என் உயிரே !!! என் உறவே !!! 10

அத்தியாயம் 10:

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி இருந்தது.கீர்த்தியின் வீட்டில் வழக்கம் போல் கலகலப்பும், பாலாவின் வீட்டில் அமைதியும் நிலவியதே தவிர வேறு எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டிருக்க வில்லை.

பாலாவிடம் அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவனிடம் ஒரு வார்த்தை கூட ஜெகனாதன் பேச வில்லை. பாலாவும் அருந்ததியும் எவ்வளவோ முயன்றும் அவர் தன் பிடிவாதத்தை விட வில்லை. பாலாவும் அவராகப் பேசும் வரை விட்டுப் பிடிப்போம் என்று விட்டு விட்டான்.

கீர்த்தி வீட்டிலோ கீர்த்தியிடம் வினோத்தைப் பற்றியோ அவனது ஜாதகம் பற்றியோ , அங்கு தற்போது உள்ள நிலைமையோ தெரிவிக்கப் பட வில்லை.

அன்று வழக்கம் போல் தனது கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஜெகனாதனுக்கு ஏனோ அவரது உடல்நிலை நார்மலாய் இல்லாதது போல் இருந்தது. இருப்பினும் எப்போது எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை போட்டபடி, அருந்ததியிடம் எதுவும் கூறாமல் அலுவலகத்திற்கு கிளம்பினார். ஆனால் அருந்ததியோ அவரது முகவாட்டத்தை படித்தவளாய்

என்னங்க முகமெல்லாம் வேர்த்திருக்கு, என்ன பண்ணுதுஎன்று கேட்டவளிடம்இங்க எல்லாத்தையும் எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவரவர் இஷ்டதிற்கு வாழுகிற வீட்டில் யாருக்கு என்ன பண்ணினால் என்ன

என்றபடி பாதி சாப்பாட்டில் எழுந்தவர் அருந்ததி பதறியபடி தடுத்த போது அவளைப் பார்த்து முறைத்து விட்டு , அருகில் அமர்ந்திருந்த மகனை அர்த்தப் பார்வை பார்த்து விட்டு எழுந்தார்.

அவரின் பின்னாலே சென்ற தன் அம்மாவைப் பார்த்த பாலா ஒன்றும் பேசாமல் வாசலுக்கு வந்தவன் குமாரை அழைத்தான். அவன்தான் ஜெகனாத