய்ச்சியில் மனம் போனாலும் உடனேஇப்பொழுது நாம் என்ன சொல்லி விட்டோம் இவன் சிரிக்கும் அளவிற்கு என்று முழித்தபடி நின்றாள்

கீர்த்தி நான் அன்று சொன்ன காரணத்தினால்தான் இவ்வளவு கோபமா, தப்பான அர்த்ததிலோ இல்லை என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்திலோ சொல்ல வில்லை. பெண்களுக்கு ஒரு விசயம் தெரிந்தால் யாரிடமாவது சொல்லா விட்டால் தலையே வெடித்து விடும் போல் இருக்குமாம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதனால்தான் அப்படி சொன்னேன். என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

அப்படி ஒரு தவறான அபிப்ராயம் பெண்கள் மீது இருந்தாலும் அதற்கு நான் தான் கிடைத்தேனா. அப்படிப் பட்ட பெண்கள் இருந்தாலும் நான் அப்படி பட்டவள் இல்லை. நான் உங்கள் விசயத்தை எல்லோரிடனும் சொல்லிவிடுவேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள். நான் எந்த வகையிலாவது யாரைப் பற்றியாவது சொல்லி பார்த்திருக்கிறீகளா இல்லை உங்களிடம்தான் சொல்லி இருப்பேனா. குறைந்த பட்சம் என்னிடம் எனக்கு உங்களைப் பற்றி தெரிந்ததினை ரகசியமாக வைத்திருக்கும்படி சொல்லியிருந்தாலாவது நாகரிகமாகவது ஆகியிருக்கும்.ஆனால் நீங்கள் அன்று என்னிடம் கூறியது எப்படி இருந்தது என்றால் நான் ஒரு டமாரம் என்பதை உறுதி செய்து,அதற்கேற்றார் போல் பேசினீர்கள்.

அவள் பட படவென்று பேசிக் கொண்டிருக்கும் போதே

அய்யோ கீர்த்தி , நான் அன்று பேசியது ஏதோ விளாயாட்டாகத்தான் கூறியது.உண்மையிலயே நான் உங்களிடம் இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொல்லத்தான் அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும் பொழுது சொல்ல நினைத்தேன்.ஆனால் அம்மா வந்தவுடன் மறந்து விட்டேன்.அதன் பிறகு உங்கள் வீட்டில் உங்க குடும்பத்தை பார்த்த பிறகு நானும் ஏதோ விளையாட்டாய் பேசி விட்டேன். அது உங்க மனதை புண்படுத்தி இருந்தால் , i am so sorry கீர்த்தி. அந்த மாதிரி தவறு இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். என்ற கொஞ்சம் நெகிழ்வாய்ப் பேசினான்.

அதைப் பார்த்த கீர்த்திக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. சார் என்று இழுத்தவள் எனக்கும் உங்கள் மேல் வருத்தம் எல்லாம் இல்லை. என்னைப் பற்றி தவறாக எண்ணி விட்டீர்களோ என்றுதான் கோபம். மற்றபடி ஒன்றுமில்லை. என்றவுடன்

அப்பா கீர்த்தி நார்மாலா பேச ஆரம்பிச்சிட்டாங்க என்றவன் அப்புறம் கீர்த்தி நீங்க என் அம்மாவுக்கு என்ன மந்திரம் போட்டீங்க அன்னைக்கு முழுவதும் கீர்த்தி புராணம்தான் போங்க. எனக்கும் வேற திட்டு உங்களால் .பிள்ளை என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று பாவம் போல் கூறியப்போது அவளையுமறியாமல் கன்ன‌ங்கள் சிவந்ததை கட்டுபடுத்தியபடி

சார் இப்போ நல்லா இருக்காங்களா சார்என்றவுடன்

இவ்ளோ நேரம் மேடத்திற்கு கேட்கத் தோண வில்லை. நான் மன்னிப்பு கேட்டவுடன் கேட்கத் தோணுகிறதா.

இப்போது கீர்த்தி குற்ற உணர்வில் தடுமாறியபடி அப் ..அப்படியெல்லாம் இல்லை சார்.

அவளது தடுமாறலை உணர்ந்தவன் ஒகே ஒகே நான் ஒண்னும் சொல்ல வில்லை. நல்லா இருக்கார். ஒரு மாதத்திற்கு பிறகு சர்ஜரி. அது நல்ல விதமாக முடிந்து விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை

எனும் போதே அவனுக்கு இன்டர்காமில் அழைப்பு வந்தது.

அனுப்புங்கள் என்றபடி கீர்த்தியிடம் நிமிர்ந்து் விரக்தியான புன்னகையினை தவழ விட்டவன் எல்லாம் என்னால்தான். என் மேல் அவருக்கு இருக்கும் பாசமே அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை.

அவனுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் அவனிடம் சரி சார் நீங்கள் கூறிய விசயத்தை நான் கார்த்திக்கிடம் ஆலோசித்து விட்டு பிறகு வந்து பார்க்கிறேன்என்றவளிடம்

சற்று முன் அவன் பேசிய விதத்தினை யோசித்து விட்டு தலை முடியை கோதியபடி இயல்புக்கு மாறியவன்

ஒகேகீர்த்தி உங்க ஃப்ரெண்ட் தானே கவிதா அவங்க இந்த வீக்கோட ரிலீவ் ஆகிறார்கள் போலிருக்கு.

என்ற போதே கவி அந்த அறை வாசலில் நுழைந்தாள்.

அனுமதி பெற்று உள்ளே வந்தவள், கீர்த்தியை ஒரு நொடி நோக்கியவள் பிறகு பாலாவிடம் தான் இந்த வாரம் ரிலீவ் ஆகப் போகிற விசயத்தை கூறியவள், இது தான் பாலாவிடம் பேசப் போகின்ற கடைசி தருணமாகக் கூட இருக்கலாம் என்றபடியாலும், மேலும் கீர்த்தியும் உடன் இருந்ததால் கொஞ்சம் துடுக்காக பேச ஆரம்பித்தாள்.

தன்னுடைய ரிலீவிற்கான காரணத்தைக் கூறியபடி

சார் எனக்கும் இந்த ரீலீவ் பிடிக்க வில்லை தான். எனது குடும்பத்தினால் தான் போக நேர்கிறது. மற்றபடி இங்கு கிடைத்த அனுபவத்திற்கும் , எனது அறிவின் முன்னேற்றத்திற்கும் உங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இதை எனது எதிர்காலத்திற்கும் பெரிய அடிப்படையாக நினைக்கிறேன் சார்.

என்று ஃபார்மலாகப் பேசியவள் முடித்துவிட்டு என்ன நினைத்தாளோ தெரியவில்லை

சட்டென்று சார் என் ஃப்ரென்ட் கீர்த்தி நான் போன பிறகு தனியாளாய் தவிப்பாள். கொஞ்சம் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். என்று அப்பாவியாய் கூறியபடி வழக்காமான துடுக்குத்தனத்தினை வெளிப்படுத்தினாள்.

அவள் கூறியதுதான் தாமதம் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்து முறைத்தவள்,

ஓகே சார் நான் கிளம்புகிறேன் என்றபடி கிளம்பியவளுக்கு புன்சிரிப்புடன் தலையாட்டிவிட்டு கவியை நோக்கினான் பாலா.

பாலா கீர்த்தியை பார்த்து தலை அசைக்கும் வேளையில் இதுதான் சமயம் என்று அவனை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தவள், அவன் சட்டென்று திரும்பியவுடன் சற்று சுதாரித்தாள்தான், ஆனாலும் பேச வார்த்தை ஏதும் வரவில்லை.

தென் சார் . என்றபடி அவனது பதிலை எதிபார்த்துக் காத்திருந்தாள்

கவிதா , உங்களை மாதிரி ஒரு நல்ல ,திறமையான எம்ப்ளாயி ரிலீவ் ஆவது க்ளோபெல் டெக்குக்கு நிச்சயமாய் இழப்புதான். இருந்தாலும் உங்கள் சூழ்நிலையினயும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். any way all the best for யொஉர் futuer. என்று பேசியவன் , முடிக்கும் போது then உங்க ஃப்ரென்ட் கீர்த்தியயும் நான் பார்த்துக் கொள்கிறேன். மேலும் இன்னும் வேறு யாராவது நீங்கள் போகிறீர்கள் என்று தவிப்பவர்கள் இருக்கிறீர்களா சொல்லுங்கள் அவர்களையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன். எங்களுக்காக இத்தனை நாள் உழைத்திருக்கிறீர்கள், இது கூட செய்யாவிட்டால் எப்படி கவிதா என்றவுடன்

அவனை சற்று ஆழமாகப் பார்த்தவள் அவனது முகத்தில் கேலியாகப் பேசியதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை.அவனிடம் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டேனோ என்று யோசித்த கவி இப்போது தன் வால்தனத்தையெல்ல்லாம் மூட்டை கட்டிவிட்டு

சாரி சார், நான் தப்பாக எதுவும் பேசியிருந்தால், மன்னித்து விடுங்கள் கீர்த்தி இருந்ததினால் அப்படி பேசி விட்டேன்.

ஹேய் கவிதா நானும் கேலியாகத்தான் சொன்னேன். இதைப் போய் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள். கீர்த்திக்கு ஏற்ற ஃப்ரெண்ட் தான் போல. ரெண்டு பேரும் தொட்டாசிணுங்கிகள்

என்றபடி சிரித்த வுடன்

கவிக்கு இபோதுதான் நிம்மதியாகி விட்டிருந்தது. பிறகு சிறிது நேரம் கவியிடம் டெல்லியில் அவள் வேலை தொடர்வதைப் பற்றி விசாரித்தவன் , தனக்குத் தெரிந்த சில முகவரிகளை அவளுக்கு வழங்கினான்.

எல்லாவற்றையும் விசாரித்த பின் எழுந்த கவி சார் நான் அந்த லிஸ்டை எப்போ கொண்டு வர வேண்டும்என்று இதழில் கேலியுடன் கேட்டாள்

அவள் என்ன கூறுகிறாள் என்று தெரியாமல் முழித்தவன், புருவங்களை சுருக்கியபடி எந்த லிஸ்ட் என்று கெட்டவனிடம்

கவி சிரித்துக் கொண்டே என் பிரிவால் தவிப்பவர்கள் லிஸ்ட் என்றவுடன் சட்டென்று வாய் விட்டே சிரித்தே விட்டான்.

நீங்க கேட்டு நான் செய்யாமல் போனால் எப்படி சார்

என்றாள் கவியும் விடாமல்

கவிதா ரிலீவ் ஆகப் போகிறோம் என்றவுடன் இப்படியா

கவியும் இப்போது கூடுதல் தைரியம் வந்தவளாய்

அப்படியெல்லாம் இல்லை சார், எனக்கு இன்றுதான் உங்களிடம் பேச வாய்ப்பே கிடத்திருக்கிறது. இது மட்டும் எனக்கு முன்பே கிடைத்திருந்தால் என்றபடி நிறுத்தினாள்

இப்போது பாலா……

கிடைத்திருந்தால் ????” ….. என்றவன் கேள்வியோடு அவளை நோக்கினான்.