அன்பே நீ இன்றி-42

அத்தியாயம் 42:

விஜய் தன் கையில் வைத்திருந்த… சிறு பெட்டியை தீனாவிடம் காண்பித்தான்…. இன்னைக்கு அவ பிறந்த நாள்டா….. என்ற போதே அவன் குரல் உடைய…. தீனா…. சமாதானப்படுத்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தான்….

விஜய் தொடர்ந்தான்…

”பேசிட்டே இருப்பாடா….ஒரு நொடி வாயை மூட மாட்டாள் தெரியுமா….. ரொம்ப விளையாட்டுத்தனம்… ஆனால் அவளுக்கு தவறுனு தெரிந்தால் எதிர்த்து கேட்காமல் விட மாட்டாள்…. ஆர்த்திய கடத்தி உன்னை மிரட்டினப்ப… அவ பண்ணின ஆர்ப்பாட்டம் இருக்கே….. " – அன்றைய நினைவுகளின் தாக்கத்தோடு தொடர்ந்தான்

“எனக்கு பயமா இருக்குடா…. கத்தி எடுத்தவனுக்கு கத்தியிலதான் சாவுன்னு கேள்விப்பட்டிருக்கேன்…. அது போல… எனக்கும் நடந்திடுமோன்னு பயமா இருக்கு தீனா…. “ என்றவன்…

“இப்போ இந்தப் பொண்ணைக் கூட அவங்க வீட்ல தேடுவாங்கள்ள தீனா…” விஜய் விழிகள்…. அலைபாய்ந்தன…

“சரிடா….நான் கிளம்புறேன்…’ என்று எழப் போனவனை நிறுத்திய தீனா…

“எங்க போற” என்று கேள்வியினை கேட்க…

“ப்ச்ச்……..எங்கேயோ…. தெருத் தெருவா தேடப் போறேன்….. அவ கிடைத்தால் விஜய்யா வருவேன்… இல்லை……… பொணமா வருவேன்…. என் உயிரே அவ தாண்டா….. இந்த நிமிசம் என் இதயம் துடிக்குதுனா… அப்போ அவளுக்கும் ஒண்ணும் ஆகி இருக்காது…. “ என்றவன் தன் நண்பனிடம்…

“ஒண்ணும் ஆகி இருக்காதுலடா…” நப்பாசையாய் வார்த்தைகள் விழுந்தன….