அன்பே நீ இன்றி 46

அத்தியாயம் 46

விஜய் கண் விழித்த போது அருகில் சுரேந்தர் மற்றும் தீனா இருவரும் நின்றிருக்க…… இருவரையுல் இலட்சியம் செய்யாமல் எழ முயற்சித்த விஜய் லேசாய்த் தடுமாற… சுரேந்தர் அவனைப் பிடித்து நிறுத்த முயற்சி செய்தான்

ஆனால் விஜய்யோ அவன் கைகளை தட்டி விட்டு தானே எழுந்து அமர்ந்தவன்…வேகமாய் சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க அது மூன்று மணியைக் காட்டியது… சுரேந்தரைப் பார்த்த விஜய்யின் கண்களின் நரம்புகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோபத்தின் சிவப்பு……

விஜய்யின் செயலில்… அதிர்ந்த சுரேன்..

“அண்ணா……” என்ற போது

“என்ன சொல்லப் போற….. தீக்‌ஷாவுக்கு நாம…. இல்ல இல்ல நீங்க நினைத்த மாதிரி….. எதுவும் இல்ல….. இதுதானே சொல்ல வருகிறாய்…” என்று இருவரையும் பார்க்காமல் சுவரை வெறித்தபடி சொல்ல….

விஜய்க்கு எப்படி தெரியும் என்று தீனா சுரேந்தர் இருவரும் ஒருவரை ஒருவர்…. கேள்வியாய் பார்த்துக் கொண்டனர்….

அவர்களுக்கு அவன் பதில் சொல்லவில்லை……… அவனுக்கான பதிலை அவன் மனைவி சிந்திய ரத்த துளிகள் அவள் இன்னும்….. உணர்வுகளோடு இருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்லி சென்றதை இவர்கள் அறிவார்களோ???…..

தட்டுத் தடுமாறி எழுந்தவன் நின்றிருந்த சுரேந்தர் மற்றும் தீனாவிடம்..

“என்னை விரோதியா நினைத்த போதே அவ என்னை பழி வாங்க நினைக்க வில்லை…. என்னை அவளோட உயிரா நினைக்கும் போதுதான் என்னை பழி வாங்கப் போறாளா… என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டாடா….. கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் வாழுவோம்… நீங்க பார்க்கத்தான் போறீங்க……” என்று சொல்லியபடி நடந்து போக

”அண்ணா…….. சக்திக்கு திடீர்னு சீரியஸாகி….. “ என்று நிறுத்திய சுரேந்தர்…

“டாக்டர்ஸ் எவ்வளவோ டிரை பண்ணியும் முடியலண்ணா” என்ற வார்த்தைகளில் விஜய் ஆணி அடித்தவன் போல் நின்றவன்………… மீண்டும் கட்டிலில் வந்து கண் மூடி அமர்ந்தவன்தான்….சற்று நேரம் எதுவுமே பேச வில்லை…

அவனிடம் இவர்களும் பேச்சுக் கொடுக்க வில்லை… சிறிது நேரம் கழித்து

”நேற்று அந்த பொண்ணு கிட்ட என்னடா பேசுனீங்க….. ஏற்கனவே இதய பலகீனமுள்ள பொண்ணு…. நான் அவ அம்மா அப்பா முகத்தில் எப்படி விழிப்பேன்….. பாவம் ஒரே பொண்ணு…. அவளால ஏகப்படட்தை அனுபவிச்சுட்டாங்க….. அவள எப்படியாவது காப்பாற்றி கொடுக்கலாம்னு நெனச்சேன்…… ” என்று புலம்பிய விஜய்….. நேராய் போனது சக்தியின் பெற்றோரை நோக்கித்தான்….. அவன் மனைவியைக் கூடப் பார்க்க வில்லை…..

இவனைப் பார்த்த சக்தியின் பெற்றோர்கள்… துக்கம் தாளாமல் கதறி அழ…. விஜயேந்தருக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்றே தெரியவில்லை…

இறந்தவர்கள் நிம்மதியுடன் போய் விடுவர்…… ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களின் நிலை…. கொடுமையாக இருந்தது விஜய்க்கு….. விஜய் கூட அதன் வாசலில் சில மணி நேரத்திற்கு முன் தான் நின்றிருந்தான்…… நேசிப்பவர்களை இழப்பதென்பது…… எவ்வளவு வலி என்பதைக் கூட அவள் மனைவி அவனிடம் காட்டியிருந்தாள்….

இருவரிடமும் பேசாமல்…. அவர்களை தன்னோடு அணைத்தவன்….

“உங்க பொண்ணு…. உங்களை தனியா விட்டுப் போகல….. உங்களுக்கு ஒரு மகனை விட்டுட்டு போயிருக்கான்னு நெனச்சுக்கங்க…. அம்மா” என்று சொல்ல…

இல்லப்பா….மகள்னு சொல்லு…. சக்தி சொன்னா… கண்டிப்பா விஜய் சாரோட மனைவி தீக்‌ஷா சுய நினைவுக்கு வந்து…. ரெண்டு பேரும் சந்தோசமா உங்ககிட்ட வருவாங்க….. தீக்‌ஷா மேடம் கண்டிப்பா…. சக்திய விட உங்கள நல்லா பார்த்துப்பாங்கனு சொன்னா….” என்று அந்த சூழ்னிலையிலும் விஜய்யிடம் சொல்லி தங்களை தாங்களே ஆறுதல் படுத்திக் கொண்டவர்கள்…

“சக்தி ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டா தம்பி… தீக்‌ஷா ஏத்துக்கிறுதோ இல்லையோ…..இனி எங்க வேண்டுதல் எல்லாம்… தீக்‌ஷாவும் நீங்களும் நல்லா வாழனும் என்பது தான்…. என் பொண்ணு மனசும் அப்போதான் சாந்தி அடையும் தம்பி….. உயிரோட இருக்கிற வரை… தப்பான ஒருத்தனை நேசிச்சுட்டோம்னு…. மனசு வெறுத்துதான் வாழ்ந்துச்சு,…… “ என்று கண்கலங்க….

காத்தமுத்துவும்..முருகேசனும்… அவர்களின் அருகில் வந்து….

“கவலப்படாதீங்க ரெண்டு பேரும்… நம்ம தீக்‌ஷா கண் முழிச்சு…விஜய் சார் கூட சீக்கிரம் வாழும்…. உங்களக் கூட சக்திய மறக்க வைக்கும் பாருங்க” என்று சொல்லி ஆறுதல் படுத்த

விஜய்…. அதை ஆமோதிப்பது போல தலை ஆட்டினான்… அந்த ஆறுதல் அவனுக்கும் தெம்பூட்டுவது போல் தான் இருந்த்து….

அதன் பிறகு…. சக்தி சம்பந்தபட்ட… எல்லா விசயங்களையும் விஜய் தானே எடுத்துக் கொண்டான்…. அவளின் ஈமக் காரியங்களிலில் இருந்து….. அவளின் காதலன் இல்லையில்லை அந்த கயவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை அவன் ஓயவில்லை…

சக்தியின் பெற்றோரே அவனுக்கும் …. காத்தமுத்து,முருகேசனுக்கு சமையல் செய்து தர… விஜய்… தன் குடும்பத்தை விட்டே தனித்திருந்தான்………….. யாரிடமும் பேசவில்லை…. பேசவும் விரும்ப வில்லை…. இந்த வாழ்க்கைக்கு ஒருமாதிரி தன்னை பழக்கிக் கொண்டான் என்றே சொல்ல்லாம்….

கலைச்செல்வி எவ்வளவு கெஞ்சியும்….. வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை…. தீக்‌ஷாவோடுதான் வருவேன் என்று பிடிவாதம் பிடித்தான் விஜய்….

சுரேந்தரோடு பேசுவதே கிடையாது… அவன் ஏதாவது தொழில் ரீதியாக சந்தேகம் கேட்டால் கூட

“சார்தான் பெரிய ஆளாகிட்டீங்க இல்ல….. எல்லா முடிவும் நீங்களே எடுத்து தன்னிச்சையா பண்ற அளவுக்கு பெரிய ஆளாகிட்டீங்க… நீங்களே பார்த்துக்கங்க…. இவன் பைத்தியக்காரன் ஆகிட்டான்னு முடிவு பண்ணிதானே பைத்தியத்தை சக்தி மூலமா தெளிய வைக்க நெனச்சீங்க……அப்படி மட்டும் ஏதாவது பண்ணி இருந்தீங்க” என்று சுரேந்தரை சாடியவன்….. சுரேந்தரிடம் மட்டும் இன்றி…. தீனாவிடமும் பேச மறுத்து விட்டான்…

யுகியைக் கூட தேற்ற ஆர்த்தி இருந்தாள்…. சுரேந்தர்தான் சுத்தமாய் நொந்து போனது….

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது வருமோ என்று ஒவ்வொருவரும்……. காலத்தின் கையில் போட்டு விட்டு… அன்றாட வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருந்தனர்…

அந்த நாளும் வந்தது… விடிவு காலமா என்பது தெரியவில்லை…. தீக்‌ஷா கண் விழித்தாள்தான்…. ஆனால் நிலைமை தான் வேறாய் இருந்த்து…. விஜய்க்கு விடிவு காலம் என்பது கேள்விக் குறியாகவே இன்னும் நின்றது என்றே சொல்லலாம்…

ஜெயந்தி மற்றும் விஜய் மட்டுமே தீக்‌ஷா இருந்த அறையில் இருப்பனர்…

அன்றைய இரவும்.. தீக்‌ஷா அருகில் தலைவைத்து படுத்திருந்தான் விஜய் …. அவளின் கைகளைப் பிடித்தபடியே…

நிசப்தமான இரவின் மத்தியில்…….. தீக்‌ஷா கடினப்பட்டு இமைகளைப் பிரித்தாள்…. 2 மாதம் ஒரே நிலையில் இருந்ததால்…. அவளின் உடல்… அவள் மூளையின் கட்டளைக்கு ஏற்று செயல்பட சிரமப்பட…. கண்களைச் சுழற்றினாள் தீக்‌ஷா…..

எழுந்து அமர முயற்சி செய்தாள் ஆனால் முடிய வில்லை……….. வறண்டு போன உதடுகளை ஈரமாக்கியவள்…. பேச நினைத்தாள் தான் முடியவில்லை…. தன் கைகளின் மேல் இருந்த ஆண் கரத்தினை உணர்ந்தவள்… வேகமாய் பறிக்க முயற்சித்தவளுக்கு….. அது முடியவில்லை

தான் யார் என்பதே தெரியாத போது… அவள் தன் கணவனை அறிவாளோ…..

தான் யார்… எங்கிருக்கிறோம் என்று தன் ஞாபகங்களின் அடுக்கில் தேட முயற்சித்தவளுக்கு…. விமான தரை இறங்கிய போது வெடித்து சிதறிய காட்சி மட்டுமே எஞ்சி இருக்க…. அவளுக்கு அது தலையில் பெரும் இடி இடித்த வலியின் வேதனை தர…. வேகமாய் தன்னை சுற்றி பின்னபட்டிருந்த வயர்களை எல்லாம் பிய்த்து எறிந்தபடி எழ முயற்சி செய்ய… விஜய் …. திடுக்கிட்டு எழுந்தான்…. எழுந்தவன் கண்களில் சந்தோசமா… ஏக்கமா…. எதைக் காட்டுவதென என்றே தெரியவில்லை..

தன்னவள் கோமா நிலையிலிருந்து வெளி வந்து விட்டாள் என்பதே அவனுக்கு உற்சாகத்தினை தர…

தீக்‌ஷா என்றபடி தன் புறம் பற்றி இழுத்தவனை……….. உணர்ச்சி இல்லாமல் பார்த்தவள்…. அவனைத் தள்ளி விட்டு எழ முயற்சிக்க…. விஜய் முதலில் பெரிதாக எடுக்க வில்லை… அவளைத் தன்னோடு அணைத்து அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட போராடிக் கொண்டிருக்க… இப்போது ஜெயந்தியும் கண் விழிக்க… தன் மகளிடம் சந்தோசமாய் ஓடி வந்தாள்…

முதலில் போராடிய தீக்‌ஷா…. விஜய்யின் அரவணைப்பில் ஒன்றிய பின்னோ….. தான் யார் என்றறியாத நிலையிலும்…. இந்தர் என்று அலறினாள்…..

“என் இந்தர்…….. என்னை விட்டு ஏன் போனார்……” என்று விஜய்யிடமே கேள்வி கேட்டவள்…. தன் கழுத்தில் தொங்கிய தாலியை தூக்கி எறிய….

ஜெயந்தி அதிர்ச்சியில்….

“என்னடி ஆச்சு உனக்க்கு…. மாப்பிள்ளை உன் பக்கத்தில தான் நிற்கிறார்..” என்று பதறிச் சொல்ல….

“நான் அவர்கிட்ட போகனும்..” என்று விஜய்யிடமிருந்து விடுபட்டாள்……. தீக்‌ஷா எப்போது தாலியை தூக்கி எறிந்தாளோ அப்போதே விஜய் தன்னிலையில் இல்லை…

அவனிடமிருந்து தள்ளிப் போன தீக்‌ஷா… தன்னவனின் இழப்பைத் தாங்க முடியாத தீக்‌ஷா தன்னைத் தானே அழிக்க முயற்சிக்கும் வண்ணம்….. அதற்கு ஏதுவாக அங்கிருந்த பொருட்களை எல்லாம் தேட… எதுவும் கைக்கு கிடைக்காமல் போக….. பைத்தியக்காரி போல அங்கிருந்த நீடில்களைப் பிரிக்க ஆரம்பித்தாள் தன் கைகளை கீறுவதற்காக… விஜய்க்கு முதலில் அவளின் செயல்கள் புரியாமல் விழித்தவன்…. இப்போது அவள் செய்யப் போவதை உணர்ந்தவன்…

தீக்‌ஷா என்று கத்தியபடி அவற்றை எல்லாம் அவளிடமிருந்து பறிக்க……… அவளோ வெறித்தனமாய்ப் பிடிவாதம் பிடித்தாள்…

எப்படியோ சமாளித்து அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவன்… அவளை அணைத்தபடி…. அவசர உதவி எண்ணை அழைத்தும் விட்டான்….

விஜய்யின் இதயத் துடிப்பை உணர்ந்த தீக்‌ஷா….. தனக்குள்…. பேசியவளாய்…….. இந்தரின் நினைவுகளை தனக்குள் கொண்டு வர முயற்சிக்க… அவளால் முடியாமல்…. அவளின் கண் முன்… விமான விபத்தின் காட்சிகளே பிம்பம் ஆக வர…. அவளால் அதை ஏற்க முடியாமல்…. போராட ஆரம்பித்தவள்…. அது முடியாமல்….. அழுத்தம் அதிகம் ஆக… அதிக அழுத்தத்தில்………….. அவள் கண்கள் இரத்தமாய் சிவக்க ஆரம்பிக்க…. இப்போது மூக்கில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது… சிறிது நேரத்தில் மயங்கியும் போனாள் தீக்‌ஷா

விஜய்க்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை…. அவள் முற்றிலும் நினைவுடன் எழவில்லை என்பது அவனுக்கு புரியவே நிமிடங்கள் கடந்தது…..

ரத்தம் வழிவதைப் பார்த்த பின் தான் தன் உணர்வுக்கு வந்தான்…. வேகமாய் தன் கைகளை வைத்து துடைக்க… நின்ற பாடில்லை.. தீக்‌ஷாவின் நடவடிக்கைகளைப் பார்த்த ஜெயந்தி அலறியே… தான் ஒரு புறம் மயங்கிப் போனாள்….

அதன் பின் அன்றைய பணியில் இருந்த செவிலி உடனடியாக தீக்‌ஷாவுக்கு முதலுதவி செய்ய… ஓரளவு தீக்‌ஷா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாள்….

தன்னிலைக்கு வந்திருந்த ஜெயந்தி ஒருபுறம் புலம்பிக் கொண்டிருந்தாள்…

தரையில் கிடந்த மாங்கல்யத்தினை கை நடுங்க எடுத்த விஜய்யை…. பார்த்த ஜெயந்தி….. மயக்க நிலையில் இருக்கும் தீக்‌ஷாவின் கழுத்தில் மீண்டும் போட்டு விடச் சொல்ல….. விஜய் மறுத்தபடி…. அதை தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியவன்…. தீக்‌ஷாவின் காலில் இருந்த மெட்டியையும் அவளிடமிருந்து தன் கையாலே கழட்ட… ஜெயந்திக்கு தாயாய் உள்ளம் தூக்கி வாரிப் போட்ட்து…

ஒருபுறம் ஜெயந்தியின் மனம் சஞ்சலப்பட்டது என்றே சொல்லலாம்… எங்கு தன் மகள் பைத்தியக்காரி என்று முடிவு செய்து விட்டானோ…. இதை சாக்காக வைத்து தன மகளைத் தள்ளி வைத்து விடுவானோ… வசதி படைத்தவர