top of page

அன்பே! நீ இன்றி!! 24

அத்தியாயம் 24

விஜய் பிடித்து இழுத்த வேகத்தில்………. அவன் மீது மோதி அவன் மார்பில் தன் முகத்தை பதித்து தடுமாறிய தீக்‌ஷாவை விழாமல் பற்றி……. அவளை விலக்கி தன் முன் நிறுத்தியவன்…. அவள் கைகளை விடாமல் பிடித்தபடியே பேச ஆரம்பித்தான்…. அவளுக்கு எப்படியாவது தன்னை புரிய வைக்கும் முயற்சியில்

“தீக்‌ஷா……. ஒண்ணும் பிரச்சனை இல்லைமா…………. சின்ன பிஸ்னஸ்….அது கைவிட்டு போகமல் இருக்க” அவன் மெல்லிய குரலில் கிட்டத்தட்ட கெஞ்சலாகத்தான் சொன்னான்… தீக்‌ஷாவோ அதைப் புரிந்து கொள்ளாமல் கொஞ்சம் குரலை உயர்த்தியவள்…….. தன் கைகளை அவனிடமிருந்து உருவ முயற்சி செய்தபடியே……..

“அதுக்கு பொண்ணைக் கடத்துவீங்களா……… என்னை விடுங்க………… நான் கீழ போகணும்………. கைய விடுங்க………. வலிக்குது” என்று சொல்ல… அவள் முகத்தைப் பார்க்க……..

அதில் கோபமும்….. இவன் கையைப் பிடித்திருந்ததால்…. அது பிடிக்காத முகச்சுழிப்பும் அப்பட்டமாக அவளின் முகத்தில் தெரிய

விஜய் எரிச்சலுடன்… “இவளுக்கு எப்படி புரிய வைப்பது…..” என்ற யோசனையுடன்

“உன்னை யார் போக வேண்டாம்னு சொன்னது………….. நீ போகலாம்….. ஆனால்….. கீழ எதுவும் சொல்லி உளறாத போ……………” என்று அவன் அவள்…… கைகளை விடப் போக……….

தீக்‌ஷாவோ அவனிடம் …………… இன்னும் வாயாட ஆரம்பிக்க…….. அதிலும் வாடா போடாவென்று மரியாதை எல்லாம் காற்றில் பறக்க அவள் பேச…. விஜய்யால் அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல்….. போய்விட்டது………….

அவனுக்கு எந்த அளவு கோபம் வந்ததோ அந்த அளவுக்கு தீக்‌ஷாவின் கைகளை இறுகப் பிடிக்க…………. தீக்‌ஷா முகம் கன்றினாள்….. வலியால் அதிர்ந்த அவளின் முகம் அவன் கண்களுக்கு பட்டாலும்………. அவள் கீழே இறங்கி ஏதாவது பேசி விபரீதம் ஆகிவிடுமோ………. நன்றாக போய்க்கொண்டிருக்கும் விழாவில் பிரச்சனை வந்தாலும் வரலாம்……….. இவளுக்கு புரியவைக்க முடியாதே………. என்பதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே……… அவள் ஏதோ சொல்ல மீண்டும் வாயை திறக்க….

“இவ வாய் இருக்கே…. இங்க நின்னா கத்தியே ஊரைக் கூட்டிருவாளே”” என்று மனதினுள் நினைத்தபடி….. வேகமாய் அவள் வாயை தன் கரங்களால் அடைத்தபடி……. மாடியில் இருந்த ரூமிற்குள் தள்ளினான்…. தள்ளியவன் கொஞ்சம் வேகமாய் உள்ளே தள்ளி விட்டு கதவை அடைத்தான்….. அவள் அங்கிருந்த கட்டிலின் காலின் நுனியில் மோதியதை அவன் பார்க்கவில்லை……….

வெளியில் வந்து அசோக்கிற்கு…. கால் செய்து….. ஆர்த்தியை அவள் வீட்டில் கொண்டுபோய் விடச் சொன்னவன்………….. இப்படி தீக்‌ஷாவிடம் மாட்டுவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை……………

”ச்சேய்” என்று கண்முடி தன் இடது கையை தன் முன் நெற்றிக் கேசத்தில் விட்டு அளந்தவன்………… சில வினாடிகளிலே மீண்டும் கண் திறந்த போது…………… தாறுமாறாக கீழே விழுந்து கிடந்த தீக்‌ஷாவின் மொபைல்தான் அவன் கண்களில் பட்டது……

இருவருக்குமான வாக்குவாதத்தில்…….. தீக்‌ஷாவின் மொபைல் கீழே விழுந்ததில் அதன் பாகங்கள் தனித் தனியே கிடக்க………… வேகமாய் கீழே குனிந்து….. எல்லாவற்றையும் தேடி எடுத்து பொருத்தினான்…..

அப்போது அவளின் மொபைலின் கவர் வெள்ளை என்பதால்……. லேசாய் ஏதோ கறை தீற்றல் இருக்க….. அதை துடைத்தபடி மீண்டும் பொருத்த ஆரம்பிக்க மீண்டும் அதே கறை வர… புருவ முடிச்சுடன்… தன் உள்ளங் கைகளை வேகமாய் பார்க்க…… அதில் அவன் தீக்‌ஷாவின் வாயைப் பொத்தி இருந்த்தால் அவன் வலதுகையின் உள்ளங்கை முழுக்க லிப்ஸ்டிக் கரை விரவி இருக்க…… தன் கைகளை வேகமாய்த் துடைத்தவனின் உள்ளுணர்வு……… இப்போது அவள் தன் மார்பின் மேல் மோதியதை எடுத்துக் கொடுக்க….. அனிச்சையாக தன் சட்டையைக் குனிந்து பார்த்தவன் அதிர்ச்சியில் திகைத்து நின்றான்……….. அவன் சட்டையில் பிங்க் வண்ண லிப்ஸிடிக்கில் தீக்‌ஷாவின் இதழ் ஒற்றல் லேசாய் இருக்க………. அவன் மனமும் உடலும் அதிர்வலைகளை அவன் உடலுக்குள் பரவ விட……. அதிர்ந்து நின்றான்…. அது எந்த மாதிரியான உணர்வு என்றே தெரியவில்லை….. அதில் ஆராய்ச்சி செய்யப் போனவனின் மனதை தீக்‌ஷாவின் குரல் மீட்டெடுக்க…. சட்டென்று அவளைப் பூட்டி வைத்த அறையின் அருகே போனவனுக்கு…………..

”கடவுளே இதை வேற இந்த லூசு பார்த்தால் உட்கார்ந்து ஒப்பாரி வைப்பாளே………. இன்னொருத்தனுக்கு மனைவியாக போக போறவ அவ….. தன் மேல் எதார்த்தமாகப் பட்ட இதழ் ஒற்றல் தீக்‌ஷாவுக்கு தெரிந்தால் அவள் மனம் குற்ற உணர்வில் தவிக்குமே….. என்று அவள் முன்னே போகத் தயங்கி வெளியே நின்றுவிட்டான்

தீக்‌ஷா மனம் எல்லாம் யோசித்த அவனின் மனம் ….. அவள் தன்னவள் என்ற விசயத்தை அப்போது சொல்ல வில்லை அவனுக்கு…….

மீண்டும் அணிந்திருந்த சட்டையைப் பார்த்தான் விஜய்………… உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும்…………. அவள் இருக்கும் நிலையில் இதையெல்லாம் பார்க்க மாட்டாள் தான்…… ஆனால் பார்த்து விட்டால்…………. குழம்பி விட்டான் விஜய்

இப்படியே போவதா……….. இல்லை கீழே போய் வேற சட்டை அணிந்து வந்து அவள் முன் நிற்போமா என்று திணறியவனாய் நின்றவன்…….. பின் முடிவுக்கு வந்தவனாய்…….கீழே இறங்கப் போக………….. அப்போது தீக்‌ஷா பலமாய்க் கதவைத் தட்ட ஆரம்பிக்க…………………

’”அடங்காப் பிடாரி…………… எப்டி கதவை உடைக்கிறா………… உன்னை” என்றவன்………….. வேறு எதுவும் யோசிக்காமல்…………. தன் பட்டன்களை விடுவித்தவனாய்………….. சட்டையைக் கழட்ட ஆரம்பித்தான்

அவள் மனம் குற்ற உணர்வில் தவிக்கக் கூடாது என்று நினைத்தவன்….. அணிந்திருந்த சட்டையை எதையும் நினைக்காமல் கழட்டி விட்டான்…. ஆனால் அவன் இன்னொன்றை மறந்தான்… தன்னுடன் தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணின் முன்.. அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி அவள் முன் நின்றால் … அவள் என்ன நினைப்பாள் என்றே.. எண்ண வில்லை விஜய்…………..

கழட்டிய சட்டையைத் தோளில் போட்டபடி கதவைத் திறந்த விஜய்க்கு தீக்‌ஷா மேல் கோபமே இல்லை………… சொல்லப் போனால் சற்று முன் இருந்த இறுக்கமெல்லாம் அவன் மனதை விட்டுப் போனது போல் இருக்க………….. உல்லாசமாகத்தான் உள்ளே நுழைந்தான்…. அவள் ”விஜய் திறடா” என்று சொல்லும் போது கூட ஏனோ கோபம் வர வில்லை……….. அந்த மன நிலையிலே விஜய் கதவைத் திறக்க…………. தீக்‌ஷாவோ அவனைப் பார்த்து தடுமாறி பின்னால் போக………… விஜய்க்கு முதலில் ஒன்றும் புரியவில்லை…

”கதவைத் திறங்க…… என்னை விடுங்க……….. நான் போகனும்……………” .என்று தீக்ஷா பேசிய போது………. வித்தியாசமாக இருந்தது அவனுக்கு…

எப்போது அவன் முன் பேசும்போது…. அவள் வார்த்தைகளில் நடுக்கம் இருக்காது……….. இன்று அந்த திணறல் அவனுக்குள் எதேதோ செய்ய………….. அவனுக்கு அவளின் அந்த தடுமாற்றம் ஏனோ ஒரு பரவசத்தை ஏற்படுத்த….. அதை ரசித்தபடியே…………….. இவ ஏன் இந்தத் தடுமாறு தடுமாறுறா……………. பேசவே முடியாமல் கூட….. பட படனு பேசுவா… சற்று முன்னால் கூட அப்டி திமிரா பேசுனா ……….. இப்போ என்னாச்சு….” என்று நினைக்கும் போதே அவள் பார்வை தன்னில் பதிந்த விதம்…. அவளின் தடுமாற்றத்திற்கான காரணத்தை அவனுக்கு புரிய வைக்க

“அதுசரி…. சட்டையக் கழட்டுனாலே………………. இவளுங்களுக்கு புத்தி இப்டித்தான் போகுமா” என்ற யோசனையோடு…….

”என்ன………… தடுமாறுற…………..” என்று நக்கலாகக் கேட்டவனுக்கு அவளின் மிரண்ட விழிகள் அவனுக்கு புன்னகையைத் தந்தன………..

அவள் எந்த மன நிலையில் இருக்கிறாள் என்றே அவன் உணரவில்லை……… தன் மனதில் எந்த தவறான உள் நோக்கமும் இல்லை என்பதால் அவனுக்கு பெரிதாய் படவில்லை…….. சாவகாசமாக……… தன் சட்டையைக் கட்டிலில் போட்டு விட்டு தீக்‌ஷாவைப் பார்க்க……. அவள் அவனையும் அந்த கழட்டிப் போட்ட சட்டையையும் மாற்றி மாற்றி பார்த்தபடி

“எ……எதுக்கு சட்டைய கழட்டுனீங்க……….. நான் போகனும்………. நீங்க தப்பு மேல தப்பு பண்றீங்க” என்று அழ ஆரம்பிக்க…….

அவள் வேறு மாதிரி தன்னை நினைத்து விட்டாள்…….. என்பதை முற்றிலும் உணர்ந்தவன்

“அடிப் பாவி கீழ அத்தனை பேரை வச்சுட்டுதான்…. உன்கிட்ட தப்பா நடந்துக்கப் போறேனா…………… லூசுதாண்டி நீ……….. உன்னலாம் வச்சு கட்டி சமாளிக்கப் போறவன் நிலை பாவம் தான்” என்று நினைக்கும் போதே………… ஏதோ மனம் சற்று கனமானது போல் இருக்க………….

“இவளை, இவள் விளையாட்டுதனத்தை எல்லாம் அந்த ராகேஷ் புரிஞ்சுக்குவானா…………. என்றெல்லாம் எண்ணம் தோன்ற………… அப்போது தீக்‌ஷாவின் அழுகை அதிகமாக ………….. அதில் தன் எண்ணம் கலைந்து மீண்டவன்…. அவளை சமாதானப் படுத்தும் விதமாகவும்…………. அதே நேரத்தில் தன்னைப் பற்றி அவள் எதுவும் சொல்லிவிடவும் கூடாது என்ற கவனமான உணர்விலும்………..

”ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு இப்போ அழ ஆரம்பிக்கிற…….. நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்…… ஆனா நீ இங்க இருந்து போய் எதுவும் சொல்ல மாட்டேனு சொல்லு……… இப்பவே போகலாம்” என்று கூற…………

இவன் கொஞ்சம் இறங்கியதில் அவள் ஆட ஆரம்பித்தாள்………….

”சொல்வேன்…… என்ன செய்வ நீ……” பார்வையில் இளக்காரமாகவும்………… வார்த்தைகள் தடித்தும் அவளிடமிருந்து பதில் வெளிவர………… அவள் ஒருமையில் விளிக்க……… விஜய்க்கு இப்போது ஆத்திரம் ஆத்திரமாக வந்த்து……. சற்று முன் இருந்த மன நிலை எல்லாம் அடங்கி……….. தன்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அவளின் பிடிவாதத்தை எண்ணி எரிச்சல் ஆனவனுக்கு கோபம் வர………. அதை காட்டும் வழி தெரியாமலும்……….. தன்னை அடக்கும் வழி தெரியாமலும்………….. என்ன செய்வதென்று புரியாமல் சிகரெட்டை எடுக்க…………. அப்போது அருகில் கிடந்த சட்டையைப் பார்த்தவன்………. இப்போ தம் அடிச்சேன்……. இவ நம்மள பொறுக்கினே முடிவு கட்டிடுவா…….. என்று முடிவெடுத்தவன்……… எடுத்த சிகரெட்டைப் கீழே போட்டு விட்டு……….. அவளிடம் திரும்பி…………

“அவள விட சொல்லிட்டேண்டி…………. நீ என்னை டார்ச்சர் பண்ணாத…………. இந்த விசயத்த இதோட விட்ரு………….. எல்லோருக்கும் தெரிஞ்சுரும்…… எனக்கு அசிங்கம் தீக்‌ஷா……………” அவன் வார்த்தைகளில் மிரட்டல் என்பதையும் மீறி கெஞ்சல் அதிகம் தெரிய,,,,,,,,,

அவன் கெஞ்சலில் அவளோ மிஞ்ச ஆரம்பிக்க…….. விஜய்யின் கோபத்தினை தூண்டி விபரீதமாக முடிந்தது……………….

தீக்‌ஷா அவன் மன நிலையை புரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை……….. அவன் தவறு செய்கிறான்…………தட்டிக் கேட்பேன் என்று நீதி தேவதையின் அடுத்த வாரிசாக ஆடிக் கொண்டிருந்தாள்……… அதில் அவள் வார்த்தைகளின் வீரியமும் அதிகம் ஆகியது…….

”அசிங்கம்னு தெரியுதுள்ளடா………… தெரிஞ்சே செய்ற…. அதுவும் பொட்டைப் புள்ளைய கடத்தி வச்சுட்டு………. என்னையும் இப்டி அடச்சு வச்சுட்டு மிரட்டுற….. நீயெல்லாம் ஆம்பளைனு சொல்லிடாதா வெளில” என்று வார்த்தைகளை விட……

விஜய் அதற்கு மேல் அவளைப் பேச விடவில்லை…………… சொன்ன வேகத்திலேயே……….. தீக்‌ஷாவின் கன்னத்தில் தன் கைகளைப் பதிக்க……… அவள் கண்கள் அருவியைப் பொழிய……. வார்த்தைகள் தேம்பலாக வெளிவர…….. இப்போது தீக்‌ஷாவின் கண்ணீரோ………… அவளின் நிலையோ…………… எதுவும் அவன் மனதில் பதியவில்லை……. வீறு கொண்ட சிங்கமாக அவன் நின்றான்………….

”என்னடி………… இஷ்டத்துக்குப் பேசுற…………. கொன்னுடுவேன்…...” என்று விரல் காட்டி எச்சரித்தான்

“அப்டித்தான் பேசுவேண்டா……. உனக்குலாம் மரியாதை ஒரு கேடா” என்றபோதே விஜய் அடுத்த அறை அறைய…… அவன் காதுகளில் கேக் வெட்டும் அறிவிப்பு விழுந்தது………..

“ச்சேய் அத்தனை மூடையும் ஸ்பாயில் பண்ணிட்டா………… இப்போ இவள கீழயும் கூட்டிட்டு போக முடியாது……….. எப்டியும் இன்னைக்கு எனக்கு பஞ்சாயத்துதான் வீட்ல…………. இவ இங்கேயே இருக்கட்டும்………… “ என்று யோசித்தவனுக்கு………. “தீக்‌ஷாவுக்கு ஸ்னோ என்றால் உயிர் என்று தெரியும்…………. கேக் கட் செய்யும் போது இவள் இருக்க முடியாதே..” என்ற எண்ணம் வேறு தோன்ற……..

“படுத்தி எடுக்கிறாளே………. சொல்ல மாட்டேனு சொல்றாளா ராட்ச்சசி……….. “ என்று அவள் மேல் இரக்கம் தோன்றினாலும்…. அவள் மேல் இரக்கம் கொண்டு கீழே கூட்டிப் போனால் தன் நிலைமைக் கேவலம் ஆகி விடும் என்று உணர்ந்தவன்………

“உனக்கு பட்டாதாண்டி அறிவு வரும்………….”.

என்று அவளைக் கட்டிப் போட சுற்றி முற்றி தேட……… அவன் நேரம் கட்டும் அளவுக்கு எதுவும் சிக்காமல் போக………….. அவன் சட்டைதான் அங்கு இருக்க அதை எட்டி எடுத்தவன்……. அவளின் கைகளை பின்னால் திருப்பி கட்ட ஆரம்பித்தான்……….

ஆனால் தீக்‌ஷா அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் திமிற………… அவன் என்ன முற்றும் துறந்த முனிவனா…….. தீக்‌ஷாவின் மேனி அவனைத் தீண்ட………. பெண்ணின் உடல் தீண்டல்……….. வேதியியல் மாற்றங்களைக் அவனுக்குள் கொண்டு வந்து லேசாய் தன் வேலையைக் காட்ட………… விஜய் அதிர்ந்தான்…………… தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து………… அதில் ஓரளவு வெற்றி கொண்டவன் அவளிடமோ

”ஆடாதடி…….. ஏடாகூடமா எங்கனாச்சும் பட்ற போகுது,………….. அதுக்கும் சேர்த்து நீதான் மூலைல உட்கார்ந்து அழனும்” என்று தன் நிலையை மறைத்து கெத்தாகச் சொல்ல……..

“ச்சீ என்கிட்ட…… அதுவும் கொஞ்ச நாளில் ஒருத்தனை மேரெஜ் பண்ணப் போற பொண்ணுகிட்ட இப்டி பேச அசிங்கமா இல்லை…………..” என்று கண்ணிர் வழிய சொன்னவளிடம்

“எனக்கு மட்டும் ஆசை பாரு………” என்று அவள் கைகளை கட்டி முடித்தபடி எழுந்தவன் மனதில் லேசாய் ஏதோ ஒரு படபடப்பும் வந்திருந்தது…….. என்பது தான் உண்மை….………. அவள் கீழே போய் அவனைப் பற்றி சொல்லுவேன் என்று சொன்னபோதும் பட படக்கத்தான் செய்தான்… ஆனால் அதில் கோபம் மட்டுமே இருந்தது……. இப்போது இருந்த படபடப்பு வித்தியாமாக இருந்தது அவனுக்கு……….. இதன் உணர்வு வேறு மாதிரி இருந்தது………… இன்னும் வேண்டும் என்று தோன்றியது போல் இருந்தது………

இவன் உணர்வுகளை எல்லாம் உணராமல்…………….. இவனை முற்றிலும் அயோக்கியனாகவே தனக்குள் கற்பனை செய்தவளாய்ப்……… பேசிக் கொண்டிருக்க……..

“கஷ்டம்டா” என்று வேறு சொல்லியபடி பெருமூச்சை விட்டவனைப் பார்த்து………………

“என்னடா கஷ்டம்” என்றவளைப் பார்த்து….. சிரிப்பே வந்து விட்டது…… அதை அடக்காமல் சிரித்தும் விட்டான் விஜய்……….

பதிலுக்கு பதில் பேசிட்டு………. என்ன சொன்னலும் எதிர்த்து கேள்வி கேட்டுக்கிட்டு…… வாய மூடாமல் இருக்கவே முடியாதா இவளுக்கு…………. ஒரு ஃப்ளோல வது தொலச்சுருச்சுடி…..” என்று மனதில் புலம்பியபடி…….

“இப்போ கூட வாய மூட மாட்டியா……. ஏன்னு உன்னைக் கட்டிக்கப் போறவன் சொல்வான்” என்று அவன் இன்னும் அதிகமாய்ச் சிரித்தபடி சொல்ல………… அவனவளுக்கோ அது உடலெங்கும் தீயைப் பற்றி எறிய வைக்க……

“சிரிக்கிறியாடா……. இருக்குடா உனக்கு……….. அழிவுகாலம் ஆரம்பம் ஆகிருச்சு உனக்கு…………” என்று அவள் கூற….. அவளின் சாபத்தையெல்லாம் ஒதுக்கியவன்…….. அவளோடு பேசியபடியே….

இவ கைய மட்டும் கட்டக் கூடாது வாயை முதலில் கட்டியிருக்கனும்……… முடியலடா……… என்றெல்லாம் எண்ண ஓட்டத்திலேயே…………

”வாயைக் கட்ட” என்று சொல்வதற்குப் பதில் ”வாயை மூட” என்று சொல்லி விட…………. தீக்‌ஷா அதிர்ந்து அவனை பயத்துடன் நோக்க……..

“ப்ப்ப்போச்சுடா இப்ப என்ன நினைத்தாளோ………. டேய் விஜய்… அவ சொன்ன மாதிரி உனக்கு ராங் டைம் தான் போல…… எல்லாமே வேற மாதிரி நடக்குதுடா………… கிட்டத்தட்ட உன்னை வில்லன் ரேஞ்சுக்கு நினைத்து வைத்திருப்பா……….. என்றவனுக்கு அவள் முந்தானை மட்டுமே அவள் வாயைக் கட்டுவதற்கு ஏதுவாய்க் இருக்க…. அதைப் பார்த்தவனுக்கு… எப்போதும் பறக்க விட்டுட்டு திரிவா…. இன்னைக்குனு பார்த்து சொருகி வச்சுருக்கா பாவி…. எனக்கு இன்னும் என்னென்ன சோதனை எல்லாம் வச்சுருக்காளோ… இதை வேறு அவ இடுப்பில் இருந்து எடுக்கனுமே…………… பேசாமல் ரூமை பூட்டி மட்டும் வச்சுட்டு போகலாமா…….. இவ வாய மூடாமல் இங்க விட்டுப் போறதும் ஒண்ணுதான்……….. கீழ கூட்டிட்டு போறதும் ஒண்ணுதான்…………. வேற வழியே இல்லை……….. என்று முடிவு செய்தவன்

தீக்‌ஷா இடுப்பில் சொருகி இருந்த அவள் முந்தானையை அவன் இழுக்க…… புள்ளி மான் போல் அவனிடமிருந்து விலகியவளின் உணர்வு அவனுக்கும் புரிய…. கொஞ்சம் சங்கடமாய் அவளைப் பார்க்க…. அடுத்த சோதனை அவன் ஆண்மையையே சோதிக்க ஆரம்பித்தது…. காரணம்…. அவள் புடவைத் தலைப்பு சுத்தமாய் விலகியிருக்க……… விஜய் கவனித்து விட்டான் தான்….. பார்வையை விலக்கியும் விட்டான் தான்…..

ஆனாலும் அவனுக்கு பயம் வந்து விட்டது….. இன்னும் கொஞ்ச நேரம் தான் இங்கு இருந்தால் தவறு ஏதும் நடந்து விடுமோ என்று கூட பயந்து விட்டான்…….. உடனடியாக இங்கிருந்து போக வேண்டுமே….. ஆனால் பிடிவாதம் பிடிக்கிறாளே………… என்று நினைத்தவன்……

”பின்னால திரும்பு………” …….. என்று முடிந்த அளவு நல்ல பையனாக மாறி சொல்ல

ஆனால் தீக்‌ஷாவோ தன்னைக் கவனிக்காமல் அப்படியே நிற்க…..

கேட்டுத் தொலைய மாட்றாளே…. இன்னைக்கு என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டா போல….. ஆனா என்னமோ இவள நான் இம்சை படுத்துற மாதிரி சீன் போடறாளே” என்று மனம் அதன் போக்கில் சிந்திக்க….

“திரும்புடி……………… “ என்று மீண்டும் விஜய் அதட்டலாய்ச் சொல்ல… அவளோ அதற்கு மேலெ

“நீ சொன்னா திரும்பனுமா……… மாட்டேன்டா…….. நீ சொல்றதெல்லாம் செய்ய… கீழ ஒருத்தி காத்துட்டு இருக்கா…………… போ… அவகிட்ட போய்ச் சொல்லுடா” என்ற அவனைப் பார்த்து எகத்தாளமும் கோபமும் கலந்து பேச…...

விஜய்க்கு இளமதி ஞாபகமே வரவில்லை…. மாறாக…..

“நீ காத்துட்டு இருந்தால் கூட சந்தோசம் தான்” என்ற பதில் தான் மனதில் தோன்றியது……… ஆனால் சொல்லவில்லை…

விஜய் முதன் முதலில் அவனை மீறி சிந்தித்துக் கொண்டிருந்தான்… அதன் ஆழம் வரை யோசிக்க அவனுக்கு அப்போதைய சூழல் இடம் கொடுக்க வில்லை….. அதன் பின் நேரத்தைக் கடத்தாமல்…. அவளைத் தொட்டுத் திருப்பியவன்….

“ஆடாம இரு………..தயவு செய்து” என்ற போது இது அவன் குரலா என்று அவனுக்கே தோன்ற… அந்த அளவு மென்மையாக மாறி இருந்தது………..

அவளின் பின்னால் இருந்தே அவளது இடையிலிருந்த தலைப்பை எடுக்க முயற்சிக்க………….. அது எடுக்கவே வரவில்லை….. வேறு வழி இன்றி……. கொஞ்சம் அழுத்தமாகப் பற்றி அவன் எடுக்க….. தீக்‌ஷாவிடம் தன்னை இழந்து கொண்டிருப்பது புரிந்தும் புரியாமல்…. ஒரு மாதிரியான மோன நிலையில் அவன் மனமும் உடலும் அவனை மீறி செயல் பட்டுக் கொண்டிருக்க………… அந்த நிலை தன்னை மீறி ஆள்வதற்குள்………. அவளைப் பார்க்காமலே…. கதவைப் பூட்டியபடி வெளியேறியவன்… மாடிப்படியின் கதவையும் அடைத்துதான் வந்தான்….……

விழா நடக்கும்…. தன் வீட்டின் முன் தோட்டத்திற்கு வந்தவன்….. இப்போது வேறு சட்டையை மாற்றி இருந்தான்…. யாரும் அதைக் கவனிக்கவில்லை…..

அங்கு கூட்டத்தோடு கலந்த விஜய் மனம் முழுக்க தீக்‌ஷா…..தீக்‌ஷா என அவள் நினைவுகளே…… ஒரு மாதிரி படபடப்பாய் இருந்தது….. இதுவரை அவனறியா உணர்வுகள் அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்க……….. அது காதல் என்று அவன் உணர முடியவில்லை………… அதற்கு நேரமும் வரவில்லை……… யாராவது அவனோடு பேசிக் கொண்டே இருக்க…….. உணர்வுகளின் ஆழம் சென்று யோசிக்க முடியாமல் தீக்‌ஷா மேலே இருக்கிறாளே என்ற எண்ணமே அவனை ஆட்சி செய்ய…………. அவனுக்கு கீழே இருக்கவே முடியவில்லை………….. தன்னை அவள் இங்கு என்ன சொன்னாலும் பரவாயில்லை……….. எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை….. அவளைக் போய்க் கூட்டி வந்து விடுவோமா என்று கூட எண்ணினான்…..

ஆனால் இதுவரை அவன் வளர்ந்த விதம்…….. அதற்கு ஒத்துழைக்க மறுக்க…….. விஜய்…… இருதலைக் கொள்ளியாக தவித்தான்…………. அப்போது ஜெயந்தி…………. தீக்‌ஷா எங்கே என்று தேடிக் கொண்டிருக்க………… அது எல்லோருக்கும் பரவ………. விஜய் தீபனிடம்…… தீபன் நீங்க கேக் வெட்ட ஆரம்பிங்க…. தீக்‌ஷா இங்கதான் இருப்பா… எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கள்ள……… என்று சொல்ல…………. தீபனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தீக்‌ஷா இல்லாமல் சுனந்தா கேக் வெட்ட மனம் வரவேயில்லை………. இருந்தும் ஒருவழியாய்க் கேக் வெட்டி முடிக்க…………. விஜய்யிடம் சென்ற தீபன்….

“விஜய்… தீக்‌ஷா போன் கூட ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு………….. என்னமோ பயமா இருக்கு………. என்று சொல்ல…….

“இங்கதான் இருப்பா………. ஒண்ணும் பிரச்சனை இருக்காது……………. என்ற பதிலை தீபனுக்கு சொன்ன போது……….. விஜய் முகமெங்கும் வியர்வை முத்துக்கள்…..

”வீட்டுக்குள்ள இருக்காளா……….. சுனந்தா கேக் வெட்டும் போது கூட அவ வரலைனா எங்க போயிருப்பா……….. போனும் எடுக்க மாட்டேங்கிறா………………” என்றபடியே சுரேந்தர் வர……….. யுகேந்தரும் அவனோடு இருக்க…. .

இங்கதான் இருப்பா……. எங்க போகப் போறா……. என்ற படி ஆளாளுக்கு ஒருபுறம் தேடப் போக

விஜய் அவர்களிடம்………. ”வந்திருக்கிற கெஸ்ட்டுக்கு தெரியாம தேடிப் பாருங்க” என்று யோக்கியனாய் வேறு பேசினான்…………

அப்போது தீபன் வீட்டின் உள்ளே செல்ல முனைய…………

“அய்யோ தீபன் உள்ள போனா உன் கதை கந்தல் தான்……..விஜய் தடுத்து நிறுத்துடா” என்று அவனின் மனசாட்சி அபாயக் கொடி காட்ட……….

’வேகமாய் ஓடி தீபனின் முன்னால் நின்று…………

தீபன் உள்ளே இருக்காளானு நான் பார்க்கிறேன்………. நீங்க ராதாவோட நில்லுங்க…. நாங்க 3 பேரும் திக்‌ஷா எங்க இருக்கானு பார்க்கிறோம்” என்று கூறியபடி அவனைத் தடுத்து நிறுத்தி மீண்டும் மேலே ஏறினான்………….

உள்ளே நுழையும் போதே அவனுக்குள் பல எண்ணங்கள்…………. அவன் குழப்பத்தில் இருந்தான் தான் என்று சொல்ல வேண்டும்….. தீக்‌ஷாவைப் பற்றி நினைக்கும் போதே அவளுக்கு இன்னொருவனோடு திருமணம் என்பதும் நினைவும் வர……….. அவன் எண்ண ஓட்டங்கள் அவனை ஒரு தெளிவான முடிவை எடுக்க விடவே இல்லை……

மேலே ஏறி வந்தவன் தீக்‌ஷாவைப் பூட்டி வைத்த அறைக்குள் நுழைய……….. அவள் உட்கார்ந்திருந்த நிலையே…………….. அவளும் சேலை விலகி இருந்ததைக் கவனித்து விட்டாள்………. அதனால் தான் இப்படி உட்கார்ந்திருக்கிறாள்………… என உணர்ந்தான்.....

இவன் உள்ளே நுழைவதைப் பார்த்த தீக்‌ஷா குலுங்கி அழ………. விஜய்க்கும் மனம் துடித்தது………

“நான் என்ன பண்ணிட்டேனு இப்டி அழறா……….. ச்சேய்………. இந்த ஆர்த்திய கடத்தாமே இருந்திருக்கலாம்” என்ற எண்ணம்தான் வந்தது அப்போது அவனுக்கு…………

அவள் அழுவதை தாங்காமல் அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான் விஜய்………

“எதுக்கு இப்போ அழற……… உன்னை நான் என்ன பண்ணினேன்………….” என்றபடி….. அவள் நிமிரக் காத்திருக்க………..

தீக்‌ஷாவோ… அழுகையும்…… கோபமும்………. வெறியும்……. அச்சமும்……….. விரோதமும்……… என் தன் அனைத்து உணர்வுகளையும் அவனிடம் கொட்டியவள்…. மீண்டும் குனிய……

அவனுக்கு தீக்‌ஷா தன் முன் நின்ற கோலத்தின் வித்தியாசம் உணரவில்லை… அதற்காகத்தான் அழுகிறாள் என்றும் புரியவில்லை…………. பெண்ணாய் தன் மானம் அவனிடம் போய்விட்டது என்று அவள் உள்ளுக்குள் குமுறி வெடித்துக் கொண்டிருந்தாள் என்றெல்லாம் அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை…………

அவள் இப்போது நிமிர மாட்டாள் என்று உணர்ந்த விஜய்….. அமைதியாகவே அவள் கையை அவிழ்த்து விட்டு… அவள் புடவையை சரி செய்ய அவகாசம் கொடுத்து…… சிகரெட்டை எடுத்தபடி வெளியேறினான் விஜய்………

வெளியே போய் என்ன சொல்வாளோ என்றெல்லாம் கொஞ்சம் பயம் வர…… என்ன சொன்னால் இவள் வாயை மூடலாம் என்று யோசித்தவன்…………. அவள் திருமண விசயம் ஞாபகம் வர அதை வைத்தே மிரட்டுவோம்………. அப்போதாவது அடங்குவாள் என்றே தோன்ற…………. மற்ற எண்ணமெல்லாம் பின்னால் போய் விட்டது… சிகரெட் முடிய…. இன்னும் என்ன பண்ணுகிறாள் என்று உள்ளே போக……..

அவளோ வாயில் கட்டியிருந்த முந்தானையை அப்படியே இருக்க………. உள்ளுக்குள்ளே சிரித்தவன்….. ராணி மங்கம்மா…… இந்தக் கட்டையே அவிழ்க்க முடியவில்லை….. பேச்சு மட்டும் வாய் கிழியும்…… என்று நினைத்தபடி…. தானே அவளைப் பிடித்து இழுத்து அவள் கட்டை அவிழ்க்க………. தீக்‌ஷா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்………… ஆடவில்லை… அசையவில்லை……. அப்படியே நின்றாள்………….. அவள் வழக்கமான வாய்த் துடுக்கை ஏனோ மனம் எதிர்பார்க்க…… அவளோ வழக்கம் மாறி அமைதியாய் இருந்தாள்………

“தீக்‌ஷா………… கீழ உன்னைத் தேடிட்டு இருக்காங்க………….. நான் எதுவும் சொல்லலை…………… நீயும் சொல்ல மாட்டேனுதான் நினைக்கிறேன்………. இல்லை” என்று மென்மையாகச் சொல்ல….. அவள் அதற்கும் இப்போது குலுங்கி அழ………. விஜய்க்கு அவள் அழுகை இப்போது எரிச்சல் தந்தது….

இத்தனை நாள் இவ பேசுனாத்தான் எரிச்சல் வரும்…………இப்போ அழுதாலே வருது” என்று குனிந்திருந்த அவளை தன்னை நோக்கி நிமிர்த்தியவன்…………..

“நீ கொஞ்சம் புத்தி உள்ள பொண்ணா இருந்தா…... என்கிட்ட மல்லுகட்டாம வெளிய போய் என்னை போட்டுக் குடுத்துருக்கலாம்…….. அந்த புத்திலாம் இல்லை உன்கிட்ட…… டூ பேட்…. பொண்ணுங்க கிட்ட இந்த அவசர புத்தி இருக்க்க் கூடாது……… சமயோஜித புத்தி வேண்டும்……….. நானா இருக்க ……….. உன்னை விட்டுட்டேன்……. ஆழம் பார்த்து காலை விடனும்னு பல பழமொழி உங்களுக்குத்தாண்டி சொல்லி வச்சுருக்காங்க…… அதை ஞாபகம் வச்சுக்கோ…….. ” என்ற போதே அவள் பேசாமல் அங்கிருந்து விருட்டென்று நகர…….. தன் பேச்சைக் கேட்காமல் ….. தான் சொல்வதைக் கேட்காமல் போகிறாளே….. ஆக அவள் தன்னைப் பற்றி சொல்லத்தான் போகிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு………. .பொறுமை போய்……… அவள் திருமணம் நின்று விடும் என்று சொன்னால் பயந்து சொல்லாமல் இருப்பாள் என்று நினைத்து அதை வைத்தே மிரட்ட ஆரம்பித்தான்……..

“என்ன…. இப்போ….. இங்க நடந்ததை எல்லாம் சொல்லப் போறியா………… ஒண்ணுமே நடக்கலைதான்… எனக்கு ஒண்ணும் இல்லை….. ஆனா நீ…… உனக்கு இன்னும் 2 வாரத்தில நிச்சயம் ……… யோசித்து நட…….. சொன்னால்……….. உனக்குதான் மேரேஜ் நின்னாலும் நிற்க்கும்……… இப்போ போய்ச் சொல்லுடி………… எல்லோரும் இருக்காங்க…………… நான் கடத்துனதை நீ சொன்னா………. இந்த ரூம்ல தனியா என்கூட இருந்ததையும் சொல்லனும்………… சோ நான் அசிங்கப்பட்டா………. நீயும் அசிங்கப்படனும்……………” என்று சொன்னவனின் மேல் சிகெரெட் வாடையும் அடிக்க…….. குமட்டிக் கொண்டு வர…….. அவன் முகத்தையே பார்க்காமல் மீண்டும் குனிந்த படியே நின்றாள்……

“இதுக்கும் மேலயும் நீ சொல்லி…… இதுக்காக நான் உன்னை மேரேஜ் பண்ணனும்னு ஏதாவது……… எவனாவது என்கிட்ட வந்து நின்னானுங்க………….. உன் வாழ்க்கைல…………… அதுக்கப்புறம் தான் நீ அனுபவிப்படி…………….” எனச் சொல்ல……….. அவன் வார்த்தைகளில் தன்னுணர்வு வந்த தீக்‌ஷா…………. அவனிடம்………

”ச்சீ போயும் போயும் உன்னை………….. விட…….. அதுக்கு நான் உயிரை விட்டுறலாம்….. “

“இந்த வாய்தாண்டி…………. உன்னை இந்த நிலைல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு…………. இங்க பாரு தீக்‌ஷா இப்பவும் சொல்றேன்………… இந்த பிரச்சனையை விட்ரு……….. உன்னை அடிச்சதுக்காக கூட மன்னிப்பு கேட்க தயாரா இருக்கிறேன்…………… நீ சொல்லி ராதா-தீபனுக்கு தான் பிரச்சனை வரும்…… என்று சொல்லியபடி சற்று யோசித்தவனுக்கு ஆர்த்தி ஞாபகம் வர……….. ஒருவேளை யுகேந்தர் லவ் இவளுக்கு தெரியும் போல…………. என்று அவளிடம் கேட்க…….. அவன் கையை உதறியபடி கீழே இறங்கி ஓடோடிப் போனாள் தீக்‌ஷா…..

அவள் கரம் பற்றி இருந்த தன் கையை பார்த்தபடியே சில நிமிடங்கள் இருந்தவன் பின் இறங்கினான்……………

ஹாலில் நின்று கொண்டிருந்த தீக்‌ஷாவிடம்….. தன் கையில் இருந்த அவள் மொபைலை அவளிடம் கொடுத்து விட்டும் வெளியேறினான்……………… அதன்பிறகு இளமதி………… இளமாறன்……… வந்திருந்த விருந்தினர் என…. விஜய் சுற்றி வளைக்கப்பட ……….. தீக்‌ஷாவும் வெளியே வராமல் இருக்க…. விஜய் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்…………….

1,527 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 comentário


சுந்தர் ஜீ
சுந்தர் ஜீ
30 de jan. de 2022

அச்சச்சோ... நீ மனதில் எந்த கள்ளமும் இல்லாமல் தொட்டாலும் உன் வீட்டில் உள்ளவர்கள் கூட நம்பமாட்டார்கள்...

Curtir
© 2020 by PraveenaNovels
bottom of page