top of page

அன்பே நீ இன்றி-28

அத்தியாயம் 28

தீக்‌ஷா ‘இந்தர்’ என்று சொன்னதை வைத்தே பார்வதிக்கும்…...... சாரகேஷுக்கும் , தீக்‌ஷா-விஜய் உறவினை வேறு யாரும் வந்து சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை…. என்ன நடந்தது என்பதுதான் அவர்களுக்கு தெரியவில்லையே தவிர………. அவர்களின் உறவு முறை குழப்பம் இன்றி தெளிவாக விளங்க………. இப்போது விஜய்க்கு போன் செய்ய தயக்கம் வரவில்லை பார்வதிக்கு………… உடனே விஜய்க்கு போனும் செய்யப் போக…………… அப்போது யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க…………… காலைக் கட் செய்தபடி கதவைத் திறந்தாள் பார்வதி……

அங்கு ஒரு இளைஞன் நின்றிருந்தான்…………. அவனை பார்த்த மாத்திரத்திலேயே அவன் யார் என்று பார்வதிக்கு தெளிவாய் விளங்கியது….. கிட்டதட்ட விஜய்யின் சாயலில் அவன் இருக்க…………. அவன் யுகேந்தர் என்று அவளும் உணர………… அவள் உணர்ந்த நொடியிலேயே பார்வதியின் முகம் மலர்ந்தது….. அதே புன்னகையோடு…………….. யுகேந்தரைப் பார்த்தாள்……

யுகேந்தரோ அந்தப் புன்னகையை எல்லாம் கண்டுகொள்ளாமல்…………..

“சாரகேஷ் இருக்காங்களா……………. அவங்களைப் பார்க்க வேண்டும்”……………. என்று பார்வதியைப் பார்த்துக் கேட்க….

அவனின் களைத்த தோற்றமே அவன் பயணக் களைப்பில் இருந்து வெளிவரவில்லை என்பதை உணர்ந்த பார்வதி

”உள்ள வாங்க யுகி………” என்று அழைத்தாள்………….

தான் யார் என்று அறிமுகப்படுத்தாமலே…. அவள் சட்டென்று தன்னை அடையாளம் கண்டுபிடித்த வியப்பில் ஒரு நிமிடம் திகைத்த யுகேந்தர்….பின்

”எங்க அண்ணா ஆஃபிஸ்ல வொர்க் பண்ற… சாருமதி…..” என்று கொஞ்சம் சந்தேகமாய் இழுத்தபடி கேட்க…

பார்வதிக்கு முகம் மாறியது

“அவன் தீக்‌ஷா ஃப்ரெண்ட்…. பார்வதி என்று கேட்காமல்…………….. சாருமதி எனச் சொன்னதில் இருந்தே அவன் விஜய்யின் தம்பியாக வந்திருக்கிறானே தவிர தீக்‌ஷாவின் நண்பனாக வரவில்லை என்று பார்வதிக்கு நன்றாகப் புரிந்தது…………

அதனால் பார்வதி சற்று அமைதியாக மாற…… யுகேந்தரும் அவளின் முக மாற்றத்தை குறித்துக் கொண்டவனாய்…..

“சாரகேஷ் இருந்தார்னா………… வரச்சொல்லுங்க…………….. அவரைப் பார்த்து சில விசயங்கள் பேச வேண்டும்…………… ” என்று சொல்ல

அப்போது “பார்வதி……….. விஜய்க்கு போன் பண்ணினாயா” என்று கேட்டபடி சாரகேஷும் வெளியில் வந்தான் …………

சாரகேஷ் யுகேந்தரை யோசனையுடன் பார்த்தவன்………… “யார் நீங்க……..” என்று கேட்க………

யுகேந்தர் அவனைப் பார்த்து……………. கொஞ்சம் தயங்கி ’சாரகேஷ்’ என்று விளிக்க………… இப்போது…. ஆண்கள் இருவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்துக் கொள்ள…………….. சாரகேஷ் யுகேந்தரை உள்ளே அழைத்தான்

“இல்லை சாரகேஷ்………….. இப்போதான் லேண்ட் ஆனேன்……………. நேற்று சுரேந்தர் அண்ணா……………. எனக்கு போன் செய்து உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனைனு……….. அதிலும் தீக்‌ஷாவினை மையப்படுத்தி……….. “ என்று கவலையாய் நெற்றியை சுருக்கியவன்

“சுரேந்தர் அண்ணா………….. பெரும்பாலும் ரொம்ப டென்சன் ஆக மாட்டாரு…………. அவர் நேற்று பேசினதில் இருந்து…………. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை…………… அதனால்தான் உடனே கிளம்பி வந்துட்டேன்……………… சுரேந்தர் அண்ணாவுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது…………. இல்லைனா……………… உடனே தீக்‌ஷா பற்றி சொல்லி இருப்பார்……………”என்றபடி………….

“தீக்‌ஷாவை நீங்க விரும்பினது பற்றி எனக்கு மட்டும் தான் தீக்‌ஷா சொல்லி இருக்கா……….. அதுவும் பார்வதி பற்றி அவள் சொல்லும் போது உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறாள்………. அஃப்கோர்ஸ் விஜய் அண்ணாவுக்கும் உங்களைப் பற்றி தெரியும்…………… ஆனால் அவர் ஏன் சொல்லலைனு தெரியல………………” என்று வெளியில் நின்றபடியே அவசர அவசரமாக பேச ஆரம்பிக்க………..

“உங்க அண்ணா………. அவரோட மனைவி தீக்‌ஷா இவங்களைப் பற்றி வாசலிலே பேச வேண்டுமா யுகி” என்று சாரகேஷ் கேட்க………..

தீக்‌ஷா பற்றி சாரகேஷுக்கு விசயம் தெரிந்து விட்டது…………… இனி பிரச்சனையில்லை என்பது போல் யுகியின் முகம் தெளிவாக மாற…………. அதன் பின்தான் யுகேந்தர் உள்ளே வந்தான்……………

ஹாலில் வந்து அமர்ந்த யுகி ஓரளவு நிம்மதியுடன்…………. இருவரையும் பார்க்க…. பார்வதி அவனின் களைப்பை உணர்ந்து

”டைம் 3 ஆகப் போகுது……… சாப்பிட்டீங்களா யுகி” என்று அக்கறையாகக் கேட்க…………

சிரித்த யுகி……………….. ”இல்லங்க…………. ப்ளைட்ட விட்டு இறங்கி நேரா இங்கதான் வந்திருக்கேன்……….. தீக்‌ஷா விசயத்தில் ஏதாவது தப்பா ஆகி விடுமோ என்று…………” அவன் முடிக்கவில்லை………….

”நீங்க லேட்டா வந்துட்டீங்க யுகி………….” என்ற பார்வதி பட்டென்று சொன்னாள்……. கொஞ்சம் வருத்தத்துடனே

அவள் சொல்லும் போதே யுகேந்தர் முகம் மாறி விட்டது………..

“என்……….. என்ன சொல்றீங்க………… எனக்குப் புரியலை……………. என்னாச்சு” என்று முடிக்காமல் திணற……….

சாரகேஷ் அனைத்தையும் சொல்லி முடிக்க………….. யுகேந்தர்……………….. முகம் இறுகி அப்படியே வெறித்து அமர்ந்து விட்டான்…………….. இருவரிடமும் எதுவுமே பேசவில்லை….. ஏன்…. தீக்‌ஷா பார்வதி வீட்டில் தான் இருக்கிறாள் என்று தெரிந்தும்………………….. அவளை என்ன ஏதென்று கூட விசாரிக்கவில்லை அவன்………… அவன் கவலை எல்லாம் அவன் அண்ணனிடமே இருந்தது

“எங்க அண்ணா ஒண்ணுமே சொல்லலையா சாரகேஷ்……………………..” என்ற போதே அவன் குரல் தாளம் தப்பிய ராகமாய்தான் வெளியே வந்தது…………….

“பாவி………………. பழி வாங்கிட்டா…………… என் அண்ணாவை அவ காதல்னாலேயே பழி வாங்கிட்டா……………. இன்னைக்கு அவமானப்படுத்தியும் விட்டாள்…. இனியாவது என் அண்ணனை விடுவாளா……….. இல்லை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா அவளுக்கு………. ” என்று உதடு துடிக்க அவன் எங்கோ பார்த்தபடி சொல்ல……………

அவனின் வார்த்தைகளில் பார்வதிக்கு உள்ளம் கொதித்தது….

“என்ன யுகி இப்படி பேசுறீங்க…………… அவ உங்க அண்ணி……………… அது மட்டும் இல்லாமல்……………. உங்களைப் பற்றிதான் பேசிட்டே இருப்பா…….. வார்த்தைகளை யோசிச்சுப் பேசுங்க……….. அவளும் தெரிஞ்சு பண்ணலை……….. விஜய் மேல அவளுக்கும் அதீத பிரியம்தான்………. இன்னைக்கு அவ இந்த நிலைமையில இருக்கானா அதுக்கு ஒரே காரணம்…………. அவ உங்க அண்ணா மேல வச்சுருக்கிற காதல்தான்” என்று பார்வதியும் கோபத்தோடு பேசினாள்………..

தன் தோழியை இப்படி பேசுகிறானே என்ற ஆத்திரம் அவளுக்கு………. அதில் அவளும் வார்த்தைகளை சூடாகவே யுகியிடம் விட….. அவளை அலட்சியமாகப் பார்த்த யுகி

“உங்க ஃப்ரெண்டச் சொன்னவுடனே உங்களுக்கு கோபம் வருதோ….. நானும் இல்லைனு சொல்லலையே……… வேற எந்த வழியிலயும் என் அண்ணனை பழி வாங்கி இருக்க முடியாதுனு………………. அளவுக்கதிகமாக அவரை நேசிச்சே கொன்னுட்டா……………… கொன்னுட்டு இருக்கா“ என்றவன்………….

“உண்மையான காதல் ஒருத்தவங்களை வாழ வைக்கும்னு தான் இதுநாள்வரை நினைத்திருந்தேன்……………. ஆனால் அணு அணுவா பழி வாங்கும்னு தீக்‌ஷா விசயத்தில் தான் உணர்ந்திருக்கேன்……………. அவ சாபம் லாம் என் அண்ணனுக்கு கிடைக்க………….. அவ காதலே காரணம் ஆகி விட்டது………………. எப்படி இருந்தவர் தெரியுமா என் அண்ணன்……………. இன்னைக்கு எப்படி இருக்கார்னு தெரியுமா……………. தீக்‌ஷா காதல்னால என் அண்ணா வாழ்ந்திருந்தார்னா…………. நான் சந்தோசப்பட்டிருப்பேன் பார்வதி……………….. ஆனா என் அண்ணனைப் பைத்தியக்காரனா சுத்தவிட்டுட்டாளே………………………….. என் பழைய விஜய் அண்ணனா என்னால பார்க்கவே முடியாதானு ஒவ்வொரு நாளும் ஏங்கிட்டு இருக்கேன்……………. அவரோட இந்த நிலைமைய பார்க்க முடியாமல் தான் நான் வெளிநாடு போனதே…………….. உன் ஃப்ரெண்ட் ஒருநாள் சொன்னாள்……………. உன் அண்ணா ஒருநாள் அனுபவிப்பார்……………. நான் பார்ப்பேனோ இல்லையோ…………….. நீ பார்ப்பாய்னு…………….. நடத்திக் காட்டிட்டா…. ” என்ற போதே அவன் கண்கள் கலங்க ஆரம்பிக்க…………… சாரகேசிடம் திரும்பியவன்

“சார் நாளைக்கு என்ன நாள்னு தெரியுமா………… என் அண்ணாவோட திருமணநாள்………….. என்றவன்………… இப்போது அவன் அதிகமாய் கலங்க ஆரம்பிக்க…………….. பார்வதி, சாரகேஷ் இருவருமே அதிர்ந்தனர்

“அதுக்கு புடவை வாங்க வந்தப்பதான்…….. ………. நீங்க தீக்‌ஷாவுக்கு எடுத்து கொடுத்த புடவையைப் பார்த்து சுரேந்தர் அண்ணா கோபம் ஆனார்…….. “ என்றபடி தான் கொண்டு வந்த விஜய்யின் பாஸ்போர்ட் காப்பியைக் காண்பித்தவன்………….. நடந்த விசயங்களை ஓரளவு அவர்களிடம் விவரித்தவன்…..

”இதெல்லாம் நீங்க நம்புறதுக்காக ஒரு ஆதரமா எடுத்து வந்தேன்…… சரி நான் வருகிறேன்……………. எது நடக்க கூடாதுனு நினைத்தேனோ அதைவிட அதிகமாகவே நடந்துருச்சு……………. எப்படியோ அவளோட நிலைமையும் உங்களுக்கு தெரிஞ்சுருச்சு…………….. உங்க ஃப்ரெண்ட் எழுந்தவுடனே வீட்டுக்கு போகனும்னு அடம் பிடிப்பா…………….. கூட்டிட்டு வந்து விட்ருங்க…………… இப்போதைக்கு அவகிட்ட வேறு எதுவும் சொல்ல வேண்டாம்………….” என்று சொன்னவன்……………………” உடனே கிளம்பவும் ஆரம்பிக்க

அதேநேரம்……….. அறையில் படுத்திருந்த தீக்‌ஷா மயக்கத்தில் இருந்து விழித்தாள்………….

அருகில் யாரும் இல்லாததால்……………… பார்வதியைத் தேடி சற்றுத் தடுமாறியபடி வெளியே வர………….. அங்கு யுகி இருக்க………….. அவனை எதிர்பார்க்காத தீக்‌ஷா………. முதலில் திகைத்தவள்…..

“தன்னைப் பார்க்க….. தன்னைக் அழைத்துப் போகத்தான் வந்திருக்கிறான்………… ” என்று…. சந்தோசமாய் அவனை அழைக்கப் போக………….

அப்போது பார்வதி பேச ஆரம்பிக்க…………. இடையில் குறுக்கிடாமல் தீக்‌ஷா நின்று விட்டாள்….

பார்வதி யுகியிடம்……..

“யுகி தீக்‌ஷாவை பார்க்காமலே போறீங்க……………. உங்களைப் பார்த்தால் , உங்களோடு பேசினால்… சந்தோசப்படுவா………….. “

“இல்லை பார்வதி…………….. எனக்கு அவளைப் பார்க்கவே இஷ்டம் இல்லை…………….. “ என்று எங்கோ பார்த்து வெறித்தவன்……….

“என் விஜய் அண்ணா என்னைக்கு என் அண்ணனா திரும்பக் கிடைக்கிறாரோ அன்னைக்குதான் அவகிட்ட பேசுவேன்…………….” என்றபோது அவனின் வார்த்தைகளில் தீக்‌ஷா அதிர்ச்சியாய் அவனைப் பார்த்து அப்படியே நிற்க………..

இப்போது பார்வதி கோபமுடன்………….

“அவ மயக்கமா இருக்கிறா யுகி……….. இந்த நிலைமையில் கூட பார்க்க விரும்பவில்லையா யுகி…………”

“இல்ல இல்ல………… பார்க்க விரும்பவில்லை…………… ” என்றபடி கத்தியவன் வெளியேறப் போக…………

சாரகேஷ் அவனைப் பிடித்து நிறுத்தி

“அவ ஒரு இதய நோயாளி யுகி……………….. அந்தப் பரிதாபம் கூட இல்லையா தீக்‌ஷா மேல…………” என்று கூரிய பார்வையுடன் கேட்க…………..

யுகியோ..நெற்றியில் விரலை வைத்து யோசிப்பது போல பாவனை காட்டியவன்…

“ஓ……… டாக்டர் தானே நீங்க…………….”. என்றவன்………………

“தீக்‌ஷாகிட்ட இந்த விசயத்தைச் சொல்லனும்னு………….. எங்க அண்ணா ரொம்ப நாளா துடிச்சுட்டு இருக்கார்………….. அவ அம்மா முட்டாள்தனமா………… எங்க அண்ணா மேல இருக்கிற கோபத்தில்……. தீக்‌ஷாகிட்ட சொல்லி வச்சுட்டாங்க…………. அவகிட்ட சொல்லிருங்க………… உனக்கு ஒரு நோயும் இல்லைனு……….. அவளாலதான் என் அண்ணாதான் செத்துட்டு இருக்காருனு…………. “ என்றவன் அதற்கு மேல் நிற்காமல்….. வேகமாய் வெளியேறியும் விட்டான்……….

தன் பிள்ளைகள் மேல் இருந்த கோபத்தில்………… இருவரிடமும் எதுவும் பேசாமல்…. தன் அறையில் இருந்த தேவகி கூட… யுகியின் சத்தத்தில் ஹாலுக்கு வந்து விட்டிருந்தாள்….

பார்வதிக்கு யுகியின் மேல் வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்……………….. மூத்தவனுங்க ரெண்டு பேரும் கூட பரவாயில்லையோ என்று நினைத்தவள்……….. சாரகேஷைப் பார்க்க………….

அவனோ………

“என்ன பாரு இவன் இப்படி பேசிட்டுப் போகிறான்………….. ” என்றவன்………….

”சரி…………. நீ விஜய்க்கு” என்று திரும்பியவன்…. அங்கு தீக்‌ஷா நிற்க……………… அதிர்ந்தான்………..

அங்கு தீக்‌ஷாவோ அப்படியே சுவரோடு சுவராகச் சாய்ந்திருந்தாள்…………….

யகேந்தர் பேசப் பேச…. தன் மேல் அவனுக்கு அவனுக்கு பாசம் இல்லையா என்ற கோபம் தான் முதலில் வந்தது தீக்‌ஷாவிற்கு………. அடுத்தடுத்து அவர்களின் உரையாடலில் அவள் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றாள்…….. அவர்கள் பேசியதில் அவள் தெரிந்து கொண்டது….. தனக்கு ஒரு நோயும் இல்லை…………… அதுதான்…. அது மட்டும் தான் அவள் காதுகளில் முதலில் ரீங்காரமிட்டது………. ஏன் சொன்னார்கள்…………. எதற்குச் சொன்னார்கள்…. என்றெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை…………… ஈடுபட முடியவில்லை……………… மனமெங்கும் ஒரு மாதிரியான சந்தோசப் படபடப்பு……………. அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்தாள்

தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையா……… அப்படியென்றால்…………… தானும் மற்ற பெண்களைப் போல……….. எல்லா வித வாழ்க்கையும் வாழ தகுதியானவளா…….. மனம் முழுவதும் நிச்சயிக்கப்பட்ட மரண பயம் அகன்றது போல் இருக்க………… முகத்தில் தானாக சந்தோசம் வந்தது தீக்‌ஷாவிற்கு

சந்தோசத்தில் அவள் கை கால்கள் எல்லாம் ஆடத் தொடங்கி இருந்தன……. என்றோ போகும் உயிர்தான்………. ஆனால் அது வெகு அருகில் என்று நம்பியிருந்தபோது வந்த விரக்தி……… வேதனை….. இது எல்லாம் காணமல் போய் இருக்க…… மற்றதெல்லாம் மறந்த நிலையில்……….. அப்படியே மடங்கி உட்கார்ந்தாள்………… அவளால் பேசவே முடியவில்லை……… சந்தோசத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…………….

பார்வதியும்……….. சாரகேஷும் தீக்‌ஷாவைப் பார்த்து பதறி அவள் அருகில் ஓடினர்

தன் அருகில் வந்த பார்வதியை சந்தோசத்தில் கட்டிக் கொண்டாள் தீக்‌ஷா………… கட்டிக் கொண்டவள்………..அவள் மடியில் விழுந்து அழ ஆரம்பித்தாள்……… அவள் அழும் வரை இருவரும் ஒன்றுமே சொல்லவில்லை………..அவளை அழ விட்டனர்…….. பின் தீக்‌ஷாகவே கண்களைத் துடைத்தபடி…………….

“பாரு எனக்கு ஒண்ணும் இல்லையாடி…………….. இந்த நிமிசத்தை………. இந்த நொடியை என்னால நம்ப முடியலை………….. அப்படியே ’ஓஓன்னு’ கத்தனும் போல இருக்கு…………… இந்த 4 மாதமா இன்னைக்கோ நாளைக்கோனு ஒரு வித பயத்தோடே காலையில எழுவேன் பாரு………….. நைட் தூங்கப் போவேன் பாரு…………. சராசரி பொண்ணா அவ்வப்போது எனக்குள் வரும் உணர்வுகளை எல்லாம் எனக்குள்ள அடக்கிகிட்டு…… என் நாட்களை எண்ணிக் கொண்டு…. அந்த வேதனை லாம் உனக்கு புரியாது பாரு… ஆனால் இப்போ எனக்கு எப்டி இருக்கு தெரியுமா….”. என்ற தீக்‌ஷா சொல்லும் போது பார்வதிக்கும் அழுகை வந்து விட………….. அவளைத் தன்னோடு சேர்ந்து அணைத்துக் கொள்ள…………….

தீக்‌ஷா………….. சார்கேஷிடம்

“நீங்க கூட மறச்சுட்டீங்களே பாரு அண்ணா” என்றவளை………….. பரிதாபமாய்ப் பார்த்தான்……………. அவளை……அவள் நிலையை நினைத்து……….

“இல்ல தீக்‌ஷா ஓரளவு தெரிஞ்சது…………… உன்னை கம்ளீட்டா டெஸ்ட் எடுத்து அதன் பின்னால் சொல்லலாம்னு” என்ற போதே………….. தீக்‌ஷாவும் நார்மல் ஆக…. யுகியைப் பற்றி பேச ஆரம்பித்தாள் தீக்‌ஷா

“யுகி என்னை பார்க்காமலே போய்ட்டான்ல பாரு…………. அப்படி என்னடி கோபம் என்மேல் அவனுக்கு…… ” என்ற கவலையாய் கூறிய தோழியை பார்த்தாள் பார்வதி……………

கடந்த காலத்தை மறந்து…………. அதன் நினைவுகள் அவ்வப்போது வரும் தன் தோழியின் அவல நிலையை நினைத்து…………. பார்வதியின் கண்களிலும் கண்ணிர் வர…………. அதைக் கவனித்த தீக்‌ஷா………. அவள் கண்ணீரைத் துடைத்தபடி……….

“நீ எதுக்குடி என்னைப் பார்த்து அழற……………. எனக்கு ஒண்ணும் இல்லைனு சந்தோசம் தானே படணும் நீ…” என்று மகிழ்வோடு சொன்னவள்……………….. இப்போது முற்றிலும் சகஜ நிலைமைக்கு வர கேள்விகளும் ஆரம்பமானது தீக்‌ஷாவுக்குள்………….

“ஒரு தாயே தன் பெண்ணிடம் நோய் இருக்குனு சொல்வாங்களா ………. விஜய் அத்தான் மேல அம்மாவுக்கு என்ன கோபமா……………. எனக்கு நோய் இருக்குனு……………. அதுனால அவர் செத்துட்டு இருக்காருனு…………..” என்று அவளுக்குள் கேள்விகள் சுற்ற ஆரம்பிக்க

“எனக்கு ஒண்ணுமே புரியலடி…………… என்னைச் சுத்தி நடக்கிறது என்ன்னு தெரியாம……………. அய்யோ ……………. எல்லாம் இந்த கருமம் பிடிச்ச கோமாவினால்தானே வந்தது” என்று மீண்டும் அழ ஆரம்பித்தவள்……………. உடனே அழுகையை நிறுத்தவும் செய்தாள்…..

”பாரு…. என் அம்மா கிட்ட நான் போகனும்டி…………….. ஏன் அப்டி சொன்னாங்கனு கேட்கணும்……… நாலு வார்த்தை நறுக்குனு கேட்கனும்…………. ” என்று தனக்குள் பேச ஆரம்பித்தவள்……….. வேகமாய் எழ………… பார்வதி அவளைப் பிடித்து நிறுத்தினாள்……………….

“தீக்‌ஷா எங்க போற…………”

“விடுடி…………… எப்படி பேசுனாங்க…………….. உங்க அண்ணா கேட்டதுக்கு…. என்னடி ரீசன் சொன்னாங்க……….. எனக்கு உடம்பு சரியில்லைனு…………. கூசாம சொல்றாங்கடி……………. அப்படி என்னடி காரணம்………….. பொல்லாத காரணம்………………. ஏன் இப்டி பண்ணினாங்க………….. “ என்றவள்………..

“இப்போ எனக்கு எவ்ளோ ஆத்திரமா இருக்கு தெரியுமா பார்வதி……………….ஆனா எப்படிக் காட்றதுனு தெரியல……………. என் அம்மா ஏண்டி அப்படி சொன்னாங்க……………….” என்று மீண்டும் அழ ஆரம்பிக்க………… இப்போது தீக்‌ஷா அழுகையை அடக்க நினைத்தும் முடியாமல் போக…..

அவளின் அழுகையை நிறுத்தும் வழி புரியாமல் பார்வதியும் சாரகேஷும் தடுமாற ஆரம்பித்தனர்………….

“என்ன சொல்வது………. எதைச் சொல்வது…. விஜய்யுடன் இவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்று சொல்லி விடலாம்தான்…………. ஆனால் 2 குடும்பங்களுமே மறைக்கும் ஒரு விசயத்தை………. எப்படி சொல்வது……………. கண்டிப்பாக ஏதோ காரணம் இருக்கும்…. அதனால்தான் மறைக்கிறார்கள்………”. என்ற யோசனையில் அண்ணன் – தங்கை இருவரும் தடுமாற………….

சாரகேசின் அன்னை தேவகி….. தீக்‌ஷாவின் அருகில் வந்தாள்………… யுகேந்தர் பேசியதை முழுவதும் தேவகி கேட்க வில்லை………….. அவளும் தீக்‌ஷாவைப் போல கடைசி உரையாடல்களில் தான் வந்து கேட்டாள்….

இப்போது தீக்‌ஷா அழுவதைப் பார்க்க………..பார்க்க……….. அவளும் ஒரு தாய்தானே தாங்க முடியவில்லை…………….. எந்த தாயாவது இவள் தாய் போல இருப்பார்களா………… என்று தீக்‌ஷாவை நினைத்து துக்கம் தான் வந்தது….. தீக்‌ஷாவின் தாய் ஜெயந்தியை நினைத்து கோபம் தான் வந்தது…..

தீக்‌ஷாவின் அருகே அமர்ந்தவள்………. அவள் கண்களைத் துடைத்தபடி………

“எதுக்கு இப்போ அழுகிறாய்மா…………… உங்க வீட்டில் போய்க் கேட்கலாம்……. ஒவ்வொருத்தவர்கிட்டயும் விரல் நீட்டி கேட்கலாம்” என்று தீக்‌ஷாவை ஆறுதலாய்… தன் மீது சாய்க்க………….. தீக்‌ஷாவும் தேவகியின் தோள்களில் சாய்ந்தாள்…………

சாரகேஷை தன் அருகே அழைத்த தேவகி…………..

“சாரகேஷ்………….. தீக்‌ஷா இந்த வீட்டுக்குள் நுழையும் வரை கூட எனக்கு பெரியதாய் எந்த எண்ணமும் இல்லை……………. ஏன் வருத்தம்தான் இருந்தது,,, இப்போ சொல்றேண்டா…………….. என் மருமகள ஏன் இப்படிப்பட்ட சூழ்னிலையில் நிறுத்தி வச்சாங்கனு… தீக்‌ஷா வீட்ல போய்…. அவ மாமியாராய் நான் தட்டிக் கேட்கனும்டா”

என்றபோது தீக்‌ஷா இன்னும் கொஞ்சம் அதிகமாய் அழ ஆரம்பித்தாளே தவிர பெரியதாக அதிர்ச்சி இல்லை அவளுக்கு………… ஆனால் அதிர்ந்தவர்கள்………….. தேவகியின் பிள்ளைகள் தான்

“சாரகேஷ் ’அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா’ என்று அலறியே விட்டான்……………

பார்வதி நிலைமையோ அதை விட மோசமாய் இருந்தது…………….. தேவகியிடம் நிதானமாய் எடுத்துச் சொல்லலாம் என்று நினைத்திருந்தாள் பார்வதி

ஆனால் ,இப்படி பண்ணிவிட்டார்களே தன் அம்மா என்று தன் அண்ணனைப் பார்க்க…………….

சாரகேஷ் தன் தங்கையோடு கண்களாலே பேச ஆரம்பித்தான்…………… ’ஏதாவது செய்’ என்பது போல்

சாரகேஷால் தீக்‌ஷா முன் பேசவே முடியவில்லை……….. முடியாது என்று மறுத்தால்…………. காலையில் தனக்காக தன் வீட்டினரின் முன் வந்து பேசி விட்டு இப்போது ஏன் மறுக்கிறான் என்று கண்டிப்பாக நினைப்பாள்…………கடவுளே………….. என்று நொந்தவன்

“டேய் விஜய்……………… ஏண்டா நீ அவ புருசன்னு சொல்ல மறுக்கிறாய்……….. அடுத்தவங்களையும் சொல்ல விட மாட்டேங்கிற………….. ஏற்கனவே எதுவும் புரியாமல் பெண் கேட்டு வந்து………….. நிலைமையை சிக்கலாக்கி விட்டு விட்டோம்……….. ” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்…..

இப்போது தீக்‌ஷா விஜய்யின் மனைவி என்று சொல்லி இன்னும் ஏதாவது பெரிய பிரச்சனை ஆகி விட்டால்…………. என்ன செய்வது என்று தெரியாமல் மரம் போல் நிற்க…………..

பார்வதி கொஞ்சம் சுதாரித்து

”அம்மா………… கொஞ்சம் இங்க வாங்க………….. உங்க கிட்ட தனியா பேசனும்……… ” என்று தன் அன்னையை அழைக்க………….. தேவகியோ…..

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்….. எனக்கு தீக்‌ஷாவை மருமகளா எடுக்க மனப்பூர்வமா சம்மதமானு கேட்கத்தானே தனியா கூப்பிடுகிறாய்…………… எனக்கு மனப்பூர்வமா சம்மதம்……….”. என்று தீக்‌ஷாவை இன்னும் அழுத்தமாய்..உரிமையுடன் அணைத்துக் கொள்ள……….

பார்வதியும் சாரகேசும் தன் அன்னையின் செயலால்,வார்த்தைகளால்……….. செயலற்று,வார்த்தையற்று… நின்றனர்………

தீக்‌ஷா பார்வதியையும் சாரகேஷையும் சந்தேகத்துடன் பார்த்தாள்…………. காலையில் தனக்காக வந்து பேசிய சாரகேஷ்………….. தன் அண்ணனை திருமணம் செய்து கொள்ளுமாறு வாதாடிய தோழி…………….. இருவருமே இப்போது வார்த்தைகளின்றி மௌனமாக இருப்பதை உணர்ந்தவள்………………. தன்னைப் பற்றி ஏதோ தெரிந்திருக்கிறது” என்று விளங்க….

மெதுவாய் தன்னை தேவகியிடமிருந்து விடுவித்தவள்…………………

“பாரு………………. என்னைப் பற்றி உனக்கும் உன் அண்ணாவுக்கும் ஏதோ ஒரு உண்மை தெரிஞ்சுருக்கு……………….. அதுனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் இவ்வளவு தயக்கம்…….. எதுவும் பேச மாட்டேங்கிறீங்க……………… என்ன விசயம் சொல்லுடி…………. என்கிட்ட மறைக்காதீங்க……………….ப்ளீஸ் சொல்லுங்க” என்று கை கூப்பி கெஞ்ச………..

சாரகேஷின் முகம் வியர்க்க ஆரம்பித்து விட்டது…………….. ஆனாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க…………….

தீக்‌ஷா…… பார்வதியைப் பார்க்க அவளும் அமைதியாக இருக்க……………

“பாரு இப்போ சொல்லப் போறியா இல்லையாடி……………… “ என்ற ஆவேசமாய்க் கத்த ஆரம்பித்தாள் தீக்‌ஷா……………

அவளின் குரல் அந்த அறை முழுவதும் எதிரொலிக்க…………..பார்வதி திகைத்து…………. அவளை சமாதானப்படுத்தும் விதமாய் அவளை அணைக்கப் போக……………… அவளிடமிருந்து தீக்‌ஷா இன்னும் ஆவேசத்தோடு திமிற ஆரம்பித்தாள்……………

அவளின் அதிகப்படியான ஆவேசத்தைப் பார்த்த சாரகேஷ்… மருத்துவனாய் பயப்பட ஆரம்பிக்க…

”தீக்‌ஷா பிளீஸ் கண்ட்ரோல் மா……………. நீ உணர்ச்சி வசப்படாதா……………… சொல்றோம்” என்ற சரகேஷ் சொன்ன போது

தேவகியும்………… சாரகேஷிடம்

“என்னடா…………. என்ன நடக்குது……………… “ என்று நடப்பது எதுவும் புரியாமல் கேட்க……….

”அம்மா…………. தீக்‌ஷாவை அவங்க வீட்டில் விட்டுட்டு வந்துடறேன்………… அதுக்கப்புறம் நாம பேசலாம்……..”

“தீக்‌ஷா கிளம்பு………… நீ கேட்க வேண்டிய கேள்விய எல்லாம் விஜய்கிட்டயும் உங்க அம்மாகிட்டயும் கேளு” என்றபடி…………… தாங்கள் இழுத்துவிட்ட பிரச்சனையை இன்னும் பெரிதாக்காமல்…………. முடிக்கப் பார்க்க………….

இப்போது தீக்‌ஷா …………

“சோ உங்களுக்கு என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லை………….அப்டித்தானே…………….’” என்றவள்…………….

“ப்ச்ச் விடுங்க……….. என் அம்மாவே எனக்கு உண்மையா இல்லை………. நீங்களாம் இருப்பீங்கனு எதிர்பார்க்கலாமா………………… சரி நான் வருகிறேன்…………..” என்று கிளம்பிச் செல்ல…………

“இரு தீக்‌ஷா.. எங்க போற” என்று பார்வதி அவளின் கையைப் பிடித்து நிறுத்த…………. அவள் கையைப் பட்டென உதறிய தீக்‌ஷா

“எங்கேயோ போறேன்…… இன்னும் பைத்தியமா மாறலடி நான்……….. ஆனால் கூடிய சீக்கிரம் ஆகிடுவேன்………….. என்கிட்ட ஏன் உண்மையைச் சொல்லாம மறைக்கிறீங்க…………….. நான் அம்னீசியா வந்து எல்லாத்தையும் மறந்து நின்னதுக்கு பதிலா ஒரேயடியா போய்ச் சேர்ந்திருக்கலாம்டி……….” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பிக்க………

தீக்‌ஷாவின் கோபம் உணர்ந்த சாரகேஷ் தனக்குள் முடிவெடுத்தபடி…. அவளின் முன் வந்து நின்றான்………………..

அமைதியாக தீக்‌ஷாவைப் பார்த்து…………… ”இனியும் உன்கிட்ட மறைக்கிறது சரியா இருக்காது தீக்‌ஷா………….. எங்க மூலமாத்தான் உனக்கு தெரியனும்னு விதி போல…………..” என்று சொல்ல…………. இப்போது தீக்‌ஷா நின்றாள்……….

”முதலில் உள்ள போ… அதன் பிறகு சொல்கிறேன்” என்றவன் இப்போது முற்றிலும் ஒரு மருத்துவனாகவும் மாறியிருக்க…. அவனின் தீவிரமான முக பாவனையைப் பார்த்த பார்வதி………..

“அண்ணா………விஜய் சார்கிட்ட ஒரு வார்த்தை” என்று பார்வதி முடிக்க வில்லை…………..

தீக்‌ஷா கத்த ஆரம்பித்துவிட்டாள்

“இந்த வார்த்தைய எங்க வீட்ல இருக்கிற ஒவ்வொருத்தரும் சொல்றாங்கனு கொதிச்சுப் போயிருக்கேன்…………… நீயும் ஏண்டி அதையே சொல்ற…………………. அவன்கிட்ட எதுக்குடி கேட்கணும்…………… ஒரு வாரத்திலேயே உன்னைக் கூட மாத்திட்டானாடி” என்ற போது பாதி வார்த்தைகளிலேயே அவளால் பேச முடியவில்லை…………… தடுமாறி அமர்ந்து விட்டாள்..………..

சாரகேஷ்……………. பார்வதியிடம் சொல்லி தீக்‌ஷாவை அறைக்குள் கூட்டிப் போகச் சொன்னவன்….. அங்கு அவள் முன் அருகில் இருந்த நாற்காலியைப் போட்டு அமர்ந்தான்……………… பார்வதி தீக்‌ஷா அருகில் அமர்ந்திருந்தாள்……….. தேவகியும் எதுவும் புரியாமல்….விதியே என்று நின்று கொண்டிருக்க…..

சாரகேஷ் தீக்‌ஷாவிடம்

“உனக்கு என்ன நடந்ததுனு தெரியனும் அவ்வளவுதானே………….ஓகே……. அப்போ நான் உன்கிட்ட கேட்கிற கேள்விக்கெல்லாம்……………… யோசித்து பதில் சொல்ல வேண்டும் சரியா?” என்று கேட்க

தீக்‌ஷாவும் தன்னைச் சமன்படுத்த முயற்சி செய்ய ஆரம்பிக்க…………. தன் நிலையை நினைக்க நினைக்க இன்னும் அதிகமாய் அழுகைதான் வந்தது…..

”அழுகையை நிறுத்து தீக்‌ஷா” என்று சாரகேஷ் கோபமாய் தீக்‌ஷாவைக் கடிய…..

இப்போதும் அழுதபடியே சரி என்றவள்………. பார்வதியைப் பார்க்க…………. அவள் கண்களிலும் நீர் வர…….. இன்னும் தீக்‌ஷாவுக்கு அழுகை வர…..

சாரகேஷ் பார்வதியை திரும்பிப் பார்த்து முறைத்தபடி………….

“நீ எதுக்கு அழற…. அழறதா இருந்தா வெளில போ” என்று பாருவையும் அதட்டியவன்….

“அழாத தீக்‌ஷா………… உனக்கு என்ன ஆச்சு இப்போ……………. நீ அழுகைய நிறுத்துனாதான் நான் உன்னோடு பேச முடியும்” என்று இப்போது அமைதியாகச் சொல்ல………அழுகையை நிறுத்தியவள் அவனோடு பேசத் தயாரானான்…………

”உனக்கு ஹார்ட் ப்ராப்ளம் இல்லைதான்…………. ஆனா…………….. உனக்கு சைக்கலாஜிக்கலா பிராப்ளம் இருக்கு தீக்‌ஷா…………. சில சமயங்களில் உனக்கு……….. இதயம் அதன் சராசரித் துடிப்பை விட அதிகம் துடித்து அதே நிமிடத்தில் இதயத்துடிப்பு சுத்தமாய் இறங்கி விடுகிறது……………. அதுனாலதான் உன் மூக்கில் ரத்தம்………… மயக்கம்………….” என்ற போது………….. புரியாமல் பார்த்தாள்

புரியலையா……………

“உனக்கு சில் சமயங்களில் இதயத் துடிப்பு உன் கண்ட்ரோலில் இல்லை தீக்‌ஷா……….. அப்டியே விட்டால்……….. சட்டென்று நின்று கூட விடும்……….. நீ போடும் மாத்திரை எல்லாமே………… உன்னைக் கட்டுக்குள் கொண்டுவர……… உன் இதய ஓட்டத்தை சமன்படுத்தும் மாத்திரைகள்………… ” என்ற போது

”அப்போ எனக்கு இன்னும் பிரச்சனைதான் இருக்கா” …. என் அம்மா உண்மையைத்தான் சொன்னாங்களா” என்று தீக்‌ஷா விழிகளில் நிராசையோடு கேட்க

”ஹ்ம்ம்……. இருக்குனு தான் சொல்லனும்…. ஆனா உங்க அம்மா சொன்ன அளவு சீரியஸாலாம் இல்லை…… …… ட்ரீட்மெண்ட்ல சரி ஆக்கிடலாம்……….. என்ற படி…………… உனக்கு அம்னீசியா வந்தப்ப நீ எப்டி அதில் இருந்து ரெக்கவர் ஆன சொல்லு”

“எனக்கு முதலில் சுனந்தா பாப்பாவை அடையாளம் தெரியலை……………… அவ எப்டி பிறந்தாள்……… அன்னைக்கு நான் என்ன பண்ணினேன் என்று தெரியவில்லை………. எனக்கு சுத்தமாய் ஞாபக இல்லை………….ஏன் இன்று வரை கூட ஞாபகம் இல்லை……….. அண்ணிதான் சுனந்தா பிறந்த அன்று என்ன நடந்தது என்று சொன்னார்கள்……. அதன் பிறகு சிலர்லாம் எனக்கு சுத்தமாய் தெரியாது…………வீட்ல அண்ணா…….. அம்மா……….. அப்பா போட்டோஸ்லாம் காட்டி……………… கேட்பாங்க………….. எனக்குத் தெரியாதுனு சொன்னா ஞாபகப் படுத்துவாங்க என்றவள்……… எனக்கு கோமா ஸ்டேஜ் போனதுனால சில விசயங்கள் மறந்தும் போச்சு………… ஆனால் இப்போ நான் ஓகேதான் சாரகேஷ்… உங்களை… பார்வதியைப் பார்த்து நானா அடையாளம் கண்டுபிடிச்சுட்டேன்” என்று சொன்னவள்……….

”ஏன் அதுனால பிராப்ளமா” என்று கேட்க

“அதுதான் உன் ப்ராப்ளம்……………….. உன் நிச்சயதார்த்தம் அன்று……. அன்னைக்கு என்ன நடந்தது…….. சொல்லு…………… “ என்ற போது………

”மீண்டும் மீண்டும் ஏன்“ என்று கேட்க நினைத்த தீக்‌ஷா…. சாரகேசின் முகம் பார்க்க….….

”சாரி தீக்‌ஷா………….. உனக்கு சொல்லப் பிடிக்கலைனா விட்டு விடு……. சரி அதை விடு….. விஜய் பற்றி உன் அபிப்ராயம் என்ன……… சொல்லு……..” என்று சாரகேஷ் கேட்க………

தீக்‌ஷா சிரித்தபடி….. ”இதுக்கு முன்ன கேட்ட கேள்வியே பெட்டர் ‘பாரு’ அண்ணா” என்றவள்….. அவன் கேள்விக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தாள்

”அதுதான் ஏற்கனவே சொல்லிட்டேனே………….. எனக்கும் அவருக்கும் ஒத்து வரலைனு……………” என்றவள்

“ஏன் மறுபடியும் மறுபடியும் விஜய் அத்தான் கிட்டயே வந்து நிற்கிறீங்க…………. எல்லோரும்…………..” என்று கேட்டபோதே இப்போது அவளுக்குள்ளேயே ஏதேதோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டது………….

“தன்னையே சுற்றி வரும் விஜய்………………. தன் மேல் கோபம் எல்லாம் படாமல் அக்கறையாக கவனிக்கும் விஜய்…………. என்று எண்ணம் சுழழ ஆரம்பிக்க……அதற்கு மேல் யோசிக்கப் பிடிக்காமல்……….. தன் சிந்தனையை நிறுத்தியவள்…. சாரகேசைப் பார்த்தபடியே இருக்க…………..

“சரி உங்க விஜய் அத்தானுக்கு மேரேஜ் ஆகி விட்டது……… அது தெரியுமா” என்று அதிரடியாய் அவளிடம் பேச ஆரம்பித்தான் சாரகேஷ்…… இப்போது தீக்‌ஷா

”அன்னைக்கு பார்வதி சொன்னா……….. இன்னைக்கு நீங்களா………… ………….” என்று கேலியாகக் கேட்க

”தீக்‌ஷா………. நீ 3 மாதம் கோமா ஸ்டேஜ்ல இருந்திருக்க………… அதை ஞாபகம் வச்சுக்கோ……………. உனக்கு தெரியாத விசயங்கள் பல நடந்திருக்கும்னு உனக்கு ஏன் புரியல தீக்‌ஷா” என்ற சாரகேஷ் அவளுக்கு புரிய வைக்கும் விதத்தில் சொல்லும் போதே…….. தீக்‌ஷாவும் உடனே……….

“ஆனால் அப்படி நடந்திருந்தா இதுவரை எனக்கு தெரியாமல் இருக்குமா சொல்லுங்க” என்று பதிலுக்குப் பேச ………

பார்வதி ஒரு வேகத்தில் தன்னை அறியாமல் பேச ஆரம்பித்தாள்………..

“அவர் மனைவிக்கு அவரையே தெரியாத நிலைக்கு போய்ட்டாளாம்………… அதுனால அவங்க பிறந்த வீட்ல கொண்டு போய் விட்டுட்டாராம்………… அதுனால உனக்கு தெரிஞ்சுருக்காது” என்று நக்கலாய்ச் சொன்னாள்

அதை நக்கல் என்று சொல்வதை விட….. அந்த நக்கலில் கோபமும் வருத்தமும்….. ஆற்றாமையும்….. கலந்திருந்தன…

தன் தோழி அவள் கணவனைக் கூடத் தெரியாமல்….. அவள் வாழ்க்கையில் நடந்த எதுவும் தெரியாமல் இப்படி இருக்கிறாளே என்ற ஆதங்கத்தில்… வார்த்தைகளை விட

சாரகேஷ் வேகமாய்

“பார்வதி என்ன இது இப்டி பேசுற” என்று அதட்ட………. பார்வதி

“ப்ச்ச் போண்ணா……….. வேற எப்டி பேச சொல்ற…. ” என்று இன்னும் அதிகப்படியாக வருத்தத்தோட்ய் சொன்னவள்…. அதன் பின் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க

தீக்‌ஷாவோ பார்வதியிடம் தொடர்ந்தாள்………….

“ஏன்…….. மறந்துட்டா…………. அவளுக்கு என்ன பிரச்சனை………. ஏன் என்கிட்ட எங்க வீட்ல சொல்லலை………..” என்றபோதே பார்வதியின் வார்த்தைகள் புரிய…………….. அவள் சொன்ன நிலையில் இருப்பது தான் தானே…………. தான் என்ன விஜய்யின் மனைவியா…………. என்று நிறுத்தியவளுக்கு அதற்கு மேல் எதுவும் நினைக்கப் பிடிக்கவில்லை……………

’விஜய்யின் மனைவி” என்ற வார்த்தைகளே அவளுக்கு பிடிக்கவில்லை… ”ச்சேய்.. இது என்ன கற்பனை….. அப்டிலாம் நடந்திருக்காது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்….

“ஏய் என்னடி சொல்ற………..விளையாடாதா……..” என்று பல்லைக் கடிக்க………… மனதுக்குள் கொஞ்சம் படபடப்பாய்தான் ஆனாள் தீக்‌ஷா……………. ஏனோ விஜய்யின் மனைவி என்று நினைக்கக் கூட பிடிக்கவில்லை அவளுக்கு………………..

”யார் விளையாடுறது” இதைப் பார்த்தால் நம்புவியா…..……………. என்று….. யுகி கொண்டு வந்த பாஸ்போர்ட் நகலை பார்வதி காண்பிக்க………. அதில் விஜய்யின் திருமண விபர பகுதியில் ’மேரிட்’ என்று இருக்க…………….. வேகமாய் அதில் பார்வையை அதில் ஓட்ட………… அவன் மனைவி பெயர் தீக்‌ஷா விஜயேந்தர் என்று இருக்க………….. அதிர்ச்சியில் இன்னும் முகம் வெளிர ஆரம்பிக்க… தீக்‌ஷா அதிர்ச்சியாக பார்வதியைப் பார்க்க…………… சாரகேஷ் ஓரளவு அவளின் மனநிலையைக் கணித்தபடி

யுகேந்தர் தங்களுக்கு சொன்ன விசயங்களை எல்லாம் … தீக்‌ஷாவிடம் சொல்ல ஆரம்பித்தான்

அவன் சொல்லச் சொல்ல….. கை கால் மட்டும் இன்றி உடல் எங்கும் நடுங்க ஆரம்பிக்க…………. கையில் இருந்த பாஸ்போர்ட் நகலில் உள்ள விஜயேந்தர் முகம் அவளைப் பார்த்து சிரித்தது…………….

அப்போதுதான் தீக்‌ஷாவும் உணர்ந்தாள்…….. ராகேசுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளும்………… விஜய்-தீக்‌ஷா திருமண நாளும் ஒரே நாளாய் இருக்க…………… ஒன்றும் அவளுக்கு ஓடவில்லை……….

அவளின் நிலையை உணர்ந்த சாரகேஷ்…………

“ரிலாக்ஸ் தீக்‌ஷா என்றபோதே…………

“ம்ம்ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள் தீக்‌ஷா………… ஆனால் அவர்கள் சொன்ன விசயத்தையும் ……….. தான் பார்த்த விசயத்தையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை…………….. நம்ப முடியவில்லை…… இருந்தும்……… தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள் தீக்‌ஷா………

இப்போது அவள் மனம் படபடப்பாக எல்லாம் இல்லை………….. அவன் எப்டி என்னை……… விஜய் அத்தானா………… என்னையவா………. எங்க ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டதா என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்……………

யோசித்தவளின் கைககள் தானாக அவள் கழுத்தில் உள்ள ஜெயினில் பட…….. விஜய்யின் ஜெயின் என்று அப்போது நினைக்கத் தோணவில்லை…. ஆனால் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றால் தன் மாங்கல்யம் எங்கே என்ற யோசனையில் மட்டுமே மனம் சென்றது…..

மீண்டும் விஜய்யின் பாஸ்போர்ட்டைக் பார்க்க…………

தீக்‌ஷா விஜயேந்தர் என்று இருக்க……… உச்சரித்துப் பார்க்கும் போது……….. தீக்‌ஷா விஜய் என்று வாயில் வர………….

பார்வதியிடம் திரும்பி…….

“எப்டி பாரு…………. ஆனால் எனக்கு ஒண்ணுமே தோண மாட்டேங்குதே… எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குதே” என்று தலையைத் தாங்கிப் பிடித்தாள்………….. தீக்‌ஷா…………..

அன்றைய தீக்‌ஷா விஜய்யின் ஒரே பார்வையில் அவனுக்குள் கலந்தாள் காதலில்………. இன்றைய தீக்‌ஷாவோ… விஜய் உன் கணவன் என்று சொன்ன பின்னால் கூட தன் காதலை உணர முடியாத நிலையில் இருந்தாள்….

உண்மையைச் சொன்ன பின்னால் தீச்ஷாவுக்கு அதிர்ச்சியில் ஏதாவது ஆகிவிடுமோ என்று நினைத்திருந்த சாரகேஷ் …. இப்போது தீக்‌ஷாவின் நிலையைப் பார்க்க… அவளுக்கு அதிர்ச்சி மட்டுமே இருக்க…. தீக்‌ஷா உடல் நிலையில் கவலைப்படும்படி இல்லாமல் இருக்க….. சாரகேஷும் இயல்பானான்…… பார்வதியும் அதை உணர….… கொஞ்சம் நிம்மதி ஆனாள்

ஒருபுறம் தேவகிக்கோ பாதி புரிந்தும் பாதி புரியாமலும் நின்றாள்… தீக்‌ஷா நிலையை எண்ணி பரிதாபமாய் தீக்‌ஷாவைப் பார்த்துக் கொண்டிருக்க…………

சாரகேஷ் சிரித்தபடி……. ஏதாவது மேடமுக்கு ஞாபகம் வருதா…………..என்று கேட்க………. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் தீக்‌ஷா……………

”விருமாண்டியப் பிடிக்காது………….பிடிக்காதுனு சொல்லி………… அவனுக்காகத்தான் இப்படி இருக்கியாடி” என்று பார்வதி அவளைச் சீண்ட…………….

”என்ன சொல்ற…………….. அவருக்காக நான் என்ன ஆனேன்” என்ற வேகமாய் தீக்‌ஷா தோழியிடம் கேட்க

“பார்றா………… மரியாதை எல்லாம் வருது” என்று பார்வதி ஓட்ட…. தோழியை முறைத்தவள்………

“விளையாடாத பார்வதி………….. நான் கல்யாணம் ஆன பொண்ணுனா….தாலி மெட்டிலாம் எங்க” என்று தன் மிகப்பெரிய சந்தேகத்தைக் கேட்க…ஏனோ அவளால் இன்னும் நம்பவே முடியவில்லை….

“ஆமாம் அதுலாம் பெரிய கர்ணனோட கவச குண்டலம் பாரு…. கழட்டவே முடியாது….. வந்துட்டா கேள்வி கேட்க” என்று நக்கலாய் சொல்லிச் சிரிக்க.. தீக்‌ஷா சிரிக்கவில்லை…

தீக்‌ஷாவின் முகம் பார்த்த பார்வதி…… ”சாரி தீக்‌ஷா…. நீ இருக்கிற நிலைமையில் … விளையாட்டா பேசிட்டு இருக்கேன்” என்று மன்னிப்பு கேட்க

”ப்ச்ச்…. விடு… “ என்றவள்….. மீண்டும் அமைதியாக மாற…

அவளின் மௌனத்தில் …. பார்வதி……. அவளிடம்………

“தீக்‌ஷா உனக்கு விஜய்யை பிடிக்கலையா………….. ஏன் இவ்வளவு அமைதியா இருக்க…” என்ற தயங்கியபடி கேள்வி கேட்க..

“பிடிக்கலைனு சொல்லி இனி என்ன ஆகப் போகுது ‘பரு’…………. அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே….” என்று விரக்தியாய் சொன்னவள்.………..

“எனக்கு புரியலை பாரு…………… நான் எப்படி அவரப் போய் மேரேஜ் பண்ணினேன்……. நான் எப்படி சம்மதம் சொன்னேன்……. என்னைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வச்சாங்களா………. என்னை விடு…. ஆனா அவருக்கு என்னை சுத்தமா பிடிக்காது பார்வதி….. நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கை எந்த அளவு………….. அதிர்ச்சியா இருக்கு…………… சந்தோசப்படுறதா துக்கப்படுறதா தெரியலை………….. எனக்கும் விஜய் அத்தானுக்கும் எப்படி திருமணம் வரை வந்தது……………. இப்போ கூட என்னால சிந்திக்க முடியலை…………. ஆனா………….. இனி இதை என்னால மாத்த முடியாதுல்ல……… பிடிக்க வில்லை என்றால் கூட வாழ்ந்துதானே ஆக வேண்டும்”

என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் பேசிய தீக்‌ஷாவை…………… குறும்புடன் சுற்றும் பெண்ணாய் நினைக்கத் தோன்றவில்லை………… வாழ்க்கை தரும் அனுபவம்…………..ஒவ்வொருவரின் குண நலனைக் கூட மாற்றுமா…………. அவளின் அமைதியான …………… நிதானமான…………. வார்த்தைகளில் ………… அவள் ஏதோ முடிவும் எடுத்து விட்டாள் என்று சொல்லாமல் சொன்னது

“அப்படி சொல்லாத தீக்‌ஷா…………. உனக்கு அவரைப் பிடிக்காமலா……….. இப்டி உன்னையே மறந்த நிலைக்கு வந்து நிற்கிறாய்.…………. அவர் ப்ளைட் ஆக்ஸிடெண்ட்ல இறந்து விட்டார் என்ற அதிர்ச்சியில் தான் நீ இப்படி ஆகிவிட்டாயாம்…. அதே போல் உன்னை அவருக்கு பிடிக்காமலா உன்னையே நிழலா தொடருகிறார்” என்ற போது………… தீக்‌ஷாவிற்கு கண் கலங்க……….

“நாங்க சந்தோசமா வாழ்ந்திருப்போமா ’பாரு’…. எனக்கு விஜய் அத்தானை பார்க்கணும் போல இருக்கு…………….. ஆனால் அது காதல்னு சொல்ல முடியலை….. இவர்தான் உன் கணவர்னு சொன்னபின்னால் ஏதோ ஒரு உணர்வு அவ்வளவுதான்…. அதுக்கு மேல் எதுவுமே தோண மாட்டேங்குது பார்வதி… ” என்று சொன்னபோது துக்கத்தில் அவள் குரலே அவளுக்கு கேட்க வில்லை……… கண்களில் தேங்கிய கண்ணீர் அவளின் பார்வை வட்டத்தை மறைக்க…….

“நாளை எங்க திருமண நாள்………… பாவம்ல அவரு……. என்றவள்……… அதே வேகத்தில்……. “நானும் தானே…………” என்ற போது அவள் கண்களில் கண்ணீர் முத்துக்கள் உதிர ஆரம்பிக்க…………. அதற்கு மேல் தாங்க முடியாமல் ……………… பார்வதியின் மடியிம் முகம் புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள் தீக்‌ஷா……………..

”அவர் உயிரோட இருக்கும் போதே ஏண்டி தாலிய கழட்டுனாங்க…………… நான் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேனா…….. அந்த அளவு பிடிவாதம் பிடிப்பவளா நான்……….. என்றவள்

“இன்னைக்கு நான் வீட்டை விட்டு வெளியில் வந்தப்ப அவர் எவ்ளோ துடிச்சார்…. அது எதுவுமே எனக்கு புரியாத லூசாத்தானே நான் இருந்திருக்கேன்….. என்னை ஒரு அறை விட்டு ”நீ என் பொண்டாட்டிடி”..னு சொல்லி என்னை நிறுத்தி இருக்கலாமே பார்வதி… சரி அவர்தான் சொல்லலை…. எங்க வீட்ல மத்தவங்க யாராவது சொல்லி இருக்கலாமே பாரு…. ” என்று இன்னும் அதிகமாய் வேதனையோடு பேசியவள்…. மீண்டும்…..பார்வதியிடம் ஏதோ பேச வாயெடுத்தவள்… சாரகேஷைப் பார்த்து தயங்கி நிறுத்த..

அதை உணர்ந்த சாரகேஷ்…. அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்தவனாய் தன் தாயுடன் எழுந்து போக….. பார்வதியிடம் பொங்க ஆரம்பித்தாள் தீக்‌ஷா……..

”ப்ளைட் எப்போ ஆக்சிடெண்ட் ஆனுச்சுனு யுகி சொன்னான்………….” என்று கேட்க

“உனக்கு மேரேஜ் ஆகி மூன்று மாதம் கழித்து” என்று பார்வதி சொல்ல

“3 மாதம் நாங்க கணவன் மனைவியா வாழ்ந்தோமா………..” பார்வதியைப் பார்த்து தயக்கமாய் ஆரம்பித்தாள்

“ஆனால்…. எனக்கு எந்த உணர்வுமே இல்லையே பாரு……………. கணவனோடு வாழ்ந்த உணர்வு கூடவா ஒரு பொண்ணுக்கு தெரியாது…….. எனக்கு ஏன் எல்லாம் மறந்து போச்சு பாரு………….. “ என்று எங்கோ பதித்த பார்வையில் சொன்னவளுக்கு விஜய்யோடு அவள் குடும்ப வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை……………. நினைத்துப் பார்க்க பிடிக்கவும் இல்லை……………விஜய் தன் கணவன் என்ற உணர்வை மீண்டும் தன் நினைவில் இருத்தியவள்………..

“என்ன வாழ்க்கைடி………… நான் கன்னிப் பொண்ணா இருக்கிறேனா இல்லையானு கூட தெரியாம……. ஒரு வாழ்க்கை……. இப்போ நான் யாருனே தெரியாம அவர் கூட வாழச் சொல்றியா……….. ரெண்டு பேருக்கு நரக வாழ்க்கைதான்………….. என் மனசுல அவர் இருந்தாரா………. இல்லையா………….. இல்லை கடமையேனு வாழ ஆரம்பித்தோமா………… நினைத்தாலே எனக்கு தலையே வலிக்கிறது பாரு…………….. நான் எதுக்கு பார்வதி உயிரோட இருக்கிறேன்………… அவருக்கும் எனக்கு எந்த விசயமுமே ஒத்து வந்திருக்காதே பார்வதி……. என்னை எப்படி மேரேஜ் பண்ண சம்மதிச்சார்…….. அவரை யாருமே கட்டாயப்படுத்தி இருக்க முடியாது பாரு….. ரொம்ப அழுத்தம் பிடித்தவர்…. அவர் தம்பிக்கு கூட என்னை எடுக்ககூடாதுனு நினைத்தவர்…. அவர் எப்படி…. ” என்று புலம்பியபடியே..………… பாஸ்போர்ட்டில் இருந்த அவன் முகத்தையே பார்த்தபடி இருக்க……..

அவளின் புலம்பலில் பார்வதிக்கும் கவலை வர….

”இல்லை தீக்‌ஷா…. நீ கவலைப் படுவது போலெல்லாம் இல்லை….. நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாகத்தான் வாழ்ந்துருக்கீங்க தீக்‌ஷா…… நீ……… அவரை இந்தர்னு கூப்பிடுவாய்னு நினைக்கிறேன்………. நீ மயக்கத்தில் இருந்தப்ப அவர் பெயரைச் சொன்னடி…” என்று பார்வதி கவலையோடு தோழியிடம் சொல்ல

இந்தரா………. என்று நெற்றி சுருக்கியவள்…………. ஓ விஜயேந்தர்ல பாதி இந்தர்னு வருதுல்ல………. என்ற தோழியிடம் சொன்னவள்…

மனதுக்குள்…….

“பேர்லாம் சொல்ல விட்டானா என்னை” என்று மீண்டும் புகைப்படத்தை அருகில் வைத்துப் பார்க்க…………… எதுவுமே உணர முடியவில்லை அவளால்……

ராகேஷ் போட்டோவைப் பார்த்து எதுவும் உணராதது போல்… இப்போது விஜயேந்தர் புகைப்படமும் அவளுக்குள் எந்த உணர்வையுமே ஏற்படுத்த வில்லை

ராகேஷாவது இவன் தான் உன் கணவனாக வரப் போகிறான் என்று சொல்லப்பட்டது….. ஆனால் விஜயேந்தர் விசயத்தில் இவன் தான் உன் கணவன் என்று சொல்லப்பட்ட பின்னால் கூட அவளுக்குள் எந்த காதல் உணர்வும் வரவில்லை….. மாறாக….. இவன்தான் தன் கணவன் என்று…….தனக்குள் அவனை தனக்குள் பதிய வைக்க ஆரம்பித்தாள்……

தீக்‌ஷா விஜய்யின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த பார்வதி

பார்வதி…………. அவளிடம் என்னடி முத்திரையை வைக்கலயா………… நான் இருக்கிறேன் வெட்கப் படுகிறாயா என்ற போது…………… ஒரு வேகத்தில் தீக்‌ஷாவும் அந்த புகைப்பட்த்தை தனதருகில் கொண்டு வந்து…. விஜய்யின் நிழலில் தன் இதழை பதிய வைக்கப் போனவளுக்கு…… ஏனோ அது முடியவில்லை……………………..

தன் கணவன் என்ற உரிமை உணர்வு தைரியம் கொடுத்தாலும் அவன் புகைப்படத்தில் அச்சாரம் வைக்க அவளுக்கு தயக்கம் தான் வந்தது…. ஏனென்றால் தீக்‌ஷாவுக்குள் விஜயேந்தர் மேல்…. காதல் என்ற உணர்வு இந்த நிமிடம் வரை வர வில்லை… அது கண்டிப்பாக தனக்குள் ஒருநாள் வரும்…. விஜய்யிடம் மட்டுமே வரும்….. என்று மட்டும் தீக்‌ஷா உறுதியாக நம்பினாள்….

பார்வதிக்கு அவள் உணர்வுகள் புரிய தோழியின் தோள்களை ஆறுதலாக அழுத்தியவளுக்கு….. விஜய்யை நினைத்து ஏனோ பரிதாபம் தான் வந்தது….. தீக்‌ஷாவின் காதலை அனுபவித்த அவனின் இன்றைய நிலை….. நினைக்கவே கஷ்டமாக இருந்தது பார்வதிக்கு

கணவன் என்று சொல்லியும் தீக்‌ஷாவுக்கு தன் மேல் காதல் வரவில்லை என்று அவனும் தெரிந்து கொள்வான்…………… அது அவனுக்கு மிக பெரிய வலிதான்…… விஜய்யின் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்…. தன் தோழியைப் பார்க்க…அவள் கொஞ்சம் தெளிவாக இருக்க…..

விஜய்யோடான வாழ்க்கைக்கு… தீக்‌ஷா ஓரளவு தன்னை தயார்படுத்திக் கொண்டாள் என்பது பார்வதிக்கும் புரிய… சந்தோசமாகப் பார்த்தாள் தன் தோழியை….

தீக்க்ஷாவும் தீர்மானத்திருக்கு வந்திருந்தாள்தான்…..

“தன் கணவனை விட்டு இனி தள்ளி இருக்கப் போவதில்லை…. இனி ஒரு நிமிடமும் அவனை விட்டு விலக கூடாது என்று தீர்மானித்து அவனிடமே………. அவள் வீட்டிற்கே செல்ல முடிவெடுத்தாள்………

ஆனால் விஜயேந்தர் தன்னை ஏற்பானா என்ற கோணத்தில் அவள் நினைத்துப் பார்க்காமலேயே….. விஜய்யை காணச் சென்றாள் தீக்‌ஷா….

2,169 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page