அன்பே நீ இன்றி-27

அத்தியாயம் 27:

விஜய் இதற்கு மேலும் தன் கெத்தை…. தன் ஈகோயிசத்தை எல்லாம் காட்ட விரும்பவில்லை……….. ஏனோ பெற்றோர் சொன்னவுடன் தன் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாமலே தீக்‌ஷாவை திருமணம் செய்து விடலாம் என்று அவனுக்குள் இருந்த விஜயேந்தர் என்ற ஆணவம் பிடித்தவன்…. கொஞ்சம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான் தான்…………… ஆனால் கலைச்செல்வி… சுரேந்தர் என்று சொல்ல………… தன்னையே நொந்தவன்…………. தன் தாயிடம்

“அம்மா……. சுரேந்தர் கிட்ட ஏன்மா கேட்கணும்………….. இளமாறன் வீட்ல ஏன்மா பேசனும்” என்று பரிதாபமாய்த் திருப்பிக் கேட்க

கலைச்செல்வி சிரித்தபடி

“சுரேந்தர்கிட்ட கேட்கனும்ப்பா அவன் சம்மதமும் முக்கியம் இல்லையா……….. நம்ம தீக்‌ஷாவை சுரேந்தர் வேண்டாம்னு சொல்ல மாட்டான் தான்………. இருந்தாலும் ஒரு வார்த்தை தம்பிகிட்ட கேட்கனும்பா………. என்றவள்

”தீக்‌ஷாவுக்கு குறிச்ச நாள்ளேயே திருமணம் நடக்கனும்னா……….. உனக்கும் இளமதிக்கும் மேரேஜ் நடந்த பின்னால்தான் உன் தம்பிக்கு பண்ணனும்……….. அதுதான் 2 கல்யாணத்தையும் ஒரே மேடையில் பண்ணிடலாம்னு இளமாறன் வீட்ல பேசனும்னு சொன்னேன்……….. என்றவள்

“ராதா புகுந்த வீட்ல நொந்து போயிருக்காங்கடா………. அதுக்கு தீக்‌ஷா திருமணம்தான் ஒரு நல்ல முடிவு” என்று மகனைப் பார்க்க

“சுரேந்தர்கிட்டயும் சம்மதம் கேட்க வேண்டாம்……….. இளமாறன் வீட்லயும் பேச வேண்டாம்……. “ என்ற போதே

“அப்போ தீக்‌ஷா மேரேஜ்” என்று இடையில் குறுக்கிட்ட தாயை………… கை மறித்து நிறுத்தியவன்……… தன் பெற்றோர் இருவரிடமும் தீர்க்கமான பார்வையை வீசியபடி…………..