top of page

அன்பே நீ இன்றி-37

அத்தியாயம் 37:

அந்த வளாகம்……. இரவின் நிசப்தத்தில் மருத்துவமனைக்குரிய அமைதியைத் தாங்கி இருக்க…….. விஜய் தன் கைகளில் ஒரு பெண்ணை தாங்கி இருந்தான்…………… முகமெங்கும் கோரமாய்………………… உயிருக்கு போராடிக் கொண்டிருக்க…… விஜய் மனமெங்கும் வலியோடு………. அவன் கண்களில் தேடல்……………. தேடல் மட்டுமே இருக்க………….. அவனை விட்டுத் தூரமாய்… வெகுதூரமாய்…. தீக்ஷா கண் மூடி காட்சி தர……………. அவளைப் பார்த்தபடியே... அவளை நோக்கிப் போனவனின் கண்களில் சந்தோசம் இல்லை…………… தன் கையில் இருந்த பெண்ணை அப்படியே விட்டுப் போகவும் மனம் இல்லாமல்……… தீக்ஷாவினை நோக்கிப் போக… அவளுக்கும் அவனுக்காமான இடைவெளி அதிகமானதே தவிர….. இடைவெளியும் குறையவில்லை… அவளை நெருங்கவும் முடியவில்லை……….. தன்னை விட்டு விலகி விலகி போனவளின் கொடுமை தாள முடியாமல்……….’தீக்ஷாஆஆஆ” என்று அலறியபடி எழுந்தான்…………………. விஜய்……………. ஆனால் அவனால் எழ முடியவில்லை……… தீக்ஷா அவன் தோளில் சாய்ந்து படுத்திருக்க…. தன் கண்களை விரித்து…. தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த தீக்ஷாவை பார்த்த பின்னும் விஜய்க்கு அந்தக் கனவின் தாக்கம் குறையவே இல்லை…

மீண்டும் மீண்டும் தன்னவளைத் தொட்டுப் பார்த்தவனுக்கு தீக்ஷா தன்னருகில் தான் இருக்கிறாள்… என்று முழுவதுமாய் நம்பிய பின்னே தான் பெருநிம்மதி வந்தது.

தன்னவளை இன்னும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன்……….. கண்ணிமைக்காமல் தீக்ஷாவைப் பார்த்தபடியே இருந்தான்….

புது மணப் பெண்ணுக்கு இருக்கும் வழக்கமான பொலிவோடு……… நேற்றையை இரவில் தன்னோடு ஒன்றாகிப் போன நினைவில் உடலெங்கும் நாண ரேகைகள் ஓடி…… அவள் முகத்தைச் சிவக்கச் செய்திருக்க…. அதை பார்த்தபடி இருந்த விஜய்யின் முகத்திலோ இப்போது கவலை ரேகைகள் ஓடி அவன் முகத்தை வெளிரச் செய்தது… இப்போது வந்த கனவின் நினைவுகள்….

இத்தனை நாள் வரை எப்போதாவது வரும் அதே தெளிவற்ற கனவுதான்…. இன்று அதன் தெளிவை… அதன் காட்சியைக் காட்ட ….விஜய்க்கு நினைக்க நினைக்க பயங்கரமாய் தலை வலிக்க ஆரம்பித்து இருந்தது….

இத்தனை நாள் தெளிவாய் தெரியாத காட்சிகள்தான் அவனை குழப்பியது …என்ன கனவு என்று தெரியாமல் குழம்பியவனுக்கு….. இன்று கனவின் காட்சிகள் தெரிந்தாலும் அதன் காரணம் புரியவில்லை… தீக்ஷாவுக்கு ஏதோ தீங்கு… என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.. அது மட்டும் இல்லை… தங்கள் திருமண வாழ்க்கையில்… தங்கள் வாழ்க்கையத் தொடங்கிய முதல் இரவிலேயே ஏன் இந்தக் கனவு…. இதற்கு முன்கூட இரண்டு மூன்று முறை எப்போது வந்தது என்று யோசித்தவனுக்கு…

ஓரளவு விளங்கியது….. அவனின் விபரம் அறியாத வயதிலேயே அவனுக்கு இரண்டு முறை இதே போல கனவு .. அதற்கும் தீக்ஷாவுக்கும் சம்பந்தமிருக்குமா என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை…. ஆனால்…

தீக்ஷாவை முதன் முதலாய் பார்ப்பதற்கு முன் , அதன் பிறகு…. தன் விட்டில் முதன் முதலாய் காலடி எடுத்து வைத்த போது…. அதன் முந்தைய நாள்….

தீக்ஷா முதன் முதல் பார்த்த போது, அவள் முதன் முதல் தன் வீட்டுக்கு வந்த போது…. இப்போது… இப்போது அவளோடு வாழ்க்கையை ஆரம்பித்த போது….. விஜய்க்குள் கலவரம் அதிகமாகத் தொடங்கி…. அவன் உடல் அவனையுமறியாமல் நடுங்கியது…..

“இது என்ன கனவு…………. என்னை விட்டு உன்னை எங்கேயும் போக விட மாட்டேண்டி………… ஆனா பயமாயிருக்கே தீக்ஷா………” என்று தனக்குள் அரற்றியவனின் மனமும் உடலும் அதிர்ச்சியில் நடுங்கத்தான் செய்தது…..

கனவாக இருந்த போதிலும்…தன் கையில் இருந்த இன்னொரு பெண் தீக்ஷா இல்லை என்று மட்டும் அவனால் நன்றாக உணர முடிந்தது…. அந்தப் பெண் யார்… என்று ஒருபுறம் யோசிக்க ஆரம்பித்தவனுக்கு… அவன் இருந்த பட படப்பில் தொடர்ந்து யோசிக்கக் கூட முடியவில்லை….”ஏதோ ஒரு கனவு என்றும் விட முடியவில்லை…” குழப்பமாய் உழன்றவனுக்கு தூக்கம் சுத்தமாய் தொலைந்து போக….

அப்போது அலாரம் சத்தமாய் அடிக்க ஆரம்பிக்க….. விஜய்க்கு … எங்கு அடிக்கிறது என்றே தெரியவில்லை… கட்டிலின் அருகே இருந்த மேஜையின் மேல் இருந்த தீக்ஷாவின் மொபைல் அடித்துக் கொண்டிருந்தது…

“இந்த கும்பகர்ணி…. 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவாளா….. நம்ப முடியவில்லையே…” கிண்டலாக எண்ண ஆரம்பித்தவனுக்கு கனவின் தாக்கம் மெல்லக் குறைய…. எழுந்து ஆஃப் செய்வாளா… என்று தீக்ஷாவைப் பார்க்க…. அவளோ கொஞ்சம் கூட அசையவில்லை….

“சரி தானாவது… எழுந்து போய் அணைப்போம் என்று அவளை நகர்த்தி எழப் போக…. அவளோ …

“இந்தர்……… எங்க போறிங்க” …………. என்று தூக்கத்திலேயே கேட்டாள்………….

“அலார்ம் அடிக்குதும்மா...உன் பக்கம் இருக்கு…. ஆப் பண்ணு” என்றவனிடம்

“ப்ச்ச்… எனக்கு தூக்கம் வருது…. நீங்களே ஆஃப் பண்ணிடுங்க” என்றவளின் பதிலில்…

”உன்னலாம் திருத்த முடியுமா…” என்றவன் அவளை விட்டு எழப் போகத் தடுத்து நிறுத்திய தீக்ஷா… அவன் மேலே புரண்டு அந்தப் பக்கம் போக….. இப்போது அவளின் போனை எடுத்து அணைத்தவனுக்கு… சற்று முன் வந்த கனவின் அச்சம் அவனிடமிருந்து போய்… தீக்ஷாவும் தூங்க வில்லை என்பது புரிய……. மனைவியிடம் தன் வேலையை ஆரம்பித்தான்…

”தீக்ஷா………… தூக்கம் வரலை….. பேசிட்டு இருப்போமா” என்று வலை விரிக்க……………

தீக்ஷாவாவது மாட்டுவதாவது………………..

”நீங்க தானே… நல்லா பேசுவீங்க……. உங்க வாய் பேசுமா…. இல்லை கை பேசுமானு எனக்கு மட்டும் தான் தெரியும்…. எனக்கு தூக்கம் வருது… நீங்களும் தூங்குங்க… காலையில எல்லோர் முன்னாடியும் தூங்கி விழுந்திராதீங்க….” என்று அவனுக்கு வேறு அறிவுரை கூற

”எல்லாம் நேரம்” என்று முணுமுணுத்தவனை… தன்னோடு கட்டிக் கொண்ட நாயகியின்…. அணைப்பில்….. தலைவலி போய்…. மீண்டும் உறக்கம் தழுவியது…..

-------

தீக்ஷா விழித்தபோது மணி 8………….. லேசாய்க் கண் திறந்து பார்க்க… அவள் முன் விஜய் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்……………

“குட்மார்னிங் அத்தான்” என்றவளிடம்………..

“மணி எட்டு” என்று விஜய் பதிலாய்ச் சொல்ல….

“குட்மார்னிங் சொன்னா….. பதிலுக்கு குட்மார்னிங் சொல்லணும் அத்தான்……….. “ சொன்னவளுக்கு அதன் பின் தான் அவன் சொன்ன 8 மணி ஞாபகம் வர....... வேகமாய் எழுந்து உட்கார்ந்தவள்…. தலையில் கைவைத்தவளாய்…….

“என்னது எட்டு மணியா… அலார்ம் வச்சேனே… அதை நீங்க ஏன் ஆஃப் பண்ணுனீங்க…. இப்போ பாருங்க லேட்… சாரி சாரி…” என்று அவனுக்கு பயப்படுவது போல் பாவனை காட்ட… அவளைக் குளியலறைக்குள் தள்ளிய விஜய்…. அவளிடம் வம்பு செய்யவும் தவறவில்லை……………..

அதன் பின் தீக்ஷா தயாராக ஆரம்பிக்க………….. புது மணமகனாய் விஜய்யும் தன் லீலைகளை ஆரம்பிக்க……… அதற்கெல்லாம்………….. புது மனைவியாக சமாளித்தவள்…. அவனிடம் கேட்டாள்….

“விஜய் அத்தான்…. 5.30 க்க்லாம் எழுந்துடுவிங்கள்ள… யுகி சொல்லி இருக்கான்…. எக்செர்சைஸ் பண்ண கொஞ்சம் லேட்டா வந்தால் கூட திட்டுவீங்களாம்… பாவம் என் ஃப்ரெண்ட் “ என்றபடி அவன் கேசத்தைக் தன் கைகளால் கலைக்க…

தன் மடியில் இருத்தியபடி…….

“சார் உங்ககிட்ட கம்ப்ளெயிண்டா….” என்றவன்

“விஜயேந்தர்க்கு கோபம் வரும்….. ஆனால் தீக்சாவோட இந்தருக்கு வராது” என்றவன் கண் சிமிட்டியபடி… சொன்ன காதல் வார்த்தைகளில்………..லேசாய் வெட்க்கப்பட………. அவளை ரசித்தபடி…..

“விஜய் அத்தான் எப்டிம்மா இந்தர் ஆனான்” என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன்……. அதே வேகத்தில்

“அம்மா கோவிலுக்கு போகனும்னு கீழ வரச் சொன்னாங்க…. போகலாமா” என்று அவளைத் தன்னோடு அணைத்தபடி வெளியே வர…. ஞாபகம் வந்தவனாய்…..

“தீக்ஷா….. ஒரு விசயம்…. என்று தயங்கியவன்….

“3 மன்த்ஸ்…. என்னால எங்கேயும்…. நகர முடியாது… என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட்…. அதுக்காக கொஞ்சம் வொர்க் பண்ண வேண்டும்…. சோ புரிஞ்சுக்கோ… அதுனால… இந்த” என்று இழுக்க… தீக்ஷா அவன் அந்த வாக்கியத்தை முடித்தாள்….

”இந்த ஹனிமூன்….. அது இதெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்க கூடாது” என்று அவனைப் போலவே பேசிக் காட்டியவள்…. இன்னும் தொடர்ந்தாள்..

“அதுக்கப்புறம்….. இந்த ப்ராஜெக்ட் ஒக்கே ஆகிருச்சுமா.. சோ இதைக் நல்லபடியா முடிச்சுக் கொடுக்கனும்….. அதுனால நிறையா உழைக்கணும்ன்னு” அடுத்து சொல்வீங்க… இப்படியே அடுத்த ப்ராஜெக்ட்…. உங்களைப் பத்தி தெரியாதா… ஆனால் நான் உங்க பொண்டாட்டின்றதை மட்டும் மறக்காம வச்சுகோங்க” என்றவளிடம்

“சரிங்க மேடம்…. வேணும்னா… உங்க பேரை இங்க எழுதிடுங்க…” என்று தன் நெஞ்சைக் தொட்டுக் காட்ட….

அவன் சொன்ன அடுத்த வினாடி

“தீக்ஷா விஜய்” என்று கைகளால் எழுதி முடித்தவள்….. இப்போதைக்கு இது போதும்…. தேவைப்பட்டால்……………… பச்சை குத்திடுவேன்…. பி கேர்ஃபுல்………….. என்றபடி………..கை காட்டி சிறு குழந்தை போல் மிரட்ட……….. அவளுக்கு விஜய்யும் பயந்தவனாய் நடிக்க………… ”இது…. இந்த பயம் இருக்கட்டும் என் இந்தர்க்கு” என்று அவள் சிரிக்க…. விஜய்யும் அவளின் சிரிப்பில் கலந்தவன்……..வெளியே வந்தபின் அவளை விட்டு விலகி நடக்க…. தீக்ஷாவோ அவனை விடாமல்…………. அவன் கைகளோடு கோர்த்தபடி வர…. விஜய்…………..

”இந்த வீட்டில்….. நீ நான் மட்டும் இல்லை…. என்று கீழே காட்ட…………… இருவரின் குடும்பமும் இருவருக்காக……. காத்துக் கொண்டிருக்க…. மனமில்லாத போதும்… நாகரீகம் கருதி……. விஜய்யின் கைகளை தீக்ஷா விடப் போக…………… அவள் உணர்வைப் புரிந்த விஜய்… தன் சுண்டு விரலை மட்டும் அவளிடம் கொடுக்க…. சந்தோசத்தில் தீக்ஷா தன் இதழை அவன் முகத்தில் பதித்து……… அதே வேகத்தில் எடுத்திருந்தாள்………….

அவள் இதழ் பதித்த அதிர்ச்சியில்…. அதை அனுபவித்தானோ… இல்லையோ… யாரும் பார்த்து விட்டார்களோ…. என்று விஜய்யோ வேகமாய் கீழே பார்க்க… நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை… நிம்மதிப் பெருமூச்சு விட்டவன்…………. அவளை முறைக்க…. அவனளோ

“இதெல்லாம் புதுசா கல்யாணவங்களுக்கு சகஜம்…. இப்போதானே உங்களுக்கு மேரேஜ் ஆகி இருக்கு………..பழகிடும்…………. வாங்க” என்று கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் அலட்சியமாய்ச் சொல்லியபடி……….. நகர…. அவளின் அதிரடியான செய்கையில் அடைந்த அதிர்ச்சியில் விஜய் அங்கேயே நிற்க… அவனையும் இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் தீக்ஷா………..

படிகளில் இறங்கும் போது விஜய்……… தன்னை மீட்டெடுத்த விஜய்…. வழக்கமான விஜய்யாய் கம்பீரமாய் நடக்க……….

தீக்ஷாவுக்கு அனைவரையும் பார்த்த பின்னால்… நாணம் வர…..சற்று பின் தங்கியே வர… கீழே இருந்தவர்களின் மனங்களோ மகிழ்ச்சியில் நிறைந்தது……….

ஜெயந்திக்கு மட்டுமே கொஞ்சம் பயம் இருந்தது…… இப்போது தீக்ஷாவின் முகத்தில் இருந்த சந்தோசமும்… அதில் இருந்த பூரிப்பும்……….. பார்த்தவளுக்கு……. நிம்மதியில் உள்ளம் கூத்தாட…..அன்னையாய் கண்களில் ஆனந்தம் வர……………. தன் அருகில் வந்த தன் மகளை……… அன்போடு அணைத்தாள்……..


தன் அன்னையிடம் சாய்ந்தபடியே….

“ஹேய் வைஜெயந்தி ஐபிஸ்…… என்ன திட்டாம…. என்னையே பார்த்துட்டு இருக்கீங்க……….” என்றவளை தன் கைகளால் நெட்டி முறிக்க…

“அத்தை…. உண்மையச் சொல்லுங்க…. இனி இவ தொல்லை இல்லைனு தானே ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறீங்க” என்று யுகி கிண்டல் செய்ய… தன்னைக் கிண்டல் செய்த யுகியை விடுவாளா… வேகமாய் ராதாவிடமிருந்த சுனந்தாவினை வாங்கிய தீக்ஷா….

”சுனோ செல்லம் அத்தை சொல்றதை சொல்லுங்க….. ஏ ஃபோர்…. ஆ” என்று ஆரம்பிக்க…

கிண்டல் செய்து கொண்டிருந்த யுகி சட்டென்று அடங்க…. நிறுத்தினாள் தீக்ஷாவும்…

விஜய்க்கும் சுரேந்தருக்கும்….. யுகியின் அமைதி புரிய…. தீக்ஷா அவனைக் கிண்டல் அடித்ததின் மூலம்… தீக்ஷாவுக்கும் யுகியின் காதல் தெரிந்திருக்கிறது என்பதும் விளங்கியது….

விஜய் மட்டும் தன் மனைவியை நினைத்து பெருமிதம் அடைந்தான்….

நேற்று இரவு…. அவ்வளவு பேசியவள்…. ஒரு வார்த்தை கூட யுகியின் காதல் பற்றி தன்னிடம் வாய் திறக்க வில்லை அவள்… நட்பின் ரகசியத்தைக் கணவனிடம் கூட வெளிப்படுத்தாமல் இருக்கும் தன் மனைவியின் குணத்தை நினைத்து அவனுக்கு பெருமையாகத்தான் இருந்தது….

இருந்தும்… அவளாகச் சொல்லும் வரை.. தானும் வாய் திறக்கக் கூடாது என்று முடிவெடுத்த விஜய்….. சுற்றம் மறந்து விஜய் தன்னவளையே பார்த்துக் கொண்டிருக்க………… தீக்ஷாவும் அவன் பார்வை உணர்ந்தவளாய்………. நிமிர்ந்து பார்த்தவள்…. ஆட்கள் சுற்றி இருக்கிறார்கள் கைகளால் சைகை செய்ய……………………… ”இங்கே வா” என்று விஜய்யும் அவளைப் போலவே கண்களால் சைகை செய்ய…………. இருவரின் மௌன மொழிகளை அங்கு யாரும் கவனிக்கவில்லை………… சேருமிடம் மட்டுமே அடைய…. தீக்ஷா அதைப் புரிந்து அவனருகில் வந்து அமர.......... பேச்சு மொழி இன்றி… மௌன மொழியின் அத்தியாவசியத்தை விஜய்…….. என்கின்ற இந்தருக்கு உணர்த்த ஆரம்பித்திருந்தாள் அவன் மனைவி……………….

-----------------

நாட்கள் வாரங்கள் ஆக… வாரங்கள் ஓடி…. மாதம் ஒன்றும் முடிந்திருக்க… விஜய்….. தீக்ஷா இருவரும் ஒருவரின் மேல் ஒருவருக்கு இருந்த காதலை ஏதாவது ஒரு வகையில் புரிந்து கொண்டும்…. உணர்த்திக் கொண்டும்…… தங்கள் காதல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்…

அன்றைய தினம்…. விஜய் எப்போது தாமதமாகத்தான் வருவான்………. வழக்கம் போல் அவனுக்காக தீக்ஷா காத்துக் கொண்டிருக்க…. அவனுக்கு பதில் குறுஞ்செய்தி வந்திருந்தது… தனக்காக காத்திருக்க வேண்டாம் என்று…. இருந்தும் அவனுக்காக காத்திருக்க… விஜய்யும்… சுரேந்தரும் சேர்ந்தே வந்தனர்…

வந்த இருவரின் முகமுமே சரியாக இல்லை….. ஏதோ பிரச்சனை என்று தீக்ஷாவுக்கும் புரிய…. அவளின் முகத்திலும் கவலை ரேகை தானாக வர… தன் கணவனைப் பார்க்க…. விஜய்யோ வேகமாய் தன் அறைக்குச் சென்று விட… தீக்ஷாவும் அவன் பின்னே சென்றாள்…

தன்னை ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வெளியே வந்தவனைப் பார்க்க…. முதலில் இருந்த இறுக்கம் எல்லாம் விஜய்யிடம் இப்போது இல்லை…. இவளைப் பார்த்து புன்னகைக்க….

“ஏதாவது பிரச்சனையா அத்தான்…” என்று கவலையோடு விசாரித்தவளை தன்னைருகே இழுத்தவன்….

“பிரச்சனைதான்…. பட் பெருசா இல்லை” என்றவனின் ஈரமான வெற்று மார்பில் சாய்ந்தவள்…

“உங்களுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… நீங்க வெளியில சாப்பிட்டு வந்திட்டீங்க… உங்க மேல தீக்ஷா கோபமா இருக்காத்தான்…. “ என்று செல்லம் கொஞ்சியவளிடம்….

“சாரி….” என்றவன்… அவளை விலக்கியபடி…. சுரேந்தர்கிட்ட பேசனும்…. லேட் ஆகும்ம்மா.. வெயிட் பண்ணாமல்…. சாப்பிட்டுட்டு தூங்கு…தீக்ஷா” என்றவன் அவனது அலுவலக அறைக்குச் செல்லத் தயாராக…

“சுரேந்தர் அத்தானுக்கும் உங்களுக்கு பிரச்சனையா அத்தான்.. அவர் முகமும் சரியா இல்லையே” என்றபோதே அவள் குரலில் கலக்கம் அதிகமாய் ஆக….

”அவனுக்கும் எனக்கும் பிரச்சனையா… இது வேற விசயம்… இளமாறன் விசயமா… நான் சமாளிச்சுருவேன்…. நல்ல பிள்ளையா… தூங்கு” என்றவனிடம்

தலைசாய்த்து கண்சிமிட்டியவள்….

“நல்ல பிள்ளையா தூங்கிடுவேன்… எழுப்பக் கூடாது” என்று கோரிக்கை வைத்தபடி குறும்பாய்க் அவனிடம் வம்பிழுக்க..…

”வாயாடி…” அவள் இதழ்களை தன் கையால் சுண்டியவன்

”இந்த நல்ல பிள்ளைய எப்படி கெட்ட பொண்ணா மாத்துறதுன்னு இந்த வாயாடிப் பொண்ணோட இந்தருக்குத் தெரியும்…” என்றவன் அவளின் இதழில் தன் இதழைப் பதித்து……… விட்ட போது………. கிறக்கத்தில் அவனோடு ஒண்றியவளிடம்….

“ஜஸ்ட் 1 ஹவர் டா…. வெயிட் பண்ணுவீங்கதானே மேடம்” என்ற போதே……….

“1 ஹவர் தான்…….. இல்லை………. நல்ல பொண்ணு உங்க தம்பி முன்னாடியே கெட்ட பொண்ணாகிடுவேன்” என்ற மிரட்டித்தான் வெளியே அனுப்பினாள் தீக்ஷா…

……………..

விஜய் முன் சுரேந்தர் அமர்ந்திருந்தான்… சுரேன் கோபமாக இருப்பதை அவனின் முகமே விஜய்க்கு காட்ட…

“டேய்… இப்போ எதுக்குடா …. இவ்வளவு டென்சன் ஆகிற… நான் இளமாறன் கிட்ட பேசிட்டேண்டா…. அவன் மேல எந்ந் தப்பும் இல்லைடா… அவனுக்குத் தெரியாமலே நடந்திருக்கும் போல… அவனும் ஃபீல் பண்ணினான்… இனிமேல் எச்சரிக்கையா இருக்கேன்னு சொல்லி இருக்காண்டா…” என்று அவனின் கோபத்தைத் தணிக்கும் வகையில் பேச….

எரிச்சலும் கோபமும் வந்து விட்டது சுரேந்தருக்கு

“ஏன் அண்ணா… இன்னமுமா அவனை நம்புறீங்க….. நாலு பில்டிங்குக்காக வாங்கின மெட்டீர்யல்ஸ்லயும் தரமில்ல… அது கூட கண்டுபிடிக்க முடியாதபடி….. ஒவ்வொரு பிராஜெக்ட்லயும்…. வேறு வேறு மெட்டீரியல்ஸ்…. அது எப்டின்னா அவனுக்கு தெரியாம இருக்கும்…. நேருக்கு நேரா மோதுற தீனா கூட பரவாயில்லண்ணா… இவன் சரி இல்ல….. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க…. நான் மட்டும் கண்டுபிடிக்காம போயிருந்தா…. நீங்க இத்தனை நாள் வாங்கி வச்சுருந்த பேர் எல்லாமே எங்களால போயிருக்கும்… விஜய் பில்டர்ஸ்னா இருக்கிற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு அண்ணா” என்று முடிக்கும் போது சுரேந்தர்… நெகிழ்வாய் இருக்க..

விஜய் பில்டர்ஸ் உருவானதே போட்டியில் தான்………………. தனக்கும் தீனாவுக்குமான நட்பு போய்… அவனோடான போட்டியில்….. விஜய்க்கு இப்போது நினைத்தாலும் மனம் கனத்தது…. தீனாவின் நட்பு இனி அது ஒருபோதும் கிடைக்காது என்றாலும்… தீனாவின் நட்புக்காக மனம் ஏங்கத்தான் செய்தது….. தீனா போதையில் பேசிய வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு…. அதை மறக்காமல் அவனுக்கு போட்டியாக….. விஜய் பில்டர்ஸை ஆரம்பித்து…. வேதனை தாங்க முடியாமல் விஜய் பின்னால் கண்களை மூடியவனுக்கு அவன் மனைவியின் குணம் நிழலாடியது… தீக்ஷாவின் குணம் மட்டும் அவனுக்கு இருந்திருந்தால்…. ஒரு நல்ல நட்பை இழந்திருக்க மாட்டான் தான்….

இனி நினைத்து என்ன பிரயோஜனம்… இப்போதும் இவன் மனம் வைத்தால் கூட தீனாவுடனான நட்பு மீண்டும் உருவாகலாம்…. தீக்ஷா மாதிரி மன்னிப்போம் மறப்போம் என்ற குணமா இவனுக்கு………. அவன் ஈகோ அவனை கீழே இறங்க விட வில்லை….

இப்போது இளமாறனின் நட்பு….. ஏனென்று தெரியவில்லை…. தான் அவனுக்கு வாக்கு கொடுத்து அதைக் காப்பாற்ற முடியாத போதெல்லாம்…. இளமாறன் இவனின் நட்பை விடாமால் இவனோடு இருக்கிறான் என்ற எண்ணமே…. விஜய்க்கு அவனின் நட்பை விட முடியாமல் தவிக்க விட… சுரேந்தரோ இன்று அவன் மேல் புகாரோடு வந்து நிற்க…. கொஞ்சம் தடுமாறினான் தான் விஜய்…

இளமாறனிடமும் பேசி விட்டான்…. ஆனால்………. அவனுக்கே தெரியாமல் நடந்த பொறுப்புக்கு பாவம் இளமாறன் என்ன செய்ய முடியும்…. அதைச் சொன்னால் சுரேந்தர் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறானே என்று வேதனைப் பட்டான் விஜய்….

ஒருவழியாக சுரேந்தரைச் சமாதானப் படுத்தியவன்….

“இனிமேல் இது மாதிரி நடந்தால் கண்டிப்பா… இளமாறனோட பார்ட்னர்ஷிப்பை பற்றி யோசிப்போம்டா….. எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க வேண்டாமே… என்னால ரெண்டு முறை பாதிக்கபட்டவன் சுரேன்…’ என்று சொல்லிப் பார்க்க…

“அண்ணா… உங்க முடிவு எதுவாக இருந்தாலும் நான் இதுவரை உங்களை மறுத்துப் பேசியிருப்பேனா…. ஆனா இளமாறன் எனக்குப் பிடிக்கலை… எனக்குப் பிடித்தவங்களைக் கூட உங்களுக்காக விட்டுக் கொடுப்பேன்… ஆனால் பிடிக்காத இளமாறன் கூட முடியலைண்ணா …… எனக்கு நடிக்கத் தெரியாது…. ப்ளீஸ்…. நான் அவனோட சேர்ந்து இனி வொர்க் பண்ண மாட்டேன்” என்று பிடிவாதமாய் மறுத்து விட்டான்… சுரேந்தர்…..

விஜய் எவ்வளவோ எடுத்துக் கூறியும்… சுரேந்தர் கேட்கவே இல்லை… இளமாறனுக்காக சுரேந்தரை விட்டு விட முடியுமா… இதற்கு நல்ல தீர்வு எடுக்க முடிவு செய்தவன்….

சரி… இனி இளாவோடு சேர்ந்து பண்ண வேண்டாம்.. நம்ம பிராஜெக்ட்ஸ்லாம் தனியாக நீயே பாரு…. என்று சொல்ல… சுரேந்தர் நிம்மதி ஆனான்… அதன் பிறகு…. இருவரும் சகஜமாகி… தற்போது நடந்த தவறினால் தடைப்பட்ட வேலைகளை எல்லாம் சரிக்கட்டுவது என்று சுரேந்தர் விவாதிக்க ஆரம்பிக்க…. விஜய்யோ சுரேந்தர் அறியாமல் தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க…. தீக்ஷா சொன்ன 1 மணி நேர அவகாசத்தை எப்போதோ கடந்து போய் இருந்தான் விஜய்… ஆனால் சுரேந்தரிடம் அதைச் சொல்லாமல்… சொல்ல முடியாமல் சுரேந்தர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்…. அவஸ்தையாய்….

அப்போது எதேச்சையாய் நிமிர…. தீக்ஷா அறை வாசலில் முறைத்தபடி நின்று கொண்டிருந்தாள்… விஜய்… கண்களிலே அவளிடம் அவகாசம் கேட்டவனாய்….

சுரேந்தரிடம் என்ன சொல்லி… இங்கிருந்து கிளம்பலாம் என்று யோசிக்க ஆரம்பிக்க … தீக்ஷாவோ அவனிடம் சைகையில் பேச ஆரம்பித்தாள்..

1 ½ மணி நேரம் கடந்து விட்டது ஒரு விரலை உயத்திக் காட்டி… அதில் பாதியை மறு விரலால் வெட்டிக் காண்பிக்க…

இவனோ அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தபடி இருக்க… ஒரு கட்டத்தில் சுரேன் ஏதோ சந்தேகம் என்று ஃபைல்களில் பார்வையை ஓட விட… அந்த சந்தர்ப்பத்தில் விஜய் தீக்ஷாவிடம் கெஞ்சினான்…

”5 மினிட்ஸ் ப்ளீஸ்” என்று விரல் குவித்து கெஞ்சி கொஞ்சி,…… அவளை அந்த இடத்தை விட்டு போகச் சொல்ல.. அவளோ போகாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தாள்…

அவன் கவலை அவனுக்கு… எங்கு சுரேந்தர் முன்னால் ஏதாவது செய்து விடுவாளோ என்று…. சுரேந்தர் இன்று இருக்கிற கடுப்பில் அவ்வளவுதான்…. நினைக்கும் போதே நிமிர்ந்த சுரேந்தரிடம்…

விஜய் பேச ஆரம்பிக்கப் போக….

”அண்ணா… அந்த ஃபைல் இது இல்லை… என் ரூம்ல இருக்கு போல… நாம நாளைக்கு பேசலாமா” என்று கேட்க….

நிம்மதியாய் ஆன விஜய்…. பெருமூச்சு விட்டபடி வேகமாய் விஜய் தலை ஆட்ட… சுரேந்தர் வெளியேறினான்.. உள்ளுக்குள் சிரித்தபடி….……………..

வெளியில் அறை வாசலில் நின்று கொண்டிருந்த தீக்ஷா… அந்த அறையில் இருந்த வெளியே வந்த சுரேந்தரைப் பார்த்து…... “குட் நைட் அத்தான்… அப்புறம் தேங்க்ஸ்” என்று குறும்பாய் சொல்ல….

சுரேந்தர் அவளிடம்

“மேடம்… சைகைலை பேசுறதுலாம் சரிதான்… ஆனா எனக்கு முன்னால இருந்த சன்னல் கண்ணாடியைப் பார்க்கலையா….” என்று நக்கலாய்ச் சொல்ல…

தீக்ஷாவா அசருபவள்…

“சுரேன் அத்தான்… சன்னல் கண்ணாடி தெரியாமலா சைகை பண்ணினேன்… தெரிஞ்சுதான் பண்ணினேன்….. என் ஆளு நான் சொன்ன உடனே அப்டியே வந்துருவாரு பாருங்க…. என்ன சொல்றதுன்னு இன்னும் யோசிச்சுட்டு இருப்பாரு… நீங்க அப்டியா… கண்ணாடில் பார்த்ததினாலதானே இப்போ கிளம்புறீங்க… ஸ்மார்ட் சுரேந்தர் அத்தான் ல…. நீங்க” என்று பெரிய ஐஸ் கட்டியை அழகாய்த் தூக்கி வைக்க…

இதுவரை முகத்தில் இருந்த கடுமை எல்லாம் போய்ச் சிரிக்க ஆரம்பித்தான் சுரேந்தர்…..

”அப்போ தெரிஞ்சே பண்ணுனியா… “ என்றவன்….” உன்னை….. ” என்று போலியாய் மிரட்டியவன்…

“பாவம் எங்க அண்ணன்… அவரை இந்தப் பாடு படுத்துற” என்றபடி….

”போ தலைவர்…. வெயிட்டிங்க்,… நான் வேற டென்சன் பண்ணிட்டேன்… கூல் பண்ணு” என்றவன்…. வேகமாய் அவளைக் கடந்து செல்ல…. தீக்ஷா உள்ளே நுழைந்தாள்…

விஜய் அவன் இருக்கையிலேயே கண் மூடி அமர்ந்திருக்க… அறைக்கதவை மூடியவள்….

அவன் மடியில் அமர….. கண் மூடியபடியே அவளைத் தன்னோடு சாய்த்தவனிடம்….

“என்னத்தான்………….. ரொம்ப டென்சனா இருக்கீங்களா……..” என்று கேட்க………..

“ப்ச்ச்………. அதெல்லாம் இல்லை“ என்று பெரு மூச்சு விட்டவன்………..

“கொஞ்ச நேரம் பேசாம இரு” என்று அவளை அணைத்தபடியே அமர்ந்திருக்க…

“பேசாம இருக்கணுமா…. அது மட்டும் என்னால முடியாதுப்பா… அதை ஸ்டாப் பண்ணனும்னா என் இந்தரால மட்டும் தானே முடியும்…… விஜய் எப்போ இந்தர் ஆகப் போறீங்க…” என்று அவனின் தற்போதைய நிலையை மாற்ற முயல……………….

“இந்த தீக்ஷா பக்கத்தில் இருந்தாலே இந்த விஜய் இந்தர் தாண்டி” என்றவன்…………. தன் கவலை எல்லாம் ஒதுக்கி வைத்தவன்….. வேகமாய் எழ…. தீக்ஷாவோ அங்கேயே நின்று கொண்டிருக்க…

“என்ன” என்று பார்வையை வீசினான் அவள் கணவன்

”எக்ஸ்ட்ரா அரை மணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்ல…. கால் வலிக்குது அத்தான்…………” சிணுங்கியவளிடம்……….

பதில் ஏதும் பேசாமல்…….. அப்படியே அவளை அள்ளியவன்……………. தன் அறையில் வந்து… படுக்கையின் அருகில் இறக்கி விட….…

”அத்தான்…. இப்போலாம் நீங்க தூக்கி தூக்கி…. நடந்து போகவே பிடிக்க மாட்டேங்குது….” என்றவளின் வாயிலேயே செல்லமாய் இரண்டு அடி போட்டவன்….

“மவளே… யாரும் இல்லைனு உன்னைத் தூக்கிட்டு வந்தா… நீ இன்னும் பேசுவ… இதுக்கு மேலயும் பேசுவ……. உன்னை……….. “ என்றனிடம்

“ஏன் யாருமில்லைனால் தான் தூக்குவீங்களா…. எல்லாருக்கும் முன்னால உங்களை நான் தூக்க வைக்கவா” என்று சவாலாய்க் கேட்க

“அது மட்டும் நடக்காது மேடம்” என்றவனிடம்…

”ஹலோ சார்… கண்டிப்பா நடக்கும்.. பார்க்கலாமா” என்று அவனோடு வீம்பாய்ச் சொல்ல…

”நடக்காத ஒண்ணைப் பற்றிலாம் பேசக்கூடாது கண்ணம்மா” என்று இவனும் சளைக்காமல் போட்டி போட… அவனை சிரித்தபடி பார்த்தபவள்…

“நான் இறந்து போய்ட்டேனா… என்னை உங்க கையால தூக்க மாட்டீங்களா” என்று கேட்க….. விஜய்க்கு ஏனோ கனவின் ஞாபகம் வர கலக்கம் அவன் கண்ணில் வர..

‘அப்போ எல்லார் முன்னாலயும் என்னைத் தூக்குவீங்க தானே…. என்கிட்டலாம் போட்டி போட்டீங்கன்னா தோத்துப் போய்டுவீங்கத்தான்” என்றவளின் பேச்சுக்கு… விஜய்யின் கைகள்தான் பதில் சொல்லின… அவளின் கன்னத்தில்…

“அத்தை உன்னைத் திட்டும் போதெல்லாம் …. ஏன் இப்படி திட்டுறாங்கன்னு நினைப்பேன்…. கரெக்ட்தாண்டி… பேசுறதெல்லாம்… “ என்று கடுப்பாய் பேசிய போதே…. அதையும் சாதரணமாக எதிர்கொண்டவள்

“அடப் போங்கத்தான் நெருப்புனா வாய் வெந்திடுமா என்னா… எங்க அம்மாவை விட நீங்க ரொம்ப செண்டிமெண்ட் பார்க்கிறீங்க… டூ பேட்” என்றவள்…..

”வலிக்குது….” என்றபடி…………..அவன் உதடுகளில் தன் கன்னத்தை வைக்க…

”போடி……ஒண்ணும் கிடையாது…. நீ பேசுன பேச்சு இங்க வலிக்குது” என்று தன் இதயத்தைக் காண்பிக்க….

“இவ்வளவுதானா.. வலிக்கு மருந்து கொடுத்தா போச்சு” என்றபடி அவன் மனைவி வைத்தியம் பார்க்க ஆரம்பிக்க…. அவனும் நோயாளியாய் மாறி தனக்கு எங்கெங்கே வலி என்று ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தான்…………….

கடந்த கால நினைவில் இருந்த விஜய்… ரண வேதனையில் துடிக்க ஆரம்பித்தான்…. அவனின் இந்த வலிகளெல்லாம் நீங்கும் காலம் வருமா………… அவன் வலிக்கான மருந்து அவனுக்கு மீண்டும் கிடைக்குமா………….???????????

2,321 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

1 Comment


நெருப்பு என்றால் சுடாது தான்... ஆனால் நெருப்பு பட்டால்......

Like
© 2020 by PraveenaNovels
bottom of page