அன்பே நீ இன்றி-45

அத்தியாயம்:45

அடுத்த 2 நாட்களிலும் அதேபோல் விஜய்யின் தூக்கம் தொடர….. அதிலும் அவன் உணராமலே எப்படி அவன் தூங்குகிறான் என்பது கூட அவனுக்கு ஆச்சரியம் இல்லை… அருகில் இருந்த படுக்கையில் சென்று உறங்குவதைக் கூட உணர முடியாத அளவிற்கு தூக்கம் நம்மை ஆட்கொள்கிறதா என்பதுதான் அவன் ஆச்சரியம்….

அன்று ராதா இரவுச் சாப்பாடு கொடுக்கும் போது………….ஏனோ பசிக்காமல் இருப்பது போல தோன்ற மறுத்தவன்….. அப்படியே மனைவியின் அருகில் தலை சாய… பாலையாவது குடிக்குமாறு….. ராதா கட்டாயப்படுத்த ஆரம்பித்தாள்…

ஒரு கட்டத்தில் விஜய் அவளின் கட்டாயம் தாங்காமல் வாங்கப் போக… ராதாவின் கை லேசாய் ஆடியது…..

தமக்கையை யோசனையோடு பார்க்க… அவன் பார்வையின் தீர்க்கம் தாங்க முடியாமல்…………ராதாவின் கண்களில் நீர் வழிய… விஜய்க்கு அப்போதுதான் புரிந்தது…. தன்னை மறந்த தூக்கத்தின் காரணம்…

விஜய் கோபமெல்லாம் படவில்லை…………… கையில் வைத்திருந்த டம்ளரையே வெறித்துப் பார்த்தவன்……….

ராதாவின் கைகளில் மீண்டும் கொடுத்தபடி…

“ராதா………. உன் அண்ணன்…………. அவன் பொண்டாட்டி பக்கத்தில் இப்படி பைத்தியக்காரன் மாதிரி உட்கார்ந்திருக்கானேனு பார்க்கிறியா….. இது அவ கண் விழிக்கிற நொடிக்காக மட்டும் இல்லம்மா…… ஒருவேளை…. நான் கண் மூடி இருக்கிற நேரத்தில் என்னை விட்டு போய்ருவாளானு கூட……………என்று அவன் முடிக்கவில்லை…………

வார்த்தைகளை முடிக்க விடாமல்… ராதா அவனின் வாயை……கைகளால் மறித்தாள்…..

“நம்ம தீக்ஷாவுக்கு ஒண்ணும் ஆகாதுண்ணா….” என்று கலங்கிய விழிகளாய்ச் சொல்ல……