top of page

அன்பே நீ இன்றி-39

அத்தியாயம் 39:

இளமாறனிடம் விஜய் தன் முடிவைச் சொல்ல… நம்பவே முடியவில்லை அவனால்…..

“ஆனால்……… நீ ஒரு வைராக்கியத்தோடு… தனியாகத்தான் இந்த ப்ராஜெக்டை பார்க்கனும்னு சொன்ன” என்று சந்தேகமாய் இழுக்க….

சுரேந்தர் தான் காரணம் என்று சொல்ல முடியுமா…. இல்லை தீனா மேல் இருந்த கோபத்தில்… அவனிடம் பேசிய வேகத்தில் வார்த்தைகளை விட்டு விட்டேன் என்று சொல்ல முடியுமா….. மறைத்தான் விஜய்… அதற்குப் பதில்

”இந்த உலகத்தில் தனியா சாதிக்க முடியாது இளா… ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இந்த உலகமே இயங்குது…” என்று சமாளிப்பாகச் சொல்ல….

இளமாறன்…. அவனை நக்கலாகப் பார்த்தான்…

‘புது மாப்பிள்ளை தானே… வரும் வரும் இந்த டைலாக்ஸ் லாம்” என்று கிண்டல் செய்ய…

அவனின் கிண்டலை புரிந்தவனாய்… தன் மனைவியின் நினைவில்…. லேசாய் இதழ் விரித்தவன்… பின் சமாளித்தவனாய்….

”இளா நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பேசிட்டு இருக்கேன்…” என்றவனின் வார்த்தைகளில் இதம் தான் இருந்தது,,,…

“ப்ச்ச்... சுரேந்தர் என் கூட சேர்ந்து வேலை பார்க்க மாட்டேனு சொல்லிட்டான்…. நீ என்கிட்ட அதை எப்படி சொல்றதுனு … இந்த ப்ளான் பன்ணியிருக்க…. சரிதானே…” என்றான் இளமாறன், குரலில் சுரத்தே இல்லாமல்…

இளமாறனின் வார்த்தைகளில் விஜய் திகைத்தாலும்..

“இளா… அவன் சின்னப் பையன்…. அவனை முழுசா நம்பி பொறுப்பை ஒப்படைத்ததால… அவனுக்கு கொஞ்சம் உறுத்தலாகிருச்சு.. எங்க நான் காப்பாற்றி வைத்திருக்கிற.. நம்பிக்கை அவனால போய்டுமோனு… அதுனாலதான் அவன் கொஞ்சம் டென்சனாகிட்டான்…. நீ என்கூட ஜாயின் பண்ணிக்க…“ என்றவனிடம் விரக்தியான பாவத்தில்……….. கைகளில் வைத்திருந்த மது பானத்தையே பார்த்தவன்….

”இப்போலாம் எனக்கு இதுதான் துணை….” என்று சொல்ல….

அவனை நோக்கி நெறித்த புருவங்களின் மத்தியில் விழுந்த முடிச்சாய்.. தன் கேள்வியை நிறுத்தினான் விஜய்

”ஆமாம் விஜய்…. எனக்கு யார் கூடவும் ஒட்ட மாட்டேங்குது…………. உனக்கு ஒரு விசயம் தெரியுமா…. என் மனைவி இப்போ என் கூட இல்லை….” லேசாய் சிரித்தபடி….

மே பி… அதுனால கூட வேலைல மிஸ்டேக் ஆகி இருக்கலாம்…” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான் விஜய்……

”இளா என்ன சொல்ற…. என்ன பிரச்சனைடா?.... சொல்லு... ஏன் உன் மனைவி நிர்மலா கூட சந்தோசமாத்தானே இருந்த… “ என்றவனின் குரலில் நண்பனின் வாழ்க்கை குறித்த அக்கறை இருக்க…. தொடர்ந்தான் இளமாறன்…

“நிர்மலா என் வாழ்க்கைய நிர்மூலமா ஆக்கிட்டு போய்ட்டாடா……. எல்லாம் முடிஞ்சுருச்சு…… டைவர்ஸ் நோட்டிஸ் இன்னைக்குதான் வீட்டுக்கு வந்திருக்கு”

“அவ ஏற்கனவே ஒருத்தனை விரும்பியிருப்பா போல… அவளைக் கட்டாயப்படுத்தி மேரேஜ் பண்ணி வச்சுருக்காங்க…. எனக்கு இதெல்லாம் 1 மாதத்துக்கு முன்னாலதான் தெரிய வந்தது….. என் கூட அவ சந்தோசமாகவே வாழலைடா……. கருவைக் கூட கலச்சுட்டு வந்துட்டாடா………….. “ என்றவனை நம்ப முடியாமல் பார்த்தான்….. விஜய்….

கொஞ்சம் உள்ளுக்குள் உதறல் கூட வந்தது… ராதாதான் அவன் கண் முன் தோன்றினாள்… ஏனோ மனதினுள் ஊசியைக் கொண்டு குத்தியது போல் இருந்தது அவன் அன்று செய்ய இருந்த செயல்… அன்று தீபனைக் காதலித்த தன் தங்கையைத்தான்… இளமாறனுக்கு திருமணம் செய்ய முன் வந்தது ஞாபகம் வர…. தலையை உதறிக் கொண்டான் விஜய்….

இளமாறனின் மனைவியை இரண்டு மூன்று முறைப் பார்த்திருக்கிறான்…. அமைதி என்றால் அத்தனை அமைதி…. அவள் குரலைக் கூட அவன் கேட்டதில்லை…. வீட்டிற்கு போனால் ஒரு சிறு புன்னைகை…. அந்தப் பெண்ணா… தன் வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைக்கும் அளவுக்குப் போனாள்…. நம்பவே முடியவில்லை…………..

“நீ கொஞ்சம் எடுத்துச் சொல்லிப் பார்த்திருக்கலாம்லடா… கண்டிப்பா புரிஞ்சிருந்திருப்பா தானே உன் மனைவி..” என்றவனிடம்…..

“என்கிட்ட அவ எதிர்பார்த்ததே அவளோட டைவர்ஸ் தான்… அது கிடைத்தால் தானே… அவள் அவளோட முன்னாள் காதலனோட குடும்பம் நடத்தலாம்…” என்றவன்…..

“சரி விடு….. முடிந்த கதையைப் பற்றி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை…..“ என்றவன் குடிக்க ஆரம்பித்தான்….

விஜய்க்கு அவனைப் பார்க்கவே பாவமாய் இருக்க…. அவனையே பார்த்தபடி இருந்தான்…..

“என்ன பார்க்கிற….. எல்லாம் என் நேரம்…..” என்றபடி அவன் வேலையைத் தொடர….

“ஏன் இளா என்கிட்ட சொல்லலை… இதெல்லாம் எப்போ நடந்தது..” வருத்தத்தோடு கேட்டான் விஜய்

”அவளோட வெளிநாடு போனேண்டா…. அப்போதான் எல்லாக் கன்றாவியும் நடந்தது…. வந்தவ… அவ அப்பன் வீட்டுக்கே போய்ட்டா… உன்கிட்ட சொல்லலாம்னா….. நீ உன் கல்யாண வேலைல பிஸி ஆகிட்ட…. இளமதி டென்சன் வேறு… சொல்லலை…. உன்கிட்ட சொல்லி மட்டும் என்ன ஆகப் போகுது” என்றவனின் புலம்பலில்….. விஜய் அவனிடம் ஆறுதல் வார்த்தைகள் கூற… அவனோ…. விஜய்யிடம் மதுபானத்தை நீட்டினான்… கம்பெனி தருமாறு…

விஜய் முதலில் தயங்க….

“ப்ளீஸ்…. வேண்டாம்னு சொல்லாத…. லெட்ஸ் செலிப்ரேட் யுவர் மேரேஜ் … அண்ட் நியூ ப்ராஜெக்ட் பார்ட்னர்ஷிப் அசைன்மெண்ட் ……..அஸ் வெல் அஸ்ஸ்ஸ்ஸ்……….. ஷேர் மை ஃபீலிங்ஸ்………. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….” என்று தட்டுத் தடிமாறியபடியே சொன்னவனின் வார்த்தைகளை மீற முடியாமல்…… தன் கைகளில் வாங்கிய விஜய்க்கு… தீக்ஷாவை நினைத்தும் கொஞ்சம் பயம் தான்….

தான் புகைப்பிடிப்பதையே சொல்லாமல் சொல்லிக் காட்டியவள் என்பதும் உறுத்த….. இந்த ஒரு மாதமும் இவனுக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை… என்ன சொல்வாளோ என்றிருக்க… சும்மாவே பக்கம் பக்கமாய் பேசுவாள்….

போன் செய்து சம்மதம் கேட்டு விட்டு குடிக்கலாமா என்றெல்லாம் யோசனை செய்து…………..

“சரி…. இன்னைக்கு எப்படியும் அவள் அருகில் நெருங்க முடியாது…… எப்படியாவது சமாளிப்போம்…” . என்றெல்லாம்…… யோசித்துக் கொண்டிருக்க….

இளமாறன் மீண்டும் வலியுறுத்த… அவன் வார்த்தைகளை மீற முடியாமல்…….. விஜய் நண்பனுக்கு ஈடு கொடுத்தான்……..

கணவன் இங்கு அவன் நண்பனின் துக்கத்தை போக்க…. இப்படி இருக்க….

அவன் மனைவியோ தன் நண்பனின் துக்கத்தை எப்படியாவது போக்கி… அவன் விரும்பிய ஆர்த்தி இருக்கும் இடத்திற்கு அனுப்ப…. எப்படியாவது…. தன் கணவனிடமிருந்து சம்மதம் வாங்கித் தந்துவிட வேண்டுமென்று… அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்…. வீட்டில்….

மணி இரவு… 11.00 ஆகி இருக்க… சுரேந்தர் அப்போதுதான் வந்தான்… வந்தவன் விஜய் இளமாறனைப் பார்க்கப் போயிருப்பதாகச் சொல்ல…

தீக்ஷா அவனிடம் கேட்டாள்….

“அவர் மட்டும் தனியா ஏன் போனார்… எப்போதும் நீங்களும் அவர் கூட போவீங்கதானே சுரேந்தர் அத்தான்” என்று கேட்க

சுரேந்தர் அவஸ்தையாய்ப் பார்த்தான்….

“இல்ல தீக்ஷா…. அவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை….. அண்ணா கூப்பிட்டாரு… எனக்குதான் போக இஷ்டம் இல்லை.. அதுமட்டும் இல்லை…. அவன் இவ்வளவு தவறு பண்ணியும்…… இன்னும் கூட வச்சுருக்கது எனக்குப் பிடிக்கலை…. தப்பு பண்றாரோனு தோணுது” என்று தன் மனதில் உள்ளதை மறைக்காமல் கூற…. தீக்ஷா முகம் வெளிறினாள்…

அவள் முகம் மாறுவதைப் பார்த்தபோதுதான்… சுரேந்தர் தான் உளறியதை உணர்ந்தான்…

உடனே… “ஹேய் தீக்ஷா,….. நீ உடனே டல் ஆகிடாதம்மா…. பார்த்துக்கலாம்… அண்ணா எது பண்ணினாலும்…. அதில் காரணம் இருக்கும்… ஓகேவா…. நீ போய்த் தூங்கு… நான் ஒரு லூசு…. உன்கிட்ட உளறிட்டு இருக்கிறேன் பாரு” என்று படிகளில் ஏற…

“சுரேந்தர் அத்தான்” என்று மீண்டும் தயக்கமாய் தீக்ஷா அழைக்க…

திரும்பி வந்தான்…

அவள் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு

“என்ன தீக்ஷா….. ” என்று சுரேந்தர் அக்கறையாய்க் கேட்க..….

“எப்போதும் அவர் பேச்சை கேட்பீங்கதானே… நீங்க இளா கூட சேர்ந்து வேலை பார்க்க மாட்டேனு சொன்னதினாலதானே நீங்க கோபமா இருந்ததினாலத்தான் … உங்க அண்ணா இந்த முடிவெடுத்தார்….. இந்த ப்ராஜெக்ட்ல இளமாறனைச் சேர்த்துக்கிட்டார்……. எனக்கென்னமோ அந்த இளமாறனையும் பிடிக்கலை… அவன் சிடுமூஞ்சி தங்கையையும் பிடிக்கலை….. “ என்றவளிடம் சிரித்த சுரேந்தர்….

”ஹப்பா… இங்க தீக்ஷா தீக்ஷானு வெட்டியா பேசிட்டு…. அடுத்தவங்களை எல்லாம் ஓட்டிட்டி இருக்கிற பொண்ணு ஒருத்தி இருந்தாளே… அவளப் பார்த்தேனா கொஞ்சம் சொல்லு…. புருசன் மேல என்ன ஒரு அக்கறை… புல்லரிக்குது” என்று நக்கலாய்ச் சொல்ல…

முறைத்த தீக்ஷா… ”லேட்டா வந்தீங்களே…. அத்தை நீங்க வந்தா சாப்பாடு எடுத்துவைக்கச் சொன்னாங்க… வெயிட் பண்ணினால்…. என்னையே ஓட்டறீங்களா… சாப்பாடு கட்” என்று பொய்யாக மிரட்ட…

”இந்த சுரேந்தர்…. இதெல்லாம் யோசிக்காமல் வருவேனா…. வரும்போதே சாப்பிட்டு வந்துட்டேன்… நீ உன் ஆத்துக்காரருக்காக வெயிட் பண்ணும்மா……” என்று வேகமாய்ப் போய் விட

“முன்னெச்சரிக்கை முத்தண்ணா” என்று முணங்கியபடி கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் உறக்க கலக்கத்தோடு….

எப்படியாவது பேசி யுகியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு தன் கணவனிடமிருந்து அனுமதி வாங்கி விட வேண்டுமென்று ஒரு தீக்ஷா முடிவோடு இருக்க…. விஜய்யின் கார் வரும் ஓசையும் கேட்க…. ஆவலோடு வெளியில் ஓடினாள் தீக்ஷா….

ஓடிய வேகம் அவனைப் பார்த்த நொடியிலே மறைந்து……….. ஆணி அடித்தார் போல் நின்றாள் தீக்ஷா….

மதுவின் பிடியில் இருந்தாலும்… நிலை தடுமாறாமல் தான் வந்தான் விஜய்…. என்னதான் இருந்தாலும் போதையின் தாக்கம் அவன் கண்களில் இருக்கத்தான் செய்தது….

தீக்ஷா தன் கணவனை பார்த்த நொடியிலே… அவன் குடித்திருக்கிறான் என்று உணர…. கண்ணில் நீர் கரித்தது……

தீக்ஷாவைப் பார்த்தபடியே வந்த விஜய்………… சிரித்தபடி… சாதாரணமாக அவள் அருகில் நெருங்க…. அவனை விட்டு விலகியவளாய்….. மௌனமாய் முன்னே நடக்க…. அவளின் விலகலை உணர்ந்தவன்…. ஒன்றும் செல்லாமல் அவள் பின்னால் சென்றான்…

அவன் சாப்பிடுவதற்காக…. எடுத்து வைக்கப் போக….விஜய்யோ சாப்பிட்டு வந்து விட்டதாக கூறி விட்டு மேலே சென்று விட்டான்….

தீக்ஷா விட்டால் அழுது விடுவாள் போல…. அந்த அளவு மனம் கனமாக இருந்தது…. அவள் அப்பாவோ இல்லை அண்ணனையோ இப்படி ஒருநாளும் அவள் கண்டதில்லை…. தன் கணவனை நினைக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் முத்துக்கள் சிந்த ஆரம்பித்து விட…. அதை விட வேகமாய்த் தன் கண்ணீரைத் துடைத்தாள் தீக்ஷா…

”அவன் குடிக்கிறான் என்று தெரிந்திருந்தால் கூட அவள் காதலிக்காமல் இருந்திருப்பாளா…. அவன் எப்படி இருந்தாலும் அவள் மனம் தான் அவனிடம் சாய்ந்து விட்டதே….. இனி அழுது மட்டும் என்ன பிரயோசனம்” என்று தன்னை நொந்தபடி தங்கள் அறைக்குச் செல்ல…. அவனோ குளியலறையில் இருந்தான்…. வேகமாய்…. தன் படுக்கையை கீழே விரித்தவள்… எங்கே விஜய் வெளியில் வந்தால்… இருவருக்கும் வாக்குவாதம் வந்து விடுமோ என்று….. வராத உறக்கத்தை வருவிக்கும் வகையில்… கண்களை இறுக மூடி தூங்க ஆரம்பித்தாள்…..

தலையைத் துவட்டியபடி வெளியே வந்த விஜய்… தீக்ஷா கீழே படுத்திருப்பதை பார்த்தவன்…. அவள் அருகில் அமர…. தீக்ஷா இன்னும் கண்களை இறுக மூட…. விஜய் அவளை எதுவும் தொந்திரவு செய்யாமல்…. அவளைத் தூக்கப் போக……

அதை உணர்ந்த தீக்ஷா எழுந்தவள்… அவன் கை தன் மீது படாமல்.. ஒதுங்கி அமர்ந்தாள்…

விஜய்க்கு……. அவளின் ஒதுக்கம் கூட வேதனை தர வில்லை…… அவளின் மௌனம் தான் அவனைக் கொன்றது…. எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி இருந்தான்…

“மௌன யுத்தம் பண்றியாடி…. உனக்கு இது அதிகம் ஆச்சே…. பார்க்கலாம்… எத்தனை நாளைக்குனு….” அவளிடம் மனதோடு பேசியவன்….

தம் அடித்ததை விட்டது போல்…. இனி குடிக்கவும் கூடாது என்று தன் மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டபடி….. அவளின் அருகிலே சற்று தள்ளி அவனும் படுக்க…..

தீக்ஷாவுக்கு எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது….. விஜய் மீது கோபம் என்பதை விட…. தான் என்ன செய்ய முடியும் என்ற இயலாமை தான் அவளின் கோபத்திற்கு காரணம்…

ஒருபுறம்…. அவன் கீழே படுத்திருக்கிறான் என்பது வேறு அவள் மனதினை அறுக்க….. எழுந்து அமர்ந்தவள்….

“விஜய் அத்தான்” என்றபோது அவள் குரலா எனும் அளவிற்கு... துள்ளல் உற்சாகமெல்லாம்…. போயிருக்க…

விஜய்யோ…. எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி படுத்திருந்தான்…. அவள் குரல் கேட்ட போதும் மௌனமாகவே இருந்தான்….

வேறு வழி இன்றி….. தீக்ஷாவாகவே அவனின் அருகில் அமர்ந்தவள்….

“பேசக் கூடாதுனுதான் பார்த்தேன்…” என்றவளை அடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல்…. தன்னோடு அணைத்தவன்…

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்…………… பேசலாம்…….. காலையில” என்றவன்….. அதற்குமேல் பேசாமல் கண் மூட ஆரம்பிக்க… தீக்ஷாவுக்குத்தான் தூக்கம் போய் விட்டது எனலாம்……

”கொஞ்சம் கூட இறங்கி வருகிறானா இவன்…. செஞ்சது தப்பு… ஒரு சாரி…. இல்லை சமாதானப் படுத்துற மாதிரி பேச்சு…. இவனை எல்லாம் வச்சுக்கிட்டு… தீக்ஷா….. உன் பாடு கஷ்டம் தாண்டி….” என்று புலம்பியபடி படுத்தவள்….. எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை….

அதிகாலையில் வழக்கம் போல இவள் தாமதமாகவே எழ…. விஜய் அறையில் இல்லை….. அதன் பின் குளியலறைக்குள் நுழைந்தவள்… வெளியே வந்த போது… அவள் கணவனின் எதிர்பாராத அணைப்பில் திகைத்து… பின் தன்னைச் சமாளித்தவள்….

“விடுங்கத்தான்…. போய் குளிங்க….” என்றபடி திமிற….

“சாரி….” என்றவனின் வார்த்தைகள்…………. கிறக்கமாக அவள் காதில் விழ….’

”ரொம்ப சீக்கிரமா சொல்லிட்டீங்க…. ஆமாம் எதுக்கு சாரி அத்தான்” என்று நக்கலாய்க் கேட்டாள்…..

”நைட்டே சொல்லி இருக்கலாம் தான்…. ஆனா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு…. நீ பழமொழி சொல்லி என்னை மொக்கை போட்டுடேன்னா” என்றவனின் வார்த்தைகளில்…. தீக்ஷா கல கல வென சிரிக்க ஆரம்பித்தாள்…

“ஹை அத்தான்…. இது என்ன என்னை மாதிரியே நீங்களும் பேச ஆரம்பிச்சுட்டீங்க…. மொக்கை அது இதுனு… ஹா ஹா” என்று சிரிக்க… சிரித்த அவள் இதழில் அழுத்தமாய் விஜய்யின் இதழ் பதிய………… தீக்ஷாவின் கண்கள் கணவனின் காதலை.. அதன் தாபத்தை.. உள்வாங்கியபடியே மூட…………….. விஜய் அவளை ரசித்தபடியே….. தன் வேலையில் கவனமாய் இருக்க…. தீக்ஷா தான் அவனிடமிருந்து தன்னை விடுவித்தாள்……… விடுவித்தவள் அவன் மார்பில் சாய்ந்த படியே…

”இந்தர் நேத்து நைட் முழுவதும்….உங்களை மனசுக்குள்ளே தாளிச்சுட்டேன்…. சாரி…” என்று வருத்தமாய்ச் சொல்ல

“நீ என்னைக்குதான் என்னை நல்லவனா பார்த்த…. இதெல்லாம் சகஜம் தான் எனக்கு…. நேத்து நைட் என்னை விருமாண்டியா மாற்றி திட்டியிருப்ப…. இப்போ நான் உனக்கு சாதகமா சொன்னவுடனே… இந்தரா மாற்றி காதல்ல உருகுற…. இதுதானே வழக்கமா நடக்குது எனக்கு” என்று சிரித்தபடி சொன்னவனின் வார்த்தைகளை ரசித்தபடி

”இந்தர் எனக்கு இரு சந்தேகம்…. “ என்றவளிடம்…

“என்ன சந்தேகம்…. சொல்லு” என்றவனின் … விரல்கள் அவள் இதழில் கோலமிட…இதழோ மீண்டும் அவள் இதழைச் சரணடைய ஆவலாய் இருக்க….

“நானும் எத்தனையோ கொடுக்கிறேன்… ஆனாலும் ஒரே முத்தத்தில ஆளையே அசரடிச்சுறீங்க…. அது எப்டித்தான்” என்று அப்பாவியாய்க் கேட்க…

”எது…. ஆ ஊ ணா இந்த கன்னத்துல வைக்கிறியே…. அதுக்கு பேர்லாம் முத்தம்னு வெளில சொல்லிடாதாடி…..“ என்று போலி எரிச்சல் காட்ட… இவளோ முறைத்தாள்…

“இனிமேல் பாருங்க…” என்றவளிடம்…

“ஏன் ஸ்ட்ராங்கா….. டேரக்டா இங்கேயே கொடுக்கப் போறியா” என்று தன் இதழைக் காட்ட…

“ஸ்ட்ராங்க் தானே… இனி லைட் கூட கிடையாது….. “ என்று அவனை விட்டு விலக….

”நீ தானே….. பார்க்கலாம்…..” என்றவனிடம்

சிரித்தாள் தீக்ஷா…. அவனிடம் மீண்டும் சாய்ந்தவள்…..

“இந்த பையன் கிட்ட மட்டும் என் சாமர்த்தியம் செல்லவே மாட்டேங்குது….. ” என்றவள் அவன் நெஞ்சத்தில் இதழ் பதித்தாள் வழக்கம் போல்….

”ஹேய் வாயாடி…. உன்கிட்ட நான் ஒண்ணு பேச வந்தால் அப்டியே டைவர்ட் பண்ணி… வேற ரூட்ல கூட்டிட்டு போய்ட்டு இருக்க…..” என்றவன்…..

“என் மேல கோபமே இல்லையா உனக்கு… என்று கேட்க….

“எதுக்கு கோபம்…. ஓ நேத்து தண்ணியடிச்சுட்டு வந்தீங்களே அதுக்கா…. ப்ச்ச்… என்னைக்கோ ஒருநாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்…. ஆனா அடிக்கடி இந்த மாதிரி வந்தீங்க” என்று எச்சரிக்கை செய்தவள்…

“அடிக்கடி வர மாட்டீங்க தானே…. ஆனா அப்படி நீங்க வந்தாலும்…. என்னால ஒண்ணும் பண்ண முடியாது…. ஆனால் அத்தான்… என் இந்தர் கண்ல இருக்கிற காதல், என் இந்தரோட ஸ்பரிசம் இதெல்லாம்…. நேற்று வித்தியாசமா தெரிந்தது… அதைத்தான் தாங்க முடியல” என்ற போதே அவள் குரல் கம்ம… விஜய் உருகித்தான் போனான்

“நான் தம்மடிப்பேன் தெரியுமா….. “

“ஹ்ம்ம்………..” என்றவளின் குரல்தன் கணவனுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களை கேட்க முடியாத ஆதங்கத்தில்……. ஏமாற்றத்தில் ,. இன்னும் உள்ளே போக….

“ஆனால் இப்போ அடிக்க மாட்டேன்…. ஏன்னு தெரியுமா” என்ற போது தீக்ஷா நிமிர்ந்து விழி விரித்துப் பார்க்க…

“என் ரோசக்கார பொண்டாட்டியோட வண்டிக்கு… சாரி சாரி அவளோட பிங்கிக்கு தம் அடிச்சா பிடிக்காதுனு விட்டுட்டேன்….. அவளோட வண்டிக்கே பிடிக்காதுனு விட்டவன்…. அவன் தீக்ஷா செல்லத்துக்கு பிடிக்காதுனு தெரிந்தால்… செய்வானா… இனி…. தண்ணி அடிக்கிறதையும் விடப் போறேன்….. இந்த ரோசக்காரியோட இந்தருக்கு…. அவன் பொண்டாட்டியோட ஒரு நொடி மௌனம் கூட, விலகல் கூட ,பாராமுகம் கூட தாங்க முடியாது..” என்றவனிடம் தீக்ஷா எதுவுமே பேசாமல் இருக்க….

”ஹேய் இப்போ ஒரு முத்தம் எதிர்பார்த்தேனே…. இல்லையா…..” என்று விஜய் கேட்க

“எதுக்கு” என்று புரியாமல் கேட்டாள் தீக்ஷா…

“உனக்காக உன் புருசன் தம்மடிக்கிறதை விட்டுட்டேன்….. தண்ணியடிக்கிறதை விடப் போறேனு சொன்னதுக்குதான்” என்று சிரிக்க…

”ஆமா இவர் பண்ணிட்டிருந்தது எல்லாம் ரொம்ப நல்ல காரியம்… இதை எனக்காக விட்டுட்டேனு சொன்னவுடனே இவருக்கு நாங்க முத்த மழை கொடுக்கனும்…. இதெல்லாம் அடிப்படையா இருக்கணும் அத்தான்…. என் இந்தருக்கு அது இல்லையேனு எனக்கு வருத்தம் தான்” என்று சொல்ல…

மிகப் பெரிய மொக்கை வாங்கிய பாவம் வந்திருந்தது விஜய்யின் முகத்தில்….

“உன்னை புரிஞ்சுக்கவே முடியலைடி….. உனக்காக பண்றேனு சொல்றேன்…. அதுக்கு எஃபெக்ட் இவ்ளோதானா….” என்றவனிடம்

“எனக்காக கெட்ட பழக்கத்தை விட்டுட்டீங்கன்றைதை விட எனக்காக நல்ல காரியம் பண்ணினேனு சொன்னால் எவ்ளோ சந்தோசப் படுவேன் தெரியுமா” என்று விஜய்யை தன் வலையில் அழகாய் சிக்க வைத்தாள் அவள் மனைவி….

”அப்படியா…. சொல்லு… உனக்காக என்ன பண்ணினால் சந்தோசப்படுவாய்…” என்று விஜய் ஆவலாய்க் கேட்க

தீக்ஷா…. உற்சாகமாய்

“எனக்காக…. நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா…. ப்ராமிஸ்” என்று கை நீட்ட

“இப்படி எதுக்கெடுத்தாலும் ப்ராமிஸ் கேட்கிறதை நிறுத்து” என்றபடி….

“சொல்லு…. ஆனா லூசுத்தனமா எதுவும் கேட்கக் கூடாது” என்றவனிடம்..

எச்சரிக்கையாய் இன்னும் சற்றுத் தள்ளி நின்றவள்…

“என் ஃப்ரெண்ட் யுகிய அவன் ஆசைப்பட்ட மாதிரி UK க்கு அனுப்புவீங்களா???. ப்ளீஸ் எனக்காக… பாவம் இந்தர் அவன்…..” என்று சொன்னவளுக்கு…. கணவனுக்கு கோபம் எந்த அளவு வருமோ என்று கூட பயம் தான்….

விஜய் சற்று நேரம் எதுவும் பேசாமல் இருக்க…

”நீங்க ஒத்துக்க மாட்டீங்க…. சரி விடுங்க….” என்று கீழே இறங்கப் போனவளை விஜய் தன் அருகில் இழுத்தான்…

“உன் ஃப்ரெண்ட் அங்க போக ஏன் ஆசைப் படுகிறான்னு…. உண்மையான காரணம் உனக்குத் தெரியுமா…” என்றவனின் கண்கள் அவள் கண்களை நோக்க

பேசாமல் தலை குனிந்தாள் தீக்ஷா….

“உனக்குத் தெரியும்…..என்ன காரணம் சொல்லு பார்க்கலாம்” என்றவனுக்கு மௌனத்தையே பதிலாகத் தந்தாள் அவன் மனைவி…

“என்கிட்ட இப்போ கூட சொல்ல மாட்டீங்கற… ஆர்த்தி தானே காரணம்….” என்று விஜய் சொல்ல…. வியப்பும் அச்சமும் கலந்த பார்வையைக் தீக்ஷா கொடுக்க…..

”அது அது…..” என்று இழுத்தவள்…. இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தபடியே….

“ஆர்த்தியும் ஒரு காரணம்…. ஆனால் வேலைதான் முதல் காரணம்… ஏன்ன யுகி உங்க தம்பி தானே…. உங்க மாதிரி தானே இருப்பான்…. தொழில்தான் முதலில்…. அப்புறம் தான் மற்றது எல்லாம்” என்று கூசாமல் வேறு பொய் சொல்ல….

முறைத்தான் விஜய்…

“இந்த காதுல பூ சுத்துற வேலையை எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ…… அவன் பண்ற மொள்ளமாரித் தனத்துக்கு நீ ஜால்ரா வேற…. உனக்கு அவன் விஷயம் தெரிஞ்சிருந்தும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலைல…. என்னை விட அவன் உனக்கு முக்கியமா போய்ட்டான்..“ என்று கோபமாய் உறும

“அப்டிலாம் இல்லத்தான்… நானே சொல்லலாம்னுதான் நினைத்தேன்…. சொன்னால் திட்டு வாங்குவேனு தெரியும்…. அதுனாலதான்” என்று சமாளிக்க

“உனக்கு சமாளிக்க சொல்லியா தரணும்… அவன் ஆடுறதுக்கெல்லாம் என்னால சரினு சொல்ல முடியாது…. தீனா, ஆர்த்திய அனுப்புனதுக்கு காரணமே யுகி தான் காரணம் தெரியுமா… இவங்க காதல் எங்க ரெண்டு பேருக்குமே தெரியும்….. தீனா இத்தனை நாள் கண்டுக்காமல் தான் இருந்தான்….. இப்போ என்னவோ தெரியலை இப்டி பண்றான்…” என்ற போதே

“யுகிக்கு பயந்துலாம் இல்ல…. உங்களுக்குப் பயந்துதான்…….“ என்று தீக்ஷா பதில் கொடுக்க…

புருவம் சுருக்கிப் பார்த்தான்…

“என்ன பார்க்கிறீங்க…. நீங்கதானே ஆர்த்திய கடத்துனீங்க…” மெதுவாய்ச் சொன்னாள் தீக்ஷா….

”ஆர்த்தி சின்ன வயதில் இருந்து எங்க கூட வளர்ந்தவ…. அவளை நான் கடத்திட்டேனு தீனா பயந்துட்டானா….” என்று சிரித்தான் விஜய்….

”அவன் பாதுகாப்பை எல்லாம் மீறி கடத்திட்டேனுதான் அவன் கோபப்பட்டானே தவிர ஆர்த்தியோட பாதுகாப்பை நினைத்து இல்லை…. அவனுக்கு தெரியும் என்னைப் பற்றி….” என்றவன்…

“ஓ அதுனாலதான்.... அண்ணிய மட்டும்…. பாதுகாப்பா வீட்ல கொண்டு போய் விட்டீங்களா அத்தான்… என்னையெல்லாம் கடத்தி ப்ளாக்மெயில் பண்ண மாட்டாங்கனு தெரிஞ்சுதான்…. அப்டியே விட்டுட்டு போய்ட்டீங்களா அத்தான்…” வார்த்தையில் கிண்டல் இருந்தாலும்…. தன் மனதுக்குள் இருந்ததைக் நறுக்கென்றும் கேட்டாள்… அவள் கணவனுக்கு உறைக்கும்படி….

விஜய்க்கு ஞாபகம் இல்லாமல் இல்லை………

”உன்னை அப்டியே விட்டுட்டு போனாங்கனு உனக்கு தெரியுமா….. உன்னை ராதாவோடு கூட்டிட்டு போகலாம்னு தான் பார்த்தேன்… ஆனால் நீ உன் வண்டியில வந்திருந்த…. உன்னைக் கூப்டா… என் பிங்கி… மங்கினு…. சீன் போடுவ…. அதுனாலதான்….. அப்போ நீ பேசினாலே எரிச்சல் வேற வரும் எனக்கு….. அதுனால… அசோக் கிட்ட சொல்லி…. நீ வீடு வருகிற வரை பாதுகாப்பா வரச் சொன்னேன்…” என்று முடிக்க..

“ஓஓ… அன்னைக்கு வந்தது அசோக்கா….” என்றவள்….

அவனைத் தள்ளி நின்று முறைத்தபடி…

“என் பிங்கிய சந்தடி சாக்கில மங்கினு சொல்றீங்க” மூக்கு விடைத்தபடி அவள் கேட்க…

கண் சிமிட்டிய விஜய்…

”ஏன் நீ மட்டும் தான் பட்டப் பேர் வைப்பியா… நாங்களும் வைப்போம்ல….. பிங்கி.. மங்கி…. அப்டித்தான் சொல்வேன்… போடி…” என்று தன் நிலையெல்லாம் மறந்து அவளோடு வழக்காடிய விஜய்யைப் பார்த்து…

”ஆமா…. பொண்டாட்டிய செல்லப் பேர் வைத்து கூப்பிட தெரியல…. இதுல என் பைக்குக்கு பட்ட பேர் வச்சுட்டேனு….பெருமை வேற…. பேச்சை மாற்றாதீங்க… உங்க தீனாக் கதையச் சொல்லுங்க….” என்று நொடிக்க…..

விஜய் சொல்ல ஆரம்பித்தான்…..

”தீனா ரொம்ப நல்லவன் தீக்ஷா…. அவனோட நட்பை அநியாயமா இழந்துட்டேன்…. இனி அது கிடைக்காதுன்னு தெரியும்…. எல்லாத்துக்கும் என் கோபம், ஈகோ…. பிடிவாதம் தான் காரணம்…

”நானும் தீனாவும் காலேஜ் வரை க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்…. எங்க அப்பாவும் அவன் அப்பாவும் தொழில் தொடங்கி…. உண்டான குடும்ப நட்பு எங்க வரை தொடர்ந்தது…. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் தொடங்க முடிவு பண்ணியிருந்தோம்…. எல்லாமே நல்லாத்தான் போய்ட்டு இருந்தது…. ஒருநாள் ஒர் பார்ட்டில…. போதைல தீனா உளறினான்…. அவங்க அப்பா துணை இல்லாமல் எங்க அப்பா…. ஒண்ணுமே பண்ணியிருந்திருக்க முடியாதுனு…. போதையில இருந்த எனக்கும் கோபம் வந்தது….. வார்த்தைகள் தடித்து…. யார் துணை இல்லாமலும்…. இந்த துறையில் முன்னேறுவேன்னு சபதம் போட்டேன்….. அந்த பிடிவாதம் அப்டியே எங்க ரெண்டு பேரையும்…. மட்டும் இல்லை… எங்க குடும்பத்தையும் பிரிச்சுருச்சு….” அன்றைய நிகழ்வுகளில் பெருமூச்சை விட்டபடி தொடர்ந்தான்….

தீனா தன் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டான் தான்…. நான் தான் மன்னிக்கலை… நான் பண்ணியதெல்லாம் தவறுனு எப்போ தெரியுமா உணர்ந்தேன்…. நீ என்னை மன்னித்து ஏத்துக்கிட்ட நிமிடத்தில்தான் உணர்ந்தேன்…. ஆனாலும் இன்னும் என் ஈகோ… இந்த நிமிசம் வரைக்கும் என்னை அவன் கூட பேச விட மாட்டேங்குது….. என்று உண்மையிலேயே வருத்தப்பட்டுச் சொல்ல…. தீக்ஷாவுக்கு உண்மையிலேயே இந்த தகவல் எதிர்பாராத ஒன்றாக இருந்தது…..

தீனா… விஜய் இருவரும் இந்த அளவுக்கு நெருக்கமானவர்களா…. தன் கணவன் இந்த அளவுக்கு வருந்துகிறான் என்றால் தீனா கண்டிப்பாக…. நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தவளாய்….. அவனையே பார்த்தபடி இருந்தவள்…

“இதெல்லாம் ஒரு சண்டை… இதுக்கு இந்தியா-பாகிஸ்தான் ரேஞ்சுக்கு பில்டப் வேற…..” என்ற போதே கணவனின் முறைப்பில்… பேச்சை மாற்றியவள்…

”யுகி- ஆர்த்திய சேர்த்து வைங்க பாஸ்…. உங்க சண்டை எல்லாம் சீக்கிரம் தீர்ந்திடும் பாருங்க…. ரெண்டு பேரும் சேர்ந்து கண்டிப்பா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணுவீங்க… இதெல்லாம் நடக்கனும்னா…. யுகிய அனுப்பி வைங்க அத்தான் …. சிடுமூஞ்சி அண்ணனுங்க தொல்லை இல்லாம லவ் பண்ணட்டும்…. என்ன ஒரு காதல் தெரியுமா…. பார்க்காமலே போன்லயே லவ்ஸ்….. அதெல்லாம் உங்களுக்கு எங்க புரியும்… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எனக்காக….”

கெஞ்சினாள் தீக்ஷா…. அப்போதும் இறங்காமல் இருக்க….

“உங்ககிட்ட போய்க் கெஞ்சுறேன் பாருங்க…. என்னைச் சொல்லனும்….” என்றபடி…. அறையினை விட்டு வெளியேறப் போக…..

”நில்லு….” என்ற விஜய்யின் குரல் தடுத்து நிறுத்தியது….

“உன்னைத் தூது விட்டவன்கிட்ட போய்ச் சொல்லு….. இன்னும் 3 மாதம் கழித்து….. அவனை அனுப்புறேன்னு” என்று முடிக்க…

“அது என்ன 3 மாசம்” என்று எதிர்க் கேள்வி கேட்டவளைப் பார்த்து முறைக்க…

“இல்லை… அவன் கேட்பான்… பதில் சொல்லனும்ல….” அசடு வழிந்தாள் தீக்ஷா

“ரொம்ப அக்கறைதாண்டி….” என்றபடி…

”நான் தொழில் ரீதியா கொஞ்சம் பிஸி ஆகிடுவேன்…. அப்போ அவன் சுரேந்தருக்கு உதவியா இருக்கணும்…. அதனால் தான்…. தென்… ஆர்த்தி விசயம் எனக்குத் தெரியும்னு இப்போதைக்கு அவன்கிட்ட சொல்லாத……….” என்று அவன் முடிக்கவில்லை…………..

தன் நண்பனிடம் சொல்ல தீக்ஷா வேகமாய் ஓட…. அவளை எட்டிப் பிடித்தான் விஜய்….

“காரியம் ஆன உடனே கழட்டி விட்டுட்ட பார்த்தியா… நீ இலஞ்சம் எதுவும் கொடுக்காமலே நீ கேட்ட விசயத்துக்கு ஓகே சொல்லியிருக்கேன்ல…. என்றவனிடம்….

”லைட்டாகவும் கிடையாது…. ஸ்ட்ராங்கும் கிடையாது…..” என்று தீக்ஷா சொல்ல…. விஜய் அப்பாவியாய்ப் பரிதாபப் பார்க்க.. உதட்டைச் கேலியாய் சுழித்த தீக்ஷா

”3 நாள் கழித்து பெரிய ட்ரீட்டே தருகிறேன் என் இந்தருக்கு அப்டினு சொல்ல வந்தேன்” என்றபடி போனவளை விடுவானா விஜய்…

“நீ உன் ட்ரிட்டை 3 நாள் கழித்து கொடு.... இப்போ என் ஸ்ட்ராங் கிஸ்ஸ வாங்கிட்டு போ” என்று அவளை தன்னொடு இழுத்து அணைத்தவன்……….. அழுத்தமாய் இதழ் பதித்து அவளைத் திணறடித்து விட்டுதான் விட்டான்…

----

யுகியிடம் தீக்ஷா விசயத்தைச் சொல்ல… யுகி மகிழ்ச்சிக் கடலில்….அப்போதே கனவில் மூழ்க ஆரம்பித்தான்….

”தீக்ஷா… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தீக்ஷா…. “ என்றவனிடம்….

“ஆர்த்திய கவனிக்கிறதோட… கொஞ்சம் உங்க அண்ணாகிட்ட சொல்லிட்டு போகிற காரியத்திலயும் கவனம் வச்சுக்கோ…. இல்லை இங்க எனக்கு பாட்டு கிடைக்கும் “ என்று தீக்ஷா சொல்ல….

யுகி கண்ணடித்தான்…

“எங்க அண்ணாதான் சூப்பரா பாட்டு பாடுவார்ல…. அதைக் கேட்க கசக்குதா என்ன” என்று சொல்ல

”ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கேவா… இது சரிப்படாது…… நீ போறதுக்கு முன்னாடியே இந்தப் பேச்சு பேசுற… போய்ட்டு வந்தேனா என்னைலாம் மதிக்க மாட்ட………. உனக்கு இந்தியாதான் லாயக்கு… போன்ல லவ் பண்றதுதான் தலவிதினு இருக்கும் போது யாரால மாத்த முடியும்…..“ என்று மிரட்ட….

”ஐயோ…. அண்ணி… என் தெய்வமே…. உங்களுக்கு எதிரா இந்த யுகி ஒரு வார்த்தை பேசுவானா…. என்னை மன்னிச்சு ஏத்துக்கங்க….” என்றவனைப் பார்த்து சந்தோசமாய் சிரித்த தீக்ஷாவின் சிரிப்பில் கலந்த இதே யுகிதான் ஒருநாள் தன் அண்ணனின் நிலை தாங்காமல்……….. அவளிடம் பேசாமலும் இருந்தான்…………

2,268 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


கல்யாண வாழ்க்கை முதல் மூன்று மாதங்கள் எப்போதும் சொர்க்கம் தான்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page