அத்தியாயம் 6
பிரதீபன் – ராதா திருமணம் இன்னும் ஒரு வாரமே இருக்க………….. தீக்ஷா விஜய் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது………….. அவள் மட்டும் அல்ல………… அவள் குடும்பமே………….. திருமணத்திற்கு தேவையான நகை மற்றும் புடவை எடுக்க……….. தீக்ஷா இத்தனை நாட்களில் எப்படியோ விஜய் வீட்டிற்கு செல்லாமல் தவிர்த்து வந்தாள். இந்த முறை அவளால் தவிர்க்க முடிய வில்லை…………..
சுடிதாரோடு வெளியே வந்தவளை…………. ஜெயந்தி முறைக்க ஆரம்பித்தாள்…
”என்னடி ட்ரெஸ் இது………. புடவை கட்டிட்டு வா………. அங்க ராதா கூட புடவைதான் கட்டுறா…… நீ கலைக் கூத்தாடி மாதிரி ட்ரெஸ் போடாத……”
“அம்மா……….. ஓவரா பண்றீங்க………….. சுடிதார் போட்டா கலைக் கூத்தாடியா……… “
“டேய் அண்ணா…….. நீ பண்ணின லவ்ல எனக்கு தாண்டா இம்சை………… ராதாவுக்கு என்ன அடக்கம்…… என்ன குணம்….. என்ன பொறுமைனு என்னை ரொம்ப சோதிக்கிறாங்க……….” என்று பொறும ஆரம்பிக்க
”தீக்ஷா…….. புடவை கட்டிட்டு வான்னா வா……….. ” என்று பிரதீபனும் தாய் மொழியை வழி மொழிய……….. இப்பொழுது தீக்ஷா தன் தந்தையைப் பார்க்க ….. அவரோ….
”போம்மா தீக்ஷா…… எதுக்கெடுத்தாலும் பிரச்சனை பண்ணிட்டு நிக்காத” என்று சொல்ல….
வேறு வழி இன்றி…..
தன் பீரோவில்……….. இருந்து….. தனக்குப் பிடித்த அடர் பிங்க் நிற டிசைனர் சேலையை எடுத்து கட்டப் போனவளை அவள் தாய் தடுத்தாள்………….
“இந்தப் புடவை வேண்டாம்…………. தீக்ஷா……. வேற கட்டு “ என்றவளிடம்
“ஏன்மா இது எனக்கு ரொம்ப பிடிக்கும்………… நல்லா இருக்கும்மா…………..” என்று பிடிவாதம் பிடித்து அதைப் பிரிக்க ஆரம்பிக்க
“இதைக் கட்டின அன்னைக்குதான் நீ பைக்ல இருந்து கீழ விழுந்துட்ட……… வேணாம்டா…. என்னமோ இந்த புடவை ராசி இல்லைனு படுது…… முதன் முதலில் திருமணத்திற்கு புடவை எடுக்கப் போகிறோம்” என்று பதமாய்ச் சொல்ல…….
அவள் அன்னை என்றாவதுதான் இப்படிப் பதமாய்ப் பேசுவாள் என்பதால்
“ஒகே…. அப்போ என்ன புடவை கட்ட…… ” என்று தன் தாயிடம் கொஞ்சிய மகளுக்கு வேறு ஒரு புடவையை எடுத்துக் கொடுக்க …… மறுத்துப் பேசாமல் அதைக் கட்டிய படியே
”அம்மா…… நான் எதுக்குமா அங்க………….. நீங்க மட்டும் போய்ட்டு வாங்களேன்…… இல்ல எந்த கடைனு சொன்னா அங்க வந்து நிற்கிறேன்….. எனக்கு என்னமோ அந்த விருமாண்டியவே பிடிக்கலைமா………… அவன் வீட்டுக்கு போனா… நம்மள பிச்சக்காரவங்க அவன் வீட்டுக்கு வந்த மாதிரியே பார்ப்பான்…….”. என்று சொல்ல
“உன் வாய அடக்கு தீக்ஷா…………. இனிமேல் அவங்க நம்ம வீட்டுக்கு வருவதையும் நாம அவங்க வீட்டுக்கு போவதையும் தவிர்க்க முடியாதும்மா……..” என்று சொல்ல
”அவன் மட்டும் நம்ம வீட்டுக்கு வருகிறானா…… அவங்க அப்பா அம்மா…..” என்ற போதே…………. தாயின் முறைப்பில்
“சரி அத்தை மாமா, யுகி… அப்புறம் அந்த தலைவாசல் விஜய் கூட முறைத்த படினாலும் நம்ம வீட்டுக்கு வருகிறார்கள்….. துரைக்கு மட்டும் வழி தெரியலையோ” என்று தன் ஆதங்கத்தை கொட்ட
“அந்த தம்பி ஒரு தடவைனாலும் வந்துச்சு………… நீ அது கூட பண்ணலை” என்றபடி மகளை வேகமாகக் கிளம்பி வரச் சொல்லி வெளியேறினாள்…..
தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்தவள்………. தன்னையே சுற்றி போட்டவளாய்
“அழகு தீக்ஷா நீ……… செல்லக் குட்டி,………. பட்டுக் குட்டி…….. புடவைல சூப்பரா இருக்க அம்முக் குட்டி…..என்று தனக்குத்தானே கொஞ்சியவளாய்……….. கண்ணாடியின் பரப்பில் முத்தம் வைத்தவள்…….. கொடுத்து வச்சவன்டி உன்னைக் கட்டிக்கப் போறவன்” என்று கண்ணடித்தவளாய் வெளியேறினாள்……….
---------------
காரை விட்டு இறங்கிய தீக்ஷா அந்த பிரமாண்ட பங்களாவைப் பார்த்து அதிர்ந்தாள் தான்… விஜய் குடும்பம் வசதி படைத்தவர்கள் என்று தெரியும்……….. ஆனாலும் ஏதோ கொஞ்சம் தங்களை விட வசதி ஆனவர்கள் என்ற நிலைமையில் தான் வைத்திருந்தாள்………. கொஞ்சம் சங்கடமாய் அவளுக்கே தோன்றியது போல் இருந்தது…….. விஜய் தங்களை பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் இருப்பது போல் விளங்க…….. அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது………. கொஞ்சம் தடுமாறிய மனதை…. நாமளா அவன் தங்கச்சி மனசைக் கெடுத்தோம். அவளுக்கே அறிவு இருக்க வேண்டும் என்று யோசித்தவளுக்கு இன்னொன்றும் தோன்றியது…….
தன் அண்ணனை தங்களிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்று……… சற்று கண் கூட கலங்கி விட்ட்து…… இருந்தும் யாரும் அறியாமல் துடைத்தவள்……… மீண்டும் சகஜமாகினாள்……
அவர்களின் செல்வ நிலை அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்த வகையில் சஞ்சலமும் தர……. அமைதியாகவே வந்தாள் தீக்ஷா…. தன் தாயினை ஒட்டியே நடந்து வந்தவள்………. தன்னை அறியாமல் மேலே பார்க்க…………… விஜய் அவர்களை பார்த்தபடியே மேலே நின்றிருந்தான்………. பார்வையில் வழக்கம் போல் அலட்சியமும்…. கைகளில் சிகரெட்டும் இருக்க……….. அவனைப் பார்க்க முடியாமல் தடுமாறியவளாய்……..
“சிகரெட்ட எடுக்கிறானா……..அப்பா அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க……. இந்த பழக்கமெல்லாம் இவனுக்கு இருக்கா………..” என்று மனதினுள் நினைத்தபடியே…………. வேறு புறம் திரும்ப எத்தனித்தவள்……. கால் தடுமாறி கீழே விழ பிரதீபன் பிடிக்குமுன் மடங்கி உட்கார்ந்து விட்டாள்…………
அழுகையே வந்து விட்டது……. அவளுக்கு……….. அதுவும் விஜய் முன்……… வந்த கோபத்தில் தன் தாய் மீதே எரிந்து விழுந்தாள்…………
“பெருசா அந்தப் புடவை கட்டுனா ராசி இல்லைனு சொன்னீங்க …….. இது மட்டும் என்ன வாழுதாம்…….” என்று கத்த ஆரம்பிக்க………. ”’
அவள் தாயோ…. புடவை எடுக்க வரும்போது அபசகுனமா இருக்கே என்று வாய்விட்டுச் சொல்ல…….
இப்போது தீக்ஷா எழாமல் தன் தாயைப் பார்த்து முறைக்க…..
அவள் தாய் இன்னொரு விசயத்தை மறந்தாள்….தன் மகள் இந்த வீட்டிற்குள் முதன் முதலாய் காலடி எடுத்து வைக்கும் போதே அபசகுனமாய் விழுந்து விட்டாள் என்பதை…..
ஆனால் அதை யாரும் நினைக்க வில்லை………… ராதா-ப்ரதீபன் திருமணம் தான் அவர்கள் நினைவில் இருந்தது….. அதில் ஏதாவது தடங்கல் வருமோ என்றுதான் நினைத்தனர்……
“தீக்ஷா எழுந்திரு…………………… இது நம்ம வீடு இல்ல…….. ” என்று சொன்ன பிரதீபனிடம்
“ஏன்ணா………. உன் புகுந்த வீடு முன்னால அசிங்கமாகிடக் கூடாதா……..” என்று சொல்லியபடி….. மீண்டும் நிமிர்ந்து பார்க்க……. விஜய் அப்போதும் அங்குதான் நின்றிருந்தான்……… முதலில் பார்த்த நிலையிலே தானிருந்தான்
“நான் வர மாட்டேனு சொன்னா கேட்காம கூட்டிட்டு வந்து………. இவன் முன்னால வேற விழ வச்சுட்டாங்க…..” என்று மனதுள் நொந்தபடி எழுந்து உள்ளே வர………
அங்கு……….
திருமணத்திற்கு தேவையான அத்தனை புடவையும்…… நகையும் கடை விரிக்கப் பட்டிருக்க……… அதைப் பார்த்த தீக்ஷா இப்போது வாய் பிளக்க வில்லை……. தலை வலிதான் மிச்சமாய் இருந்தது………… எப்போதடா இங்கிருந்து போவோம் என்றிருந்தது……………… ஒரு வழியாய் புடவை மற்றும் நகைத் தேர்வுகள் முடிய………… தனக்க்கென்று எதையும் தேர்ந்தெடுக்கப் பிடிக்காமல்…………… தனக்கும் சேர்த்து தன் தாயையே எடுக்கச் சொல்லியவள்……. ராதாவை ஒரு நிமிடம் பார்த்தாள்……..
ராதாவின் முகமெங்கும் சந்தோசம் மட்டுமே இருக்க……. அவளின் இந்த வாழ்க்கையை தன் அண்ணனால் தர முடியுமா என்று நினைக்கும் போதே….. அதுவும் அரசாங்கம் தந்த தங்கள் இல்லத்தில் நினைக்க அவளுக்கே மூச்சு முட்டியது போல் இருந்தது………….
அப்படி என்ன காதல்…… தன் அண்ணன் மேல் அவளுக்கு………. இந்த வாழ்க்கை தராத எதை தன் அண்ணன் அவளுக்கு தந்தான்….. புரியவில்லை……………… அதுவும் விசம் குடிக்கும் அளவுக்கு போராடி தன் காதலில் வென்ற அவளைப் பார்த்த தீக்ஷா மனதில்…. ராதா முதன் முதலாக எங்கோ உயர்ந்தாள்………. அவள் தன் அண்ணன் மேல் கொண்ட காதலில் தன் அண்ணன் ஒரு ஹீரோ போல் தெரிய ……….. அவனைப் பெருமையாகப் பார்த்தாள் தீக்ஷா
அவள் அண்ணியை ஏற்கனவே அவளுக்கு பிடிக்கும் தான்…….. இப்போது மிகவும் பிடித்துப் போக…………
மனதில் மட்டும்….. ”காதல் வந்தால்………… எல்லாமே பின்னால் போய் விடுமா…..………” என்ற ஆச்சரியம்தான் தோன்றியது……
பின் தன் அண்ணாவிடம் “நீ கொடுத்து வச்சவன்டா…….. அண்ணி உனக்கு அதிகம் தான்….. எப்டிண்ணா……….. இப்டி ஆளக் கவுத்த” என்றபடி கிண்டல் செய்ய பிரதீபன் தன் மனம் கவர்ந்தவளை பெருமையாய் நோக்க……… அவளோ அவனின் பார்வையை வாங்கி வெட்கத்தில் சிவக்க…….அங்கு ஒரு திரைப்படமே ஓட…… தீக்ஷாவும் இப்போது ஃபார்முக்கு வந்திருந்தாள்………..
யுகியும் அவள் பக்கத்தில் வந்து அமர…………
“யுகி……. தாங்க முடியல………… இந்த கொசுத் தொல்லைய………” என்று சொல்ல……. யுகியும் அவளுக்கு ஹைஃபை கொடுத்தான்…… ஆமோதிப்பது போல்
இப்போதும் ப்ரதீபன் வைத்த கண் வாங்காமல் ராதாவையே பார்க்க…. அவர்களை விட்டு விட்டு……
இப்போது யுகியிடம் மட்டும் அவன் காதில்……….. “உன் ஆர்த்திக்கிட்ட நீ கூட இந்தப் படத்தைத் தானே ஓட்டுவ………… நீயும் அந்தக் கூட்டம் தானே…… பிறகு என்கூட ஜால்ரா அடிக்கிற…….. ” என்று அவனைத் தாக்க…. யுகி அசடு வழிய…..
“ராதா அண்ணியும்…. நீயும்……… கமுக்கமா இருந்துகிட்டே அத்தனை கோல்மால்…. வேலையும் பார்க்கிறீங்க…. உங்களுக்கு மூத்ததுங்க ரெண்டும்…… வேஸ்ட் ” என்று தலையில் அடித்தாள்….
அப்போது அங்கு விஜய் வர…………. யுகேந்தர் தீக்ஷாவை விட்டு தள்ளி அமர்ந்தான்…………
“தீக்ஷா என்ன யுகி அங்க போய்ட்டீங்க…….. எனக்கு போர் அடிக்கும்” என்ற படி………. அவளும் அருகே போய் அமர்ந்து விட்டாள்
“தீக்ஷா என்னை அடி வாங்காம விட மாட்ட போல……….. என் அண்ணா எனக்கு இன்னைக்கு அட்வைஸ் மழைதான் பொழியப் போறாரு…….. அன்னைக்கு EA ல பார்த்துட்டே காதில ரத்தம் வருகிற வரை பேசித் தள்ளிட்டாரு” என்றவன் பேசியபடியே………… விஜய்யைப் பார்க்க………. அங்கு என்ன விசயம் பார்வையால் பரிமாறப் பட்டதோ………. எழுந்து அவனருகே வந்து அமர்ந்தான் யுகேந்தர்
”பொறுக்காதே………. விருமாண்டிக்கு”. என்றபடி………… வேண்டுமென்றே
“விஜய் அத்தான்” என்று அழைக்க
அவன் நிமிர்ந்தே பார்க்க வில்லை……..
அவனை வம்பிழுக்கவே அப்படி அழைத்தாள் அவனை……….. யுகேந்தர் பார்வையாலே அவளைச் சும்மா இருக்கும் படிச் சொல்ல அதை லட்சியம் செய்யாதவளாய்
”விஜய் அத்தான்” என்று மீண்டும் அழைக்க……………. அப்போது அருகில் பழரசம் கொண்டு வந்த வேலையாளின்………. கன்னங்களில் அறை விழுந்தது விஜய்யின் கையால்…… அவளுக்கு கிடைப்பதற்கு பதிலாக
“பிடிக்கலைனு சொன்னா விடனும்………. சும்மா என்னை டார்ச்சர் பண்ணின………… காலி பண்ணிடுவேன்……….” என்று சொன்னவன்………. அதோடு விடாமல் அவளிடமும் பாய்ந்தான்
“ஏய்…. இந்த அத்தான் பொத்தான்லாம் இவனோட நிறுத்திக்க………..” என்று யுகேந்தரைக் காட்டியவன்……….
”என்னை அத்தான்லாம் கூப்பிட ஒரு தராதரம் வேண்டும்………… அது உனக்குலாம் இல்லை………” என்றபடி……. மீண்டும் மாடிப் படி ஏற………
இப்படி எல்லோர் முன்னிலையிலும் பேசி விடுவான் என்று நினைத்துப் பார்க்காத தீக்ஷா தன் விளையாட்டுத் தனத்தால் அசிங்கப்பட்டுப் போனாள்……….. கண் கலங்க……. அதை மறைக்க தலையைக் குனிந்து விட்டாள்.
அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க
தீபனுக்கு அவன் பேச்சு அவன் தன்மானத்தை அசைக்க………….. அவனுக்கும் கோபம் வர ……….. விஜய்யிடம் கோபமாய் பேசப் போக…… கலைச்செல்வி பேச ஆரம்பித்தாள்….. அதுவும் தீக்ஷாவுக்கு ஆதரவாக…………..
”விஜய் இங்க வா……… அந்தப் பொண்ணு என்ன சொன்னானு இப்டி பேசுற……….. உன்னை அப்டித்தானே கூப்பிட வேண்டும்……….. நம்ம பொண்ணயே அவங்க வீட்ல கொடுக்கிறோம் என்கிற போது நம் தராதாரம் என்னவோ அதற்கு கொஞ்சம் கூட குறையாதவங்கதான் அவங்களும்……….. இனி………… அவ அப்டிதான் கூப்பிடுவா……… ” என்ற போது ஓடி வந்து கலைச் செல்வியை கட்டிப் பிடித்த தீக்ஷா……….
“தேங்க்ஸ் அத்தை” என்றாள் கண்களைத் துடைத்தபடியே……. கலைச்செல்வியே சப்போர்ட் பண்ணிவிட்டாள்…. எனும்போது விஜய்யை சும்மா விடுவாளா… என்ன???…..
“விஜய் அத்தான்……… எங்க அத்தை சப்போர்ட் எனக்கு இருக்கே……… நீங்க ஒண்ணும் பண்ண முடியாதே அத்தான்……….. விஜயேந்தர் அத்தான்…………. விஜய் அத்தான்….. எது ஒக்கே……..” என்று சந்தோசமாய் அவனை கிண்டலடிக்க……… அவனும் திரும்பியே பார்க்கவில்லை என்பதால்….. கடைசிப் படி ஏறும் வரை அழைத்து அவனை கடுப்பேற்றி தான் சற்று முன் பட்ட வேதனையை தீர்த்துக் கொண்டாள்…..
விஜய் கோபமே அவளை ஒன்றும் செய்ய வில்லை எனும் போது ஜெயந்தி முறைப்பெல்லாம்……… தீக்ஷாவைத் தொடுமா என்ன………
அடுத்து சுரேந்தர் தன் அண்ணன் பின்னே போக….. இவரு பெரிய லட்சுமணர்…..அவரு ராமர்……….. டேய் விருமாண்டி உனக்கு எத்தனை பேர்டா வைக்கிறது………. என்றபடி……
சுரேந்தரையும் விட்டு வைக்காமல்
“சுரேந்தர் அத்தான்” என்று அழைக்க…….. கொஞ்சம் சுதாரித்தான் சுரேந்தர்………. நின்று பார்க்க வில்லை…… என்றால்………. என்னவென்று கேட்கவில்லை என்றால் தன் பெயரும் ஏலம் விடப் படும் என்று உணர்ந்தவன்…….
நின்று……. ”என்ன தீக்ஷா” என்று வாய் திறக்க
“சும்மா…….. கூப்பிட்டுப் பார்த்தேன்” என்றபடி அவனை விட்டு விட்டாள்…….
அன்று தீபன் காதல் மயக்கத்தில் இருந்ததினால் என்னவோ…………… விஜய்யின் பேச்சு அந்த அளவு அவனைப் பாதிக்கவில்லை………….
அதன் பிறகு ராதா……… செல்வி………… யுகேந்தர் என ஓரளவு ஐக்கியமாகி விட………. அந்தக் குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் கலந்தாள் தீக்ஷா………….. விஜய்…………. சுரேந்தர் மட்டுமே விலகி நின்றனர்……………
வரும்போது அவள் கண்களுக்கு பிரமாண்டமாய் தெரிந்த அந்த பங்களா……….அதை விட்டு கிளம்பும் போது சாதாரணாமாய் ஆனது……….. ஓரளவு தெளிந்து இருந்தாள் தீக்ஷா………….
-----------------------
திருமண நாளும் வந்தது……………..
ப்ரமாண்டமாய் நடந்து கொண்டிருந்த ப்ரதீபன் – ராதா திருமணத்தைப் பார்த்த தீக்ஷா வீட்டு உறவினர்கள் மூக்கில் விரல் வைக்க…………
தீக்ஷாதான் சமாளிக்க முடியாமல் திணறினாள்……. அவள் தாய்…. ராதாவின் அன்னையோடு நின்று கொள்ள…………. இவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் சொல்லி சமாளித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது…….
இதில் அவள் தாயும் அவளுக்கு அதை எடுத்து வா என்று கட்டளை இட்டுக் கொண்டே இருக்க……….. யுகேந்தரை தனக்கு துணையாக வைத்துக் கொண்டாள்…… அவனை அவள் விடவே இல்லை…..
“தீக்ஷா………… என் ஃப்ரெண்ட்ஸ்லாம் வந்திருக்காங்க………..” என்று கிளம்ப எத்தனிக்க…..
“யுகி……….. ஆர்த்தி வரலையா” என்று தீக்ஷா ஞாபகம் வந்து கேட்க
சட்டென்று அவள் வாயைப் பொத்தினான் யுகேந்தர்……….. மேடை என்று கூடப் பார்க்காமல்……….அவளும் அவன் கையைப் பற்றி அதை எடுத்த படியே
”அட்லீஸ்ட் என் ஃப்ரெண்டுனு சொல்லி கூட்டிட்டு வந்திருப்பேன்ல……….உனக்கும் உன் ஆள சைட் அடிக்க சான்ஸ் கிடைத்திருக்கும்… போடா லூசு……….” தனிமையில் வாடா போடா என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் நட்பு நெருங்கியிருந்தது………..
“அம்மா தாயே……….. அவள இங்க எல்லோருக்கும் தெரியும்…….. என் அண்ணா… அதுதான் உன் எனிமி விருமாண்டியோட எனிமியோட தங்கைதான் அந்தப் பொண்ணு…….. தெரிஞ்சது…. அவ்ளோதான்” என்றவுடன்
“ஏன் விருமாண்டி கருப்பசாமியா மாறி அருவாளத் தூக்கிருவாரோ………” என்று நக்கலடிக்க……………” அதே நேரம் அவன் மொபைலும் அடிக்க…. பேசியவன் அடுத்த நிமிடம் மேடையை விட்டு கீழே இறங்கினான்….
சிறிது நேரத்தில் அய்யர் ஏதோ கேட்க………… தீக்ஷா யுகியைத் தேட அவள் கண்ணில் சிக்கமால் போக………. சுரேந்தரும் விஜயும் சற்று தள்ளி நிற்க
அவர்களின் அருகில் போய்……….. அத்தான் என்று பொதுவாய் அழைத்தாள்……… விஜய் திரும்பாமல் நிற்க……. சுரேந்தர் மட்டும் திரும்பி ”என்ன” என்று கேட்டான்
”யுகி எங்கே போய்ட்டாரு….” என்று கேட்க…..
”அவன் எதுக்கு” என்று சுரேந்தர் கேட்ட போது அவன் குரலில் எரிச்சல் இருப்பது புரிய……..
”இவன் ஒருத்தன்…………….அவன் வச்சு நான் என்ன பண்ணப் போறேன்…….. அவன் எதுக்காம்னு ஒரு கேள்வி………. அண்ணனுக்கு தப்பாத தம்பி” என்று எரிச்சலோடு மனதுக்குள் சுரேந்தரை அர்ச்சித்தபடி….
“அய்யர்……….. ஏதோ தேங்காய் வைக்க தட்டு வேணுமாம்……. பிறகு நெய் வேண்டுமாம்…….. எடுத்து வரச் சொன்னார்………. அந்த ரூம் பூட்டிக் கிடக்கு………… சாவி யார்கிட்ட இருக்குனு தெரியல……… யுகியிடம் கேட்கலாம் என்று தேடுகிறேன்……… ” என்று சுரேந்தரிடம் சொன்னவள்
”இப்போ பதில் கிடைத்துவிட்டதா………… யுகியை நான் ஏன் தேடுகிறேன்” என்று சுரேந்தரிடம் சொல்லி…… விஜய்யை ஒரு பார்வை பார்க்க………. அவன் அவள் புறமே பார்க்கவில்லை……
“டேய் நீ பார்க்கவில்லை என்றால்………. உனக்கு காது கூடவா கேட்காமல் போகும்” என்று மனதுக்குள் நக்கலடித்தாள்…. அப்போது
“சரி வா” என்று சுரேந்தர் முன்னே போக………… அவனைத் தடுத்து நிறுத்தினான் விஜய்………….
அவன் வீட்டு வேலை ஆளை அழைத்தவன்
“இவ கூட போய் அவ கேட்கிறத எல்லாம் எடுத்துக் கொடு” என்றபடி சுரேந்தரை தன்னோடு இருத்திக் கொண்டு…..அவளை அங்கிருந்து அகற்றினான்………
அதன் பிறகு அவள் மட்டும் தனியாளாய் சுற்ற யுகேந்தர் அவள் அருகேயே வர வில்லை……. ஏனென்றும் தெரியவில்லை………..
ஆனால் நேரம் ஆக ஆக… அது விஜய்யின் கைங்கர்யம் என்று புரிய அவனின் கேவலமான புத்தியை நினைத்து…… அவனை அற்பமாக நோக்க………. அவனோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை………..
அதன் பிறகு அனைவரின் அட்சதை ஆசிர்வாதங்களோடு ப்ரதீபன்….. ராதாவின் கழுத்தில் மங்கல நாணை அணிவிக்க………….. அது தாலிக்கயிறாக இல்லாமல்……….. தங்கச் சங்கிலியாக போனதால்………. நாத்தனார் முடிச்சு போடும் வேலை இல்லாமல் போனது அவளுக்கு
தங்கள் வீட்டு சொந்தங்களை கவனித்தபடி இருந்த தீக்ஷாவை அவளின் தாத்தா அழைத்து ஒரு வீட்டினர் முன் அறிமுகப் படுத்தினார்………
“என் பேத்தி தீக்ஷா இவதான்………….” என்று சொல்ல………….
“என்னம்மா பண்ற………. என்று கேட்க
“சாஃப்ட்வேர் என்ஜினியரா இருக்கேன் ஆன்ட்டி…….. என்றவளிடம்
“உட்காருமா” என்று கூறி
“அழகா இருக்கடா…… உங்க அம்மா கிட்ட சொல்லி சுத்திப் போடச் சொல்லு” என்று நெட்டி முறித்தவள்…… என் பையனும் அதுலதான் இருக்கான்மா…….. US ல இருக்கான்……… நெக்ஸ்ட் இயர் வருவான் மா…… “ என்று சொல்லியவள்……..
“உனக்கு US லாம் போக இஷ்டமாடா……… உங்க தாத்தா உன்னை என் பையனுக்கு எடுக்கலாம்னு ஆர்வம் காட்டுகிறார்…..” என்று ஓவராய் பாசமழை பொழிந்து… நேரடியாக விசயத்துக்கு வர
அவஸ்தையாய் நெளிந்தாள் தீக்ஷா
தாத்தா என்று மனதிற்குள் திட்டியவள்…. திரும்பி தன் தாத்தாவை வேறு முறைத்து வைத்தாள்………..
“அம்மா……… அப்பா கிட்ட கேளுங்க ஆண்ட்டி………. அவங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான்……….”. என்ற போதே விஜய் அவள் அருகில் வந்து நின்றான்
“அவங்ககிட்ட கேட்காமலா…….. நீ சொல்லுமா உனக்குதான் என் பையன பிடிக்கணும்” என்ற போதே
“தீக்ஷா…… குரூப் போட்டோ எடுக்க வேண்டுமாம் உங்க தாத்தாவையும் பாட்டியையும் அழைத்து வா” என்றபடி கடந்து போனான் விஜய்………
“இப்போ இவன் நம்ம பேரையா சொல்லிட்டு போனான்……..” என்று ஆவென்று வாய் திறந்தவள்…….
“சரி ஆன்ட்டி………. வருகிறேன்……….” என்ற அந்தப் பெண்மணியை விட்டு போக எத்தனிக்க….
“பதில் சொல்லுமா………… என் பையன கட்டிக்க இஷ்டம்னு” என்று அந்தப் பெண்மணி விடாமல் தொணத்த
கொஞ்சம் பொறுமையே நம் நாயகிக்கு உண்டு…… அது போகப் போவது போல் இருக்க…… இருந்தும் விடாமல்…… அதை இழுத்துவைத்துக் கொண்டு……
”ஆன்ட்டி என் அப்பா அம்மாக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான்” என்று மீண்டும் சொன்னதையே… ஆனால் அழுத்தமுடன் கூறிய போதே தீக்ஷாவின் அருகில் மீண்டும் விஜய் வந்து….. அந்த பெண்மணியைப் பார்த்து புன்னகைத்து வைத்தவன்….
தீக்ஷாவிடம்………..அதே புன்னகையுடன்
“அங்க எல்லோரும் வெயிட்டிங்………. ராணி வர மாட்டீங்களோ………… வருங்கால மாமியார்கிட்ட இப்போதே வாயடிக்க ஆரம்பிச்சுட்டியா” என்று கேட்க
”வருங்கால மாமியார்” என்று விஜய் சொன்னதால்
அந்தப் பெண்மணி விஜய்யைப் பார்த்து சிரித்து வைக்க……….. தீக்ஷாவுக்கு கோபம் வந்து விட்டது…
முன்னால் போன விஜய்யிடம் வேகமாய் அடி எடுத்து வைத்து அவன் அருகே சென்றவள்….
“அவங்கள என் வருங்கால மாமியார் ஆக்க இந்த ராஜாவுக்கு என்ன அவசரம்………. “ என்று பட்டென்று கேட்டவள்
“யுகி…… சுரேந்தர் அத்தான் மேல நம்பிக்கை இல்லையா… இல்லை… என்னைப் பார்த்தா அவ்வளவு சீப்பா தெரியுதா……….” என்று மனதில் வைத்து புளுங்காமல் அவனிடம் கொட்டிவிட்டு……….. அவன் வெளுத்த முகத்தை பார்த்த சந்தோசத்தில்
அவனை வென்ற புன்னகை முகத்தில் வர…. அதே முகத்தோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து நின்றாள் தீக்ஷா…….
அதன் பிறகு அவள் யுகி பக்கமே திரும்ப வில்லை……….
அவனாக வந்து பேசிய போது கூட, அவனோடான பேச்சைக் கத்தரித்துக் கொண்டாள் தீக்ஷா…………
யுகேந்தர்…………. அவளிடம் கெஞ்சியும் அவள் பேச வில்லை…………..
“தீக்ஷா…………. இத்தனை பேர் மத்தியில உன் வாயைப் பொத்தி நின்னதை பார்த்து………. அண்ணா கொஞ்சம் டென்சன் ஆகிட்டாரு…………. ப்ளீஸ்………….. தப்பா எடுத்துக்காதே” என்றவுடன்
“சரி விடு……….. அப்போ நான் இனிமே உன்னை வா போனு எல்லோர் மத்தியிலயும் கூப்பிடுவேன்…………… அதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்…………….. டீல் …………ஒக்கேனா நானும் பேசுறேன்……” என்று கெத்தைக் காட்ட………….
“என் அண்ணா திட்டுவாரே” என்று பரிதாபமாக விழிக்க
“சும்மா…….. அண்ணா நொண்ணானு……. அவருக்குதான் கூஜா தூக்க தலைவாசல் விஜய் இருக்காருல்ல………… ஃப்ரியா விடு மச்சி……… உங்க அண்ணா இன்னைக்கு முழுதும் உங்க ரெண்டு பேருக்கும் காவல் வேலை பார்த்து களைத்துப் போயிருப்பாரு…… நான் உங்க ரெண்டுபேர்ல யாரவது ஒருத்தரை தூக்கிட்டு போய்டுவேனோனு” என்றவளை
“சத்தியமா தீக்ஷா…….. எங்க வீட்டுக்கு மட்டும் நீ வந்துட்டேனு வச்சுக்க………. எங்க வீடே தலை கீழா மாறிரும்…….. என்றவன்………..
“சுரேந்தர் அண்ணாவை கவுத்திரலாமா……… அவர்…….. பெரிய அண்ணா மாதிரி கிடையாது…….. கொஞ்சம்…………. லைட்டா தட்டுனோம்னு வை…… ஆளு ஃப்ளாட்தான்……… நான் ஹெல்ப் பண்றேன்” என்றவனிடம்
கையெடுத்துக் கும்பிட்டவள்…….
“உங்க சங்காத்தாமே வேண்டாம்பா சாமி……………… ஆள விடுங்க” என்றவள்………… சுரேந்திரனைப் பார்க்க……..
அவன் விஜயிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்க
“பாவம் பச்சப்பிள்ளை விட்டுடலாம்……… யுகி……………“ என்று சுரேந்தரைப் பார்த்து சிரித்தபடியே சொல்ல………..
“யாரு எங்க அண்ணா……. அதுக்கு விஜய் அண்ணாவாவது பரவாயில்ல…….. நம்பாத தீக்ஷா” என்றவனிடம்
இப்போ பாரு உங்க விஜய் அண்ணாவை டென்சன் ஏத்துறேன்……… என்ற படி ”சுரேந்தர் அத்தானை இங்க கூட்டிட்டு வருவேன்……….. நீ பேச்சுக் குடுத்து இந்த இடத்திலேயே வச்சுரு…………… நானும் உங்க கிட்ட நிற்கிறேன்….. அப்போ உங்க அண்ணன் முகம் போற போக்கை பார்க்கனுமே…………. அப்டியே போட்டோ கிராபரையும் கூப்பிட்டு போட்டோ எடுக்க வைத்தோம்னு வை…………….அந்த போட்டோவை…. சும்மா……….. டிஸ்கவரி சேனல் லோகோவா கூட போட்டுடலாம்” என்று சொல்ல………. யுகேந்தர்
“அடிப்பாவி…………….என் அண்ணனை இந்த அளவு உன்னைத் தவிர வேற யாரும் டேமேஜ் பண்ண முடியாது…………” என்ற வார்த்தைகளைக் கேட்க அவள் அங்கு இல்லை……… ஏனென்றால் விஜய்யைத் தாண்டி நின்ற சுரேந்தர் அருகில் நின்றாள்………
இருவருக்கும் இடையில் சற்றுத் தள்ளி நின்றவளின் முந்தானை காற்றில் பறக்க……… அதை வேகமாக இழுத்து ஒரு முனையை கையில் பிடித்தபடி வைத்துக் கொண்டவள்………… மற்றொரு முனையை விட்டு விட்டாள்………….
சுரேந்தர் அத்தான் உங்களை அத்தை கூப்பிடுறாங்க” என்று சொல்ல…. சுரேந்தரும் வேகமாய் போக….
சுரேந்தர் பின்னாலே போக… 4 அடி எடுத்து வைத்தவள் இழுக்கப் பட வேகமாய்த் திரும்பினாள்……
அந்த மஹாலின் மூலையில் பேன் ஓடிக் கொண்டிருந்ததால் அவள் புடவை முந்தானையை ஒரு முனையை இழுத்த வேகத்தில் மற்றொரு முனையின் நூல் விஜய்யின் கையில் போட்டிருந்த ப்ரேஸ்லெட்டில் மாட்டிக் கொண்டிருந்தது………
முதலில் திகைத்தவள்……… சற்று விழித்து….. திரும்பிப் பார்க்க …. தன் புடவை முந்தானை விஜய் கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட்டில் மாட்டிக் கொண்டிருந்ததில் நிம்மதி ஆனாள்.....
“கடவுளே இவன் என்ன சொல்லப் போறானோ….. அது தெரியாம மாட்டினால் கூட நான்தான் அதுக்கு காரணம்னு நினைக்கப் போறானே…………. தீக்ஷா இவன்கிட்டயே மாட்டுறியே” என்று விஜய்யைப் பார்க்க
அவளைப் பார்த்தும்……….. புடவை மாட்டியிருப்பதை உணர்ந்தும் கவனிக்காதது போல் அலட்சியப் பார்வையுடன் அவன் எதிர்புறம் திரும்பியதைக் கண்டவள்……
“விஜய் அத்தான்………… அதை எடுத்து விடுங்க…………“ என்று அவள் நின்ற இடத்தில் இருந்தே சொல்ல
“வந்து எடு…………. உனக்கு நான் என்ன வேலையாளா……… சேவகம் செய்ய………..” என்று அவள் எடுக்க வசதியாக……… கையை சற்றுத் தள்ளி வைத்து விட்டு….. மீண்டும் திரும்பிவிட்டான்….
அருகில் வந்தவள்………….. ”இவனுக்கு இருக்கிற………… திமிர் இருக்கே………..” என்று புலம்பியவளாய்…… தன் புடவைத் தலைப்பின் நூலை விடுவித்தவள்….. கூடவே அவன் கை மேல் படாமலே… ப்ரேஸ்லெட்டின் கொக்கியையும் தன் கைகளாலே நெம்பி கழட்டினாள்…..
“தேங்க்ஸ் அத்தான்………….. இனி இது எனக்குதான்”……… என்றவளிடம்……………
“ஏய் குடுத்துரு……….. விளையாடாத…………“ என்று அடிக்குரலில் சொல்ல…………
”அவ்ளோதான்.. மறந்துருங்க………”. என்றபடி ……. இனி இது தீக்ஷா ப்ராப்பெர்ட்டி என்றபடி………போனவளின் முன்னால் நின்றான்……….
“அதைக் குடு……….. இல்ல……. நான் கொல வெறி ஆகிடுவேன்………… என்ன…………. 3 பேர்கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசி யார் மயங்குறாங்களோ……… அவங்கள கரெக்ட் பண்ணி எங்க வீட்ல நுழையலாம்னு பார்க்கிறியா…………. என்றவனிடம்
”ஆமா…. வேற வெலை இல்ல எங்களுக்கு” என்று அலட்சியமாய்த் சொல்லியவள் அவன் ப்ரேஸ்லெட்டை அவனிடமே திருப்பிக் கொடுத்தாள்…..
கொடுக்கும் போது கூட இரண்டு முறை கொடுக்காமல் விளையாட்டுக் காட்டி…. அவன் பிபியை ஏற்றி விட்டுத்தான் பின் கொடுத்தாள்
கொடுத்தவள்…….
”அத்தான் எனக்கு ஒரு சந்தேகம்…. உங்க வீட்டுக்குள்ள வருவதற்க்கு இதுதான் எண்ட்ரென்ஸ் எக்ஸாமா…..” என்ற போதே அவன் முழிப்பதை உணர்ந்தவள்
“இல்லை உங்க மூணு பேர்ல யாரையாவது ஒருத்தரை மயக்குறது…….. அதைதான் சொன்னேன்…………” என்று சிரித்தபடி சொன்னவள்….… பின் தன் சிரிப்பை நிறுத்தி……….
அவன் கண்களைப் பார்த்து….
“அப்டி ஒரு கேவலமான எக்ஸாம் நீங்க வைக்கலாம்…. ஆனால் அந்த எக்ஸாமை தீக்சா எழுத விரும்ப மாட்டா” என்று சொன்னபோது வழக்கமான அவள் விளையாட்டுத் தனம் எல்லாம் அவள் கண்களிலும் இல்லை………… அவள் குரலிலும் இல்லை…………….
சொல்லி முடித்த உடனே தன் முக பாவத்தை சாதரணமாக மாற்றியவள்….
“சாரி விஜய் அத்தான்……………. நான் உங்க யார்கிட்டயும் தப்பா பழகல அத்தான்……… புரிஞ்சுக்கோங்க………” என்றவளிடம்
“நீ போகலாம்……….. நீ பேசுனாலே எரிச்சல் வருது…………. பதிலுக்கு பதில் பேசிட்டு……” அத மொதல்ல மாத்து……………..” என்று சொல்லும் போதே
“அம்மா கூப்பிடலயாமே தீக்ஷா” என்று அப்பாவியாய் சொல்லியபடி சுரேந்தர் திரும்பி வர…………..
“சும்மாதான் அத்தான்………… யுகி கிட்ட உங்கள வச்சு விளையாடிட்டு இருந்தேன்……… டிவில வேஷ்டி விளம்பரத்துல வருகிற இரண்டு ஆக்டர் மாதிரி உங்களையும் யுகியையும் சேர்ந்து பார்க்கனும்னு தோணுச்சு….. ஒண்ணா வைத்துப் பார்ப்போம்னு நினைத்தேன்….. ப்ச்ச்…. உங்க அண்ணா விடலை…… இப்போ வர்றீங்களா” என்று கண்ணில் குறும்புடன்…… உதட்டில் சிறு புன்னகையுடன் சொல்ல…..
சுரேந்தருக்கே சிரிப்பு வந்து விட…… இருந்தும் வெளியே காட்டாமல்….. தன் அண்ணனைப் பார்க்க……… அவனின் பார்வையை உணர்ந்த தீக்ஷா….
“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் நிற்கிறீங்க…… ஆனா…..அந்த விளம்பரத்துல வருகிற ஹீரோஸ் ரெண்டு பேரும் சிரிச்சுட்டே இருப்பாங்க………… உங்க அண்ணாகிட்ட அதைப் பார்க்க முடியுமா……. அதுதான் யுகி பக்கத்துல நிற்கச் சொல்கிறேன்……….” என்று அப்பாவி போல முகம் வைத்தவளைப் பார்த்து…………….. பேச ஆரம்பித்த சுரேந்தர்……
தன் அண்ணனைப் பார்க்க
“தீக்ஷாவின் மீது….. அவள் சிறு பிள்ளைத் தனமான பேச்சின் மீது…. வந்த கோபத்தால்….. அவனின் இதய ஓட்டமும்… ரத்த ஓட்டமும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்பதை அவன் முகமே சொல்ல
தன் அண்ணாவின் ஆயுளில் அக்கறை உள்ள தம்பி அவன் என்பதால்…………
“அண்ணா நீங்க போங்க” என்று அவனைப் போகச் சொல்லி…… விஜய்யை அங்கிருந்து அகற்றியவன்…..
தீக்ஷாவிடம் திரும்பி பொறுமையாக
“தீக்ஷா…………. நான் சொல்றது உனக்கு புரியுமா….. புரியாதானே தெரியல…………….. நீ வயசுப் பொண்ணு……….. பார்த்து நடம்மா………….. நீ விளையாட்டுதனமாகத்தான் செய்கிறாய்………. பார்க்கிறவங்க எல்லோருக்கும் அது விளையாட்டா தெரியாது……….” என்று அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்க….
அதே நேரத்தில் ஜெயந்தியும் அங்கு வர………
அவள் கண்ணிலும் சுரேந்தர் – தீக்ஷா பட………….. விஜய்யை விட சுரேந்தரை ஜெயந்திக்கு பிடிக்கும்…………. கொஞ்சம் கோபப்பட்டாலும் தணிந்து போவான் என்பதால்……….. அடுத்தவரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு…… பிடிக்காவிட்டாலும் நயந்து பழகுவான்….. யுகேந்தர் விளையாட்டுப்பிள்ளை என்பதாலும்……….. விஜய் உச்சாணிக் கொம்பு என்பதாலும்………… சுரேந்தர் அவளுக்கும் மனதில் நிறைந்திருந்தான்…. அவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தம் கண்களை நிறைத்தது…..
“அத்தான் ………….. அட்வைஸ் மழை போதும்……….. அப்டியே ஒரு ஜூஸ் வாங்கிக் கொடுத்தா …….. அட்வைஸ் கொடுத்ததோட ஜூஸும் கொடுத்த சுரேந்தர் அத்தானுக்கு ஜேனு பாரட்டிட்டு போவா… இந்த தீக்ஷா…………….” என்று அவன் இவ்வளவு நேரம் சொன்னதை எல்லாம் காற்றில் விட்டு மீண்டும் தன் வேலையைக் காட்ட…
அவள் தலையில் செல்லமாய் ஒரு தட்டு தட்டினான் சுரேந்திரன்……………..
“அடங்க மாட்டியே…………………. உன்னலாம்…………….. எனக்குதான் இப்ப ஜூஸ் வேண்டும்“ என்ற சொல்ல
“இங்க வாப்பா…………” என்று அருகில் நின்ற ஜூஸ் கொடுப்பவனை அழைத்தவள்…. அவனிடமிருந்து ஜூசை வாங்கி நீட்ட……சுரேந்தரும் வாங்கிக் கொள்ள…. இப்போது
“உங்களுக்கு வாங்கிக் கொடுத்தேன்ல….. எனக்கு….. யார் வாங்கிக் கொடுப்பாங்க” என்று கேட்க
சுரேந்தர் சிரித்தபடி….
அதே வேலையாளிடம் இருந்து…..
“இன்னொரு கிளாசை கையில் வாங்கிக் அவளிடம் கொடுக்க………….”
சிரித்தபடி அதை வாங்கியவள்………
”சரி போங்க….. உங்க அண்ணா தேடுவாரு….. “ என்று தோரணையுடன் சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்றாள்….
போகும் போதே
”ஹை அடுத்த பாலும் அவுட்” என்றபடி சென்றவள்……………
“இன்னும் ஒண்ணே ஒண்ணு…………… விஜய் அத்தான்……… ஆனா அது அவுட் ஆகுமா” என்று யோசித்தவள்…
“விடு………. அதை கிரிகெட் பாலோடோ கம்பேர் பண்ண முடியாது……. உனக்கு பிடிச்ச கிரிக்கெட் பால் எல்லாம் உன் கைல கேட்ச் ஆகிட்டங்க……. அது ஃபுட்பால்………….. கையில் பிடிக்க நினைத்தாய் என்றால் சேதாரம் உனக்குதான்…… இது பிடிக்காத ஃஃபுட்பால் தானே……. ரொம்ப துள்ளுச்சு காலால ஒரே உதைதான்…………” என்று உதைத்துப் பார்த்தவள்….. அருகில் இருந்த தூணில் இடித்துக் கொள்ள…………. ஆ வென வலியில் பிடித்துக் கொண்டே
“இனி என்ன உனக்கு……. அதுதான் மெஜாரிட்டி கிடச்சுடுச்சே தீக்ஷா…. அவன் லாம் ஒரு ஆளுனு நீ ஃபீல் பண்ணாதாடா செல்லம்………………….. அவன விட்டுத் தள்ளு தீக்ஷா” என்று சந்தோசமாய்த் திருமண மண்டபத்தை வலம் வந்தாள்………
மட்டமான நினைப்பு இருந்தால் தான் இப்படி பணத்துக்காக வளைச்சுப் போட பார்க்கிறாள் ன்னு தோன்றும்