அன்பே நீ இன்றி 48

அத்தியாயம் 48:

இரவு 9 மணி ஆகியிருக்க…. விஜய் தனது அலுவலக அறையில் இருந்து அப்போதுதான் தன் அறைக்கு வந்திருந்தான்………….

தீக்‌ஷா வேலைக்கு செல்ல விரும்புவதாக தீபன் வந்து கூறியதும்….

”திடீரென்று ஏன் இந்த முடிவுக்கு வந்தாள்” என விஜய் விசாரிக்க… வேறு வழியின்றி… ஜெயந்தி… தீக்‌ஷாவிடம் அவளுக்கு நோய் இருப்பதாக தான் சொன்ன விசயத்தை கூறி… அதன் பிறகு தான் தீக்‌ஷா இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூற….விஜய்க்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை… ஆனால் அதற்காக ஜெயந்தியை அவனால் திட்டவும் முடியவில்லை….

”இல்ல தம்பி… இப்போ எல்லாம் சரி ஆகி விட்டதுனு அவகிட்ட சொல்லிட்டேன். அதுனால பெரிய பிரச்சனை இல்லை….. எனக்கும் வேற வழி தெரியலை தம்பி” என்று அவனின் கோபத்தை உணர்ந்த ஜெயந்தி… பயந்து சொல்ல…. விஜய்யும் ஒன்றும் சொல்லாமல்.. தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அடுத்த 2 நாட்களிலேயே பம்பரமாய் சுழன்று VD ப்ரோமோட்டர்ஸை ஆரம்பித்து விட்டான்… ஏற்கனவே இருக்கும் விஜய் பில்டர்ஸின் 2-ஆம் கட்ட வேலைகளான….விளம்பரம்…. வாடிக்கையாளர் தொடர்புகள்…. நிதி நிலை என சில பொறுப்புகளை இதில் மாற்றியவன்….. தன் மனைவி மற்றும் தன் பெயரிலே ஆரம்பித்தான்…………… ஆனால் தீக்‌ஷாவிடம் சொல்லப்பட்டதோ விஜய் மற்றும் தீபன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது என்று….

சுரேந்தருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்க… இத்தனை வேகமாக விடி ப்ரோமோட்டர்ஸ் உருவாக அவனின் பங்கு அதிகமாக இருந்தது…. ஆனால் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவளோ தனக்கு அனுபவம் இருக்கும் மென்பொருள் துறைக்கே செல்ல விரும்புவதாக பிடிவாதம் பிடிக்க….. யாராலும் அவளின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை… அதே போல் விஜய்யும் தன் பிடிவாதத்தில் நிற்க…. தன் விஷயத்தில் முடிவெடுக்க அவன் யார் என்ற கோபத்தில் இன்னும் பிடிவாதத்தில் நின்றாள்….

விஜய்க்குதான் என்ன சொல்லி அவளை சம்மதிக்க வைப்பது என்று தெரியவில்லை…. தீக்‌ஷா மட்டும் சம்மதித்துவிட்டால்…. பகல் முழுவதும் அவன் பார்வையில் இருப்பாள்… அது மட்டும் தான் அவன் எண்ணம் முழுவதுமாய் ஓட…. அதிலேயே சுழன்று கொண்டிருந்தான்… இப்போதும் அதே நினைவோடுதான் படுக்கையில் விழுந்து விட்டத்தை வெறித்தபடி இருக்க..அப்போது அவனின் மொபைலுக்கு அழைப்பு வர….

எடுத்து காதில் வைத்தவனின் காதுகளில் “விஜய் அத்தான்,…. நான் தீக்‌ஷா பேசுறேன்’ என்ற தீக்‌ஷாவின் குரல் தேனாய் விழ….. படுக்கையில் இருந்து உற்சாகமாய் எழுந்து உட்கார்ந்தான்… ஆனால்….பதில் கூட சொல்லாமல்… தன் மனைவியின் குரலில்…. ஆழ்ந்து போயிருக்க….