அன்பே நீ இன்றி -51

அத்தியாயம் 51:

ராகேஷ்….. தீக்‌ஷாவின் உடல்நலம் குறித்து என்று தன் தாயின் மூலம் எப்போது கேள்விப்பட்டானோ.. அன்றிலிருந்தே இந்தியா வந்தால் அவளைப் பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்தான்…. அதனால் இந்தியா வந்திறங்கிய உடனே தன் மனைவியுடன் அவனைப் பார்க்க வந்து விட்டான்.. அதிலும் தன் கணவனோடு மீண்டும் அவன் வீட்டிற்கு போய் வாழுகிறாள் என்ற உடனே… ஓரளவு சரியாகி விட்டாள் என்றுதான் நினைத்தான்….

அவளுக்குத் தன்னை ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ தீக்‌ஷாவைப் பார்த்து பேசி… அன்று நிச்சயத்திற்கு வராமல் கடிதம் எழுதி வைத்து போனதற்கெல்லாம் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றே வந்திருக்க…

தீக்‌ஷாவோ…. மயங்கி மாடிப்படியிலேயே அமர்ந்து விட…. கலைச்செல்வி.. அவள் தடுமாறும் போதே பார்த்ததால் ஓடோடி போய் தன் மருமகளை தாங்கிப்பிடித்து விட்டாள்….

’தீக்‌ஷா’ என்ற கலைச்செல்வியின் அலறலில்… விஜய் திடுக்கிட்டு எழுந்து வர… அவன் அன்னை தீக்‌ஷாவின் முன் இருக்க…. விஜய்க்கு அப்போதுதான் நேற்றைய தன் தவறு புரிந்தது…..

அவள் மாத்திரை போடவில்லை என்று சொன்னாளே… சாதரணமாக விட்டு விட்டேனே.. பதறியவன் மனைவியின் அருகில் சென்ற போதுதான்,…. அருகில் பதட்டமாய் இருந்த ராகேஷையும்.. அவன் குடும்பத்தையும் கவனித்தான்…

இவர்கள் யார் என்ற யோசனை விஜய்க்குத் தோன்றினாலும்… அதில் தன் சிந்தையைத் திருப்பாமல்…. மனைவியைத் தூக்கியவன் … தங்கள் அறைக்கு கொண்டு சென்றான்… வழக்கமாய் சில மணி நேரத்திற்குள் தன் நிலைக்குத் திரும்புவள் அன்று நினைவே திரும்பாமல் இருக்க் … விஜய் மனதுக்குள் கிலி பரவியது….

அடுத்து நொடிப் பொழுதும் தாமதிக்காமல் மருத்துவமனையில் சேர்த்தவன்…….. போராட.. உடலிலும் மனதிலும் தெம்பின்றி…. சோர்ந்து உட்கார்ந்து விட்டான்…………….

யாரிடமும் பேசவில்லை…………. யாரையும் பார்க்க பிடிக்க வில்லை….

மனமெங்கும் பீதி நிறைந்திருக்க… உண்மையிலேயே பயம் வந்திருந்தது…. கெஞ்சிக் கேட்டாளே…. நினைவு வர வில்லை என்றால் கூட என்னை ஏற்றுக் கொள் என்று….. நான் பிடிவாதம் பிடித்து விட்டேனோ….

கடவுளே என் தீக்‌ஷாவாக அவள் வரவிட்டாலும் பரவாயில்லை… எந்த ஆபத்துமில்லாமல் திருப்பித் தந்துவிடு…

இதுவே அவன் பிரார்த்தனையாக இருக்க…. மருத்துவர்கள் 24 மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று வேறு சொல்லிச் செல்ல…..

அனைவரின் முகத்திலும் வேதனை ரேகைகள் மட்டுமே……………

ராகேஷ் வேறு முற்றிலுமாய்க் குழம்பியிருந்தான்…. தன்னால் தான் மீண்டும் தீக்‌ஷாவுக்கு இந்த நிலையோ என்று ஒருபுறம் கலங்க…. தீபன் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு போய் விட்டான்….

விஜய்…. ஜெயந்தியைக் கூட அங்கிருக்க அனுமதிக்க வில்லை….

முதலில்தான் விஜய்யை விரோதியாக பாவித்து.. கோபப்படுவாள்… இப்போதுதான் அந்த எண்ணமெல்லாம் இல்லையே…. கணவன் என்று தெரிந்து அவளும் ஏற்றுக் கொண்டு விட்டாளே….. அதனால் தான் மட்டும் அங்கிருப்பதாக கூறி அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு…. காத்தமுத்து முருகேசனை மட்டும் தன்னோடு வைத்துக் கொண்டான்…

சாரகேஷ் மற்றும் பார்வதி தன் தாயுடன் வந்திருந்தனர்.. சக்தியின் பெற்றோர் கூட பார்த்துவிட்டுச் சென்றனர்….

நேரம் மெல்ல மெல்ல கரைய ஆரம்பிக்க… மாலையும் வந்தது… இரவும் ஆனது… தீக்‌ஷா வின் உடல் நிலையில் மாற்றம் ஏதுமில்லாமலே இருந்தது….

விஜய் தீக்‌ஷாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்……………… கீழே தன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று தகவலால்………. புடவை அணிந்தே கீழே வந்திருந்தாள் தீக்‌ஷா……… அதே புடவையில் தான் இப்போதும் இருந்தாள்……… தலையில் வகிடில் வைத்திருந்த குங்கும் கூட கலையாமல் இருந்தது…………..

விஜய் இந்த முறை கலங்க வில்லை…. துடிக்க வில்லை…. வெறுமையான எண்ணங்கள் மட்டுமே.......... வெறித்தபடி அமர்ந்திருந்தான்………….. எல்லாவகையிலும் துடிக்க வைத்து விட்டாள்…. மரண வலி மட்டும் தான் பாக்கி…. அதையும் தனக்குக் கொடுக்க நினைத்தாள் என்றால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்….. அப்படியாவது தன்னவளின் மனம் சாந்தி அடையும் என்றால்…. அதைத் தாங்கிக் கொள்ளவும் தயாராக இருந்தான் அவன்…

இந்த நிலைக்கு வந்த பிறகு அவனால் அறைக்குள்ளேயே இருக்க முடியவில்லை…. அறைக் கதவை மூடியபடி…. தீக்‌ஷாவை விட்டு வெளியேறி வந்தவன்……… காத்தமுத்து முருகேசனைப் பார்க்க…… இருவரும் அங்கிருந்த பெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்க……. அவர்களை தொந்தரவு செய்யாமல்……………. மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து அங்கிருந்த தூணில் சாய்ந்தபடி…….. சன்னல் வழியே மனைவியை வெறித்தபடி அமர்ந்திருந்தான்….

காலையில் இருந்து சாப்பிடக் கூட இல்லை……… தண்ணீரை மட்டுமே அருந்திக் கொண்டிருந்தான்…. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது….

தன்னவள்… ஒரு ஆகாரம் இன்றி இருக்கும் போது அவனுக்கு என்ன இறங்கும்…… வெளியில் தெரிந்த இருள் கூட பயமுறுத்த கண் மூடி அமர்ந்திருந்தான்……………. இமைச் சிறையிலும் இருள் தான்… ஆனால் அதில் ஒளியாய் தன் மனைவியின் நினைவுகளை பாய்ச்ச ஆரம்பிக்க……… தன்னை மறந்து அதில் ஒன்றினான்……… கண் மூடி தன் மனைவியின் நினைவுகளில் ஆழ்ந்திருக்க… அவன் மனைவியோ.. அவள் விழியின் கதவாகிய இமையைத் திறந்தாள்………… இமை திறந்த போதே அவளின் அடைப்பட்டிருந்த எண்ணங்களும் அவளைத் தாண்டி வெளியே வர… வேகமாய் எழுந்து அமர்ந்தாள்…

விழித்தவளுக்கு………… தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்று எழுந்த மாத்திரமே புரிய…. எப்படி இங்கு வந்தோம்…………. என்று மட்டுமே முதலில் சிந்தித்தவளுக்கு………… அடுத்து தன் கணவனின் மரணச் செய்தி நினைவுகளில் வர……….. முகமெங்கும் வியர்க்க ஆரம்பித்தது……….. அதே நேரம் தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்றும் நினைவுகள் சுழல…….. உடல் நடுங்க ஆரம்பித்தது……………… எப்படியாவது இங்கிருந்து போக வேண்டும்.. தன் கணவனைப் பார்க்க வேண்டும் என்று கட்டிலை விட்டு இறங்க முயற்சித்தவள்……… தான் போர்த்தி இருந்த போர்வையை விலக்கியபடி எழுந்தவள்…….. தன் விரல்களில் மெட்டி இல்லாமல் இருப்பதை பார்த்தவுடன்………. உள்ளம் ஒரு மோசமான அதிர்வலையை வெளிப்படுத்த…

அதே அதிர்ச்சியுடன் அவள் கைகள் கழுத்தை நடுக்கத்துடன் தடவிப்பார்த்தது…………

“விஜய் அத்தான்…………” உதடுகள்…….. திக்கித் திணறின…. குலுங்கி அழ ஆரம்பித்தாள் தீக்‌ஷா………… கழுத்தில் இருந்த தாலி கழட்டப்பட்டது எப்போது…. அப்படி என்றால்… என் கணவன் உயிரோடு இல்லையா….. தன்னவன் தனக்காக கூட வாழ நினைக்கவில்லையா…..

என் இந்தர் இல்லாமல்… அவன் இறந்ததைக் கூட அறியாமல் நான் இருந்திருக்கிறேனா…. எத்தனை நாளாய்… என்று உள்ளம் பதற….. வேகமாய் நாள்காட்டியைப் பார்க்க…. தீக்‌ஷாவுக்கு தலையே வெடித்தது….. கிட்டத்தட்ட தன் பிறந்த நாளில் இருந்து 10 மாதங்கள் கடந்திருக்க………… வேகமாய் நாட்காட்டியின் அருகில் சென்றாள்… மீண்டும் மீண்டும் ஆராய்ந்தவள்…. சில நிமிடங்கள் அந்த நாட்காட்டியையெ வெறித்தபடி இருந்தாள்.. 10 மாதம் காலம் என் இந்தர் இல்லாமல் என் மூச்சை இழுத்துப் பிடித்து வைத்திருந்தேனா…. அவன் இல்லாத இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறேனா………..அப்படியே சுவரில் சரிந்து அமர்ந்தவள்…. முழங்காலைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்………. நொடி நேரம் தான் மீண்டும் நிமிர்ந்தவள்…. எல்லாமே முடிந்து விட்டதே இனி அழுது என்ன ஆகப் போகிறது…. என்று வேகமாய் கண்களை அழுந்த துடைத்தவள்…. அதே வேகத்தில் எழுந்தாள்….

“இனி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது………….” என்று முடிவெடுத்தவளின் மனக்கண்ணில்….. வரிசையாக தன் தாய்,தந்தை அண்ணன், சுனந்தா என……….. நினைவுகள் சுழள….. அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளினான் அவள் கணவன்…

வெறுப்பாய் தன்னைத் தீண்டிய பார்வை முதல்….. காதலாய் தன்னை திருடிக் கொண்ட பார்வை வரை………….. நினைக்கையிலேயே தீக்‌ஷாவின் இதயம் துடித்தது….

என்ன செய்வது…. தன் இந்தரோடு எப்படி சேர்வது…. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை… கண்களில் நீர் மட்டும் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.. அவளைக் கேட்காமலே…….

குழப்பமாய் இருக்க………. யாருமே எனக்கு வேண்டாம்….. இங்கிருந்து முதலில் போகலாம்… என்று முடிவெடுத்தவள்….. எப்படி இங்கிருந்து போவது என்று யோசிக்க ஆரம்பித்தவள் நிராசையாய் தன் கழுத்தைத் தடவினாள்…

தன் மாங்கல்யம்………… தன் கழுத்தில் ஏறிய போது… எத்தனை சந்தோசமாய் இருந்தனர் இருவரும்,…. அது இறங்கிய போது…. தடுக்க அவனுமில்லை…. தனக்கு நினைவுமில்லையே……. நினைக்கும் போதே………………… விம்மினாள் தீக்‌ஷா அப்போது

கழுத்தில் இருந்த சங்கிலி அவள் கைகளில் தட்டுப்பட…………. துணுக்கென்றது மனம்…

“இது… இது இந்தர் கொடுத்தது…. எனக்கும் அவருக்கும் மட்டுமே இதோட அருமை புரியும்… இது எப்படி எப்போது வந்தது…. அதுவும் டாலரோடு…. யார் அணிவித்தது.. நினைவுகள் பிறிட்டு வெளியே வந்ததைப் போல கேள்விகளும் வர ஆரம்பிக்க… அவள் தன் குடும்பத்தாருடன் தான் இருக்கிறாள்… என்பதை உணர்ந்து கொண்டாள் இருந்தும் தன் இந்தர் உயிரோடு இருக்கிறான் என்று மட்டும் அவளால் நினைக்க முடியவில்லை…

மெதுவாய் வெளியே வந்தவளின் கண்களில்………… சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த விஜய் தான் முதலில் பட்டான்……….

விஜய்யும் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்…. கண் திறந்து விட்டான்தான்……. அங்கு நின்ற தீக்‌ஷாவைப் பார்த்தவனுக்கு……….. சந்தோசம் கண்களில் பரவ இறங்கியவன் அவளை நோக்கி எட்டு வைக்க எத்தனிக்க..… அப்படியே நின்று விட்டான்…..

காரணம்… தன்னை நோக்கி வேகமாய் ஓடி வந்த தீக்‌ஷாவைப் பார்த்துதான்

அவளை அறிந்து கொள்ள முடியாமல்… பிரித்தறிய முடியாமல்…. விஜய் சிலையாய் நிற்க…. அவனவளோ கண்ணீரோடு ஓடி வந்து அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள்……….

விஜய்க்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை…. மறந்த நிலையில் தன்னைக் கணவனாக ஏற்றுக் கொண்ட தீக்‌ஷாவா.. இல்லைத் தன் தீக்‌ஷாவா… என்ன பாவனையை பிரதிபலிப்பது என்றே தெரியவில்லை…

அவளோ……..

“விஜய் அத்தான்” என்ற தேம்பி கண்ணீரை உகுத்துக் கொண்டிருக்க…………

தன்னிடமிருந்து பிரித்து… அவளை தேற்ற முயற்சி எடுக்க…. தீக்‌ஷாவோ அவனை விட்டு விலகவே இல்லை…

யாருடைய தீண்டல் இனி கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்தாளோ அவனின் மார்பில் சரணடைந்திருப்பதை விட்டு அவள் பிரிவாளோ…… அவனின் இதயத் துடிப்பை தன் ஜீவ நாதமாக தனக்குள் ஊற்றிக் கொண்டிருக்க…………… அவளவனோ……… அவளை அறிய முடியாத நிலையில் இருந்தான்…………..

அவள் உணர்ச்சியின் பிடியில் இருக்க….. இவனோ எங்கு தன்னைச் சாய்ந்து இருப்பவள்…. மீண்டும் மயங்கி விடுவாளோ என்று அவளை ஆராய்ந்தபடி இருக்க….

அவன் முகம் நிமிர்ந்து பார்த்தாள் தீக்‌ஷா….

இனி பார்க்கவே முடியாதோ என்று ஏங்கிய முகம்… மெல்ல விசும்பியவள்….

“விஜய் அத்தான் என்னை விட்டுட்டு போகலை தானே நீங்க….” என்று அவன் முகம் பார்த்துக் கேட்க…

இல்லை என்பது போல தலை அசைத்தவன்…… இன்னும் தன் நிலை தெளியாதவனாகவே தான் இருந்தான்….“

’உண்மையிலேயே என்னை விட்டு போகலையா…………….” நம்ப முடியாமல் கேட்டவள் அப்போதுதான் உணர்ந்தாள்…. அவன் அப்படியே நின்று கொண்டிருப்பதை………. அவள் தான் அவனை நெருங்கியிருந்தாளே ஒழிய…. அவன் உணர்வின்றி பிரமை பிடித்தவன் போல் தான் இருந்தான்…. அதை உணர்ந்தவள் அவனை மீட்க நினைத்தவளாய்

அவன் கைகளை எடுத்து தன்னைச் சுற்றி போட்டவள்……… ”ஹலோ இந்தர் பொண்டாட்டிக்கு மட்டும் தான் அட்வைஸ்லாமா……. சுவர் மேல ஏறி உட்காரக் கூடாதுன்னு எனக்கு மிலிட்டரி ஆர்டர் போட்டுட்டு… நீங்க ஏறி உட்கார்ந்து இருக்கீங்க” என்று சிரித்தபடி கண்சிமிட்டியவளின் கண்களில் இன்னும் கண்ணீரின் ஈரம் குறையாமல் இருக்க… அதே நேரம்…. அவள் ‘இந்தர் ‘ என்று அழைத்த நொடியில்

சந்தோசத்தில்… தன்னவளாக தன்னைச் சரணைடைந்த தன் மனைவியின் வார்த்தைகளில்… அவனையுமறியாமல்… ‘தீக்‌ஷா’ என்று உதடுகள் உச்சரிக்க…. அது கூட கரகரத்த அவனின் குரலில்…. நம்பிக்கையின்றிதான் மெதுவாகத்தான் ஒலித்தது…. குரலில் கம்மல் இருந்தாலும்…. இருந்தும் அவனின் விரல்களின் அழுத்தம் அதிகரிக்க…. தன்னோடு இன்னும் இழுத்து அணைத்தவன்………..காத்தமுத்து, முருகேசன் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க வில்லை…. அவள் கன்னத்தில் மாறி மாறி முத்த மழை பொழிந்தவனோடு முதலில் ஒன்றியவள்… அதன் பின் அவனின் வேகம் தாங்காமல் தடுமாற… அவளைப் புரிந்தவன்.. தன்னை அடக்கி… தன்னவளை தன்னோடு இறுக அணைக்க… தீக்‌ஷாவுக்கு அதிலேயே அவன் அனுபவித்த வேதனையின் வலி புரிய… தன்னவனுக்கு பதிலடி கொடுத்தாள்…. ஆனந்த கண்ணீரோடு முத்த மழையை….

இருவருமே வேறெதுவுமே பேசவில்லை… பேசத் தோன்றவும் இல்லை…. தீக்‌ஷாவுக்கு தன் கணவன் உயிரோடு இருக்கிறான் என்று நம்ப முடியவில்லை என்றால்… விஜய்க்கோ தன் மனைவி தன்னவளாக திரும்பி விட்டாளா என்று பிரமையிலே இருந்தான்…

அவனுக்கு ஓ வென்று கத்த வேண்டும் போல் இருந்தது….. என் தீக்‌ஷா திரும்ப கிடைத்து விட்டாள் என்று அத்தனை பேரிடமும் கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது…. என்னை இனி பரிதாபமாய்ப் பார்க்க மாட்டீர்கள் தானே… என்று திமிராகச் சொல்ல வேண்டும் போல இருந்தது…. ஒரு கட்டத்தில் அவனையும் மீறி சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றவன் தன் மனைவியைத் தூக்கி தட்டாமலை சுற்ற…

“அத்தான்… சுத்துது” என்ற மனைவியின் குரலில் தான் தாங்கள் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்தவன்.. அவளின் உடல்நலனும் அவன் கவனத்தில் கொண்டு வந்து ….அவளை இறக்கி விட்டபடி

“மயக்கம் வருதா தீக்‌ஷா” என்று கேட்ட போதே… அவளின் உடல்நிலை இன்னும் சரி ஆக வில்லையோ என்ற ஆதங்கத்தில் அவன் குரல் இறங்கி இருக்க…

“”பின்ன.. இப்படி சுத்துனா.. தலை சுத்தாதா..” என்றவள் அப்போதுதான் கவனித்தாள்…. கண்கள் பளக்க தங்களைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த முருகேசனையும், காத்தமுத்துவையும்…

”விஜய் அத்தான்… இவங்க….இங்க…’’ என்று இழுக்க…

விஜய் சிரித்தபடி….

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்……….. உன்னோட பாசமலர்… அண்ணனுங்க தான்….. நீ சரியாகிற வரை…. உன்னை விட்டு போக மாட்டேனு பிடிவாதம்…”

தீக்‌ஷா……. ஒரு நிமிடம் சிந்தித்தவள்…. விஜய்யை விட்டு விலகி நின்று….. அவர்கள் முன்னே சென்று கை கூப்பினாள்…

“என்னம்மா நீ…. நீ தம்பி கூட சேருகிற நாளுக்காகத்தான் காத்துட்டு இருக்கோம்…. இது என்ன எங்களுக்கு போய் “ என்று கூப்பிய அவளின் கையை இறக்கி விட

“இல்ல அண்ணா… நீங்க ரெண்டு பேரும் இல்லை என்றால்… அன்றைக்கு..” ஓரளவு அன்றைய தன் நிலை உணர்ந்த போதே அவள் குரலில் நடுக்கம் வர… விஜய்யின் மார்பில் மீண்டும் சரணடைந்தவள்..

“அத்தான்… இவங்க ,மட்டும் இல்லை என்றால்… நான் நினைவு தடுமாறி நின்ற நிலையில்… எதையுமே தடுத்திருக்க முடியாது…” என்றவள் அதற்கு மேல் பேசப் பிடிக்காமல் விஜய்யை இறுக்கமாய் பிடிக்க…

அவளை ஆறுதலாக அணைத்தவன்..

“ப்ச்ச்… அதை நினைக்காத… உன் மனசுக்கு எதுவுமே தப்பா நடக்காது…. உனக்கு நடந்த கெட்டதுக்கெல்லாம் நான் தான் காரணம்,…. நான் உன் வாழ்க்கைல வந்ததுனாலதான் அத்தனை பிரச்சனைகளும்…” என்று வலியோடு சொல்ல…

தன் கரங்களால் அவன் வாயை மூடியவள்… அவனை திசை மாற்ற

“அத்தான் பசிக்குது” என்று சொல்ல….

விஜய்….. சிரித்தபடி… காத்தமுத்துவையும் முருகேசனையும் பார்க்க….

”நாங்க போய் வாங்கிட்டு வருகிறோம் தம்பி” என்று இருவருக்கும் தனிமை கொடுத்து விலக….

அவர்கள் சற்று தூரம் கடந்த போதே…..,

முருகேசனிடம்…

”எனக்கும் சேர்த்து முருகேசன்” என்று விஜய் சொல்ல… தலை ஆட்டியபடி சென்றனர் இருவரும்….

அவர்கள் கண் மறையும் வரை அமைதியாக இருந்த தீக்‌ஷா…

விஜய்யை வியப்பாக பார்த்தபடி…

“அத்தான்.. அவர் பேர் டேனியல்… அது தெரியாதா….“

விஜய் தீக்‌ஷாவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்….. தன்னவள் ஞாபகங்களை மீட்டெட்டுப்பதை மெய் மறந்து பார்த்தபடி இருக்க….. தீக்‌ஷா அவனை உலுக்கினாள்.

அவளின் உலுக்கலில்…. தன் சிந்தையை கலைத்து…. தீக்‌ஷாவிடம் உரையாட ஆரம்பித்தான்…. விளையாட்டாகவே ஆரம்பித்தான்….

“ஓ…. அப்போ காத்தமுத்து பேரு…. என்ன…”

”அவர் பேர் கண்ணன்….” என்றவள்

“அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஆர்ஃபனேஜ்ல வளந்தவங்களாம்… சின்ன சின்ன தப்பு பண்ண ஆரம்பித்து… இன்னைக்கு இந்த நிலைமையில இருக்காங்களாம்….ஆனா ரொம்ப நல்லவங்கத்தான்…. ”

அவள் சொல்வதை எல்லாம் கேட்டவன்……

“அவங்க உன் மேல ரொம்ப பாசம் வச்சுருக்காங்க தீக்‌ஷா…. அவங்களோட உண்மையான பேரைக் கூட மறைத்து உனக்காக நம்ம வீட்ல வேலை பார்த்துட்டு இருக்காங்க.. சொல்லப் போனால் உன்னோட பாடி கார்ட்ஸ் அவங்க தெரியுமா” என்று முடித்தவன்

“அவங்கள்ளாம் நல்லவங்க…. உன் அத்தான் நல்லவனா கெட்டவனா சொல்லு…” என்று விளையாட்டாய்க் கேட்பதுபோல் கேட்டாலும்… இன்னும் அவளின் நிலையில் தெளிவில்லாதவனாகவே இருந்ததால் அப்படிக் கேட்டு வைக்க….

அவனின் முகத்தை ஆராய்ந்தவள்….பதிலே சொல்லாமல் இருக்க….

“என்ன மௌனம் ஆகிட்ட” என்று சொல்லும் போதே

இந்த முகத்தைப் பார்த்தால்…. நல்லவன்னு சொல்லத் தோணலை.. கெட்டவன்னு சொல்லத் தோணலை…பார்க்கவே சகிக்கலை… ” என்றவள்,,,,

“ஆங் இன்னொன்னும் சொல்ல நினைத்தேன்,….என்றவள்…

”என்ன”

”இது என்ன” என்று அவனின் ஷேவ் செய்யப்படாத முகத்தைச் சுட்டிக் காட்டியவள்…

“குத்துது அத்தான்…” என்று சலித்தவளிடம்… குனிந்த விஜய்…

வேகமாய் தன் முகத்தை அவள் முகத்தோடு அழுத்தமாய்த் தேய்த்தபடி…

“வலிச்சாலும் தாங்கிக்க.. மனுசனை தவிக்க விட்டேளடி… அதுக்கு பனிஷ்மெண்ட்னு வச்சுக்கோ…’ என்ற போதே…

அவனின் உரசலில் வலித்த கன்னங்களைத் தடவியவள்… எம்பி எட்டி அவனின் கன்னத்தைக் கடித்தவள்….

“வலிக்குதா… வலிச்சாலும் பொறுத்துக்கங்க… “ என்று பதிலுக்கு பதில் பேசி… அவனிடம் சிரிக்க… அவனோ

“வலிக்கலைடி…. இந்த வலிலாம் சாதாரணம்…. இத்தனை நாள் நான் அனுபவித்த வேதனைக்கு இதெல்லாம் சாதாரணம்’ என்ற கணவனின் வார்த்தைகளில் கண் கலங்கினாள் தீக்‌ஷா…. இப்போது அவனிடம் தன் கேள்விக் கணைகளை ஆரம்பித்தாள்…..

“நீங்க அன்னைக்கு துபாய் போகலையா அத்தான்… அப்போ ஏன் சுரேந்தர் அத்தான் ஏன் அப்படி சொன்னாங்க…..”

அவளின் கேள்வியில்…

“நான் போகலை தீக்‌ஷா…. உன்னை ஏமாத்திட்டு போக மனசு வரலைடா…. ஆனால் நான் அன்னைக்கு போயிருந்தேன் என்றால்… “ என்று நிறுத்த

”அதைப் பேசாதீங்கத்தான்….” என்ற போதே தீக்‌ஷாவின் குரல் நடுங்க ஆரம்பிக்க….

“நானாடி பேசினேன்… நீதானே ஆரம்பிச்ச….” என்று முறைத்த போதே காத்தமுத்துவும் முருகேசனும் வந்தனர்… வரும்போதே,,,,, விஜய்-தீக்‌ஷா இருவரும் சேர்ந்திருக்கும் காட்சியை கண்களில் நிரப்பியபடியே வர….

அவர்கள் பார்வை புரிந்த தீக்‌ஷா…. விஜய்யின் தோள் சாய்ந்தபடி…

“எங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்கு…. நல்லா இருக்கா….. ” என்று கேலியாக பேச ஆரம்பிக்க….

“சூப்பர் தங்கச்சி… என்று இருவரும் கோரஸாக சந்தோஷமாகச் சொல்ல

”சரி அப்போ சொல்லுங்க…. எங்க ரெண்டு பேருல யார் லக்கி….” என்று வம்பில் மாட்டி விட…

சற்றும் தாமதிக்காமல் சொன்னர் இருவரும்…….

“நீதாம்மா கொடுத்து வச்சுருக்கனும்… இப்படி ஒருத்தர் கிடைக்கிறதுக்கு”

தீக்‌ஷாவின் முகத்தில் மென்னகை வர…. கூடவே கர்வமும் வந்தது என்று கூடச் சொல்லலாம்… அதை எல்லாம் உடனே மறைத்தவள்….

“என்னைதான் கவுத்திட்டீங்கனு பார்த்தா… இவங்களையுமா” என்று பொய்க் கோபம் காட்ட…

“பசிக்குதுனு சொன்னேல வா சாப்பிடலாம்… அதன்பிறகு நீ எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்….” என்று இழுத்துக் கொண்டு போக… முருகேசன் காத்தமுத்து இருவரின் முகத்திலும் நிம்மதியுடன் கூடிய புன்னகை மலர்ந்தது…..

தீக்‌ஷாவை அறையில் அமர வைத்துவிட்டு….. வெளியில் வந்தவன் …. முருகேசன் காத்தமுத்துவை அழைத்து…

“யார்கிட்டயும் இப்போ சொல்ல வேண்டாம்… நாளைக்கு டாக்டரிடம் கன்சல்ட் செய்த பிறகு சொல்லலாம்..” என்று சொல்லி விட்டு மீண்டும் தன்னறைக்குச் செல்ல….. தீக்‌ஷா விஜய்க்காக காத்திருந்தாள் சாப்பிடாமலே….

அவள் சாப்பிடாமல் சாப்பாட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தப்பதைப் பார்த்து….…

”சாப்பிடலையா” என்று வினவியபடியே அவளின் முன் அமர….

“அத்தான் உங்களுக்கு…. நீங்க இதைச் சாப்பிடுவீங்களா…..”

அவளின் கேள்வியில்….. வாய் விட்டுச் சிரித்தபடி……

”ரொம்ப நல்லா இருக்கும் தீக்‌ஷா… என்னோட பேவரைட் தான்…. ” என்று சாப்பிடப் போனவனின் கைகளில் இருந்த கவளத்தை வேகமாய் தனது வாய்க்குள் தள்ளியவள்… கணவனை தன் கண்களில் நிரப்பியபடியே சாப்பாட்டை சாப்பிட்டவள்.. தன் கணவனுக்கு தன் கைகளால் ஊட்டவும் மறக்க வில்லை….

அதன் பிறகு இருவருமே பேசவில்லை….. விழிகள் பேசியபடி இருந்ததால்….. வாய் மொழி மௌனம் பெரிதாகத் தெரியவில்லை இருவருக்கும்…..

இருவரும் சாப்பிட்டு முடித்த பின்னர்… விஜய் தீக்‌ஷாவை உறங்கச் சொல்ல…

“அத்தான் தூக்கம் வரலைத்தான்…” என்று சிணுங்க…

விஜய்யோ…

“சரி ரொம்ப நல்லது….. என்னமோ பண்ணு… எனக்குத் தூக்கம் வருது….” என்றவன்… அவளை யோசிக்க கூட விடாமல்… அவளது மடியையே தலையணை ஆக்கியவன்… அவளது இடுப்பைச் சுற்றி… தன் கரங்களை போட்டவன்…. அவளை வளைத்துப் பிடித்தபடி…. தூங்க ஆயத்தமாக…

“இந்தர்………..“ என்று அவனது மூக்கைத் திருகியவளின் இடையில் இன்னும் ஆழமாக முகம் பதித்தவன்…

”இன்னொரு முறை சொல்லுடி….“ என்று அரை மயக்கத்தில் புலம்புவதைப் போலக் கேட்க..

“இந்தர் இது என்ன சின்னப் பிள்ளையாட்டம்… ஹாஸ்பிட்டல்…. வேற….” என்று தீக்‌ஷா அவஸ்தையாய் நெளிந்தாள்….

“ப்ளீஸ் ஒரு அரை மணி நேரம்….. நான் நிம்மதியா தூங்கியது என்றைக்குனு எனக்கே தெரியலை… இப்போ எனக்கு தூங்கனும் போல இருக்கு….. என்று மனைவியின் மடியில் சிறு குழந்தை அடம் பிடிப்பதைப் போல் அடம் பிடிக்க…..

அதில் நெகிழ்ந்த தீக்‌ஷா… தன் தலையை தன் கணவன் புறம் கவிழ்த்து….

“இந்தர்…. இத்தனை நாள் கழித்து… நினைவு திரும்பி வரும் போது…. தூக்கமா உங்களுக்கு” என்று குறும்பாய்க் கூறி அவன் காது மடலைக் கடிக்க…

நிமிர்ந்தவன்.. கண் சிமிட்டியபடி….

“டாக்டர் நாளைக்கு கம்ப்ளீட் செக் செய்து உனக்கு அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விட்டதுனு ஒரு வார்த்தை சொல்லட்டும்… அதன் பிறகு…. அடுத்த ஒரு வாரம் நான் தூங்கனுமுனு என்கிட்ட கெஞ்சுவ….”

அவனின் பதிலில் முகம் சிவந்தவள்….. அவனுக்கு பதில் சொல்லாமல்….. அவன் தூங்குவதற்கு ஏதுவாக கட்டிலில் தலையணையை வைத்து சாய்வாய் அமர்ந்தவள்… கணவனின் கேசத்தை விரல்களால் அளந்தபடி இருக்க….. வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் நிம்மதியோடு உறங்க முனைந்தான் விஜய்… அடுத்த நொடியே உறங்கியும் போனான்….

தீக்‌ஷா அவனின் கேசத்தை அளந்தபடியே……………. தன்னவனையே பார்த்தபடி இருந்தாள்..

”முதன் முதலில் தான் பார்த்த விஜய்யா இவன்…………. முதன் முதலாய் தன்னைப் பார்த்து கர்ஜித்த விஜயேந்தரா இவன்………… இவனும் அவனும் ஒன்றா… தன் மடியில் சிறு குழந்தை போல் உறங்கும் இவனா அவன்…………”

யோசிக்கும் போதே…. மருத்துவமனியின் வாசம் நாசிகளில் உணர….. தன்னைப் பற்றிய சிந்தனைக்குத் தாவினாள்….

”இத்தனை நாள்…. நினைவில்லாமல் இருந்தேனா…” நினைக்கும் போதே கலங்கினாள்….

எனக்கு என்ன ஆனது….. நான் எப்போது என் கணவனோடு வந்து சேர்ந்தேன்… முதலில் எதுவுமே ஞாபகம் வராமல் கலங்கினாள்……………

ஆனால் சிறிது நேரத்திலேயே முருகேசன் தன் வீட்டில் வாட்ச்மேனாய் நினைவுகள் கலங்கலாய் வர…. அடுத்து… காத்தமுத்து ஞாபகம் என….. நினைவுகள் ஆட…. காட்சிகள் பிம்பமாக வரவில்லை….. காரணம்…. நினைவுச் சிதறல்களை அவளால் ஒன்று சேர்க்கவே முடியவில்லை…. 3 மாதம் கோமாவில் இருந்தது சுத்தமாக அவளுக்கு ஞாபகம் இல்லை…. ஆனால் அதன் பின் நடந்ததெல்லாம் முற்றிலும் ஞாபகம் வர வில்லை என்றாலும்… அவளால் ஓரளவு சேகரிக்க முடிந்தது…. ஆனால் கோர்வையாய் இதுதான் நடந்தது என்று அவளால் அனுமானிக்கவே முடியாதபடி ஒரு நிலையில் இருந்தவள்…. தன் கழுத்தில் இருந்த ஜெயினை ஒரு முறை பார்த்தவள்… தன் தாலி எங்கே என்று யோசிக்க ஆரம்பிக்க… ஒன்றும் ஞாபகம் வராமல்.. தன் கழுத்தில் தொங்கிய VD என்ற டாலரை பார்த்தபடியே யோசிக்க ஆரம்பித்தாள்… விஜய்யுடன் VD ப்ரமோட்டர்ஸுக்கு சென்ற நினைவலை வர… அதுவும் முழுமை பெறாமல் இருக்க…. அதற்கு மேல் தாங்க முடியவில்லை…

தன்னை கட்டிக் கொண்டு தூங்கிய கணவனை உலுக்கி எழுப்ப…… விஜய் பதறி எழுந்தான்….

”ஏய் தீக்‌ஷா என்ன ஆச்சு….. ” என்று எழுந்தபடியே அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்…..

இப்போதும் அவளுக்கு ஏதாவது ஆகி விட்டதோ….. என்ற ரீதியில் பயந்த அதிர்ந்த பார்வையை விஜய் வீச

அதில் தன் தவறு புரிந்தவளாய் நாக்கைக் கடித்த தீக்‌ஷா…

“அத்தான் எனக்கு எதுவுமே ஞாபகம் வரலை…. அங்கங்க ஏதேதோ நினைவு வருது…. என்ன நடந்தது… ஒழுங்கா அதை சொல்லுங்க….. முருகேசன் வாட்ச்மேனாத்தானே வேலை பார்க்கிறார்… அதுவும் எங்க வீட்ல.. நான் எங்க வீட்ல தானே இருந்தேன்…. நீங்க ஏன் என் கூட இல்லை…. நீங்க என்னை கம்பெனிக்கு கூட்டிட்டு போவீங்களா… மண்டை காயுது அத்தான்… ப்ளீஸ் பிளீஸ்…. சொல்லிருங்கத்தான்…. தலை எல்லாம் வலிக்குது” என்றவளிடம்…

”இங்க வா” என்று தன் புறம் அழைக்க… நடந்ததை எல்லாம் சொல்லப் போகிறானோ என்று ஆவலாய் அவன் முகம் பார்த்தபடி…. அவன் மேல் சாய…. அவனோ

“என்னைப் பாரு…. நான் எப்படி இருக்கேன் சொல்லு” என்று தன்னைப் பற்றிக் கேட்க…

”நான் என்ன கேட்கிறேன்… இவன் என்ன கேட்கிறான்…” நினைத்தவள்….. கணவனின் கேள்விக்கே பதில் சொன்னாள்….

”அதுதான் சொல்லிட்டேனே முதலிலேயே…. அத மறுபடியும் மறுபடியும் சொல்லனுமா” என்றாள் தீக்‌ஷா…

“அதேதான் உனக்கும்… சந்தோசமான நிகழ்வுகள்னா……… நானும் சொல்லி இருப்பேன்… “ என்று அவளை வைத்தே மடக்க…..

“ப்ச்ச்… எனக்குத் தெரியணுமே……” என்று கவலையாய்…. முகம் வைத்துச் சொல்ல…..

”சொல்கிறேன்,….. உடனே வேண்டாமே… உனக்காகவே ஞாபகம் வரும்மா….” என்றவன்… இதற்கு மேல் அதைப் பேசாதே…. என்று கட்டளைப் போல் வலியுறுத்த….……….. தீக்‌ஷாவும் அதற்கு மேல் பேச வில்லை… மணியைப் பார்க்க…. மணி 2 ஆகி இருக்க….

”தூங்கும்மா… நாளைக்கு எல்லா டெஸ்ட்டும் எடுக்க வேண்டும்…..” என்றவன்….. வேகமாய்…

தீக்‌ஷா..

“உனக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்து விட்டது என்று யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்” என்று கூற

”ஏன்” என்றாள் முகம் மாறியவளாய்…

”சொல்ல வேண்டாம்… ” என்றான் அழுத்தமாக….

“அதுதான் ஏன்னு கேட்கிறேன்…. “ என்றாள் இவளும் அழுத்தமாக…

”விட மாட்டாளே….” என்று உள்ளுக்குள் முணங்கியவன்..

“இப்போ நீ குணமாகிட்டேனு சொன்னால்…. அத்தனை பேரும் உன்னை பாச மழையில நனைக்கிறேனு சொல்லி என்கிட்ட உன்னை விட மாட்டாங்க…. அதுனால்தான்…” சொல்லும் போதே அவன் குரலில் கள்ளத்தனம் வெளிப்பட…

“அடப்பாவி” வாய் விட்டே சொல்லி விட்டாள் தீக்‌ஷா…

“சரி அப்போ எப்போதான் என்னை மத்தவங்க பாச மழையில நனைய விடுவீங்க” அவனை கிண்டல் செய்வது போல கேட்க…

முறைத்தவனை உதடு குவித்து முத்தம் தருவதைப் போல பாவனை செய்து சமாதானமாக்க…. யோசித்த விஜய்…..

”ஒருநாள்… இல்லையில்லை….. ரெண்டுநாள் கழித்து சொல்வோம்…. அதுவரை சொல்ல வேண்டாம் ப்ளீஸ்” என்று கெஞ்சலாக கேட்டவனை…

”ரெண்டு நாள் போதுமா” விழி விரித்து ஆச்சரியமாகக் கேட்டாள் அவன் மனைவி…

”அடிப்பாவி” என்று இப்போது விஜய் வாய் விட்டு சொல்ல…

“பின்ன ரெண்டு நாள் உங்களுக்கு என்னை பார்க்கிறதுக்கே சரியா இருக்கும்…. எனக்கு உங்களைப் பார்கிறதுக்கே சரியா இருக்கும்… நான் வேற, எனக்கு பேசவே நேரம் போதாது… நீங்க என்னாடான்னா…. 2 நாள்னு சொல்லி, இப்படி ஏமாத்திட்டீங்களே இந்தர்… தீக்‌ஷா புருசனா நீங்க இன்னும் மாறவே இல்லை” என்று அலுக்க

அவளைப் பார்த்து கலகலப்பாய் சிரித்த விஜய்

”இந்த வாய் மட்டும் இல்லைன்னு வச்சுக்க…” என்று நிறுத்த

“இல்லைனா….” என்று இவளும் கேள்வியாய் நிறுத்த

“விட்ருடி… ப்ளீஸ் டீ…. உன்கூடலாம் பதிலுக்கு பதில் பேச என்னால முடியாது” என்று தோல்வியை ஒப்புக் கொண்டவனிடம்…

“சொல்லிடலாம் அத்தான்…. அவங்க எல்லோர் சந்தோசத்திலயும்தான் நம்ம சந்தோசம் இருக்கு… நமக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்றவங்க அவங்க… அவங்ககிட்ட மறச்சுட்டு நாம எப்படித்தான்….’ என்று நிறுத்தியவள்…

”உங்க உணர்வுகள் எனக்கு தெரியுதோ இல்லையோ… நம்மைச் சுற்றி இருக்கு அனைவருக்கும் புரியும் அத்தான்… பாருங்க… யாரோ முருகேசன் காத்தமுத்து,…. அவங்க எனக்கா சப்போர்ட் பண்ணினாங்க…. உங்களைத்தான் பண்ணினாங்க… காரணம்… இத்தனை நாள் நீங்க பட்ட வேதனையை கண் கூட பார்த்திருக்காங்க… இவங்களே இப்படி இருக்கு போது… நம்மைப் பெத்தவங்க…. நம்மோட கூடப்பிறந்தவங்க நம்ம சந்தோசத்துக்கு குறுக்கே நிற்பாங்கனு எப்படி நினைக்கிறீங்கத்தான்….. “

”ஹப்பா…. என் பொண்டாட்டி எப்போ சின்னப் பிள்ளைத்தனாம பேசுவா… எப்போ பொறுப்பா பேசுவான்னு அவளப் படைத்த அந்த ஆண்டவனையே குழப்பிருவா..’ என்று கிண்டல் செய்தவன்…

”சரி…. உன் விருப்பம் போல எல்லோர்கிட்டயும் சொல்லலாம்… ஆனால் அப்புறம்.. அம்மா அப்பா… அண்ணா அண்ணி… ஃப்ரெண்ட், சுனோன்னு என்கிட்ட சாக்கு சொல்லிட்டு போகும் போது உனக்கு இருக்குடி” என்று சொன்னவன் அவளை விட்டு தள்ளி அமர்ந்து உம்மென்று இருக்க…

இந்த கோபம் மட்டும் எப்போதான் போகுமோ…. என்று அவனருகே மீண்டும் வந்து அமர்ந்தபடி கேட்டவளிடம்

“அம்மா தாயே … இந்த கோபத்தை போக்கனும்னு இதுக்கும் விசப்பரிட்சை வச்சுராத” என்றான் பதறியவனாய் நடித்தபடி பேசி சிரிக்க…. இதற்கு தீக்‌ஷா வழக்கம் போல் சிரிக்கவில்லை….. மாறாக தன் கணவன் பட்ட வேதனைதான் அவள் முகத்தில் பிரதிபலித்தது….

அதன் பிறகு விடிகாலை வரை அவனிடம் பேசியபடியே அவனையும் தூங்க விட வில்லை…. இவளும் தூங்க வில்லை……….. ஏதேதோ பேசினார்கள்…. என்னென்னவோ பேசினார்கள்….. இடையே நடந்த சந்தோஷமான விசயங்களை மட்டும்…… அவ்வப்போது எடுத்துச் சொன்னான் விஜய் அவளிடம்

அடுத்த நாள் காலை…. அனைத்து விதமான டெஸ்ட்டும் எடுக்கப்பட்டு..ஓரளவு மருத்துவர் நம்பிக்கை அளிக்கும் விதமாய்ச் சொன்ன பின்னாலே விஜய் நிம்மதி அடைந்தான்…

இருந்தும் அவள் பரிபூரண குணமடைந்து விட்டாள் என்பதை அவளின் பழக்க வழக்கங்களாலேயே உணர முடியும் என்று விஜய்யிடம் சொல்ல……… விஜய் கவலையோடு மருத்துவரைப் பார்த்தான்…

அவனின் பார்வை உணர்ந்த மருத்துவர்….

“விஜய் ஒண்ணும் பிரச்சனை இல்லை…. சில சம்பங்கள் தீக்‌ஷாவை பின்னோக்கி இழுக்கலாம்… உதாரணமா….. ஃப்ளைட் சத்தம் கேட்டு என்ன ரியாக்சன் பண்ணுவாங்கனு தெரியலை… பட் நார்மல் ஆகிட்டாங்கனுதான் நினைக்கிறேன்… ஒண்ணு பண்ணுங்க… சந்தோஷமா ஹனிமூன் ட்ரிப் ஏற்பாடு பண்ணுங்க….. ஃப்ளைட்ல கூட்டிட்டு போங்க…. அப்போ தீக்‌ஷாவோட ரியாக்‌ஷன் பாருங்க…. கண்டிப்பா…. இன்ப அதிர்ச்சிதான் இருக்கும் உங்களுக்கு….“ என்று சந்தோஷமாய் சிரித்தபடியே தீக்‌ஷாவின் ரிப்போர்ட்டுகளை விஜய்யிடம் நீட்ட…

“கண்டிப்பா மேம்….தேங்க்ஸ் மேம்” என்று உளப்பூர்வமாய்ச் சொன்னவன்…. அதன் பிறகு தன் வீட்டில் தன் மனைவியின் வீட்டில்.. தீக்‌ஷா குணமடைந்ததை அறிவிக்க…. இரு குடும்பத்தாரும் இருவரையும் வரவேற்க… காத்திருந்தனர் விஜயேந்தரின் வீட்டில்…

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon