அன்பே… நீ இன்றி??? 7

அத்அத்தியாயம் 7:

அதன் பிறகு விஜய் முறைப்பை எல்லாம் அவள் கண்டு கொள்ளவேயில்லை…………….… யுகேந்தர்……… சுரேந்தர் என்று இருவரிடமும் பேசியபடியே அன்றைய பொழுதை அவள் ஜாலியாகவும்………… விஜய்யை……………..எரிச்சலாகவும் கழிக்க வைத்தாள்

அன்றைய மாலை………….. பெண்ணை அழைத்துக் கொண்டு……….. மணமகன் வீடு செல்ல வேண்டும் என்பதால் தீக்‌ஷா மணப்பெண்ணோடு தங்கி விட………… அவள் பெற்றோர் முன்னரே சென்றிருந்தனர்………… சுரேந்தரும் முன்னே சென்று விட்டிருந்தான்

மணமகனும் மணமகளும் வேறொரு காரில் வர………..

வேறு வழி இல்லாமல் தீக்‌ஷா கலைச்செல்வியோடு வந்தாள்……

ஓட்டுநர் இருக்கையில்………. விஜய் அமர்ந்திருக்க…………..

பின்னால் கலைச்செல்வி, தீக்‌ஷாவோடு அமர………… ப்ச்ச் என்ற ஒலியோடு தன் வண்டியின் ஓட்டுநரை அழைத்து காரை ஓட்டச் சொன்னவன்………….. ட்ரைவர் அருகே அமர்ந்து விட்டான்………..

தீக்‌ஷா…………………… அவன் செயலில் சற்று அவமானம் அடைந்தாலும்…… அது……………… அவள் முகத்தில் இரு புருவங்களின் முடிச்சில் விழுந்து அந்த நொடியே மாற்றினாள்………….. மற்றவர் அறியாமல்………….

ஆனால் அவள் அருகே இருந்த யுகேந்தர் கண்களில் தப்ப வில்லை……….. யுகேந்தர் அவளை மாற்றும் வகையில்

“தீக்‌ஷா…… அண்ணாக்கு ட்ரைவ் பண்ணப் பிடிக்காது” என்று சொல்ல

சொன்ன யுகேந்தரை கேலியாக பார்த்தாள்……..

”நம்பிட்டேன் யுகேந்தர்” என்று அவள் அவனின் முழுப் பேயரோடு சொன்ன விதமே அவள் கோபத்தைக் காட்ட

“அண்ணா மேல ரொம்ப பாசமோ…………. இப்போ நான் இந்தக் காரை விட்டு இறங்குனா என்ன பண்ணுவாரு உங்க அண்ணா…………” என்றவள்

”ஆனா வருத்தப்படமாட்டாருதான்…….. நம்ம மேல அக்கறை உள்ளவங்ககிட்ட கோபம் காட்டினாத்தான் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்……………. இல்ல அதுக்கு வேல்யுவே இருக்காது……….. அதுனால……………. கோபம் உள்ளே இருக்கு………. பட் வேஸ்ட் பண்ணலை” என்று பேசியவள் யுகேந்தர் முகம் மாற………… அவனைப் பார்த்து கண் சிமிட்டி தன் நிலை மீண்டவள்

“ஏன் நான் வந்தா துரை ஓட்ட மாட்டாராமா……… எதுக்கு இந்த வெட்டி பந்தா இந்தக் கருவாயனுக்கு” என்று கிசுகிசுக்க

இப்போது யுகேந்தர் முறைக்க ஆரம்பித்தான்…………… அவள் தன் அண்ணனை கருவாயன் என்று சொல்லியதால்

“சும்மா வா………… எங்க அண்ணா கருவாயனா உனக்கு…………” என்றவனிடம்

“ஆமாம்……… என்னை விட கலர் கம்மினாலே எனக்கு கருப்புதான் போதுமா………….. நீயும் உங்க அண்ணா கலர்தான்…………… அது எப்படி ராதா அண்ணியும்………..சுரேந்தர் அத்தானும் அத்தை மாதிரி கலரா இருக்காங்க……………….” என்றவளிடம்

”நாங்க ரெண்டு பேரும் அப்பா மாதிரி மாநிறம்…….” என்று திருத்தியவன்

“.அவர் ஒரு பார்வை பார்க்க மாட்டாரானு எத்தனை பொண்ணுங்க ஏங்கிருக்காங்க தெரியுமா…………..” என்று சொல்ல

நக்கலாய் தலையாட்டினாள்

“இவர்கிட்ட…………. “ என்று இடைவெளி விட்டவள்

ஒரு பார்வை…………. “ என்று மீண்டும் இடைவெளி விட்டவள்….. அடுத்த நிமிடம்

“யாரு அந்தப் பொண்ணுங்கள்ளாம்…………. ஒருவேளை கண்ணு தெரியாதவங்களோ” என்று நக்கலடித்தபடி…….

“கஷ்டம்டா சாமி……………. என்றவளிடம்

“யாருக்கு…………. ” என்று யுகேந்தர் வினவ

”வேற யாரு…………. உனக்கு அண்ணியா வரப் போறவளுக்குதான்” என்று முடிக்க…………

”அப்டீன்ற…”…………. என்று அவன் எதிர்கேள்வி கேட்க

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…… கண்டிப்பா” என்று அப்பாவியாய்……..

“எந்த மகராசி இந்த சிடுமூஞ்சி மகராசன்ட்ட மாட்டப் போறாளோ………. கடவுளே அவள காப்பாத்து” என்று சொல்லிவிட்டு சிரிக்க அவளுடைய பாவனையில் யுகியும் சத்தமாய் சிரிக்க….

விஜயேந்தர் இருவரின் சிரிப்பின் ஒலியில் பின்னால் திரும்பி

“என்னடா சிரிப்பு………………. காலையில தானே சொன்னேன்……….. காதுல ஏறுச்சா இல்லையா” என்று யுகேந்தரை பார்த்து முறைக்க

“விஜய் அத்தான் கார்ல ஒரு பாட்டப் போட்டா நாங்க பேசுற வெட்டிப் பேச்செல்லாம் கேக்காதுல்ல…………… உங்க பிபியும் எகிராதுல” என்று தோரணையாச் சொல்லி இன்னும் அவனின் பிபியை உண்மையிலே ஏற்றினாள்…….

“அம்மா………….” என்று கத்தியவன்……. ”நான் இறங்கிறவா…………….” என்று கலைச்செல்வியிடம் முறுக்க………

“தீக்‌ஷா அவனுக்கு பாட்டெல்லாம் பிடிக்காதும்மா……………” என்ற செல்வி சொல்ல

கடவுளே என்று தலையில் கைவைத்தவள்….. அதே வேகத்தில் யுகியிடம் அவன் காதில்….

“கஷ்டம்னு சொன்னேன்ல அது இதுதான்……………….. பாட்டே பிடிக்காதாம்…………….. இதெல்லாம் குடும்பம் நடத்தி………… என்னமோ போ….. சூ ல வைக்கிறதையெல்லாம்………. ஊர்ல சுத்த விட்டா இப்டித்தான் இருக்கும்……………..” என்ற போது யுகேந்தர் உண்மையிலேயே முறைத்தான் தான்………

”சரி சரி உண்மையச் சொன்னா………….. மொறைக்காத………… எனக்கெதுக்கு விருமாண்டி குடும்ப வம்பு………….. ஆனாலும் உங்க அண்ணாவுக்கு நீ கொஞ்சம் டியூசன் எடுக்கலாம் இல்ல…. உனக்கு பயமா இருந்த என்கிட்ட வரச் சொல்லு………… தேத்திரலாம்……………..” என்று யுகேந்தரிடம் சொல்லியவள் அப்போது விஜய்யை விரோதியாகவெல்லாம் நினைக்க வில்லை………

“எப்போ பாரு………….. வள் வள்ளுனு குரைச்சுகிட்டு” என்று மனதில் மட்டும் சொல்லிக் கொண்டாள்……. யுகேந்தரிடம் இதைச் சொல்ல வில்லை………………

தான் மனதில் சொல்லியதை யுகேந்தரிடம் சொல்லி இருந்தால்…… தன் அண்ணனை நாய்க்கு ஒப்பிட்டுச் சொன்ன தீக்‌ஷாவுக்கு அன்றே யுகேந்தரின் கோப முகம் தெரிந்திருக்குமோ…….. விஜய்யின் மீதான யுகேந்தரின் பாசம் புரிந்திருக்குமோ…………. என்னமோ…………….”

யுகேந்தர் இவள் சொல்வதெற்கெல்லாம் சிரித்து………….. ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்ததால்………………. அவனின் அண்ணன் மேல் உள்ள பாசம் அவளுக்கு தெரியவில்லை…………… அவன் தன் அண்ணனை எப்போதும்… யாருக்காவும் விட்டுக் கொடுக்காத தம்பி என்று………………..

---------------------

தன் வீட்டில் எல்லா சடங்கும் முடிய……….. மாலை 7 மணி ஆக……….. தன் வீட்டின் மாடிப்படி வாசலில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தாள் தீக்‌ஷா.

உள்ளே ஏதோ விவாதம் போய்க் கொண்டிருந்தது……………..

“ரமா……… இன்னைக்கு நைட் உங்க வீட்லதான் நான் வந்து படுக்கனும் பா………….. அம்மா ஆர்டர்………..’

“ஏனாம்……… “ என்று அதே குவார்ட்டர்சில் அவளின் தோழி எதிர்முனையில் கேட்க

“அண்ணா……..அண்ணிக்கு……… ஃபர்ஸ்ட் நைட்டாம்……. நான் பச்சப் புள்ளையாம்……….. இங்க இருக்கக் கூடாதாம்……… இந்த வைஜெயந்தி தொல்லை இருக்கே……….. தாங்க முடியல………… “ என்றவள்…… சற்று அடங்கிய குரலில்

‘இன்னும் நம்மள……. அறியா புள்ளைனு….. இந்த உலகம் நம்பிட்டு இருக்கு….. ரமா……….டூ பேட்……….” எனும் போதே

“வழி விடுறியா”………….. என்ற குரலில் திடுக்கிட்டு தீக்‌ஷா திரும்ப

“சாட்சாத் விஜயேதான்…………………………”

விஜய் கடந்த போது அவள்….. காதின் அருகில்

“வெளங்கிடும்……….உருப்ட்டுருவ” என்ற அவன் குரலும் கடந்து சென்றது…….

பூனை மாதிரியே இவன் நடந்தால்…… சத்தமே கேக்கவே மாட்டேங்குது………. எப்போ வர்றான்………. எப்போ போறானு தெரிய மாட்டேங்குது….. எப்போ வந்தானோ………… என்னத்த கேட்டானோ……….. ஓவரா எதுவும் பேசுனோமா…….என்று ஓட்டிப் பார்க்க………. தப்பா ஒண்ணும் சொல்லலைல……. என்று தனக்குள் ஆறுதல் தேடிக் கொண்டவள்…… அவன் சொல்லிப் போன வார்த்தைகளை நினைத்து

“நாங்களாம் உருப்பட்டுருவோம்டா……. நீ முதல்ல உருப்படுவியானு யோசிடா……… எப்போ பாரு வெறச்சுக்கிட்டெ போறது………….. சிரிச்சா என்ன…… உன் முத்தா விழுந்துரும்…………. வீட்லயே சிரிக்காதவன் வெளியிலயா சிரிக்கப் போற………… என்று வசை பாடியவள்

“அய்யோ தீக்‌ஷா இந்த ட்ராஜெடி பீஸ ஸ்கிப் பண்ணுடி………….. இவன்லாம் ஒரு ஆளுனு…….. அவன் சிரிச்சா எனக்கென்ன….. சிரிக்கலைனா எனக்கென்ன……………… இவன் பற்றி யோசிக்கிறதயே நிறுத்தனும்…….. எனக்கு வாழ்கைல ஒருநாள் கம்மியாகப் போகுது……….” என்று புலம்பியவளாய் உள்ளே போக

அங்கு பிரதீபன் உம்மென்று அமர்ந்திருந்தான்….

“இவனுக்கு என்ன ஆச்சு……….. கல்யாணம் ஆன உடனே அந்த வீட்டு உம்மாணாமூஞ்சி குணம் இவனுக்கும் ஒட்டிருச்சா” என்று யோசித்தபடி

“அம்மா……. நான் ரமா வீட்டுக்கு போறேன்……….” என்று கிளம்ப

“ஒண்ணும் வேண்டாம்………. நீ இங்கேயே இரு…………….” என்று தாய் சொல்ல

“ஏன்மா…………” என்றபடி……………….கிச்சனுக்குள் நுழைந்தாள்….. ஆனால்

தன் அன்னையின் முக மாற்றம் அவளை பாதிக்க தனது விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டிய தீக்‌ஷா………. 22 வயது பெண்ணின் பக்குவமாக தன்னை மாற்றிக் கொண்டவளாய்

ஜெயந்தியின் முகம் பார்க்க……. சிவந்த விழிகள் வேறு அவள் அன்னை அழுதிருக்கிறாள் என்பதை சொல்லாமல் விளக்க

“அம்மா…. ” என்று நெகிழ்வாய் பேச ஆரம்பித்தவள்

“அழுதீங்களா…….. எதுக்குமா………. அண்ணா வேற உம்முனு இருக்கான்….” என்று கேட்க

அப்போது அவள் தந்தையும் வந்து சேர

“ஜெயந்தி…………… என் முடிவு இதுதான்…… அவங்க பொண்ணுக்கு கொடுத்த வீட்டுக்கு…….. நம்ம பையன் போகட்டும்………… அப்போப்ப போய் பார்த்துக்கலாம்…….. ஒண்ணா இருந்தால் தான் பாசம்………….. இல்லைனா……….. பாசம் போய்டுமா என்ன?” என்று சொல்ல

<