top of page

அன்பே! நீ இன்றி!! 19

அத்தியாயம் 19

வீட்டில் விஜயேந்தர் ஆட்டம் ஆடாத குறைதான்………….. தன் தங்கை…. அவளது அண்ணனை காதலித்து, விசத்தை குடித்து விட்டாள் என்று அவளுக்கு என்ன ஒரு நக்கல்…………. தன் தங்கையின் செயலை வைத்தே தன்னை தலை குனிய வைத்து விட்டாளே என்று வேதனை ஒரு புறம்…. கைத்தட்டி அழைத்து… அதுவும் என்னை பேர் சொல்லிக் கூப்பிட்டு….. என்று கோபம் ஒரு புறம்………….ஆனால் எதுவும் கேட்க முடியாமல்……………. அவர்கள் குடும்பத்துக்கு தெரிந்த ஒருவர் வர………அவளை ஒரு வார்த்தை கூட கேட்க முடியாமல் வந்தது வேறு அவனை…… வாட்டி வதைத்தது…. யாரிடம் வெளிக்காட்டுவது என்று தெரியாமல்…………. ஒவ்வொருவரின் மீதும் எரிந்து விழுந்தான்…………. சுரேந்தரைக்கூட விட்டு வைக்க வில்லை……………

தினமும் அவனைக் கொன்றது அவள் வார்த்தைகள்……….

“என்ன திமிர் அவளுக்கு……… என் முன்னாலே எதிர்த்து பேசிட்டாளே……….. என் தங்கையவே அசிங்கப்படுத்தி விட்டாளே……….. எல்லாம் ராதாவினால் தானே……………….. ச்சேய்…. நான்லாம் ஒரு பிடி பிடிச்சாலே தாங்க மாட்டா………… என்ன பேச்சு……… பேசறா……….. இவளப் போய் பாவம்னு வெற நான் சொன்னேனே………….. “ என்றவன் அதே கோபத்தில் தன் தந்தையின் முன் நின்றான்………….. ஒரு முடிவோடு

“அப்பா…………… எனக்கு இந்த திருமணத்தில் இஷ்ட்டம் இல்லை…………. அந்தப் பொண்ணு… அவ அண்ணனையே வாடா போடானு மரியாதை இல்லாம பேசறாப்பா……….. என் முன்னால் பேசவே தயங்குற ராதா எங்க… அவ எங்க….. மரியாதைனா அவளுக்கு என்னன்னே தெரியாது போலப்பா…….. அவ அண்ணனுக்கே அந்த மரியாதைனா…… ராதாவுக்கு…….. நமக்கு………”

என்றபோது

ராகவேந்தர்………….. மகளின் நிலை தாங்காமல்………… அவள் பட்ட வேதனை தாங்க முடியாமல்……….

“இல்ல விஜய்……………. அவ ஆசைப்பட்ட பையனயே அவ மேரேஜ் பண்ணிக்கட்டும்….. விட்றலாம்……………. இதுக்கு மேல என் பொண்ணு உயிரோட என்னால விளையாட முடியாது ‘” என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்

“தந்தையிடம் அதற்கு மேல் எதுவும் பேசி பிரயோசனம் இல்லை என்று உணர்ந்தவன்…………

“சரி………….. அப்போ என்னை விட்ருங்க………….. எந்த விசயத்திலயும் தலையிட மாட்டேன்……… என்றவனிடம்

”நீ முதலில் சொன்னப்ப நான் மறுத்தேனா விஜய்………. நாங்க மட்டும் பிடித்தா பண்ணுகிறோம்………… உன் தங்கைதானே விஜய்………….. உன் பிடிவாதம் தான் அவளுக்கும்…. விட்டுக் கொடு விஜய்…. ” என்று ராகவேந்தர் கெஞ்ச

யுகி மட்டும் சுரேந்தரிடம்

“இவங்க பஞ்சாயத்து எப்போ முடியும்ணா……….. போன வாரத்தில இருந்து ஓடுது…………. தீக்‌ஷா பேசுறா.. தீக்‌ஷா பேசுறானு சொல்லிட்டு…………….. நம்ம அண்ணா ஒரு வாரமா வாய மூடாம பேசிட்டு இருக்காரு……………” என்றபோது சுரேந்தர் முறைத்த முறைப்பில் யுகேந்தர் தானாக வாயை மூடினான்………… பேச விட மாட்டிங்களே என்று அலுத்தவனாய் மீண்டும் தந்தை…..சகோதரன் பேச்சில் கவனம் வைக்க ஆரம்பித்த்தான்

“விஜய்……… இந்த வாரம் அவங்க வீட்ல போய் பேசலாம்………. நல்ல நாளில் நிச்சயம் பண்ணனும்….. அதுக்கு ராதாவோட அண்ணனா நீ வரணும்………… அதுக்கப்புறம் சுரேந்தர் பார்த்துக் கொள்ளட்டும்” என்று விஜய்யின் தந்தை முடிக்க….

விஜய் அதிர்ந்தான்…………….. ”தீபன் இல்லாமல் அவர்கள் வீட்டுக்கா…………..”

“அப்பா என்னப்பா பேசறீங்க…………… அந்தப் பையனே இங்க இல்லை…………… இப்போ எதுக்கு… அவர் இந்தியா வரட்டும் அதன் பிறகு அவங்க வீட்ல பேசிக்கலாம்……….. ” என்றவனிடம்………….

அவன் ஓரளவு தணிந்து விட்டான் என்பதை அவன் வார்த்தையிலே உணர்ந்த அவன் அம்மா……

“தீபன் இந்தியா வரும்போது மேரேஜே பண்ணிடலாம் பா…… இதுக்கு மேலயும் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம்………… ராதா தன் வாழ்க்கையே தீபன்னு நினைக்கிறாப்பா ” என்று அவன் தாய் கண் கலங்க…..

“என்னமோ பண்ணித் தொலைங்க”…………. என்றவன்……….

”இப்போ அவங்க வீட்டுக்கு மட்டும் போகலாம்……… ஆனா நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம்…………. தீபன் வந்துதான் பண்ண வேண்டும்………..” என்று உறுதியாய் இருக்க……………

விஜய் எப்படியோ சம்மதித்து விட்ட சந்தோசத்தில்……..

“இந்த வார ஞாயிற்ற்குக் கிழமை………… போகலாமா…………. அவங்க வீட்ல சொல்வோமா…………………..” என்று கலைச்செல்வி ஆவலாய்க் கேட்க

விஜய் யோசித்தவன்

“போகலாம்………. ஆனா நாம அங்க போறதை அவங்களுக்குச் சொல்ல வேண்டாம்…………. நமக்காக நடிக்காம…… அவங்க இயல்பா இருக்கணும் அப்போதான் எனக்கும் ஒரு நம்பிக்கை வரும்……… “ என்றவனிடம்

அவன் தாய்………….

”என்னப்பா………… இது…. எதுவுமே சொல்லாமல் போய் நின்னா………. என்ன பண்ணுவாங்க………..” என்றபோது

“அவங்க மட்டும் அன்னைக்கு சொல்லிட்டா வந்து பொண்ணு கேட்டாங்க…………. அதேமாதிரிதான்……………. இதுவும்………. நான் வர வேண்டும் என்று நினைத்தால்……………. யாரும் அவங்க வீட்டுக்கு வருவதாக தகவல் சொல்லக் கூடாது………….. சண்டே போகலாம்” என்றவனின் வார்த்தைகளை யாரும் மீறவில்லை……………

ராதா அன்று இரவே தீபனிடம்…………. தன் அண்ணன் அவர்களின் திருமணத்துக்கு முழுமையாக ஒப்புதல் அளித்த விசயத்தைக் கூறுவதற்கு…………….. அவனுக்கு போன் செய்ய………

அவனோ “ஹ்ம்ம்……… சரி…… உங்க வீட்டு தலைவர் சம்மதம் சொன்னதுக்கு தேங்ஸுனு சொல்லிரு…………” என்று விட்டேற்றியாக சொல்லி வைக்க………ராதாவுக்கு கோபம் வந்து விட்டது………..

“ஏன் தீபன் இப்படி பேசறீங்க”

“பின்ன…………. என்ன பண்ணச் சொல்ற…………… உன்னோட உயிர பணயம் வச்சு………… நம்ம காதல் கை கூடியிருக்கு………….. இதுக்கெல்லாம் உன் அண்ணன் கோபம் தானே காரணம்………… கொஞ்சம் மிஸ் ஆகி இருந்ததுனா…… யோசிச்சுப் பாரு ராதா………” என்று கலங்க

ராதா சிரிப்புடன்………..

“ஹைய்யோ தீபன்………. அவ்வளவு சீக்கிரம் நான் உங்களை விட்டு போய்ருவேனா…….. ரொம்பலாம் எடுத்துக்கலை……….. ஜஸ்ட் அண்ணனை மிரட்டுறதுக்காகத்தான்………… இதுக்கே எங்க அண்ணன் ஆடிப் போய்ட்டாரு……. எப்டியோ……….. இப்போதான் நிம்மதியா இருக்கு…………… ”

“இங்க எனக்கு உயிரே போயிருச்சுடி…………………” என்று அவன் சொல்லி அமைதியாகிவிட………..

அவனைத் தேற்றியவள்………………

“நிச்சயதார்த்தம் அவன் வந்த பிறகுதான்” என்று விஜய் சொன்னதைச் சொல்லி வைத்தாள் ராதா……………

“உன் அண்ணன் ரொம்ப பண்றான் ராதா………………. இன்னும் என் மேல நம்பிக்கை வரல அவனுக்கு…. என்னைக்காவது என்கிட்ட மாட்டுவான் அன்னைக்கு இருக்கு அவனுக்கு…………… எனக்கும் காலம் வரும்டி….” என்று சொல்லும் போதே ராதாவுக்கு கோபம் வந்து விட்டது

“என் அண்ணனுக்கு உங்க மேல எவ்வளவு கோபம் இருந்தும்………ஒரு தடவை கூட என்கிட்ட மரியாதை இல்லாமல் பேசியது கிடையாது……… நீங்க என்னடானா” என்று எரிச்சல் பட்ட படி போனை வைத்தவள்……………. வரும் ஞாயிறு அன்று அவன் வீட்டுக்கு………….. தன் குடும்பத்தார் போவதைச் சொல்லாமல் மறந்து போனை வைத்து விட்டாள்….

தீபனோ..............

“இவ அண்ணன் மட்டும் இன்னும் கொஞ்சம் பாசமா இருந்திருந்தா இவளை எல்லாம் பிடிக்க முடியாது…………. இதுக்கே இந்த சீன் போடறா………” என்று நினைத்தபடி அவனும் போனை வைத்து விட்டான்…………..

அவன் அன்று சொன்னபடி………… விஜய்… அவன் முன் கெஞ்சும் காலமும் தீபன் மிஞ்சும் நிலையும்…… வந்ததுதான்………

-------------------

தீபன் வீடு இருந்த குவார்ட்டர்சினை… ராதா வீட்டினர் அடைந்த போது…………… அவர்கள் யாருக்கும் வீட்டு நம்பர் மற்றும் அட்ரெஸ் தெரியவில்லை………….. சுரேந்தர் வேகமாய் வைத்தீஸ்வரன் நம்பரை அழுத்த….. தடுத்த விஜய்……… யுகேந்தரை அழைத்து………….. அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரிக்கச் சொல்ல……… அவர்களுள் ஒரு சிறுவனை யுகி அழைக்க…. அவன் இவர்களின் அருகில் வந்தான்

“தம்பி………… இங்க வைத்தீஸ்வரன் சார் வீடு எது” என்று சுரேந்தர் கேட்க

வைத்தீஸ்வரனா என்று அந்தப் பையன் முழிக்க

இப்போது யுகேந்தர்………..

“தீபன் தெரியுமா என்றபோது……………..” தெரியாதே என்று தலையாட்டியவன்……….. நாங்க இங்க வந்து 1 வீக் தான் ஆகுது …………. இருங்க…… அதோ அந்தப் பையனைக் கூப்பிடுகிறேன் என்று அவன் இன்னொரு சிறுவனை அழைக்க……….. இப்போது மொத்த கூட்டமும் இவர்களை நோக்கி வர

விஜய் தங்கள் முன் நின்ற பையனிடமே

“தீக்‌ஷா தெரியுமா” என்ற போது

“ஓ தீக்‌ஷா அக்கா வீடா………….. தெரியுமே” என்று அவன் வேகமாய் 2 வது மாடியைக் காட்ட………. விஜய்

“பார்த்தீங்களா…………. யார்கிட்ட யாரைக் கேட்கனுமோ………….அவங்களைக் கேட்கணும்………..“ என்று அவன் சொன்ன வீட்டை நோக்கி அனைவரும் கிளம்ப…………..

இப்போது…….. அந்த சிறுவர்,சிறுமியர்களின் கூட்டம்……. தீவிர ஆலோசனைக் கூட்டமாக மாறி இருந்தது………..

”யாருடா இவங்களாம்…….. நம்ம தீக்‌ஷா அக்கா வீட்டுக்கு போறாங்க”

“ஒருவேளை அக்காவை பொண்ணு கேட்டு வந்துருப்பாங்களோ” என்றபோது

“டேய் லூசு………….. பொண்ணு பார்க்க வர்றாங்கன்னா……… அக்கா என்ன இப்டியா இருப்பாங்க……….. இன்னும் தூங்கி கூட எழுந்திரிக்கலை………..” என்றவனிடம்…..

“ஒருவேளை………… இந்த மாப்பிள்ளையை பிடிக்காம இருந்திருக்கலாம்……..” என்ற போது காரை நிறுத்தி விட்டு வந்த விஜய் காதில் அவர்கள் பேசியது விழ ஆரம்பித்தது…….…………

இன்னும் ஒரு பையன்…

“3 பேர்ல யாரா இருக்கும்டா”………….. என்று கேட்க…………..

”தீக்‌ஷா அக்கா பேரைச் சொல்லி ஒரு அங்கிள் கேட்டாங்கள்ள……………. அந்த அங்கிளாத்தான் இருக்கும்………… என்று சொல்லி ஒரு சிறுமி தான் கரெக்டாக சொல்லி விட்டோம் என்று தன் கூட்டத்தை கெத்தாய் பார்க்க…..

அப்போது விஜய்யும் மிக அருகில் வர………..

“அய்யோ அந்த அங்கிள்டா…………….. நம்மை எல்லாம் முறைச்சுட்டே வருகிறார்” என்று ஒரு நொடியில் கலைந்து காணாமல் போனது அந்த சிறார் கூட்டம்………..

விஜய்………… அந்தக் சிறுவர்கள் பேசிய அனைத்தையும்…………. மூளைக்குள் ஏற்றாமல்………. ”இன்னும் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாளா……………” என்று மட்டுமே நினைத்தான்………..

“இன்னுமா தூங்குறா………… நல்ல குடும்பம்………………. இவளுக்கு பள்ளி எழுச்சி பாட என் தங்கையா…………..” என்று மனதுள் நொந்தபடி அவள் வீட்டை அடைந்தான்……………..

----------------

அதன் பின் தீபன் வீட்டுக் கதவின் அழைப்பு மணியை அழுத்த……………….

விஜய் தன் ஒரு கையைச் அந்தச் சுவரின் மேல் வைத்தபடி கதவின் அருகில் நின்றிருக்க……. விஜய் கை வைத்திருந்த இடத்தில் தீக்‌ஷா என்று இருந்தது………….. முதலில் அவன் கவனிக்க வில்லை……………

ஆனால் யுகேந்தர் பார்த்துச் சொன்னான்……………

“அடுத்த வீட்டுக் கதவை யாரும் தட்டக் கூடாதுனு பேரைக் கூட பொறிச்சு வச்சுருக்கான்னா…………..” என்று சொல்ல………….

விஜய் அப்போதுதான் கவனித்தான்…………… தன் கை அவள் பெயரின் மேல் இருப்பது தெரிய………………. சட்டென்று எடுத்தான்……………………

அதன் பின் கதவு திறக்கப்பட………….

அதைத் திறந்தவளின் கோலத்தில்………….. சத்தியமாக…………..அப்படியே திரும்பி விடலாமா என்று கூட யோசித்து விட்டான்,……………. தன் தாய் தந்தையை பார்த்து முறைக்கவும் செய்தான் அவளின் கோலத்தில்……..

ஆனாலும்………….. அன்று பார்த்த தீக்‌ஷாவுக்கும் இன்று பார்த்த தீக்‌ஷாவுக்கும் அத்தனை வேறுபாடுகள்………. அந்த வித்தியாசம் உறுத்தாமல் இல்லை…….. ஒப்பனை இன்றி……………….நெற்றியின் மத்தியில் சிறியதாக பொட்டு….. என்று பென்சிலில் தீட்டிய சித்திரமாக. இருந்த………. அவளை அவனது விழிகள்……………. அளவெடுக்கத் தொடங்கியபோதே……………. பின் அவள் கையில் வைத்திருந்த பிரஷைப் பார்த்தவன்………… தன் நிலைக்கு வந்து…………. அவளைக் கேலி செய்வது போல்………….. தன் கைக்கடிகாரத்தையும்…… எதிரில் இருந்த சுவர் கடிகாரத்தையும் பார்த்து வைத்தான்…………

அவளோ அதை எல்லாம் அறியாமல்…… அன்று தனக்கும் அவனுக்கும் வந்த வாக்குவாதம் எல்லாம் மறந்தவளாய் அவனைப் பார்த்து புன்னகைக்க

அவள் புன்னகைத்தைக் கூட கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைந்தான்……………. அவளைப் பார்த்து ஒரு இகழ்ச்சியான பார்வையில்……………. அவளை எதிர்கொண்டவன் ஒன்றும் பேசாமல் அவளைத் தாண்டி உள்ளே சென்றான்……….

உள்ளே சென்றவன் அங்கு இருந்த சோபாவில் அமர…………. தீக்‌ஷாவும் அவள் அறையில் நுழைய………….. அவள் அறை விஜய்யின் எதிர்புறம் இருக்க……… விஜய்……….. சட்டென்று எழுந்து கலைச்செல்வியை அங்கு உட்காரச் சொல்லிவிட்டு…………… கலைச் செல்வி இருந்த இடத்தில் அமர்ந்து………… நிமிர……………….தீக்‌ஷாவின் புகைப்படம் அவனைப் பார்த்து பெரிதாய் புன்னைகைத்து வைத்தது..

இனிமேல் எழுந்து அடுத்த இடத்திற்கா போக முடியும் ,……….. பார்வையை அந்த புகைப்படத்தில் இருந்து விலக்கி……………. டீப்பாயின் மேல் இருந்த புத்தகத்தை எடுக்க……….. அங்கும் தீக்‌ஷாவின் கைவண்ணம் இருக்க……….. அந்தப் புத்தகத்தின் முதல் பக்கம் முழுவதுமே தீக்‌ஷா தீக்‌ஷா என்று பேனாவால் கிறுக்கி இருக்க……….. அதைப் படித்தா இருப்பான்………… அப்படியே அதையும் வைத்து விட்டான்…………..

அவளின் நிழலான புகைப்படங்களும்…………… அவளின் அச்சாரங்களும் தான் இன்னும் சில வருடங்களில் தன் மன வலிகளின் மருந்தாய் ஆகப் போவது புரியாமல் அவற்றை எல்லாம் அன்று தவிர்த்தவன்……… பெரியவர்களை கவனிக்க ஆரம்பித்தான்…………….. ஆனால் வாய் திறந்து பேசவில்லை……………

வீட்டில்…………… வைத்தீஸ்வரன் ஜெயந்தி கைகால் புரியாமல் தவிக்க……………………

கலைச்செல்வி அவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு பேச ஆரம்பிக்க இரு வீட்டின் பெரியவர்களும்… தீபன்…….ராதா திருமணத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றிப் பேச…. நிலைமை ஓரளவு சுமுகமாக போய்க் கொண்டிருந்தது.……….

அப்போது தன் பின்னால் தீக்‌ஷா அறைக் கதவைத் திறந்த சத்தம் அவன் காதுகளில் விழுந்தது……….. இவன் திரும்பவில்லைதான்……………

தீக்‌ஷா திறந்த வேகத்தோடு………. பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று உணராமல்

“அம்மா பசிக்குது……………. தோசை போட்டு வச்சுருக்கீங்களா……….” என்றபடியே வெளியே வர…….

விஜய்யின் மதிப்பீடு…………… இப்போது……………… இன்னும் கீழே இறங்க…………… அவளோ அவள் வீட்டை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தாள்….

அவள் இறங்கிக் கொண்டிருக்கிறாள்.. என்பது அவள் ஹீல்ஸ் அணிந்து டக் டக் என்று இறங்கும் சத்தம் அவன் காதுகளில் விழ………..

“ஹப்பா போய்ட்டா என்றிருந்தது விஜய்க்கு……… அது ஏனென்றும் புரியவில்லை…………..: விஜய் அப்போதுதான் தீபனின் பெற்றோர்களிடம் பேச ஆரம்பித்தான்…………..

“எங்க ராதா………….. ஆசைப்பட்டு விட்டாள் அதனால் தான்……” என்று அவன் ஆரம்பித்த போதே மீண்டும் அவன் காதுகளில் டக் டக் என்ற ஓசை கேட்க…………. இப்போதானே கீழ இறங்கிப் போனாள் இவள்……….. என்ற யோசனையில் விஜய்யின் மனம் போக

உள்ளே வந்தவள்………. அவனின் அருகில் வந்து……….

“எக்ஸ்கியூஸ் மீ” என்னோட துப்பட்டா அங்க இருக்கு ……….எழுந்துகிட்டீங்கனா நான் எடுக்க வசதியா இருக்கும்……. இல்ல நீங்க எடுத்து தந்தாலும் ஓகே தான்….. சாரி……. ” என்று கேட்க………

அப்போதுதான் விஜய் அவளுடைய துப்பட்டா மேல் தான் சாய்ந்து இருப்பதை பார்த்தான்…………… பார்த்த நொடியே எழுந்தும் வழி விட……..

அதை எடுத்துத் தராமல் எடுக்க வைத்து விட்டானே… என்ற கோபம் அவள் முகத்தில்……. அதைக் கவனித்தவனுக்கு………….

“வந்து எடுக்க மாட்டாங்களோ……………………… கோபம்லாம் வருது,,,,,,,,,,,,,, பெரிய மகாராணி………….. இவளுக்கு நாங்க எடுத்துக் கொடுக்கணுமோ………….. ” என்று நினைத்தவனுக்கு…. அவள் கோபத்தில் மனம் லேசாய் உல்லாசம் ஆனதுதான் உண்மை,,,,,,,,, ஆனால்

துப்பட்டாவை எடுத்த தீக்‌ஷா……… அடுத்த நொடியே அவள் கழுத்தில், சுற்றி போட்ட போது…. அதன் நுனி……… அவன் முகம் மேல் பட்டு விலக……….. அவள் அதை உணர வில்லை………. ஆனால்………..விஜய்……… கொதித்து விட்டான்…………..

அவள் ஆடை தன்னைத் தீண்டியதை அவன் விரும்பவில்லை……………. அது மட்டும் இல்லாமல் பெண்ணாக இருந்து…….. தன் ஆடை அடுத்தவரின் மீது பட்டதைக் கூட உணராமல் இருக்கும் அவளை நினைத்து இன்னும் கோபம் ஆனான்………….

அதில் அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே…..

தீக்‌ஷாவோ அவன் புறம் திரும்பி…. துப்பட்டாவை எடுத்துக் கொடுக்காமல் வழிவிட்டதை சொல்லிக் காட்டி அவனுக்கு நன்றி நவிழ……….. தீக்‌ஷா என்ற அந்த நங்கை நஞ்சாய்க் கசந்தாள்தான் விஜய்க்கு,……..

”இவ ட்ரெஸ்ஸை எல்லாம் தொட்டு எடுத்துக் கொடுக்க நான் என்ன இவ வீட்டு வேலைக்காரனா…….. நான் விஜயேந்தர்………….”. என்று செருக்கில் இறுமாந்துதான் இருந்தான்………………….

--------------

அதன் பிறகு…

விஜய்யிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் ராதா திருமண வேலைகளில் அவன் ஒதுங்கிக் கொண்டான்………… ஒதுங்கினாலும்………. சுரேந்தர் மேல் கவனம் வைத்திருந்தான்……….. அவன் எதையாவது மறந்து விட்டாலும்………. அவனிடம் சொல்லி அவனைத் திருமண வேலைகளில் முழுமையாகச் செய்ய வைத்தான்………………..

விஜய் தன் அலுவலகத்தில் இருக்க……. சுரேந்தர்………….. சைட்டில் இருந்தான்…………. அப்போது……….. அசோக் விஜய்யிடம் வந்து…………..

“விஜய் சார்…………… இன்னிக்கு உங்களை மீட் பண்ண………….. டை அப் பற்றி பேச…………. கண்ணன் வர்றாங்க………EA ல மீட் பண்ணலாம்னு நீங்கதான் சொல்லிருந்தீங்க…………”

“எத்தனை மணிக்கு”

”5 மணிக்கு………….” என்ற அசோக்கிடம்

”சரி” என்று சொன்னவன் அடுத்த அரைமணி நேரத்தில் அசோக்கோடு அந்த நபரை சந்தித்தும் முடித்து இருந்தான்……………. அசோக்கோடு பேசியபடி வெளியே வந்தவன்…………. யுகேந்தரை ஆர்த்தியோடு பார்க்க…………….. அசோக்கை வேகமாய் பின்னே இழுத்தவன்……….

”அசோக்……….யுகி அந்தப் பொண்ணு ஆர்த்தியோட இருக்கான்……… இப்போ நாம போனால் நமக்கு தெரியும்னு அவனுக்கும் தெரியும்………… அவங்க போன பின்னால் நாம போகலாம்…………. என்ற போது

“சார்…………. உங்களுக்கு கோபம் வரலையா” ஆச்சரியமாய்க் கேட்டான் அசோக்

“நானும் சுரேந்தரும் தான் பிஸ்னஸ் பிஸ்னஸுனு புலி வாலை பிடித்து விட்டோம்…… அவனாவது லைஃபை என்ஜாய் பண்ணட்டும்…….. ஆர்த்தி நல்ல பொண்ணு அசோக்….. என்ன.. தீனாவோட தங்கையா போய்ட்டா………… அதுதான் பிரச்சனை…… ஆனாலும்……… என் தம்பிக்கு தர மாட்டேனு சொன்னா விட்ருவோமா என்ன” என்றவனிடம் அவன் ஜாலி மூடில் இருப்பதை உணர்ந்த அஷோக்

“கடத்திட்டு வந்தாவது யுகி சார்க்கு மேரேஜ் பண்ணிட மாட்டீங்க” என்று சொல்ல……….. இப்போது விஜய் முறைக்க…………….. அசோக் அமைதி ஆகி விட்டான்……………

பின் வேறு புறம் ஏறி மேலே வர……………இப்போது அஷோக் விஜய்யை பின்னால் இழுத்தான்

”என்ன அசோக்” என்றபோதே…. அவன் கைகாட்ட………….. அசோக் கைகாட்டிய திசையில் தீக்‌ஷா………….. சில பெண்களோடு……….. அமர்ந்திருந்தாள்………. அவள் தோழிகள் போல என்று நினைத்துக் கொண்டான்……………

”இவ வேறயா…………… இவ யுகிய பார்த்து தொலைக்க போறாளே……….. இவ வாய்ல எதுவும் இருக்காதே…………..ஓட்டை வாய் வாச்சே……….. டேய் யுகி இவகிட்ட மாட்டப் போறியா………” என்று யோசித்தபடி இருக்க

அசோக்………. விஜய்யிடம்

“சார் வேற பக்கம் போகலாமா”

“எதுக்கு அஷோக்……………. இவளுக்கெல்லாம் பயந்து வேற பக்கம் போகனுமா” என்றபடி சற்று தள்ளி அவள் இருந்த இடத்தின் பின்னே அமர்ந்தனர் இருவரும்…………..எச்சரிக்கையாக முதுகுப் புறம் காட்டியபடியே

ஆனாலும் விஜய்க்கும் கொஞ்சம் பயம்தான்…… தன்னைப் பார்த்தால்…… எங்கு இத்தனை பேர் முன்னிலையில் தன்னிடம் பேசி விடுவாளோ ………….. தன்னை அவள் சொந்தம் என்று அவள் தோழிகளின் முன் அறிமுகப்படுத்தி விடுவாளோ என்று…. அவனுக்கு அவளிடம் பேசக் கூடப் பிடிக்கவில்லை…………… அவள் தன் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளவும் விருப்பம் இல்லை…………

ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தீக்‌ஷா குனிந்து மொபைலில் தீவிரமாக…………….. ஏதோ செய்து கொண்டிருந்தாள்…………….. அதனால் இவர்கள் வந்ததைக் கவனிக்க வில்லை……….. ஏன் அவள் தோழிகள் தான் பேசிக் கொண்டிருந்தனர்……….. தீக்‌ஷாவின் குரல் இதுவரை அவன் காதுகளை அடையவில்லை…………….

“என்ன பேசாம இருக்கா………வீட்லதான் வாயா” என்றெல்லாம் நினைத்தவன்…………

“தீக்‌ஷா மொபைல கட்டிட்டு அழாம…………பேசுடி” என்று தீக்‌ஷாவோடு அவள் தோழிகள் பேச ஆரம்பிக்க….. அவர்களின் பேச்சில் கவனம் வைத்தான் விஜய்………

“ப்ச்ச்…….. இருங்கடி………… இண்ட்ரெஸ்ட்டா விளையாண்டுட்டு இருக்கேன்………… எங்க பக்கத்து வீட்டு வாண்டு என்னை விட அதிகப் பாயிண்டுடி……….. இன்னைக்கு அவனை நான் பீட் பண்ணலை……….. என் பேர் தீக்‌ஷா இல்லை” எனும் போது விஜய்க்கு லேசாய் சிரிப்பு வர………… அசோக் இருந்ததால் அதை வாய்க்குளேயே அடக்கினான்…………

திருமணம் முடிவாகி இருக்கும் போல ஒரு பெண்னுக்கு………. அதற்காக ட்ரீட்டுக்காக வந்திருந்தார்கள் போல………………

“தீக்‌ஷா மட்டும் சொல்லலைனா…………… இவ மேரேஜ் பிக்ஸ் பண்ணிய விசயத்தையே மறச்சுருப்பாடி……….”

திருமணம் முடிவாகி இருந்த பெண்ணோ தீக்‌ஷாவிடம்…………….

“இவ மட்டும் சொல்லாம் இருந்திருந்தால்…………. ட்ரீட் வைக்காமலே இருந்திருக்கலாம்………. ஓட்டை வாய்” என்று ஆரம்பிக்க

தீக்‌ஷா இப்போது வாய் திறந்தாள்

‘யார்டி ஓட்டை வாய்………. எல்லோரும் கேட்டுக்கங்க………. இவ 6 இயர்ஸா லவ் பண்றாடி…………… அது எனக்கு மட்டும் தான் தெரியும்………….. உங்க யார்கிட்டயாவது சொல்லி இருப்பேனா……….. நானாடி ஓட்டை வாய்……….. ச்சேய் இந்த ட்ரீட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்……………” என்றபடியே எழ

“அய்யோ தீக்‌ஷா…………..சும்மா சொன்னேண்டி… போகாதடி” என்று அவ தோழி பதற இப்போது விஜய்யும் பார்த்தான் தான்

“இவ்ளோ ரோசமா இவளுக்கு………….” என்று நினைக்கும் போதே

“லூசு………… அம்மா போன் பண்றாங்க………….. பேசிட்டு வருகிறேன்………..” என்றபடி சென்றவள்………….

“ஓட்டை வாய்னு சொன்னேல……………. பெரிய ட்ரீட் எனக்கு மட்டும் தனியா தரனும்………. இதுதான் உனக்கு நான் தருகிற பனிஷ்மெண்ட்” என்று தன் தோழியைப் பார்த்து சொல்ல…………… தோழியர் சிரிக்க………..

விஜய்க்கும் சிரிப்பு வர…………. இம்முறை அசோக்கிற்காக எல்லாம் மறைக்க வில்ல…….. சிரிப்பு உதடுகளைத் தாண்டி வராமல் பார்த்துக் கொண்டான்….

ஆனால்………. சற்று நேரத்தில்

தீக்‌ஷா அந்தப் பக்கம் போக…………

அவளின் தோழி ஒருத்தி………..

“தீக்‌ஷா அண்ணியா வரப் போறவங்க பெரிய இடம் போலப்பா…………… அவங்க அண்ணிக்கு 3 அண்ணன்களாம்………… இன்னும் யாருக்கும் மேரேஜ் ஆகவில்லையாம்” என்று பேச ஆரம்பிக்க………….. விஜய் முகம் மாற ஆரம்பித்தான்………….

“ஓஓஓஓஓ………. தீக்‌ஷாவை ஓட்றதுக்கு சூப்பர் மேட்டர்டி…………… நம்மள எல்லாம் எப்டி ஓட்டுவா………… மாட்டுனாடி………. 3 பேரில் தீக்‌ஷாவுக்கு செட் ஆகிர மாதிரி யாராவது இருக்கணுமே…. ” என்று இன்னொருத்தி சுவாரஸியமாக………..

“ஆமாடி……………. ஒருத்தன் பேர் விருமாண்டி………… இன்னொருத்தன என்னமோ பேர் சொல்லி சொன்னா………….. ஆனால் யுகேந்தர்னு 3 வது பையனைப் பற்றி கொஞ்சம் சொன்னாள்………. யுகேந்தர்னு சொல்லும் போதே தெரியல…………. மேடத்துக்கு பிடிச்சா பட்டப் பேர் வைக்க மாட்டங்கள்ள………… சோ…… அந்தப் பையன் தான்” என்று அந்தப் பெண் பேசிக் கொண்டெ செல்ல…………. விஜய் சற்று முன் இருந்த நிலை மாறி எழுந்து விட்டான்……………..

அசோக் வேறு…………… அவனை நக்கலாய்ப் பார்ப்பது போல் இருந்தது…………… ’விருமாண்டி’ னு வேற பட்டப் பேரா………. இந்தப் பொண்ணுங்க பேசறதை வைத்துப் பார்த்தால்………எனக்கு விஜய்னு ஒரு பேர் இருக்கிறதே தெரியாது போல……. அதற்கு மேல் அவன் அங்கு இருக்கப் பிடிக்காமல்…………. யுகேந்தரும் இந்நேரம் கிளம்பியிருப்பான் என்று முடிவு செய்தவன் கீழே இறங்கிப் போனான்………

ஆனால் அவன் கண்ட காட்சி

அங்கு தீக்‌ஷாவோடு யுகேந்தர் பேசிக் கொண்டிருக்க………….. ஆர்த்தி இல்லை அவர்களோடு ………….. அவர்களை நோக்கி நடந்தவனுக்கு

யுகேந்தரோடு…. தீக்‌ஷா சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் மனம் எதையோ எதையோ சிந்தித்தது…. ………… ஆர்த்தியோடு யுகி வந்ததை பார்த்திருப்பாளா………… இல்லையா என்பது வேறு தோன்ற…………. பார்த்திருக்க மாட்டாள் என்றே அவன் மனம் உறுதி செய்தது,,,,,,,,,,,,,,

யுகி யாரிடமும் இயல்பாக பழகுபவன்……. ஒருவேளை……. யுகி அவளுடன் பழகுவதை பார்த்து… தீக்‌ஷா தன் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டால்…………… பிரச்சனை ஆகி விடும்………….. யுகியை கொஞ்சம் இவளோடு பார்த்து பேசச் சொல்ல வேண்டும் என்ற நினைத்தபடி அவர்கள் அருகில் போய் நிற்க……………

“அடிப்பாவி…….. எங்க அண்ணாதான் உனக்கு விருமாண்டியா……………..” என்ற யுகேந்தர் பேசுவதை மட்டும் அவன் கேட்க நேர தீக்‌ஷாவும் திரும்ப………. அவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது………..

அவள் முகம் பார்த்தவனுக்கு………….. அவள் யுகேந்தரைப் பார்த்து சிரிப்பை அடக்குவது தெரிய…… இன்னும் கோபம் வேறு வந்து தொலைக்க……………. அவனையே கட்டுப் படுத்த முடியாமல் நிற்க………….. அடுத்து நல்லவேளை அவளாகவே கிளம்பி ஆரம்பித்தாள்………………

அப்பாடா கிளம்பப் போகிறாள் என்ற நிம்மதியில் அவன் மூச்சு விட………………….

அவன் நிம்மதியாய் இருக்க விட்டு விடுவாளா என்ன………

“யுகி பாய்……. என் ஃப்ரெண்ட்ஸ் தேடுவாங்க” என்று சொல்ல…………….

“என்னது யுகியா……… அந்த அளவு ரெண்டு பேரும் நெருக்கமா” என்று திகைத்து தீக்‌ஷாவை அவன் பார்த்தான்……………..

அதற்கு மேலும் அவனவள் அவனை அதிர வைத்தாள்…………… அவனை ’அத்தான்’ என்று அழைத்து……………………..

அன்று கசந்ததுதான் அந்த வார்த்தைகள்………….

தீக்‌ஷாவின் புகைப்படத்தோடு ஒன்றி அவளின் ’இந்தராகிப்” போயிருந்த விஜய்க்கு………. அவள் வாயிலிருந்து வந்த ‘அத்தான்” என்ற அழைப்பை… இன்று நினைத்துப் பார்த்த போது… நாடி நரம்பெங்கும் ஓடி……. உயிர் தீண்டி உற்சாக வீணை மீட்ட………….. தன்னவளின் நினைவுகளில் இன்னும் ஆழமாக ஆரம்பித்தான்

-------------------

தீக்‌ஷா கிளம்பியதும் யுகேந்தரைப் பார்த்த விஜய்……………..

“என்னடா நடக்குது இங்க…. என் பேரை ஏலம் விட்டுட்டு போறா………………… அவளுக்கு நான் அத்தானா……….. உன்னைச் சொல்லனும்.……………வா கிளம்பலாம்” என்று அழைக்க………

“நீங்க முன்னால போங்க அண்ணா……………” என்றவனிடம் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடியே……..

யுகேந்தரிடம் இருந்த கார்க் கீயை அசோக்கிடம் மாற்றியவன்………….. யுகியை தன் காரில் ஏற்றினான்………………..

காரை ஓட்டிச் சென்ற படி……. யுகேந்தரைப் பார்த்த விஜய்….. அவனிடம்….

”அந்தப் பொண்ணு உன் பேரை சுருக்கி கூப்பிடறா…………… ஏன் உனக்கு பட்டப் பேர் வைக்கலையா………. அந்த அளவுக்கு நெருக்கமோ…………. ” என்ற படி நக்கலாகக் கேட்டவன்

“உன் அண்ணனை விருமாண்டினு பட்டப் பேர் வச்சு சொல்றா…….. நீயும் கேட்டுட்டு பல்லை இளிக்கிற……. அப்டியே நாலு அறை விட்ருந்தா நீ என் தம்பி……….. என்று பல்லைக் கடிக்க……

“இல்லண்ணா………….. அவ உங்களுக்கு விருமாண்டினு பட்டப் பேர் வச்சிருந்த்து எனக்கு இப்போதான் தெரியும்…………….. “ என்றவனிடம்

”முதலிலே தெரிஞ்சுருந்தா மட்டும் என்ன பண்ணி இருந்திருப்ப” உடனடியாக விஜய் கேட்க

யுகேந்தர் திரு திரு வென்று விழித்தான்…… அவனின் பார்வையைப் பார்த்த விஜய்

“சரி சரி…. விருமாண்டினு என் காதில் விழுந்தப்ப மட்டும்….. நான் என்ன பண்ணி கிழிச்சேன்…………..” என்று அவனை கூலாக்கும் விதத்தில் பேசியவன்…கொஞ்சம் சீரியஸாக ஆரம்பித்தான்…………..

”இங்க பாரு………. நீ ஈசியா எல்லோரிடமும் பழகிருவ……….. அந்த பொண்ணு ஏதாவது மனசுல நினைத்து உன்கிட்ட பழகிறப் போகுது…… முடிஞ்ச அளவு தள்ளி நிற்கப் பாரு……………. அதுதான் உனக்கும் நல்லது………… நம்ம குடும்பத்துக்கும் நல்லது………… இவள்ளாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டா………… என்ன… புரிஞ்சதா” என்றவனிடம் யுகேந்ந்தர் தலை ஆட்ட

“என்ன புரிஞ்சது” என்று கேட்க

“லவ் பண்ணக் கூடாது” என்று யுகேந்தர் ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்ல………

விஜய்க்கு சிரிப்பே வந்து விட்டது….. சிரித்தும் விட்டான்……………

“நாம எப்போ லவ் பண்ணக் கூடாதுனு சொன்னோம்……. அடேங்கப்பா…………….. இவரும் அப்டியே என் பேச்சை மதிச்சு….. லவ் பண்ண மாட்டாராமே…………… ஏற்கனவே நீ பண்ணிட்டு இருக்கிறதுக்கு பேர் என்னடா யுகி…. என்கிட்டயே…………. நீ இந்த நடிப்பு நடிக்கிற…..” என்றபடி

“இவள லவ் பண்ணக் கூடாதுனு சொன்னேன்…………..“ என்று திருத்த…………

யுகேந்தர் இப்போதும் தலை ஆட்ட…………..

”தலைய தலைய ஆட்டு………….. நீ உன் ஃப்ரெண்டோட ஏதோ அவுட்சோர்சிங்க் ப்ராஜெக்ட் பண்ணனும்னு இருந்தியே என்னாச்சு” என்று கேட்க

“இல்லண்ணா………. அவன் இன்னும் ஒரு ஆறு மாதம் ஆகும்னு சொன்னான்” என்று சொல்ல…………….

“என்னமோ போ…………… எங்க கூட வா என்றால்………….. வர மாட்டேன் என்கிறாய்………… அதுக்கு மேல் உன் இஷ்டம் என்றவன்………………… ஞாபகம் வந்தவனாய்…..

யுகேந்தரிடம் கேட்டான்………..

“உன்னை அத்தான்னு நீ கூப்பிடச் சொன்னியா அவளை…………. இல்லை தீக்‌ஷாவா கூப்பிட்டாளா” என்று கேட்க

“நான் தான் கூப்பிடச் சொன்னேன் அண்ணா………….. என்னைத்தான் கூப்பிடச் சொன்னேன்…… என்கிட்ட அது ஓல்ட் ஃபேஷனு சொல்லி…………… என்னை பேர் சொல்லி கூப்பிடறேனு சொல்லிட்டா………….. ஆனா உங்களைப் பார்த்ததும் ஏன் சொன்னானு தெரியல” என்று அப்பாவியாச் சொல்ல…………. உண்மையிலேயே அப்பாவியாத்தான் சொன்னான் யுகேந்தர்

“என்ன ஏன்னு தெரியல……….. மேடம் என்கிட்ட அவங்க வால்த் தனத்தை காண்பிக்கிறாங்களாம்……………” என்றவனின் முகம் இப்போது கடுமையைக் காட்ட…………..

”ரொம்ப பேசிட்டு இருக்கா………… என்னைக்கு என்கிட்ட மாட்டிகிட்டு வாங்கிக் கட்டிக்கப் போறாளோ…..” என்று சொல்லியபடி…………. தன் தம்பிக்கு அவன் காதில் ரத்தம் வரும்வரை அட்வைஸ் மழையை வெகுநாட்களுக்குப் பிறகு வழங்க ஆரம்பித்து இருந்தான் விஜய்…………………..

1,446 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


விஜய் கண்ணோட்டத்தில் பார்க்க மிகவும் நன்றாகத் தான் உள்ளது... மீதி அவமதிப்பு எல்லாம் எப்படி நியாயப் படுத்தி சொல்றீங்க ன்னு பார்ப்போம்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page