top of page

அன்பே… நீ இன்றி??? 8

அத்தியாயம்:8

தீக்‌ஷா குடும்பம்………….. புது வீட்டிற்கு வந்து மாதம் 2 ஆகி இருக்க……………. ஓரளவு அந்த வாழ்க்கைக்கு தீக்‌ஷாவும் பழக்கிக் கொள்ள…………. ப்ரதீபன் வெளிநாடு சென்று விட்டான் பணி நிமித்தமாக……….. அதுமட்டும் இல்லாமல்…….. ராதாவும் கருவுற்றிருந்தாள்………. விஜய்………… அடிக்கடி எல்லாம் இங்கு வரவில்லை….. இரண்டு மாதங்களில் இரண்டு முறை வந்திருந்தான்…... இவளுக்கும் பெரியதாக அவனோடு வாக்குவாதம் எல்லாம் இல்லை……… அதேபோல் தீக்‌ஷாவும்………. அவன் வீட்டிற்கு போனால் கூட சந்திக்கும் சூழ்னிலைகள் ஏற்பட வில்லை………. ஓரள சுமுகமாய் போய்க் கொண்டிருக்க

அன்றைய தினம் தீக்‌ஷா வேலைக்குப் போகாத காரணத்தால்…….. வீட்டில் இருக்க……. அன்று மாலை 4 மணிக்கு டிவியில் அலைபாயுதே படம் என்பதால் தன் அண்ணியின் அறையில் அமர்ந்து………… டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்………….. கிட்ட்த்த ட்ட படம் முடியும் தருவாயில் இருக்க

கீழே ஜெய்ந்தியின் குரல் கேட்க……. எரிச்சலுடன் இறங்கிப் போனாள்…………

‘என்னம்மா……. சீக்கிரம் சொல்லுங்கம்மா…… ஃபனல் சீன் வரப் போகுது என்றவளிடம்

“அண்ணிக்கு பழம் லாம் நறுக்கி வச்சுருக்கேன் எடுத்துட்டு போ என்றவுடன்

‘சரி வருகிறேன் என்றபடி………… விளம்பரம் போய்க்கொண்டிருந்த்தால்……. ஜூஸ் இல்லையாமா…………. என்று அதையும் போட்டு எடுத்துக் கொண்டு போனாள்…………

உள்ளே போக…..ராதா வாமிட் எடுத்துக் கொண்டிருக்க

“ஓடிச் சென்று தலையைப் பிடித்தவள்……… அவளுக்கு உதவி செய்து விட்டு………. அவளை ஜூஸ் குடிக்கச் செய்ய……… அவளுக்கு ஓரளவுக்கு மேல் குடிக்க முடியாமல் வைத்து விட…………

சரி நான் குடிச்சுக்கிறேன்…. ப்ரூட்ஸாவது சாப்பிடுங்க…. என்றபடி

வற்புறுத்தி உண்ண வைத்தவள்..

அங்கிருந்த கருப்புத் திராட்சைப் பார்த்து…. “ஐயோ அண்ணி இந்த க்ரேப்ஸ் வேண்டாம்…. குழந்தை கருப்பா பிறக்கும்…. என்று தன் அருகே வைத்துக் கொண்டாள்..

சிரித்த ராதா

“உங்க அண்ணாவும் கலர்….. நானும் கலர் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” என்றவளிடம்

“உங்க விஜய் அண்ணா கொஞ்சம் பிளாக் தானே……….. அதுனாலதான்…. ஜீன் தானே காரணம்………. என்றவள்……. என் ஃப்ரெண்டும் அவ ஹஸ்பெண்டும் நல்ல கலர்தான் அண்ணி ஆனா……அவளுக்கு பையன் மட்டும் கருப்பு…… கேட்டா பாட்டி மாதிரினு சொல்றா….. அதுதான் என்றபடி விழி விரித்து அப்பாவியாய் சொல்ல…….

“சரி விடு சாப்பிடலை என்று சொல்லியவளுக்கு மீண்டும் வாமிட் வருவது போல இருக்க… மீண்டும் வாஷ் பேசின் அருகே செல்ல… வரவா என்ற படி எழுந்தவளை…..

“வேண்டாம்…. வர்ற மாதிர் இருக்கு அவ்ளோதான்” என்று போக

தீக்‌ஷா படத்தில் ஆழ்ந்து விட்டாள்………..

“அண்ணி சீக்கிரம் வாங்க செம்ம சீன்” என்று கத்த….. இதோ வருகிறேன் என்றபடி முகத்தை துடைத்தபடி ஆயாசமாக நட்ந்து வர……… தீக்‌ஷா அவள் வைத்திருந்த திராட்சையை சாப்பிட்டபடியே டிவியில் கவனம் வைத்தபடி………. அந்த ஜூசையும் எடுத்துட்டு வாங்க என்று அதையும் கையில் வைத்துக் கொண்டு …..

“அண்ணி சான்ஸே இல்லைல……….. என்ன ஒரு லவ்……….. சக்தி சக்தி சக்தினு எப்டி உருகுறான்” என்று இவளும் உருக

“அண்ணி………. இப்டி ஒருத்தன் உருகுகிறான்னா…… எத்தனை ஆக்ஸ்டெண்ட்யும் சந்தோசமா அனுபவிக்கலாம்” என்று சொல்ல

“எனக்கு வேண்டாம்பா….. என் தீபன் இப்டிலாம் கஷ்டப்படக்கூடாது…….. என்று சொன்னவளிடம்

“அடப் போங்க அண்ணி………….. நீங்க வேற………. விளையாட்டுக்குதானே….. சும்மா கூட சொல்ல மாட்டீங்களே” என்றபடி

“அண்ணி உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா……… சக்தின்ற பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும்……எதுனால சொல்லுங்க “என்று சொல்ல

“தெரியலயே…ஏன்”

“கண்டுபிடிங்க பார்ப்போம் என்று சொல்ல

தெரியலயே…. உன் ஃப்ரெண்ட் யாரோட பேராவது……… இல்ல பாய் ஃப்ரெண்ட் பேரு என்று கண்சிமிட்ட

“இல்லை…….. தீக்‌ஷா வை திரும்ப திரும்ப சொல்லுங்க…………. என்று சொல்ல……. அவளும் சொல்லிப் பார்க்க…….. அது சக்தி என்று முடிய

ராதா திகைத்தாள்….

“இப்போ சக்தி சக்தி னு சொல்லிப் பாருங்க” என்று சொல்ல…… அவளும் சொல்லிப் பார்க்க…. அது தீக்‌ஷா என்று முடிய…. ஆச்சரியமாகப் பார்த்தாள்

“எப்புடி…………..இந்த தீக்‌ஷாவோட பேர் ரகசியம் என்று சிரிக்க” அடிப்பாவி…… எனும்போதே

செருமல் சத்தம் கேட்க

இருவரும் திரும்ப இறுகிய முகத்துடன் அவர்கள் பின்னால் விஜய் நின்றிருக்க………

“வாங்கண்ணா…… என்று ராதா எழ

“நீ உக்காருமா” என்று தீக்‌ஷாவை ஒரு முறைத்தபடி அமர்ந்தான்……….

“சாரி இன்னைக்குதான் டெல்லிலருந்து வந்தேன்…. வந்தவுடனே அம்மா சொன்னாங்க….. என்றபடி…….. அவன் பேச ஆரம்பிக்க……….. கீழே இறங்கி அவனுக்கு ஜூசைக் கலந்தபடி மேலே கொண்டு சென்றவள்….. ஒரு ஹால்ஸ் மிட்டாயையும் எடுத்துகொண்டாள்……

“இந்தாங்க விஜய் அத்தான்…….. என்று ஜூஸை நீட்ட…… எனக்கு வேண்டாம் என்று விறைப்புடன் சொல்ல

“சரி இது வேண்டுமா…..என்று ஹால்சை நீட்ட

கடுப்பான விஜய்,…..

‘இது எதுக்கு……. நான் கேட்டேனா…………. என்று சொல்ல

“வரும்போது செருமிகிட்டே வந்தீங்களே அதுதான்…….. தொண்டல ஏதாவாது கிச் கிச் ப்ராப்ளமோனு நினைத்தேன்………. என்றவளிடம்

”என்ன நான் இருக்கட்டுமா இல்லை போகட்டுமா……… அறுக்காத…… எதுனாலும் யூஸ்ஃபுல்லா பேசுறியா……. பேசுரது எல்லாம் வேஸ்ட்………….என் தங்கச்சி கிட்ட பேசனும்….கொஞ்சம் வெளில போறியா “ எரிச்சலாய்ச் சொன்னவன் அதன் பின் அவன்புறம் திரும்ப வில்லை………

“இவன்கிட்ட யூஸ்ஃபுல்லா என்ன பேசுறது……… “ என்று அவன் திட்டுவதை எல்லாம் வழக்கம் போல் இந்தக் காதில் வாங்கி விட….. அடுத்த அரை மணி நேரத்தில் அவனும் கிளம்பினான்………. அனால் அவன் வந்து போன அடையாளம் அடுத்த நாள் எதிரொலித்த்து….

அது என்னவென்றால்…………..

கலைச் செல்வியும் ராகவேந்தரும் வந்திருந்தனர்……. விசயம் என்னவென்றால் ராதாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல………………

எதனால் என்று தெரிய வில்லை….. மறுத்துப் பார்த்தும் விடவில்லை………….. தீக்‌ஷாவுக்கு கோபம் கோபமாக வர……… பொங்கி விட்டாள் அவர்களிடமே

“ஏன் பிரச்சனை பண்றீங்க…… எங்களுக்கும் ஓரளவு வசதி இருக்கு……… இது எங்க வீட்டு வாரிசு…….. அதைப் பார்த்துக்க எங்களுக்கும் தெரியும்………… 7 மாசத்தில வளைகாப்பு போட்டு கூட்டிட்டு போறதுனால் கூட பரவாயில்லை…………. இப்போவேனா அதிகம் தான்……. நாங்க உங்களை விட வசதி குறைந்தவங்கதான்……. அதுக்காக எல்லா விசயத்திலயும் தலையிடாதீங்க என்று பத்ரகாளியாய் மாறி ஆட……..

“இல்லம்மா” என்று தயங்க………

‘”இது அந்த விருமாண்டி வேலைதான் என்று தீர்மானித்த தீக்‌ஷா……..முதன் முதலாக அவனை உணமையாகவே எதிர்க்க ஆரம்பித்தாள்………

ஏனோ தாங்கள் அடிமையாக இருப்பது போல் பட……… வெடித்து விட்டாள்

“ஜெயந்தி கூட அதிர்ந்து விட்டாள்……குறும்பு மட்டுமே உள்ள தன் பெண் வளர்ந்து விட்டாளோ என்று முதன் முறை நம்ப ஆரம்பித்தாள்……

அதன் பிறகு ராதாவும் வர மறுத்து விட………… கொஞ்சம் சாதாரணமாக இருந்த விஜய் தீக்‌ஷாவிடம் முகம் கொடுத்து கூட பேச வில்லை……… தீக்‌ஷாவும் அதன் பிறகு முதலில் போல் வம்பு வளர்ப்பதில்லை………. அவனை விட்டு தள்ளியே நின்றாள்……… அன்று வந்து விட்டு போய்………. தன்னைப் பற்றி அவன் தவறாக நினைத்து விட்டான் என்பது அவளுக்கு தெளிவாகப் புரிந்த்து……… அதாவது ராதா தனக்கு வேலை பார்ப்பதை பார்த்து விட்டுதான் அவன் டென்சன் ஆகி அவன் பெற்றொரை அனுப்பியிருப்பதை புரிந்து கொண்டாள்…….. எத்தனையோ முறை அவனிடம் அவமானம் அடைந்திருக்கிறாள் தான்……… அப்போதெல்லாம விழிக்காத அவள் தன்மானம் விழித்துக் கொள்ள…….. அவனிடம் முன்பு போல பேச விரும்ப வில்லை…… அவனும் அதற்காக வருத்தப்படவில்லை என்பது அவளுக்கும் புரியாமல் இல்லை………..

7 மாதங்கள் கடக்க….. ஒரு நல்ல நாளில் வளைகாப்பு நடக்க…….. ராதா……….தன் பிறந்தகத்திர்கு சென்றாள்………..தீக்‌ஷாவும் அவளை அடிக்கடி போய் பார்த்துதான் வந்தாள்……….

இதற்கிடையே தீக்‌ஷாவிற்கு……. ஒருபுறம் வரன் பார்க்க ஆரம்பிக்க ஏற்பாடாக…. அதே நேரத்தில் அவள் அலுவலகத்திலிருந்து அவளை வெளிநாடு அனுப்பவும் முடிவு செய்யப் பட்டிருக்க…….. தற்காலிகமாக வரன் பார்ப்பது நிறுத்தப்பட்டது……………

ஜெயந்திக்குதான் அதில் இஷ்டம் இல்லை……….வைத்திஸ்வரனிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை…….. சுரேந்தர் இருக்கும் போது மகளை வெளியில் கொடுக்க மனதில்லை……..

ராதா வீட்டு நிலவரமும் அவளுக்கு தெரியவில்லை…………….. இப்படி வரன் வருவதைச் சொன்னாலாவது………. ராதாவின் அம்மா கலைச்செல்வி ஏதாவது சொல்வார்கள் என்று நினைத்து கலைச்செல்வியிடமும் சொல்ல

“அப்படியா……என்று சொல்லி விட்டு….. நல்லா விசாரிச்சு பண்ணுங்க “ என்று அக்கறைப்பட்ட்தோடு சரி…….. இடையில் அவர்கள் வீட்டில் என்ன ஆனது என்று தெரியவில்லை………..

ஜெயந்தி அன்று புலம்பிக் கொண்டே இருந்தாள்….

எதற்கெடுத்தாலும் தீக்‌ஷாவைத் திட்டிக் கொண்டே இருக்க

“என்னம்மா உங்க பிரச்சனை……….. நொய் நொய்னு……….” என்று கேட்க

“ஏன் சொன்னா…… அப்டியே நட்த்திக் காட்டிருவியா” என்றபோதே…………

”அட போங்கம்மா……அவ அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கு………. சும்மா சும்மா… ஏதாவது பேசிட்டு என்றபடி…..

“சுரேந்தர் அத்தான் கூட வெளில போறேன்……… பாஸ்போர்ட் எடுக்கிற விசயமா…… அவரும் ரென்யூவல் பண்ணனுமாம்……… ரெண்டு பேரும் ஒண்ணா போறோம் என்று சாவதனமாகச் சொல்ல

விழி விரிய நின்ற தன் தாயிடம்…… ரொம்ப கற்பனை பண்ணிக்காத………….. கண்ணைக் கொஞ்சம் சுருக்குங்க………… என்றபடி……….. சுரேந்தர்க்கு கால் செய்தபடி வெளியேறினாள் தீக்‌ஷா

“அத்தான்…என் ஸ்கூட்டில வரவா என்றவாறே தன் ஸ்கூட்டியின் அருகே போக………….. சுரேந்தரே காரில் வந்து நிற்க

“அய்யோ அத்தான்…சூப்பர் போங்க” என்றபடி…………அவனிடம் பேசியபடியே அமர்ந்தாள் தீக்‌ஷா

“எல்லா ரிப்போர்ட்ஸும்….செர்ட்டிஃபிகேட்ஸும் இருக்கா தீக்‌ஷா” என்றவளிடம் தலை ஆட்டியபடி வெளியே பார்க்க….. மழை வரும் போல இருக்க………

மழை வரும் போல இருக்கு அத்தான் என்றபடி……. பேசிக் கொண்டே வர…….. ஒரு வளைவில் அவர்களைத் தொடர்ந்தபடி……….. ஒரு லாரியும் வந்து கொண்டிருந்தது…………..

தீக்‌ஷாவோடு பேசிக் கொண்டே சென்ற சுரேந்தர்………. முதலில் கவனிக்க வில்லை……….. சாதரணமாக வருகிறது என்று விட்டு விட்டான்……… அதன் பிறகுதான் கொஞ்சம் கவனிக்க தங்களை நோக்கி வருகிறது என்ற உண்மை புரிய……. தீக்‌ஷாவிடம் சொல்லாமல் காரை வேகமாக ஓட்ட….. அவனின் வேகமும்…. விலை உயர்ந்த அந்தக் காரின் ஏசியைத் தாண்டி வியர்வை முத்துகள் அரும்புவதையும் பார்த்த தீக்‌ஷா

“அத்தான்” என்று அச்சம் காட்ட

அவளைப் பயப்படாமல் இருக்கச் சொன்னவன்…………. சற்று அந்த லாரியை உற்று நோக்க……….. இவங்கதானா…… என்று நிம்மதி அடைய

”நம்ம பயமுறுத்துற்துதான் அவங்க நோக்கம்…… இடிக்க மாட்டாங்க என்ற போதே அவன் சொல்லியது போலவே அந்த லாரி கடைசி வரை இடிக்காமல் பயம் மட்டும் காட்டிவிட்டுச் சென்றது அந்த லாரி…………….

“நிறுத்தி…………….. இறங்கி………அவர்களை தமிழிலும்….. ஆங்கிலத்திலும் நல்ல வார்த்தைகளை சொல்லித் திட்டியவன்………….

“தன் அண்ன்னுக்கு போன் செய்தான்…………..”

”அண்ணா………. அந்த பொறுக்கி தீனா நாய் பார்க்கிற வேலைதான்……….. என்னையவே பயமுறுத்திட்டான்…..” என்று சொல்ல…………

அவன் அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர………….

தீக்‌ஷாவைப் பார்த்து இவளும் உன்கூட வந்தாளா என்று கேட்க

“உன்னை………… யுகேந்திரன் தான் புரியாம பண்றானா… நீயுமா…………. இவள பார்த்து வச்சு……… இவளையும் நம்ம குடும்ப லிஸ்ட்ல சேர்த்து வைக்கப் போறாங்க………..ஏற்கனவே ராதாவை அந்த வீட்ல கொடுத்திட்டு அவளுக்கு என்னா ஆகுமோனு பய்ந்துட்டு இருக்கோம்……….. “ என்றவன்

“நீ என்ன விசயமா இவன் கூட வந்த……….. “ என்று மிரட்ட……….. அவளுக்கு அழுகையே வரும் போல் இருக்க

“பாஸ்போர்ட் எடுக்கிற விசயமா” என்று கூற……….

“ஏன் உனக்கு தனியா போகத் தெரியாதா………… வாய் நல்லாத்தானே பேசுற………. பாஸ்போர்ட் எடுக்கவே இவன் துணை வேணும்ணா………. வெளிநாட்டில எப்டி சமாளிப்ப……”. என்றபடி

“சுரெந்தர் நீ போ…….” என்றபடி அவனை கிளம்பச் சொல்ல

“சாரிணா………இனி இது போல் நடக்காம பார்த்துக்கிறேன்………” என்று சொல்லியவன்….

“தீக்‌ஷா வா” என்று அழைக்க

“நீ போ” என்று அவன் குரல் தொணித்த கடுமையில்………….. சுரேந்தர் அவளிடம் மன்னிப்புக் கேட்டபடி……… காரை எடுத்து கிளம்ப

”விஜய் அத்தான்” என்று அவள் கூறும் போதே மழையும் பெய்ய ஆரம்பிக்க………..

“இன்னொரு தடவை என்ன விஜய் அத்தான்… நொத்தானு சொன்னேனு வச்சுக்க……….. பிச்சுருவேன்………. எத்தனை தடவை சொன்னாலும் அடங்க மாட்டியா…………. சுரேந்தருக்கு உன்னை மாதிரி பொண்ணலாம் நினைச்சுக்கூட பார்க்க முடியவில்லை…………. என் அம்மா வரை மயக்கி வச்சுருக்க……… அவங்க என்கிட்டயே உன்னை அவனுக்கு எடுக்கவானு கேட்கிறாங்க………. அந்த அளவு மயக்கி வச்சுருக்க……… எங்க அம்மாவை திட்டி மாற்றி வச்சுருக்கேன்………. .” என்றவனை திகைத்து நிமிர்ந்து பார்க்க

“இதுதான் உனக்கு கடைசி வார்னிங்…………. என்றவனிடம்

“அத்தான்………… திஸ் இஸ் டூ மச்” என்றபடி மழையில் உதடுகள் வெட வெடக்க பேசிய தீக்‌ஷாவிடம்

“என்ன…….. அப்டில்லாம் ஒரு எண்ணம் இல்லை………அப்டினு சொல்லப் போறியா……….” என்று கேட்டபடியே

“அப்டி இருந்தால் கூட மறந்துரு……….. புரிஞ்சதா……… “ இப்போ காரில் ஏறி உட்காரு……. உங்க வீட்ல கொண்டு போய் விடுகிறேன்…….. என்று சொல்ல

அவளோ அவனைத் தாண்டி மழையில் நடந்து சென்றாள்……… அவன் கூப்பிட கூப்பிட…………. கண்ணில் நீர் வழிய……….. நடந்து போனவள்………… அருகில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறியபடி அவனைக் கடந்து சென்றாள்……………….

----------------

அதன் பிறகு தானாகவே விஜய் போலவே சுரேந்தரையும் , யுகேந்திரனையும் விட்டு விலக ஆரம்பித்தாள்………….

பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு செல்லும் தினமும் அருகே வர………… அதே நேரத்தில் ராதாவிற்கு 8 வது மாதமே வலி எடுக்க……அவள் நிலை கொஞ்சம் சரி இல்லாமல் போக…….. தீக்‌ஷாவின் வெளிநாட்டுப் பயணம் ரத்தானது……………

சுனந்தா 8 வது மாதமே அவள் அத்தையைப் போல் குறை மாதக் குழந்தையாகப் பிறந்து வைத்து தீக்‌ஷா படுத்தி வைத்த்தைப் போல் வைக்க……….குடும்பமே தவித்து போய்…. ஒருவழியாய் தாயும் சேயும் நல்லபடியாக வீடு திரும்பினர்…………..

சுனந்தா பிறந்த சந்தோசத்தில் நம் தன்மானச் சிங்கம் தீக்‌ஷா………… தன் தன்மானத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டவளாய்…… யுகேந்திரனிடமும்…….. சுரேந்தரிடமும் தன்னையும் அறியாமல் மீண்டும் பேச ஆரம்பிக்க……… வழக்கம் போல விஜய் முறைக்க………

அவனிடம் நேரடியாகச் சென்றவள்

“என்ன பார்க்கிறீங்க…. எத்தனை தடவ சொன்னாலும் இவ அடங்க மாட்டேங்குறேனா……. நான் இப்டித்தான் இருப்பேன்….முடிஞ்சத பார்த்துக்கங்க” என்று அலட்சியமாகச் சொல்லி………

“தென்…. எனக்கு அப்டி ஒரு எண்ணமே இல்லை………… யுகி எனக்கு ஒரு ஃப்ரெண்ட்………. சுரேந்தர் அத்தான் எனக்கு ப்ரதீபன் மாதிரிதான்………… உங்க வீட்ல வந்து கேட்ருந்தால் கூட நான் வேண்டாம்னுதான் சொல்லி இருப்பேன்………. என்றவள்

அவனை நிறுத்தி

“தடுமாறனும்னு நினைத்திருந்தால்…… 12 த் படிக்கிறப்ப எனக்கு சாரகேஷுனு ஒருத்தர் லவ் லெட்டர் கொடுத்தார்……… அவர்கிட்ட்தான் தடுமாறி இருப்பேன்………….. அவர விடலாம்…………. இவங்க யாரும் எனக்காக உருகல” என்றபடி போனவள்

“இதெல்லாம் எதுக்கு சொல்றேனா………… உங்க ஹார்ட் அப்ப்ப்ப என்னை உங்க தம்பிங்க கூட பார்த்த்தும் நின்றுதாமே………… என் ஹார்ட்டுக்கு அது டெலிபதி அனுப்புச்சு…… அத நினைத்துதான் ……….. போனா போகுது விடுறேன்…… ஸ்டேட்டஸ்…. ஸ்டேட்டஸ்னு அதக் கட்டிட்டு நீங்க அழுங்க…… உங்க தம்பி ரெண்டு பேரோட வாழ்க்கைய பாழாக்கிடாதீங்க’

என்றபோதே ஒரு விரல் காட்டி அவளை எச்சரிக்க ஆரம்பித்தவனை

“இருங்க நான் பேசிக்கிறேன்…… சும்மா சும்மா மிரட்டுனீங்க…… அதுக்கப்புறம் அதுக்கு மரியாதையே இருக்காது………….. உங்களுக்கும் மரியாதை இருக்காது…. எங்க வீட்டு பக்கம் உங்க அம்மா வந்து…. இதுக்க்ப்புறம் என்னை பொண்ணு கேட்கிற மாதிரி எதுவும் நடந்துச்சு……. அசிங்கப்படுத்திருவேன்…. அதுனால……உங்க அம்மாவையும்………. உங்க 2 இல்லையில்லை.. யுகி லிஸ்ட்ல வர மாட்டார்…. சுரேந்தர தம்பிய…….. பத்திரமா பாத்துக்கோங்க…உங்க கைக்குள்ள வச்சு…….. இனி என்கிட்ட ஏதாவது வச்சுகிட்டீங்க அண்ணியோட அண்ணன் லாம் பார்க்க மாட்டேன்” என்று முடித்து அவனின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவனை விட்டு விலகி வெளியே வந்தவளுக்கு….. அன்று அந்த மழைநாளில் பேசிய அவனின் பேச்ச்சுக்கு பதிலடி கொடுத்த திருப்தியில் சுனந்தாவை கொஞ்ச ஆரம்பித்தாள்……..

----------------

சுனந்தாவுக்கு அப்போது பேர் வைக்க வில்லை………. ப்ரதீபன் வீட்டில் சுனந்தா என்று வைக்க……. ராதா வீட்டில்……….. சுலேகா என்று வைக்க மீண்டும் அங்கு ஒரு யுத்தம் வர ஆரம்பிக்க ……. ராதாவும் பிரதீபனும்……… அரண்டு விட்டனர்..

“அண்ணா…….. நம்ம வீட்டு வாரிசுக்கு நாமதான் பேர் வைக்கனும்……. என்று சொல்ல

விஜயோ அந்த பேரை விட…….. சுலேகான்ற பேருக்கு நியுமராலஜி நல்ல இருக்கு தீக்‌ஷா என்று பதமாய்த்தான் சொன்னான்

நீங்க உங்க புள்ளைக்கு அதப் பார்த்து வச்சுக்கோங்க……. இல்லை உங்க வீட்டு வாரிசுக்கு 3 பேர் இருக்கீங்க….எங்க வீட்ல எங்க அண்ணா மட்டும்தான் என்று பிடிவாதமாக இருக்க

வேறு வழியின்றி ஃபைனலாக சீட்டு குலுக்கிப் போட்டதில் தீக்‌ஷாவே வெல்ல…..

சந்தோசமா தீக்‌ஷா என்று அனைவரும் கேட்க………….. விஜயைத் தவிர

“என்னமோ நான் சொன்னதால் வச்ச மாதிரி கேட்கறீங்க……… அதுல மாறி வந்திருந்தா…… அந்தப் பேர்தானே வச்சுருப்பீங்க” என்று விஜயை முறைக்க…………..

அவன் பதிலுக்கு முறைக்க வில்லை……………. அதற்குப் பதில் யாருமில்லாத சமயம் அவளிடம் வந்து நின்றான்

“என்ன ஓவரா………… பண்ணிட்டு இருக்க………….. பொறுத்து போய்ட்டு இருக்கேன்……….. அமைதியா இருக்கேனு பார்க்கிறியா………… வாழ்நாள் பூரா கதற வச்சுருவேன்………. என்னைப் பத்தி தெரியாம விளையாண்டுட்டு இருக்க…………. வீட்டுக்கு வந்தோமா……….. போனோமானு இருக்கணும்…………. என்று அவள் அருகில் நெருங்கிய விஜயிடம் மிரண்டு விலகிய தீக்‌ஷாவிடம்

“ச்சீ.. உன்னலாம் தொட மாட்டேன்….. அந்தப் புத்திலாம் கிடையாது…………. ” என்றவன்…….

“நான் அமைதியா இருக்கேனு நினைத்து ஆடாத,………….. இது ரெண்டாவது தடவை நீ என்னை ஜெயித்த்து………….. 3 மாசத்தில ராதாவை வீட்டுக்கு அனுப்பாம பிரச்சனை பண்ணி ஜெயிச்ச……… இப்போ பேர் வைக்கிறதுல……… இனி என்னோட லைன்ல க்ராஸ் பண்ணின……….. அதுக்கபுறம் வாழ்நாள் முழுசும் என்னைப் உன் வாழ்க்கைல சந்திச்சதுனு தப்புனு கதறுவ……….. புரிஞ்சதா………..” என்று அவளைத் தள்ளி விட்டுப் போக

“என்ன பண்ணுவீஙக” என்று வீராப்பாய்க் கேட்க

“ச்ச்ச்ச்….. எனக்கு முன்னால இப்டி பேசாதடி…………. யாருமே என்கிட்ட இப்டி பேசுனதில்ல…. …… அப்டியே பிபி ஏறுது” என்று முறைக்க

“நான்……. என்ன பண்ணுவீங்கனு கேட்டேன் விஜய்…………….”. என்ற அழுத்திக் கேட்க போது

“ஏய்…….என்னடி விஜய்னு பேர் சொல்ற…… பேச வாய் இருக்காது….”

அவன் கை அவளை நோக்கி உயர அதே நேரத்தில் அங்கு ராதாவும் வர………… இருவரும் விலகினர்………..

அன்று எந்த ரசவாதமும் அவர்களுக்கு இடையில் நடக்காமல் போக………… தீக்‌ஷாவிற்கு அவன் கண்களின் இருந்த வெறி சற்று வயிற்றில் புளியைக் கரைத்தாலும்……. என்ன பண்ணிருவான் என்று அலட்சியமாக விட்டு விட்டாள்……………….. ஆனால் இன்னொரு நாள் அது எந்தவொரு தங்கு தடையுமின்றி நிறைவேறி விஜய்யின் கைகளால் அவமானப் படுத்தப் பட்டாள் தீக்‌ஷா…………

அதுவும் சுனந்தாவின் முதல் பிறந்த நாளில் நடந்தேறியது,……………………..

1,375 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

1 Comment


அவனை ஹீரோ மாதிரி காமிக்கிறீங்க... உண்மையில் அவன் ஒரு வில்லன் தான்... அதுவும் மட்டமான வில்லன்... அவ்வளவும் பணத் திமிர்..

Like
© 2020 by PraveenaNovels
bottom of page