அன்பே… நீ இன்றி??? 2

அத்தியாயம் 2:

பார்வதி கண்ணில் அதிர்ச்சியுடன் அவளையே பார்க்க

“ஹலோ எதுக்கு இந்த லுக்…. எல்லோரும் ஒரு நாள் போய்த்தானே ஆக வேண்டும்….. என்ன….. நான் கொஞ்சம் சீக்கிரம் போகப் போகிறேன்….” என்றவளிடம்

“தீக்‌ஷா விளையாடாதே……. சும்மா மனசெல்லாம் பட படனு னு வருது….. இத்தனை நாள் கழித்து பார்க்கிறேன்….. சும்மாதானே சொல்ற…..” என்று சொன்னவளின் மனம் அவளும் அதையே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க….

தீக்‌ஷா விரக்தியாய் சிரித்தாள்…

“எனக்கும் நீ சொல்றது போல சொல்லத்தான் ஆசை பாரு…. ஆனால் சொல்ல முடியவில்லையே….. ஏதோ மயங்கி விழுந்தேனாம்…. கோமா ஸ்டேஜுக்கு போனேனாம்…. என்று சொன்னாங்க…. வேற எதுவும் சொல்லலை…. அதுக்கப்புறம்…. நான் நச்சரிச்சு கேட்ட பின்னால் ஏதோ ஒரு பேர் சொன்னாங்க…. என் இதயம் ரொம்ப நாள் துடிக்காதாம்….. சீக்கிரம் ஸ்டாப் பண்ணிக்குமாம்…. அதிர்ச்சி தாங்க முடியாதாம்…. சந்தோசமோ… துக்கமோ அதிகமா இருக்கக் கூடாதாம்…….. என்று சாதாரணமாகச் சொல்லியவளிடம்….

தீக்‌ஷா ”என்னடி” என்று தழுதழுத்தவள்…. ”இவ்ளோ ஈசியா சொல்ற….. கேட்கிற எனக்கே முடியல….. உனக்கு…. உன்னால எப்டிடி” என்று சொன்னபோது

”என்ன பண்ண சொல்ற….. ஒருவாரம் மனசு கிடந்து அடிச்சுகிறுச்சு…. அழுதேன்…. கதறினேன்….. இதுதான் வாழ்க்கையானு துடித்தேன்… விரக்தியா இருந்தேன்….. அப்புறம் பழகிருச்சு…. சரி இருக்கிற வரை சந்தோசமா அனுபவிப்போம்னு பார்த்தா….. என்னைச் சுற்றி இருக்கிறவங்க அன்புத் தொல்லை இருக்கே…. தாங்க முடியல………. என்றவள்….