என் உயிரே !!! என் உறவே ??? -1

அத்தியாயம்: 1

காலைக் கதிரவன் தன் கரங்களினால் மெல்ல மெல்ல இருளென்னும் போர்வையினை பகலெனும் மேனியிலிருந்து விலக்கிக் கொண்டிருந்தான். கதிரவனைக் கண்ட பறவைகள் அக்கதிரவனை வரவேற்கும் விதமாக ஆர்பரித்து தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. சென்னையின் வழக்கமான பரபரப்பு மிகுந்த காலை தொடங்கியிருந்தது. ஆனால் மைலாப்பூரில் அமைந்திருந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் 4 வது மாடியின் ஒரு ப்ளாட்டில், இதையெல்லாம் கண் மூடி ரசித்துக் கொண்டே, விழிப்பு வந்தபோதும் எழ மனம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் கீர்த்தனா என்கின்ற கீர்த்தி. இவள்தான் நம் கதாநாயகி.

கீர்த்தனா- இறைவன் மிகுந்த சந்தோசமான தருணத்தில் படைக்கப்பட்ட படைப்பு. அறிவு, அழகு, பண்பு, செல்வம் இவை அனைத்தும் அப்படைப்பை நிறைவு செய்யும்வண்ணம் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பியிருந்தான். அழகான அன்பான தாய், தந்தைக்கு தவமாய் பிறந்த ஒற்றை ரோஜா. தந்தை ராகவன் வங்கி ஒன்றில் மேனேஜராக இருக்கின்றார். தன் ஒரே செல்ல மகளின் தேவைக்கும் அதிகமான வருமானம். தாய் மைதில…, கீர்த்தி, ராகவ் மட்டுமே தனது உலகமாய் வாழ்பவள். ராகவனை திருமணம் செய்தாள் என்ற ஒரே காரணத்தால் உறவுகளினால் உதறி தள்ளப்பட்டவள். ஆனாள் அந்த மன வருத்தமெல்லாம் ராகவனின் அன்பினால் துடைக்கப்பட்டு, வாழ்க்கையை நிறைவுடனும், மகிழ்வுடனும் அனுபவித்துக்க் கொண்டிருந்தாள்

கீர்த்தி B.E(CS)- படித்து முடித்து இன்று ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.

கீர்த்திஎன்ற மைதிலியின் குரல் கீர்த்தியின் அருகாமையினில் கேட்டது.

தனது தாயின் குரலைக் கேட்ட கீர்த்தி என்னம்மாஎன்று தூக்க கலக்கம் மாறாமல் சிணுங்கினாள்.

மணி என்னாகிறது பார்?அப்புறம் லேட்டாகுதுன்னு என்ன படுத்துவ,எழுந்திரும்மா

என்று கெஞ்சலுடன் எழுப்பினாள். ஏனென்றால், கீர்த்தியிடம் காரியம் ஆக வேண்டுமென்றால் கோபமோ அல்லது அதிகாரமோ எடுபடாது. கொஞ்சம் இலகுவாக பேசினாள் போதும். மைதிலியின் குணமும் அப்படித்தான். தாயை போல பிள்ளை என்று சும்மாவா சொன்னார்கள். மைதிலியும் அந்த பாணியைத்தான் கடை பிடிப்பாள் மகளிடம். இன்றும் அப்படித்தான்.

தாயின் நெகிழ்வான குரலில் மெதுவாக கண்களை திறந்த கீர்த்தி,

டைம், என்னம்மா இவ்ளோ சீக்கிரம் எழுப்பறீங்கஎன்று போர்வையை விலக்காமல் வினவினாள்.

”6.30 டாஎன்ற மைதிலியிடம்,

அம்மா கரெக்டா சொல்லுங்கம்மாஎன்றபடி மீண்டும் படுக்கையில் புரண்டாள்.

உனக்கு வர வர கொழுப்பு ஜாஸ்தி அதிகமாயிட்டே வருது. உன்ன…….. என்று பொய்யான கோபத்துடன் கடிந்தவள், 6.27 ஆகுது. போதுமா இப்ப எழ போகிறாயா இல்லயாஎன்ற மைதிலியிடம்,

அய்யோ ,அம்மா, இன்னும் 3 minutes இருக்கிறது. என் டைம waste பண்ணீட்டீங்களேஎன்று அலுத்தவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் போர்வைக்குள் சரண் புகுந்தாள்.

இனி இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த மைதிலி, எழுந்து றெக்கை கட்டி பறக்கும் போது உனக்கு இருக்குடி என்று முணுமுணுத்தவாறு கிச்சனுக்குள் புகுந்தாள்.

அதன் பிறகு குளித்து முடித்து கீர்த்தி வெளியே வந்த பொழுது, ராகவன் தன் ஜாகிங்கை முடித்துவிட்டு வந்து நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருந்தார்.

குட் மார்னிங்ப்பாஇப்பத்தான் ஜாகிங் முடித்து விட்டு வருகிறீர்களா? என்றபடி அவர் அருகில் அமர்ந்து கீர்த்தியும் பேப்பரில் கண் பதித்தாள்.

குட் மார்னிங்டா.” என்றவர் இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகி விட்டது என்று கூறி அதற்குரிய காரணத்தையும் விளக்கினார்

.”ஓ அப்படியாப்பாஎன்றவள் கிச்சனில் மும்முரமாய் வேலையில் இருந்த மைதிலியை நோக்கியவள், தன் குறும்பை தொடங்கினாள்.

அப்பாஎன்று இழுத்தவள், நீங்க இப்படி லேட் பண்ணிடுவீங்க அப்புறம் ஆஃபிஸ் கிளம்பும் போது என்னம்மோ அம்மாவினால்தான் லேட் என்பது மாதிரி லேட் ஆகிடுச்சு லேட் ஆகிடுச்சுனு கால்ல சுடுதண்ணி கொட்டுன மாறி குதிப்பீங்க. என்னங்கம்மா நான் சொல்வது சரிதானே என்று மைதிலியையும் தன் சப்போர்ட்டாக இழுத்தாள்.

ஹாலில் அவள் பேசியது எல்லாம் மைதிலியிம் காதில் விழாமல் இல்லை, தினமும் கீர்த்தி என்ன செய்வாளோ அதையெல்லாம் தன் கணவன் செய்வது போல மாற்றி சொல்லிக் கொண்டிருந்த தன் மகளின் குறும்புத் தனத்தை ரசித்தவாறே செய்வது போல தன் மகளின் குறும்புத் தனத்தை ரசித்தவாறே வேலை செய்து கொண்டிருந்தாள். கீர்த்தியோ ராகவை அத்துடன் விடுவதாக இல்லை.

ராகவ், வர வர சரி கிடையாது நீ. அம்மாவுக்கு தெரியாமல் அங்க எந்த பொண்ணாவது கம்பெனி குடுக்குதா என்ன. ஜாகிங் பண்ற டைம் அதிகமாய்ட்டே வருதே. விடக் கூடாதே இப்படியே….” என்றபடி கண் சிமிட்டினாள்.

ஏன்டா? இன்னைக்கு யாரும் உன்கிட்ட மாட்டலயா, நான்தான் கிடைத்தேனாஎன்றார் அப்பாவியாக‌

அவர்கள் இருவருக்கும் காஃபி எடுத்து வந்த மைதிலி, கீர்த்தியை பார்த்து,

உனக்கு செல்லம் குடுத்து வாய் ஜாஸ்தி ஆகி விட்டது. இந்த வாயெல்லாம் இந்த வீட்டோட நிறுத்திக்க. என் அண்ணன் வீட்டில் மானத்த வாங்கிடாத. பாவம் விநோத் என்றாள்.

சீரியஸாகவே முகத்தை வைத்துக் கொண்டு

அப்படி ஒரு பாவம் எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்க மருமகனுக்கு வேற ஒரு பொண்ண பாருங்க.யாரும் ஒண்ணும் இங்க அவன மேரேஜ் பண்ண வேண்டுமென்று ஒத்தை காலில் நிற்க வில்லைஎன்றவள் தனது த‌ந்தையிடம் திரும்பி,

அப்பா அவன என் பெயரை ஒழுங்கா கூப்பிட சொல்லுங்க முதலில்என்றவ‌ளிடம்

நீ விநோத்தை மரியாதையாக கூப்பிட try பண்ணுடாமரியாதையாக என்ற இடத்தில் அழுத்தி திருத்தினார்.

இந்த விசயத்திலாவது உங்க பொண்ண சப்போர்ட் பண்ணாம இருக்கறீங்களே அந்த மட்டில எனக்கு சந்தோசம்என்றாள் மைதிலி ராகவனை பார்த்து.

மைதிலி கொஞ்சம் டென்சனாக இருப்பதை உணர்ந்த கீர்த்தி, ராகவனிடம் அப்பா அம்மாவுக்கு என்ன ஆச்சு,ரொம்ப சூடா இருக்காங்கஎன்று கேலியாகக் கேட்டவள், மைதிலியின் அருகில் சென்று அமர்ந்து,

அம்மா, இந்த ஜாகிங் மேட்டரெல்லாம் சும்மா. நீங்க கண்டதெல்லாம் நினைத்து feel பண்ணாதீங்க. ராகவ் யாரையும் பார்க்க மாட்டான். ராகவத்தான் பொண்ணுங்க பார்ப்பாங்க. அதுக்கு காரணம் இந்த ராகவதான். பின்ன இந்த வயதில் தலைக்கு டை அடிச்சு, exercise பண்ணி இன்னும் சின்ன பையன் மாதிரி இருந்தா அந்த பொண்ணுங்களும் என்ன பண்ணுவாங்க. ஆனா நீ கவலை படாத மைதிலி ,இனிமேல் ராகவ்க்கு காவலா நான் போகிறேன்

என்ற மகளை நினைத்து சிரித்தாள் மைதிலி. ஏனென்றால் 6.30க்கு எழுப்பினாலே எழ சோம்பேறித்தனம் படுபவள், தினம் 5 மணிக்கு எழுந்து ஜாகிங் செல்லும் தனது கணவனுக்கு காவலாக செல்லுவதாய் சொன்னால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்.தனக்கு காவலாய் வருவதாக சொல்லிக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கீர்த்தியை,

ஏய்என்று ராகவ் துரத்த, அம்மா அப்பாவிடம் இருந்து என்னை காப்பாதுங்க என்று மைதிலியின் பின்னால் சென்று கட்டிக் கொண்டாள்

நான் எப்பவும் என் புருசன் கட்சிதான்பா என்றபடி, கீர்த்தியை தன் கணவனிடம் மாட்டி விட்டாள் மைதிலி.

இப்ப என்ன பண்ணுவீங்க மேடம்என்று அவளது காதைத் திருகினார் ராகவ்.

எனக்கு காவலா நீங்க வறீங்களா மேடம். அப்புறம் வேறன்ன மேடம் பண்ணுவீங்கஎன்றவரிடம்,

சரி சரி விடுங்க ,எனக்கு இந்த வீட்டில் சப்போர்ட் பண்ண யாரு இருக்காங்க,

அய்யோ கீர்த்தி, இப்படி தனியாளா நிற்கிறாயே உன் நிலமை இந்த உலகத்தில் வேறு யாருக்கும் வர கூடாதுஎன்று புலம்பியவாரே தனது அறைக்குள் சென்ற மகளை ரசித்தவாரே சிரித்தனர் அவளை பெற்றவர்கள்.

தனது அறைக்குள் சென்றவள் அலுவலகம் செல்ல தயாரானாள். கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தவளுக்கு இந்த உலகத்தின் கொடுத்து வைத்தவர்களின் பட்டியலில் தனது பெயர்தான் முதல் இடமாக இருக்க வேண்டும் என்று நினைத்த பொழுதே கண்ணாடியில் பார்த்த அவள் முகம் பூரித்திருந்தது

பின்னெ இருக்காதா. அவளை பொறுத்த வரை அவளது தந்தை அவளுக்கு ஒரு ஹீரோ, தாய் ஒரு தேவதை. அவள் மனம் நோகாமல் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து பண்ணுபவர்கள். அவளை பொருத்தவரை அவளது வீடு ஒரு பிருந்தாவனம்.

அவளது கல்லூரியில் கூட பெரும்பாலான அவளது பேச்சு ராகவ், மைதிலியை பற்றிதான் இருக்கும்.அதிலும் ராகவை பற்றி தினமும் ஒரு வார்த்தையாவது பேசாவிட்டால் அவளுக்கு தூக்கம் வராது. சில நேரங்களில் மைதிலிக்கு சுற்றியெல்லாம் போடுவாள்

என்னடா, என்ன விசயம் அம்மாக்கு இப்படி ஐஸ் வைக்கிறாய் . என்று விசாரித்தால், நீங்க வேறப்பா நீங்க, ஸ்மார்டா, சூப்பரா இருந்துட்டு அம்மாவ பிருத்விராஜ்,சம்யுக்தாவா தூக்கிட்டு வந்த மாதிரி தூக்கிட்டு வந்துட்டீங்க, உங்க கதையை சொன்னாள் என் friends லாம் அம்மா மேல கண்ணு வச்சுட்டாங்க என்றபடி ஊருக்கண்ணு, உலகுக் கண்ணு, then last இந்த கீர்த்தி கண்ணு என்றபடி துப்புங்கம்மா என்பாள் கீர்த்தி.

கீர்த்திம்மா உனக்குதான் வேலை இல்லை ,நீ பண்ற வேலைக்கெல்லாம் என்ன வேற கூட்டு சேர்க்கிரியா என்று பொய்யாகச் சலிப்பாள்.

ஹேய், மைதிலி, சும்மா பந்தா பண்ணாதே, ஏதோ எங்க அப்பாவை மேரெஜ் பண்ணினதுனால் இவ்ளொ மவுசு .இல்லைனா யாரு மதிக்கப் போறா என்று மிரட்டி பணிய வைப்பாள்

கீர்த்திம்மா லேட் ஆகுது. லஞ்ச் பாக்ஸில் லஞ்ச் எடுத்து வச்சுட்டேன். சாப்பிட வாஎன்ற மைதிலியின் குரல் கேட்டு வேகமாய் தனது அலங்காரத்தை முடித்து வெளியே வந்தவள் பேருக்கு இரண்டு வாய் போட்டுக் கொண்டு கிளம்பினாள் கீர்த்தி. ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள், பால்கனியில் நின்ற ராகவ்,மைதிலியை மேலே பார்த்தபடி கையசைத்துவிட்டு அவளின் அபார்ட்மெண்ட் கேட்டை தாண்டினாள். அவள் போகும் வரை பார்த்துக் கொண்டிருந்த ராகவ், மைதிலியிடம், நம்ம கீர்த்தி எப்போதும் இப்படி சந்தோசமா இருக்க வேண்டும். இதுதான் நான் கடவுளிடம் வேண்டுவது. இந்த சந்தோசம் அவ போகப் போற இடத்திலயும் இருக்கணும். அது போதும் எனக்கு.என்றார் அவள் போன திசையை பார்த்தபடி.

மௌண்ட் ரோடு சிக்னலில் நின்று கொண்டிந்த கீர்த்தி மணியை பார்த்த பொழுது 8.45 ஆகியிருந்தது. “ச்ச்சேய்என்று எரிச்சலுடன் சிக்னலை நோக்கியவள்,இன்னும் 15 நிமிடத்தில் ஆஃபிஸில் இருக்க வேண்டுமே. இன்று லேட்தான் என்று நினைக்கும் போதே சிக்னல் மாறியிருந்தது. வேகமாக பைக்கை ஸ்டார்ட் செய்தாள் கீர்த்தி. ஆனால் கீர்த்தியின் பின்னால் நின்றிருந்த ஒரு பைக்காரன், கிடைத்த கேப்பில் அவர்களுக்கு முன்னால் நின்