அன்பே! நீ இன்றி!! 14

அத்தியாயம் 14:

அடுத்த நாள் காலை சாரகேஷ் வழக்கம் போல கிளம்பிக்கொண்டிருக்க……….. அண்ணா எனக்கு பெட்ரோலுக்கு இந்த மாசத்தில் இருந்து பட்ஜெட் அதிகமாகும் என்றபடி தன் முன் வந்து நின்றவளைப் பார்த்து

சிரித்த சாரகேஷ்……

“சுத்தி வரச் சொன்ன உங்க பாஸ்கிட்டேயே எக்ஸ்ட்ரா சார்ஜ் வாங்கு… என்கிட்ட கேட்கிற” என்று கிண்டல் செய்ய…….

“அண்ணா” என்று கொஞ்சியவளாய் இருவரும் சாப்பிட அமர…..பார்வதி யோசனையுடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்…..

சாரகேசிடம் நேற்று வந்தவுடனே நடந்ததெல்லாம் சொல்லி இருந்தாள் பார்வதி…. அதனால் சாரகேஷ்…..

“பாரு….என்னடா யோசனையிலே இருக்க……….. தீக்‌ஷா பற்றி யோசிக்கிறாயா…” என்று வினவ

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்………… ஆமாம் அண்ணா………. எனக்கு அவ நினைப்புதான்…………. எனக்கு கொஞ்சம் பயமாயிருக்குணா……………. நேத்து அவ மயங்கி விழுந்து அவ துடிச்சதை பார்க்கும் போது அவளுக்கு ஏதோ பயங்கரமா நடந்திருக்குன்னா…………அதுவும் ஃப்ளைட் சத்தம் தாங்க முடியாம அவ துடிச்சதை நீ பார்த்திருக்கனும்…… சத்தியமா என்னால தாங்க முடியலண்ணா……..” என்றபடி………

“ஃப்ளைட்டுக்கும் அவளுக்கு என்ன சம்பந்தமா இருக்கும் …….. ராகேஷ் ஃபாரின்ல இருந்தார்னு தானே சொன்னா………… அவளுக்கு ராகேஷ் கூட மேரேஜ் ஆகியிருக்குமோண்ணா…………. ” என்று கேள்விக்குறியாய் நிறுத்தியவள்

“அவருக்கு ப்ளைட் ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்குமோ………… இவ அதுனால இப்டி ஆகிட்டாளாஅ…….. அப்டி இருக்குமோ…. இப்டி ஆகி இருக்குமோனு எனக்கு மண்டையே வெடிக்குதுண்ணா………… நைட் வீட்டுக்கு வந்தவுடனே லாஸ்ட் இயர் ஏதாவது ஃப்ளைட் ஆகிஸ்டெண்ட் ஆகி இருக்கான்லாம் பார்த்தேன்……….. அந்த அளவுக்கு நான் டிஸ்டர்ப் ஆகிட்டேன்… என்று சொல்ல……..” சாரகேஷ் அவளின் தீவிரத்தை உணர்ந்து

“ஹேய் பாரு………….ஏன் இப்டி குழப்பிக்கிற நீ…………….” என்று கேட்க

“இல்லண்ணா………. நேத்து அவ துடிச்சதை பார்த்துருக்கணும் நீ…………. அந்த விஜய் கூட பதறிப் போய்ட்டாரு………….” என்றபடி சாப்பாட்டை கைகளால் அளந்தவள்

“அண்ணா………… இண்டெர்னேசனல் ப்ளைட் ஆக்ஸிடெண்ட் எதுவும் லாஸ்ட் இயர் நடக்கலை அண்ணா………… ஆனா ஒரு ஃப்ளைட் ஆகிஸ்டெண்ட் நடந்திருக்கு…. அதுவும் இந்தியாக்குள்ள……….. உனக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்………..” என்று சொல்ல

“ஆமாம்……….. டெல்லி போன விமானம்……….. எல்லோருமே இறந்துட்டாங்க……….”. என்று வருத்தமாய்ச் சொல்ல…….

“எனக்கென்னமோ டவுட்டா இருக்குண்ணா………. அதுதான் என் ஃப்ரெண்ட்கிட்ட………… அதுல இறந்தவங்க லிஸ்ட் எல்லாம் கேட்ருக்கேன்………… 2 டேஸ்ல தரேனு சொல்லி இருக்கா……. ஏண்ணா……... தீக்‌ஷாவுக்கு மேரேஜ் ஆகிருக்குமோ…..” என்று கவலையோடு கேட்க

சாரகேஷ் நிமிர்ந்து பார்த்து………..

“ஆகி இருக்கலாம்……. ஏன் பாரு நீ உன்னை இவ்ளோ குழப்பிக்கிற ………… “

“ப்ச்ச இல்லண்ணா…………. தீக்‌ஷா ரொம்ப ஜாலியான பொண்ணுண்னா………… இப்போ அவ சந்தோசமா இல்ல……… அவ மனசுக்குள்ள ஏதேதோ போராட்டம் அண்ணா……. அவகூட பேசுறதுலயே தெரியுது………….. பேசிட்டே இருக்கா……….. திடிர்னு அமைதி ஆகிறா………….. அவளுக்குள்ள என்னமோ இருக்கு………….. என் கூட ஸ்கூல்ல படிச்சா தீக்‌ஷாவானு கூட சந்தேகமா இருக்கு…..அந்த அளவு அவ கேரக்டர் கொஞ்சம் டிஃபெரெண்ட் ஆகி இருக்கிற மாதிரி இருக்கு…………… முதலில் எல்லாம் அவ பேச்சில் ஒரு துள்ளல் இருக்கும்…… எதையும் நினைக்காம சட்டு சட்டுனு பேசுவா…. ஆனா இப்போ அவ பேச்சுல அது மிஸ்ஸிங்…… யோசிச்சு யோசிச்சு பேசுறா…. ஆனா முன்ன இருந்த தீக்‌ஷாவா இருக்க ட்ரை பண்றா…… அது அவளோட நடவடிக்கைலையே தெரியுது…… உனக்கு டிஃபெரெண்ட் தெரியுதாண்ணா” என்று சாரகேஷை கேள்வியாய் நோக்க

”அவளைப் பார்த்து 7 வருசம் ஆகி இருக்கும் போது கண்டிப்பா சேஞ்ச் ஆகி இருப்பாதான்………. இதில் என்ன ஆச்சரியம் இருக்கு……… அவளும் உன்கிட்ட கூட டிஃபெரெண்ட் உணர்ந்திருப்பா பாரு……….. நீண்ட நாளைக்குப் பிறகு நாம யாரைப் பார்த்தாலும் இந்த ஃபீல் வரும்மா……….. பேசுவதில் கொஞ்சம் தயக்கம் கூட வரும்……….. அதுமட்டும் இல்லை…… அவளோட உடல்நலக் குறைவும் அவளோட அமைதிக்கு காரணம்னு சொல்லலாம்……… ”என்று சொல்ல

“புரியுதுண்ணா………” என்று சொன்னவள்……….. அடுத்து ஏதோ பேச ஆரம்பிக்க……….. அவர்களின் அன்னை அருகில் வர………… இருவரும் பேச்சை மாற்றினர்

நேற்று சுரேந்தருடன் வந்திருந்ததால்……… அவள் ஸ்கூட்டி அலுவலகத்திலேயே இருக்க… இருவருமாய்க் காரில் கிளம்ப…….காரை ஓட்டி வந்த சாரகேஷைப் பார்த்த பார்வதி…. தன் அண்ணனையே பார்த்தபடியே வந்தாள்……..

“அண்ணா……….. தீக்‌ஷா இப்போவும் உன் மனசுல இருக்காளாண்ணா…. ஒருவேளை அவளுக்கு மேரேஜ் ஆகி இருந்தது என்றால்……….. வருத்தப்படுவியா” என்று கேட்க

சற்று நேரம் அமைதியாய் வந்த சாரகேஷ்……. அவளைப் பார்க்காமலே பேச ஆரம்பித்தான்

“முதல் காதல் என்னைக்குமே அடி மனசுல இருக்கும்மா……… எல்லோருக்கும் அதில் ஜெயிக்கிற பாக்கியம் கிடைக்காது………..” என்று சொன்னவன் முகத்தில் பெரியதாய் வருத்தம் இல்லைதான்……

தங்கையின் முகத்தைப் பார்க்க………… அவள் யோசனையில் இருக்க……

“அதுவும் ஒருதலைக் காதல்……….. கொஞ்ச நாள் வருத்தமா இருந்துச்சு………. அதுக்கப்புறம் மறந்துட்டேன்……. மறந்துட்டேனு சொல்றதைவிட………. விட்டுட்டேன்……… ஏனென்றால்… அப்பாவோட மரணம்….. அதிலும் படிப்பின் இடையிலே நம்ம அப்பா இறந்துட்டாரு….. மகனா,அண்ணனா பொறுப்புகள் வந்த போது…… காதல் எல்லாம் பின்னால் போய் விட்டது….. அதன் பிறகு……. வேற யார்க்கிட்டயும் அந்த எண்ணங்கள் தோன்றவில்லை” என்று சொல்லும் போதே அவனுக்கு அகல்யா ஞாபகமும் வராமல் இல்லை………..

“இப்போ மறுபடியும் அதே பொண்ணப் பார்த்தாலும்……… முதலில் அவளிடம் இருந்த அந்தக் காதல் இல்லை………… ஆனா அவ நல்லா இருக்க வேண்டும்….. அவ வாழ்க்கைல எந்த பிரச்சனையும் நடந்திருக்கக் கூடாதுனு மனசு துடிக்குது… அதை விட பெருசா ஒண்ணும் தோணலை” என்றவனிடம்

”அந்த விஜய்…. தீக்‌ஷா மேல ரொம்ப அக்கறையா இருக்காண்ணா……………. விஜய் அவள ரொம்ப ப்ரொடெக்ட் பண்றார் அண்ணா……”. ஆனால் என்று மென்று முழுங்கியவள்

“அவ அந்த நிலைமையில இருக்கா………. அவள தூக்க ரொம்ப யோசித்தார் தெரியுமா………… ” என்று கூற

”ஒருவேளை அவளைத் தூக்கறதுக்கும் ஸ்டேட்டஸ் பார்த்திருப்பானோ என்னவோ……” என்று சாரகேஷ் எரிச்சலாய்ச் சொன்னவன்….. தங்கையின் பார்வையில்

“சரி சரி முறைக்காத………. தீக்‌ஷா சொல்றத வச்சுப் பார்க்கும் போது அவன் மேல பெருசா அவளுக்கும் விரோதம் இல்லை………. தன் குடும்பத்தில அவன் மூக்கை நுழைக்கிறான் அதுதான் அவளுக்கு பிடிக்க வில்லை…….. மற்றபடி அவ அத்தானை அவளும் விட்டுக் கொடுக்கலை……………… அதுனால……….இப்போதைக்கு நீ இதப் பத்தி எல்லாம் யோசிக்கிறத விட்டுட்டு….. “ என்று நிறுத்தியவன்

“சீக்கிரம் வேற கம்பெனிக்கு ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறேன்………. நீ விஜய்கிட்ட வேலை பார்க்கிறது பிடிக்கவில்லை…………….. அவன எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை……. அவன மட்டும் இல்லை அவன் தம்பினு ஒருத்தன் வந்தானே…… அவனையும் தான் பணத்திமிர் அவனுங்க ரத்ததிலேயே ஓடுது போல………… ஒரு முறைதான் ரெண்டு பேரையும் பார்த்திருக்கேன்….. எனக்கே இப்டி இருக்குனா……….. தீக்‌ஷாவ நினைத்துப் பார்….” என்று கசப்பாய்ச் சொல்ல

அதிர்ந்தாள் பார்வதி………….. ”சுரேந்தர் கோபப்பட்டான் தான் ஆனால் அதன் பிறகு தன்னோடு பேசிய முறையில் அவனை பணத்திமிர் பிடித்தவன் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை……. ஏன் விஜய் மேல் கூட அவளுக்கு அந்த அளவு பயம் இல்லை எனலாம்…….. நேற்று கூட கோபம் இருந்தும்….. அவளை அவன் திட்ட வில்லையே” என்றெல்லாம் சிந்தனையில் உழன்றவள்

சாரகேஷிடம் எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்…….பின் தன் அண்ணனை நோக்கி……

“விஜய்க்கு மேரேஜ் ஆகலைனு தீக்‌ஷா சொல்றாண்ணா………….. எதை யோசிக்கிறதுனே தெரியலை…. தீக்‌ஷாவைப் பார்த்து ஒருவாரம் கூட ஆக வில்லை….. இவ்ளோ குழப்பம் எனக்கு…….” என்று சொன்னவள்….. வெளியில் சொல்லாமல்

“இதுல நேற்றிலிருந்து சுரேந்தர் ஞாபகம் வேறு…… ” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்…

”அண்ணா உனக்கு தீக்‌ஷாவை பார்த்ததும் அது காதல்னு எப்டி கன்ஃபார்ம் பண்ணின” என்று மெதுவாய்த் தயங்கிக் கேட்க

தங்கையை கொஞ்சம் கலக்கமாகப் பார்த்தான் சாரகேஷ்……..

“ஏன் கேட்கிற………..” என்று கேட்டபோதே அவன் கவலை தோய்ந்த முகம் பார்வதிக்கும் புரிய…… தன் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்தவள்

“சும்மாதான்………….ஒரு ஜென்ரல் நாலெட்ஜுக்குதான்” என்று கண் சிமிட்ட…. சாரகேஷ் இப்போது… காரை நிறுத்தினான்…….

“ ’பாரு’ நீ தீக்‌ஷா விசயத்தில் ரொம்ப குழம்பி இருக்கேனு நினைக்கிறேன்….. தீக்‌ஷா பற்றி நீ குழம்பி…. அவளையும் குழப்பி விட்ராத……… அந்த விஜய்யப் பற்றி நானும் விசாரிக்க வேண்டும்…… ஆனால் அடுத்த வாரம் எனக்கு ஒரு கேம்ப் இருக்கு…….. அது முடிந்த பின்னால்தான் தீக்‌ஷாவைப் பற்றி யோசிக்க வேண்டும்….. இப்போதைக்கு அவளுக்கு உடல் நலத்தில் பெரிதாக பிரச்சனை இல்லை….. அந்த வகையில் நிம்மதி எனக்கு…. ஆனால் ஏன் விஜய் அவளை அப்படிச் சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறான்…. அது தீக்‌ஷா குடும்பத்திற்கு தெரியுமா……….. இதெல்லாம் கேள்விக்குறியா இருக்கு….. கொஞ்சம் பொறுமையா அவ விசயத்தில் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறிய சாரகேஷிடம்…. சரி என்று தலை ஆட்டினாள் பார்வதி….

ஆனாலும் அவள் குழப்பம் தீக்‌ஷா மட்டும் இல்லை என்பதை உணர்ந்த சாரகேஷ்….. சற்று கிண்டலுடன்

“ ’பாரு’ ………….. காதலை எப்டி கன்ஃபோர்ம் பண்ணேனுலாம் கேட்கிற………… என்னவோ சரி இல்ல நீ ………..” என்று ஆரம்பித்து………… ”என்ன உனக்கு ஏதாவது கன்ஃபார்ம் பண்ண வேண்டுமா” என்று முடிக்க

பார்வதி சுதாரித்தபடி……….

“டவுட் கேட்கக் கூடாதே…….. உடனே திருப்பி விட்ருவீங்களே” என்று சிரிக்க………… அதன் பிறகு அண்ணனும் தங்கையும் வேறு விசயங்களை பேச ஆரம்பித்தனர்…… .

பார்வதி தன் அலுவலகத்தில் இறங்கிக் கொள்ள……….. சாரகேஷ் மருத்துவமனை நோக்கி சென்றான்….. அவனுக்குள்ளும் பல குழப்பம்தான்……….ஆனால் பெரியதாக இல்லை…… அடுத்த நாள் சுரேந்தரைப் பார்க்கும் வரை தீக்‌ஷா விஷயத்தில் தடுமாறாமல் தெளிவாகத்தான் இருந்தான் அவன் ………..

-----------------

சாரகேஷ் மருத்துவமனையை அடைந்த போது தன் குழப்பங்களை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு…. மருத்துவனாய் மாறி இருந்தான்.

அவனின் இன்றைய பணிகளை யோசித்தபடியே…… தன் அறைக்குள் நுழைய…… அங்கு அகல்யா அமர்ந்திருந்தாள்….

அகல்யா……. அவனை கடந்த 2 வருடங்களாக காதலிப்பவள்……………. அதற்கு முன் 1 வருடம் தோழியாக பழகியவள்……….

அவளைப் பார்த்து புருவம் உயர்த்தியவன்……..

“ஹாய் அகல்யா” என்று சொல்லியபடி

“என்ன மேடம் காலையிலேயே இந்தப் பக்கம்” என்று ச