அன்பே நீ இன்றி-40

அத்தியாயம்:40

மங்கிய இரவு விளக்கின் ஒளியில்…… அந்த அறை நிரம்பியிருக்க….. ஏதோ சப்தம் கேட்க…. தீக்ஷா அசைந்தாள்… கண் விழிக்காமலே கணவனின் அருகாமையைத் தேட…. அவன் அருகில் இல்லை என்பதை உணர்ந்த தீக்ஷா…. சட்டென்று வேகமாய் எழுந்து உட்கார்ந்தவளின் காதுகளில்… குளியலறையில் தண்ணீர் விழும் சப்தம் கேட்க…. மணியைப் பார்த்தாள்… அதுவோ 3 என்று காட்டியது….

“இந்த நேரத்தில் ஏன் குளிக்கிறார்..” என்றபடி யோசனையுடன் மீண்டும் படுத்தவள்…. கணவன் வெளியில் வரும் சத்தம் கேட்டு அவன் வரும் திசை நோக்கி பார்த்தபடி இருக்க,… அவனோ விளக்கையே போடாமல்…. மொபைல் விளக்கின் ஒளியுடன் ஏதோ செய்து கொண்டிருந்தான்…

எழுந்த தீக்ஷா விளக்கைப் போட்டபடியே….

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க அத்தான்” என்று அவனை நோக்கி கேட்க…

“உன்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னுதானே லைட் போடாமல் ரெடி ஆகிட்டு இருக்கேன்…. நீ தூங்கு “ என்றபடி தன் வேலையில் கவனமாக இருக்க…

“என்னது ரெடி ஆகிட்டு இருக்கீங்களா…. எங்க…. எதுக்கு… இந்த நேரத்திலயா” என்றவளின் பட பட கேள்விளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல்…

“வந்து சொல்கிறேன்….” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு தன் அலுவலக அறையை நோக்கிச் செல்ல… இவளும் வேகமாய் அவன் பின்னே போக எத்தனிக்க… ஏனோ தலை சுற்றுவது போல் இருக்க…. அவன் பின்னே போகாமல் அப்படியே அமர்ந்து விட்டாள்…

இத்தனை சீக்கிரமாக எழுந்ததுதான் தன் தலை சுற்றலுக்கு காரணம் போல் என்று தவறாக கணித்தவள்… தன்னை ஆசுவாசப்படுத்தியபடி….குளியலறைக்குள் நுழைந்தாள்…

குளியலறைக்குள் நுழைந்த வேகத்திலேயே வெளியே வந்தவள்… அடுத்து கணவனின் முன் தான் நின்றாள்…

“எங்கத்தான் கிளம்ப்றீங்க” என்றபடி … அவன் எதிரில் அமர்ந்தாள்…

“ஆஃபிஸ்க்கு” என்று வார்த்தைகள் தான் வந்தன… பார்வை கோப்புகளில் இருந்த்து…. அவனையே பார்த்தபடி 10 நிமிடம் இருந்தவளுக்கு… அதுவே அதிகமாய்ப் பட…

அடுத்து கேட்டாள்

“ஏன் இவ்ளோ சீக்கிரம்… ” என்று அடுத்த கேள்வியைக் கேட்க….

“பேசாமல் இருக்கியா….” என்றவன்.. அடுத்த நொடியே

“அது முடியாது உன்னால….. அதனால… ரூமுக்கு போறியா…. எனக்கு வேலை இருக்கு…” குரலில் கெஞ்சல் எல்லாம் இல்லை…. கண்டிப்புதான் இருந்தது…..

வாயே திறக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்…. சாதனைதான் அவளைப் பொறுத்தவரை….

விஜய் அவ்வப்போது எழுந்து அலமாரியில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஃபைல்களை எல்லாம் எடுத்தபோது…. உதவி செய்ய எழுந்தவளைக் கூட வேண்டாம் என்று சொல்லி விட…

இவ்வளவு தீவிரம் என்றால் அது எந்த பிராஜெக்ட் என்றும் தீக்ஷாவுக்கும் ஓரளவு புரிய… தன் சாதனையின் கால அளவை நீட்டினாள்….

ஆனாலும் அவளால் சும்மா இருக்க முடியவில்லை….

விஜய்யின் மொபைலை எடுத்து நோண்டியபடி இருந்தவள்… அதில் பாடலை ஒலிக்க விட….

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு

பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது

லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா

சொன்னால் போதுமா தாகம் தீருமா

விஜய் நிமிர்ந்து வழக்கமான முறைப்பை வீச..

“பேசக் கூடாதுன்னு தானே சொன்னீங்க… பாட்டு கேட்கலாம்ல” என்று சைகையால் சொல்ல…

விஜய் பதிலாய் வேறென்ன கிடைத்திருக்கும் அவளுக்கு…. அவன் கண்களின் முறைப்புதான்….

அதையெல்லாம் லட்சியம் செய்பவளா அவன் மனைவி…. பாடலை ஒலிக்க விட

நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது

நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது

சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ

சொல்லிச் சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ

தொடு தொடு தொடாமல் நாவின் மேனி நாளெல்லாம் மீட்டுதே

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

நீயும் அச்சம் விடு நூறு முத்தம் இடு

மீதம் மிச்சம் எடு மேலும் சொல்லிக்கொடு

அந்திப்பகல் இரவு சிந்தை துடிக்குது

அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது

இதோ இதோ உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது…………….

பாடல் தன் வேலையைக் காட்டியது….

விஜய்யின் கவனம் அந்தப் பாடல் ஆரம்பித்தபோது எங்கு இருந்ததோ அதே வரியில் இருக்க…. ஃபைலை மூடி வைத்தவன் நிமிர்ந்தான்….

“என்ன” என்று கண்களால் சமிக்ஞை காட்டி கேட்க… விஜய் பேச ஆரம்பித்தான்…

“இந்த பாட்டு முடிந்தவுடன் ஹீரோ கையால ஹீரோயின் கன்னத்தில செம்ம அடி கிடைக்கும் தெரியுமா…. வாங்க ரெடியா” நக்கலாகத்தான் கேட்டான்………

தீக்ஷா தலை சாய்ந்து அவன் முன் கண் சிமிட்டினாள்…

”இது அந்த சாங் இல்லத்தான்…. அது வேற சாங்… தீக்ஷாவா கொக்கா… அதெல்லாம் போட. இந்த பாட்டு முடிந்தவுடனே ஹீரோ ஹீரோயின தூக்கிட்டு போற மாதிரிதான் சீன் வரும்…. தூக்க ரெடியா… நான் ரெடிப்பா”” என்றவளின் வார்த்தைகளில் விஜய் தான் அப்பாவியாய் மாறிப் போக… பேந்த பேந்த விழித்தான்…

”தேவையா இந்தர்….” .என்று சிரிக்க

பல்லைக் கடித்த விஜய்…

“தயவு செய்து கிளம்புறியா” என்று தன் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி பேச

“உங்களுக்காக உங்க மனைவி ரொமாண்டிக்கா சாங் போட்டால்….… கெளம்புறியானு கேட்கறீங்க… நான் ஏதாவது பேசினேனா… நீங்கதானே ஆரம்பிச்சீங்க… கான்சென்ட்ரேஷன் வேண்டும் பாஸ்…. நான்தானே பாட்டு கேட்டுட்டு இருக்கேன்… நீங்க உங்க ஃபைலை பார்க்க வேண்டியதுதானே… நீங்க ஏன் பாட்டைக் கேட்கறீங்க” என்று ஒன்றுமே இவள் பண்ணாதது போல் கேட்க..

விருமாண்டியாகவே மாறி விட்டான் விஜய்….

“உன்னை” என்று கோபமாய் எழ…. அடுத்த பாடலை ஒலிக்க விட்டாள்..

தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்

நீதானே என் காலைகளின் சூர்யோதயம்

தாங்காமல் பெண் நிலை தாலாட்டு கேட்கிறேன்

நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்

ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்

நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்

கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்

கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

விஜய்… இப்போது இந்தராய் மாறி இருக்க வேண்டும்தான்…. அந்த உருகலான பாடலில்…. இன்று இருக்கும் சூழ்நிலையில்….அவனால் விருமாண்டியாகவும் மாற முடியாது… இந்தராகவும் மாற முடியாது…. ஏனெனில் அதற்கெல்லாம் அவனுக்கு நேரம் இல்லை….. இந்த கோப்புகளை எல்லாம் சரி பார்த்து…. முடித்து… இன்னும் நிறைய வேலைகள் வரிசையில் இருக்க…. அவன் நிலை தெரியாமல் அவன் மனைவி விளையாண்டு கொண்டிருந்தாள்…..

விஜய் அவளிடம் வழக்கடித்தால் அவனுக்குத்தான் தோல்வி கிடைக்கும்…. எனவே மௌனமாய்…. தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்..

பூந்தென்றலே நீ பாடி வா

பொன் மேடையில் பூ சூட வா

ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது

நீ பாடினால் பூவானது தேனானது

நீ வந்து காவியம் நிஜமாகி போனது

வார்தைகளில் தீராதது நான் கண்டது