அன்பே நீ இன்றி-31

அத்தியாயம் 31:

தீக்ஷா மிகுந்த சந்தோசத்தில் இருக்க………………. விஜய்யோ கொஞ்சம் குழப்பத்தில் இருந்தான்…… தீக்ஷா எப்படி தன்னை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாள்…. விஜய்யால்.. தன் மீது அவளும் காதல் கொண்ட காரணத்தினாலே அவள் சம்மதித்திக்கிறாள்…. என்ற கோணத்தில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை….. அந்த அளவிற்கா அவன் அவளிடம் நடந்திருக்கிறான்… முதல் சந்திப்பில் இருந்து…… அன்றைய மாடியறை நிகழ்ச்சி வரை…. அவனுக்கும் தீக்ஷாவுக்கும் எந்த நிகழ்வுமே சுமூகமாக இருந்தது இல்லை….

எப்படி அவள் சம்மதித்தாள்??????….

காரை ஓட்டியபடி வந்த விஜய்க்குள் இந்த எண்ண ஓட்டமே இருக்க…..அப்போது…. அவனின் மொபைல் திடிரென்று ஒலி எழுப்ப… விஜய் வேகமாய்ப் பார்க்க…………..அது ’தீக்ஷா’ என்றிருந்தது….…………

விஜய்யின் சந்தோசத்திற்கு அளவே இல்லை………….. இருவரிடமும் போன் நம்பர்கள் இருந்தாலும் இதுவரை எந்த வித தொடர்பு பறிமாற்றங்களும் இல்லை…………….. விஜய்க்கு அந்த மெஸேஜை திறந்து பார்க்கும் முன்னே ஒரு மாதிரி படபடப்பாய் வந்து விட்டது…..

அவனுக்கே அவனது இந்த நிலை…………. ஒரு மாதிரி அதிகப்படியாகத்தான் தோன்றியது…………. இருந்தாலும் அதை சந்தோசமாக அனுபவித்தான்……. காதலில் தகித்துக் கொண்டிருந்த அவனுக்கு……………. அவன் மனம் நிறைந்தவளின் சம்மதம்………… இதமாக இருந்த போதும்…… அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை…………. . எந்த வித சமாதானமும் இல்லாமல்….. தான் அவளுக்கு செய்த கேவலமான காரியங்களைக் கூட மறந்து…. மன்னித்து தன்னை ஏற்றுக் கொண்டதே அவனைக் கொன்றது…. இப்போது தீக்ஷாவின் குறுஞ்செய்தி வர…. அது அவன் மனதை மழைச்சாறலாய் குளிர்விக்கத் தான் செய்தது….

அதே சந்தோசத்தோடு…… வேகமாக படித்துப் பார்க்க….