அன்பே… நீ இன்றி??? 5

அத்தியாயம் 5:

மருத்துவமனையின் படிகளில் கீழே இறங்கியபடி வந்த தீக்‌ஷாவின் உதடுகள்…… இன்னும் இறங்கி வராத தன் தாயினை நினைத்து வசை பாட…… மனமோ அந்த ராதாரவியை நினைத்து எரிந்தது… அவனைத் திட்டி வந்தும் மனம் ஆறவில்லை அவளுக்கு….

”நல்லவேளை திட்றதுக்கு அவனே ஒரு வாய்ப்பைக் கொடுத்தான்…. இல்லை இந்த தீக்‌ஷா இதயம் என்ன ஆகியிருக்கும்…… எந்தக் குப்பையையும் மனசுல வச்சுருக்க மாட்டா இந்த தீக்‌ஷா…. என்று தனக்குத்தானே மனதுக்குள் பேசியவள்….

ஆனாலும் “அந்த ராதாரவியை நினைத்தாலே பத்திக்கிட்டு” என்று நினைத்த போதே

”ராதரவி பேர் சூட்ட ஆகலடா. உனக்கு…………. வேற பேர் வச்சுத் தொலையனும்……… என்று யோசித்தவள்…..

“விருமாண்டி……. இதுதாண்டா உனக்கு நான் வைக்கிற பேர்……… என்னேயேவா………. விரல் சுண்டி கூப்பிடுற……….. இந்த தீக்‌ஷா யாருனு காட்டுறேண்டா….. நீயும் உன் ஸ்டேட்டஸ் மண்ணாங்கட்டியும்…………….. போடா………………..” என்றபடி தான் பைக்கை நிறுத்திய இடத்திற்கு வர….. அங்கு அவளுடைய ஸ்கூட்டி இல்லை………… அவ்வளவுதான்…..

விருமாண்டி விஜய்யை திட்டும் வேலையைச் செய்து கொண்டிருந்த மனது தன் பிங்கியை நினைத்து பரிதவிக்க ஆரம்பித்தது………

இப்போது….. விஜய்யாவது விருமாண்டியாவது……….. அவனை மறந்தவள்…. மனம் பதற

“அய்யோ காணாமல் போச்சா…………… இங்கதான நிறுத்தினேன்………”

கண்களைச் சுழற்றி ஆராயக் கூட இல்லாமல் படபடப்பானாள் தீக்‌ஷா………….எதிலும் நிதானம் என்பது அவளிடம் இருக்காது……. கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்கும் பழக்கம் இல்லாத தீக்‌ஷா சட்டென்று எதையும் தீர்மானித்து………… அதைத் தொங்கிக் கொண்டே திரிவாள்…………

எதையும் அவசரப் பட்டு முடிவு செய்யும் மனம் கொண்ட அவள்……….பின்வந்த ஒருநாளில் தான் காதுகள் கேட்ட முடிவை உறுதி செய்ய பயந்து தனக்குள்ளே அடங்கியும் போனாள்…..

இப்போது கூட நிதானமாக தேடிப் பார்த்திருந்தால் அவள் நிறுத்திய இடத்தில் இல்லாமல் சற்று தள்ளி நிறுத்தி இருந்த அவள் ஸ்கூட்டி கண்ணில் பட்டிருந்திருக்கும்…………. 10 நிமிடம் புலம்பிக் கொண்டிருந்தவள்…… தன் தாய் சற்றுத் தள்ளி நிற்பதை உணர்ந்து………….

”அம்மா என்ன திட்டப் போறாங்களோ???” என்றபடி அவள் அருகில் பயந்த விழிகளாய்ப் போக

“பைக்கை எடுடி……. போகலாம்……… இங்க நிறுத்திட்டு அங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்ற போதுதான் கவனம் அன்னையின் அருகில் இருந்த தன் வண்டியின் மேல் போக

“ஹப்பா…….” என்று இடுப்பில் கைவைத்தபடி மூச்சை இழுத்து விட்டாள் தீக்‌ஷா…….

“பார்த்துடி அப்டியே மூச்சு நின்ற போகுது………….ஏன் இப்படி பெரு மூச்சு விடுற” என்ற தாயிடம்

”அதெல்லாம் அவ்ளோ சீக்கிரத்துல நிற்காது………” என்றபடியே

“நான் அங்கதான நிறுத்தினேன் …………. இங்க எப்படி வந்துச்சு……..” என்று யோசித்தபடியே பைக்கை ஆராய்ந்தவள்…….

“அம்மா” என்று அலற

“என்னாச்சு………. ஏன் இந்தக் கத்து கத்துற” என்று முறைக்க

”இங்க பாருங்க அம்மா…….. வண்டில கீறல் விழுந்திருக்கு…….” என்ற போது கண்களில் கண்ணீரே வந்து விட…………..

“எவன் இங்க வாட்ச் மேன்……” என்று வாட்ச்மேனோடு சண்டை போட நகர்ந்தவளை ஜெயந்தி இழுத்து பிடித்து கிளப்பினாள்.

“சரி விடு சர்வீஸ் பண்ணிக்கலாம்…………. அதுக்கு எதுக்கு கண்ணீர வேஸ்ட் பண்ற……” என்று மகளின் கண்ணிரை அப்போது நிறுத்திய ஜெயந்தியை மட்டும் அல்ல தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒரு நாள் கண்ணீர்க் கடலில் மிதக்க வைத்தாள் தீக்‌ஷா…………..

தாயே ஒன்றும் சொல்லாமல் விட……….. ஓரளவு சமாதானமானவள்……

“அம்மா…….. நீங்க திட்டியே என்னை கொல்லப் போறீங்கனு நினைத்தால்……………… ஹ்ம்ம்ம்ம்ம்…… பணக்கார சம்பந்தம் கிடைத்த குஷி…………… இன்னைக்கு குஷியா இருக்கீங்க……… ஆனா…………… அந்த வீட்ல இருக்கிற விருமாண்டி……….. நம்மள நிம்மதியா விட மாட்டான்னுதான் நினைக்கிறேன்………. நம்ம கூட சம்பந்தம் வச்சுக்கிறதுக்கு கேவலமா இருக்காம் அய்யாவுக்கு…………. அவன நம்ம வீட்டு பக்கமெல்லாம் வந்துறச் சொல்லிறாதீங்க………… எனக்கு வர்ற கடுப்புக்கு” என்ற போதே

“தீக்‌ஷா………….. அந்தத் தம்பிய மரியாதை எல்லாம் இப்டி பேசக் கூடாது…….. அப்புறம் பொண்ணை எப்டி வளர்த்து வச்சிருக்காங்கனு பேச்சு வரப் போகுது” என்று விஜய் சொன்ன வார்த்தைகளை அவள் தாயும் சொல்லி வைக்க…………

அவள் பிங்கி ரோட்டில் செல்ல வில்லை…….. தன் எஜமானி தீக்‌ஷாவின் கோபத்துக்கு ஏற்ப பறந்தது……………

--------------------

அடுத்த ஞாயிற்றுக் கிழமை………….. அதிகாலை???? 10 மணி ………… ஆம் தூங்கிக் கொண்டிருந்த தீக்சாவுக்குக்கு அது அதிகாலைதான்..……………

ஹாலில் பேச்சு அரவம் கேட்க………. தூக்கம் கலைந்தாள்…..

அது அந்த குவார்ட்டர்ஸில் இருக்கும் தீக்‌ஷாவின் விளையாட்டுத் தோழர்களின் குரல்

“அக்கா எழுந்துட்டாங்களா……….” என்று அதில் கொஞ்சம் வளர்ந்த சிறுவன் கையில் கிரிக்கெட் பேட்டொடு கேட்க

”வாங்கடா…….. உங்களை எல்லாம் திட்டக் கூடாது…… எருமை மாடு மாதிரி வளர்ந்தும் இன்னும் உங்க கூட விளையாண்டுட்டு இருக்காள்ள அவளச் சொல்லனும்…… மகராணி இன்னும் எழலை…… எழுந்து வந்தா வரச் சொல்றேன்” என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள் ஜெயந்தி……..

அவர்களின் குரல் கேட்ட போதே விழித்துவிட்டதால் ……….. அங்கிருந்தபடியே

“டேய் சிவா…….. அக்கா இன்னைக்கு ஆபிஸ் போறேண்டா……….. விளையாட வர முடியாது” என்று தனது அறையில் இருந்து சொல்லிய தீக்‌ஷா……. கட்டிலை விட்டு இறங்கியும் இருந்தாள்………..

முடியை கிளிப் கொண்டு நிறுத்தியவள்………… கையில் பேஸ்ட் வைத்த பிரஷோடு வெளியே வர…

அவள் தாய்…..

“அம்மையார் 10 மணிக்கு எழுந்து……… எத்தனை மணிக்கு ஆபிஸ் போக” என்று கையில் பிடித்த தோசைக் கரண்டியோடு கேட்க

”எத்தனை தடவ சொல்றது………. எப்போ வேண்டும் என்றாலும் போகலாம்……….. வீட்டில் கூட வேலையை எடுத்து வந்து செய்யலாம்னு……… ஒவ்வொரு முறையும் சொல்லிட்டே இருக்கணுமா” என்று கேட்க”

”என்னவோ போ…… உனக்கு ஏத்த வேலைதான்…….. இங்கதான் அடக்க முடியல……. வர்றத போறதை கூட கேக்க ஆளிள்ளாம அங்கேயும் ஆடுற…… எந்த மகராசன் வரப் போறானோ………. உன்னை அடக்க…..” என்று உள்ளே போக

தாயின் சுப்ரபாதத்தில் எரிச்சல் ஆனவள்….

“ப்ச்ச்….. எவனும் என்னை அடக்க முடியாது…… அன்புக்கு மட்டும் தான் இந்த தீக்‌ஷா அடங்குவா…..” என்று உதட்டைச் சுழித்தபடி தன் அன்னைக்கு சொல்லியவள்……….. இப்போது

”நான் தான் அவனை அடக்கி வைப்பேன்….” என்று வெளியே சொல்லாமல் தன் மனதுக்குள் மட்டும் சொல்லிக் கொண்டாள்…..

இவர்களின் பேச்சையே கண்டு கொள்ளாமல் தோசையையே கவனமாகக் உண்டு கொண்டிருந்த தன் தந்தையிடம் அமர்ந்து

“அப்பா……….. உங்களுக்கு வேற ஒரு பொண்ண பார்த்து நானே மேரேஜ் பண்ணி வைக்கிறேன் பா…… எனக்கு இந்த அம்மா போரடிச்சு போச்சுப்பா……….. அம்மா கொடுமை பண்றாங்கனு வெளில கூட புலம்ப முடியல……… சித்தி கொடுமைனா……… தைரியமா வெளில சொல்லலாம்ல… அதுல ஒரு லாஜிக் இருக்கும்…..” என்ற மகளிடம்

”அப்டியாமா உன்னை உன் அம்மா டார்ச்சர் பண்றா……….”. என்று அப்பாவியாய்க் கேட்டார் வைத்தீஸ்வரன்….

“என்ன விடுங்கப்பா…………. நான் கூட இன்னொரு வீட்டுக்கு போயிருவேன்……… ஆனா நீங்கதான் பாவம்….. ஆயுள் முழுக்க…….. கஷ்டப் படுவீங்க… அதுதான் மகளா ஒரு நல்ல காரியம் பண்ணுவோம்னு” பாவமாய் இழுத்தவளிடம்

அவளின் பாவனையில் சிரித்த வைத்திஸ்வரன்……..

“நல்லாத்தான் இருக்கு………. ஆனா உன் அப்பாவை உன் அம்மா விட்ருவாளா” என்ன என்றபோதே

“ஆமா இவரு பெரிய மன்மதரு… இவர விடாம பிடிச்சு வச்சுருக்காங்க….. இவருக்கெல்லாம் நானே அதிகம்” என்று நொடித்த மனைவியிடம்

“ஏன் எனக்கென்னடி குறைச்சல்” என்று அவரும் ஆரம்பிக்க………

தன் மீதான தாயின் சுப்ரபாதத்தை தந்தையை நோக்கி திருப்பி விட்ட நிம்மதியில் நம் நாயகி………. அருகில் இருந்த வாஷ் பேசினில் நின்று பல் துலக்க ஆரம்பிக்க போக

ஜெயந்தி வைஜெயந்தி ஆனாள்

“தீக்‌ஷா….எத்தனை தடவை சொல்லு….. அறிவே வராதா உனக்கு……….. அப்பா சாப்டுட்டு இருக்காரு……. ஒழுங்கா உள்ள போய் பாத்ரும்ல போய் ப்ரஷ் பண்ணு” என்று சொல்ல

“போங்கம்மா” என்று அலட்சியமாக தன் வேலையைத் தொடர ஆரம்பிக்க

”தோசைக் கரண்டிதாண்டி வச்சுருக்கேன்…. கால்ல இழுத்து விட்ருவேன்………..” என்று மிரட்ட

தீக்‌ஷாவுக்கு தன் தாய் தோசைக் கரண்டியைக் காண்பித்தாலே கொஞ்சம் அலர்ஜி……. சிறு வயதில் இரண்டு முறை சூடு வாங்கி இருக்கிறாள்…… பயம் வராமல் இருக்குமா…….. அதுவும் அந்த வடுவே இப்போதுதான் மறைந்திருக்கிறது…. மீண்டும் சூடு வாங்கி அனுபவிப்பாளா என்ன……

“செல்லம்…….. .இப்டி சொல்ல வேண்டிய முறைல பாசமா சொன்னா போக மாட்டேன் என்றபடி” தனது அறைக்கு செல்ல எத்தனிக்க……. அப்போது அழைப்பு மணி ஒலிக்க வாயில் பிரஷ்ஷை வைத்தபடி கதவை நோக்கிச் சென்றாள்.

“தீக்‌ஷா நைட்டிய இறக்கிவிட்டுட்டு போடி’ என்ற ஜெயந்தி சொன்ன போது …… கைலி போல் ஏற்றிக் கட்டியிருந்த நைட்டியை இறக்கி விட்டபடி….. கூடவே முன்னும் பின்னும் இழுத்து சரியாக ஆக்கியவள்……

“எங்க அம்மா…… உங்க அம்மா உங்களை வளர்த்த விதத்தை விட…. என்னை நல்லாத்தான் வளர்த்திருக்காங்க” என்று ஜெயந்தியையே மறைமுகமாக பெருமையாகச் சொல்ல

அவள் சொன்ன பாவனையில் ஜெயந்தியின் முகம் பெருமிதத்தில் பூரித்தது……

தன் தாயைக் கவிழ்த்த புன்னகையோடு…… கதவைத் திறந்தாள் தீக்‌ஷா

திறந்தவளின் விழிகள்……. அதிர்ச்சியில் இன்னும் பெரியதாய் விரிந்து திகைத்து விழிக்க