அன்பே நீ இன்றி-41

அத்தியாயம் 41:

ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்த இளமாறன்….. கையில் இருந்த ப்ரீஃப்கேஸில்… விஜய்யின் ப்ளான் மற்றும் இதர தகவல்களை பார்த்தபடி…. மனமெங்கும் வெற்றி எக்காளத்துடன் அமர்ந்திருந்தான்… விஜய்யின் திட்டமெல்லாம்…. இனி இவன் திட்டமே….. அக்ரிமெண்ட்டில்… இவனை 2 வது பார்ட்னராக மட்டுமே விஜய் போட்டிருக்க…. விஜய் வருவதற்குள்….

வருவதற்குள் என்ன வருவதற்குள்…. வரவே போவதில்லை…. தன் மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழவே அவனுக்கு நேரம் போதாது…… அவனாவது வருவதாவது….

அக்ரிமெண்ட்டை தன் பேருக்கு முழுவதுமாக மாற்ற முடியாது…. ஏனெனில் விஜய் பில்டர்ஸ் பேரை வைத்துதான் அங்கு போகவே முடியும்…. பெரும்பான்மையான லாபங்கள் இவன் வசம் கையகப்படுத்துவது போல மட்டுமே அகிரிமெண்ட்டை மாற்ற முடியும்… எப்படியோ…. தன் கையில் தான் இனி அந்த ப்ராஜெக்ட்….

அதே சந்தோஷத்தோடு.. வெளிநாட்டில் இருக்கும் தங்கைக்கு போன் செய்ய….

”சொல்லுங்கண்ணா” எரிச்சலோடு பதில் வந்தது…. இளமதியிடமிருந்து….

“இளமதி… உங்க அண்ணாக்கு அந்த பெரிய ப்ராஜெக்ட் கிடைக்கப் போகுது….” என்றவனின் வார்த்தைகள் அவனின் தங்கைக்கும் சந்தோஷம் தந்தாலும்… அதை எல்லாம் விட்டவள்…

“அதெல்லாம் விடுங்க அண்ணா… அண்ணியோட சேர்ந்து வாழவே முடியாதா…. டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிட்டாங்கனு… அம்மாவும் அப்பாவும் ரொம்ப ஃபீல் பண்றாங்கண்ணா….” என்று தன் வருத்தத்தை வெளியிட…

””நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பேசுற…..” என்றவனின் குரலில் இருந்த எரிச்சலும் கோபமும் அவளைச் சென்றடைய… அவளும் அதே கோபத்தில் பேச ஆரம்பித்தாள்….