அன்பே நீ இன்றி-33

அத்தியாயம் 33:

அந்த ஹோட்டலின்… கார்ப் பார்க்கிங்கில் தன் வண்டியை நிறுத்தியவள்….. பைக் கீயை சுழற்றியபடி துள்ளல் நடை போட்டு…. ஹோட்டலின் உள்ளே வந்தாள்….

நடை துள்ளளாக இருந்தாலும்… அவள் மூளைக்குள்…. யாரிடமும் சொல்லாமல் இங்கு வந்தது சரியா தவறா என்று வேறு இருக்க….

“என்ன ஆகப் போகுது….. என்னை யார் என்ன பண்ணிடுவாங்க…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்….பார்வையைச் சுழற்றினாள்…. தன் பார்வை வட்டத்தில் இளமதி சிக்குகிறாளா என்று நோட்டமிட்டவள்… இளமதியின் எண்ணிற்கு மீண்டும் கால் செய்தாள்….

“இளமதி எங்க இருக்கீங்க” என்றவளின் முன் இளமதியே வந்து நின்று புன்னகைக்க…. தீக்‌ஷாவும் பதிலுக்கு அவளுக்கு புன்னகையை சிந்தியபடி…..

”எதற்காக இளமதி தன்னை சந்திக்க வேண்டும் என்று கால் செய்தாள்” என்ற சிந்தனை உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது…..

கிட்டத்தட்ட 10 நிமிடம் எந்த ஒரு பேச்சும் இல்லாமல் அமைதியாக போய்க் கொண்டிருந்தது…..

தீக்‌ஷா இளமதியிடம் எதுவும் பேசாமல்… இளமதி ஆர்டர் செய்த பழரசத்தை மிகவும் கண்ணும் கருத்துமாக குடித்துக் கொண்டிருக்க… இளமதியோ உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாள்….

பின் தானே பேச்சை ஆரம்பித்தாள்…

”கங்கிராட்ஸ் தீக்‌ஷா“ வெளியில் புன்னகையும் உள்ளுக்குள் நஞ்சினையும் தேக்கியவளாய் தீக்க்ஷாவுக்கு திருமண வாழ்த்துக்களை சொன்னாள் இளமதி…

அவளின் வாழ்த்தினை ஏற்றுக் கொண்ட தீக்ஷா… மீண்டும் பேசாமல் இருக்க….

இளமதியே மீண்டும் எரிச்சலுடன் தீக்‌ஷாவுடன் பேச ஆரம்பித்தாள்

“தீக்‌ஷா நீ வாய் ஓயாமல் பேசுவேனு கேள்விப்பட்டிருக்கிறேன்….. ஆனால் எதிர்மாறா அமைதியா இருக்கிறாயே” என்ற போது…

“ஹ்ம்ம்…. ஆனால் உங்ககிட்ட பேசுறதுக்கு எதுவுமே இல்லை இளமதி…. அதுமட்டுமில்லாமல் நீங்கதான் என்கிட்ட பேசனும்னு சொன்னீங்க” என்றபடி மீண்டும் ஜுசைப் பருக ஆரம்பித்தாள்….

”ஏன் என்கிட்ட பேச விசயம் இல்லை…. விஜய் …. போதாதா… நாம ரெண்டு பேரும் பேசுறதுக்கு” என்றாள் இளமதி….. இப்போது இளமதியும் சூடாகவே பேச ஆரம்பித்திருக்க

தீக்ஷாவுக்கு சுள்ளென்று ஏறியது…. இளமதியின் ‘விஜய்’ என்ற உச்சரிப்பில்… வந்த கோபத்தை அடக்கியவள்…

“விஜய் அத்தானா”…. என்று குழப்பான பாவனையில் முகத்தினை மாற்றியவள்….

“ஓ…… உங்களுக்கும் அவருக்கும் பேசி இருந்தாங்கள்ள…. யுகி சொல்லி இருக்கான்…. “ என்றவள்…..

ஆனால் உங்களுக்கோ… விஜய் அத்தானுக்கோ இதுல பெருசா இஷ்டம் இல்லைனு கேள்விப் பட்டேன்….” என்று இழுக்க…

இளமதி ஒருமாதிரியாகச் சிரித்தாள்….

“இஷ்டம் இல்லைனு நான் உன்கிட்ட வந்து சொன்னேனா தீக்ஷா… இல்லை விஜய் கிட்ட சொன்னேனா…. இல்லை விஜய் சொன்னாரா…. அவருக்கு இஷ்டம் இல்லைனு…“

“என்ன பண்றது….. விதினு ஒண்ணு இருக்கே…… உன்னை மேரேஜ் பண்ணிக்கிறப் போறவர் வராமல் போய்ட்டாராமே…. விஜய்க்கு தங்கை மேல ரொம்ப பாசம்…. அவ புகுந்த வீட்ல…. பிரச்சனைனு தெரிந்த பின்னால் வேற வழி இல்லாமல் உனக்கு ஓகேனு சொல்லிட்டாரு………….“ என்று இகழ்ச்சியாகச் சொல்ல….

தீக்ஷா அவளைக் கூர்மையாகப் பார்த்தாள்… பின் அப்பாவியாக முகத்தை மாற்றி…

“ஓஓஒ பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கிறார்னு சொல்றீங்களா இளமதி” என்று கேட்க

இப்போதுதான் தீக்ஷா தன் வலையில் விழுந்திருக்கிறாள் என்று உணர்ந்த இளமதி…

“கண்டிப்பா தீக்ஷா…. நல்லா யோசிச்சுப் பாரு…. நீ விஜய்யை மேரேஜ் பண்ணிக்கிட்டா கண்டிப்பா சந்தோசமா இருக்க மாட்ட….. விஜய் ஒரு சுயநலவாதி…. அன்னைக்கு என்னை மேரேஜ் பண்ணிக்கிறேனு சொன்னான்… இன்னைக்கு உன்னை…. இது கூட ஏதோ ஒரு வகைல அவனுக்கோ அவன் குடும்பத்துக்கோ நன்மையா இருக்கப் போய்த்தான் உனக்கு ஓகே சொல்லி இருப்பான்…. தீக்ஷா நல்லா யோசி…..” என்று விஜய்யை ஒருமையாக பேச ஆரம்பிக்க

தீக்ஷா அமைதியாக இருந்தாள் சில நிமிடங்கள்….

”இப்போ உங்க பிரச்சனை என்ன இளமதி” கொஞ்சம் எரிச்சலும் அவள் குரலில் தெரிந்தது….

இளமதி கோபமாகக் கேட்டாள்…

”எனக்குப் பிரச்சனையா…. லூசா தீக்ஷா நீ…. உன்னைப் பற்றி…. உன்னோட பிரச்சனை பற்றி பேசிட்டு இருக்கேன்…. உனக்குப் புரியலையா…. விஜய்யை நம்பாத… நம்ப வச்சு கழுத்தறுத்துறுவான்…. முதலில் என் அண்ணனை…. அதுக்கப்புறம் என்னை…. கண்டிப்பா உன்னையும்… ஒருநாள்” என்று அழுத்தமாக கூறி நிறுத்த…

தீக்ஷாவும் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள்…. நேருக்கு நேராக இளமதியைப் பார்த்தவள்…..

“உங்க அண்ணன் என்ன ஏமாந்தார் இளமதி…. இன்னொருத்தனை விரும்புற ஒரு பொண்ணை கூசாம நான் கட்டிகிறேன்னு சொன்ன உங்க அண்ணனை நம்பி ஏமாந்தது விஜய் அத்தான் தான்…. நல்ல வேளை எங்க அண்ணி கடைசி நேரத்தில் தப்பிச்சுட்டாங்க…. அடுத்து…………………… நீங்க என்ன ஏமாந்தீங்க இளமதி….. உங்ககிட்ட ஆசை வார்த்தை பேசி ஏமாத்திட்டாரா விஜய் அத்தான் சொல்லுங்க” என்று கேட்க

“ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்….” புருவம் உயர்த்திய இளமதி…

”உன் வருங்காலக் கணவனுக்கு பலமான சப்போர்ட்தான் …. பின்ன வசதியான இடம்…. பையனும் ஹீரோ மாதிரி இருக்கான்….. விடுவியா நீ… விஜய் மாதிரியான ஆளு உனக்குலாம் தேடுனாலும் கிடைப்பானா…. அதுதான் நீ இப்டி பேசுற….. உனக்கும் விஜய்க்கும் ஏணி வச்சாலும் எட்ட முடியாது…. அவரோட குணநலன் எல்லாம் எனக்கு இளா அண்ணா சொல்லி இருக்காரு….. அது,,, அந்த குணங்கள் தான் எனக்குப் பிடிச்சது…. ஹ்ம்ம்….. பார்க்கலாம் என் முன்னாடிதானே நீங்க வாழப் போறிங்க… உன்னை மாதிரி ஒரு பொண்னோட அவன் எப்படி வாழப் போறான்னு…...” என்று கூற…

“இளமதி நீ விஜய் அத்தானை விரும்பினாயா…. சொல்லு” என்று கேட்டாள்….

தீக்ஷாவுக்கு மனம் முதல் முறைத் திடுக்கிட்டது……. இருந்தும்… விஜய் மனதில் அவள் இல்லை என்பதால்… ஒருதலைக் காதலுக்காகவெல்லாம் தன் காதலை விட முடியுமா என்று தனக்குள் ஆறுதல் சொன்னாலும்… தீக்ஷாவிடம் மட்டும் அவன் என்ன காதலையா சொன்னான்……… மனம் கொஞ்சம் படபடப்பானது என்னவோ உண்மைதான்… இருந்தும் தன் பதட்டத்தை மறைத்து அவளையே பார்த்தபடி இருந்தாள்…

சில நொடிகள்…. அமைதியாக இருந்தாள் இளமதி…

பின்

‘ஹ்ம்ம்… ஆனா அது இறந்த காலம்…. இப்போ இல்லை… உன்னை மாதிரி ஒருத்திய மேரேஜ் பண்ண ஓத்துக்கிறேனு சொன்னவர்க்குலாம் என் மனசில் கண்டிப்பா இடம் கிடையாது….. என்னோட தகுதிகெல்லாம் உன் கூட பேசுறதே அதிகம்” என்று கேவலமான பார்வையைப் பார்க்க….

“ஆனா நான் உன்கிட்ட பேசனும்னு சொல்லலையேமா இளமதி… நீதான் என்கிட்ட வலிய வந்து பேசி… என்கூட தனியா பேசனும்னு சொன்ன…. ஓகே…. என்கூட பேசுறதெல்லாம் உன் குணத்துக்கு இழுக்குனா… நான் கிளம்பறேன்…” என்றபடி…. எழுந்தவள்

மீண்டும்…. அமர்ந்து…

“விஜய் அத்தானை மறந்துட்டேனு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்… ஏன்னா… என்னோட விஜய்….. சாரி,…. விஜய்னு நீ கூப்பிட்டுடேல்ல… என்னோட இந்தர் வேற யார் மனசிலயும் விளையாட்டா கூட இருக்கக் கூடாது…. அப்புறம் இன்னொரு விசயம்…. இந்தர் பரிதாப்பபட்டு என்னை ஏத்துக்கிட்டார்னு சொன்னேல… பரிதாபப்பட்டாவது என்னை ஏத்துக்கிட்டாரேனு எனக்கு சந்தோசம்தான்ப்பா….. “ என்றவள் இளமதியை சிரிப்போடு பார்க்க.. அவளோ

“நீ அவ்ளோ கேவலமானவளா…. ஒருத்தன் உன்னை பரிதாபப்பட்டு ஏத்துக்கிட்டான்னு சொன்னா சுயமரியாதை உள்ள எந்த பொண்ணும் வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போய்ட்டே இருப்பா…. நீ என்னடாவென்றால்” இளமதி முகத்தைச் சுழிக்க

தீக்ஷாவுக்கு உள்ளுக்குள் சிரிப்பாய் வந்தது…

“நல்ல வேளை எனக்கும் விஜய் அத்தானுக்கும் நடந்த உள்நாட்டுக் கலவரமெல்லாம் இவளுக்கு தெ.ரியாது… தெரிஞ்சுருந்தால் இன்னும் கேவலமா ஆகி இருக்கும்…… ஏதோ தப்பிச்சேன்….” என்று பெருமூச்சு விட்டவள்…

இளமதியிடம் மீண்டும்

“இன்னொரு விசயம் சொல்லவா…. விஜய் அத்தான் என்னை காதலிக்கிறாரா? இல்லை பரிதாபப்பட்டு ஏத்துக்கிட்டாரா? இதெல்லாம் அடுத்த விசயம்…..ஏன்னா நான் என் அத்தானை விரும்புகிறேன்…. என்னைப் பிடிக்கலைனா கூட அவர் என் கூடத்தான் வாழனும்…. அவரே நினைத்தாலும் … என்னைய பிடிக்கலைனாலும் கூட என் கூடத்தான் இனி அவர் வாழ்ந்தாகனும்…. இல்லை எனக்குள்ள ஒளிஞ்சுட்டு இருக்கிற வில்லி கேரக்டரை வெளியில எடுத்தாவது அவர் கூட நான் சேர்ந்திருவேன்…. என்றவள்…. கண்சிமிட்டியபடி…

“நான் ஹீரொயினா இல்லை வில்லியானு என் ஆளு முடிவெடுக்கிற டெஷிஷன்ல தான் இருந்தது,…. நல்ல வேளை… விஜய் அத்தானுக்கு நல்ல நேரம் போல…. எனக்கு ஓகே சொல்லி என்னை ஹீரோயினா மாத்திட்டாரு…. “ என்று தோரணையாகப் பேசியவள்…

“என்னடா நாம வில்லி ரேஞ்சுக்கு இவள மிரட்ட வந்தா இவ வில்லி மாதிரி பேசுறாளேனு பார்க்கிறியா….. நான் கண்ணாடி மாதிரி இளமதி….” என்றவள்..”

”அடடா என் கேரக்டரா இப்போ முக்கியம்…. கடைசியா நான் சொல்ல வருவது என்னன்னா….. என் இந்தரை நான் லவ் பண்றேன்…. அவருக்கே என்னைப் பிடிக்கலைனா கூட என்னை அவர் காதலிச்சுதான் ஆகனும்… என்னையும் அவரையும் பிரிக்கனும்னா அது மரணம் மட்டும் தான் போதுமா…. மேரேஜ் டேட் தெரியுமா… தெரியாதா……… என்றவள்

இளமதி மொபைலை எடுத்து தங்கள் திருமண தேதியை செட்யூலில் போட்டவள்... “… கைக்கடிக்காரத்தைப் பார்த்தபடி….

”ச்சேய்…. இந்த நேரம் என் இந்தரோட ட்ரீம் ல இருந்திருப்பேன்…. கெடுத்துட்ட…” என்று அசால்ட்டாகச் சொன்னபடி…

“கூல்ட்ரிங்ஸுக்கு பே பண்ணிடு…. என் டைம வேஸ்ட் பன்ணதுக்கு அதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்” என்று கிளம்பியவளை… கைப்பிடித்து தடுத்து நிறுத்தி தீப்பார்வை பார்த்தாள் இளமதி…

ஆனால் தீக்ஷாவோ

“ஹலோ மேடம் என்னைத் தொட்டு பேசுனா உங்க ஸ்டேட்டஸ் … உங்க மரியாதை எல்லாம் கீழ இறங்கிடப் போகுது…. கைய விடறீங்களா ….” என்றவள்…. அவளின் முறைப்புக்கு சற்றும் சளைக்காமல்….

“உன்னை முதல் முதலா மீட் பண்ணும் போது உன்னை கூப்பிட்டு பை சொன்னேனே அன்னைக்கே நீ யார்… உன் குணம் என்னனு எனக்கும் தெரியும்… இருந்தும் எங்க அண்ணியோட அண்ணன் மனைவியா ஆகப் போறேன்ற ஒரே எண்ணத்திலதான் வலிய வந்து பேசினேன்…. சும்மா என்னை டென்சன் ஆக்காத…… எனக்கு அது ஒத்து வராது… உனக்கும் ஒரு அட்வைஸ் பேபி….. நீயும் ரொம்ப கோபப்படாதா….கூல் பேபியா இரு ஒகே வா….” என்று தன்னைப் பிடித்திருந்த அவளின் கையை தட்டி விட்டவள்…. அதே வேகத்தில் அங்கிருந்த பேரரை அழைத்தவள்…

“எக்ஸ்க்யூஸ்மி…. மேடத்துக்கு கூலா ஜில்லுனு எ