அன்பே நீ இன்றி-44

அத்தியாயம் 44:

காத்தமுத்துவும், முருகேசனும்………… சொல்லி முடிக்கும் போது விஜய்…. முற்றிலும் நிலைகுலைந்து போய் தொய்ந்து கீழேயே அமர்ந்து விட்டான்… தீனாவும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்க…. யுகி மட்டும் தாங்க முடியாமல்…………… இருவரையும் பந்தாடி விட்டான்….

முருகேசனும்… காத்தமுத்து இருவருமே அதை எல்லாம் அமைதியாக ஏற்றுக் கொண்டனர்… யுகியின் தாக்குதலை எல்லாம்….. ஒருகட்டத்தில் யுகி தங்கள் ஆட்களிடம் சொல்லி அவர்களை அங்கிருந்து கொண்டு போகச் சொல்ல… இருவரும் விஜய்யிடம் கெஞ்சினர்….

”தம்பி…. நாங்க தங்கச்சி கண்ணு முழிக்கிற வரை இங்கதான் இருப்போம்….எங்களால போக முடியாது….. சொல்லுங்க….எங்களாலதான் அதுக்கு இப்படி ஒரு நிலைமை….அதை மறுபடியும் பழைய நிலைமையில பார்க்கிற வரை இங்கிருந்து போக மாட்டோம்….. நாங்க ரவுடிதான் தம்பி… கூலிக்கு மனசாட்சிய விக்கிறவங்க தான்….. ஆனா எங்களையும் மனுசனா பார்த்துச்சு தம்பி…… எங்கள மட்டும் இங்க இருந்து போகச் சொல்லிறாதீங்க தம்பி”

விஜய்……… யாருக்கும் பதில் சொல்லாமல்… எதையும் தடுக்காமல்…. அமைதியாக இருந்தான்…. சிலை போல

தீனாதான் யுகியை சமாதானப் படுத்தி அங்கிருந்தி கூட்டிச் செல்ல…. விஜய் யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் தன் மனைவியை நாடிச் சென்றான்…..

அவனுக்கு இளமாறனின் மேல் எல்லாம் கோபம் இல்லை…. கோபம் இல்லை என்பதை விட……….. கோபம் வர வில்லை…. ஆனால் இளமாறன் செய்த துரோகத்துக்கு சரியான தண்டனைதான் என்று சமாதானமும் அவனுக்குள் வர வில்லை…. அவன் மட்டுமா அந்த விமானத்தில் போனான்… அவனோடு பயணித்த ஒவ்வொரு பயணீயும் இவனைப் போல துரோகிகளா……. அந்த நேரத்திலும் அவன் மனம் இவ்வாறெல்லாம் யோசிக்க…..

அதுமட்டுமில்லாமல்…………… தீக்ஷாவின் இந்த நிலைக்கு காரணம்.. அவனால் வேற