அன்பே நீ இன்றி-32

அத்தியாயம் 32:

விஜய் தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்……. இந்த மாதிரி சூழ்னிலையில் அவனுக்கு துணையாய் இருப்பது சிகரெட்தான்…….. அதற்கும் அவளுக்கு துணையாக வரப் போகிறவள் தடை போட்டு விட்டாள்….

”என்னமாய் பேசுகிறாள்… அவளுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லயாம்..அவ வண்டிக்குத்தான் பிரச்சனையாம்…. வண்டினு சொன்னா கூட சண்டைக்கு வந்துடுவா…. எல்லாருக்கும் பட்டப் பேர்… எனக்கு விருமாண்டி.. அதுக்கு பிங்கியாம்…..” என்று ஒருபுறம் திட்டினாலும்… வீட்டுக்கு வர மாட்டாளா… என்று இன்னொரு புறம் அவன் மனம் ஏங்க….

“அவ வரலைனா என்ன நாம நம்ம அட்டெண்டென்ஸ அவ வீட்ல போட்ருவோம் என்று அது விஜய்யா என்று அவனுக்கே சந்தேகம் வரும்படி….. அவன் காதல் மனம் அவனுக்கு எதிராக அந்தர் பல்டி அடித்து தீக்ஷாவுக்காக ஏங்கியது…

இதில் ஒரே ஆறுதல் திருமணம் முடிந்து தான் வருவேன் என்று அவள் சொல்லாமல் சொன்ன ஒரே விசயம் தான்….

கடந்த 2 வாரங்களாக அவன் சிந்தையை முழுமையாக ஆக்கிரமித்து…… அவனை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தாள்… நிச்சயத்திற்கு முந்தின நாள் வரை எங்கிருந்தாலும் வாழ்க என்று மனதை தேற்ற நினைத்துக் கொண்டிருந்தான்…. இப்போதோ அவன் மனநிலை வேறு மாதிரி இருந்தது…. முழுமையாக மனம் காதலில் கலந்து பூரிக்கவும் முடியாமல், ஒரு பக்கம் குழப்பமாகவும், ஒரு புறம் திகிலாகவும்…. ஏதேதோ உணர்வுகளில் அவன் போராடிக் கொண்டிருந்தான்… பண்ணியதெல்லாம் மன்னிக்க கூடிய ஒன்றா…. இதுவே அவன் மட்டும் அவளிடத்தில் இருந்திருந்தால்…. தன்னை அவமானப் படுத்திய யாராய் இருந்தாலும் ஒரு வழி பண்ணியிருப்பான்.. தீபன் கூட எப்படி தன்னை மன்னித்தான்…

“நானாக இருந்திருந்தால்….. இப்