அன்பே! நீ இன்றி!! 21

அத்தியாயம் 21

புதுமணத்தம்பதியினர் ஒரு காரில் சுரேந்தருடன் சென்று விட……………. விஜய் தன் காரில் குடும்பத்துடன் செல்ல முடிவெடுத்தான்.............. கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது அவனுக்கு…………. காரணம்… இனிமேல்தான்……..தீபனிடம் ராதாவுக்காக தான் வாங்கியிருந்த பங்களாவின் சாவியை ஒப்படைக்க முடிவு செய்திருந்தான்………… அவன் தாய்…………… தந்தையிடமே இன்று காலையில் தான் சொன்னான்…………..

கலைச்செல்விக்கு இதில் மிகுந்த சந்தோசம்……………. தன் மகள் புறாக்கூண்டு போன்ற வீட்டில் இனி இருக்கப் போவதில்லை என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் அவள்…………….. ஆனால் விஜய்யோ… தீபன் என்ன சொல்வானோ என்று கொஞ்சம் சஞ்சலத்துடன் இருந்தான்………….

இவனின் பதட்டத்தைப் பார்த்த அவனது தந்தை……………….

“விஜய்……… எதுக்கு இவ்வளவு டென்சனா இருக்க…………… ரிலாக்ஸ்டா இருடா…………… மாப்பிள்ளை கண்டிப்பா ஒத்துக்குவாரு……………. என்றபடி………… விஜய்யிடம் தன் சந்தேகத்தை கேட்டார்

“இன்னொரு விசயம்….. தீபன் தங்கை தீக்‌ஷா மேல் உனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு……………. அவ நாத்தானார் முடிச்சு போடக்கூடாது என்ற அளவிற்கு…………. என்றபோது………….

“டேய் விஜய்……………… வாய் விட்டேல……………. உங்க அப்பா கேட்கிறாரு சொல்லுடா… சொல்லு” என்று மனசாட்சி அவனை நக்கலடிக்க……………… தன் மனதை அடக்கியவன் தன் தந்தையிடம்

“இல்லப்பா…………. அப்டிலாம் இல்லை…………” என்று அவசரமாக மறுத்தவன்….

”நான் ஏன் அவகிட்ட வெறுப்பா இருக்கனும்...... ராதா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப…………… அவ ராதாவை கொஞ்சம் தப்பா பேசிட்டா…………….. அதுனாலதான் எனக்கும் கொஞ்சம் பிடிக்க வில்லை…………….. அதனாலதான்……… ஆனா அப்பா… இப்போ அந்த அளவு கோபம் எல்லாம் இல்லை………