அன்பே நீ இன்றி-36

அத்தியாயம் 36:

திருமண உற்சவங்கள் எல்லாம் முடிந்து….தீக்ஷா விஜய் இருவரும் தம்பதி சகிதமாய் …. விஜயேந்தர் வீட்டில்… ஒரு நல்ல நேரத்தில் அடி எடுத்து வைத்தனர்….

நெருங்கிய உறவினர்கள் புடை சூழ தீக்ஷா மாடி அறையில் இருக்க… இனி இருவரும் தனியறையில் சந்திக்கும் வரை…. தனித் தனியே இருக்க வேண்டும் என்பதால்… விஜய் கீழே வந்து விட்டான்….

தீக்ஷாவுக்கு தனக்கு முதல் இரவு என்பதை விட விஜய்யை எப்போது இனி பார்க்க முடியும்… அவனோடு பேச முடியும் என்று தவித்துக் கொண்டிருக்க…. அப்போது….விஜய்யே தீக்ஷாவை போனில் அழைத்தான்…

அவனின் அழைப்பைப் பார்த்ததும்…. தனியாகத்தான் பேச தன் கணவன் அழைக்கிறான் என்று நினைத்தவளாய்தீக்ஷா வேகமாய் போனை எடுக்க… அவனோ யாரோ ஒரு முக்கியமான உறவினர் வந்திருப்பதாகச் சொல்லி கீழே அழைத்தான் அவளை..

பெரு மூச்சு விட்டவளாய்…..

இவனுக்கும் ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரம் போல…. தீக்ஷா… உன் பாடு கஷ்டம் தான் போல என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள்…. கீழே இறங்கினாள்…

கீழே விஜய் தன் தந்தையின் அருகில் அமர்ந்து பெரியவர் ஒருவரிடம் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தான்… அவர்தான் அன்று ராதா திருமணத்தில் விஜய்யிடம் தீக்ஷாவை திருமணம் செய்யச் சொன்னவர்….

தீக்ஷாவும் ராதாவுமாய் இறங்கி வர…. தீக்ஷாவைப் பார்த்ததும் அந்தப் பெரியவர் சத்தமாகச் சிரித்தபடி விஜய்யின் தந்தையிடம்