top of page

அன்பே… நீ இன்றி??? 4

அத்தியாயம் 4:

பார்வதி வீட்டின் மொட்டை மாடியில்….. சாரகேஷ் மற்றும் தீக்‌ஷா நின்று கொண்டிருந்தனர்…… காற்றில் பறந்த தன் கேசத்தை சரி செய்தவளாய் வெட்ட வெளியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்….

இப்போதெல்லாம் தீக்‌ஷா இப்படித்தான் இருக்கிறாள்……… திடிரென்று தோன்றும் வெறுமை…… மனதை சூறாவளியாய் சுழற்றும் போது……… ஒன்று மருந்துகளின் துணை வேண்டும்………… இல்லை வேடிக்கை பார்க்கிறேன் என்ற பெயரில் வெளியில் மனதை அலைபாய விடுவாள்…….. ஏன் இந்த வெறுமை?…………. எதையோ அவள் இழந்த உணர்வு?…………. அதை தேடும் அவள் மனம்?………… பெரும்பாலும் தான் இழந்தது என்ன என்பதுதான் அவள் யோசனையில் இருக்கும்…………. இதனாலேயே அவர்கள் வீட்டில் அவளைத் தனியே விடுவதில்லை………… அவளும் இருக்க விரும்ப வில்லை………. பெரும்பாலும் சுனந்தாதான் அவள் தனிமையைப் போக்குவாள்…………..

இந்த தனிமைக்கு பயந்துதான் அவள் வேலைக்குச் செல்ல வீட்டில் அனுமதி கேட்டதே………… அவளுக்கு விடையாக விஜய் அலுவலகம் அவளது வீட்டில் அவள் பெற்றோரால் வழங்கப் பட……… ஆனால் விஜய்யுடன் போக விருப்பமில்லாமல்….. தனக்குத் தெரிந்த தொழிலான சாஃப்ட்வேர் பக்கமே செல்கிறேன் என்று இவள் போர்க்கொடி தூக்க……….. விஜய் பிடிவாதமாக மறுத்துவிட்டான்………… அவன் யார் தன் விசயத்தில் முடிவெடுக்க……. என்று இவள் போட்ட கத்தல்கள் எல்லாம் காற்றோடு மட்டுமே கலந்தது………… தன் அலுவலகம் இல்லை வீடு என்று….. அவள் முடிவெடுக்க இரண்டு வாய்ப்புகளை மட்டுமே அவளுக்கு அவன் கொடுக்க……….. இப்போது விஜய்யோடு அவன் புதிதாக தொடங்கிய அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறாள்……….. அதுவும் அவள் அண்ணன் பெயரில் தொடங்கியிருந்ததால் மட்டுமே…….

வீட்டில் அடைந்து கிடைப்பதற்கு தினமும் வெளியில் போகலாமே என்று அவன் அலுவலகம் அவனோடே செல்கிறாள்………… ஆனாலும் விஜய்யுடன் போக விருப்பம் இல்லைதான்…….

சுனந்தாவின் முதல் பிறந்த நாளில் அவனிடம் அவள் பெற்ற அனுபவம் கொஞ்சம் தயக்கம் தந்தது……… சுனந்தாவின் முதல் பிறந்த நாளுக்குப் பிறகு அவன் வீட்டுக்கே அவள் செல்ல வில்லை………….. ??????????? ….. ……….. அப்படி இருக்கும் போது அவனோடு தனியே அலுவலகம் செல்ல முதலில் யோசித்தாள்…… பின்

அவன் மேல் கோபம் இருந்த போதும்…………..அவனோடு செல்ல முடிவெடுத்தாள்…………. அவனும் இவளிடம் பேசுவதில்லைதான்………… அவன் எப்போதும் போல் இப்போதும் இவளிடம் பேச்சை வளர்ப்பதில்லை தான்………. முதலில் எல்லாம் இவள்தான் தன் குறும்பில் அவனிடம் வலியப் போய் வம்பிழுப்பாள்………… இப்போது இவளும் தன் குறும்பை எல்லாம் அவனிடம் காட்டுவதில்லை என்பதால் பிரச்சனை எதுவும் இல்லைதான்……….. ஆனாலும் அலுவலகத்தில் வேண்டுமென்றே அவனை ஏதாவது செய்து எரிச்சல் பட வைப்பாள்…….. அப்போதாவது வேறு வேலைக்கு அனுப்புவான் என்று………… அவன் தன் விசயங்களில் முடிவெடுப்பதே அவனின் மீதான தற்போதைய அவளின் கோபம்………. அதை அவள் வீட்டில் புரிந்து கொள்ளாமல் விஜய்….. விஜய்…. என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்…………..

சாரகேஷ் அவளையே மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க………

தன் யோசனையில் உளன்ற தீக்‌ஷா ……. சாரகேஷ் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதினை உணர்ந்து ……….. யோசனைகளை விட்டு

நிமிர்ந்து அவனைப் பார்க்க….. அவன் பார்வையைக் கண்ட அடுத்த நொடியே….. அதில் தெரிந்த சோகம்….. தன்னை பற்றி பார்வதி சொல்லி விட்டாள் என்பதை விளக்க

”என்ன டாக்டர் சார்………. உங்க கிட்ட வர்ற பேசண்ட்ஸ் கிட்டலாம் இந்த லுக் தானா……………” என்று சிரிக்க

உதடுகள் மென்மையாக விரிந்தன சாரகேசிற்கு….

“ஹ்ம்ம்…. தைரியமா பேசுகிறாய்…. குட்….”. என்றவனிடம்…..

“ஏன்……… என் தைரியத்திற்கு என்ன குறைச்சல்…….. அப்போ கொஞ்சம் அமைதி தான்……. இப்போதான் வாய் ஜாஸ்தி ஆகி விட்டது ’பாரு’ அண்ணா………. என்றவள் தன் தைரியத்தை காட்டும் முயற்சியில்…… சகஜமானாள் தீக்‌ஷா சற்று முன் இருந்த நிலை மாறி……..

“இந்த வாயடிக்கிற தீக்‌ஷாகிட்ட மட்டும் அன்னைக்கு நீங்க லெட்டர் கொடுத்திருந்தீங்க………. நொந்து போயிருப்பீங்க……… என்று சொன்னவள்……… தானே

“இந்த பேச்சு அப்போ பேசி இருந்தேனா ஒருவேளை என்னைப் பிடிக்காம போயிருந்திருக்குமோ” என்று சிரித்தபடியே சொல்ல……….

“அப்போ நீ அமைதிதானே தீக்‌ஷா” என்றவனிடம்

“அப்படியும் சொல்லலாம்….. காலேஜ் வந்த பின்னால்……… அதுவும் சென்னை………. பெரிய காலேஜ்……….. கொஞ்சம் என்னை மாத்திக்க ட்ரை பண்ணினேன்………. அது அப்டியே பழகிடுச்சு………..ஆனாலும் நான் எப்பொதுமே அமைதி கிடையாது…….. என் அம்மாகிட்ட மட்டும் கொஞ்சம் அதிகமா பேசுவேன்….. ஆனா பாருங்க அவங்களே திருச்சில இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன்… இப்பொதான் ரொம்ப பேசுறேனு அலுத்துகிறாங்க… என்ற போது பார்வதியும் மேலே வந்திருந்தாள்……….

“என்னண்ணா…….. என் ஃப்ரெண்ட் என்ன சொல்றா………… வாய மூடவே மாட்டெங்கிறாளா……. மேடம் ஸ்லோகம்லாம் வச்சிருகாங்க………. என்று பார்வதி சொன்னவுடன் தீக்‌ஷாவை சாரகேஷ் நோக்க

”நானே சொல்றேன் கேளுண்ணா”

“மேடத்தோட மூச்சு நின்னா கூட பேச்சு நிக்காதாம்” என்று முறைத்தபடி சொல்ல தீக்‌ஷா அந்த சுவரில் தன் நகத்தால் சுரண்டிக் கொண்டிருந்தாள்….. அதைப் பார்த்த பார்வதி சிறு சிரிப்புடன்

“இன்னும் இந்த பழக்கத்தை நிறுத்தலையா தீக்‌ஷா…..“ என்றவள் அருகில் இருந்த சிறு குச்சியை எடுத்து கொடுக்க………. தன் பெயரை அதன் உதவியுடன் எழுத ஆரம்பித்தாள் தீக்‌ஷா

”எங்க போனாலும் உன் பேர அங்க பதிக்க ஆரம்பிச்சுருவியே………….” என்று சொன்னவளிடம்

“பின்ன நாம அடையாளத்தை அங்கங்க பதிய வைக்கனும் ’பாரு’………. இது மட்டும் இல்லை………. எனக்கு ஒரு பொருள் பிடிச்சாலும் அதுல என் முத்திரையை வச்சுருவேன்ல….” என்றபடி…….

DEEKSHA V என்று அவளது கை நிறுத்தாமல் இன்னும் தொடர ஆரம்பிக்க

என்னடி வைத்தீஸ்வரனு எழுத போறியா…….. என்ற போது ’V’ யை யோசனையோடு பார்த்தவள்……. அப்பா பேரை எழுத மாட்டேனே……… இன்னைக்கு ஏன் எழுதறேன்….. என்று தனக்குள் யோசித்தவள்….. நீண்ட நாளைக்குப் பிறகு எழுதுகிறேன்……. என்பதால் ஃபுல் நேம் எழுத ஆரம்பிச்சுட்டேன் போல என்று குச்சியைக் கீழே போட்டபடி மீண்டும் அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்

பார்வதி தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்து சிரித்துவிட்டு………

“ஆனா தீக்‌ஷா………. இதெல்லாம் ஓகே…. உன் ஆள் நெஞ்சில உன் பேரை பதிக்காம இருந்தா சரி………. ஒருவேளை உன்னைப் பொண்ணு பார்க்க வந்தவனுக்கு உன்னோட இந்த பழக்கம் தெரிஞ்சு போச்சோ……… அதுனால ஆள் அரண்டடிச்சுட்டு ஓடிப் போய்ட்டானோ…….. யார் பெத்த புள்ள உன்கிட்ட மாட்டப் போகுதோ….” என்றவள்……. இப்போது தீக்‌ஷா அறியாமல் தன் அண்ணனைப் பார்த்து பார்வதி கண் சிமிட்ட

“உதை” என்று சைகையால் தங்கையைப் பத்திரம் காட்டியவன் தீக்‌ஷா பார்க்கும் முன் மாற்றினான்.

“பொண்ணு பார்க்க வந்தவனா……. போடி நல்லா வாயில வந்துரும் எனக்கு… தாத்தோவோட ஃப்ரெண்ட்..... வழியில் வந்த சம்பந்தம்…. எல்லோருக்கும் ஓகேன்னு தோனுச்சு…. பொண்ணெல்லாம் பார்க்க வரலை…. போட்டோ மட்டும் தான் பார்த்தது……….. வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணத் தோணலை…… ஒக்கேனு சொன்னேன்……. அவனா என்கிட்ட பேசுவான்னு பார்த்த……….. பேசவே இல்லை……போடானு நானும் விட்டுட்டேன்……… ஒரே ஒரு நாள் மட்டும் கால் பண்ணினான்…….. அதுவும் நான் அப்புறமா பேசுறேன்………அவன் அம்மா கேட்டா நான் பேசினேனு சொல்லிருனு….. அவ்வளவுதான்……… என் கிட்ட ஏன் பேசலேனு அதுக்கபுறம் தானே தெரிந்தது….. பய புள்ள……வேற யாரையோ லவ் பண்ணியிருக்கு போல…….. என்ன முதலிலே சொல்லி இருக்கலாம்……. லூசுத் தனமா பண்ணிட்டான்… நல்ல வேளை…… இந்த மாதிரி ஒரு ஒரு பையன் என் வாழ்க்கைல வரலேனு சந்தோசம் தான்…… என்றவள்……… ஒருவேளை அவன் அப்படி இன்னொரு பொண்ணை லவ் பண்ணியிருந்திருக்காமல் இருந்தால்…… என்னோட நிலை.. கல்யாணத்துக்கு அப்ப்புறம் தான் தெரிஞ்சிருக்கும் ’பாரு’………. கஷ்டமாகியிருக்கும் அவனோட நிலை……….” என்று சொல்ல………

“உனக்கு ஒண்ணும் ஆகாது தீக்‌ஷா….” என்று பார்வதி சொல்ல

“அத உங்க அண்ணன சொல்லச் சொல்லு பார்க்கலாம்… அவருக்கு தெரியும் என்னோட நிலை..” என்ற போதே……….

சாரகேஷ் மனம் அவளுக்காக பரிதவித்தது…….. ’ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளாண்ட்’………. என்று ஒரு வாய்ப்பு அவளுக்கு இருக்கிறது ஆனால் அது எல்லோருக்குமே செட் ஆகாது என்பதால் மனதோடு மட்டுமே வைத்துக் கொண்டான்……. அவளிடம் சொல்லி அவளைக் குழப்ப விருப்பம் இல்லை அவனுக்கு……………. அதனால் மௌனமாக இருந்தவன்……. பின் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு

“நீ நெக்ஸ்ட் டைம் வரும் போது உன்னோட ரிப்போர்ட்ஸ்லாம் எடுத்துட்டு வா தீக்‌ஷா……. நானும் பார்க்கிறேன்’” என்று தீக்‌ஷாவிடம் சொல்லி வைத்தான்……

“ம்ம்” என்று சொன்னவள்………

“ஆனா அது எங்க கிட்ட இல்லை…….. எல்லாமே விஜய் அத்தான் கிட்டதான் இருக்கும்………. கேட்டு வாங்கித் தருகிறேன்………. “ என்று சொன்னவளுக்கு விஜய் என்ன சொல்வானோ என்று இருக்க

“என்னது உங்ககிட்ட இல்லையா……. படிச்சவங்கதானே நீங்கள்ளாம்……. சாதாரணமா அவன்கிட்ட இருக்குனு சொல்ற” என்று திட்ட ஆரம்பித்தான் சாரகேஷ்

மிரண்டு விழித்த தீக்‌ஷா

“நான் கேட்டேன்…….. ஆனா தரலை………… ஏன் என்ன பிரச்சனை…. “ என்று முழிக்க

“சரி அதை விடு எந்த டாக்டர் கிட்ட பார்க்கிற” என்று கேட்க………. இவளும் சொல்ல…….”

நெற்றியைத் தேய்த்தான் சாரகேஷ்………… சொன்ன அந்த பெண் மருத்துவர் இவர்கள் துறையில் மிகவும் புகழ் பெற்றவர்………… இவனே அவரைப் பார்க்க நினைத்துக் கொண்டிருக்கிறான் ஒரு ரிஸெர்ச் ஆர்ட்டிக்கிளுக்காக……… ஆனால் முடிய வில்லை…………. சாதரணமானவர் இல்லை…. பெரிய இடம் அவர்……. என்பதால் அவனும் சமாதானமானவன்

”சரி நெக்ஸ்ட் டைம் வரும்போது கேட்டு வாங்கிட்டு வா” என்று சொன்னவனிடம்

பார்வதி…..

“ஏன் அண்ணா இவ்ளோ டென்சன் ஆகுற………. “ என்று கேட்க

”பின்ன என்ன பண்ணச் சொல்கிறாய்…………. இந்தக் காலத்தில கூட முட்டாள இருக்கா இவ……… அவனே ஒரு பொறுக்கினு சொல்றா…… அவன் பணக்காரனு வேற சொல்றா……… என்ன ஏதுனு தெரியாம…. அதைப் பார்க்காமல் கூட…… அவன் சொன்னானு நம்பி இவ மெடிசின் எடுத்துட்டு இருப்பாளா…… படிச்சவதானே“ என்றவனிடம் அதே வேகத்தில்

”நான் என் அப்பா அம்மாவை நம்புகிறேன்… வேற யாரையும் இல்ல” என்றாள் பட்டென்று…… பின் தன் நிலை மீண்டவள்…. எங்கோ பார்த்தபடி…. ஆனால் அழுத்தமாக

”விஜய் அத்தானை பொறுக்கினுலாம் சொல்ல முடியாது…… அவர் குணங்கள் எனக்குப் பிடிக்கலை……… என் குணங்கள் அவருக்கு பிடிக்கவில்லை….. அவருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை……. ஒருமுறை…… கொஞ்சம் வரம்பு மீறி பேசினார்தான்……… அதுக்கு நானும் காரணம்தான்……… அவர எதிர்த்து பேசினேன்…… எனக்கெதுக்கு வம்புனு ஒதுங்கிப் போயிருக்கலாம்………… .” என்றவள்… சற்று தணிவாக

“எங்க அண்ணியோட அண்ணன்………. அவரை மரியாதை இல்லாம பேசாதீங்க…….”. நான் கொஞ்சம் கோபம் வந்தா திட்டுவேன்…………. அதுக்கு திட்டும் அவர்கிட்ட வாங்கிருவேன்………. “ என்று சொன்ன தீக்‌ஷாவைப் பார்த்து

“அடிப்பாவி………….. வில்லன் ரேஞ்சுக்கு பேசுன…….. இப்போ இப்டி பேசுற” என்று கேட்க

“வில்லன் எனக்கு மட்டும் தான்……….. அதுனால நான் மட்டும் திட்டுவேன்…” என்று கொஞ்சம் எரிச்சலுடன் சொல்ல

இப்போது சிரித்த சாரகேஷ்…. ”என்ன அத்தான் மேல திடீர் பாசம்” என்ற போது

”ப்ச்ச் பாசம்லாம் இல்லை. நமக்கு பிடிக்காதவங்க எல்லாரும் அடுத்தவங்களுக்கும் பிடிக்காமல் இருக்குமா……. அந்த மாதிரிதான்………. ஆரம்பத்தில இருந்து எனக்கும் அவருக்கும் ஒத்து வரலை……. ஆனா எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு…….. எனக்கும் முதலில் அவங்க குடும்பம் பிடிக்க வில்லை……….. பிறகு பழகிருச்சு………. ஆனா விஜய் மட்டும்…. கடைசி வரை எனக்கும் அவருக்கும் ஆகவே வில்லை.. இப்போ அவர் கூட என் கிட்ட வம்பு வச்சுக்கிறதில்லைதான்…….. பட் எங்க வீட்ல அவர் அதிக உரிமை எடுத்துகிறது பிடிக்க வில்லை….. அந்த கடுப்புதான்….. அதில் ’பாரு’ விடம் கொஞ்சம் அவரைப் பற்றி அதிகமாய்ச் சொல்லி விட்டேன்…………. என்றவள்….

“விஜய் அத்தான் கிட்ட கொஞ்சம் ஒதுங்கி இருந்தாலே போதும் …. பிரச்சனை இல்லை” என்று முடிக்க

“ஏன் உங்க அத்தான் என்ன பூதமா” என்று பயந்தவன் போல பேச

“இல்ல விருமாண்டி விஜய்………..” என்று பதிலுக்கு நக்கலடித்து சொல்ல சூழல் கலகலப்பாகியது அப்போது சாரகேசின் போன் அடிக்க….

“சொல்லு அகல்யா……… யெஸ்…………. நான் இன்னைக்கு நைட் ஷிஃப்ட்” என்றபடி அவன் நகர

“யாரு தெரியுமா போன்ல…….. சார ரூட் விடற ஆள்………. அண்ணா அவகிட்ட இருந்து எஸ் ஆகீட்டே இருக்கான்” என்று பார்வதி சொல்ல

“அப்டியா……….. கூட வேலை பார்க்கிறவங்களா……………”. என்று சாதரணமாய்க் கேட்க

”உனக்கு பொறாமை வரலை” என்று பார்வதி தோழியிடம் போட்டு வாங்க…………

“எனக்கு எதுக்கு பொறாமை வரணும்……… எனக்கு லவ் லெட்டர் கொடுத்தவங்க எல்லோருக்கும் ஆள் இருந்து எனக்கு பொறாமை வரனும்னா…… என்றவள் கைவிரல்களை எண்ணிப் பார்த்து 6 தடவை பொறாமை வந்திருக்க வேண்டும்………. என்று கண்ணடிக்க……

“சத்தியமா தீக்ஷா… உனக்கு வாய் சென்னைல வந்து வளர்ந்துதான் போச்சு….. என்றவளிடம் தீக்‌ஷா

“ஆனா உங்க அண்ணா ஸ்பெஷல் தான்……… பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தானே……….” என்று கிண்டலாய் பேசிய போதே விஜய் அவளை அழைக்க

”இவனுக்கு இருக்கிற அக்கறை இருக்கே…. அதுல அப்டியே மண் அள்ளிப் போடனும்” என்று தோழியின் முன் எதுவும் சொல்லாமல் முணங்கியவளாய் போனை எடுத்து காதில் வைத்து பேசாமலே இருக்க

“எதுக்கு போன் பண்ணிருக்கேனு தெரியும்ல………. பேசாம இருந்தா என்ன அர்த்தம்” – விஜய் எதிர்முனையில் பேச

“போட்டுட்டேனு அர்த்தம்” என்றபடி போனைக் கட் செய்யப் போக

“இரு………. வச்சுராத………….. எங்க இருக்க நீ” என்று கேட்டான் விஜய்….

”பார்வதி வீட்ல…. உங்களுக்கு தெரியாமலா இருக்கும்” என்று கடுப்பானாள் தீக்‌ஷா

“அது தெரியும்…… பார்வதி வீட்ல..... எங்க இருக்க…….. சாருமதி பக்கத்தில் இருக்காளா….. ” என்று விஜய் கேட்ட போது…….

“ஏன் விஜய்யத்தான் என்னைக் கொல்றீங்க………… என் மேல பரிதாபப்பட்டு பேசாதீங்கனு சொன்னா கேட்க மாட்டீங்களா………… மொட்டை மாடியில் இருக்கேன்……… வைக்கட்டுமா” என்று படபடப்பும் கோபமும் கலந்து பேச…….

“கேட்டா பதில் சொல்லு………… புரிஞ்சதா………….. எதிர்த்து பேசாத……….. எனக்குப் பிடிக்காதுனு தெரியும்ல உனக்கு……..” என்று தீக்‌ஷாவின் கோபத்திற்கு இணையான கோபத்தில் சொன்னவன்…..

“கைப்பிடி சுவர்ல உட்கார்ந்து இருப்பியே……… இறங்கி உட்காரு” என்று சொன்ன மறு நொடியே அவள் பதிலை எதிர்பார்க்காமல் போனையும் வைத்தான் ………………

பார்வதி அவளின் பேச்சைக் கேட்டதால்

தீக்‌ஷா டேப்லட்டை எடுத்துப் போடு………. என்றவளிடம்

“விடு… ஒருநாள் போடலேனா ஒண்ணும் ஆகாது….” என்றபடி

விஜய் ஒன்று சொல்லி அதைக் கேட்டால் தீக்‌ஷா ஆவாளா அவள்…..

அதனால் மறந்திருந்த கைப்பிடி சுவரின் மேல் ஏறி உட்காரும் தன் வழக்கமான பழக்கத்தை செவ்வனே நிறைவேற்றினாள்…….. …

பார்வதியோடு பேசிக் கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தில் அவளே மறந்திருந்தாள்………. புண்ணியவான் ஞாபகப்படுத்தி விட்டு விட்டான்…………..

சாரகேசும் வந்து சேர்ந்தான்…….

”அண்ணா இவ டேப்லட் போட மாட்டேங்கிறா……. நம்மை நம்பிதானே அனுப்பி வச்சுருக்காங்க என்ற போதே

“தண்ணி எடுத்துட்டு வா” என்று சாரகேஷ் பார்வதியை அனுப்பி வைக்க

வேறு வழி இன்றி மாத்திரைகளை வெளியே எடுக்க ஆரம்பித்தாள் தீக்‌ஷா……

பார்வதி கீழே இறங்க…….. சாரகேஷ் அந்த மாத்திரைகளின் அட்டைகளை அவளிடமிருந்து வாங்கி கவனமாக ஆராய ஆரம்பித்தான்……… நெற்றி சுருங்க யோசித்துக் கொண்டே இருந்தவன்……… மீண்டும் அவள் கையிலே கொடுத்தான்……….

பார்வதியும் மேலே வர…….. மாத்திரைகளை போட்டவளிடம்…….. சாரகேஷ் கேட்டான்……….

அவள் மாத்திரைகளை போடும் வரை அமைதியாக இருந்தவன்………….

”உனக்கும் விஜய்க்கும் அப்டி என்ன பிரச்சனை……….ஏன் ஒத்து வரலை… கொஞ்சம் விளக்கமா சொல்லு” என்று கேட்க……

”சொல்லு தீக்‌ஷா…….. ” என்று தீவிர பாவத்துடன் கேட்க…………

பார்வதியோ…….. “ப்ச்ச்….. அவரப் பற்றி எதுக்குணா………பிடிக்காதுனு சொல்றாள்ள…………. பிடிக்காதவங்கள பற்றி பேசி பேசி என்ன ஆகப் போகுது”

” நீ சொல்லு தீக்‌ஷா…. “ என்று அவன் தன் நிலையிலே இருக்க

“அண்ணா” என்று சங்கட்டமாக தீக்‌ஷாவைப் பார்க்க

தீக்சா தோழியிடம்

“பரவாயில்லை ’பாரு’………எனக்கும் யார்கிட்டயாவது கொட்டனும் போலத்தான் இருக்கு” என்று சொன்னவள் சாரகேஷப் பார்த்தபடி

“என் அண்ணன் தீபன் மூலம் தான்……. எங்களுக்கு விஜய் குடும்பம் சம்பந்தம் ஆனது……… அண்ணாவும் அண்ணியும் லவ் பண்ணிணாங்க……… அண்ணி வீடு மிகவும் வசதியானவங்க……….. அதுனால இந்த காதலுக்கு அவங்க வீட்ல பிரச்சனை பண்ணிட்டு இருந்தாங்க…… அண்ணியும் படிச்சுட்டு இருந்தாங்க… அண்ணாக்கும் திருமணம் அவசரம் இல்லை………… அதனால் பிரச்சனைகள் மட்டும் போய்க் கொண்டு இருந்தது….. அண்ணி படித்து முடிக்கும் வரை ஒண்ணும் பெருசா வரலை……… அதுனால அண்ணனும் வெளிநாட்டிற்கு வேலை விசயமா போய்ட்டான்……… ஆனால் ஒருநாள் அவனே போன் செய்து அண்ணி வீட்டில் அவங்கள போய் பெண் கேட்கச் சொன்னான்….. ஏன்னா…….அண்ணிக்கு வேற இடத்தில் தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கிறனர் என்று………… அம்மா அப்பா வேற வழி இல்லாமல் அங்கு போக…… விஜய் அத்தான் ரொம்ப அவமானப் படுத்தி அனுப்பிட்டாரு………… அதன் பிறகு என்ன செய்வது என்று நாங்க யோசித்துக் கொண்டிருந்த வேளையில் என்று சொல்லியபடி அவளின் முந்தைய 2 வருட வாழ்க்கையின் தன் ஞாபகங்களை அவர்களோடு பகிர்ந்தாள் தீக்‌ஷா………..

-----------------------------------------

12 அடுக்குகள் கொண்ட கண்ணாடி போர்த்திய பிரமாண்ட கட்டிட்த்தின் 10 வது மாடியில் காலை 7 மணி அளவில் தீக்‌ஷா காதில் ஹெட் செட்டுடன் ஐக்கியமாய் இருக்க… அவள் மட்டும் இல்லாது அவளது டீம் மெமப்ர் அனைவருமே ஆஜராகி இருக்க………. ஆன்சைட் கான்ஃப்ரென்ஸ் கால் போய்க் கொண்டிருந்தது… தீக்‌ஷா அதிகாலையிலேயே கிளம்பியிருந்தாள் இந்த காலுக்காக………… வீட்டில் கரண்ட் கட் ஆகும் நேரம் அது என்பதால்…….. கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டியதாகி விட்டது………..

தீக்‌ஷா………. நம் நாயகி……….. அதிகம் குறும்பு…………. கொஞ்சம் பொறுப்பு……….. கொஞ்சம் கோபம்……. கொஞ்சம் சோம்பேறி….. கொஞ்சம் இல்லையில்லை நிறையவே அவசர புத்தி…… உள்ளவள்…

சந்தோசம்……… துக்கம்……… வெறுப்பு…….. விருப்பு…. எதையும் மனதில் வைக்காமல் கொட்டி விடும் சூறாவளி………. பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாள்……….. இது அவள் சொல்லவில்லை…….. சுற்றி இருப்பவர்களின் கமெண்ட் அவளைப் பற்றி………. எவரிடமும் இயல்பாக பழகி விடுபவள்………. யார் மனதையும் நோகடிக்க விரும்ப மாட்டாள்…. தன்னை நோகடித்தால் விட மாட்டாள்…….. அதற்கு பதிலடி கொடுத்து விட்டு அந்த வேகத்திலே அதை மறந்தும் விடுவாள்……… நோகடித்த நபரையும் மன்னித்து விடுவாள்……. மொத்தத்தில் அவளைப் பற்றி யாராலும் கணிக்க முடியாது………

தந்தை வைத்தீஸ்வரன்…………. தபால்துறையில் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருப்பவர்………. பாசமுள்ள தந்தை…………

தாய் ஜெயந்தி……….. தன் மகளால் அவள் கணவனின் முதல் எழுத்தும் சேர்ந்து ’வைஜெயந்தி’ என்ற பட்டப் பெயர் பெற்றவள்…………. நாலு சுவர்களுக்குள் தன் குடும்பத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவள்……….. வெளி உலகம் பற்றி அவளுக்கு அக்கறை இல்லை…. தீக்‌ஷாவும் அவள் தாயும் டாம் அண்ட் ஜெர்ரி போல்………. அத்தனை பாசம் இருவருக்கும்……….. ஆனால் அன்றைய தினத்தில் இருந்து அவள் தாய் ஜெயந்தியின் இடத்தை வேறொரு நபர் கைப்பற்ற காத்திருந்தான்…………..

தீபன்………… அவள் சகோதரன்…. அவனும் மென்பொருள் துறையில் இருப்பவன்………… நாயகன் நாயகி வாழ்க்கை இணைவுக்கு முக்கிய காரணகர்த்தாவாக ஆனவன்…………

வழக்கம் போல் தன் சிஸ்டமில் மியூட்டை ஆன் செய்தவள்………. பேசிக் கொண்டிருந்த ரெக்குயர்மெண்ட்டில் கவனம் மட்டும் கொண்டிருந்தாள்…. மிகவும் தீவிரமாக என்று சொல்ல முடியாது…. காலையிலேயே வரச் சொல்லி விட்டனர் என்ற கடுப்பில் இருந்ததால்……… பெரிதாய் கவனம் வைக்க வில்லை அவள்……. டீம் லீடர் எப்படியும் மீண்டும் அவர்களிடம் இதைப் பற்றி விளக்குவார் என்பதால்…………….. ப்ரெசெண்ட் மட்டும் கொடுக்க வந்திருந்தாள்……….

அது மட்டும் இல்லாமல் 11 மணி அளவில் அலுவலகத் தோழி நிச்சயம் ஒன்றுக்கும் போக வேண்டி இருக்க……….. மிதமான அலங்காரத்தோடு வந்திருந்தாள்………… புடவை கட்டத்தான் நினைத்திருந்தாள்…… அலுவலகம் வர வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டதால்………. சுடிதாரே அணிந்து வர……… புடவை கட்ட முடியவில்லை என்ற கோபம் வேறு……….

அப்போது அவள் மொபைல் சைலெண்ட் மோடில் போட்டிருந்த படியால் அதிர்வலைகளை ஒலி பரப்ப………அது வைஜயந்தி என்று காண்பிக்க…… அலட்ச்சியமாக பார்த்தபடி….. முதலில் எடுக்க வில்லை

அவள் ஏன் எடுக்க வில்லை என்றால்

“அவள் அலுவலகம் வந்த பின் ஜெயந்தி கால் செய்கிறார் என்றால்……….அது பின்வரும் காரணமாகவெல்லாம் இருக்கும்

“ஏண்டி ரூமை அப்டியே விட்டுட்டு வந்துருக்க…… பெட்சீட் கூட மடிச்சு வைக்கலை….. கம்ப்யூட்டர் ஆன் லயே இருக்கு…………… நேற்று குடித்த பால் டம்ளர சிங் ல போட மாட்டியா…. இப்படி ப்ளா ப்ளா அர்ச்சனைகளைத் தாங்கி வரும் வழக்கமான வரும் தன் அம்மாவின் போன்……….. இன்றும் அப்படித்தான் இருக்கும் என்று விட…அது மீண்டும் 2 முறை அடிக்க………

“போச்சுடா…….. முக்கியமான விசயமா இருக்குமோ……… அப்பா வேற ஊர்ல இல்லை……… தாத்தா வீட்டுக்கு போயிருக்கிறார்…………… என்னவாக இருக்கும்……. ஏன் போனை உடனே எடுக்கலைனு மாரியாத்தா ஆடுவாங்களே இந்த அம்மா “ என்று ஹெட் செட்டை கழட்டியபடி போனை எடுத்து பேச ஆரம்பித்தாள் மெதுவாய்……… தன் தாயின் அர்ச்சனைகளை எதிர்பார்த்தபடி

ஆனால் அதற்கு எதிர் மாறாய்

“தீக்‌ஷா …………… ” என்ற படபடத்த தாயின் குரலில்…….

“என்னம்மா……… என்ன” என்று இவளும் கலக்கமாக

“வீட்டுக்கு வாடி சீக்கிரம்…………… ராதா….. அதுதான் நம்ம தீபன் லவ் பண்ற பொண்ணு…………. பாய்சன் சாப்பிட்டு விட்டாளாம்…………..” என்று அழ ஆரம்பிக்க

அதிர்ந்த தீக்‌ஷா

“என்னம்மா சொல்றீங்க……… இருங்க………..” என்று வேக வேகமாய் கட் செய்து ’TL’(டீம்லீடருக்கு)க்கு ப்ரைவேட்டாக மெசெஜ் செய்து விட்டு எழுந்தாள்……. அவள் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது….. அது அவள் தன் கட்டை விரலை அலுவலக கதவைத் திறக்கும் பையோ மேட்ரிக்ஸ் பிங்கர் ப்ரிண்ட் வைத்த இடத்தில் தெரிந்தது…… ஏனென்றால் இரண்டு முறை தன் விரலை வைத்தும் நடுக்கம் காரணமாக ஒழுங்காக பதியாமல் அது தவறென்று காண்பிக்க………… இது வேற என்று எரிச்சல் பட்டவள் தன் ஆக்செஸ் கார்டை காண்பிக்கப் போக…… அப்போது மற்றொரு அலுவலக நபர் ஒருவரும் உள்ளே வர………… அதைப் பயன்படுத்தி வெளியேறி இருந்தாள்

வெளியேறியபடியே…………… மீண்டும் கால் செய்தாள்

“என்னம்மா சொல்றீங்க…… இப்போ எங்க இருக்காங்கக்க பிரச்சனை இல்லைல…………. அண்ணா சொன்னானா…………… உங்களுக்கு எப்படி தெரியும்…………… என்று படபடத்தவளாய் லிஃப்ட்டிற்குள் நுழைந்தவள்… ஒரு உயிர் அல்லவா…. போனால் வருமா??????? ….. மனம் பயத்தில் பலவாறாய் சிந்திக்க ஆரம்பித்து இருக்க

அவள் ஜெயந்தியை பேசவே விடவில்லை……

“இருங்க நான் லிஃப்ட்ல வந்துட்டு இருக்கேன்….. வெளிய வந்த பின்னால் பேசறேன்” என்றவள்……… பதட்டத்தில் போனைக் கட் செய்யாமல் ஆனிலேயே வைத்தபடி வர….. இப்போது ஜெயந்தி பேசிக் கொண்டே இருந்தாள் எதிர்முனையில்

”கடவுளே அவங்களுக்கு ஒண்ணும் ஆகி இருக்கக் கூடாது” என்று மனம் உருகி வேண்டியபடியே வெளியே வந்து தன் பிங்கியின் அருகே நின்றாள்…

“ஹாஸ்பிட்டல் நேம் சொல்லுங்க…………….. நான் அங்க வந்துறேன் ……….” என்க

“இங்க வீட்டுக்கு வந்து என்னைக் கூட்டிட்டு போ……. அதுக்குதான் நான் உனக்கு போன் பண்ணினேன்… இந்த மனுசன் வேற ஊரில் இல்லை” என்று சொன்ன தாயிடம்

“ஏம்மா உங்களுக்கு அறிவில்லை……. நான் அங்க வந்து உங்களை அழச்சுட்டு……… விளையாடறீங்களா………….. டைம் ஆகும்……… நீங்க ஆட்டோல வாங்க” என்று சொன்னவளின் ’அறிவில்லை’ என்ற வார்த்தை மீறலில்

“நாக்கை இழுத்து வச்சு அறுக்கனும்டி……. பெத்த அம்மாவையே அறிவில்லைனு பேசுற………. நான் சொல்றதை….. நீ….. கேளு…….. நீ எனக்கு உத்தரவு போடாத……… ” என்றவளிடம்

“அம்மா……. அங்க ஒரு உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு……..இப்போ கூட என்னைத் திட்டனுமா……………” வழக்கமாக இருந்தால் இவளும் பதில் சொல்லி இன்னும் வெறுப்பேற்றி இருப்பாள்….. இன்று பதிலுக்கு பதில் வாயாடாமல் நிறுத்த

”என்னது உயிர் ஊசலாடுதா…….. உன்னை…………. பேசுற எதையும் காதில வாங்க மாட்டியா………… ராதாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இப்போ……………. காப்பாதிட்டாங்க………. அதற்கு பிறகுதான் சம்பந்தி அம்மா சொன்னாங்க……. இப்போ என்னை அங்க வரச் சொல்லி இருக்காங்க…………. அவசரக் குடுக்கை…….. வயித்தில இருந்தப்பதான் 8 மாசத்தில்யே வந்து மூச்சு பேச்சு இல்லாம படுத்தி எடுத்த……… அப்போ வேண்டாத தெய்வம் இல்லை…….இவள மூச்சு விட வைனு………. இப்போ பேசியே படுத்தி எடுக்கிற….. ஆனா இப்போ கடவுளே இவளுக்கு நல்ல புத்தியக் குடுக்கனுமா…… இந்த அவசர புத்தி எங்க கொண்டு போய் இவள விடப் போகுதோ”

என்ற போதே தன் தவறு புரிந்தவளாய்… தன் தலையில் தட்டியவள்

”அவசரம்லாம் படலம்மா………… லிஃப்ட் ல போனைக் காதில வைக்கலை என்றபடி………சரி வீட்டுக்கு வருகிறேன்………” என்று ஜெயந்தியை சமாளித்தவளாய் போனை வைத்தாள் கிளப்பினாள்……

அவளுக்கு ராதாவின் நிலை கவலைக்கிடம் இல்லை என்று தெரிந்த பின்னர்… வழக்கமான தீக்‌ஷாவாக யோசிக்க ஆரம்பித்திருந்தாள் கலக்கமெல்லாம் போய் இருந்தது…..

போன மாதம் தான் அவளுக்கு புது ஸ்கூட்டி வாங்கித் தரப்பட்டிருந்தது…….. அதன் பெயர்தான் பிங்கி….. அதற்கு முன் அவள் வைத்திருந்தது செஹெண்ட் ஹாண்ட் பழைய மாடல் ஸ்கூட்டி……..

அதனால் தன் ’பிங்கி’யைச் சுற்றி ஒருமுறை நோட்டம் செய்தவள்…….. பின் சுற்று புறத்தையும் நோட்டம் செய்தவள் யாருக்கும் தெரியாமல் தனது ஸ்கூட்டியில் அவள் பெயர் பொறித்த இடத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்தவள்……. பின் அதைக் கிளப்பினாள்.

செல்லும் வழியிலேயே…….. இந்த ’காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு’ ஏன் இந்த லூசுத் தனமான வேலை….. காதலிச்சாளா…… கல்யாணம் பண்ணுவாளா.. அத விட்டுட்டு…. இப்டி பண்ணி வச்சுருக்கா…….. வீட்ல பேச தைரியம் இல்லாதவங்களாம் எதுக்கு லவ் பண்றாங்க……. ப்ச்ச்… அவங்க நிலைமை என்னவோ…… அந்த ராதாரவிதான் ரொம்ப பண்றானு அம்மா சொன்னாங்கள்ள…….. என்ற படியே

அடுத்த அரைமணி நேரத்தில் தங்கள் வீடு இருந்த க்வாட்ரெஸ் வாயில் முன்னிலையில் நிறுத்த…………… அங்கு ஜெயந்தி நின்று கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தபடியே

“என்னமா இங்க நிக்கறீங்க……..வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றபடி உள்ளே போக……….

“ஏண்டி….வீட்டப் பூட்டிட்டு நீ எப்போ வருவ ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்னு இங்க பதட்டமா நின்னா……..வீட்டுக்கா………..கிளம்பு ‘ என்றவளிடம்

“அம்மா….. அதுதான் நல்லா இருக்காங்கள்ள… இன்னும் டிபன் சாப்பிடலம்மா………. பசிக்குது………. அட்லீஸ்ட் டீ குடிச்சுட்டுனாலும் போவோமா…….” என்று கெஞ்சலில் இறங்கிய மகளிடம்

“அங்க என் மருமக பச்சத் தண்ணி வாயில படாம நாறாக் கிடக்கிறாளாம்……….. உனக்கு டீ முக்கியம்…எடு வண்டிய” என்று பொறிய

“என்னது மருமகளா…… ” என்று அதிர்ந்தவள்

“பணக்கார மருமகள்னு ஆடுற வைஜயந்தி……. ஆடு ஆடு… வந்து உனக்கு அவ ஆப்பு வைக்கல் என் பேரு தீக்‌ஷா இல்லை” என்று வாய்க்குள் முணங்கியபடி வண்டியைக் கிளப்பினாள் தீக்‌ஷா

போகிற வழியிலேயே………

“ஏம்மா…… அந்த ராதாரவி அன்னைக்கே டோஸ் விட்டான்னு சொன்னீங்க…….. இப்போ உங்களை லெஃப்ட் ரைட் விட மாட்டானா…….. ஆனா பாருங்க அங்க என்ன நடந்தாலும் நான் வாயத் தொறக்க மாட்டேன்……… இந்த ஷாலினி என்ன லூசா…………… ”என்று பேசியபடி வந்தவள் தாயிடமிருந்து எந்த வொரு ரியாக்சனும் வராமல் போக

“என்னம்மா நான் பேசிட்டே வர்றேன்……. நீங்க பதில் சொல்லாம வர்றீங்க…” என்று முறைக்க

“நானே ராதாவை நினைத்து பரிதவிச்சுட்டு வர்றேன்…………. நீ ஷாலினி, ராதாரவினு யார் யாரையோ பத்தி பேசிட்டு வர……இதுக்கு நான் பதில் வேற சொல்லனுமா” என்று நொடிக்க

ஒரு நிமிடம் அதிர்ந்து பின்.. தன் தாயின் வார்த்தைகளை நினைத்து சிரிக்க ஆரம்பித்தாள்…….. அவள் சிரித்த சிரிப்பில் வண்டி கன்ட்ரோல் இல்லாமல் ஆட…………. புதியதாய் வாங்கிய தன் வண்டிக்கு சேதாரம் ஆகி விடுமோ என்று பயந்து…… அதை நிறுத்தியவள்……வண்டியில் இருந்து இறங்கி குனிந்து வயிற்றைப் பிடித்துக் சிரித்து வைக்க….. தாயின் முறைப்பில் மனம் சிரிப்பதை நிறுத்தச் சொன்னாலும்………….சிரிப்பு நிற்காமல் வந்து கொண்டே இருக்க

ஜெயந்தி…. வைஜெயந்தி IPS ஆக மாறி…. தன் வாய் என்னும் துப்பாக்கியில்……தோட்டாக்களை போட ஆரம்பிக்க

“அம்மா.. ப்ளீஸ் மா……… என்னால முடியல………. என்றபடி…………மீண்டும் சிரித்தவள்…… ஒருவழியாய் தன்னை அடக்கிக் கொண்டு வண்டியில் ஏறி கிளப்பினாள்… இருந்தும் அவ்வப்போது அவள் உடல் குலுங்க

“நான் அப்டி என்னடி சொன்னேன்…………..இப்டி சிரிக்கிற “ என்று பரிதாபமாய் அவள் தாய் கேட்க

“ஏம்மா………… வீட்ல உட்கார்ந்து சீரியல் தான் பார்ப்பீங்களா……….. இந்த படம்லாம் பார்க்க மாட்டீங்களா………. காதலுக்கு மரியாதைனு ஒரு விஜய் படம் வந்துச்சு தெரியுமா தெரியாதா” என்று கேட்க

“ஏன் அதுல அந்த பொண்ணு விசம் குடிக்குமா” என்று அப்பாவியாய்க் கேட்க

”அம்மா………. அம்மா” என்று தலையிலடித்தவள்

”அப்டி இல்லமா…….அந்த படத்துல………வர்ற ஹீரோயினுக்கு 3 அண்ணன்……… ஒரு தங்கச்சி……. இதுலயும் கொஞ்சம் அப்டித்தான்……. அதுனால……. ஹீரோயின் பேரைச் சொல்லி………உன் மருமக பேரைச் சொன்னேன்………. நம்ம அண்ணா பேரு கூட விஜய் தெரியுமா” என்றவளிடம்

“ராதா அண்ணா பேரும் விஜய்தான்….” என்ற தாயிடம்

“அதெல்லாம் தேவையில்ல……….. இந்த தீக்‌ஷா அவனுக்கு ராதாரவினு பேர் வச்சுட்டேன்…….. மாற்ற முடியாது…….. அதுக்கடுத்து உள்ளவனுக்கு தலைவாசல் விஜய்னு பேர் வச்சுட்டேன்………. என்று வழக்காடிய மகளிடம்

“தயவு செய்து தீக்‌ஷா என்னைக் கொல்லாத………. உன் அப்பா மட்டும் ஊர்ல இருந்திருந்தா…….. நான் உன்னைக் கூப்பிட்ருக்கவே மாட்டேன் மா……….. மனுசன் உன்னைக்கிட்டா போய் என்னைத் தனியா விட்டுட்டு போய்ட்டாரு…………….. நீ பேசியே கொல்வியே ”

“அவ்ளோ ரோசம் உள்ளவங்க தனியா போயிருக்க வேண்டியதுதானே………….. வீட்டுக்குள்ள பேசச் சொல்லு…………. வாய் கிழிய பேசுறது……….. வெளில வந்தா பயந்து நடுங்கிறது………… உங்க சாமார்த்தியமெல்லாம் நாலு சுவத்துக்குள்ளதாமா” என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொள்ளாமல் இருப்பாளா……. தன் அன்னைக்கு அட்வைஸ் மழையை சந்தோசமாக வழங்கிக் கொண்டே மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்தாள்

----------------

வண்டியை நிறுத்த இடத்தை பார்வையிட்டபடியே வேகத்தை குறைக்க….. அவள் நிறுத்தி விட்டாளோ என்று ஜெயந்தி குதிக்க………… தன்னை நிலைப்படுத்த வண்டியை நிறுத்த முடியாமல் திணறி……….அருகில் இருந்த காரின் மேல் மோதி நிறுத்தியவள்….. காருக்கு என்ன ஆனது என்று பார்க்காமல்…… தனது பிங்கியைப் பார்த்தவள்……. ஒன்றும் சேதாரம் இல்லாமல் போக……. நிம்மதியுடன் பெருமூச்சு விட்டவள்……… அவசரக் குடுக்கையாகத் இறங்கிய தன் தாயைத் திரும்பி பார்க்க……….அவள் அன்னையோ மருத்துவமனை நோக்கி வேக வேகமாகச் சென்று கொண்டிருக்க…..

அப்போதுதான் ஞாபகம் வந்தவளாய்…….. டிரைவர் சீட்டில் இருந்த கார்க்காரனைப் பார்க்க…….. அவனோ இப்போது இறங்கி நின்றிருந்தான்

அவனின் கோப முகத்தைப் பார்த்தவள்…… காரைக் கவனித்திருக்கலாம்………. தன் பிங்கிக்கே ஒன்றும் ஆகவில்லை எனும் போது அவன் காருக்கு என்ன ஆகி இருக்கும் என்று சாதாரணமாய் விட்டவள்

“சாரி” என்ற ஒற்றை வார்த்தையை அவனின் முகம் பார்த்து……… சொல்லியபடி……….. பாதி தூரம் போனவள்… அவன் முறைத்தபடி நின்றிருந்தது ஞாபகம் வர…. மீண்டும் அவனைத் திரும்பிப் பார்க்க………. அவன் அவளைப் பார்த்தபடியே இன்னும் கோப முகத்துடன் நின்றிருக்க………. வாயசைவில் ’சாரி’ என்று மீண்டும் சொல்லியபடி…… தன் வழியில் போனாள்…………….

-----------------

ராதா இருந்த அறையுனுள்ளே தயக்கத்துடன் தான் நுழைந்தனர் தாய் மகள் இருவரும்…

ராதா………. அறுபட்ட கொடி போல் கிடந்தாள்…………………… உடன் அவளின் தாய் மட்டுமே இருக்க

கொஞ்சம் தைரியம் வந்து சகஜமாகினர்…….

“ஏம்மா இப்டி பண்ணின…..” என்று ஜெயந்தி கண்கலங்க

“அடேங்கப்பா……….. நம்ம அம்மாவா ………. என்ன ஒரு உருக்கம்” என்று மனதுக்குள் நக்கலடித்துக் கொண்டிருந்தவள்

பின் தன் பங்கிற்கு அவள் நலனை விசாரித்தவள்………. அடுத்த வந்த நிமிடங்களில்………… தன் தாய் மற்றும் ராதா நடத்திய பாசப் போராட்டம் தாங்க முடியாமல் வெளியே வந்தாள். வந்தவள்………. தன் அண்ணனுக்கு விசயத்தை சொல்ல………… போனை எடுத்தபடி அந்த வராண்டாவின் ஓரத்தில் நின்றபடி டயல் செய்ய ஆரம்பித்தாள்…..

அருகே சற்று முன் இடித்த கார்காரனும் இருக்க…….. அவனைப் பார்த்த படியே…. அங்கிருந்த கைப்பிடிச் சுவரின் மேல் எறி அமர்ந்து போனைக் காதில் வைத்தாள்………..

‘இவன் ஏன் நம்மள இந்த முறை முறைக்கிறான்……அதுதான் சாரி… அதுவும் இரண்டு முறை சொல்லியாச்சே” என்று நினைத்தவளாய் இருக்கும்போதே அடுத்த முனையில் ’ஹலோ’ என்று சோம்பலாய் தன் அண்ணன் குரல் கேட்க சொன்னவுடன்

“டேய் விஜய் கடன் காரா” என்று சத்தமாய் ஆரம்பிக்க

“யாரு தீக்சா அந்த விஜய்…….. தப்பா போன் பண்ணிட்டியா” என்று பிரதீபன் அறியாப் பிள்ளையாய் கேட்டு வைக்க

“லூசு உன்னைத்தாண்டா………. நீயெல்லாம்……… ஒரு ஆளு……….. உன்னை நம்பி இன்னொரு ஆளாடா உனக்கு” என்றவளிடம் பிரதீபன் பேசும் முன்

முன்னால் நின்றிருந்தவன் வேகமாய் வர

“உன்னால அந்தப் பொண்ணு இங்க விசம் குடிச்சுட்டு படுத்திருக்கு………. நீ என்னடா அங்க கிழிக்கிற” என்று சொல்ல வேகமாய் வந்தவன் பின் வாங்கினான்

”என்.. என்ன சொல்ற…………. தீக்ஷா…..” என்று படபடப்பாய் பேசியவனிடம்

“ரொம்ப டென்சன் ஆகாதா…..இப்போ நல்லா இருக்காங்க……….. “ என்றவளிடம்

“அவளுக்கு என்ன பிரச்சனையாம் இப்போ……… அதுதான் நான் நெக்ஸ்ட் வீக் வர்றேனு சொல்லி இருந்தேன்ல…….. எதுனாலும் ஆகி இருந்தா… என் நிலைமய யோசிச்சு பார்த்தாளா” என்று கோபக் குரலில் சொல்ல

“ஆமா இவரும் பெரிய தேவதாஸ்-மாதிரி இருந்திருப்பாரு ………. 3 மாசத்தில வேறொரு பொண்ணப் பார்த்துட்டு போயிருப்பான்………….. ஆம்பள புத்தி……… சீன் போடுறான்……… இவங்கள நம்பி இப்டி மோசம் போறாளுங்களே” என்று மனதிற்குள் மட்டும் பேசிக் கொண்டவளாய்

“பிரச்சனை இல்லையா………… அவ அண்ணன் அந்த ராதாரவி இருக்கான்ல…… அவன் அண்ணிய திட்டி இருப்பான் போல…… அது மட்டும் இல்லை……… இன்னைக்கு யாரோ ஒருத்தனை வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரசொல்லி இருக்கிறான் என்று உன் ஆளை கட்டாயப் படுத்தி இருப்பான் போல……. பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க“ என்று பேசியவளை முறைத்தும்……… கொஞ்சம் அலட்சியமாகவும் பார்வை பார்த்த கார்க்காரனை தீக்ஷாவும் விடாமல் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள். தன் அண்ணனிடம்…… கிட்டத்தட்ட ஒரு படத்தையே ஓட்டி இருந்தாள்………

போனை வைத்தவள்…… அந்தக் கார்க்காரனை பார்த்தபடி கடந்தாள். கொஞ்சம் தூரம் கடந்தவள்….. இப்போதும் முறைக்கிறானா…. மீண்டும் அவனைத் திரும்பிப் பார்க்க…………. அவன் போன் பேசிக் கொண்டிருந்தான்…..ஆனாலும் இவளையும் பார்த்துக் கொண்டிருந்தான் தான்………. இவள் பார்த்தபோது அவனும் பார்வையை விலக்க வில்லை………..

தீக்‌ஷா இப்போது குறும்பாக

சைகையால்……………….. பாய் என்று சொல்ல…………….. அவனின் கண்கள் தீப்பிழம்பாக………….. அதைப் பார்த்த தீக்‌ஷா

“எஸ்கேப் தீக்‌ஷா” என்றபடி அவசரமாய் திரும்பி தன் அம்மாவை அழைக்கப் போனாள்…..

அதன் பின் அறைக்குள் நுழைந்த போது………

ராதாவின் தாய்……… அடுத்த வாரம் ஒரு நல்ல நாளில் தன் குடும்பத்துடன் வந்து பேசுவதாக கூற…… மகிழ்ச்சி அடைந்தனர் இருவரும்…..

ராதாவிடம் விடைபெற்று கிளம்ப ஆயத்தமாகி தன் தாயின் முகத்தைப் பார்க்க……….

ஜெயந்தியோ ராதாவிடம் விடாமல் இன்னும் பேசியபடியே இருக்க தீக்ஷா முதலில் வெளியேறி விட்டாள்.

”ச்சேய் வர்றாங்களா இந்த அம்மா” என்று எரிச்சலுடன் வரண்டாவில் கால் வைக்க

“நான் என்னப்பா விஜய் பண்றது………. அவ பிடிவாதம் பிடிக்கிறாளே”

“அப்பா…….. எனக்கு ஒண்ணும் பிடிச்சுக்கலை……… அந்தக் குடும்பம் சரி இல்லையோனு தோணுது……….. பொண்ணையே இப்டி வளர்த்திருந்தா……… பையன……… கேக்கவே வேண்டாம்……….. நம்ம ராதாவுக்கு ஏன்பா இப்டி ஒரு நிலை…………. நம்ம ஸ்டேட்டஸ்க்கும் அவங்களுக்கும் சுத்தமா பொருந்தாது……… அவன் தங்கை பேச ஆரம்பித்தா நாமெல்லாம் ஓடணும் போல…. வாய மூட மாட்டேங்குறா….. அதுவும் குரங்கு மாதிரி அந்த சுவற்றில ஏறி உட்கார்ந்து…… அவ பேசுனதை நீங்க கேட்ருக்கணும்….. சரி வராதுனு தோணுது…… நம்ம ராதா போயும் போயும் அந்தக் குடும்பத்துல” என்று பேசியவனைத் தாண்டி தைரியமாக கடந்தாள் தான்………. ஆனால் மனதில் புயலுடன்…………

யாராய் இருந்தாலும் பதிலடி கொடுத்து விடுவாள் தீக்‌ஷா……. இன்று ஏனோ மனம் வரமால் கடக்க….. ஆனாலும் அவனுக்கு பதிலடி கொடுக்காமல் போகவும் மனம் விரும்ப வில்லை…… என்ன செய்யலாம் என்று யோசித்தபடி

முன்னே ஒரு பத்தடி தூரம் தாண்டிப் போனவளை…………. கைவிரலின் சொடக்குச் சத்தம் நிற்க வைக்க……… திரும்பாமல் நின்றாள் தீக்‌ஷா………..

இப்போது முன்னே வந்திருந்தான்………. அந்தக் கார்காரன்…….இல்லையில்லை………. ராதாரவி……… அதாவது

விஜயேந்தர் என்கிற விஜய்

வந்தவன் அவளிடம்………..

“இந்த லொட லொட பேச்செல்லாம் உங்க வீட்டோட நிறுத்திக்க………… இல்லை அப்டி பேசுறதை நிறுத்த முடியாதுனா…… இந்த பக்கம் அடிக்கடி வந்துறாத…….. எங்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு………… பெரிய ஆளுங்கள்ளாம் வருவாங்க………… உன் சின்னப் பிள்ளை தனமான பேச்செல்லாம் கேட்கிற மாதிரி ஆகிற போகுது………… ஏற்கன்வே உங்களோடலாம் சம்பந்தம் வச்சுக்கிறோம்னு கேவலமா இருக்கு……… எல்லாம் நேரம்…… எங்களுக்கும் உங்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது….. நீங்களாம் எங்களுக்கு சமமாய்” என்று ஆரம்பித்தவன் ஏனோ அதற்கு மேல் பேசாமல்

“சொன்னது கேட்டுச்சா………….. இப்போ போகலாம்…” என்று திரும்பி மீண்டும் ராதாவின் அறை நோக்கிப் போக

அவன் அவளை விட்டு அதே பத்தடி தூரம் போக….

கைதட்டி அழைத்தாள்……….. ”மிஸ்டர் விஜய் ஒரு நிமிசம்” என்றபடி

கண்களில் தீப்பறக்க அவன் திரும்ப……… அதை சளைக்காமல் எதிர்கொண்டு அதே பார்வையை திருப்பித் தந்தவளாய்……………..

அவன் முன்னே நின்றாள்……..மனதிற்குள் “சாரி அண்ணி” என்று சொல்லியவள் நக்கலாக ஆரம்பித்தாள்

“உங்க ஸ்டேட்டஸ் நான் இங்க வந்து பேசுறதுனால போய்டுமா…….. ம்ஹூம்ம்…. ஆமாம்…….. இந்த ஹாஸ்பிட்டலுக்கு உங்க குடும்பம் எதுக்கு வந்துருக்கு விஜய் சார் ………. உங்க தங்கச்சி பாய்சன் சாப்பிட்டாள்னு………. அவ எதுக்கு பாய்சன் சாப்பிட்டாள்………. ஒருத்தனை லவ் பண்ணி வீட்ல ஒத்துக்கொள்ளவில்லைனு……… ஆக……. உங்க தங்கச்சி லவ் பண்ணினதுனால போகாத உங்க ஸ்டேட்டஸ் பெருமை……….அவ காதலனுக்காக பாய்ஸன் சாப்பிட்டதுனால போகாத உங்க மானம்………. என்னோட பேச்சால போயிரும்னு ஃபீல் பண்றீங்க……… அது சரி………. நீங்க காப்பாத்தி வச்சிருக்கிற இந்த… ஸ்ட்டேடஸ் என்னால போகக் கூடாதுதான்………

’இந்த’ என்ற வார்த்தையில் நக்கலாக அழுத்தம் வைத்தவள்… இப்போது கோபம் கொண்ட காளி அவதாரமாகி

”எப்டி எப்டி…. என்னை எப்டி வளர்த்திருக்காங்கனு உங்களுக்கு சந்தேகமா …… என்ன கண்டீங்க நீங்க………… உங்க வீட்டு பொண்ண விட நல்லாத்தான் வளர்த்திருக்காங்க……………. காதலிச்சவனுக்காக குடும்பத்தையெல்லாம் தூக்கி எறியற அளவுக்கு எங்க வீட்ல என்னை வளர்க்கல………. ஒருவேளை அப்டி வளர்த்திருந்தா……… உங்க ஸ்டேட்டஸ்க்கு கரெக்டா இருந்திருக்குமோ” என்று கொஞ்சம் கூட பயப்படாமல் ……… தைரியமாய் பேசி அவன் முகத்தைப் பார்க்க

“என்னட்” என்று ஆரம்பித்தவன் அவளின் பின்னே வந்த யாரையோ பார்த்து அடுத்த நொடியே முகத்தில் புன்னகையை பூசியபடி அவரை நோக்கிச் செல்ல

தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி….. தனக்குள் இருந்த எரிமலைக் குழம்பை அவன் முன் வெளியேற்றி அதில் அவனை தகிக்க வைத்து வெளியேறினாள்………. நிம்மதியாய்…..

1,793 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


அப்போ பாரு என்கிற சாருமதி ஹீரோயின் இல்லை.... தீக்ஷா தான் ஹீரோயின்... இப்படி சண்டை போட்டால் கடைசியில் கல்யாணம் தானே ஆகும்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page