top of page

அன்பே! நீ இன்றி!! 23

அத்தியாயம் 23

நாட்கள் கடந்தன…………

ராதா அவள் புகுந்த வீட்டிற்கு செல்ல…………. கலைச்செல்வி……… விஜய்யிடம் திருமணத்திற்கு வற்புறுத்த…………. அவன் தன் லட்சியமான…………… துபாய் கொலாப்ரேசன் பார்ட்னர்ஷிப் கிடைத்த பின்னர் தான் திருமணம் என்று உறுதியாகச் சொல்லி விட………….. கலைச்செல்விதான் புலம்பியபடி இருந்தாள்………..

இதற்கிடையே தீக்‌ஷாவிற்கும் வேறு இடத்தில்……… திருமணம் முடிவு செய்யப்பட………. விஜய் தன் அன்னையிடம் வந்தான்…

“அம்மா……………. பையனப் பற்றி நல்லா விசாரிச்சாங்களா…………… இவ கொஞ்சம் வாய் சாஸ்தி……… இவள அட்ஜஸ்ட் பண்ணிப் போயிருவானா…………… “ என்று கேட்க

“அதுனால உனக்கென்னப்பா கவலை….. ..... நல்ல பொண்ணு எடுக்க விடலை…. இப்போ என்ன விசாரிக்க வந்துட்ட” என்று தீக்‌ஷாவை எடுக்க முடியாத வருத்தத்தில் சொல்ல……………..

“ஜஸ்ட் ஒரு அக்கறைல… பையனைப் பற்றி விசாரிச்சாங்களானு……. கேட்டேன்………. ப்ச்ச்… எனக்கென்ன வந்தது…. யார் எப்டி இருந்தா எனக்கென்ன” என்று

அவளிடம் அலட்சியமாக தோளைக் குலுக்கியபடி வந்தவன் மனம்……… ஏனோ தனிமையை நாட………. தனியே வந்து பால்கனியின் சுவரில் கைகளை ஊன்றியபடி நின்றவனுக்கு….. தீக்‌ஷா முதன் முதலில்………….புடவை கட்டி இந்த வீட்டுக்கு வந்த காட்சி கண்ணில் வர…………… ஏன் எனக்கும் அவளுக்கும் மட்டும் எதுவுமே ஒத்துப் போகவில்லை…….. என்று மனம் அவள் ஞாபகங்களை வரிசைப் படுத்த……………… இவன் தான் எல்லாமே ஓவராகச் செய்தது போல் பட………….. இனி…………. தீக்‌ஷாவைத் திட்டக் கூடாது………….. அவள் திருமணம் முடியும் வரை…….. ஓரளவு அவளோடு சுமூகமாக போக வேண்டும் என்று முடிவு செய்தான் விஜய்.................

----------

ஒரு புறம் தீனா வேறு அவனுக்கு மிரட்டல்களும் தொல்லைகளும் கொடுத்துக் கொண்டிருந்தான்……… ராதாவையே அவன் குறி வைக்க……….. யுகி காதல் விசயம் தெரிந்ததால்………. தீனாவின் தங்கையை வைத்து மிரட்ட முடியாமல் இருந்தான்….

அது ஒருபுறம் இருக்க……….. இளமாறன் வேறு ஒருபுறம்……….. விஜய்க்கு இளமாறன் செய்வதெல்லாம் பிடிக்கவே இல்லை தான்…… தன் தங்கையை அவனுக்கு திருமணம் செய்து தருவதாக சொல்லி………… பின் ஏமாற்றியதால் மட்டுமே………… அவன் பொறுத்துப் போய்க் கொண்டிருக்கிறான்….......... திருமண விசயத்தில் தன்னை வலுக்கட்டாயப் படுத்துவது போல் தோன்றியது……….. இறுதியில் அவனின் தொல்லை தாங்க முடியாமல்……… இன்னும் ஒரு 4 மாதம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளளாம் என்று சொல்ல…………… உடனே இளமாறன் அவனைச் சந்திக்க வேண்டுமென்று சொல்லி வைத்தான்………. அவனுக்கு அலுவலக வேலைகள் அவனை அசையக் கூட விடவில்லைதான்…. இருந்தும் வேறு வழி இன்றி அவனைச் சந்திக்க சென்றான் விஜய்……….

அங்கோ………. இளமாறன்…………. தன் தங்கையை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்………….

இளமதியை சிறு வயதில் விஜய் பார்த்திருக்கிறான் தான்………… அதன் பிறகு இப்போதுதான் பார்க்கிறான்…………. விஜய்யைப் பார்த்தவுடன் இளமதியின் முகம் பிரகாசமானதை விஜய்யும் கவனிக்கத் தவறவில்லை…………….. அவளைப் பார்த்தும் பார்க்காதவன் போல் வந்து அமர்ந்தான் விஜய்………………

இளமாறன் அவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை கண்களால் நிரப்பியபடி………….

“என் மேரேஜ்க்கும் உன்னால் வர முடியலை………. ரொம்ப டென்சன் ஆகிட்டாடா…………….. உன்னைப் பார்க்காமல் போறேனு அழுதுட்டே போனா……………..” என்று சிரித்தபடி சொல்ல……………..

”அண்ணா” என்று இளமதி சிணுங்கினாள்……………

விஜய்க்கு எப்போதுடா இங்கிருந்து போவோம் என்றுதான் இருந்தது………….. பேசிக் கொண்டிருந்த போதே…. இளமாறன் திருமண விசயத்துக்கு வந்தான்

“என்னடா……….. ஏன் இன்னும் 4 மாதம் னு சொல்ற………….. “ என்றபோதே அவன் குரலில்…….. அண்ணனாய் வருத்தம் விஜய்க்கும் புரிய…….

“ரீசன் அல்ரெடி சொல்லிட்டேனேடா…….. ஜஸ்ட் 4 மாதம் தானே……… ” என்றவனிடம்…

“என்ன ப்ராஜெக்டோ என்ன லட்ச்சியமோ “ என்று சொன்னவன்

“சரி நான் கிளம்புகிறேன்…….. இளமதி உன்கூட பேசனுமாம்………….. மேடம்தான் உன்னைப் பார்க்கனும்னு சொன்னாங்க………….” என்று அவர்கள் இருவருக்கும் தனிமை வழங்கியபடி எழுந்து போக………..

விஜய்…………. எரிச்சல் எல்லாம் படாமல்…….. இளமதியுடன் பேச ஆரம்பித்தான்…………… வழக்கமான விசாரிப்புகளுடன் அவளைப் பற்றி அவன் கேட்டுக் கொண்டிருந்தான் விஜய்………..

அப்போது………….. அவனையுமறியாமல்………… ஏதோ ஒரு உணர்வின் உந்துதலில் பின்னால் திரும்ப………….. யுகேந்தர் தீக்‌ஷாவோடு வந்து கொண்டிருந்தாள்…………. தீக்‌ஷாவைப் பார்க்க……….. அவள் முகத்திலோ எப்போது துள்ளும் குறும்பெல்லாம் போய்………. ஏனோ அமைதியாக வந்து கொண்டிருந்தாள்…………… அந்த அமைதியிலும் பல எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருப்பது போல் இருந்தது விஜய்க்கு……. அவளின் அமைதி……… அவனுக்குள் பல சிந்தனைகளை கொண்டு வந்தது……

“ஏன் இப்டி இருக்கா………….. துள்ளளா தெரிவா…………… இன்னும் 1 மந்த்ல மேரேஜ் வேற….. மேரேஜ் ஆகப் போற பொண்ணு மாதிரியா இருக்கா………… ராகேஷ் கூட பிரச்சனையா இருக்குமோ…………….. அவனோடயும் விளையாட்டுத் தனமா பேசி……… எதையும் ஏடாகூடாமா இழுத்து விட்டுக்கிட்டாளா……. ராகேஷ் பற்றி விசாரிக்கச் சொல்லலாமா……… நமக்கு ஏன் இந்த வம்பு………… அவங்க தாத்தா ரிலேஷன் தானே… ஆனாலும் அவன் இங்க இல்லாம மேரேஜ் ஏற்பாடு பண்றாங்களே………… தீக்‌ஷா நேர்ல கூட பேசாமல்” என்றெல்லாம் ஏதேதோ நினைத்தபடி ஏதோ இளமதியுடன் பேசிக் கொண்டிருந்தான்…………

மனமெங்கும் தீக்‌ஷா-ராகேஷ் நினைவுகளே அவனைச் சுற்றிக் கொண்டிருக்க……….. முடிவில் ராகேஷினைப் பற்றி விசாரிப்போம் என்று முடிவுக்கு வந்தான்..

இளமதி….. அவளைப் பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டிருக்க………… எல்லாம் கேட்பது போல் புன்னகை முகமூடி போட்டுக் கொண்டிருந்தவனை இளமதியும் கவனித்தாள்…………. சொல்லப் போனால் விஜய்க்கு அவள் சொன்னது எதுவுமே அவனை எட்டவில்லை………………

“நான் உங்களை எப்டி கூப்பிட்டா உங்களுக்கு பிடிக்கும்” என்றபோதுதான் விஜய் தன் உணர்வுக்கு வந்தான் விஜய்……………

“என்ன… என்ன.. சொன்ன இளமதி” என்று உள்ளுக்கு தடுமாறினாலும் வார்த்தைகள் தடுமாற்றமில்லாமல்தான் வெளியில் விழுந்தன விஜய்…………….

“நான் உங்களை எப்டி கூப்பிடுவதுன்னு கேட்டேன்……………” என்று அவன் முகம் பார்க்க

அவளுக்கு விடை என்ன சொல்வது………………… என்று நினைத்தபடி

“விஜய்னே கூப்பிடு” என்று முடித்து விட்டான் விஜய்…………… அத்தான் என்று அழைக்கச் சொல்ல அவனுக்கு ஏனோ விருப்பம் இல்லை…………. அது ஏனென்றும் தெரியவில்லை…………………

“என்னது விஜய்யா” என்ற போதே இளமதியின் விழிகள் பெரியதாய் விரிந்தன……………… விஜய் தன்னைப் பேர் சொல்லி அழைக்கும் படி கூறியதே………… அவனின் மனம் தன் பக்கம் சாய்ந்து விட்டது என்று சந்தோசத்தில் மனம் துள்ள ஆரம்பித்தாள் இளமதி…………….

விஜய்யை போட்டோவில் பார்த்த போதே இவன் தான் தன் கணவன் என்று முடிவெடுத்தவள்………….. இன்று நேரில் அவனோடு பேச பேச……… அவனின் ஆளுமையான பேச்சில்………….. கம்பீரத்தில்…………. முற்றிலுமாக அவனுக்குள் தொலைந்து கொண்டிருந்தாள் இளமதி………….. இப்போது விஜய்யும் அவன் பேரைச் சொல்லி அழைக்கச் சொல்ல…………. இளமதியின் மனதில் அவன் ஆட்சி செய்ய ஆரம்பித்தான்

தான் ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து விட்டு விட்டோம் என்று தெரியாமல்……………. விஜய் அவளோடு சாதாரணமாக பேசிக் கோண்டிருந்தான்……………

அவள் தனக்கு வருங்கால மனைவியாகப் போகிறாள் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை……………. இளாவின் தங்கை என்ற உணர்வில் இவனும் சகஜமாக பேசிக் கோண்டிருக்க……………….. அப்போது

எதிரில்……. அவனின் நாயகி வந்து அமர்ந்தாள்…………. புன்னைகையோடு…………… சற்றுமுன் அமைதியாக வந்தவளா………. எனும் அளவிற்கு…………..

தீக்‌ஷா இப்போது சிரித்தபடி இருக்க விஜய்க்கும் அவளது சிரித்த முகத்தைப் பார்த்தவுடன் அவனுக்கும் மனம் இலேசானது போல் இருந்தது……….. அவனையுமறியாமல் அவன் முகம் மலர்ந்து விட……………இளமதி அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவனின் முக மாற்றம் நன்றாக தெரிந்தது……….. சற்று முன் வரை பேசிக் கொண்டிருந்தவனின் முகத்தில் இப்போது இன்னும் அதிக மலர்ச்சி……………. இதை உணர்ந்த இளமதி……………… அருகில் அமர்ந்த தீக்‌ஷாவை இவள் யாராய் இருக்கும் என்று சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தாள்….. அவள் யாரென்று தெரியாததால்………… முதலில் புன்னகையை சிந்தியும் விட்டாள் …………….

அதன்பின் விஜய் அறிமுகப் படுத்த……………. ராதாவின் காதல் விசயம் அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள்……… அதனால் இவள் ராதாவின் சிஸ்டர்-இன்–லா வா என்று கடுத்தவளுக்கு……………. தீக்‌ஷா குடும்ப விபரம் தெரியும் என்பதால்……….. தீக்‌ஷாவோடு சரி சமமாய் உட்கார்ந்து பேசப் பிடிக்கவில்லை…….. ஆனாலும் சட்டென்று எழாமல்……….. 10 நிமிடம் கழித்து…… அவர்கள் அறியாதபடி…………… அவர்களிடமிருந்து தன்னைக் கட் செய்தபடி…. வெளியேறினாள்………….. அவள் வந்து அமர்ந்தவுடன் விஜய்யின் முகம் மாறிய விதம் அவளுக்கு உறுத்தலாக இருந்த போது…………. தீக்‌ஷாவின் திருமண விபரம் அவளுக்கு ஆறுதலாக இருக்க……………. அன்று இளமதி மனதில் பெரியதாக தீக்‌ஷா பற்றிய சிந்தனை எல்லாம் இல்லை……………

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்………….. விஜய் இளமதியை உணர்ந்தான்…………. தீக்‌ஷாவோடு சரி சமமாக அமர்ந்து அவள் பேச நினைக்கவில்லை என்பதை உணர……. தீக்‌ஷாவோடு பழகினால்…. இளமதி அவளைப் புரிந்து கொள்வாள் என்று நினைத்தவன் இளமதியைத் தடுத்து நிறுத்தவும் இல்லை….. அவள் போவதற்கு வருத்தமும் படவில்லை

இளமதி கிளம்பும் போது அவனிடமும்,, யுகியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்ப……. தீக்‌ஷா தானாகவே இளமதிக்கு பாய் சொல்ல………. விஜய் மனதில் சிரித்துக் கொண்டான்……………

“உன்னாலதாண்டி அவ எழுந்து போறா……… அது தெரியல உனக்கு………. மனுசங்களை எடை போடத் தெரிய வில்லையே…………… ஆனா வாய் மட்டும் பேசு…………… “ என்று நினைத்து தீக்‌ஷாவை நோக்கி அப்பாவிப் பார்வை ஒன்றை பார்த்து வைத்தான் விஜய்

அவளுக்காவது அடுத்தவர்களைத்தான் எடைப் போடத் தெரியவில்லை……….. இவனுக்கோ இவன் மனதையே இனம் காண முடியவில்லையே…… இவனை எங்கு வைப்பது என்றுதான் தெரியவில்லை………….. அது அவனுக்கு என்று புரியும் என்றும் தெரியவில்லை

இளமதி கிளம்பிய சற்று நேரத்தில் யுகியும் போன் வந்து எழுந்து போக….. இருவரும் தனிமையில் இருந்தனர்

விஜய் அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்க்க……….. தீக்‌ஷா அமைதியாகவே இருக்க……….. விஜய்க்கு அவள் அமைதி என்னவோ செய்ய

தானே இருவருக்குமான மௌனத்தை உடைத்து…

”தீக்‌ஷா” என்று அழைத்தான்……………

“என்ன” என்று மட்டும் கேட்டாள் தீக்‌ஷா

அவள் ’அத்தான்’ என்ற வார்த்தையை தவிர்ப்பதை உணர்ந்தான் விஜய்……. மேடம் கோபமா இருக்காங்க போல……….. நம்ம மேல………… என்று மட்டும் நினைத்தபடி….

“ராகேஷ் போன்லாம் பண்றாரா…………….” என்று கேட்க

“ஹ்ம்ம்”

“குட்………. இனி யுகியோட சுத்திட்டு இருக்காத…. முதலில் கூட அது தப்பில்லை……. இப்போ இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு……….. பார்த்து நடந்துக்க……… எங்க வீட்டு பொண்ணு நீ……….. யாரும் தப்பா பேசிறக் கூடாது” எனும் போதே……

”சரி…………………”

“US போற பிளான்லாம் எப்போ………..

”தெரியல…………. ”

“அதெல்லாம் பேசுறது இல்லையா………… ராகேஷ் கிட்டயும் வெட்டியா பேச்சுதானா” என்ற விஜய் சிரித்தபடி சொன்ன போதே யுகி மீண்டும் வந்தான்

தன் அருகே அமர்ந்த யுகேந்தரிடம்…

“என்னடா………… பதில் எல்லாம் ஒரெழுத்து ஒரு வார்த்தைல வருது….. நம்ம வீட்டு பேச்சரசிக்கு” என்று விஜய் சிரித்தபடியே சொல்லும் போதே

“யுகி நான் வருகிறேன்………….” என்று எழப் போனவளை

“இரு தீக்‌ஷா“ என்று விஜய் அமரச் சொல்ல…. அவனுக்கு அவள் கோபமாய் இருக்கிறாள் என்று நன்றாகவே தெரிந்தது…………….. அவளின் கோபம் கூட ஏனோ அவனுக்கு பிடிக்கத்தான் செய்தது அவனுக்கு………… அதைக் கூட ரசித்து சிரித்துக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்…………..

“நான் இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு…… இப்டி ரெண்டு பசங்களோட பேசிட்டு இருந்தா என்ன ஆகும்…. நான் வருகிறேன்” என்று வெடுக்கென்று அவன் வார்த்தைகளையே விஜய்க்கு திருப்பிக் கொடுக்க…………

அதுவரை சிரித்துக் கொண்டிருந்த விஜய்யின் முகம்…. இந்த பதிலில் சின்னதாகியது……. தான் பேசியதை மனதில் வைத்து பட்டென்று சொன்னது போல இருக்க…………… ஒரு மாதிரி ஆகி விட்டது அவனுக்கு………….

”சரி போ………..“ என்று விஜய் சொல்ல……….. அவளும் கிளம்பி விட்டாள்…….

அவள் கடைசி வரை தன்னை ’அத்தான்’ என்று அழைக்கவே இல்லையே என்று நினைத்தவனுக்கு…………. அவள் தன்னை அழைக்கும் முறைக்காக ஏங்க ஆரம்பிக்க……. யுகி இருக்கிறான் என்றெல்லாம் நினைக்கவில்லை…. தன் தலையைத் திருப்பி…… அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய் ……….

சற்று தூரம் சென்ற தீக்‌ஷா… என்ன நினைத்தாளோ தெரியவில்லை………. இல்லை இவனின் மனம் அவளைத் திரும்ப வைத்ததோ………… விஜய்யைத் திரும்பிப் பார்க்க

திரும்பும் போது அவள் முகத்தில் வழக்கமான குறும்புத்தனம் மீண்டும் வந்திருக்க…. அவனையுமறியாமல் விஜய் தன் தலையை ஆட்டி…. ”என்ன” என்று கேட்க

அருகில் வந்தவள்………….

”பை விஜய் அத்தான்………..” என்று குறும்பாகச் சொல்ல………. அவளின் உற்சாகம் ,மீண்டும் கண்ட விஜய் மனம் அமைதி ஆகியது…………. அவளின் அத்தான் என்ற அழைப்பு சந்தோசத்தை கொடுத்தது அவனுக்கு…………. அதில் உற்சாகமாகி…………….

”யுகி அடங்க மாட்டாளாடா இவ………………” என்று விஜய் சிரிக்க

இவர்கள் இருவரையும் பார்த்து புரியாமல் யுகேந்தர் விழிக்க

அவன் விழிப்பதைப் பார்த்த விஜய்… அவனிடம் பேச ஆரம்பித்தான்

“டேய் வரும்போது அமைதியா இருந்தாளே….. என்ன விசயம்” என்று கேட்க

அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா… என்றவனிடம்

“என்னமோ சரி இல்லையே…… சொல்லு…. ராகேஷோட ஏதும் ப்ரச்சனையா……….. என்று கேட்க…

“இல்லண்ணா………. அப்டிலாம இல்லண்ணா ” என்று வேகமாய் சொன்ன யுகேந்தர்

விஜய்யின் ஆராய்ச்சிப் பார்வையில்…

“அதெல்லாம் என்கிட்ட சொல்வாளா” என்று சொல்ல…. அவனின் வார்த்தைகளை நம்பாமல் விஜய் பார்க்க

தலை குனிந்த யுகேந்தரைப் பார்த்தவன்………… ”ஏதோ இருக்கோ” என்று நினைத்தவன்…. தீக்‌ஷா மீண்டும் தன்னிடம் பேச ஆரம்பித்ததில் மற்றதை எல்லாம் மறந்தும் விட்டான்….

--------------

சுனந்தாவின் பிறந்த நாள் அருகில் நெருங்கும் போதே…………… அவனுக்கு தொழில் ரீதியாக தீனா பெரும் பிரச்சனைகள் செய்ய………….. விஜய்யால் சமாளிக்கவே முடியவில்லை…………. ஒருபுறம் தீனா……. மறுபுறம் இளமாறன்……….. என அவன் கழுத்தை இறுக்க ஆரம்பிக்க…………

தீனாவினால் தொழில் போட்டி மட்டுமே…………. இளமாறன் திருமண விசயத்தில் அவனை நெருக்க ஆரம்பித்திருந்தான்…………….

தீனா ராதாவை டார்கெட் செய்வது போல்……. ஏனோ அவனுக்கு ஆர்த்தியைக் கடத்த மனம் வரவில்லை…… ஆனால் அவன் ராதாவை அன்று குழந்தையுடன் கடத்த திட்டமிட்ட பின் அவனுக்கு மனம் சண்டித்தனம் பண்ண ஆரம்பித்த்து…. தீனாவுக்கு தன் பலம் என்ன என்பதைக் காட்ட அடம்பிடித்தது. அதற்கு நேரமும் வாய்த்தது….. சுரேந்தருக்கென்று தனியாக ஒரு ப்ராஜெக்ட் வர அது மிகவும் சிறியது…………தீனா மற்று விஜய்க்கு அந்த ப்ராஜெக்ட் பெரிய விசயமே இல்லை…………. ஆனால் அதிலும் மூக்கை நுழைத்தான் தீனா…………… விஜய் தீனா அந்த ப்ராஜெக்டில் கவனம் வைக்க மாட்டான் என்று நினைக்க…………. அவனோ சுரேந்தரோடும் போட்டி போட்டான்… சுரேந்தரோடும் போட்டி போட்ட தீனாவை சந்திக்கச் சென்றான் விஜய்…………..

விஜய்யைப் பார்த்த தீனா கொஞ்சம் அதிர்ந்தாலும்………….. காட்டிக் கொள்ளாமல் அவனோடு பேச ஆரம்பித்தான்………..

“என்ன விஜய்…. என்னல்லாம் பார்க்க வந்திருக்கிறாய்” என்று கேட்டவனின் வார்த்தைகளில் எகத்தாளம் இருக்க

அவனைப் பார்த்த விஜய்யின் பார்வையில் கோபம் எல்லாம் இல்லை……… அவனை சாதாரணமாகப் பார்த்தபடி

”தீனா……… உனக்கும் எனக்கும் போட்டி……… சுரேந்தரோட எதற்கு போட்டி போடுகிறாய்…….. நீயும் நானும் வளர்ந்து விட்டோம்… அவன் இப்ப்போதுதான் வளர ஆரம்பிகிறான்……… அதுவும் தனியே………….. இந்த ப்ராஜெக்ட்ல எதுக்கு மோதுகிறாய்….. உனக்கு போட்டி என்னோடு மட்டுமே…… அவனை எதற்கு இழுக்கிறாய்…… அவனுடைய தொழிலில் இது முதல் ப்ராஜெக்ட் என்று சொல்ல……………. தீனாவோ அலட்சியமாக…………

நானும் உன்னோட தனியாளா மோதும் போது நியாய தர்ம்ம் எல்லாம் பார்க்கத்தான் செஞ்சேன்……… என்னைக்கு நீ சுரேந்தர்………. இப்போ அந்த இளமாறன்னு கூட்டம் சேர்ந்து என்னைக் கட்டம் கட்ட ஆரம்பிச்சியோ……. அப்போதே தொழில் தர்மம் எல்லாம் விட்டுட்டேன்…….. உன்னை சுற்றி இத்தனை பேர் இருப்பதால் தானே நீ இந்த ஆட்டம் ஆடுகிறாய்… நல்லா ஆடு….. உன்னை எங்க அடிச்சா………. நீ விழுவேனு எனக்கு நல்லா தெரியும்டா……… உன் தம்பி தனியா எந்த ப்ராஜெக்ட்டும் ஆரம்பிக்கவே முடியாதுடா….. உன் கீழயே எப்போதுமே வச்சுக்கோ” என்ற போதே

“ப்ச்ச் தீனா…………… நீ தலைவர் தேர்தல்ல நின்றபோது நான் போட்டி போட்டேனா……… புரிஞ்சுக்கோ தீனா………சுரேந்தர் விசயத்தில் தலையிடாதே என்று சொல்ல………….. தீனா விஜய் பேச்சைக் கேட்காமல்…….. சுரேந்தர்க்கு கிடைக்க விருந்த அந்த சின்ன ப்ராஜெக்ட் டெண்டரிலும் கலந்து கொள்ள ஆயத்தமாக……………… அவ்வளவு சொல்லியும் தீனா கேட்க வில்லை என்று…………….. விஜய் கடுங்கோபம் ஆனான்…….. சுரேந்தர்தான் விஜய்யை ஆறுதல் படுத்த வேண்டிய நிலைக்கு வந்தான்…..

“இல்ல சுரேந்தர்………. தீனா போனான் என்றால் அவனுக்குத்தான் அந்த ப்ராஜெக்ட் கிடைக்கும்………… உனக்கு கிடைக்காது…… என்று சொல்ல

“விடுங்கண்ணா……… வேறு ப்ராஜெக்ட்ல பார்த்துக் கொள்வோம்” என்ற போது அவன் குரலிலும் சிறிதளவு வருத்தம் தான் இருந்தது,,,,,,,,,,,,,

“சாரிடா…. என்னாலதான் அவன் உன்னைப் பழிவாங்குகிறான்……….உன்னைத் தனியா வளர விட மாட்டானாம்” என்று சொல்ல…………..

“சரி விடுங்க………. எப்போ கிடைக்குதோ….. அப்பொழுது பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லி சுரேந்தர் அமைதியாகச் சென்று விட்டான் தான்…. அந்த டெண்டர்ரையும் விட்டு விட….. அந்த டெண்டர் தினமும் வந்தது….அதுவும் சுனந்தா பிறந்த தினம் அன்று

முந்தைய இரவு/ சுரேந்தர் விஜய்யிடம்

“நல்ல வேளை அண்ணா அந்த டென்டர்க்கு ரிக்வ்ஸ்ட் போடல… இல்ல சுனந்தா பிறந்த நாள் விழாவை மிஸ் பண்ணி இருப்பேன்” என்று சுரேந்தர் சொல்ல……..

விஜய் வெளியே சிரித்தான்தான்…..

”உனக்கு கஷ்டமா இருக்காடா………… சின்ன ப்ராஜெக்ட் தான் ஆனா உன் முதல் ப்ராஜெக்ட்னு ரொம்ப ஆசையா இருந்தேல்ல” என்று தன் தம்பியைப் பார்த்தவனுக்கு… சுரேந்தர் மௌனமெ… விஜய் சொன்னது உண்மை என்று சொல்ல……………. விஜய்க்கு தாங்க முடியவில்லை…………… தன் தம்பியையே கவலைப் பட வைத்து விட்டானே என்று தீனா மேல் ஆத்திரம் கொண்டான் விஜய்

தீனாவுக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைக்கக் விடக் கூடாது என்று முடிவு செய்து…,,,………. அவனுக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒண்ணும் பெரிய கனவில்லை…….. சுரேந்தருக்கு கிடைக்கக் கூடாது என்று போட்டி போடுகிறான்………. அவனை நாளை சைன் போடாமல் நிறுத்த அவனுக்கு ஒரே வழிதான் இருந்தது…………… அவன் தங்கையைக் கடத்துவது….. அதை வைத்து மிரட்டுவது என்று….. ஆனால் அது தீனாவுக்கு மட்டும் வேதனை அல்ல….. யுகேந்தருக்கும் வேதனை….. மனமெங்கும் குழப்பமாய் இருக்க……. ஆர்த்தி நம்ம வீட்டிற்கு வரும் பெண் தானே.. சும்மா மிரட்டுவதற்குத்தானே….. என்று அசோக்கை அழைத்து அவளை கடத்தவும் சொல்லி விட்டான் விஜய்…… சுரேந்தரிடம் விசயத்தை சொல்ல… அவனும் முதலில் அதிர்ந்து….. பின் தாங்கள் தானே… ஆர்த்திதானே….. என்று சுரேந்தரும் சமாதானம் ஆனான்..

விஜய் சுரேந்தரிடம்… “ யுகிய நாளைக்கு உன் கூடவே வச்சுக்கடா…… ஆர்த்தி கூட பையன் பேச முடியாம அழுதுறப் போறான் என்று சிரிக்க…

அந்த இரவு தான் விஜய் என்ற இளைஞனின் இதயம்………….. அவன் கட்டுக்குள் இருந்தது…. அடுத்த நாள் இரவு அவன் இதயம் அவனையும் மீறி தீக்‌ஷா என்ற பெண்ணின் காதல் வேண்டி அவள் கண்பார்வை தவத்திற்காக தான் காத்திருக்கப் போவது தெரியவில்லை…… அது மட்டும் இல்லாமல் அவனுக்கு தீக்‌ஷாவின் மேல் வந்த காதல் அவன் வாழ்க்கையில் பல விசயங்களை காட்ட ஆரம்பிக்க காத்திருந்தது…

சுரேந்தர் தொழில் தொடங்க முடியாமல் தீனா குறுக்கிட….. அதற்கு தீனாவின் தங்கையும் தன் தம்பியின் காதலியான ஆர்த்தியைக் கடத்த…...…………. அவன் தங்கை மூலம் அவன் வாழ்க்கைக்குள் நுழைந்த தீக்‌ஷாவின் காதல் வலையில் விழுந்தான்……….. விஜய் என்கின்ற விஜயேந்தர்…………………. விஜய்யாக இருந்தவனை இந்தராக மாற்றியவள் அவனின் அடையாளங்களை எல்லாம் அவளைச் சார்ந்தும் மாற்றினாள்…………. நடக்கப் போகும் விசயங்கள் எதுவும் அறியாமல் அஷோக்கின் மேற்பார்வையில்….. அடுத்த நாள் ஆர்த்தியைக் கடத்த………. கொஞ்சம் மனதில் கலவரமும் கொண்டான் தான் விஜய்……. யுகேந்தர் முகம் வேறு அவனை கொல்லாமல் கொன்றது

சுரேந்தர் யுகியை தனியே விடாமல்…………தன்னோடே வைத்துக் கொண்டான்.………….. தீனா ஆர்த்தி கடத்தப்பட்டது தெரிந்தும் அந்த டென்ட்டரில் கலந்து கொள்ளச் செல்ல……….. விஜய் சற்று யோசித்தான்……. அவனுக்கு தங்கை என்றால் உயிர் ஆயிற்றே என்று………….

இப்படி ஒரு நிலவரம் போய்க் கொண்டிருக்க………….. பிறந்த நாள் விழாவும் தோட்டத்தில் ஆரம்பமாக……………. விஜய் மனம் எதிலும் நாட்டம் இல்லாமல் படபடப்பாகவே இருந்தது…………….. அவன் முகத்தில் அது அப்பட்டமாகவே தெரிய ஆரம்பித்தது….. தவறு செய்கிறோம் என்று புரிந்ததுதான்… தவிர்க்க முடியவில்லை………… இரவு வரை எல்லாம் ஆர்த்தியை வைத்திருக்க விருப்பம் இல்லை…. அசோக்கிடம் ஏற்கனவே 7 மணி போல் அவளை வீட்டில் பத்திரமாக விட்டு விடச் சொல்லி இருந்தான் விஜய்…………

இத்தனை கலவரத்தில் அவன் இருக்க……….. அவன் தேவதையும் அவனுக்கு காட்சி தந்தாள்………….. அவள் வந்த போது போன் தான் பேசிக் கொண்டிருந்தான்…………. அவளின் பிரசன்னம் அவனுக்கு கிடைத்த போது ………… அவளைப் பார்த்து அவன் வாய் புன்னகைக்க….………. அவளைப் பார்த்த கண்ணோ………. அவளை விட்டு வேறு திசையில் போக மறுத்த்து………. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை…………….. அதுவும் அவள் கட்டியிருந்த புடவை வேறு அவனையும் அறியாமல் அவன் புறம் இழுக்க……….. விஜய் மனம்…………… திடுக்கிட்டவனாய்……………..

“டேய் அவ இன்னொருத்துக்கு நிச்சயம் பண்ணிய பொண்ணுடா…….. இப்டி பார்க்கிறாய்” என்று நினைத்த போதே…………. அன்றொரு நாள் அவளை இரவு உடையில் பார்த்த போது….. அவன் பார்த்த அவள் கழுத்துக்கு கிழே இருந்த அவளின் மச்சம்…. நேரம் காலம் தெரியாமல்……….. இன்று ஞாபகம் வர………… விஜய் தன்னை சரிப்படுத்திக் கொண்டு………. திடிரென்று தோன்றிய தன் உணர்வுகளுக்கு…. தானே கடிவாளமிட்டான்……

“ச்சேய்…………. இது என்ன கேவலமான எண்ணம்” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன்………… அதற்கு மேல் அவளைக் கவனிக்க வில்லை…………..

அந்த டெண்டரில் கலந்து கொள்ள இன்னொரு தொழில் நண்பனும் போயிருந்தான்…………… அவன் விஜய்யுக்கு போன் செய்து

“என்னடா தீனா வர மாட்டானு சொன்ன… வந்து நிற்கிறானே” என்று விஜய்யைப் போட்டு நச்சரிக்க………… அவனுக்கும் ஆர்த்தியைக் கடத்திய விசயம் தெரியும்………. .அவன் போனில் நச்சரித்துக் கொண்டே இருக்க……. விஜய் அங்கு நிற்காமல் வீட்டினுள் சென்று மாடி ஏறினான்… ஏறியவன் மாடி அறையின் கதவை அடைக்காமல் அப்படியே சென்று விட்டான்

“அவன் இன்னைக்கு மட்டும் அந்த டெண்டர்ல மட்டும் சைன் போட்டான்னு வச்சுக்க…………. அவன் தங்கச்சி இப்போ என் கஸ்டடியில் இருக்காள்னு சொல்லியும் வந்து நிற்கிறானா………… ” என்று கேட்கும் போதே படிகளில் யாரோ வரும் அரவம் உணர்ந்தவன் சட்டென்று போனைக் கட் செய்து திரும்ப.…………..தீக்‌ஷா கோபம் முகத்தில் தாண்டவம் ஆட…………. அவனைப் பார்த்துக் கொண்டிருக்க……….. விஜய் நொந்தே போனான்.’’

“போயும் போயும் இவகிட்டயா மாட்டினோம்…………… கடவுளே இவளுக்கு எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமென்றே தெரியாதே………………. கீழ கூட்டம் இருக்கு என்றெல்லாம் பார்க்க மாட்டாளே………… அத்தனை பேருக்கு முன்னால் போய் சொல்லி வைப்பாளே” என்று விஜய் யோசித்து அவளிடம் தடுமாறினான் தான் முதலில்

அவளைப் பற்றிய அவனின் எண்ணம் தவறே இல்லை என்பது போல் …..

“ஆர்த்திதானே அது……………… இருங்க இப்பவே போய் கீழ சொல்றேன்………. என்று இறங்க எத்தனிக்க……….

தன் தடுமாற்றம் மறைந்து சுதாரிக்க ஆரம்பித்தான் விஜய்….. உடனே மூளை வேலை செய்ய….. அவளைப் போகாமல் தடுத்த நிறுத்த………. சட்டென்று எட்டி அவள் கைகளை பற்றிய விஜய்…. தன் நிலைமையை அவளுக்கு எடுத்துச் சொல்வோம் என்று பொறுமையாக பேசத்தான் நினைத்தான்…..

ஆனால் அவளோ அவனின் வார்த்தைகளை காதில் வாங்காமல் கீழே போவதிலேயே இருக்க…….. விஜய்யும் வேறு வழியின்றி கொஞ்சம் லேசாகப் பிடித்திருந்த அவள் கையை இறுகப் பற்றி…மேலே இழுக்க……….அவனின் பலத்தின் முன் தீக்‌ஷா போட்டிபோட முடியுமா என்ன………… அவன் புறம் வந்தவள்………….. விஜய்யின்மார்பில் முகம் புதைக்க…………. அவள் இதழ் அவனின் நெஞ்சத்தில் தன் அச்சாரத்தினை அவளையும் அறியாமல் வைக்க………….. அதன் விளைவு அவள் போட்டிருந்த லிப்ஸ்டிக் அதன் அடையாளத்தை அவனது சட்டையில் காட்டியது………… இருவருமே அவரவர் சூழ்னிலையில் இதைக் கவனிக்க வில்லை……………..

1,368 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

1 comentario


எல்லாம் காரணமாகவே இருந்தாலும்... செய்தது தவறு தான

Me gusta
© 2020 by PraveenaNovels
bottom of page