top of page
Writer's picturePraveena Vijay

அன்பே! நீ இன்றி!! 22

அத்தியாயம் 22

தான் நினைத்தது போல் தங்கை வாழ்க்கை பயப்படும்படி இல்லை……… அவள் தன் திருமண வாழ்க்கைகையில் பரிபூரண சந்தோசத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த விஜய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை………….. அதே போல் தீக்‌ஷாவின் மேலும் அவனுக்கும் கோபம் எல்லாம் இல்லை……..... ராதாவோடு சேர்ந்து வீட்டிற்கு வருவாள்…….யுகேந்தரோடு அரட்டை அடிப்பாள்…………. கலைச்செல்வியோடு செல்லம் கொஞ்சுவாள்…………. என தீக்‌ஷா தன் குடும்பத்தோடு ஐக்கியம் ஆனதை எல்லாம் அவளறியாமல் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் விஜய்……………….. சில சமயம் ரசித்துக் கொண்டும் தான் இருந்தான்…………….

கிட்டத்தட்ட 1 மாதம் ஆகி இருக்க விஜய்……. அன்று தன் தங்கையின் வீட்டிற்கு வந்தான்……………..

ராதாவிடம் கீழே ஹாலில் பேசிக் கொண்டிருக்க…………. மேலே ஜெயந்தி தீக்‌ஷாவிடம் கத்திக் கொண்டிருப்பது கேட்டது

“என்ன பிரச்சனை………………. உங்க வீட்டு வாலு………………………. அவங்க அம்மாவை டென்சன் பண்ணிட்டிருக்கா போல” என்று எதிரே இருந்த அவள் புகைப்படத்தை பார்த்தபடி…………. தங்கையிடம் சொல்லியவன்……………

“போட்டோல அப்டியே ஒண்ணும் தெரியாத சின்னப் பாப்பா மாதிரி போஸ்…………… ஆனா பண்றது எல்லாம் அராத்து வேலை……………..” என்று சிரிக்க

”தீக்‌ஷா பார்க்கத்தான் சின்னப் பொண்ணு……………… குறும்புத்தனம்…………… ஆனால் ரொம்ப சீரியஸான பொண்ணு அண்ணா” என்றவள்

“இன்னைக்கு மேடம் ஹேர் கட் பண்ணிட்டு வந்துருக்கா…………….. அதுதான் அத்தைகிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கா…………………”

“இதுக்கெல்லாம் திட்டு விழுமா என்ன” என்று கேட்கும் போதே

”உனக்கு சூடு வாங்காமா சரிப்பட்டு வரலைல…………… இப்படி முக்கால் வாசி வரை வெட்டிட்டு வந்துருக்கியே…… அடிப்பாவி…………. இரு ……………… உனக்கு இன்னைக்கு சூடுதான்டி” என்று ஜெயந்தியின் கத்தல் கேட்க

விஜய்யே அதிர்ந்து விட்டான்……………..

“என்னது சூடா…..” என்று அதிர்ந்தவன் ராதாவைப் பார்க்க…………. அவனின் திகைத்த பார்வையில் ராதா சிரித்தபடி

“அத்தை சும்மா மிரட்டுவாங்கன்னா…..” என்றபடி புன்னகையுடன் இருக்க………..

“இந்த வீட்டில் இந்த விளையாட்டு மிரட்டல் எல்லாம் அடிக்கடி நடக்கும் நிகழ்வு போல……… என்று சமாதானாமானான் விஜய்

”அது மட்டும் இல்லை அண்ணா…………. ஏன் தீக்‌ஷா இவ்வளவு தூரம் கட் பண்ணிட்டு வந்தேனு நான் கேட்டேன்…………. அதுக்கு அவ சொன்ன ரீசன் இருக்கே போங்க………..” என்றவனிடம்

“என்ன சொன்னா????”

“அத்தை இப்போ அவளைக் கண்டுக்கிறது இல்லையாம்……………….. அதுதான் மேடம் இந்த வேலை பார்த்திருக்காங்க……………… அத்தை இருக்கிற காண்டுக்கு கண்டிப்பா தோசைக் கரண்டி சூடுதான் போல……” என்ற போது அவனையும் மீறி… அடக்க முடியாமல் சிரித்தான் விஜய்……………

“அப்போ இன்னைக்கு ஒரு சூப்பர் சீன் இருக்கும் போல ராதா………….. நாம வேடிக்கை பார்க்க” என்று ராதாவிடம் சிரிக்க

ராதாவோ சலிப்போடு……………. ”அத்தைக்கிட்ட திட்டு வாங்கிறதுக்காக இப்படில்லாம் பன்ணுவாங்களா” என்று கூற

”எல்லாமே அவளுக்கு விளையாட்டுதானா ” என்ற போது அவனின் பார்வை மீண்டும் அவள் புகைப்படத்தில் பட்டு மீண்டது……. அப்போது தீக்‌ஷாவை திட்டியபடி இறங்கி வந்த ஜெயந்தி……………. விஜய்யைப் பார்த்து……………… தன் நிலை மீண்டவளாய்…………….

”வாங்க தம்பி” என்று போனவள்……….. அதற்கு மேல் தீக்‌ஷாவை மறந்து…………. விஜய்யை கவனிக்க ஆரம்பித்து விட்டாள்…………..

ஜெயந்தி தீக்‌ஷாவை மறந்து……. இவனைக் கவனிக்க ஆரம்பித்ததை உணர்ந்த விஜய் தன் தங்கையிடம்…..

“உன் செல்ல நாத்தனார் கிட்ட சொல்லி வை……….. இன்னைக்கு அவள தோசைக் கரண்டி சூடுல இருந்து காப்பத்தினது…………….. விருமாண்டிதானு “ என்று சொல்லி சிரித்தவன்…………………. அடுத்த சில மணித் துளிகளில் கிளம்பியும் போனான்………………………………

---------------

விஜய் அன்று அலுவலகத்தில் இருக்க……………… இளமாறன் அவனை சந்திக்க வந்தான்………………

இளமாறனோடு சேர்ந்து சில ப்ராஜெக்ட்ஸையும் சேர்ந்து எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்து இருந்தான்………….. அதை தற்போது சுரேந்தர் பெயருக்கு மாற்றி இருக்க……….. அது விசயமாக விஜய்யைப் பார்க்க வந்திருந்தான் இளமாறன்

“என்ன விஜய்………. என்னோட சேர்ந்து பார்க்கிற பிராஜெக்ட்ஸ் ரெண்டையும் சுரேந்தர் பேருக்கு மாற்றி விட்டு விட்டாய்…………… என்ன காரணம்” என்று கேட்க

“இல்லை இளா…………நான் சொல்லி இருக்கேன்ல………….. அந்த துபாய் கொலாப்ரேசன்ல நம்ம சென்னைல பில்டிங் கட்டப் போற ப்ராஜெக்ட்………………. அது என்னோட ட்ரீம் ப்ரொஜெக்ட்…………… அவங்க டெக்னாலஜிஸ் இங்க நாமதான் இண்ட்ரடியூஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும்…………. அதுக்கான ஸ்டெப்ஸ்ல இருக்கேன் நான்……………….. அதுனாலதான் சுரேந்தர மாற்றினேன்……………. அது மட்டும் இல்லை………..தீனாவும் போட்டி போடுகிறான்….. இதில் தோல்வி அடையக் கூடாது என்று கொஞ்சம் தீவிரமாக இருக்கேன்………” என்றவனிடம்

சில நிமிடங்கள் மௌனமாக இருந்த இளமாறன்……………… பின்

“ஹ்ம்ம்….. இது மாதிரி வேறு எதையும் மாத்திடாத “ என்று சொல்ல………..

அவனின் வார்த்தைகளில் விஜய் புருவத்தை நெறித்தபடி அவனையே பார்த்தபடி இருக்க

“கூல் மேன்…………… சும்மா………………. தென் எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க………………. இளமதி அதுக்காக இங்க வருகிறாள்……………… அப்போ நீ அவள மீட் பண்ணலாம்…………………. உன் போட்டொவை காட்டினேன்……..சோ இம்ப்ரெஸ்ட்……….. என்ற போது விஜய் அளவாய்ச் சிரிக்க…………

‘என்னடா…………………… மதியோட இப்போதைய போட்டோவை உன்கிட்ட கொடுத்தேனே……………….. பார்த்தியா நீ………… நீ எதுவும் சொல்லலை” என்ற போது

”கொஞ்சம் பிஸி………. அதைப் பார்க்கிறதுக்கு நேரம் இல்லைடா………………” என்றவனிடம்

“அது சரி………….உங்க வீட்டு ஹாலில் சார் உட்காருகிற இடத்துக்கு நேரா மதி போட்டோவை மாட்டி இருந்திருக்கலாம்……….. நீ உட்காருகிற போதெல்லாம் உன் கண்ணில் பட்டிருக்கும்…உனக்கும் நேரம் இல்லை என்ற பிரச்சனை இல்லாமல் போயிருக்கும்” என்று சிரிக்க….

அவனின் நக்கலான பேச்சில்………. விஜய்க்கு ஏனோ தன் தங்கை வீட்டில் மாட்டப்பட்ட தீக்‌ஷா போட்டோ ஞாபகம் வர….. இன்னும் அதிகமாய்ச் சிரிக்க

“டேய் இளா………… இவ்ளோ காமெடி அடிக்கிற ஆளா நீ “ என்று அவனோடு சிரிக்க…………….

இளமாறனோ………… அவனின் சிரிப்பைக் கண்டு கொள்ளாமல்…………

“ஒரு போட்டோவைப் பார்க்க உனக்கு டைம் இல்லேனு சொன்னா… அதை நம்புற அளவுக்கு கேனையன் இல்லடா நான்…………… ஏன் பார்க்கலைனு உண்மையான ரீசன சொல்லு” என்று சற்று முன் இருந்த சிரிப்பெல்லாம் மாறி கேட்க………….

விஜய்யும் சொன்னான்…………..

“இளா நீ புத்திசாலிதான்…………….. சரி,,,,, உண்மையான காரணத்தை சொல்கிறேன் நான் இப்போதைக்கு என் மனசையும்…………… மூளையையும் வேற எதிலும் திசை திருப்ப விரும்பவில்லை………………… எனக்கு என் லட்சியம் தான் முக்கியம்…………. அதை மாற்றும் எந்த விசயத்தையும் என் வாழ்க்கைக்குள் இடம் கொண்டு வர விருப்பம் இல்லை……………. திருமணம், மனைவி… இந்த மாதிரியான உணர்வுகளுக்குள் என் லட்சியம் முடியும் வரை மாட்டிக் கொள்ளும் எண்ணம் இல்லை………. அதனால் தான் இளமதி போட்டோவைப் பார்க்க வில்லை…………… என்ற போது

“அப்போ என் தங்கையைப் பார்த்தால் ப்ளாட் ஆகிருவேனு பயத்தில் தான் பார்க்கலையாடா……….” என்று இளா சிரிக்க

விஜய்க்கு இப்போது சிரிப்பு வர வில்லை……….. ஆனாலும் சிரித்து வைத்தான்…..

ஆக மொத்தம் விஜய் தன் லட்சியத்தை நோக்கிய திசையில் இருக்க…………… அவனைக் காதல் பாதையில் திசை திருப்புவது எப்படி என்று காதல் தேவன் குழப்பத்தில் இருக்க………… விதியோ விஜய் காதலில் விழுந்தால்தான் தன் கைவரிசையைக் காட்ட முடியும்……….. இவனோ இப்படி இருக்கிறானே என்ற கவலையில் அது இருந்தது……….

விஜய் அவனின் வேலையில் பிஸி ஆகிவிட…………. வீட்டிலே இருப்பதில்லை…………… இளா மேரேஜில் கூட அவனால் கலந்து கொள்ள முடியவில்லை……… இளமதியையும் பார்க்க சந்தர்ப்பம் நேராமல் போய் விட்டது…………. சந்தித்தால் மட்டும் ஏதாவது ஆகப் போகிறதா………… ஏற்கனவே தீக்‌ஷா என்ற ஒருத்தியிடம்… தன் மனம் விழுந்ததைக் கூட அறியாமல் திரிந்து கொண்டிருப்பவன் தானே அவன்……………………..

அன்று கூட அவன் டெல்லியில்தான் இருந்தான்……………

ஹோட்டெல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவனை தொலைபேசி அழைப்பு எழுப்ப……………… எடுத்துப் பார்த்தால் அது……………………………. அவனது தாயின் அழைப்பு……………

“என்னம்மா…….. இத்தனை சீக்கிரம்…………… என்னன்னு சொல்லுங்க” என்று படபடப்பாக கூறியவனிடம்

“விஜய்………….. ஏன் டென்சன் ஆகுற……………… சந்தோசமான விசயம் தான்………….. ராதா போன் பண்ணினாள்..…………. நீ மாமா ஆகப் போறடா” என்று சொல்ல

விஜய் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை எனலாம்…………….

“அம்மா………. ராதாவை இப்போதே பார்க்க வேண்டும் போல இருக்கு…………… தீபன் வேறு போன வாரம் தான் வெளிநாடு போனாரு…………….. ப்ச்ச்………….. இந்த நேரத்தில் அவ கூட ………….. அவர் இல்லை… ” என்றவன் கவலையோடு

“அம்மா…. ஆனால் இந்த வாரம் இங்கே இருந்து என்னால நகரக் கூட முடியாது…………. நெக்ஸ்ட் வீக் தான் வர முடியும்……… அவகிட்ட நான் நேராவே பேசிக்கிறேன்…………. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவீங்கள்ள……………. “

கலைச்செல்வி சிரித்தே விட்டாள்………….

‘இப்போவா…………. வளைகாப்பு முடிந்து தான் அவள கூட்டி வர வேண்டும் விஜய்………. உன் பாசம் இருக்கே…………..” என்றபோது

“தீபன் வீட்ல நல்லா ராதாவை கவனிச்சுகுவாங்களாம்மா……………….. “ என்ற அக்கறையில் தாய் நெகிழ்ந்துதான் போனாள்………..

விஜய் மட்டும் அல்ல அவனுக்கடுத்த இருவரும் அதே சந்தோசத்தில் இருந்தனர்………………… மாமா ஆகப் போகிற சந்தோசத்தில்…………… அவர்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறை ராதா வயிற்றில் இருந்து வரப் போவதை அறிந்து……………… அது தீபன் வீட்டின் வாரிசுதான்………….. இருந்தும் இரு வீட்டிலும் சந்தோசம் பொங்கியது…………….

சொன்னபடி விஜய்………… அதற்கடுத்த வாரமே வந்தவன் வீட்டில் நுழைந்த அடுத்த சில நிமிடங்களிலே தன் தங்கையைக் காண அவள் புகுந்த வீட்டிற்குப் போக…………… அங்கு அவன் கண்ட காட்சி…………….. அவனுக்கு கண்களே கலங்கி விட்டது………

அங்கு தீக்‌ஷா……….. ராணி போல் சேரில் அமர்ந்து கொண்டு…………சாப்பிட்ட படியே டிவியில் கவனம் வைத்திருக்க…………………. ராதா அயர்ச்சியுடன் வாஷ்பேசினில் நின்று கொண்டிருந்தாள்………..

இருவருமே இவனைக் கவனிக்கவில்லை…………….

அப்போது தீக்‌ஷா

“அண்ணி……………. அந்த ஜூசை எடுத்துட்டு வாங்க” என்ற சொல்ல…………அது அவனுக்கு அதிகாரமாய்ப் பட………….

ராதாவைப் பார்க்க…………… அவள் ஏற்கனவே களைப்பாய்த் தெரிய……………. இருந்தும்… திரும்பி அந்த ஜூசையும் எடுத்துக் கொண்டு வர……………விஜய்யால் தாங்கவே முடியவில்லை………… கண்ணில் ஈரமே வந்து விட்டது

அவன் வீட்டில் ராதா கூப்பிட்ட குரலுக்கு எத்தனையோ பேர்…………. அப்படிப்பட்ட தன் தங்கைக்கு வேலை இவள் ஏவிக் கொண்டிருக்கிறாளே………. இந்த வாழ்க்கைக்குதான் விசம் குடித்து…………. போராடி வாழ வந்தாளா……….. மனம் துடித்தது………… அமைதியாக இருவரையும் கவனிக்க ஆரம்பித்தான்…………………


இருவருமே இவன் நிற்பது தெரியாமல் பேசிக் கொண்டிருக்க……………. தீக்‌ஷா திரைப்படத்தை பார்த்தபடியே சக்தி,தீக்‌ஷா என்றெல்லாம் ஏதேதோ பிணாத்திக் கொண்டிருக்க……… அதில் எல்லாம் அவன் கவனம் போகவேயில்லை……………….. தன் தங்கை இவளுக்கு சேவகம் செய்கிறாள் என்ற எண்ணமே அவனை முழுதாக ஆக்கிரமித்து இருக்க………… தீக்‌ஷாவின் மேல் கோபம் கொண்டான்…………. முதல் சந்திப்பில் இருவருக்கும் ஒத்து வராமல் சண்டையில் முடிந்ததுதான்……………… ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே முறைப்புகள் பறிமாறப்பட்டாலும்…………… விஜய்க்கும்,தீக்‌ஷாவுக்கும் பெரியதாக பிரச்சனைகள் எழவில்லை…………. ஆனால் இன்று விஜய் தன் கோபத்தை தீக்‌ஷாவிடம் காட்டாமல்….. தனக்குள்ளே கனன்று கொண்டிருந்தான்………. அதில் தீக்‌ஷாவின் மீதான வெறுப்போ கோபமோ அவனுக்குள் மீண்டும் அமர்ந்து கொண்டது என்றே சொல்ல வேண்டும்..

ஒருகட்டத்தில்…. இருவரும் இவனைக் கவனிக்கவே போகப் போவதில்லை என்று முடிவுக்கு வந்தவனாக…………… செறும…………. திரும்பிப் பார்த்தனர் இருவரும்………..

“வாங்கண்ணா…… என்று ராதா எழ

“நீ உக்காரும்மா” என்றவன் தீக்‌ஷாவை முறைக்க…………. அவனின் முறைப்பை எல்லாம் தீக்‌ஷா கவனிக்கவில்லை……… அவன் வந்த வுடனே தீக்‌ஷா இறங்கிப் போய் விட்டாள்……………… அவள் போனவுடன்………… ராதாவிடம்

”சாரி இன்னைக்குதான் டெல்லிலருந்து வந்தேன்” என்றபடி…….. அவன் பேச ஆரம்பிக்க………..

இப்போது மேலே வந்த தீக்‌ஷா……… பெரிய அக்கறை இருப்பவள் போல் அவனிடம் ஜூசை நீட்ட……………… விஜய்க்கு……………. வந்த கோபத்திற்க்கு அளவே இல்லை……………… வழக்கம் போல் அவன் அவளைத் தவறாகவே நினைத்ததால் அவள் கொண்டு வந்த ஜூசை மறுக்க……………

அவன் கோபத்தால் ஜுசை மறுக்கிறான் என்பது தெரியாமல்…………… இப்போது விளையாட்டாய் ஹால்சை நீட்ட…………

விஜய்க்கு அவள் ஏன் அதை தனக்குக் கொடுக்கிறாள் என்ற எண்ணம் வர………… அவளை புரியாமல் நோக்கினான்…………….

”இது எதுக்கு…………… நான் கேட்டனா……………” விஜய் கேட்க

“வரும்போது செருமிகிட்டே வந்தீங்களே அதுதான்…….. தொண்டல ஏதாவாது கிச் கிச் ப்ராப்ளமோனு நினைத்தேன்………. என்று சொல்ல

அவள் கொடுத்த பதிலில்…………….. அவளின் விளையாட்டுத்தனமான நடவடிக்கையில் விஜய் இன்னும் கொஞ்சம் சூடேறினான்தான்………. ஏனோ அன்று அவள் விளையாட்டு அவனை ரசிக்க வைக்கவில்லை………பதிலுக்கு கோபம்தான் இன்னும் அதிகரித்தது………..

”என்ன நான் இருக்கட்டுமா இல்லை போகட்டுமா……… அறுக்காத…… எதுனாலும் யூஸ்ஃபுல்லா பேசுறியா……. பேசுறது எல்லாம் வேஸ்ட்………….என் தங்கச்சி கிட்ட பேசனும்….கொஞ்சம் வெளில போறியா“ எரிச்சலாய்ச் சொன்னவன் ரிமோட்டை எடுத்து டிவியை அணைக்கப் போக……….. அதையும் பிடுங்கிக் கொண்டு ஆட்டம் காட்டியவள்…………. அவள் விருப்பம் போல் படம் முழுவதையும் பார்த்து முடித்த பின் தான் வெளியேறினாள்………….

அவள் போன பின்……………..

“எப்படி இவள வச்சு சமாளிக்கிறீங்க……………..” என்று தலையைக் குலுக்கியவன்……………. அதற்கு மேல் தன் தங்கையின் நலனில்…………….. அவனது பேச்சு திரும்பியது…………

தங்கையிடம் பேசிவிட்டு வந்தவன்……………. வீட்டில் கொந்தளித்து ஆடிக் கொண்டிருந்தான்………….

“அம்மா……….ராதாவை நாளைக்கே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரலாம்…………………….. அங்க இருக்காள்ள ஒருத்தி அவ நம்ம ராதாவையே வேலை வாங்குறாம்மா………….அவளுக்கு எவ்ளோ தைரியம் ” என்று சொல்ல………..

அவன் ஏதோ தவறாக புரிந்து கொண்டு வந்து ஆடுகிறான் என்று புரிந்ததுதான் அனைவருக்கும்…..

அனைவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்……….. தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்ற கணக்கில் விஜய் நிற்க……………. வேறு வழியின்றி……….. அவன் பெற்றோர் ராதாவை அழைத்து வரச் சொல்ல……….அங்கு ராதாவை அனுப்ப மாட்டோம் என்று தீக்‌ஷா… விஜய்யை விட பிடிவாதம் பிடித்துப் பண்ணிய ரகளையில் வீட்டிற்கு திரும்பி வந்தனர்………….

வந்தவர்கள்………….. தீக்‌ஷா பிடிவாதமாக பேசியதால்………… ராதாவும் வர மறுத்துவிட்டாள் என்று விஜய்யிடம் கூற………………

“என்னது அவ நம்ம ராதாவை அனுப்ப மறுத்து சண்டை போட்டாளா…….. என்ன திமிரா அவளுக்கு….. அவள பேச விட்டுட்டு அவங்க அப்பா அம்மா என்ன வேடிக்கை பார்த்தாங்களா…………. ” என்றவன்

“ஏன்மா அப்பாகிட்ட கூட திமிரா பேசினாளா……….” என்றபோது……………… கலைச்செல்வி அவனின் கோபம் புரியாமல்

”ஆமாம்” என்று அவளையுமறியாமல் தலையாட்டி விட…. கோபத்தின் எல்லை தாண்டியவன்

”அவள” என்றபடி வேகமாய் வெளியேற………

விட்டிருந்தால் விஜய் தீக்‌ஷாவின் அறையின் முன் தான் நின்றிருப்பான்…………. அந்த அளவில் அவன் கோபமாய் இருக்க……… கலைச்செல்வி தன் தவறு புரிந்தவளாய்…………. அவனைத் தடுத்து நிறுத்தியபடி…………. தவறான சூழ்னிலையில்…………… தவறான விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள்…………. அவன் கோபத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில்

“விஜய்……. இருப்பா……………. பிரச்சனை வேண்டாம்………………. அது மட்டும் இல்லை…………. தீக்‌ஷா கூட சண்டைலாம் வேண்டாம்………………. நாளைக்கு உன் தம்பி மனைவியா வரப் போறவகிட்ட சண்டை போடுறது நல்லாவா இருக்கும்” என்று கூற…………………

அதிர்ச்சியில் நோக்கினான் விஜய்….

“என்னது தம்பி மனைவியா………..” என்று யோசித்தவனுக்கு………. யுகேந்தர் மேல் சந்தேகம் வந்தாலும்……… அவன் ஆர்த்தியை விரும்புவது தெரிந்ததால்……….. அவனை விட்டு விட்டான்……..

அப்படி என்றால் சுரேந்தரா என்று அதிர்ந்தவன்………… கோபக் குரலில்

“அவன…………….. இது எத்தனை நாளா நடக்குது…………….. உங்களுக்கு எப்படி தெரியும் ” என்ற கேட்கும் போதே அந்த அறையே அவன் சத்தத்தில் ஆட்டம் கண்டது…………..

“இல்லப்பா இது சுரேந்தருக்கு தெரியாது…………. என்னோட ஆசைதான்…………… நம்ம ராதா கல்யாணத்துல அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கும் போதே” என்று சொல்லியவள்……….. அவனின் முகத்தில் இருந்த கடுங்கோபத்தில் தானாகவே பேச்சை நிறுத்தி அவனின் முகத்தைப் பார்க்க

”ஒண்ணா பார்க்கும் போதே………….. சொல்லுங்க ஏன் நிறுத்திட்டீங்க“ என்று தன் அன்னையை மேலே பேசச் சொல்ல….. கலைச்செல்வி தயங்கியவளாய்

”இல்ல….. சுரேந்த்ருக்கு நம்ம தீக்‌ஷாவை எடுக்கலாம்னு” என்று முடிக்கவில்லை

“நம்ம தீக்‌ஷாவா…………. எப்போதில் இருந்து………. இந்தக் கூத்து…………………. ராதா ஏதோ ஆசைப்பட்டா பண்ணிக் கொடுத்துட்டோம்…………….. அதோட அந்த வீட்டு சம்பந்தம் முடிந்தது……….மீறி எதாவது நடந்தது…………… உங்க மூத்த பையன் ஒருத்தன் இருந்தான்னு மறந்துருங்க….. சுரேந்தருக்கு இதைப் பற்றி ஏதாவது சொல்லித் தொலச்சு வச்சுருக்கீங்களா” என்ற போதே….

அவனின் வார்த்தைகளிலும் , முகத்திலும் ரௌத்திரம் நர்த்தனம் ஆடியது

“இல்ல…. இது என்னோட விருப்பம்…………………. மட்டும்தான் “ என்ற போது சற்று அமைதி அடைந்தவனாய்….. திரும்பி மாடிக்கு ஏறியவாறே……………….

“இந்த விசயம் இன்னொரு தடவை என் காதுக்கு வந்தது………………. பார்த்துக்கங்க……………..” என்று எச்சரிக்கை விடுத்து தன் தாயின் முகத்தைப் பார்க்க….. அவளோ இப்போதைக்கு அவனின் கோபத்தை அடக்கி மேலே அனுப்பி விட்டோம் என்ற நிம்மதிதான் இருந்திருந்தது………….

அதே நேரம்…… அவனது கோபத்தில் கலைச்செல்விக்கு….. தீக்‌ஷாவை சுரேந்தருக்கு எடுக்கும் ஆசை இன்னுமா இருந்திருக்கும்……… போயே போய் விட்டது………

தங்கையை வீட்டுக்கு வர விடாமல் பண்ணியதிலேயே தீக்‌ஷா மேல் கோபமாக இருந்தவன்……….. இப்போது தன் தாய் சொன்ன விசயத்தில் இன்னும் அவள் மேல் கோபமாக……. அதன் பிறகு………. மீண்டும் விலகி நிற்க ஆரம்பித்தான்………….. ஏன் அவளும் அவனிடம் வலிய வந்து முன் போல் பேசவில்லை என்பதை உணர்ந்தான் தான்……….. விட்டது தொல்லை என்ற எண்ணம் தான் அவனுக்கு அப்போது இருந்தது……………………..

ராதாவுக்கு வளைகாப்பு நிகழ்ந்த போது கூட………………. தீக்‌ஷா கொஞ்சம் ஒதுங்கி இருக்க…………. இவனுக்கும் அவளை முறைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது………………. ஆனால்…………. யுகேந்தரும் அவளும் வளைகாப்பு விழாவில் ஒரே ஆட்டம் தான்……… யுகேந்தர் தன் அண்ணனை பார்க்கவே இல்லை……………………… பார்த்தால் தானே அட்வைஸ் மழை வாங்க வேண்டும்………………… என்று விஜய்யைத் தவிர்த்து…………. தீக்‌ஷாவுடன் சுற்றிக் கொண்டிருக்க…………

விஜய்…………. சுரேந்தரிடம் ………………

“என்ன ஆட்டம் போடுதுங்க ரெண்டும்……………“ எனச் சொல்ல……….

”தீக்‌ஷா அவனுக்கு நல்ல கம்பெனி அண்ணா…………….. ” என்றவனிடம்

”என்ன கம்பெனியோ போ…. அவகிட்ட 10 நிமிசம் பேசுனாலே என் காதுல இருந்து ரத்தம் வந்துருதுடா…………” சொல்லியபடியே தன் தங்கையைப் பார்த்தவன்

அவளின் மேடிட்ட வயிறும்………… அவள் முகப் பூரிப்பையும் பார்த்து தன் தங்கையை ரசித்தவன்……….

“இன்னும் கொஞ்ச நாளில்…………….. நாம மாமா வாகப் போகிறோமாடா…………….. என்றவன்……………… இளாவை மேரேஜ் பண்ணியிருந்தால் கூட இவ்ளோ சந்தோசமா இருந்திருக்க மாட்டாள்ள……………” என்று நெகிழ்ச்சியுடன் சொல்ல

“நிச்சயமா அண்ணா…………… தீபன் அத்தான் க்ரேட்………………. அவங்க வீட்ல எல்லோருமே ராதாவைத் தாங்குறாங்க……………….. தீக்‌ஷா பிறக்கப் போற குழந்தைக்கு என்னலாம் வாங்கி வச்சுருக்கா தெரியுமா……………..இப்பவே செல்லப் பேர் வச்சுத்தான் கொஞ்சுறா” என்றபோது

சுரேந்தர் தீக்‌ஷாவைப் பற்றி பேச ஆரம்பித்ததால்…………… விஜய் பேச்சை மாற்ற……………… அப்போது தீக்‌ஷா சுரேந்தரிடம் வந்தவள்…..

“சுரேந்தர் அத்தான் அங்க வாங்க……… யுகி அண்ணிய ஓட்டிட்டு இருக்கான்…………….. நான் யுகி சைடுன்றதுனால அவங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியல………. பாவம் எங்க அண்ணி………… அதுனால நீங்க அவங்க சப்போர்ட்டுக்கு வாங்க” என்றவள்………….. அவனின் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல்…………… அவனை இழுத்துக் கொண்டு போக……… சுரேந்தர் விஜய்யின் அனுமதியை கண்களால் கேட்க………. விஜய்யும் போய்த் தொலை என்ற ரீதியில் சம்மதம் கொடுக்க……….. சுரேந்தர் கிளம்பினான்……...

விஜய் மட்டும் தனியே அமர்ந்திருந்தவன்………….. அவர்களைப் பார்த்தபடி இருக்க………. அங்கு நால்வரும் சந்தோசமாய் ஏதோ பேசியபடி இருக்க…………… அவனுக்கும் அவர்களோடு கலந்து கொள்ள ஆசைதான்………… ஆனாலும் போக அவன் மனம் இடம் கொடுக்க வில்லை…………. பொறாமையோடு சுரேந்தரையும்…………… யுகேந்தரையும் பார்த்தவன்…………..

“என்கிட்ட மட்டும் பேச மாட்டாங்களாக்கும்…………..மேடம்” என்று தீக்‌ஷாவை முறைக்க.......... அவளோ இவன் புறம் திரும்பினால்தானே……………… இவனைக் கண்டுகொள்ளவே இல்லை……………..

வளைகாப்பும் ஒருவழியாய் முடிந்து ராதா தன் பிறந்தகத்திற்கு சென்றாள்…..

--------------

ஆனால் அடுத்த மாதமே… ராதாவுக்கு வலி ஏற்பட……... மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள் ராதா…………….

முதலில் சாதாரண சூட்டு வலி என்று சாதரணாமாய் விட……………….. ஆனால் ராதாவுக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட……………….. அவசரச் சிகிச்சையில் சேர்க்கப் பட்டாள்……….

விஜய்க்கு……………….. தன் தங்கை தவிப்பதை காண முடியவில்லை……………….. 2 நாட்களாய் இரு குடும்பமும் தவித்து நிற்க……………. விஜய்யை அந்த மருத்துவர் அழைத்து…………..ராதாவின் நிலை மட்டும் அல்ல……………. குழந்தையின் நிலையும் சரி இல்லை என்பதைச் சொல்ல…………………….. விஜய்……………… சுரேந்தரை அழைத்தான்

”சுரேந்தர்…………. டாக்டர் என்னமோ சொல்றாங்கடா……………. தீபன் வேற இல்லை…………. உடனே வரச்சொல்லனும்டா” என்ற அவன் கண்கள் கலங்க சொல்லும்போதே ……………….. தீக்‌ஷாவும் அங்கு வந்தாள்…………….

இருவரும் அவள் வந்ததைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தனர்

“என்ன சொல்றீங்க அண்ணா”

“ஆமாடா………………. ராதா வயிற்றில் குழந்தை நிலை சரி இல்லையாம்………………. ராதாவை மட்டும் தான் காப்பாற்ற முடியும்னு சொல்றாங்க……………… தீபன் எப்டியாவது இந்தியா திரும்ப ஏற்பாடு பண்ணுடா” என்று சொல்ல……………. சுரேந்தர் தாங்க முடியாமல்………….. அந்த இடத்தைவிட்டு நகர

திகிலடைந்த முகத்துடன்…….. தீக்‌ஷா விஜய்யின் அருகில் வந்தவள்………….. அழுதபடி

“அத்தான்…………. அண்ணிக்கு ஒண்ணும் ஆகாதுல்ல…………… சுனோ பாப்பா….. எங்க வீட்டுக்கு வர மா….ட்டா…ளா” எனும் போதே தடுமாற…………….. விஜய் அவளைத் தாங்கிப் பிடித்தவன்

“ஏய் தீக்‌ஷா………… என்ன…. என்ன ஆச்சு……” என்று அருகில் அமர வைக்க……………………. அவளோ மயக்கமானாள்………………..

சுரேந்தரை மீண்டும் அழைத்தான் விஜய்

“டேய் இங்க வாடா………….. தீக்‌ஷா மயங்கிட்டாடா……………… நாம பேசுனதைக் கேட்டு…………….. இருக்கிற நிலைமையில இவ வேறடா…………. இம்சையக் கூட்டுறா” என்று அவளை ஒரு அறையில் சேர்க்க

தீக்‌ஷா அன்று முழுவதும் மயக்கத்தில் இருந்தாள்…………… தீக்‌ஷாவை பரிசோதித்த மருத்துவர்……………….. விஜய்யை அழைத்தார்

“ஏன் மயக்கமா விழுந்தாங்க” என்று கேட்க

“என் தங்கை ராதாவுக்கு கொஞ்சம் சீரியஸா இருக்கு……… அது மட்டுமில்லை குழந்தைக்கும் சீரியஸ்னு… கொஞ்சம் எமோசனல் ஆகிட்டா

என்றபோது

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………… என்றவர்………… இதுக்கு முன்னால் எப்போதாவது என்று கேட்கும் போதே…………. எனக்கு எதுவும் தெரியாது……” என்று ஜெயந்தியை வரச் சொல்ல……………

ஜெயந்தி வரும் போதே தீக்‌ஷா கண் விழிக்க………………… உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி இதற்கு முன்னால் ஏற்பட்டதுண்டா என்று கேட்க

“இல்லை” என்று ஜெயந்தி தலை ஆட்ட………….. சரி என்றவரிடம்

இனி இதுபோல் ஆனால் கொஞ்சம் கவனித்து பாருங்க என்று மட்டும் சொல்லி விட்டுச் சென்றார்………………..

அப்போதிருந்த சூழ்னிலையில் ஜெயந்தியும் பெரிதாக எடுக்க வில்லை…………………. விஜய்யும் அவள் நிலைமையில் பெரிதாய்ப் பாதிக்கப் படவில்லை………… அவனை அவன் தங்கையின் நிலைமைதான் மொத்தமாய்க் ஆட்கொண்டிருந்தது

2 நாட்களில் தீபனும் வந்துவிட……………. ராதாவுக்கு தன் கணவனைப் பார்த்த மகிழ்ச்சியிலோ என்னவோ குழந்தையும் பிறக்க…………. ஆனால் குழந்தை குறை மாதக் குழந்தையாகப் போய் விட்டதால்……… குழந்தைக்கென சிறப்பு மருத்துவர்களை எல்லாம் விசாரித்து…………. அங்கு வரச் செய்த விஜய்…….. சுனந்தாவைக் காப்பாற்றினான்…….. கொஞ்சம் கஷ்ட்டமாக ஆன போதும் தாயையும் சேயையும் பத்திரமாய் வீடு கொண்டு வந்து சேர்த்துவிட்டான் விஜய்………. ஆனால் அவனுக்கு உயிர் போய் உயிர் வந்தது…………. என்று தான் சொல்ல வேண்டும்…………..

தன் தங்கை குழந்தையை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த விஜய்………………. தன் குழந்தையை அதன் கருவறையிலேயே இழந்த பரிதாப நிலைக்கு போனதுதான் விதியின் கொடூரம்…………. அதைக்கூட தாங்கி விட்டான் தான் விஜய்………… ஆனால் தன் மனைவி தீக்‌ஷாவின் நிலையைத்தான்????????????? இன்று வரை தாங்க முடியாமல் தவிக்கிறான்……………

--------------

குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிய……….. மீண்டும் சந்தோசம் திரும்ப…….. குழந்தைக்கு பேர் வைக்கும் வைபோகம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது……….

விஜய் ’சுலேகா’ என்ற பெயரைச் சொல்ல………… தீக்‌ஷா ’சுனந்தா’ என்ற பெயரைச் சொல்ல………

அங்கும் தீக்‌ஷா அவனோடு மோத ஆரம்பிக்க……… விஜய்க்கு இப்போது கோபம் வரவில்லை………….. எரிச்சல் தான் வந்தது……………… ஆனாலும் அவள் அன்று…. சுனந்தாவின் நிலை கேட்டு…. ஹாஸ்பிட்டலில் மயங்கி விழுந்தது ஞாபகம் வர…… இருந்தும் விட்டுக் கொடுக்க மனம் வர வில்லை…………

இவனும் விட்டுக் கொடுத்திருக்கலாம்…………. ஆனால் ஏதோ தடுத்தது…….……. அவளோடு போட்டி போட……………. குலுக்கலில் வந்து நின்றது….. சுரேந்தர் சீட்டில் பெயர் எழுதிக் கொண்டிருந்தான்……………..

இது நடந்து கொண்டிருந்த போதே அவன் தீக்‌ஷாவைப் பார்க்க……………… அவள் சுனந்தாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்…………………

“டேய் ஸ்னோ பாப்பா………….. அத்தை வச்ச பேர்தான் உனக்கு வரணும்…………… இல்ல………….. உங்க மாமாவை ஒரு வழி பண்ணிடுவேன்….. ஒரு பேர் வைக்கக் கூட இந்த வீட்ல உரிமை இல்லாம போச்சுடா…… நாங்கள்ளாம், உங்க மாமாக்கு அடிமையாடா” என்று சொன்னவளின் குரல் விஜய்க்கு ஏதோ செய்ய……………..

விஜய் சுரேந்தரை மொபைலில் அழைத்து…………………

“டேய் ரெண்டு சீட்லயும் சுனந்தான்னே போடு…………… இல்ல அவ அழப் போறாடா……………… நல்லா வந்து வாச்சாடா” என்று சொல்லி வைக்க……… சுரேந்தரும் அவன் சொன்னவாறே இரு சீட்டிலும் சுனந்தா என்ற பெயரே எழுதிப் போட்டான்……… ஆக மொத்தம்…………… தன் தன்மானம் குறையாமல் தீக்‌ஷாவின் ஆசையை நிறைவேற்றினான் விஜய் ……………..

தீக்‌ஷா வைத்த பெயரே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு……………….. குழந்தை சுனந்தாவாகிப் போக…………..விஜய் தீக்‌ஷாவை ஆர்வமாகப் பார்த்தான்…………. அவள் சந்தோசப் படுவாள் என்று………………. ஆனால் அவளோ அதிலும் திருப்தி அடையாமல்……….. தான் சொன்னவுடனே வைக்காமல்…………… சீட்டுக் குலுக்கலில் பெயர் வந்து வைத்ததால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அன்று முழுவதும் திரிய…………………

அதுமட்டும் இல்லாமல் தன்னை முறைத்தபடியே இருக்க………….. விஜய் பொறுமை இழந்து கொண்டிருந்தான்……….. நாம இவ்ளோ விட்டுக் கொடுத்தும் இவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற கோபம் வர……….. அதில் எரிச்சலான விஜய்…. அவன் முன் நின்றான்……………. அதே நேரம் அவன் கோபத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது………..

ராதா வளைகாப்பு முடிந்த பின்….. ஒரு மழைநாளில் தீக்‌ஷாவை சுரேந்தரோடு பார்த்ததில்……….. கொஞ்சம் கோபமாக பேச… அதன் பிறகு தீக்‌ஷா சுரேந்தரோடும்………….. யுகேந்தரோடும் பேசாமல் ஒதுங்கியே இருந்தாள்……… அது விஜய்க்கு புரிந்ததுதான்………. ஆனால்…….. சுனந்தா பிறந்தவுடன் அதை எல்லாம் மறந்து விட்டு யுகி,சுரேந்தரோடு சகஜமாய் மீண்டும் பேச ஆரம்பிக்க…….. தன்னுடனும் அதே போல் பேச ஆரம்பித்து விடுவாள் என்று விஜய் எதிர்பார்க்க………… தீக்‌ஷாவோ விஜய்யோடு நேரிடையாக பேசுவதையே தவிர்த்து விட………………..

“என்கிட்ட மட்டும் தான் ரோசம் எல்லாம் போல” என்று கடுப்பில் வேறு இருந்தான்………..

எல்லாம் சேர்ந்து அவனை உசுப்பேற்ற…… அவளை சும்மா மிரட்டும் நோக்கில் தான் எச்சரிக்க நினைத்தான்…………… ஆனால் தீக்‌ஷா வின் அவளின் திமிரான பார்வையில்……………….. அருகில் வந்த போது ஏனோ எதிரிக்கு சவால் விடும் போக்கில் வார்த்தைகள் திசை மாறிப் போக.…… அதுவும் தன்னை அவள் பேர் சொல்லி அழைக்க……….. அவன் கை அவள் கை கன்னத்தில் பதியும் அளவில் கொண்டு போய் விட………….. அந்த சமயம் ராதா வர……………… தன்னை அடக்கி அந்த இடத்தை விட்டு அகன்றான் விஜய்……………

அதன் பிறகு யோசித்தும் பார்த்தான் தான்

“ஏன் தனக்கு அவள் மேல் இவ்வளவு கோபம் வருகிறது” என்று பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறான்……………….. அதற்குரிய விடைதான் அவனுக்கு தெரியவில்லை…………….. அவன் மனதுக்கும் தெரியவில்லை……………

1,437 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


அருமையான பதிவு

Like
© 2020 by PraveenaNovels
bottom of page