அன்பே! நீ இன்றி!! 20

அத்தியாயம் 20

அன்று அதிகாலை 4 மணி அளவில் உறக்கத்தில் இருந்த விஜய்க்கு…. அடிக்கடி வரும் கனவு அன்றும் அவனுக்கு வர………….. உடல் வேர்த்து எழுந்தான்……………. போன முறை இந்தக் கனவு வந்த போது……….ராதா விசம் குடித்த நினைவு வர………..வேகமாய் தன் தங்கையின் அறைக்கதவைத் தட்டப் போனவன்…………….. அதன் பின் அதைச் செய்யாமல் அவளுக்கு போன் செய்ய, அவளும் எடுத்துப் பேச……… நிம்மதி ஆனபடி………….. ஏதோ ஒரு காரணத்தை சொல்லி போனை வைத்தவன்…………..

”ச்சேய் என்ன கனவு இது………. நினைவுக்கும் வந்து தொலைய மாட்டேங்குது………. ” என்று எரிச்சலானவன் அதன் பிறகு தூங்கவே இல்லை……………. அன்றுதான் ராதாவிற்கு புடவை மற்றும் நகைகளை வீட்டிற்கு எடுத்து வர சொல்லி இருந்தான்………….. இன்று போய் இந்தக் கனவு வருகிறதே….. என்று ஒருபுறம்….. மனம் பதைபதைக்க நடை பயின்று கொண்டிருந்தான் விஜய்….. 6 மணிக்கு மேல்தான் உறக்கம் வர கண் அயர்ந்தான்

தீபன் வீட்டினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது என்பதால்…………. அவர்கள் தங்கள் வீட்டிற்கு வரும்போது தான் இருக்கக் கூடாது…………. என்று முன் தினமே தீர்மானித்து இருந்தான் ….……………. ஆனா அதற்கு மாறாக…. அன்று தூங்காததாலோ என்னவோ………… தலைவலி வேறு வந்து உயிரை எடுக்க…………. விஜய் பேசாமல் வீட்டிலேயே இருந்து விட்டான்…………..

கிட்டத்தட்ட 10 மணி அளவில் எழுந்தவனுக்கு……………. இன்னும் தலை வலி குறையாமல் இருக்க………… சிகரெட்டை கையில் எடுத்தபடி பால்கனியில் வந்து நிற்கவும்………. தீபன் வீட்டினர் அவன் வீட்டின் முன் வந்து இறங்கவும் சரியாக இருக்க………… கடைசியாக இறங்கிய தீக்‌ஷாவைப் பார்த்து திகைத்தான் விஜய்………… இதற்கு முன் செய்த ஆராய்ச்சிப் பார்வை எல்லாம் போய்…………. ஆண்மகனாய்………… அவளையே பார்த்தபடி நின்றிருந்தவன்…………. பார்ப்பது தவறென்று தெரிந்தும் அவள் மேல் வைத்த விழிகளை அகற்றாமல் நின்றிருந்தான் விஜய்……………

அவளை புடவையில் பார்ப்பது இதுவே முதல் முறை…………… சுடிதாரிலும்…………….. ஜீன்சிலும் பார்த்த போது சின்னப் பெண் போல தோன்றியவள்………… புடவையில் அம்சமாக அவன் கண்ணில் தெரிய………….. அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு…………. காரை விட்டு இறங்கிய தீக்‌ஷா……. அவனது இல்லத்தை அளவெடுப்பது நன்றாகப் புரிய………….. தங்கள் வீட்டைப் பார்த்து… விரிந்த அவளின் விழிகளில்……….. அவளை சுவாரஸ்யமாய்ப் பார்த்த விஜய்யின் பார்வை …………. இப்போது அலட்சியமாக மாறி இருக்க………….. விஜய்…………. அந்த பார்வையை மாற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்…………..

அப்போது தீக்‌ஷாவும் மேலே பார்க்க…………….. அவன் பார்வையைக் கண்ட தீக்‌ஷா…………… தடுமாறி விழ………….. விஜய்க்கு சிரிப்பும்……. அதே நேரத்தில் முதல் முதலா நம்ம வீட்டுக்கு வரும்போதே கீழ விழுந்து தொலைக்கிறாளே என்ற எண்ணமும் ஒரு சேர வந்தது……………

கூடவே அவன் கண்ட கனவின் ஞாபகமும் வர……….. எதுவும் தப்பா நடக்கப் போகிறதோ என்ற எண்ணம் அவனை அலைகழிக்க………. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை………….. விழுந்த தீக்‌ஷா எழுந்தபடி மீண்டும் அவனைப் பார்த்து முறைக்க………..

அவளின் முறைப்பை பெற்ற விஜய்க்கு…. அவன் தலைவலி கூடுவதற்குப் பதில் காணாமல் போனதுதான் அன்றைய ஆச்சரியம்…………..

-----------------------------------

கீழே போக வேண்டாம் என்று விஜய் தனது அறையிலேயே இருந்து விட்டான் தான்……………. கலைச்செல்வி வந்து அவனை வற்புறுத்தி அழைக்க………. வேறு வழி இன்றி விஜய்யும் கீழே இறங்கி வந்தான்…………….இறங்கும் போது தீக்‌ஷாதான் அவன் பார்வை வட்டத்தில் முதலில் விழுந்தாள்……… தீக்‌ஷாவின் மேல் விழுந்த பார்வையை உடனடியாக மாற்றி…………… ஹாலில் இருந்த அனைவரின் மேலும் சுழற்றினான்

ஒருபுறம் யுகேந்தரும் தீக்‌ஷாவும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்………. அந்தப் பக்கம் தீபன் ராதா கண்களால் கதை பேசிக் கொண்டிருக்க……….. சுரேந்தர் மட்டும் தனியே… விதியே என்று அமர்ந்திருந்தான்……………. இளையவர்கள் நிலை இப்படி இருக்க, பெரியவர்களை நோக்கினான் விஜய்


விஜய்யின் தந்தை…………….. தீபன் தந்தையோடு பேசிக் கொண்டிருக்க…………. பெண்மணிகள் இருவரும் புடவை மற்றும் நகையில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தனர்……………………

விஜய் மாடிப்படிகளில் இறங்கி வரும் போதே யுகேந்தரை பார்த்தபடியே வர………… யுகேந்தரும் மேலே பார்க்க……… கைகளால் சைகை செய்தான்………….. தீக்‌ஷாவை விட்டு தள்ளி அமருமாறு…………….. அதை புரிந்த யுகேந்தரும் தள்ளி அமர…………….. விஜய்யும் கீழே வந்திருந்தான்……………

ஆனால் தீக்‌ஷாவோ யுகேந்தரை விடவில்லை………………… யுகேந்தர் அருகில் வந்து மீண்டும் அமர……….. விட்ட தலைவலி விஜய்க்கு மீண்டும் வர ஆரம்பித்தது போல் இருந்தது………………….

அதிலும் அவள் யுகேந்தரோடு வாய் மூடாமல் பேசிக் கொண்டே இருக்க…………. அதற்கு யுகேந்தரும் ரகசியமாக பதில் சொல்லிக் கொண்டிருக்க………………

அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியவில்லை………………..

யுகேந்தரிடம் அக்னிப் பார்வையை வீச……………….. தானாக விஜய்யின் அருகில் வந்து அமர்ந்தான்..

விஜய் யுகேந்தரிடம்

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா யுகி……………… இத்தனை பேர் முன்னால் அவகிட்ட என்ன ரகசியம் பேசிட்டு இருக்க……………. ஏண்டா சொல்றதை புரிஞ்சுக்க மாட்டேங்கிற……………… எதுனாலும் ஏழரையை இழுத்து விட்ராதா…………….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

அண்ணா தன்னையும் தீக்‌ஷாவையும் தவறாக நினைத்து விட்டானோ என்று………….. அதை உணர்த்தும் விதத்தில்…. விஜய் பேசி முடிக்கும் முன்னே யுகியும் அவனுக்கு பதில் பேச ஆரம்பித்தான்….

“அண்ணா தீக்‌ஷா என்கிட்ட தப்பான எண்ணத்தில் பழக மாட்டா……….. அவ எதையும் மனசுல வளர்த்துக்க மாட்டா………….. நீங்கதான் புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க…” என்று சொன்னான்

தீக்‌ஷாவுக்கு ஆர்த்தியை தான் காதலிப்பது தெரியும் என்பதால் யுகி சொல்ல…………

விஜய்க்கு அந்த விசயம் தெரியாமல் போனதால்……… தீக்‌ஷாவின் மனதை நினைத்து பேச…………….. அதற்கு மேல் தன் தம்பியும் புரிந்துகொள்ளாமல் பேசிக் கொண்டிருக்க………….. அதுவும் அவனுக்கே விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க…………. தலைவலி வேறு ஒருபுறம் திடிரென்று வந்து விட…………… அந்த இடத்தில் அவனால் இருக்கவே முடியவில்லை………….. சரி எழுந்து போகலாமா என்று யோசிக்கும் போதே…… தீக்‌ஷாவின் ’விஜய்’ அத்தான் என்று குரல் கேட்க

அவள் கேலியாக அழைத்த விதத்திலேயே……… அது அவனை வம்புக்கு இழுப்பது போல் இருக்க…….. அவனோடு யாருமே இந்த மாதிரி எல்லாம் பேசியதில்லை………… வந்த கோபத்தை தனக்குள் இழுத்துப் பிடித்துக் கொண்டு………… காது கேட்காதது போல் இருந்தான் விஜய்…………….

யுகேந்தர் தன் அண்ணனை இப்போது பார்க்க…… விஜய் முகமே கோபத்தை மறைக்க முயன்று கொண்டிருக்கிறான் என்பதைக் காட்ட……. தீக்‌ஷா அவன் கோபம் புரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிய………… யுகேந்தர் பயந்து விட்டான்… அவளிடம் பார்வையால் எச்சரிக்கை விட……….. தீக்‌ஷாவோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அதை அலட்சியம் செய்தவள்…………… விஜய்யின் குணம் தெரியாமல் தன் குறும்பை காட்டிக் கோண்டிருந்தாள்………………

மீண்டும் அவள் ’விஜய்’ அத்தான் என்று அழைக்க………… கொதிநிலையின் உச்சத்தை அடைந்தான் விஜய்……………. அதன் விளைவு……………. தன் வேலையாளின் கன்னங்களில் அவன் கைத்தடம் பதிந்தது………………

தீக்‌ஷா……….ஒரு கணம் அதிர்ந்து… கொஞ்சம் நடுக்கத்துடன் அவனைப் பார்க்க……………… இப்போது அவன் தீக்‌ஷாவிடமே வந்தான்… சுற்றம் முற்றம் பார்க்காமல்

“ஏய் இந்த அத்தான் பொத்தான்லாம் இவனோட நிறுத்திக்க………..” என்று யுகேந்தரைக் காட்டியவன்………. பின் ….. தன் ஒரு விரலாம் பத்திரம் என்று சொல்லி விடுவேன் என்று எச்சரிக்கை செய்தபடி……………..

”என்னை அத்தான்லாம் கூப்பிட ஒரு தராதரம் வேண்டும்………… அது உனக்குலாம் இல்லை……… என்ன என் தங்கச்சிய வச்சு உள்ள நுழைய பார்க்கிறியா……….. அசிங்கமாயிடும்” என்றபடி மாடிப் படி ஏற……… தீக்‌ஷா கண்களில் கண்ணீரே வந்து விட்டது………….. அதை மறைக்க அவள் தலை குனிய……………. இப்போது தீபன் எழுந்து பேச வர…………..

தீக்‌ஷாவின் கண்ணீரையும், தீபன் கோப முகத்தோடு வருவதையும் விஜய் பார்த்தான்தான்…………… ஆனால் எதையும் லட்சியம் செய்யாமல் சென்று கொண்டிருந்தான்………….. அவன் அங்கு இருந்தால் இன்னும் என்னென்ன பேசுவானோ அவனுக்கே தெரியவில்லை…………. அந்த அளவு கோபம்…………. கோபம் அவன் புத்தியை மறைத்தது என்று கூட சொல்லலாம்………… காலையில் அவளை தன்னை மீறி பார்த்து விட்டோம் என்ற எண்ணம் வேறு அவன் கோபத்தை இருமடங்காக்கியதா என்பது அவனுக்கே தெரியவில்லை………………. தன்னைப் பார்க்க வைத்து விட்டாளே என்ற எண்ணமும் அவன் இந்த அளவு தரம் தாழ்ந்து பேச வைத்து விட்டது என்பதே உண்மை….. தன் மேல் உள்ள கோபத்தை……………. யாரிடம் காட்ட வேண்டும் தெரியாமல்…………. வேலையாளை அடித்தவன்………… தீக்‌ஷாவிடமும் காண்பித்தான் விஜய்……….

கலைச்செல்வி அவனை கோபத்தோடு அழைத்து நிறுத்தினாள்…… தீக்‌ஷா அவன் குணம் தெரியாமல் விளையாண்டாலும்……. அவளின் கள்ளம் கபடம் அற்ற குணம் கலைச்செல்விக்கு பிடிக்க……… அதில் தீக்‌ஷாவையும் மிகவும் பிடித்துப் போக…………… அவள் கண் கலங்கி தலை குனிந்து இருப்பது அவள் மனதை வறுத்த…… தானே நிலைமையை சரி செய்தாள்…….. தீக்‌ஷாவுக்கு ஆதரவாக பேசி……………….. அதில் தீபன் உட்பட அவனது குடும்பம் சமாதானாமாகி விட………….. ஆனால் விஜய் இன்னும் ஆத்திரம் ஆனான்………..

அது ஏனென்றால் தன் அன்னை தீக்‌ஷாவுக்கு ஆதரவாக பேசியதால்……….. இன்னும் இங்கு இருந்தால் தன்னை விட சிறியவளிடம் சரிக்கு சரி பேசி… அவளிடம் மல்லுக்கட்டுவது……… தன் உயரத்தைக் குறைப்பது போல் தோன்ற…………கோபத்தில் படி ஏற………….. தீக்‌ஷா அவனை ’அத்தான்’ , ’அத்தான்’ என்று அழைத்து அதை ஏலம் விட………… அவன் படிகளில் ஏறிக் கொண்டிருப்பது போல் அவளின் மீதான அவனது வெறுப்பும் ஏறிக் கொண்டிருந்த்து…………………….

பேசாமல் வந்து அறையில் படுத்து விட்டான்…. தன் தாய் மேல் கோபத்தோடு…………

தீக்‌ஷா வீட்டினர் கிளம்பி விட அவன் தாய் கலைச்செல்வி உள்ளே வந்தாள்………

விஜய் அருகே வந்து அமர……….. விஜய்யும் அவளின் அரவம் உணர்ந்து விழித்தவன் எதுவும் பேசாமல் எங்கோ பார்த்தபடி இருக்க……… அதிலேயே அவன் கோபம் புரிந்தது கலைச்செல்விக்கு………….

29 வயது ஆகியும் இன்னும் சிறு பிள்ளை அடம் பிடிக்கும் விஜய்யைப் பார்த்து சிரிப்புதான் வந்தது அவன் தாய்க்கு………… இருந்தும் அவன் இருக்கும் கோபத்தில் தான் சிரித்தால் இன்னும் கோபமாவான் என்பதை உணர்ந்து

“விஜய்…….. அவ சின்னப் பொண்ணுடா………….. அவளுக்கு சரி சமமா நீ சண்டை போட்டா உனக்குதான் பா மரியாதை இல்லை…………… அதுனால தான் உன்கிட்ட பேசினேன்…………… அம்மா மேல கோபமாப்பா… நீ பேசினதும் ரொம்ப தப்புடா….. ஆனா தீக்‌ஷாவும் அப்டி விளையாட்டா பேசி இருக்கக் கூடாதுதான்“ என்று சமாதானக் கொடி வீச

“ப்ச்ச்…… விடுங்கம்மா…………. அவ பண்றதெல்லாம் தப்பு இல்ல………… எல்லாம் நம்ம ராதாவை சொல்லனும்………….. எனக்கு எதுவும் பிடிக்கலை மா……………… ஏதோ மனசே சரி இல்லைமா…………… அது ஏன்ன்னும் சொல்லத் தெரியலை……………… அந்தப் பொண்ணு நல்லதுக்கு தான்மா சொன்னேன்……………… யுகி மனசுல எதையும் வச்சுக்காம பேசுறான்………… அவ ஏதாவது ஆசையை வளர்த்துக் கொள்வாளோனு………… மற்றபடி……….. அவகிட்டலாம் சண்டை போடனும்னு ஆசையா எனக்கு……………… அது மட்டும் இல்லாம……… எனக்கு இன்னைக்கு ஒரே தலைவலிமா…………….. அது போன பின்னால் கீழே வந்தா………. புண்ணியவதி பேசியே வர வச்சுட்டா…………” என்றவனிடம்

“ஏம்பா…..திடீர்னு தலைவலி….. அம்மா மருந்து தேச்சு விடவா……..” என்று ஆதுரமாக பேச…………….. விஜய் தன் அன்னையின் வார்த்தைகளில் தன் கனவை அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்

”அம்மா……….. ஒரே மாதிரியான கனவு அதுவும் மூணு முறைக்கு மேல் வந்தால்………… என்ன ஆகும்………… ஆனா கனவு என்னன்னே ஞாபகத்துக்கே வர மாட்டேங்குது……….. ஆனா மனசு எல்லாம் வலி………. உயிர் போற மாதிரி வலிமா…………….”. என்று சொன்னவனின் கண்களில் அந்த வலி தெரிய………..

செல்வியே பயந்து விட்டாள்…………….

“என்னப்பா சொல்ற……………… இந்த அளவு ஃபீல் பண்ற…………..”

“தெரியல மா…….. நான் இதுவரை யார்கிட்டயும் சொல்லலை…..இன்னைக்கு சொல்லனும் போல இருந்துச்சு……….. என்றவன்

”நம்ம ராதாவுக்கு ஏதாவது தப்பா ஆகிருமாம்மா………….. அவளுக்கு எதுவும் ஆகாதுல்ல………… போன தடவை இந்த கனவு வந்து …………. தப்பா ஆகப் போகுதுனு அவ ரூம்க்கு போனா……………… அதே மாதிரி அவ விசம் சாப்பிட்டு இருந்தா………… நல்லவேளை காப்பாத்திட்டோம் ………இல்லை……. என்ன ஆகி இருந்திருக்கும்………….” என்றவனிடம்

மருந்தை தேய்த்து விட்டபடி… அவனையும் தேற்றும் விதத்தில்

“ஒருவேளை இந்தக் கனவு வராமல் இருந்திருந்தால்…….. நீ ராதா ரூம்க்கு போயிருந்திருக்க மாட்டாய் தானே…………. அப்போ அது கூட நல்ல காரணத்துக்காகத்தான் வந்திருக்கு என்று சொல்ல……….”

சிரித்தவன்

“அம்மா நல்லா பேசக் கத்துக்கிட்டீங்க…………….என்று புன்னகைத்தவன்………….. நீண்ட நாள்களுக்குப் பிறகு அவன் அன்னை மடியில் தலை வைத்துப் படுக்க………….. கலைச்செல்வியின் மற்ற பிள்ளைகளும் அங்கு வந்தனர்………….

அனைவரும் தன் அண்ணனின் முகச் சுணக்கம் தாங்காதவர்கள்………..அத்தனை பேரின் முன் தங்கள் அன்னை தீக்‌ஷாவுக்காக சப்போர்ட் செய்த்தால்………. தன் அண்ணன் முகம் வாடியவுடன்…………. அதைத் தாங்க முடியாமல் அவன் அறைக்கே வர………..தன் அன்னை மடியில் வைத்து அவன் படுத்தபடி சிரித்துக் கொண்டிருக்க…… இப்போது அவன் நார்மலானது தெரிய…………. நிம்மதி அடைந்தனர்……………

ஆனால் தன் அண்ணனின் நிம்மதி…………….சந்தோசம்………… கம்பீரம் எல்லாம் இதே தீக்‌ஷாவால் பறிக்கபட்டு…………. நடைபிணமாய் திரியப் போகும் அவனைப் பார்த்து …… அந்தக் குடும்பமே அதன் சந்தோசத்தை இழக்கும் நாள் வெகு அருகில் தான் இருந்தது…………………

யுகேந்தர் மட்டும் விஜய்யோடு அவன் அன்னையின் மடிக்கு சண்டை போட……….. இப்போது அங்கு சந்தோசம் மட்டுமே நிறைந்திருந்தது………..

அப்போது விஜய் அடித்த வேலையாள் காஃபியுடன் உள்ளே வர…………. விஜய் அவன் முகத்தைப் பார்க்க………. .இவன் கைத்தடம் பதிந்து இருந்தது………………… அவனிடம் மன்னிப்பு கேட்க மனம் சொன்னாலும்…………. அவன் குணம், வளர்ந்த விதம் அதைத் தடுக்க…………… பேசாமல் இருந்து விட்டான்………….. காபியைக் குடித்தவனுக்கு தலைவலி குறைந்தது போல் இருக்க………….. கட்டிலில் தலை வைத்தபடி அமர்ந்தவன்………. தன் தங்கையை பார்த்தான்………

ராதா சற்றுத் தள்ளி அமர்ந்திருக்க………… அவளை அருகில் அழைத்தவன்……….

“அங்க போய் சமாளிச்சு இருந்திருவியாடா………………… அவங்களோட ஒத்துப் போயிருமா………….. அவங்க வாழ்க்கைமுறைக்கு உன்னால் அடாப்ட் ஆகிற முடியுமா………… எங்க எல்லோருக்கும் நீதான்மா இளவரசி……… ஏன்மா உனக்கு இந்த நிலைமை…… இங்க உன் குரலுக்கு ஓடோடி வந்து வேலை பார்க்க……….. எத்தனையோ பேர்……… அங்க போய்…………. அவங்களுக்கு……….. நீ போய் வேலைப் பார்க்கப் போகிறாயா” என்ற போதே அவனுக்கு கண் கலங்க…………

எப்படியெல்லாம் வளர்ந்தவள்……. மனம் தாங்கவே இல்லை…………..

ராதாவுக்கும் கண் கலங்க ஆரம்பிக்க

யுகேந்தர் மட்டும் மனதுக்குள்…..

“தீக்‌ஷா நீ காதலுக்கு மரியாதை படத்தில் உள்ள கதாபாத்திரம் எல்லோருக்கும் வச்சது தப்பே இல்லை……………நீ மட்டும் நல்லவேளை இங்க இல்லை………….. உன் விருமாண்டியோட பாசமலர் படத்தை நாளைக்கே தியேட்டர் தியேட்டரா ரிலிஸ் பண்ணி இருப்ப…… என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்

ராதா கண்கலங்குவதை பார்த்தவன்……………. தன் தங்கையின் திருமண விசயத்தில் இனி தலையிடாமால் ஒதுங்கி இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து…………. அதன் பிறகு எல்லா வேலைகளிலும் ஆர்வம் காட்டியவன்………… அவளுக்கு திருமணப் பரிசாக…………… வீட்டையும் அளிக்க முடிவு செய்து அதற்குரிய பணிகளிலும் ஈடுபட ஆரம்பித்தான்…….

-------------------------------

திருமண நாளும் வந்தது…………….. சகோதரர்கள் மூவரும் ஒன்றாய் இணைந்து அத்தனை காரியங்களையும் செய்ய……… ராகவேந்தர்-கலைச்செல்வி தம்பதியினர் கண் குளிர தன் மகளின் திருமணத்தை…………….. மன நிம்மதியுடன் கண்டு களித்தனர்………….

அது போலவே வைத்தீஸ்வரனும்-ஜெயந்தியும் தன் மகனின் திருமணம் இந்த அளவு பிரமாண்டமாய் நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்காத்தால் அவர்களும் சந்தோசத்திற்கு குறைவில்லாமல் இருக்க…………….

விஜயேந்தர்……………… சுரேந்தர்……………. யுகேந்தர் மூவரும் மணமகனுக்கு குறைவில்லாமல்…………… பட்டு வேஷ்டி சட்டையில் வலம் வர…………… அங்கு மூவரின் மேலும்……….. அவர்கள் ஒற்றுமையாய்த் திரிவதும் அனைவரின் கண்களையும் கவர்ந்தது……………….

திருமணச் சடங்குகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க…. விஜய்யின் எண்ணமெல்லாம் தன் தங்கையின் நினைவிலே இருந்தது…………….. தான் பரிசாய் கொடுக்கப்போகும் வீட்டினை தீபனை எப்படி ஏற்றுக் கொள்ள வைப்பது என்று குழப்பம் வேறு…………….. இந்த எண்ணங்களோடு சுற்றிக் கொண்டிருந்தான் அவன்

----

இளமாறனும் திருமணத்திற்கு வந்திருக்க………………. விஜய் கொஞ்சம் குற்ற உணர்ச்சியில் இளாவைப் பார்க்க…………….. இளமாறனோ அதற்கெல்லாம் வருத்தப்படாமல்……………………..

“ஏன் விஜய் வருத்தப்படற……….. நீதான் என் எங்க வீட்டு மாப்பிள்ளையா வர போறில்ல………………அது போதும்”. என்றவன்………..

”என் தங்கையை மட்டும் வேண்டாம்னு சொல்லி வேற பொண்ணைப் பார்த்த…………. அவ்ளோதான் என்று சிரிக்க………….” அதில் உள்குத்தும் இருப்பதும் போல் விஜய்க்கு பட…. அந்த நேரத்தில் தீக்‌ஷா அங்கு வந்தாள்

”அத்தான்……………….. நீங்க ஏதோ அண்ணனுக்கு சடங்கு செய்யணுமாம்……………….. வரச் சொன்னாங்க…………….” என்று சொன்னவள்……………. இளாவைப் பார்த்து விஜய்க்கு தெரிந்தவர் என்று புன்னகைத்து வைக்க………….. அவன் விஜய்யை விட ஒரு பங்கு மேலே இருந்தான்……. வேறு புறம் திரும்ப…………….. விஜய்………….. தீக்‌ஷாவை அழைத்துகொண்டு முன்னால் போக இளா இருவரையும் வெறித்தான்

”அத்தான்………. இவர் உங்க ஃப்ரெண்டா” என்று கேட்க……………..

“ஆமாம்…” என்றவன்…… அவளிடம் குனிந்து அடிக்குரலில்

“ஏய்….இப்போ எதுக்கு அத்தான் அத்தான்னு ஏலம் போடுற………….” என்று மிரட்ட

“அத்தானை அத்தானுதான் சொல்லமுடியும்……… அண்ணான்னா சொல்ல முடியும்…….. ” என்று சிரித்தபடி அவன் முகத்தைப் பார்த்து தீக்‌ஷா கண்சிமிட்ட……….

அங்கு இருந்த ஒரு சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது விஜய்க்கு,,,,,,,,,,,,,,,, அது முடியாமல்……..

“கடவுளே” என்று தலையில் அடிக்க…………. தீக்‌ஷா இப்போது

“அத்தான்,அண்ணா ஆராய்ச்சிலாம்…… அப்புறம் வைத்துக் கொள்ளளாம்……….. நான் என்ன சொல்ல வந்தேன்னா………….. உங்க ஃப்ரென்ட்……. உங்களை விட ஒரு படி மேல இருக்கிறாரே” என்ற போது அவன் முறைப்பு பதிலாய்க் கிடைக்க……………….. பேசாமல் வாய் மூடி அவனோடு நடந்தாள் தீக்‌ஷா

அவளோடு ஒன்றாய் நடந்து போனவன்…………. முதுகின் புறம் பார்வை குத்துவது போல் இருக்க…………. நின்று பின்னால் திரும்ப……….சந்தேகப்பட்டது போல்……………. இளா முறைத்துக் கொண்டிருந்தான்…………….. ஆனால் அவன் பார்வை விஜய்யின் மேல் இல்லை………. விஜய்யைத் தாண்டி தீக்‌ஷாவின் மேல் இருக்க……………….

தீக்‌ஷாவோடு போகாமல்…… விஜய் அப்படியே நின்று விட்டான்…………….. தீக்‌ஷா முன்னால் சென்று விட…………. இப்போது சென்றான்………. ஆனாலும் அவனுக்கு தீக்‌ஷாவின் மேல் விழுந்த இளாவின் வெறித்த பார்வை கொஞ்சம் சஞ்சலத்தை உண்டு பண்ண………….. தீக்‌ஷாவைப் பார்த்தான் தன்னையறியாமல்……………………

அவள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் தன் அன்னையிடம்…….. இவ வாயவே மூட மாட்டாளா……………… என்றிருந்தது………………

அதன் பின் தான் செய்ய வேண்டிய சடங்கை முடித்துவிட்டு……………… திருமணத்திற்கு வந்த முக்கிய உறவினர் ஒருவரின் அருகே போய் அமர்ந்தான்………… அவரை வரவேற்கும் பொருட்டு

விஜய்யின் தூரத்து உறவினர்தான் அவர்……… அவனது உறவு முறையில் மிகவும் மரியாதை மிக்கவர்….

“தம்பி அந்தப் பொண்ணு யாரு……….. துரு துருனு இந்த கல்யாண மண்டபத்தையே ஒரு கலக்கு கலக்குது……………….. “ என்று கேட்க

“அது மாப்பிள்ளை பையனோட தங்கச்சி தாத்தா” என்று விஜய்யும் பணிவோடு சொல்ல…………. ராகவேந்தரும் அவர் அருகில் தான் உட்கார்ந்திருந்தார்

விஜய் இருக்கிறான் என்றெல்லாம் பார்க்கவில்லை…… அந்தப் பெரியவர்………. சட்டென்று….

“விஜய்க்கு அந்தப் பொண்ணையே முடிச்சுடு வேந்தா…………….. நல்லா இருக்கு பொண்ணு………….. விஜய்க்கும் பொருத்தமா இருப்பா……………….”

”என்ன தம்பி….. நான் சொல்றது கரெக்ட்தானே…………….”. என்று சிரிக்க…………….

விஜய் வெளியில் சிரித்து உள்ளுக்குள் எரிந்தான்………………….. இருந்தும் தன்னைச் சமாளித்தபடி………

“எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் வயது வித்தியாசம் அதிகம் தாத்தா………………… 6,7 வருசம் வித்தியாசம் இருக்கும்” என்றவனிடம்………………..

“கரெக்ட்டாத்தான் இருக்கு………. என்னமோ 15 வருச வித்தியாசம் இருக்கிற மாதிரி பேசுற… இந்த வயசு வித்தியாசம் தான் கரெக்ட்………….. அவ கழுத்துல பேசாம நீ ஒரு மூணு முடிச்சு போட்ரு……….” என்றவரிடம்… இவனும்

“இப்போ பொண்ணுங்களெல்லாம் 2 வருசம் தான் மேக்சிமம் வித்தியாசம் பார்க்கிறாங்க தாத்தா” நழுவும் விதமாய் சொல்ல………….

“அப்போ உன்னை விட 2 வயசு சின்னப் பொண்ண பார்த்துட்டியா” என்று எதிர் கேள்வி கேட்க

விழித்தான் விஜய்………………

”அந்தப் பொண்ணுக்கு உனக்கும் கரெக்டா இருக்கும்னு நான் சொல்றேன்……….. நீ என்ன இப்டி பேசுற” என்றவர்………….

”நீ என்ன சொல்ற” என்று வேந்தனைப் பார்த்து பேச ஆரம்பிக்க…………… விஜய் தன் தந்தையை ஒரு முறை முறைத்து அங்கிருந்து எழுந்து போனான்………………

ராகவேந்தர் மகனின் கோப முகத்தைப் பார்த்தவர்……….. அப்போது ஒன்றும் சொல்லாமல்………………. சிறிது நேரம் கழித்து அவனிடம் வந்தார்…………..

“விஜய்………….ராதா கல்யாணம் பா………… யாராவது ஏதாவது சொல்றாங்கனு …ஏதாவது கோப்பட்டு பேசி எதையாவது பண்ணி வச்சுடாதா” என்று சொல்ல

“அப்பா………….. பெரியவரா போய்ட்டாரு………… அதுனால விட்டுட்டேன்……………….. இங்க என்ன ஜோடி சேர்க்கிற போட்டியா நடக்குது………… இவரு சொல்றாராம்ல…….. கரெக்டா இருக்குமாம்ல…….. ஒருநாள் அவகிட்ட இவர விட்டு பேச சொல்லனும்……. அப்போ சொல்வாரு……………. ” என்று அன்று பொருமித் தீர்த்தவன்தான்……………. ஏழெழு ஜென்மமும்…… அவள் பந்தம் தனக்கு வேண்டும் என்று உருகி நின்றான்………………..

”அதுமட்டும் இல்லப்பா……………. தாலி கட்டுனா கூட அவ முடிச்சு போடக் கூடாதுனு ஜெயினா வாங்க வச்சேன்……. அவ கழுத்துல நான் முடிச்சு போடவா…………….. நல்லா வந்தாரு…………… என்று தன்னை அறியாமல் வாய் விட………

”மொத்த மூடையுமே மாத்தி விட்டுடாரு……………….” என்று புலம்பியபடி சென்றவனைப் அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்றிருந்தார் ராகவேந்தர்…………………..

தீக்‌ஷா மேல் உள்ள கோபத்தில்தான் தாலிச் சங்கிலி வாங்க வைத்தானா…………….. தீக்‌ஷா மேல் உள்ள கோபத்தை இதற்கு மேல் அவனிடம் வளர விடக் கூடாது என்று முடிவு செய்தவர்……….அவனிடம் இதுபற்றி பேசவேண்டும் என்றும் தீர்மானித்தார்

-------------

ராதா……….. ப்ரதீபன் திருமணம் நடந்து கொண்டிருக்க…………….விஜய்யும் சுரெந்தரும் வாயிலில் நின்றிருக்க………………. அப்போது விஜய் கண்ட காட்சியில் முகமும்…………. கண்களும் கோவைப் பழமாய் மாறின………….

தீக்‌ஷாவியின் வாயை தன் கைகளால் பொத்தியபடி நின்று கொண்டிருந்தான் யுகேந்தர்……………..

அவள் தனியே……… தான் தனியே என்று இருக்கும் போதே தன்னுடன் இணைத்துப் பேசி விட்டார் அந்தப் பெரியவர்……………… இதை யாராவது பார்த்திருந்தால்……………….. என்னென்ன பேசி இருந்திருப்பனரோ என்று நினைத்தவன்

சுரேந்தரும் அந்தக் காட்சியைப் பார்த்திருப்பான் போல………. அவனும் விஜய்யைப் பார்க்க

“அவன வரச் சொல்லு சுரேந்தர்………… மேடைனு கூட பார்க்காமல்…………………… அவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா…… இத்தனை பேர் முன்னால்… மேடைல…………அவன” என்று பல்லைக் கடிக்க………………

சுரேந்தர் அவன் போனில் யுகெந்தரை அழைக்க………………….அடுத்த நிமிடம் அவன் விஜய் முன் நின்றான்…………………

”உன் விளையாட்டுத் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு…………… வர்றவங்களை கவனி…………….. அவ பின்னால வால் பிடிச்சுட்டு திரிஞ்ச………….. தொலச்சுடுவேன்…… இத்தனை மணி நேரம் எதுனாலும் உருப்படியா நீங்க ரெண்டு பேரும் பேசி இருப்பீங்க……….. எல்லாம் வெட்டி பேச்சு……………….. உன்னை மாதிரியே வெட்டியா பேச உனக்கு ஏத்த ஒரு ஆள ராதா கண்ல காமிச்சுருக்காள்ள………………. அவள சொல்லனும்………… போ…………… உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் வந்திருக்காங்க…………… அவங்களை கவனி” என்று சொல்ல…………… அதன் பின் யுகேந்தர் தீக்‌ஷா அருகில் போக வில்லை……………

யுகேந்தர் போன சிறிது நேரத்தில்…….. தீக்‌ஷா அவனைத் தேடி வர விஜய்க்கு கோபம் மண்டையில் ஏறியது………….. அவன் ஒதுங்கிப் போனால் கூட…………… இவ விட மாட்டாள் போல………. என்ன பொண்ணோ என்று நினைக்கும் போதே

அவள் வந்த வேலையைச் சொல்ல……………. அதைக் காதுகளால் மட்டுமே கேட்டான்……….. ஆனால் இப்போது சுரேந்தர் அவள் பின்னால் போக……………

”இவ வேலை சொல்வதற்கு என் தம்பிதானா கிடைத்தான்” என்று யோசித்தவன்……………..தன் வீட்டு வேலையாளை அழைத்து அவள் கேட்ட பொருட்களை அவளுக்கு எடுத்துக் கொடுக்க சொன்னவன்……………… அவ பக்கத்திலேயே இரு………………… அவளுக்கு தேவையான உதவியைப் பண்ணு என்று சொல்லியும் வைத்தான்…………….

ராதாவின் கழுத்தில் ப்ரதீபன் மங்கல நாண் பூட்டும் நேரம் வர……….விஜய்க்கு ஏனோ மனமெல்லாம் கனமாக இருந்த்து……….. தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க நினைக்க………. இப்படி ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்து விட்டாளே என்று………….. எவ்வளவுதான் தேற்றிப் பார்த்தும்… அவள் தேர்ந்தெடுத்த மணவாழ்க்கையில் திருப்தி காண மறுத்தது……….

கலைச்செல்வி திரும்பி தன் மகனைப் பார்க்க………… அதில் இருந்த சோகம்……………. அவள் மனதை ஏதோ செய்ய………..விஜய்யின் அருகில் வந்தாள்…

“என்ன விஜய்……………… ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்……………. நீ முகம் வாடி நின்றால்…………. ராதா கஷ்டப்படுவா விஜய்…………………… என்றவுடன் நார்மலானவன்…………

“ப்ச்ச்…….ஏத்துக்கவே முடியலைமா……….. என்னால…………. ஏன்மா இப்டி பண்ணுனா ராதா……..” என்ற போது

கலைச்செல்வி………

“விஜய்……. இப்போ அவ நம்ம வீட்டு பொண்ணு இல்லை……………. அவங்க வீட்டு பொண்ணு…… இனி ராதா வீடுனு நினைத்துப் பாரு……….. தானாகவே மனசு சரி ஆகிவிடும்” என்று சொல்ல………….

மனமின்றி தலை அசைத்தவன்………….. தன் தங்கையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் மனது………அவள் எப்போதும் சந்தோசமாக மட்டுமே இருக்க அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டான்

சற்று நேரத்தில் கலைசெல்வி விஜய்யின் அருகில் வந்து………..

”யுகி எங்க………… தீபனோட பாட்டி தாத்தாலாம் கீழ உட்கார்ந்திருக்காங்க…… அவங்களை மேடைக்கு அழைக்கனும்………….. நாமதான் கூப்பிடனும் பா…………. வேலையாட்களை வைத்துலாம் வரச் சொல்லக்கூடாது என்று மகனின் குணம் தெரிந்த்தால் முன்னெச்சரிக்கையுடன் பேச…………. விஜய்யும்………..

“சரி நானே போகிறேன்” என்று சொல்லியவன்

தீக்‌ஷாவும் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் பேசிக் கொண்டிருக்க…….

அப்போது

“அவங்ககிட்ட கேட்காமலா…….. நீ சொல்லுமா உனக்குதான் என் பையன பிடிக்கணும்” என்று அந்தப் பெண்மணி தீக்‌ஷாவிடம் கேட்க…………

அதற்கு பதில் சொல்ல முடியாமல் தீக்‌ஷா பரிதாபமாக நின்ற நிலை இவனுக்கு சிரிப்பை வர வழைத்தது…………… இவளை எல்லாம் மடக்க…… இப்டி நாலு பேர் வந்ததாத்தான் சரிப்படுவா………. என்ன முழி முழிக்கிறா” என்று அவளைப் பார்த்தவன்………

பதில் சொல்ல முடியாமல் தீக்‌ஷா திணறுவதை உணர்ந்து………….. அவள் தாத்தா பாட்டியை தான் போய் அழைக்காமல்………… தீக்‌ஷாவை விட்டு சொல்லச் சொல்லி…………. அவளை இங்கிருந்து போகச் சொல்லலாம் என்று நினைத்தபடி

“தீக்‌ஷா…… குரூப் போட்டோ எடுக்க வேண்டுமாம் உங்க தாத்தாவையும் பாட்டியையும் அழைத்து வா” என்று சொல்லிவிட்டுப் அங்கிருந்து போனான்

ஆனால்……… போனவன்…….. மீண்டும் திரும்பி வரும்போது அந்தப் பெண்மணியிடம் தீக்‌ஷா பேசிக் கொண்டிருக்க….

”இவளை……………… அவங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாள்னுதானே அவகிட்ட சொல்லிட்டு போனேன்……………… பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டா” என்று அவளின் அருகே நிற்க

”ஆன்ட்டி என் அப்பா அம்மாக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான்” என்ற தீக்‌ஷாவின் பதிலில்…………

“என்ன அடக்கம் அம்மணிக்கு…………… பாவம் அந்தப் பையன்………….. பேசியே கொல்லப் போகிறாள்” என்று நினைத்தபடி அந்தப் பெண்மணியை பார்த்து புன்னகைத்தவன்……………

தீக்‌ஷாவிடமும்……….. அதே புன்னகையுடன்

“அங்க எல்லோரும் வெயிட்டிங்………. ராணி வர மாட்டீங்களோ………… வருங்கால மாமியார்கிட்ட இப்போதே வாயடிக்க ஆரம்பிச்சுட்டியா” என்று கேட்க

தீக்‌ஷா நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை முறைக்க…. அவளின் முறைப்பைக் கண்டுகொள்ளாமல் போனான் விஜய்……………

விடுவாளா தீக்‌ஷா……….. வேகமாய் அவனிடம் வந்து……………

“அவங்கள என் வருங்கால மாமியார் ஆக்க இந்த ராஜாவுக்கு என்ன அவசரம்……….“

அவன் மனதில் நினைத்து என்ன சொன்னானோ அதைக் சரியாக உள்வாங்கி அவனிடமே திருப்பிக் கொடுக்க……………

அவள் புத்திச்சாலித்தனத்தை நினைத்து மனம் சற்று வியந்தாலும்…………….. அவள் கண்டுபிடித்து விட்டாளே என்று முகம் அதற்கும் கோபம்தான் வந்தது விஜய்க்கு

------------------

சடங்குகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க…………விஜய் தனியே வந்து நின்றான்…………. அவன் கொஞ்சம் தனிமை விரும்பி……………… பேசினாலும் அதற்கு காரணம் வேண்டும் என்று நினைப்பவன்……………. ஒரு வார்த்தை கூட தேவையின்றி வெளியே வரக் கூடாது என்று நினைப்பவன்…………….. அதனாலே யுகேந்தர் அடிக்கடி அவனிடம் திட்டு வாங்குவான்………………..

விஜய் தனியாக நின்று கொண்டிருக்க…………….. சுரேந்தர் அருகில் வந்தான்……………….

“அண்ணா………………. இளா போய்ட்டாரா” என்று கேட்க………………

“ம்ம்ம்ம்…… போய்ட்டான்” என்றவன்

“அவன் இன்னைக்கு பேசுனது எனக்கு பிடிக்கவே இல்லை சுரேந்தர்……………… அவன் தங்கையை மட்டும் திருமணம் செய்ய வில்லைனா அவ்வளவுதான்…………. என்ற தோரணையில் பேசிய மாதிரி இருந்தது……………… அதுமட்டும் இல்லை………….. தீக்‌ஷா என்கிட்ட வந்து பேசிட்டு போனப்ப……………….. அவளை வேற முறைச்சுப் பார்க்கிறான்……………. அவளை அவன் பார்த்த பார்வை இருக்கே…………….. அலட்சியமா பார்த்திருந்தா கூட பரவாயில்லை……………… ஒரு மாதிரி அவளை……………….. எனக்கே முதுகு தண்டு சில்லுனு ஆன மாதிரி இருந்துச்சு……………… கலகலப்பா திருஞ்சுட்டு இருக்கிற பொண்ணுடா அவ………. நம்ம வாழ்க்கை முறைல வந்து மாட்டிக்கிற போறா……….. கொஞ்சம் தள்ளியே வைக்கணும்டா அவளை…………..” என்றபோதே

“எனக்கும் இளாவை பிடிக்கலைனா………….. ஏதோ நீங்கச் சொல்கிறீர்கள் என்றுதான் சம்மதம் சொன்னேன்……..………….. இளமதி விசயத்தில் கூட நீங்க யோசிங்கண்ணா” என்றபோது

”இவனும் நல்லவன்தான்……… பிரச்சனை இல்லாத வரைக்கும்……. ராதா பண்ணிய காரியத்துக்கே அவன் ஆடுவான்னு நினைத்தேன்……. பெருசா கண்டுக்கலை….. பார்க்கலாம் ……………” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

தீக்‌ஷா அருகில் வர………….

சட்டென்று முக பாவனையை மாற்றி வேறு புறம் திரும்ப…………….

அவளும் இவனைக் கண்டுகொள்ளாமல்………. சுரேந்தரை அழைத்துக் கொண்டு கிளம்ப………. விஜய் இப்போது திரும்ப……..

அவளின் முந்தானை அவனின் ப்ரேஸ்லெட்டில் மாட்டிக் கொண்டிருந்தது……. சரி எடுத்து விடலாம் என்று நினைக்கும் போதே………….

தீக்‌ஷா அங்கிருந்தபடியே எடுத்து விடச் சொல்ல……………….. என்ன ஒரு அதிகாரம்……….. வந்து எடுக்கட்டும் என்று திரும்பி விட்டான்……..கையை மட்டும் சற்று விலக்கி

அவள் எடுத்து முடிக்கும் வரைக் காத்திருந்தவன் …………….. இப்போது கையைப் பார்க்க….. அது வெறுமையாக இருக்க…………….

”கடவுளே …………. இவ என்கிட்ட போய் விளையாண்டுட்டு இருக்காளே………… என் கோபம் தெரியாமல்……… எல்லோரையும் ஒரே மாதிரிதான் நினைப்பாளா இவள்………… ” என்று யோசித்தபடியே அவளிடம் தன் கைச்செயினைக் கேட்க

அவளோ அதற்கெல்லாம் அடங்காமல் ஆடிக் கொண்டிருக்க……………. விஜய் பொறுமை இழந்தான்…….. அதிலும் இத்தனை பேர் மத்தியில் அவள் அவனோடு குறும்புத் தனத்தில் பேசிக் கொண்டிருக்க……………. அவள் என்ன நினைக்கிறாள் என்றே தெரியவில்லை…..

“3 பேரோடும் சரி சமமாய்ப் பழகுகிறாள்…….. யுகிக்கு அவள் குணம் ஒத்து வரும்……….. தனக்கு……….. யோசிக்கிறாளா இவள்” என்று யோசிக்கும் போதே அவள் அவனின் கைச்செயினை எடுத்துக் கொண்டு கிளம்ப……….. விஜய் அவள் முன் நின்றான் பொறுமை அற்றவனாக…..

“அதைக் குடு……….. இல்ல……. நான் கொல வெறி ஆகிடுவேன்………… என்ன…………. 3 பேர்கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசி யார் மயங்குறாங்களோ……… அவங்கள கரெக்ட் பண்ணி எங்க வீட்ல நுழையலாம்னு பார்க்கிறியா………….” என்று கேட்டு விட்டான்

கேட்ட பின்தான் அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிய………… விட்ட வார்த்தைகளை அள்ளவா முடியும்…………………..

”ஆமா…. வேற வேலை இல்ல எங்களுக்கு” சாதரணமாகச் சொல்லி ப்ரேச்லெட்டைக் கொடுக்க………..

”இவளுக்கு கோபம் வரலையா….. இவ்வளவு தூரம் பேசியும்” என்று அவன் அவளைப் பற்றி, அவள் குணங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து இருந்தான் விஜய்………….

ப்ரேஸ்லெட்டைக் கொடுக்கும்போது ….

”அத்தான் எனக்கு ஒரு சந்தேகம்…. உங்க வீட்டுக்குள்ள வருவதற்க்கு இதுதான் எண்ட்ரென்ஸ் எக்ஸாமா…..” என்று அவள் சம்பந்தமே இல்லாமல் கேல்வி கேட்க

“என்ன என்ட்ரென்ஸ் எக்ஸாம்ன்லாம் சொல்றா இவ…. இவ பேசுற வார்த்தைகெல்லாம் தனியா அகராதி தான் வைக்கனும் போல்” என்று மனதிற்குள் நினைத்து அவளைப் பார்க்க…. அவளும் அவனைப் புரிந்தவனாய்……

“இல்லை உங்க மூணு பேர்ல யாரையாவது ஒருத்தரை மயக்குறது…….. அதைதான் சொன்னேன்…………” என்று சிரித்தபடி சொல்ல…..’

“இவளுக்கு தெனாவெட்டு சாஸ்திதான்………..பயமே இல்லை….” என்று நினைத்து அவளைப் பார்க்க……அவன் கண்களைப் பார்த்து….

“அப்டி ஒரு கேவலமான எக்ஸாம் நீங்க வைக்கலாம்…. ஆனால் அந்த எக்ஸாமை தீக்சா எழுத விரும்ப மாட்டா” என்று அவள் குரலிலும்….. வார்த்தைகளிலும் இருந்த தீவிரம்……… அவனுக்கு புரிய….. ஆனால் தன் முன்யாரும் எதிர்த்துப் பேசாத விஜய்க்கு அதுகூட ஆத்திரமாக வர…………

“சாரி விஜய் அத்தான்……………. நான் உங்க யார்கிட்டயும் தப்பா பழகல அத்தான்……… புரிஞ்சுக்கோங்க………” என்று தீக்‌ஷா சற்றுமுன் பேசிய தீவிரமான பாவனையை மாற்றி சமாதானமாகப் பேச…..

“நீ போகலாம்……….. நீ பேசுனாலே எரிச்சல் வருது…………. பதிலுக்கு பதில் பேசிட்டு……” அத மொதல்ல மாத்து……………..” என்று சொல்லும் போதே

“அம்மா கூப்பிடலயாமே தீக்‌ஷா” என்று சுரேந்தர் திரும்பி வர…………..

அதன் பின் அவள் வெட்டியாய் பேசியதெல்லாம் அவனுக்கு ஞாபகத்தில் இல்லை…… நல்லவேளை சுரேந்தர் அவனைக் காப்பாற்றி அனுப்பியவன்……… அவளுக்கு அறிவுரை கூற ஆரம்பிக்க………

கலைச்செல்வியிடம் அவளின் உறவுக்கார பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்…………….

“யாரு அது சுரேந்தர் தம்பியோட பேசிட்டு இருக்கிறது…………. மாப்பிள்ளைப் பையனோட தங்கச்சி தானே” என்று சொல்ல…………. அது கலைச்செல்வியின் கண்களிலும் பட……….

“பொண்ணு நல்லா இருக்கா……….. 3 பேர்ல யாராவது ஒருத்தருக்கு எடுக்க வேண்டியதுதானே………… சுரேந்தர் பக்கத்தில் பாந்தமா இருக்கா பொண்ணு” என்ற போது கலைச்செல்வியின் கண்களிலும் ஆவல் விரிந்தது…………….

தீக்‌ஷா-சுரேந்தர் பேசிக் கொண்டிருப்பதை விஜய்யும் கவனித்தான்…………… ஆனால் யுகேந்தர் போல் சுரேந்தர் ஒன்றும் விளையாட்டுப் பிள்ளை இல்லை………….. அவன் பேசும் எல்லை உணர்ந்து பேசுவான்…………… தீக்‌ஷா மனதில் ஆசை வரும்படி அவன் பேச மாட்டான்……………….. அது நிச்சயமான ஒன்று…………….. ஆனால் அவன் மனதில் ஏதாவது எண்ணம் தோன்றினால்……………………ஒன்றும் செய்ய இயலாது…………….. இவனைப் போலவே பிடிவாதக் காரன் தான் அவனும்……………… இவனைப் போல் எல்லா குணங்களும் கொண்டவன்…………… தடுமாற மாட்டான்…………… தடுமாறினால்…………… காரியத்தை சாதித்துக் கொள்வான்…………….. இந்த பிரதீபன் ஒரு பையனாவாது பிறந்திருக்கலாம்……………… ஒரு தங்கையோடு வேறு பிறந்து ……………….. என் உயிரை வாங்குகிறாள் என்று தோன்றியது அவனுக்கு……………

அவனுக்காக அவன் உயிரை அணு அணுவாக உறிஞ்சி எடுக்க…………… ஜென்மம் படைத்து வந்தவள்………….. அவனை தேடி வராமலா இருப்பாள்………….

அதே போல் விஜய்… தீக்‌ஷாவின் குணம் பற்றியும் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தான்…………….. அவள் சிறு பெண் போல் குறும்புத்தனம் செய்தாலும்………….. அவன் அவளின் தன்மானத்தை சுடும் போதெல்லாம் தனக்கு பதிலடி கொடுக்காமல் விட்டதில்லை என்பதையும் உணர்ந்துகொண்டவனுக்கு………… கொஞ்சம் வாய் மட்டும் அதிகம் என்று நினைத்தவன் ’வாயாடி’ என்று செல்லமாய் பெயர் வைத்துக் கொண்டான் தன் மனதில்,,,,,,,,,,,,,

விஜய்……….. தன் தங்கையைப் பற்றி யோசித்தான்………….. யுகேந்தரைப் பற்றி யோசித்தான்……….. சுரேந்தர் மனம் பற்றி நினைத்தான்……………… ஏன் தீக்‌ஷா பற்றி கூட யோசித்தான்…………… இவர்களைப் பற்றி எல்லாம் யோசித்தவன்…………… தன் மனதைப் பற்றியும் யோசித்திருக்கலாம்……………. ஆனால் அன்று அவன் நினைக்க வில்லை…………. நினைத்த போது……. அவன் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக…………….. அவன் மேல் கோபம் கொண்ட மங்கையாக………… அவனை விட்டு வெகு தூரமாய் போய் இருந்தாள்……………..

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon