அன்பே நீ இன்றி-29

அத்தியாயம் 29:

தீக்‌ஷா காரில் வரும்போதே அவளுக்கு விஜய்யைப் பார்க்கப் போகிறோம் என்ற பதட்டமும்…… பயமும் தான் வந்ததே தவிர….. அவளுக்கு அவன் மேல் காதல் என்ற உணர்வெல்லாம் தோன்ற வில்லை… அவனின் கோபம் உணர்ந்தவள் அவள்……. இன்று தான் பண்ணிய காரியத்திற்கெல்லாம் கோபப்படுவானோ என்பதில் தான் அவள் சிந்தனை சுற்றி வந்தது….

இன்னும் அவளுக்கு விஜய்யுடன் தன் திருமணம் முடிந்து விட்டது என்பது நம்ப முடியாமல் தான் இருந்தது……… நம்ப முடியவில்லை என்றாலும்….. அவனின் இன்றைய தோற்றம்……….. அவனின் அக்கறை…. ஆம் அக்கறை என்றுதான் அவளால் சொல்ல முடியும்…. இந்த ஆறு மாதத்தில் அவனின் பார்வையிலோ இல்லை நடவடிக்கையிலோ அக்கறையை மீறிய எதுவும் இதுவரை அவள் உணர்ந்ததில்லை……. உணமையிலேயே தன்னோடு கணவனாக மனம் ஒத்து வாழ்ந்திருந்தால் அவன் இப்படி இருந்திருப்பானா….. என்று மனதில் நெருடல் தோன்றிய போதும்…………… அவனை விட்டு பிரியக் கூடாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள் தீக்‌ஷா……….

எதைப் பற்றியும் சிந்திக்காமல், பார்வதி சொன்ன தகவலை வைத்து……….. முடிவெடுத்தது சரியா என்று யோசித்த போது………. அவனின் பாஸ்போர்ட்டில் மனைவியாக தன் பெயர் இருந்ததை வைத்து…………. அவன் தன் கணவன் என்று நம்பினாலும்…………. தன் கழுத்தில் தமிழ்ப்பெண்ணிற்க்கு உரிய தாலி இல்லாமல் இருப்பதும் அவளின் உறுதியை லேசாக அசைக்க……….. தன்னை அறியாமல் தன் கழுத்தில் கை வைத்துப் பார்த்தவளின் மனதில்…. அவள் அணிந்திருந்த சங்கிலி முதன் முதலாக உறுத்தியது……….. …… அதில் இருந்த VD என்று பெயர் பொறித்த டாலர் அவளுக்கு இன்று அதன் காரணத்தை சொல்ல….…. அதையே பார்த்தவளுக்கு…………. அது விஜய்யின் ஜெயின் என்பது புரிந்தது…… அவன் கழுத்தில் அவன் அணிந்திருந்த ஜெயின் இப்போது ஞாபகம் வர…….. கண் கலங்கி விட்டது தீக்‌ஷாவுக்கு….. அவன் கழுத்தில் ஒட்டினாற்போல் இருந்த ஜெயின் இவள் கழுத்துக்கு சற்று பெரியதாக இருந்தது….. கண் கலங்கியவளாய்…. அதையே பிடித்தபடி வந்தவள்……. சாரகேஷிடமோ,பார்வதியிடமோ எதுவும் பேசவில்லை………… விஜய்யின் ஞாபகங்களிலே வந்து கொண்டிருந்த அவளுக்கு ………. VD promotors ஞாபகமும் அவளைத் தாக்க…. தனக்காகவே ஆரம்பிக்கப்பட்டதா அந்த அலுவலகம்….. என்று உள்ளம் துடித்தாள் தீக்‌ஷா….. விஜய்யை எப்போது பார்ப்போம்………….. என்று மனம் முழுவதும் ஏங்க ஆரம்பித்தவள்……….. அவனுக்கும் தனக்குமான மண வாழ்க்கை நினைவுகளை மீண்டும் எண்ண ஆரம்பித்தவளுக்கு………….. அவர்கள் இருவரின் கடந்த கால மோதல்களே ஞாபகம் வர………. கடந்த காலங்களில் தங்கள் இருவருக்குமான கசப்பான நினைவுகளையும் மற்றும் தாங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்ததாய் சொல்லப்படும் தன் மண வாழ்க்கையின் நினைவுகளையும் விட்டு விட்டு…. தற்போதைய விஜய்யை மட்டும் நினைக்க ஆரம்பித்தாள்…………

அவனின் ஒவ்வொரு செயலும் தனக்காக இருந்தது இப்போது புரிய…. அன்று அவன் பார்வதியைப் பார்க்கிறான் என்று நினைத்து பொறாமைப்பட்டதை நினைத்துப் பார்க்க……. அவளுக்கு அவள் இருந்த நிலைமையையும் மீறி புன்னகை வந்தது………….

“என்னைத்தான் அத்த்தான் பார்த்தீங்களா……… நீங்க என்னை பார்க்கிறது கூட தெரியாம சுத்திட்டு இருந்திருக்கேனே………. நான் லூசு தான் என்று மனதோடு நினைத்தவள்

“இல்ல இல்லை நான் லூசு இல்ல….. அவர் எனக்குத் தெரியாமல் பார்த்தால் எனக்கு எப்படி தெரியும்….. விஜய் அத்தானுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா………… ஆனால் எப்படி இது நடந்தது…… எனக்கு எப்படி அவரைப் பிடித்தது…..” என்ற ஆச்சரியமும்,கேள்வியும் தான் அவளுக்கு மிஞ்சியது…

தீக்‌ஷாவின் மௌனத்தை உணர்ந்த பார்வதி……….. அவளை பார்வையாலே சமாதானப்படுத்த………. தீக்‌ஷா அவளிடம் வெற்று புன்னகையினை மட்டும் பதிலாக தந்தாள்…………. சாரகேஷும் மௌனமாக காரை ஓட்டி வர…………….. அங்கு மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய …… விஜய் வீட்டை அடைந்தனர் மூவரும்…..

கார் விஜய்யின் வீட்டு வாசலில் நிற்க………. தீக்‌ஷா இறங்கி விஜய் வீட்டைப் பார்க்க………….. இன்று அவளுக்குள் பல வித உணர்ச்சிகள் ஓடியது………….. கிட்டத்தட்ட 1 வருடங்களுக்குப் பிறகு… இங்கு வருகிறோம் என்று தோன்ற…. ச்சேய்….. இடையிலேயே மேரேஜ் ஆகி வந்து விட்டோம் ஞாபகம்தான் இல்லையே என்று தன்னைத்தானே நொந்தபடி உள்ளே வர………… அங்கு தீக்‌ஷா வீட்டினரும் இருந்தனர்…. தீக்‌ஷாவைப் பார்த்த ஜெயந்தி… தன் மகளைக் கண்டு வேகமாய் வர………தீக்‌ஷா ஓடிப் போய் தன் அன்னையினைக் கட்டிக் கொண்டாள்…. அங்கு யாருமே தீக்‌ஷாவின் வரவை எதிர்பார்க்கவில்லை போல்…. சோகம் மட்டுமே நிறைந்திருந்த அனைவரின் முகத்திலும் இப்போது….. தீக்‌ஷா மீண்டும்…. அதுவும் விஜய் வீட்டுக்கே வந்த சந்தோசம் விரவியிருந்தது…..

சாரகேஷும்,பார்வதியும்………. வாசலிலேயே நிற்க…………. சுரேந்தர் பார்வதியின் அருகில் வந்தான்……….

பார்வதியும் அங்கு யாருக்கும் எதையும் தெரிவிக்காமல் தீக்‌ஷாவை வீட்டிற்கு கூட்டி வந்ததால்….. உண்மையிலேயே யாருக்கும் எதுவும் புரியவில்லை…. ஏனென்றால் யுகேந்தர் வந்த விசயம் யாருக்குமே அங்கு தெரியாது….. யுகேந்தர் இன்னும் வீட்டிற்கே வரவில்லை…. என்பதால் அங்கு சந்தோசத்திலும் குழப்பமே நிலவியது….

“என்ன நடந்தது. என்று சாரகேஷிடம் சுரேந்தர் கேட்க…. பார்வதியின் அருகில் வந்து நின்றாலும்…. பார்வதியிடம் பேசாமல் சாரகேஷிடம் கேட்டான் அவன்….

நடந்த விசயங்களைக் சாரகேஷ் சுருக்கமாக சொல்ல…………. சுரேந்தருக்கு யுகி வந்த விசயமே அப்போதுதான் தெரிய வர………… இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று மனதுக்குள் நினைத்தபடி………….

“உள்ள வாங்க சாரகேஷ்” என்று அழைக்க….. அவனும் தன் தங்கையோடு உள்ளே நுழைந்தான்……… பார்வதிக்கு சுரேந்தர் தன் மீது கோபமாய் இருக்கிறான் என்று புரிந்தாலும்………… அவனை சமாதானப்படுத்தும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து…..அமைதியாக இருந்தாள்….

உள்ளே தீக்‌ஷாவோ……………… தன் அன்னையிடம் குமுறிக் கொண்டிருந்தாள்…………. வேறு யாரிடமும் அவள் பேசவில்லை……….. அது மட்டும் இல்லை…. தனக்கு நோய் இருப்பதாக தன் அன்னை சொல்லியதை எல்லாம் விட்டு விட்டாள் தீக்‌ஷா… இப்போது அவளின் மன வேதனை எல்லாம் தான் மறந்த தன் வாழ்க்கை பற்றியே இருக்க,

“அம்மா… ஏன்மா…. என்கிட்ட மறைச்சீங்க……….. என்கிட்ட உண்மையைச் சொல்லி இருக்கலாம்ல……. இப்போ நம்ம குடும்பமே தலை குனியற அளவுக்கு நான் வீட்டை விட்டு வெளியேறி………… தப்பு பண்ணிட்டேன்மா…. அத்தான் என்னைச் சும்மாவே திட்டுவார்மா…. இப்போ இன்னும் திட்டுவாராம்மா” என்று அழுதவளின் அருகில் வந்த ராதா

“என் அண்ணாவோட உயிரே உன்கிட்ட தான் இருக்கு தீக்‌ஷா……………. உன்னைப் போய்த் திட்டுவாரா” என்று சொல்லும் போதே ராதா…. அழுதுவிட…. கலைச்செல்வியும் அழ ஆரம்பித்து விட….. தீக்‌ஷா தன்னைச் சமாளித்தபடி….

தீக்‌ஷா சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்………… அவள் தேடி வந்த அவளின் விஜய் அத்தான் மட்டும் அங்கு இல்லை……….. தன் அண்ணியிடம்……….. மெதுவாய்

”அண்ணி……… விஜய் அத்தான் எங்க………. நான் அவரைப் பார்க்க வேண்டும்….. அவர்கிட்ட பேசனும்…” என்றபோதே அவளுக்கு கண்ணிர் வலிய….. அத்தனை பேருக்கும் அவளின் அழுகையில் மனம் சந்தோசமாகியது….. இனி விஜய் என்ன பிடிவாதம் பிடித்தாலும் தீக்‌ஷா பார்த்துக் கொள்வாள்….. என்று அனைவரின் மனமும் நிம்மதி அடைந்தது….

”அண்ணா மேல இருக்காரு தீக்‌ஷா போய்ப் பாரு…………… வீட்டுக்கு வந்து ரூம் கதவை பூட்டியவர்…. இன்னும் திறக்கலை…” என்று ராதா சொல்ல….

சட்டென்று எழுந்தவள்…………விஜய்யின் அறை நோக்கி வேகமாய் படி ஏற……… உள்ளம் மீண்டும் படபடப்பாகியது….. விஜய் அறை அவளுக்குத் தெரியும்…. ஆனால் உள்ளே போனதில்லை……. அவனின் மனைவியாக அந்த அறையில் வாழ்ந்ததும் நினைவில் இல்லை……….. தன் நிலையை மீண்டும் மீண்டும் நொந்தபடி………விஜய்யின் அறைக் கதவை மெலிதாகத் தட்ட………. அவன் திறக்கவே இல்லை….

இப்போது கொஞ்சம் வேகமாகத் தட்டப் போனவள்………….. தயங்கினாள்…. ஏனென்றால் விஜய்க்கு அவள் இப்படித் தட்டுவதெல்லாம் பிடிக்காது…… அவளின் ஹீல் சத்தத்திற்கே ஒருமுறை திட்டு வாங்கியவள் அவள்…. அதனால் அவனுக்கு கோபம் வரக் கூடாது என்பதற்காக………. மீண்டும் மெதுவாய்த் தட்ட…….. அவன் இன்னும் திறக்காமல் இருக்க……… அவனுக்காகத் தயங்கியவள்……….இப்போது தன் இயல்பின் படி வேகமாய்த் தட்ட………… இப்போது விஜய் கதவைத் திறந்தான்……………..

அவன் திறந்த போதே…………. அவன் அவளை வருகையை எதிர்பார்த்து இருந்தது போல் ஒரு பார்வையை வைக்க…. அவன் பார்த்த பார்வையில்……..தீக்‌ஷாவுக்கு அதுவரை இருந்த தைரியம் எல்லாம் எங்கோ போய்……… வாயில் வார்த்தைகள் கூட வரவில்லை…………… தன் கணவனாக அவனை உணர்ந்தாலும் அவனோடு உரிமையோடு ஒன்ற முடியவில்லை…. எதுவோ அவளைத் தடுக்க…. அவனையே மலங்க மலங்க பார்த்தபடி இருக்க….

அவள் கணவனோ அதற்கு மேல்….. அவன் என்ன நினைக்கிறான் என்றே தீக்‌ஷாவால் அறிந்து கொள்ள முடியவில்லை………….

விஜய் அவளை பார்த்தபடியே தன் அறையை விட்டு முற்றிலும் வெளியே வர………… தீக்‌ஷாவோ அவன் வெளியே வந்ததினை உணர்ந்து உள்ளே போக எத்தனிக்க………… விஜய் சட்டென்று தன் அறைக்கதவை வெளியில் இருந்து பூட்டினான்

அவனின் செய்கையில் தீக்‌ஷா அதிர்ந்து அவனை நோக்க……

அவன் எதுவுமே பேசாமல் அவளைப் பார்த்தபடி இருந்தான்…. அவன் முகம் இறுகியிருக்க…. தான் அவனை அவமானப்படுத்தி விட்டோம் என்று கோபமாய் இருக்கிறானோ………… என்ற எண்ணம் தான் தீக்‌ஷாவுக்கு தோன்றியது….

தனக்குத்தான்….. எந்த நினைவுமில்லை……. அவனுக்கு எல்லாமே தெரியும் தானே……….. என்னைப் பார்த்து எந்த உணர்ச்சியும் இல்லாமல்…………… மரம் போல நிற்கிறான்……. அதுவும் அறைக்கதவை வேறு பூட்டுகிறான்………. இவன் என்ன நினைக்கிறான்……… வீட்டை விட்டு போனது தவறுதான்……. அதற்கு நாலு திட்டு திட்டி நாலு அறை விட்டால் கூட பரவாயில்லை….. ஆனால் இப்படி ஒன்றுமே பேசாமல் நிற்கிறானே……..” என்று அவள் நினைக்கும் போதே கண்கள் அருவியைப் பொழிய…………… விஜய் அவளைப் பார்த்து

“எதுக்கு அழற” என்று கேட்டதுதான் தாமதம்……. அவனிடம் இருந்து வந்த உரிமையான அதட்டலில்….. தீக்‌ஷா தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் குலுங்கி அழ………

அதற்கு மேல் விஜய் எதுவுமே பேசவில்லை……….. அவளைச் சமாதானப்படுத்தவும் முயற்சிக்காமல் நிற்க….

தீக்‌ஷாதான் ”விஜய் அத்தான்” என்று அழைத்தாள்…………

அவன் கண்களை மூடி இருந்தான் இப்போது………….. அவனின் இமையோரம் நீர் கசிந்திருக்க……….. அவனைப் பார்த்தபடியே அவன் புறம் வந்தவளுக்கு………. அவன் கண்ணீரே அவன் காதலைச் சொல்ல………… அவள் நினைவில் மறந்திருந்த அவள் காதல் அவளுக்குத் தோன்றவில்லை……… இப்போது அவனைக் காதலிக்கத் தொடங்க ஆரம்பித்து இருந்தாள்…… அவனையே பார்த்தபடி சில நிமிடங்கள் இருந்தவள்………….

அவன் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைக்கப் மனம் துடித்தாலும்.……….. அவளால் அதைச் செய்ய முடியவில்லை…. அவளின் அருகாமை உணர்ந்த விஜய் கண்களை மூடியபடியே பேச ஆரம்பித்தான்

“என்னைப் பற்றி யார் சொன்னது உனக்கு………………” என்று கேட்க

தீக்‌ஷா அவனிடம்…….

“எனக்கு ஞாபக வரக்கூடாதா அத்தான்……….. அதனால்தான் வந்தேன்” என்று சொல்லிப் பார்க்க

உதடுகளை வளைத்து சிரித்தான் அவன்…….. அப்போதும் அவன் கண்களைப் திறக்கவில்லை……..

“அப்படியா………… என் ஞாபகம் உனக்கு வந்ததா……….” என்று வேதனையாய்ச் சிரித்தவன்……

“அது உனக்கு வரவில்லை என்று எனக்குத் தெரியும்…. சொல்லு நீ யார் சொல்லி வந்த…” என்றவனின் வார்த்தைகளில் இருந்த வலியை உணர்ந்த தீக்‌ஷாவுக்குள்ளும் அவன் வலி மனமெங்கும் விரவ…… வாயிலிருந்து ”அத்தான்” என்று மட்டுமே வார்த்தைகள் வந்தன……… வார்த்தைகள் தான் அவளுக்கு வற்றிப் போயிருந்தன……. கண்களிலோ கண்ணீர் வற்றாத ஜீவ நதி போல் வந்து நிற்காமல் வந்து கொண்டே இருக்க………

தன்னை அவன் மனைவியாக உணரச் செய்வது எப்படி என்றும் அவளுக்குப் தெரியவில்லை……….. அவனை கணவனாக உணர்ந்து தான் என்ன செய்வதென்றும் புரியவில்லை………. என்ன செய்வது…….. எதைச் செய்வது என்று தெரியாமல் தன் கணவனைப் பார்த்தவள்……….

இப்படி வெளியே வைத்து பேசிக் கொல்கிறானே என்று தோன்ற…….. ”அத்தான்………ப்ளிஸ் உள்ள போகலாம்………”. என்று கெஞ்ச