அன்பே நீ இன்றி -30

அத்தியாயம் 30:

அன்று விஜய்-தீக்‌ஷாவின் திருமண நாள் என்பதால் அனைவரும் கோவிலுக்கு குடும்பத்தோடு கிளம்பினர்………………அனைவரும் சந்தோசமாக இருந்தனர் என்று மட்டுமே சொல்ல வேண்டும்…. பரிபூரண சந்தோசம் என்பது கேள்விக்குறியே…… விஜய்க்கு கூடத் தெரியாமல்…… இன்று தீக்‌ஷாவிடம் உண்மையை எல்லாம் சொல்லி விட வேண்டும் என்றுதான் கலைச்செல்வி,ராதா மற்றும் ஜெயந்தி முடிவு செய்திருந்தனர்………… ஆனால் இவர்கள் ஒன்று நினைக்க………விதி செய்த விளையாட்டில் இவர்கள் மூலமாக தெரியாமல்… பார்வதியின் மூலம் தீக்‌ஷாவுக்கு உண்மை தெரிந்து விட்டது…. ஆனாலும் விஜய்யின் பிடிவாதம் போன பாடில்லை….. ஆக மொத்தம் விஜய்-தீக்‌ஷா வாழ்க்கையிலும் பெரிதாக மாற்றமில்லை என்பதை உணர… சுரேந்தர், யுகேந்தர் தவிர…. மற்றவர்களுக்கு….. விஜய்யின் பிடிவாதத்தால் கொஞ்சம் மன வலிதான்….

காரில், விஜய்யின் அருகில் அமர்ந்திருந்த தீக்‌ஷாவுக்கு இதுநாள் வரை இல்லாத ஒரு உரிமை உணர்வு இன்று வந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்…………… அவனைப் பார்த்தபடியேதான் வந்தாள்…………….. அவளுக்குள் ஆயிரம் சந்தேகங்கள்………. விஜய் தன் கணவன் என்ற பதிலைத் தவிர………………வேறு ஒன்றுக்கு கூட விடையில்லை……….. இன்று தன் திருமண நாள் என்று தெரியாத தன் நிலை…….. ம்ஹ்ஹும்ம்……….திருமணம் ஆனதே தெரியாத தன் நிலை…………… அமைதியாகவே தீக்‌ஷா அவனையே பார்த்தபடி வர…. விஜய்யோ அவள் புறம் திரும்பவே இல்லை…………………. ஆனாலும் அவனும் உணர்ச்சிகளின் பிடியில் தான் இருக்கிறான்….. இருந்தும் அவற்றை தனக்குள் அடக்கியபடி வருகிறான் என்பதை அவனின் முக இறுக்கமே சொல்ல……… ஏன் இவனுக்கு இப்படி ஒரு பிடிவாதம் என்று தீக்‌ஷா அவளுக்குள் போராடியபடி வந்து கொண்டிருந்தாள்….

-----------

கோவிலில்…………….. கலைச்செல்வி தான் ஆரம்பித்தாள்………….

“விஜய்…………………… எல்லாப் பிரச்சனையும் சால்வ் ஆகிருச்சேப்பா………….. இப்போதாவது அவ கழுத்தில் தாலி என்று ஆரம்பிக்க…………..

“எனக்குத் தெரியும்…………… இனி யாரும் என் விசயத்தில் தலையிட வேண்டாம்………….“ என்றவன்…………கோபத்தில். முன்னே நடக்க…………….. சுரேந்தர் தன் தாயிடம் எரிந்து விழுந்தான்……….

“ஏன்ம்மா…. அண்ணனை டார்ச்சர் பண்றீங்க….. அவர் எது செஞ்சாலும் கண்டிப்பா அதில் காரணம் இருக்கும்…… காலம் எல்லாத்தையும் மாற்றும்….“ என்றவனின் வார்த்தைகள் முன்னே நடந்து சென்ற விஜய்யின் காதிலும் விழ…. சற்று நின்ற விஜய்….. சுரேந்தரை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தன் வழியில் நடந்தான்…

கலைச்செல்வியும், ஜெயந்தியும்….. வருத்தத்தோடு இருக்க…. அவர்களின் வாட்டத்தில்

“என்னத்தை பிரச்சனை…………. ஏன் அத்தான் கோபமா இருக்காரு” என்று தீக்‌ஷா கேட்க……………. தீக்‌ஷாவிடம் தன் கையில் இருந்த அவளின் மாங்கல்யத்தைக் காட்டினாள் கலைச்செல்வி…………..

அதைப் பார்க்கும் போதே தீக்‌ஷாவுக்கு நெஞ்சை அடைத்தது போல் இருந்தது…………….. இருந்தும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியவள்………..கையில் கூட வாங்காமல் அதையே பார்த்தபடியே இருந்தாள்…….

“நாங்க சொன்னாத்தான் அவன் கேட்க மாட்டான்…. நீ சொன்னா அவன் கேட்பான்மா……………. ” என்று தன் மருமகளின் மூலம் தன் மகனின் பிடிவாதத்தினை மாற்ற நினைக்க…… அவளோ அவனுக்கும் மேல் இருந்தாள்….

“நான் வைத்தீஸ்வரன் பொண்ணு தீக்‌ஷா இல்லைத்த இப்போ……….. விஜயேந்தர் மனைவி தீக்‌ஷா….. என் வாழ்க்கைக்காக இனி நான் கெஞ்ச மாட்டேன்…….. ஆனால்… அவரே ஒருநாள் என் கழுத்தில் கட்டுவார் அத்தை………….. கட்ட வைப்பேன்……. இது கண்டிப்பா நடக்கும்…………. “ என்றவளின் வைராக்கியத்தில் கலைச்செல்வியும் ஜெயந்தியும்…. அதிர்ந்தாலும்…. ஓரளவு சமாதானம் அடைந்தனர்….. அதன் பின் கோவிலில் அர்ச்சனை முடிய

தீக்‌ஷாவின் அருகில் வந்த விஜய்……………

”நாம ஒரு ஒரு இடத்துக்கு போகனும்……………… சீக்கிரம் கிளம்பலாமா” என்று கேட்க…………….. அவனோடு நடந்தாள் தீக்‌ஷா………………….. எங்கே என்றெல்லாம் தீக்‌ஷா கேட்கவில்லை……………….”

அவன் நரகத்திற்கே கூட்டிச் சென்றாலும்… அவனோடு பின்னே செல்ல தயாராகும் நிலையில் அவள் இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்………………………….

---------------

கிட்டத்தட்ட ஒரு 11 மணி அளவில்……

பார்வதி தன் மெயில்களை எல்லாம் செக் செய்து கொண்டிருந்தாள்…………… சாரகேஷ் மருத்துவ மனைக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்…………… இருவருக்கும் இந்த ஒருவார காலம் ஏனோ ஒரு யுகம் போல் தோன்றியது……… அத்தனை மாற்றங்கள்…….. அத்தனை திருப்பங்கள்……….அத்தனை குழப்பங்கள்……. அதிலும் தீக்‌ஷா பற்றி இன்னும் சில விசயங்கள் தெரியவே இல்லை…………..

இருந்தும் குழப்பங்கள் ஓரளவு முடிந்து விட்ட மகிழ்ச்சியில்…………… தன் தோழி இனியாவது நிம்மதியாக இருக்க வேண்டுமென்று நினைத்தபடி பார்வதி மெயிலைப் பார்த்துக் கொண்டிருக்க………… அதில் விஜய்யிடமிருந்து மெயில் வந்திருந்தது…………..

வேகமாய் படிக்க ஆரம்பிக்க……………. விஜய் பார்வதியின் ரிலீவிங் ஆர்டரை அனுப்பி இருந்தான்……… கோபத்தில் முகமே சிவந்து விட்டது பார்வதிக்கு…………”என்ன நான் பண்ணினேன்………… இவன் பொண்டாடிய இவன் கூட சேர்த்து வச்சதுக்க்கு தண்டனையா….” என்றபடி அடுத்து எந்த மெயிலையும் செக் செய்யாமல்………..வேகமாய் தன் அண்ணனின் அறைக்கு போனாள்…………

வந்தவள் அவனிடம் எதுவும் சொல்லாமல் சாரகேஷின் முகத்தையே பார்த்தபடி அமர………. அவளை ஒரு 5 நிமிடம் பொறுமையாகப் பார்த்தவன்……… பின் பேச ஆரம்பித்தான்…………

“என்னாச்சு……………… ’பாரு’ ”

”ப்ச்ச்…… வேற வேலை தேடனும்ணா………….. “ என்றவளுக்கு……….. சுரேந்தரின் ஞாபகம் வர…………… இனி அவனைப் பார்க்க முடியாதா என்று நினைக்கும் போதே இதயத்தில் ஏதோ ஒரு வலி…………… ”

“ஏண்டா வேலைய ரிசைன் பண்ற………… விஜய் கிட்ட வேலை பார்க்க பிடிக்க வில்லையா” என்று கேட்க……

“ப்ச்ச்… என்று மீண்டும் எரிச்சலோடு சலித்தவள்…

”நான் எங்க ரிசைன் பண்ணினேன்…………. அவங்களே அனுப்பிட்டாங்க………. என்னதான் தீக்‌ஷா விஜய்யோடு சேர்ந்து விட்டாலும்……….. நம்மள விஜய்க்கு பிடிக்கலை போலண்ணா………… நேத்து நீ தட்டைத் தூக்கிட்டு அவன் பொண்டாட்டிய பொண்ணு கேட்கப் போனேல………… அதுனால உன் தங்கச்சிய வெளிய அனுப்பிட்டான்” என்று புலம்பியவளிடம்….

சாரகேஷ் சீரியஸாக எல்லாம் பேசாமல்…

“ ‘பாரு’ இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணினா எப்டிடா…………. இல்ல இது உனக்கு புதுசா…. விடு.. இது இல்லேனா.. இன்னொரு ஆஃபிஸ்…. அந்த ஆஃபிஸ் ல என்ன கதை இருக்கோ…. ” என்று கிண்டலாகப் பேச…. பார்வதி அவனின் கிண்டலில் எல்லாம் மூழ்காமல் இன்னும் கவலையாகவே இருந்தாள்….……

இப்போது சாரகேசும் அவளின் நிலையை புரிந்து ஆறுதல் சொன்னவன்….. பார்வதியும் சமாதானமாக…. அதன் பின் தான் சாரகேஷ் மருத்துவமனைக்கு கிளம்பினான்……

தன் அண்ணன் சமாதானப்படுத்தியும்…. விஜய் மேல் இருந்த கோபம் பார்வதிக்கு இன்னும் போகவில்லை………..

தன் தோழியின் கணவனாகிப் போய்விட்டான் இல்லை…………… என்று தன்னை நொந்தபடி இருந்தவளை….. அவளின் மொபைல் அழைக்க….. விஜய்தான் அழைத்திருந்தான்

”பெரிய இவனாட்டம் வெளில அனுப்பிட்டு இப்ப எதுக்கு கால் பண்ணுகிறான்” என்று நினைத்தபடி போனை எடுத்தாள் பார்வதி……….

”ஹலோ……………” என்று விஜய் சொன்னவுடன்

”சொல்லுங்க சார்……….. தீக்‌ஷா எப்டி இருக்கா…………..” என்று தன் கோபத்தை அடக்கி…. விட்டேற்றியாக பேச

அவள் பேசியதில் இருந்தே விஜய்க்கு தெரிந்து விட்டது அவள் தான் அனுப்பிய ஒரு மெயிலை மட்டுமே பார்த்திருக்கிறாள் என்று

”அவசர குடுக்கைங்க…………” என்று மனதுக்குள் திட்டியவன்

”பார்வதி………. நான் அனுப்பின மெயில் பார்த்தியா”

“பார்த்தேன் சார்” என்று முடிக்கவில்லை பார்வதி

விஜய் அவளிடம்

“பார்த்துட்டியா……………ஆனால் பார்த்திருந்தா இந்நேரம் விஜய் பில்டர்ஸ்ல இருந்திருப்பியே என்று சிரித்தவனின் குரலில் கிண்டல் கலந்திருந்ததை… உணர்ந்தவள்…

“விஜய் பில்டர்ஸா……….. என்ன சார் சொல்றீங்க…………” என்று பேசியபடியே மடிக்கணினியில் மீண்டும் மெயிலைச் செக் செய்ய………….. இரண்டு மெயில் விஜய்யிடமிருந்து வந்திருக்க….. வேகமாய்…. அதைப் பார்க்க…. அதில் விஜய் பில்டர்ஸில் ஜாயின் பண்ணுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருந்தது.………..

சற்று நேரம் வார்த்தைகளே வராமல் இருந்தாள் பார்வதி………….. விஜய்யின் மேல் தேவையில்லாமல் கோபம் கொண்ட தன் சிறுபிள்ளைத்தனமான செயலை நினைத்து…த னக்குள் வெட்கிக் கொண்டவள்…… விஜய் இன்னும் லைனில் இருக்கிறான் என்பதை உணர்ந்து….

”சார்” என்ற போது

”சாரா………..” என்று சிரித்த விஜய்யின் குரலில் பார்வதிக்கே அவன் விஜய்தானா என்று தோன்றியது…. இப்படி அவன் குரலை இதற்கு முன் கேட்டதே இல்லை…. ஏன்… இந்த ஒரு வாரத்தில் அவன் சிரித்தே பார்க்கவில்லை… என்று கூட சொல்லலாம்…………… வியப்பில் யோசனையில் இருந்த பார்வதிக்கு இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தான் விஜய்….. சுரேந்தரின் அண்ணனாய்…

”விஜய் அத்தான்னு சொல்லு….. பார்வதி…….” என்று சிரிக்கும் போதே விஜய்க்கு தீக்‌ஷா சொல்லும் ’விஜய் அத்தான்’ ஞாபகம் வர……………. அவனின் சிரிப்பு நின்றது……….. பின் தன் நினைவுகளை விடுத்து… பார்வதியின் மௌனம் உணர்ந்தவன்

பார்வதி என்று இரண்டு மூன்று முறை அழைக்க………………..

“சொ……..சொல்ல் சொல்லுங்க சார்……. ச்சேய் சொல்லுங்க அத்தான்” என்றாள் ஒரு விதமான படபடப்போடு ….

சுரேந்தர்…. மட்டுமே அவளின் நினைவில் இப்போது இருந்தாள்….

நடப்பெதெல்லாம் கனவோ என்றிருக்க…. விஜய் தொடர்ந்தான்….

“நீ வேலை பார்த்த VD பிரோமோட்டர்ஸ் MD மாதிரி இல்லம்மா………….. உன்னோட புது MD………… சீக்கிரம் போ………… கொஞ்சம் கோபக்காரன்………….” என்ற போது மனம் விட்டு சிரித்த பார்வதி…………..

“தேங்க்ஸ் அத்தான்……………”. என்றபோது பார்வதியின் குரல் நெகிழ்ந்திருந்தது…

”ஆல் த பெஸ்ட்” என்றவன் அடுத்து…… போனை வைக்கப் போக………….. பார்வதி வேகமாய்

“திருமண நாள் வாழ்த்துக்கள் அத்தான், தீக்‌ஷா எங்க………………“ என்று பார்வதி கேட்க………………………………..

“மேல இருக்கா………..” என்றபடி பேச்சைத் தொடராமல்.. போனை வைத்த விஜய்யின் குரலில் மீண்டும் இறுக்கம் வந்திருந்தது…………………..

--------------

பார்வதியிடம் பேசி வைத்தவன்…………. சுரேந்தரிடம் சென்றான்……………… முக்கியமான க