அன்பே! நீ இன்றி!! 25

அத்தியாயம் 25

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் விஜய்யின் நிம்மதி எல்லாம் பறி போய் இருந்தது………… தீபன் தீக்‌ஷாவின் அண்ணனாய் மாறி…. ருத்ர அவதாரம் எடுத்து ஆட……. அதில் அவன் ராதாவை அடிக்க………. தீபன் ராதாவை அடித்ததால் …. விஜய் தன் பக்க தவறெல்லாம் மறந்து………… இதற்கெல்லாம் காரணமான தீக்‌ஷாவை கீழே அழைக்க…….. தீக்‌ஷா வாய் மீற……….. விஜய் ராதாவின் அண்ணனாய் மட்டுமே அப்போது மாறி இருக்க……….. எல்லாமே நடந்து முடிந்து விட்டது……………

தீக்‌ஷாவும் அடங்காமல்……..விஜய்யை ’பொறுக்கி’ என்று அத்தனை பேரின் முன்னிலையில் சொல்ல………… அவனால் அந்த வார்த்தையைத் தாங்கவே முடியவில்லை……….. அடங்காத கோபத்தில்……… தீக்‌ஷாவை அவன் கையாலே வெளியே தள்ளி……………. அதற்கும் மேலே தீபனைப் பேசி……………. கிட்டத்தட்ட இரு குடும்பத்துக்கும் உள்ள ஒட்டு உறவே போய் விட்டாற் போல் தோன்றியது.

விஜய் ஹாலிலேயே அமர்ந்து விட்டான்…………… இப்போது பொறுமையாக நினைத்துப் பார்த்ததில்………… நடந்த விசயங்கள் அனைத்திற்கும் முழுமுதல் காரணம் தன் கோபமும்… தீக்‌ஷாவின் வாய்த்துடுக்கும் என்று உணர விஜய் உள்ளம் அமைதி இழந்தது………….

அதே நேரம் அவள் சின்னப் பெண்……….. தானாவது பொறுமையாக போயிருந்திருக்கலாமோ……….. இப்போது தன் தங்கை வாழ்க்கைத்தானே கேள்விக்குறி ஆகிவிட்டது…………. என்று கலங்க ஆரம்பித்தான்…………

தன் தங்கைதான் அவன் மனக்கண்ணில் நின்றாள்………. தீபனிடம் பேசியபோது இருந்த எந்த உணர்வும் அவனுக்கு இப்போது இல்லை……………. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற நிலையில் அவன் இருந்தான் ………………

தீக்‌ஷா குடும்பம் போன பின்னால் ராதா அழுதபடி தனது அறைக்குச் சென்று விட………… யுகேந்தர் அவள் பின்னால் போக…….. மற்ற அனைவரும் கீழே இருந்தனர்……………..

ஆக மொத்தம் விஜய் குடும்பம் நிம்மதியின்றி தவிக்க……