top of page
Writer's picturePraveena Vijay

அன்பே… நீ இன்றி??? 9

அத்தியாயம் 9

ராதாவுக்கு மனதே சரி இல்லை……….. கடந்த 10 நாட்களாய்…….. அதுவும் தீக்‌ஷாவை அவள் அண்ணன் அடிக்க கை நீட்டிய காட்சி இன்னும் இப்போது நடந்தது போல் இருக்க……. தன் அண்ணனைப் பற்றி சரியாகத் தெரியாமல் தீக்‌ஷா ஆடுகிறாள் என்றே தோன்ற…. கலங்கினாள்………… அதுமட்டும் இல்லை……… இது தன் கணவனுக்குத் தெரிந்தால்…. அவன் வேறு ஆடுவான்……. என்றெல்லாம் குழம்பியவள்………….. ஒரு முடிவுக்கு வந்தாள்

”சீக்கிரம் தன் புகுந்த வீட்டிற்கு போக வேண்டும்……… அப்போதுதான் தீக்‌ஷா இங்கு அடிக்கடி வருவது நடக்காது……….. அது மட்டும் இல்லை ……….. அவளுக்கு வரன் பார்த்து திருமணத்தையும் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்…… இங்கு அண்ணனுக்கும் ஏதாவது நல்லது நடக்க வேண்டும்……

இப்படியெல்லாம் முடிவு செய்தவள்….. தன் தாயிடம் பேச ஆரம்பித்தாள்…………. யுகேந்தரும் கூட இருந்தான்

”ஏம்மா……….. அண்ணாக்கு எப்போ மேரேஜ் பண்ண” என்று கேட்க……

அவ்வளவுதான் கலைச்செல்வி தன் மனவருத்தத்தை எல்லாம் தன் மகளிடம் கொட்ட ஆரம்பித்தாள்……..

“ஆமா அது ஒண்ணுதான் குறைச்சல்………… ஏதோ துபாய்ல் இருக்கிற கம்பெனியோட கொலாப்ரேசன்ல….. ஒரு பெரிய………. பார்ட்னர்ஷிப் கிடைக்கிற மாதிரி இருக்காம்…….. அது சைன் ஆச்சுனா….. பிஸ்னஸ் இன்னும் வளருமாம்….. இருக்கிறதை வச்சு பண்ணுவானா……….. அந்த தீனாவும் இத டார்கெட் பண்றானாம்………

”தீனாவும் இவனும் எப்போதான் ஒருத்தருகொருத்தர் மோதிக்கிறதை நிறுத்துவாங்களோ……. அன்னைக்கு கோவில்ல தீனா அம்மா வரலட்சுமியையும், ஆர்த்தியையும் பார்த்தேன்……….. ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தேனா பேசிட்டு வந்தேன்…….. ஆர்த்தி நல்லா வளர்ந்துட்டா………. அத்தை அத்தைனு என்னை விடவே இல்லை…….. முதலில் எல்லாம் நம்ம வீட்டுக்கு வருவா….. அவ அண்ணனும், நம்ம விஜய்யும் எப்போ போட்டி போட ஆரம்பிச்சாங்களோ….. இப்போ அவ வருவதே கிடையாது…… அவங்க அப்பாவும்……… உன் அப்பாவும் சேர்ந்து இதே பிஸ்னஸ்தான் தான் பண்ணினாங்க….. இப்போ…… இவனுங்க ஏன் தான் இப்டி போட்டி போடறாங்களோ…. உங்க அப்பாவும் கண்டுக்க மாட்டேங்கிறார்… இதுலாம் தொழில் திறமைடினு புள்ள மேல பெருமை வேற…… எங்க போய் விடப் போகுதோ என் புள்ளைய….”. என்ற போது அருகில் இருந்த யுகி தன் அன்னையை பார்த்துக் கொண்டே இருந்தான்…………. கண்களில் கலக்கத்தோடு…………….

விஜய்க்கு பண்ணிட்டு…. சுரேந்தருக்கு பண்ணனும்…….. அவனுக்கு பொண்ணு வேற தேடனும்… புரிஞ்சுக்க மாட்டேங்கிறான் உங்க பெரிய அண்ணன்…….. என்ற புலம்பிச் சென்ற கலைச்செல்வியைப் பார்த்து……. பின் யுகேந்தர் ராதாவைப் பார்க்க….. ராதாவும் யுகேந்தரைப் பார்த்தாள்….

யுகியின் கவலை படிந்த முகத்தைப் பார்த்து ”என்ன” என்று கேட்க …… ஒண்ணுமில்லை என்றபடி அவனும் வெளியேற…. ராதாவிற்கு சற்று கலக்கம் அதிகமானதுதான் உண்மை……………

-------------

அதன் பின் ராதா 6 மாதத்திலேயே புகுந்த வீடு வந்து சேர……. தீக்‌ஷாவுக்கு சுனந்தாதான் எல்லாம் என்பதாகிப் போனாள்……….. வேலைக்குப் போகும் நேரம் போக….. சுனந்தாவோடுதான் பொழுதைக் கழிக்க

கலைச்செல்வியும்……. ராகவேந்தரும் அன்று தன் பேத்தியைப் பார்க்க வந்திருந்திருந்தனர்

அவர்களிடம் பேசியபடி இருந்த தீக்‌ஷா சற்று நேரத்தில் உள்ளே போக………… கலைச்செல்வி……… தீக்‌ஷாவின் பெற்றோரிடம் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த சில வரன்களை அவர்களிடம் கொடுத்தாள்

”இந்த வரன்லாம் பாருங்க ரெண்டுபேரும்…… ஒத்து வந்தா… தீக்‌ஷாவுக்கு பிடித்தால் நாம ப்ரொசீட் பண்ணலாம்…….. பணத்தை பற்றி எல்லாம் கவலைபடாதீங்க ஜாம் ஜாம்னு முடிச்சுடலாம்” என்று கலைச்செல்வி சொல்ல

ஜெயந்திக்கு வருத்தத்தோடு ஆத்திரமும் வந்தது….

‘இவங்க வீட்ல 3 பசங்க இருக்காங்க…. ஒருத்தருக்கு எடுக்க மனசு வரல………….. வந்துட்டாங்க ஜாதகத்தை எடுத்துகிட்டு…” என்று மனதில் மட்டுமே நினைத்தபடி தலை ஆட்டி வைத்தாள்………..

ஆனால்…. கலைச்செல்விக்கு தீக்‌ஷாவை சுரேந்தருக்கு எடுக்க வேண்டுமென்ற ஆசை இருந்தும்………… விஜய் கோபம் காரணமாக…………….. அந்த ஆசையை விட்டு விட்டாள்…… என்பது ஜெயந்திக்கு அப்போது தெரியவில்லை

மேலே கேட்டுக் கொண்டிருந்த தீக்‌ஷாவுக்கு…………… அன்று விஜய் பேசியது ஞாபகம் வர…………….

”இவங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா…………. இதைக் கேட்டால் கூட அவன் ஆடுவான்……………. நம்ம ஸ்டேட்டஸுக்கு அந்த பொண்ணுக்கெல்லாம்…………. மாப்பிள்ளை பார்க்கிற வேலை பார்க்கிறீங்களானு….. சொன்னாலும் சொல்வான்…………… “ என்று எண்ண ஓட்டத்தில் இருந்தாள்…..

அவர்கள் போன அடுத்த நிமிடம் கீழே வந்த தீக்‌ஷா…...........

“அம்மா” என்று பேய்க் கத்து கத்த…………..அது அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது…….

ராதாவும் தன் பெற்றோரை அனுப்பி விட்டு அப்போதுதான் உள்ளே வந்தாள்………….

அவளின் சத்தத்தை கேட்ட ஜெயந்தி…….. ஏற்கனவே ராதா பெற்றோர் மேல் வேறு கோபமாய் இருக்க…………. இன்னும் பத்ரகாளியானாள்….. அதில்

”என்னடி…….. இந்தக் கத்து கத்தற…. இந்த வாய்…… ஆடுகாளித்தனம் எல்லாம் எங்க போய் நிறுத்தப் போகுது பாரு……… ” என்க

தீக்‌ஷாவின் கண் கலங்கி விட்டது…………… அவ்வளவு வேகமாக கத்தி தன் தாயை அழைத்தவள்…. இப்போது தாயின் வார்த்தைகளில் காயம் அடைந்தாள்……. அவள் அம்மா அடிக்கடி இப்படி சொல்வதுதான்………….ஏனோ அன்று அவளுக்கு அந்த வார்த்தைகள்……… அவளது மனதைக் கீற……. வார்த்தைகளில் தடுமாற்றத்துடன்…. நெகிழ்ச்சியாக…. அதே நேரத்தில் அமைதியாகாவும்…………. நிதானமாகவும்

“ஏன்மா…. நா உங்களுக்குதானே பிறந்தேன் இல்லை தத்தெடுத்தீங்களா……… என்னைக்காவது நான் நல்லா இருக்கனும்னு சொல்லி இருக்கீங்களா……… என்ன ஆகப் போற……. எங்க கொண்டு வந்து நிறுத்தப் போகுது……….. போற இடத்துல நல்லாப் படப் போற…… இதுலாம் உங்க வாய்ல இருந்து…. பெத்த அம்மா வாய்ல இருந்து வந்தா…. நான் நல்லா இருப்பேனாம்மா சொல்லுங்க” என்று அழ ஆரம்பிக்க

தன் பெண்ணின் கண்ணீரில்…………….. எப்போதும் பட பட வென்று பேசுபவள்……… அதற்கு மாறாக………… பேசியதில்……… ஜெயந்தி உள்ளம் துடித்து விட்டாள்……….

“அம்மாடி தீக்‌ஷா…….. நான் மனசில வச்சு எதையும் சொல்லலமா……….. அய்யோ என் பொண்ணு இப்டிலாம் பேச மாட்டாளே…. என்றபடி…….. என்னடாம்மா ஆச்சு” என்று ஜெயந்தி கலங்க

தீக்‌ஷா தன் அன்னையிடம்…..

“எனக்கு அவங்க கொண்டு வந்த எந்த ஜாதகமும் வேண்டாம்மா….. எனக்கு பிடிக்கலைமா………ப்ளீஸ்….. நம்ம மாதிரி ஒரு மிடில் கிளாஸ்ல பாருங்கம்மா…….. நீங்க பார்த்து யாரைச் சொன்னாலும் எனக்கு ஒக்கே தான்மா” என்று தன் அண்ணியின் முகத்தை பார்த்தும் பார்க்காமல் சொல்ல

ஜெயந்தி திடுக்கிட்டாள்….. தீக்‌ஷா இந்த அளவுக்கு மனம் நொந்து பேசுகிறாள் என்றால்….. அதுவும் நம்ம மாதிரி என்றெல்லாம் பேசுகிறாளே என்று திடுக்கிட்டவளின் மனம்…….. எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது……..

“என்னம்மா…… எதுனாச்சும் நடந்துச்சா…… அம்மாகிட்ட சொல்லு” என்று மகளைப் பார்த்துக் கேட்டவாறே…. மருமகளின் முகத்தையும் பார்க்க…… ராதாவும் வெளிறிய முகத்துடன் இருக்க…..

தன் மருமகளின் முகம் சொன்ன செய்தி….. ஜெயந்திக்கு இன்னும் அடிவயிற்றைக் கலக்க……..

“என்னடி…….. கேக்குறேன்ல…..சொல்லு…..” என்று மகளை அதட்ட…. தீக்‌ஷா அதற்கு மேல் எதையும் மறைக்க வில்லை…..

“எனக்கு விஜய் அத்தானைப் பிடிக்கலைமா………….. அவரு என்னை தப்பா நினைக்கிறார்ம்மா…. அவங்க தம்பிங்க கூட பழகுறதப் பார்த்து என்னைத் தப்பா பேசிட்டாருமா……. அறையக்கூட வந்தாரும்மா” என்ற போதே ராதா மாடிக்கு எழுந்து போனாள்..

அவள் போவதைப் பார்த்தபடியே………… இப்போது ஒருமைக்கு மாறினாள்….. தீக்‌ஷா

“அன்னைக்கு மட்டும் அண்ணி வரல….. என்னை அறைஞ்சிருப்பான் மா…………… அண்ணி மாதிரி இல்லைமா அவன்……………” என்றவள் விஜய்யைப் பற்றி எல்லாம் சொல்ல…..

அவள் வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்த ஜெயந்திக்கு மனம் தாள வில்லை……….. மகன் காதல் தன் மகளைப் பாதித்து விடுமோ என்று கலங்கினாள்…….

தீக்‌ஷாவுக்கு விரைவில் திருமண ஏற்பாடு செய்ய வேண்டும்…………. இனி அவளை ராதா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பக் கூடாது………… என்று முடிவெடுத்தவளுக்கு……. மகளை அந்த வீட்டில் கொடுக்கும் ஆசை கூட சுத்தமாய் மறைந்து போய் விட்டிருந்தது..……

தன் மகளின் கண்களை வேகமாக துடைத்தவள்…..

“சரி விடுடா………….. நீ அங்க அடிக்கடிலாம் போக வேண்டாம்…. அவங்க கூடலாம் பேச்சு வச்சுக்காதா….. ஆனாலும் உனக்கும் வாய் ஜாஸ்திதாண்டா…. நம்ம அண்ணா மாதிரியே எல்லோரும் இருப்பாங்களா…. நீயும் பார்த்து பேசனும்…..” என்று அவளின் மன நிலையை மாற்றியபடிக் கொஞ்ச……..

“சரிம்மா………” என்று சொல்லியவள் செல்லமாய் அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டு படுக்க………..

தீக்‌ஷா தன் அன்னையை எதற்கும் தேட மாட்டாள்….. இன்று தன்னோடு இழைவதைப் பார்த்தவளுக்கு….. மனதோடே வைத்து மருகியிருப்பாள் போல…. என்று நினைத்த ஜெயந்தி……

“ரொம்ப திட்டிட்டாராமா விஜய் தம்பி” என்று மகளின் வேதனை பொறுக்க முடியாமல் கேட்க……..

”இவ்ளோ சொல்றேன்….. இன்னும் அந்த விருமாண்டிக்கு மரியாதை…… அவன “ என்று கழுத்தைப் பிடித்து நெறிப்பது போல் பாவனை செய்ய….. அப்போது அவள் அண்ணியும் கீழே இறங்க

”போச்சுடா…….பாசமலர் வந்துருச்சு………… “ என்று தன் தாயிடம் மெதுவாய்ச் சொல்ல

ராதா தன் அத்தையின் அருகில் அமர்ந்து…………..

“சாரி அத்தை.. என் அண்ணன் சார்பா…….. நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

எனும்போதே ஜெயந்தி வெடுக்கென்று எழுந்து விட்டாள்….

“என் பொண்ணு லேசுல அழவே மாட்டா தெரியுமாம்மா…… அவளையே அழ வச்சுட்டாரு உங்க அண்ணன்……….. நாங்க என்ன பண்ணினோம்…. அவருக்கு…………. இதுலாம் சரி கிடையாது….. அந்த தம்பிக்கிட்ட சொல்லி வைமா……. அப்புறம் எங்க கண்ணீர்லாம் சும்மா விடாது அவரை” என்றபடி அங்கிருக்க பிடிக்காமல் எழுந்து போக

இதுவரை ஜெயந்தி அவளிடம் இப்படிப் பேசியதில்லை என்பதால் சங்கட்டமாய்த் தலை குனிந்த ராதாவிடம்

“சாரி………. அண்ணி……… என்னாலதான் அம்மா திட்டிட்டாங்க…. தப்பா எடுத்துக்காதீங்க“ என்று தன் அழுத முகத்தை துடைத்தபடி அவளைப் பார்த்தாள்….

ராதா இப்போது

“தீக்‌ஷா நான் சொல்றேனு தப்பா எடுத்துக்காத………….. என் அண்ணன் பண்ணினது எல்லாம் தப்புதான்…… ஆனா நாங்க வளர்ந்த விதம் வேறு…. உங்க விதம் வேறு…… அதுதான் பிரச்சனை மா……. நீயும் அவர்கிட்ட பதிலுக்கு பதில் பேசாமல் போயிருக்கலாம்…… அதுதான் பிரச்சனையே…. என்று தன் அண்ணனுக்கு சப்போர்ட் செய்ய சுர்ரென்று மண்டைக்கு ஏறியது தீக்‌ஷாவிற்கு

“என்ன அண்ணி…….. அண்ணா பாசமா……….” என்று இகழ்ச்சியாகப் பேசியவள்

“நான் ஒண்ணு சொல்லட்டுமா…. இத்தனை பிரச்சனைக்கு காரணம் என்ன தெரியுமா………… உங்க லவ் தான்………. ” என்று கடுப்புடன் அவளை பார்த்து சொல்லியவளைப் பார்த்து ராதாவுக்கு கண்களில் கண்ணீர் வர……

எரிச்சலுடன்….

“இப்போ என்ன சொல்லிட்டேனு அழறீங்க அண்ணி…….. நீங்க இப்போ எனக்கு சொன்னீங்கள்ள,,,, நாங்க வளர்ந்த விதம் வேறு……… நீங்க வளர்ந்த விதம் வேறுன்னு….. இத உங்க அண்ணா சொல்லி இருந்திருப்பார்தானே…… சொல்லி இருந்திருப்பாரு என்ன …. கண்டிப்பா சொல்லி இருப்பாரு உங்களுக்கு…….. அப்போ நீங்க கேட்டீங்களா அண்ணி……. கேட்கலைல………. இப்போ எனக்கு மட்டும் அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க….. அவர் சொன்னப்ப கேட்டு….. அவர் சொன்ன பையனைக் மேரேஜ் பண்ணி இருந்திருந்தீங்கன்னா……….. உங்க அண்ணா சந்தோசமா இருந்திருப்பாரு….” என்று சொல்லியபடி எழுந்து போய்விட்டாள்……..

அவளின் வார்த்தைகளில் “இவ இப்போ நம்ம அண்ணாக்கு சப்போர்ட் பண்ணிட்டு போறாளா….. இல்லை திட்டிட்டு போறாளா” என்று குழம்பித்தான் போனாள் ராதா…..

--------------

மருமகள்………..மாமியார்………. நாத்தனார்……. என உறவுமுறைகளில் ஏற்படும் தடுமாற்றம் போல அங்கும் ஏற்பட்டு……… சில நாட்களிலே அது மறைந்து போய்……. ஒருவருக்கொருவர் பேச ஆரம்பிக்க….. நிலைமை ஓரளவு சகஜமாகியது…………… ஆனால் இரு வீடுகளுக்கும் எதிர்த்தரப்பு ஆட்களின் பிரசன்னம் சற்று மட்டுப்பட்டது என்பதே உண்மை…………

கலைச்செல்வியிடம் ராதா விசயத்தை சொல்லியிருப்பாள் போல…….. பேத்தியைப் பார்க்க மட்டும் எப்போதாவது வருவாள்…… ராதா அதுகூட போவதில்லை…….

அன்று அலுவலகத்தில் இருந்து வந்த தீக்‌ஷா தன் அண்ணியின் அறைக்குப் போனாள்………..

”அண்ணி……… நாம இன்னைக்கு ஷாப்பிங் மால் போகலாமா” என்று உற்சாகத்தோடு அழைக்க…..

ராதாவும். அவள் சகஜமாகப் பேச ஆரம்பித்த மகிழ்ச்சியில்………… அவளோடு போக

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது………. திடீரென்று ராதாவின் போன் அலற………. எடுத்துப் பார்த்தால் விஜய்தான்…

தான் இருக்கும் இட்த்தைச் சொன்னாள்..

----

”தீக்‌ஷா கூட……”

------------

”பாப்பாவும் தான்’ என்று முடிக்க…. போன் வைக்கப்பட்டிருந்தது……..

”யாரு அண்ணி” என்று கேட்க

“விஜய் அண்ணாதான் தீக்‌ஷா” என்று சொன்ன படி ஷாப்பிங் செய்ய……… அங்கு விஜய்யின் பிஏ அசோக் வந்து நின்றான்….

அசோக்கைப் பார்த்த ராதா….. கேள்விக் குறியாய் நோக்க

“என்ன அசோக்” என்றவளிடம்

“உங்கள…. விஜய் சார் கூட்டிட்டு போய் வீட்டில் விடச் சொன்னார் வாங்க” என்ற படி அழைக்க

“தீக்‌ஷாவும் வந்திருக்கா….. அவ கூட போறேனே” என்று பிடிவாதம் பிடிக்க………. விஜய் அடுத்த 10 நிமிடத்தில் அங்கு இருந்தான்……..

தீக்‌ஷாவின் புறம் திரும்பக் கூட இல்லை….

அவள் ஒருத்தி அங்கு இல்லவே இல்லை என்ற தொணியில் இருந்தான்……..

“வா போகலாம்” என்று ராதாவை மட்டும் அழைக்க

“ஏண்ணா..எதுனாலும் பிரச்சனையா” என்று கேட்க

“கேள்விலாம் கேட்காத….. இப்போ என் கூட வருகிறாயா இல்லையா” என்ற அதட்டலில் அதிர்ந்து ராதா தீக்‌ஷாவைப் பார்க்க

அவன் ஏற்கனவே கோபத்தில் இருக்கிறான் என்று அவனைப் பார்த்தபோதே தீக்சாவுக்கும் புரிய…….

“நீங்க போங்க அண்ணி…” என்றபடி தன் அண்ணியோடு தானும் கீழே இறங்கி கார் வரை வந்து அனுப்பி வைத்தாள்………

அவர்கள் போன பின்……. அசோக்கிடம் வந்து…… என்னவென்று விசாரிக்க………….

“அந்த தீனா இருக்கான்ல……. அவன் சார் தங்கச்சிய………… இங்க ஆள வச்சு கடத்த ப்ளான் பண்ணியிருப்பான் போல……… ” என்றபடி சாதரணமாய்ச் சொல்லியபடி…….. அவன் சென்று விட்டான்…..

உடல் நடுங்கி நின்றாள்…….. தீக்‌ஷா

“கடத்தலா….. என்ன இவன் சாதரணமா சொல்றான்……..” என்று சொல்லியபடி

சுற்றி முற்றி பார்க்க…….. அவள் கண்ணுக்கு கடத்தும் நோக்கில் யாராவது தெரிகிறார்களா என்று பார்க்க அந்த மாதிரி அவளுக்கு யாரும் தெரியவில்லை…..

”இவனுங்க என்ன பிஸ்னஸ் பண்றானுங்க…… மாஃபியா கேங் எஃபெக்ட்ல பில்டப் கொடுக்கிறானுங்க” என்றபடி தன் பைக்கை ஸ்டார்ட் செய்தாள்

“நீ போதும் செல்லம் எனக்கு……..” என்று தன் பிங்கியைக் கொஞ்ச வேறு செய்தவளுக்கு………… மனதில் ஒரு உறுத்தல் வர ஆரம்பித்தது….

”நானும் தானே இருந்தேன்…… என்னை கடத்தி இருந்தாங்கனா…….” என்று தோன்றும் போதே உடல் தூக்கிப் போட்டது

”எனக்கு ஒரு பாதுகாப்பு தரனும்னு நினைத்தானா….. இந்த விருமாண்டி….. இவன்லாம் ஒரு ஆளு….. தங்கை முக்கியம்…… அவளோட நாத்தனார் முக்கியமில்லையா…….. இவன் வீட்டுப் பொண்ணு மட்டும் துரைக்கு முக்கியம்” என்று திட்டியபடி வந்தவள்………. பின்னால் திரும்பிப் பார்க்க. அவளைத் தொடர்ந்து ஒரு பைக் வந்து கொண்டிருப்பது தெரிய…….. தன்னைத் தான் தொடர்கிறார்களோ …… என்னவோ….. என்ற பயம் வந்து விட்டது அவளுக்கு

வேகத்தில் எகிறினாள் தீக்‌ஷா…

”இவங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சு……….இது வேறயா…..”என்று வசை மாரி வேறு பொழிந்தபடி……… .40 நிமிடத்தில் அடைய வேண்டிய….. தன் வீட்டை 25 நிமிடத்தில் அடைந்தாள்……..

--------------

நாட்கள் கடக்க…..

தீக்‌ஷாவைத் அவள் அண்ணன் திருமணத்தில் வைத்துப் பார்த்த தாத்தாவின் மூலம் வந்த வரன் மீண்டும் வர….. ஜெயந்தியும் இப்போது மனப்பூர்வமாய்ச் சம்மதம் சொல்ல……. தீக்‌ஷாவின் ஜாதகம் அந்த வரனோடு ஒத்துப் போக……….. தீக்‌ஷாவிடம் பையனின் போட்டோ காண்பிக்கப் பட்டது…….

தீக்‌ஷாவும்

“குடும்பமும் தெரிந்த குடும்பம் என்பதாலும்…. பையனும் அவள் துறை என்பதால்….. மறுப்பதற்கு பெரிதாய் இல்லை என்று சம்மதம் சொல்ல………….. ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வந்தனர்………….

ராதா வீட்டில் இருந்தும்….. குடும்ப உறுப்பினர் அனைவரும் வந்திருந்தனர்…………

மாப்பிள்ளை ராகேஷ் வெளி நாட்டில் இருந்ததால் அவன் வீட்டினர் மட்டுமே வர……… பெண் பார்க்கும் படலமும் சுபமாய் முடிந்தது………………. போகும் போது அவன் தாய்……. அவனது போன் நம்பரும் ஃபேஸ் புக் ஐடியும் கொடுத்து விட்டுப் போனாள்…….

அன்று இரவு…………… படுக்கையில் புரண்டவளுக்கு தூக்கமே வரவில்லை………….. என்னடா இது…… பொண்ணு பார்க்க வந்ததுக்கே இந்த எஃபெக்டா என்றபடி………. ”ராகேஷ்….” என்ற பேரைச் சொல்லிப் பார்க்க……….. ஒரு ஃபீலும் வர மாட்டேங்குதே……………. என்று சிரித்தவள்

”தீக்‌ஷா ராகேஷ்” என்று தன் பெயரோடு சேர்த்து சொல்லிப் பார்க்க………. அது ஏதோ பரவாயில்லை கொஞ்சம் மேட்ச் ஆகுது என்று ஆறுதல் பட்டவளாய்….சரி போட்டொவைப் பார்ப்போம்….. என்று போட்டோவை எல்லா கோணத்திலும் வைத்துப் பார்க்க…. அவளுக்கு ஒன்றுமே தோணவில்லை………..

“அவன் பொண்ணு பார்க்க வந்திருந்தா தோன்றி இருக்குமோ …………. என்றபடி போட்டோவை கண்ணாடியின் முன் தனது அருகில் வைத்துப் பார்க்க……….. எதிலும் மனம் துள்ளவில்லை…….”

”இறக்கை கட்டிலாம் மனம் பறக்குமாமே….. ஏன் நமக்கு ஒரு ஃபீலும் வர மாட்டேங்குது” என்று யோசித்தவள்…

”ப்ச்ச்….. பார்க்க பார்க்க பிடிக்கும்……… இல்லை பழகப் பழகப் பிடிக்கும்……… இல்லை………தாலி ஏறுச்சுனா தானா மேஜிக் நடக்கும்” என்றபடி படுத்தவளுக்கு

சாரகேஷ் ஞாபகம் வந்தது………….. இப்போ என்ன பண்ணுவான்….. என்று நினைத்தபடி

“அவன் தனக்கு அக்கறையாய் சொல்லிக் கொடுத்த ஞாபகம் வர……….. புன்னகை வந்தது…. அவன் லெட்டர் கொடுத்ததும் ஞாபகம் வர………. அவன் கொடுத்தப்ப கூட பயம் தான் வந்ததே தவிர……. மனதில் வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லைதான்…… அடுத்து கல்லூரியில் அவளோடு படித்த சீனியர் முதல்…. தன் வாழ்க்கையில் சற்று அத்துமீறி வந்த ஆண்களை வரிசைப் படுத்தியவளுக்கு யாரையும் மிஸ் பண்ணியதாகவே தோணவில்லை……………. அதில் சாரகேஷ் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலாக பட்டான்….. ஒருவேளை அவன் அவள் உயிர்தோழியின் அண்ணன் என்பதாலா….. அவனின் தன் மீதான அக்கறையா என்று தெரியவில்லை…… பிடிக்கும் ஆனால்………. தன் வாழ்க்கையில் அவனை மிஸ் பண்ணிவிட்டோமோ என்ற அளவுக்கெல்லாம் இல்லை………. கடைசியாக சுரேந்தர் ஞாபகம் வந்தது………. அதுவும் விஜய் அன்று சொன்னதாலே வந்தது…… அவனும் அவள் மனதில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த வில்லை……. தானாக அவளுக்கு யார் மேலும் ஈடுபாடும் வரவில்லை……. வந்து சொன்னவர்கள் மேலும் வரவில்லை………… இவன் தான் உன் வருங்காலக் கணவன் என்று சொன்ன போதும் அந்த ராகேஷ் மேலும் எதுவும் தோன்றவில்லை……

“அடக்கடவுளே…………… தீக்‌ஷா……………. இந்தக் காதல் எப்போதான் வரும் உனக்கு…………….” என்று படுத்தவளுக்கு தூக்கமே போய் விட்ட்து………..

2 வாரங்கள் கடக்க……. ராகேஷ் தானாகவே அவளுக்கு போன் செய்து பேசுவான் என்று எதிர்பார்க்க………. அவனோ போனே செய்யவே வில்லை………. இவளும் முதலில் பெரிதாக எடுக்கவில்லை…………

அவள் அலுவலகத்தில்……………. இவளின் திருமண விவரம் அறிந்து அனைவரும் ஓட்ட………… ராகேஷோடு பேசாமல் இருந்ததாலோ என்னவோ………… அவர்கள் கிண்டல் கேலி…. சந்தோசத்தை…. அவளுக்கு வெட்கச் சிவப்பை ஏறபடுத்துவதற்குப் பதில்…… கோபத்தையும் தலைவலியையும் ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை…….


”என்னைக் கேலி பண்ணாதீங்க………..” என்று அவர்கள் முன் கத்த வேண்டும் போல் இருந்தது………… அவளுக்கு…..

ராகேஷுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று நினைவு வேறு வந்து தொலைக்க……………. நிம்மதி இழந்தவள்……. அவளுக்கு யாரிடமாவது இதைச் சொல்லி தன் மன அழுத்தத்தினைக் குறைக்க வேண்டும் போல் இருக்க….. யுகேந்தருக்கு போன் செய்தாள்….

அவனும் அவளது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ரெஸ்டாரண்டிற்கு வந்திருந்தான்………….. அவன் தான் முதலில் வந்திருந்தான்…………

இவள் வந்து அமர்ந்ததுமே

“என்ன புதுப் பொண்ணு எப்டி இருக்கீங்க……. வீட்டு பக்கமெல்லாம்……. வருவதே கிடையாது” என்று தன் பங்குக்கு கிண்டலை ஆரம்பிக்க

ஏதோ சிரிக்க வேண்டுமென்று என்று சிரித்து வைத்தாள்……

“பார்றா………. இது எங்க வீட்டு வாயாடி தீக்‌ஷா வா” என்று சத்தம் போட்டு சிரித்தபடி தன் கிண்டலைத் தொடர்ந்தான்…..

”அப்புறம்… சும்மாவே நீ ரொம்ப சீக்கிரம் எழுந்துருவ………… இப்போ எப்டி…………….” என்ற போதே……………… ஏற்கனவே கடுப்பில் இருந்தவள்…

“யுகி அடங்குறியா……….” என்று சொல்லி நிறுத்தியவள்…. எதுவும் சொல்லாமல் ஐஸ்கிரிம் இருந்த கப்பை ஸ்பூனால் துலாவியபடி இருக்க……………

அவள் பேசுவாள் என்று யுகி எதிர்பார்க்க…………… தீக்‌ஷா அமைதியாய் இருந்தாள்

“மூச்சு நின்னாலும் பேச்சு நிக்காதுனு சொன்ன மங்கையர் குலத் திலகம் பேச்சை நிறுத்திட்டாடோய்” என்று சொல்லி அவளைப் பார்க்க…………. இப்போது அவள் கண் கலங்கியிருந்தது……..

“ஹேய் என்ன தீக்‌ஷா” என்றவனிடம்…… அவன் எப்போது கேட்பான் என்று காத்திருந்தவள் போல்

ராகேஷைப் பற்றிச் சொல்ல…………….. அவனும் யோசிக்க ஆரம்பித்து இருந்தான்…………..

“யோசிக்க வேண்டிய விசயம் தான் தீக்‌ஷா… நீ உன் மனசில எதுவும் ஆசை எதுவும் வளர்த்துக்கலையே“ என்று தன் வீட்டுப் பெண்ணின் அக்கறையில் கேட்க

“ப்ச்ச்…….. அப்டிலாம் எல்லாம் இல்லை….. யார்கிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சு………. உன்கிட்ட கொட்டிட்டேன்….. வீட்ல யாருக்கும் தெரியாது யுகி…….. கல்யாண வேலை வேற நடந்துட்டு இருக்கு” என்றபடி

“கொஞ்சம் ரிசெர்வ்ட் டைப்பா இருப்பார் போல” என்றபடி தானே தன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவள் மனம்….. இப்போது லேசாகி இருக்க…… யுகியிடம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தாள்

“யுகி சார்….. இப்போலாம் ஆர்த்திய பார்க்கிறது இல்லையா” என்றவளிடம்

“அத விடு…” என்று தன் பங்கு வருத்தத்தினைக் அவன் கொட்ட

“ஏன் பிரச்சனையா என்ன” என்றவளிடம்

”அவங்க அண்ணாவும்…….. என் அண்ணாவும் பத்தாதா……….. இப்போ இன்னும் தீப்பொறி பறக்குது………….”

”அவ ஸ்கூல் படிக்கிற வரை ஒண்ணும் பிரச்சனை இல்லை….இப்போ பார்க்கவே முடியல……. போன் தான்…….. எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது…..” என்றவன்

“உன் கண்ணுலதான் தெரியாத்தனமா பட்டுட்டோம். அன்னைக்கு….. அண்ணனும் வேற வந்துட்டாரு…….. நல்ல வேளை அவர் பார்க்கவில்லை” என்று சொல்ல

“எப்டி……… உங்க அண்ணன் கண்ல மண்ணைத் தூவிட்டு லவ் பண்றீங்க….. எனக்கென்னமோ உங்க அண்ணாக்கு தெரியும்னுதான் நினைக்கிறேன்” என்று சொல்லி அவனுக்கு பீதியைக் கூட்ட

அவனின் முகத்தைப் பார்த்தவள்

“எதுக்கு இந்த லுக்…………… கூல் மேன்…. உனக்கு இந்த தீக்‌ஷா சப்போர்ட் இருக்கு…………….. அவர் எதிர்த்தா நான் உனக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறேன்………..” என்று சொல்ல

“அண்ணனை எதிர்த்தா……………” என்று ஒருமாதிரிக் குரலில் சொன்னவன்….

“நானும் ஆர்த்தியும்….. பார்க்கவே மாட்டோம்………… போன்ல மட்டும் தான்………. … ரொம்ப நல்ல பொண்ணு…. 6 மாதம் பின்னால் சுத்தி….. அதன் பிறகு தான் ஓகே சொன்னாள்…. ராதாவும் அவளும் ஒரே ஸ்கூல் என்பதால்…… நான் ஸ்கூல்ல போய் நிற்கிறதை அண்ணா தப்பா எடுத்துக்கலை” என்று தன் காதல் நினைவுகளில் பின்னோக்கிச் சென்றவனின் முகமே பிரகாசமாக

“உனக்குள்ள இப்டி ஒரு காதல் மன்னனா……….. யுகி” என்று தீக்‌ஷா கிண்டல் பண்ணிச் சிரிக்க

“நீ சிரிக்கிற……. ஆனா………. என் நிலைமைய நினைத்தாலே பயமா இருக்கு……….. காதல்னு ஒண்ணு வந்துச்சுனா உனக்கும் தெரியும்” என்ற போதே

“அதுதான் வர மாட்டேங்குதே………” என்று சலித்தவள்

“எப்டி இருக்கும் அந்த ஃபீலிங்……….. கொஞ்சம் சொல்லித் தா” என்று கேட்க

முறைத்தான் யுகி…….

“வரும்போது உனக்கே தெரியும்………………. என்றவனிடம் குறும்பாக….. புருவத்தை உயர்த்தியபடி….

“எந்த சைடுல இருந்து வரும்” என்று கேட்க

சட்டென்று “தீக்‌ஷா உன் ரைட்ல பாரு…………” என்றவனிடம்

“அந்தப் பக்கத்தில இருந்து எனக்கு காதல் வருமாடா” என்று இன்னும் விளையாட்டுத்தனத்தை விடாமல் கேட்டபடி திரும்ப……..

விஜய் அமர்ந்திருந்தான் ஒரு பெண்ணோடு முதுகுப் புறம் காட்டியவனாய்,….. அவனைப் பார்த்தவள்…

“இன்னைக்கு உனக்கு வீட்ல சிவ தாண்டவம் தான்…… “ என்று சிரித்தவள்

“யாரு அந்தப் பொண்ணு………….” என்று கேட்க……..

“அதுதான் இளா சிஸ்டர் இளமதி……….”. என்று சொல்ல……….

“பேரும் சூப்பர்……….. பொண்ணும் சூப்பர்…….. எப்போ மேரேஜ்………. விருமாண்டிக்கு………….” என்றபடி………..

“நான் ராகேஷோட US போறதுக்குள்ள வச்சுருங்கப்பா” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மொபைல் ஒலிக்க…… அதைப் பார்த்த…. தீக்‌ஷா

”ராகேஷ் கால் பண்றாரு யுகி…………” என்று சொன்னவளுக்கு

கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது…………. ஏனென்று தெரியவில்லை….. அவளின் வழக்கமான குறும்பெல்லாம்…… எங்கோ போய் இருந்தது…..

யுகி

”தைரியமாக பேசு” என்று சொல்லி பாவனை செய்ய

தீக்‌ஷா அட்டெண்ட் செய்தாள்….

“தீக்‌ஷா…………… நான் ராகேஷ் பேசுறேன்……. எனக்கு இப்போ டைம் இல்லை……….. கண்டிப்பா……….. இன்னொரு நாள் பேசுகிறேன்…….. என் அம்மா உன்னிடம் கேட்டால்….. நான் பேசினேன் என்று மட்டும் சொல்லு” என்றபடி அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல்………. அவசர அவசரமாகப் பேசி போனை வைக்க

”இவன் நம்மளயே பேச விடலையே….” என்று யோசித்தபடி யுகியைப் பார்க்க

”என்ன…” என்று யுகி கேட்க

“அப்புறம் பேசுறேனு சொன்னாரு” என்றவளிடம்………..

”இதைச் சொல்ல போன் பண்ணினாரா…. சரி வா……….. விஜய் அண்ணாகிட்ட ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வருவோம்…………. கண்டிப்பா பார்த்திருப்பாரு.. அது என்னவோ உன்கூட வரும்போதெல்லாம் மாட்டுகிறேன்……. ஆர்த்தி கூட மாட்டாம இருந்தா சரி” என்று அழைத்துச் செல்ல…

தீக்‌ஷாவோ

”விருமாண்டி ஜாலி மூட்ல இருந்தாலும்……. நான் விட மாட்டேன் போல………….. வா … வா……… வழக்கம் போல என்னால முடிஞ்ச அளவுக்கு டென்சன் ஏத்துவோம்” என்று சொல்லி

“எத்தனை தடவை திட்டு வாங்குனாலும்…………. அதைலாம் தொடச்சு துரப் போட்டுட்டு நானும் பேசிட்டு இருக்கேன்ல……….. இந்த தன்மானம்லாம் எனக்கு மட்டும் வரவே மாட்டேங்குது போ…….. அதெல்லாம் ஒரு வாரத்துக்கு மேல தாங்காது……… ஒரு வேளை எங்க அம்மா திட்டி திட்டி……….. யார் திட்டினாலும்….. மலுங்கிருச்ச்சோ” என்று பேசியபடியே வந்தவளை……

“எப்டி தீக்‌ஷா……….. இப்டி வாயத் திறந்தா மூடவே மாட்டேங்கிற” என்று ஆச்சரியப்பட்டவனிடம்

“இப்ப வாய மூடுனு சொல்ற அப்டிதானே…… அத டேரக்டா சொல்ல வேண்டியதுதானே…… ஆனா நான் மூட மாட்டேன்….. இந்த தீக்‌ஷா மூச்சை நிறுத்தினாலும் பேச்சை நிறுத்த மாட்டா” என்ற படியே……….. விஜயின் அருகில் வந்து அமர்ந்தனர்….

”ஹாய் மதி எப்டி இருக்கீங்க” என்று இளமதியைக் கேட்டபடி யுகேந்தர் விஜய் அருகில் அமர…………. தீக்‌ஷா இளமதியின் அருகில் அமர்ந்தாள்………

மதி என்று அழைக்கப்படும் இளமதி அவள் யாரென்று புரியாமல் விழிக்க

“இது ராதோவோட………. சிஸ்டர்- இன் – லா…….. நெக்ஸ்ட் மன்ந்த் மேரேஜ் ஆகப் போகுது……. பையன் US ல இருக்காரு……..” என்று சிரித்த முகமாய்ச் சொன்னவன் வேற யாருமில்லை விஜயேந்தர்தான்

“தீக்‌ஷா…. இது இளமதி………….” என்று மட்டும் சொன்னான்…………

நால்வரும் பேசிக்கொண்டிருந்த போதே

இளமதிக்கு இடையிலேயே போன் வர…. முக்கிய வேலை என்று கிளம்பினாள்……… அப்போது யுகிக்கும் போன் வர….. அவனும் எழுந்து….. சற்றுத் தள்ளிச் செல்ல….

விஜய் – தீக்‌ஷா இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்…. தீக்‌ஷா எதுவும் பேசாமல் சுற்றி இருப்பவர்களை மும்முறமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்….

விஜய்தான் இருவருக்குமான மௌனத்தை உடைத்து…

”தீக்‌ஷா” என்று அழைக்க

அவன் குரல் வழக்கமான கடுப்பு,அலட்சியம் எல்லாம் இல்லாமல் சாதரணமாக இருக்க

“என்ன” என்று கவனமாய் ’அத்தான்’ என்ற வார்த்தையைத் தவிர்த்து பேசினாள் தீக்‌ஷா…. அன்று அவன் தன்னை அறைய வந்த பின்னால் அவனிடம் அவள் பேசவே இல்லை…. இன்றுதான் பேசுகிறாள்……..

“ராகேஷ் போன்லாம் பண்றாரா…………….” என்று கேட்க

“ஹ்ம்ம்” என்று ஒற்றை வார்த்தையில் அவனிடம் சொல்லியவள்……………. ஆனால் மனதிற்குள் “ஏன் பேசலைனு சொன்னா….. நீ பேச வைக்கப் போறியா… வந்துட்டான் கேள்வி கேட்க” கவுண்டர் விட்டாள்…

“குட்………. இனி யுகியோட சுத்திட்டு இருக்காத…. முதலில் கூட அது தப்பில்லை……. இப்போ இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு……….. பார்த்து நடந்துக்க……… எங்க வீட்டு பொண்ணு நீ……….. யாரும் தப்பா பேசிறக் கூடாது” என்று அவளுக்கு அறிவுரை என்ற பெயரில்…….. இதமாய் பேச………….

”சரி…………………” என்று தலையாட்டியவள்

”உங்க வீட்டுபொண்ணா…. அடப்பாவி….. இன்னொரு வீட்டுக்கு போறேனு சொன்ன உடனே….. உனக்கு சந்தோசம் போல…………..” என்றாள் மனதிற்குள்

விஜய் இப்போது

“US போற பிளான்லாம் எப்போ………..

”தெரியல…………. ”

“அதெல்லாம் பேசுறது இல்லையா………… ராகேஷ் கிட்டயும் வெட்டியா பேச்சுதானா” என்ற விஜய் சிரித்தபடி சொன்ன போதே யுகி வர

ஆனால் தீக்‌ஷாவோ மனதிற்குள்

“அவன் பேசவே மாட்டேங்கிறான்னு நான் இருக்கேன் ….. இதில் வெட்டியா பேசிட்டாலும்…. இது உன் டைம்டா ஆடு ஆடு” என்று மனதிற்குள் பதில் சொல்லிக் கொண்டாள்…..

தன் அருகே அமர்ந்த யுகேந்தரிடம்…

“என்னடா………… பதில் எல்லாம் ஒரெழுத்து ஒரு வார்த்தை ல வருது….. நம்ம வீட்டு பேச்சரசிக்கு” என்று விஜய் சிரிக்க

“டேய் லூசு….. உனக்கு கவுண்டர்லாம் மனசுக்குள்ள சொல்லிட்டு இருக்கேண்டா…… என் நேரம்… உன்கிட்ட ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய நிலைமை…. அந்த ராகேஷ் மட்டும் என்கிட்ட மாட்டட்டும்…. இருக்கு அவனுக்கு” என்று அர்சித்தவளாய்

“யுகி நான் வருகிறேன்………….” என்று எழப் போனவளை

“இரு தீக்‌ஷா“ என்று விஜய் அமரச் சொல்ல….

“நான் இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு…… இப்டி ரெண்டு பசங்களோட பேசிட்டு இருந்தா என்ன ஆகும்…. நான் வருகிறேன்” என்று வெடுக்கென்று சொல்ல

அதுவரை சிரித்துக் கொண்டிருந்த விஜய்யின் முகம் சின்னதாகியது…….

”சரி போ………..“ என்று விஜய் சொல்ல…. தீக்‌ஷாவும் கிளம்பினாள்….

சற்று தூரம் சென்றவள் மீண்டும் விஜய்யைத் திரும்பிப் பார்க்க

அவனும் அவள் சென்ற திசையையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் போல்……….

இவள் திரும்பியவுடன் உடனே பார்வையை அவன் விலக்கவும் இல்லை……..

”என்ன” என்று அவன் இருந்த இடத்தில் இருந்தே அவளை நோக்கி தலையை ஆட்டிக் கேட்க……………………

மீண்டும் அருகில் வந்தவள்………….

”பை விஜய் அத்தான்………..” என்று குறும்பாகச் சொல்ல

”யுகி அடங்க மாட்டாளாடா இவ………………” என்று விஜய் சிரிக்க

“இதுங்க ரெண்டு பேரும் தான் டாம் அண்ட் ஜெரியா ………… டேய் யுகி………….. நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலயே” என்று புரியாமல் யுகேந்தர் விழித்தான்

-------------

தீக்‌ஷாவிற்கு நிச்சயம் இரண்டு வாரங்கள் இருக்க…………. அதற்கடுத்த இரண்டாவது வாரத்தில்……….. திருமணம் என்பதால் பத்திரிக்கை அடிக்கும் பணி ஆரம்பம் ஆகி இருக்க………….. இடையில் சுனந்தா பிறந்த நாள் வந்தது………. அந்த வாரத்தில்……………

விஜய் தங்கள் வீட்டில் பிறந்த நாள் விழா கொண்டாட வேண்டும் என்று சொல்ல………..

“ஆரம்பிச்சுட்டாங்கடா…..” என்று அனைவரும் விழித்து தீக்‌ஷாவைப் பார்க்க அவள் ஒன்றும் சொல்ல வில்லை………….

அவளுக்கு ராகேஷ் அன்று போன் செய்ததுதான்……….. ராகேஷ் ஏன் போன் செய்யாமல் இருக்கிறான் என்றே புரியவில்லை…………. வீட்டில் இருப்பவர்களிடம் அவன் பேசுவதாக வேறு சொல்லி விட்டிருந்தாள்………….. இவளாக போன் செய்யவும் விருப்பம் இல்லை………….. எதுவும் தப்பாக நடக்கப் போகிறதோ….. என்ற யோசனையில் இருந்ததால்…………. வேறு எதிலும் கவனம் போக வில்லை….. இதில் சுனந்தா பிறந்த நாள் எங்கு நடந்தால் என்ன….. என்று பெரிதாய் எடுத்துக் கொள்ள வில்லை….

சுனந்தாவின் முதல் பிறந்த நாளும் வந்தது……………….

ராதாவும்…….. பிரதீபனும் அன்று மதியமே கிளம்பிச் சென்று விட……… தீக்‌ஷாவின் பெற்றோர் , அவளின் தாத்தா பாட்டி…..மற்றும் ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்………… எல்லாம் மாலை கிளம்ப முடிவெடுத்திருந்தனர்………

சுனந்தா பிறந்த நாள் என்பதால் உற்சாகமாகவே இருந்தாள் தீக்‌ஷா…………… புடவை என்ன அணியலாம் என்று தேடியவளின் கையில் அவளுக்குப் பிடித்த அடர் பிங் நிற டிசைனர் சாரி கண்ணில் பட………………… மாலைதான் விழா ஆரம்பம் என்பதால்……… அது எடுப்பாக இருக்கும் என்று முடிவெடுத்து கட்ட ஆரம்பித்தாள்………….. அதே சமயம் உள்ளே வந்த ஜெயந்தி………….

”உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது……….. இந்தப் புடவையக் கட்டக் கூடாதுனு …. என்று கறாராகச் சொன்னவள்…….. உடனே முகத்தை மாற்றி

”இன்னும் ஒல்லியா இருக்க இந்தப் புடவையில………. வேண்டாம்டா……….” என்று தாஜா செய்யப் பார்க்க

”பரவாயில்லை……. அம்மா ப்ளீஸ் என்றபடி தன் அலங்காரத்தை ஆரம்பித்தவள்……..எல்லாம் முடித்தபின்………. லிப்ஸ்டிக் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்ற……… என்ன கலர் போடலாம் என்று தேட…….. முதலில் சிவப்பு நிறத்தை எடுத்தவள்……….. சரிவராது என்ற படியே அதை மூடி வைத்தவள்………….. புடவைக்கு ஏற்றவாறு……….. இளம் பிங் வண்ண லிப்ஸ்டிக்கை இதழில் வரைந்தவள்…………. வழக்கம் போல்…….. முகம் பார்க்கும் கண்ணாடியின் பரப்பில் வைத்துவிட்டு மீண்டும் பார்க்க……. சுத்தமாய் இல்லாமல் இருக்க மீண்டும் ஒரு கோட்டிங் வைத்தாள்……

“சுனந்தா குட்டிக்கு என் முத்தத்தை மார்க்கோட வைக்கனும்” என்று கிளம்பினாள்

------

விஜய் வீட்டில் வந்து இறங்கிய தீக்‌ஷாவைப் பார்த்த யுகியும் சுரேந்தரும் சினேகமாய் புன்னகைக்க……… யுகி மட்டும்……… அவள் காதில் என்ன எனிமியும்…….. எனிமியும் ஒரே ஷேட்ல ட்ரெஸ் போட்ருக்கீங்க என்று நக்கலடிக்க…………. தீக்‌ஷா விஜய்யைப் பார்க்க……………

பேபி பிங்க் வண்ண சட்டை அணிந்து யாரோடோ போன் பேசிக் கொண்டிருந்தான்…

விஜய்யும் போன் பேசியபடியே இவளைப் பார்த்து புன்னகைத்தான்

ஆனால் அவன் கொஞ்சம் டென்சன் ஆகவும் இருந்தான் போல் தோன்றியது தீக்‌ஷாவிற்கு….

பின் யுகேந்தரிடம் திரும்பி…

”நீ நினைச்ச மாதிரி விருமாண்டி யோசித்தார்னு வச்சுக்கோ……….. வேற சட்டையோடத்தான் நிற்பாரு………….. என்று சிரிக்க………….

சுரேந்தர் அப்போது அங்கு வந்து………………

”யுகி… விஜய் அண்ணாவால இன்னைக்கு கெஸ்ட் யாரையும் கவனிக்க முடியாது……………. அவர் ஒரு முக்கியமான வேலைல இருக்காரு………….. இங்க நின்னு சிரிக்கிறத விட அங்க போய்……….. வந்தவங்கள கவனி…….. என்று அவனைக் கிளப்ப…….

தீக்‌ஷா சுரேந்தரிடம்

“விஜய் அத்தானுக்கு தம்பினு ………….ப்ரூவ் பண்ணிட்டே இருங்க” என்று முறைக்க……….

அவளுக்கு பதில் சொல்லாமல் நகர்ந்த சுரேந்தரும் டென்சனாக இருந்தது போல் இருந்தது…. சுரேந்தர் அந்தப்பக்கம் நகர்ந்தவுடன்

இப்போது யுகி ஓடி வந்து……….

“தீக்‌ஷா……… ஆர்த்தி……….. காலைல இருந்தே போன எடுக்கலை…………… உன் போன்ல இருந்து இந்த நம்பருக்கு ட்ரை பண்ணிப் பாரு………. என்று நம்பரைக் கொடுத்தவன்…. போனை எடுத்தா வந்து சொல்லு………” என்றவனின் முகத்தில் வெளியில் தெரிந்த கலகலப்பைத் தாண்டி…………. கலக்கம் தெரிந்தது காதலனாய்……………..

சட்டென்று அவனைப் பிடித்து நிறுத்திய தீக்‌ஷா

“யுகி…. என்ன யுகி… எதுவும் பிராப்ளமா” என்று ஆறுதலாய் கேட்க

அவளின் ஆறுதல் வார்த்தையில் யுகியின் கண்கள் சிவந்து விட்டன……

“ஒருநாள் கூட பேசாம இருக்கா மாட்டா தீக்‌ஷா….. என்ன பிரச்சனையோ…. அண்ணா ரெண்டு பேரும் என்னை தனியாவே விட மாட்டேன்கிறாங்க….. காலையில் இருந்து என்னை அவங்க பக்கத்திலேயே வச்சுக்கிட்டாங்க……. வெளியிலும் போக முடியவில்லை…..” என்றபோது அவன் வேதனை கண்ணில் தெரிய

“ஒண்ணும் இருக்காது…………. யுகி…. ஏன் உன்னையே கன்ஃப்யூஸ் பண்ணிக்கிற……. நான் போன் பண்ணிப் பார்க்கிறேன்… இல்ல ஆர்த்தி ஃப்ரெண்டுனு சொல்லி…. நான் அவங்க வீட்டுக்கு போய் பார்த்துட்டு வருகிறேன்…….” என்று சொல்ல

“ம்ம்ம்ம்ம்ம்…..” என்று தலையாட்டியவனாய் அவன் நகர்ந்து போக………

தோட்டத்தில் விழா ஆரம்பம் ஆனது…………….

அப்போது தீக்‌ஷா எதார்த்தமாய் விஜய்யைப் பார்க்க…….. அவனோ போன் பேசியபடி வீட்டின் உள்ளே சென்று கொண்டிருந்தான்……..

1,533 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

1 Comment


ஏன் ன்னே தெரியலை... எனக்கு விஜய் யை சுத்தமாகப் பிடிக்கவில்லை

Like
© 2020 by PraveenaNovels
bottom of page