அன்பே நீ இன்றி-26

அத்தியாயம் 26

விஜய்யால் நேரிடையாக தீக்‌ஷாவின் அறைக்குள் போக முடியவில்லை………… யாராவது ஒருவர் தீக்‌ஷாவின் அறையில் இருந்து கொண்டிருந்தனர்………தீபன் வேறு விஜய்யையே கண் கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்க………….விஜய் தீக்‌ஷாவைப் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்……………… என்ன செய்யலாம்..…. தீக்‌ஷாவை எப்படி பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த ராதாவிடம்…. ஜெயந்தி………

“என்னம்மா தீக்‌ஷா ரெடி ஆகிட்டாளா…….” என்று கேட்க

“ஹ்ம்ம்….. ரெடி ஆகிட்டா அத்தை …………….. சேலை கட்டிட்டு இருக்கா…….. அதுதான் நான் கீழ வந்தேன்” என்று சொல்ல………….. தீக்‌ஷா மட்டும் தனியாக இருப்பதை யூகித்த விஜய்………………. ஹாலை விட்டு வெளியேறி வெளியே வந்தான்…………

அப்போது…………. காரின் அருகே சுரேந்தர் எங்கோ வெறித்த பார்வையில் நின்று கொண்டிருக்க…………… அதைப் பார்த்த விஜய்க்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டு விட்டது……..

“இவன் ஏன் உள்ளே நிற்காமல் இங்க ஏன் இருக்கான்……. அதிலும் இப்படி முகத்தை வச்சுக்கிட்டு………..ஒருவேளை இவனும் தீக்‌ஷாவை……….. கடவுளே …………… அப்டிலாம் இருக்கக் கூடாது” ஏதேதோ கற்பனைகள் செய்தவனாய் சுரேந்தர் அருகில் போய் நின்றான்………

“டேய் இங்க என்ன பண்ற……….உள்ள போ” என்று அதட்ட

“ப்ச்ச்………. அண்ணா………….. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை…………….. தீபன் ராதாவோட புருசனா போய்ட்டாரு…….இல்லை” என்று கண்கள் இடுங்கக் கூற………. கோபம் முகத்தில் கொப்பளித்தது………….. தொடர்ந்தான் சுரேந்தர்

“என்னமோ ரொம்ப பிகு பண்றாரு,……………… உங்களை ஏதோ விரோதி போல பார்க்கிறார்………உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை அண்ணா” என்று தம்பியாய்ப் பேச ஆரம்பிக்க………

விஜய்க்கு இப்போதுதான் நிம்மதி ஆகியது………..நிம்மதியில் பெருமூச்சு கூட வந்து விட….. சுரேந்தரைப் பார்த்து

“இதுதான் உன் கோபத்துக்கு காரணமா…………… முதலில் உள்ள போ…………. “ என்று சொல்ல……..

“அண்ணா” என்று சுரேந்தர் தயங்க

“உள்ள போன்னா போ” என்று அவன் சொன்ன விதத்திலே சுரேந்தரும் உள்ளே போக எத்தனிக்க……….. விஜய்……..அவனிடம் கேட்டான்

“உன் அண்ணனை அவமானப் படுத்துறாங்கனு இன்னைக்கு இவ்வளவு கோபம் வருது உனக்கு………… ஏண்டா…………. அன்னைக்கு எதுவும் பேசல…………… உன் அண்ணன் நான் தப்பு செஞ்சப்ப…. ஏன் தட்டிக் கேட்கலை…………… அன்னைக்கு நீ என்னை தடுத்து நிறுத்தி இருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காதே சுரேந்தர்…………. ” என்ற போது அருகில் வந்த சுரேந்தர்……..

“அண்ணா…………… நடந்த எல்லாத்துக்கும் நீங்க காரணம் இல்லை………….. நான் மட்டுமே காரணம்………. என்னாலதான் எல்லாமே………….. எனக்காகத்தான் நீங்க ஆர்த்தியைக் கடத்தச் சொன்னீங்க……….. அதுனாலதான் தீக்‌ஷா உங்களைத் தப்பா புரிஞ்சுகிட்டா…… இப்போ தீபனுக்கும் நமக்கும் மனஸ்தாபம்” எனுபோதே

“இல்லைனாலும் அவ என்னை சரியா புரிஞ்சிருப்ப்பா………….. இவன் வேற………….. மனுசன் நிலைமை தெரியாம பேசிட்டு இருக்கான்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் விஜய்……….

சுரேந்தர் தொடர்ந்தான்……………….

“தீக்‌ஷா உங்களை பொறுக்கினு சொன்னது எனக்கே தாங்க முடியலைணா…………… அதுமட்டும் இல்லை நீங்க தப்பே பண்ணினாலும் நான் உங்களைக் கேட்க மாட்டேன்………….. உங்க பக்கத்தில் தான் இருப்பேன்………… அதே போல நீங்க என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன் அண்ணா” என்ற போது அவனை இழுத்து தன்னோடுக் கட்டிக் கொண்டான் விஜய்…………

”உன்னை மாதிரி எனக்கு ஒரு தம்பி கிடைத்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும்………… சுரேந்தர் ” என்று நெகிழ்ந்தவன் அவனை அனுப்பி வைக்க……… சுரேந்தரும் உள்ளே போனான்…. விஜய் சொன்னான் என்பதற்காகவே………

அவன் அந்தப் பக்கம் நகர்ந்தவுடன் விஜய்….. தீக்‌ஷாவின் பால்கனியைப் பார்த்தபடி……… இது வழியா அவ ரூம்க்கு போகலாம்……….. ஆனால் யாராவது பார்த்து விட்டால்………. என்ன செய்வது” என்று யோசித்தவனுக்கு…………. தீக்‌ஷா அறையின் பின்புறம் உள்ள சன்னல் ஞாபகம் வர………………. வேகமாய் அந்த பங்களாவின் பின்புறமாய்ப் போனான் விஜய்……………..

------------

தீக்‌ஷா தன் அறையில் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு புடவை மாற்ற தொடங்கி இருக்க………… அவளுக்குள் பல சிந்தனைகள்………. அதில் பாதி ராகேஷைப் பற்றிதான்

அவனைப் பற்றி அவளால் கணிக்கவே முடியவில்லை…………. ஒரே குழப்பமாக இருக்க…………..

ராகேஷ் நேற்றே வந்துட்டார்னு அண்ணா சொன்னானே……. ஏன் என்கிட்ட பேசவே மாட்டேன்கிறார்……… இன்னைக்காவது பேசுவாரா………. என்று புடவையைக் கட்டியபடியே தன்னைக் கண்ணாடியில் பார்த்தபடி தன் முந்தானையை சரி செய்ய…….. அவளையுமறியாமல் விஜய் முகம் ஞாபகம் வர……………….. அன்று அவன் முன்னால் தான் நின்ற நிலை நினைவில் வர…………… நெற்றிப் பொட்டில் இன்னும் அதிகமாய் வலித்தது……………அன்று கட்டிலில் மோதிய காயத்தின் வலிதான் அது……………… இன்னும் வலித்துக் கொண்டிருந்தது………..

”கடவுளே…………… என்னால அந்த நாளை மறக்கவே முடியவில்லையே………….” கண்களை மூடியவள்

“ப்ளீஸ்… முடிந்தால் அந்த நாளே எனது ஞாபகத்தில் இருந்து போகும்படி அழித்து விடேன்” என்று கடவுளுக்கு வேண்டுதல் வைத்தபடி…… தன் நிலைமையை நொந்தபடி இருக்கும் போதே……………..

அவள் அறையின் பின்புறம் இருக்கும் சன்னல் கதவு… தட்டப்படும் ஓசை கேட்க….. பயந்தவள் தன் புடவையை வேகமாய்க் கட்டி முடித்து…………. சன்னல் அருகே வந்து…… யாராய் இருக்கும் என்று குழப்பமும்………..திகிலும் வர……. மெதுவாய்த் திறந்தவள்…………. விஜய்யைப் பார்த்து உறைந்து போய்………………. அவளையுமறியாமல் “விஜய் அத்தான்” என்று சொல்லி விட

அவளின் ’அத்தான்’ என்ற சொல்லில் ஒருகணம் தனை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்…….

இப்போது தன்னை நடப்புக்கு மீட்ட தீக்‌ஷா…….. அவனைக் கவனிக்காமல் வேகமாய்ச் சுற்றிலும் பார்வையை ஓட விட்டவள்…. தன் அறையின் கதவு மூடி இருக்கிறதா என்று மீண்டும் ஒருமுறை கவனித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவள்….. மீண்டும் விஜய்யின் புறம் திரும்ப….. விஜய்யும் ஓரளவு தன் பார்வையை மாற்றியவனாய்

“பின் பக்க கதவை திற தீக்‌ஷா” எனச் சொல்ல

தீக்‌ஷா அதிர்ந்தாள்…. இவன் மறுபடியும் பிரச்சனை பண்ணப் போறானா…………. என்று யோசித்தவள்…….. திகைத்த விழிகளில் அவனை நோக்க…….. அவன் கஷ்டப்பட்டு நின்ற நிலைமை புரிய……… அதிலும்……. ஏதோ மரக் கிளை கீறி இருக்கும் போல……. அவன் நெற்றியில் கீறல்கள் வேறு இருக்க………. சட்டென்று பின் பக்க கதவைத் திறந்து விட்டவள்….. விஜய் உள்ளே வர வழி விட்டு விலகி நின்றாள்……..

அவன் உள்ளே வந்ததும்………. கதவை மூடிய தீக்‌ஷா……… மீண்டும் சன்னல் அருகே வந்தவள்………. அவனைப் பார்க்காமல்………… வெளியே வெறித்தபடி பேச ஆரம்பித்தாள்………..

“இப்போ கதவைத் திறந்து விட்டேனே……….. இப்போ கூட நீங்க என்னை லூசுன்னு நெனச்சுருப்பீங்கதானே……” என்று வார்த்தைகளை அவனை நோக்கி வீசினாள் தீக்‌ஷா…………… அந்த வார்த்தைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை………அழுத்தமும்………….. அடக்கப்பட்ட வேதனையும் மட்டும் இருக்க…………. இன்னும் தொடர்ந்தாள்…………..

ஆனா நான் உங்களைத் தவிர வேறு யார் வந்திருந்தாலும் திறந்திருக்க மாட்டேன்………… அது ஏன்னு தெரியுமா……….. விஜய் அத்தான் யார் எப்டிப் பட்டவர்னு எனக்குத் தெரியும்……… அந்த நம்பிக்கை தான்………..

”ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது…… நானா இருக்கப் போய் உன்னை விட்டேனு சொன்னீங்கள்ள…………” என்றவள் அவனைப் பார்த்து……..

“ஆழம் தெரியாமல் காலை விடல அத்தான்………… அன்னைக்கு அந்த இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் நான் அவ்வளவு தூரம் பேசி இருக்க மாட்டேன்…………. அந்தச் சண்டை போட்டிருந்திருக்க மாட்டேன்……….. அண்ணியோட அண்ணன்னு ஒரு உரிமை………… அது மட்டும் இல்லை…… நீங்க தப்பு செய்தது எனக்கு பிடிக்கலை……. அதுதான் என்னை அறியாமல் சண்டை போட்டேன்……….. யாரோ எவனோனு போக முடியல என்னால……….” என்றவள்…………….

“அதே போல் அத்தனை பேர் மத்தியிலும் சத்தியமா உங்க மானம் போறது மாதிரி நடந்திருக்க மாட்டேன் அத்தான்………. யாரோ தெரியாதவங்க மத்தியில் இந்த தீக்‌ஷா உங்கள அசிங்கப்படுத்திருவானு நினைச்சீங்கல்ல…. நீங்க தான் என்னைப் புரிஞ்சுக்கலை…………… ” என்ற போதே அவள் குரம் கம்ம ஆரம்பிக்க………. தன்னை சரிப்படுத்திக் கொண்டவள்………..

“ப்ச்ச்….. இனி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை…….. கடைசி வரை நீங்க என்னைப் புரிஞ்சுக்கலை……… புரிஞ்சுக்கவும் ட்ரை பண்ணலை……….. சாரி……….. ” என்று சொல்ல…….

நாம மன்னிப்பு கேட்க வந்தா இவ மன்னிப்பு கேட்கிறா………. எதுக்கு இந்த சாரி என்று விஜய் யோசிக்கும் போதே

“பேசும் போது என்னையுமறியாமல் அத்தான்னு சொல்லிட்டேன்….. உங்களுக்கு நான் அத்தான்னு கூப்பீட்டா பிடிக்காதுன்னு தெரியும்……………. இன்னும் 2 வீக்ஸ்தான்… பொறுத்துக்கங்க…. என் தொல்லையிலிருந்து விடுதலை….. அதன் பிறகு உங்க தங்கச்சி வீட்டுக்கு நிம்மதியா வரலாம்…… போகலாம்…. இந்த தீக்‌ஷா தொல்லை இனி உங்களுக்கு இருக்கவே இருக்காது “ என்று விரக்தியாய்ச் சிரித்தவளுக்கு…. விஜய் அமைதியாக நின்று கொண்டிருக்கும் நிலை புரிய….. விஜய்யைத் திரும்பிப் பார்க்க……… அவன் அவளைப் பார்க்க வில்லை…….. வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்……

எப்போதும் விஜய் அவளைப் பார்த்துதான் பேசுவான்…… அந்த பார்வையில் ஒன்று கோபம் இருக்கும்…….. இல்லை…. நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா என்ற அலட்சியம் இருக்கும்…… சில நேரங்களில் இவள் செய்யும் குறும்புதனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியாத ஆற்றாமை இருக்கும்….. விஜய்யின் கண்கள் உயிரோட்டமான கண்கள்………. அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவனின் பார்வையே சொல்லும்……….. அவன் பார்வை மாற்றங்களைப் பார்ப்பதே தீக்‌ஷாவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்……… அதனாலே அவள் ஏதாவது சீண்டலாய்ச் செய்துவிட்டு………….. அவனைத் திரும்பிப் பார்ப்பது அவளுக்கு வழக்கம்…………

இன்றும் அவன் கண்களைப் பார்க்க…… அது அவளுக்கு தரிசனம் தராமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்க….. அவன் இங்கு இருப்பதை யாராவது பார்த்து விட்டால் தன் நிலை அவ்வளவுதான்……………. என்பதால்……….

“எதற்கு வந்தான் இவன்…….. இவனுக்கு என்னை புரிய வைக்கனும்னு என்கிற வேகத்தில்……….……… நானும் கதவைத் திறந்து விட்டுட்டேன்……..” என்று தனக்குள் சொன்னவளாய்…………… விஜய்யிடம் மீண்டும் வேகமாக பேச ஆரம்பித்தாள்…..

“இந்த வழியில் வந்து ஏன் என்னைப் பார்க்க வந்தீங்க……… என் ரூமுக்கு வருகிற வழி இது இல்லை விஜய் சார்……… நீங்க வாங்கிக் கொடுத்த வீட்டுக்கு உங்களுக்கே வழி மறந்து போச்சா…. எதுக்கு வந்தீங்க………… அதைச் சொல்லுங்க” என்று கூறி……… தன் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் போய் உட்காரப் போக……. அவள் வார்த்தைகளில் விஜய் முறைத்தான்………….

அவள் வார்த்தை பிரவாகத்தில் நக்கலும் கோபமும் படபடப்பும் சரிவிகிதத்தில் இருக்க

“கொல்றாளே……….. சும்மாவே பேசிக் பேசிக் கொல்வா……………. இப்போ கேட்க்கவா வேணும்” என்றபடி தன்னை விட்டு நகரப் போனவளை…….. சட்டென்று அவள் கையைப் பிடித்து நிறுத்த…….. தீக்‌ஷா தீப்பார்வை பார்த்தாள் அவனை……..

“கைய எடுங்க………..” என்றவளின் வார்த்தை தந்த உக்கிரம் விஜய்க்கும் புரிய கையைத் தானாக விட்டவன்…… அவளிடம்