top of page

அன்பே! நீ இன்றி!! 18

அத்தியாயம் 18:

அந்த பிரமாண்ட மாளிகையில்……. விஜயேந்தர் குடும்பத்தினர் குழுமியிருந்தனர்..... அவர்கள் அனைவர் பார்வையும் ராதாவைச் சுற்றி இருக்க……….. விஜய் உச்சக் கட்ட ஆத்திரத்தில் இருந்தான்………….. சுரேந்தரும் தன் அண்ணனின் மன நிலையில் இருக்க… யுகேந்தர் மட்டுமே தங்கையை நினைத்து கவலையாய் இருந்தும்…….. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் நின்று கொண்டிருந்தான்…………

இவர்களின் பெற்றோரும் ராதாவை நினைத்து கவலையோடு நின்றுகொண்டிருக்க………….

மகளின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க……… அந்த வீட்டின் மூத்தவனின் பிடிவாதம் மறுபுறம் இருக்க…………… ராதாவின் மேல் கவலை கொண்ட போதும் மகனின் பிடிவாதம் நியாயமாகவேப் பட்டது இருவருக்கும்…

விஜயேந்தரின் கோபத்திற்கு காரணம்……….. ராதா கலைச்செல்வியிடம் இளமாறனை திருமணம் செய்ய மறுத்து பேசியிருந்ததே காரணம்……

விஜய் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் ராதாவிடம்………..

“ராதா……… எனக்கு அவங்கள பிடிக்கலை………… நம்ம குடும்பத்துக்கும் அவங்க சரி வரமாட்டாங்க……….. புரிஞ்சுக்கோ…………. பிடிக்கலைனு தெரிஞ்சும் நம்ம வீட்டு படி ஏறி பொண்ணு கேட்க வந்தாங்க………. அதுதான் அன்னைக்கு அவமானப் படுத்தி அனுப்புனேன்…… என்றவன் தன் தங்கையின் முகம் இன்னும் தெளியாததை உணர்ந்து

“இன்னைக்கு உனக்கு நான் சொல்வது தப்பா தெரியலாம்………… இந்த வயசு இன்னைக்கு இதுதான் முக்கியம்னு சொல்லும்………. நாளை நீ நல்லா வாழும்போது கண்டிப்பா இந்தக் காதல்லாம் நினைத்து சிரிப்பம்மா………. புரிஞ்க்கோ…………. என்ன புரியிறது………… இதுதான் என் முடிவு………. உன்கிட்ட இங்க யாரும் சம்மதம் கேட்க வில்லை………… நாளைக்கு உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க…….. என் ஃப்ரெண்ட் ’இளா’ தான்……… அவன் தான் மாப்பிள்ளை……… அவன் தான் .உன் வருங்காலக் கணவன்………….. நீ அண்ணன் பேச்சை மீற மாட்டேனு நினைக்கிறேன்…….. நம்ம குடும்பத்துக்குனு ஒரு கௌரவம் இருக்கு………. அதை இந்த வீட்டில் பிறந்த பெண்ணா கட்டிக் காப்பதும்… காற்றில் விடுவதும் உன் கைலதான் இருக்கு“ என்றபடி இதற்கு மேல் பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல் படி ஏறிப் போக

ராதா விசும்பினாள்……..

இது நாள் வரை தன் அண்ணனை எதிர்த்து பேசியதில்லை…… எதிர்த்து என்ன…. அவ்வளவாக பேச மாட்டாள்…. என்னவென்றால் என்ன……. அந்த அளவில் தான் பேசுவாள்…….. யுகேந்தரோடு மட்டும் நன்றாகப் பேசுவாள்……….. ஆனால் அவனிடம் கூட மரியாதையாகவே பழகுவாள்….. மற்ற இருவரிடமும் அண்ணன் என்ற பாசத்தை விட மரியாதைதான் அதிகமாய் இருக்கும்……. அவர்கள் குடும்ப வழக்கம் அப்படி…….

மாடி ஏறியவனிடம்

“அண்ணா……..ஒரு நிமிசம்…’ என்றபோது நிமிர்ந்த விஜயின் உக்கிரப் பார்வையிலேயே தலை குனிந்தாள் ராதா

”என்ன சொல்லு…….. சொல்லவந்துட்டு ஏன் நிறுத்திட்ட” என்று அதட்ட

“உங்க பிஸ்னஸ் பார்ட்னர்ஷிப்புக்கு என் வாழ்க்கைதான் பலியாண்ணா……..” என்றவள் அதற்கு மேல் தன் அண்ணனை எதிர்த்து பேச வாய் வராமல் நோக்கினாள்…. இதற்கே அவள் தடுமாறி விட்டாள் தான்….

விஜய் மீண்டும் இறங்கி வந்தவன்……………….. அவளின் கண்களைப் பார்த்து

“சரி…… இதுதான் உன் மனசை உருத்துதுனா…. நான் அவனோட என் பார்ட்டனர் ஷிப்பை கட் பண்ணிக்கிறேன்….. ஆனா அவன்தான் இந்த வீட்டு மாப்பிள்ளை….. அதை மாற்ற முடியாது….” என்று விடு விடு என்று படியேறிப் போனான்…. அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் அங்கிருந்து கிளம்ப

ராதாவின் கண்ணீர்தான் அவளின் துணையாய் இருந்தது அவளுக்கு………… மனம் எங்கும் பிரதீபன் நினைவுகள் அவளைத் தாக்க கோபம் வேறு அவன் மீது வந்து தொலைத்தது……….. இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருக்கிறானே என்று………. அவன் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்ட போது தன் அண்ணன் அவர்களை அவமானப் படுத்திய விதமும் அவளின் நினைவைத் தாக்க……….. தன் அண்ணனின் பிடிவாதம் தெரிந்த அவள் கலங்கி நின்றாள்…...

------------------------

தனது அறைக்கு வந்த விஜய்க்கும் மனம் நிம்மதி இல்லை……… தங்கையின் கவலை தோய்ந்த முகமே மனதில் ஊசலாட………. கண்களில் உறக்கம் வரவே இல்லை……….. ப்ரதீபனை நினைத்து கடுங்கோபத்தில் மனம் கொதித்தது…………. இப்படி தன் தங்கையின் மனதில் காதல் என்ற பெயரில் நஞ்சினை வளர்த்து வைத்திருக்கிறானே என்று…….. மாதச் சம்பளம் வாங்கும் அவனுக்கு போய் இளவரசியாய் வாழும் தன் தங்கையா……… எப்படி……… தன்னை மீறி நடந்தது என்று அவனுக்கே தெரியவில்லை…….. என்று மனதுக்குள் புலம்பியபடி படுக்கையில் படுத்திருந்தான்

காதல் என்பது காதலிப்பவரையே மீறி நடக்கும் போது தன்னை மீறி தன் தங்கை எப்படி காதலில் விழுந்தாள் என்று யோசித்துக் கொண்டிருந்த விஜய் அன்று காதலின் நிழல் கூட படாமல் தான் இருந்தான்…… அதனால் அவனுக்கு காதலின் வலிமை தெரியவில்லை…….. அதன் வலியும் தெரியவில்லை…….. அவனுக்கும் காதல் வர வேண்டும்…….. அதன் வலிகளை எப்படியெல்லாம் அவனுக்கு உணர வைக்கலாம் என்று அவனைப் நினைத்து யோசித்துக் கொண்டிருந்த விதி………… அதற்கான முதலடியை அவன் தங்கை மூலமே எடுத்தும் வைத்திருந்தது……………

உணர வைக்க என்பதை விட…….. நரக வேதனையில் துடிக்க வைக்க……… வாய் விட்டு அழக் கூட முடியாமல் அவனைக் கதற வைக்க…… காலம் தன் தன் கரங்களில் விசத்தை தோய்த்துக் காத்துக் கொண்டிருப்பதை உணராமல்………..தன் தங்கையின் திருமண வாழ்க்கையை.. அவள் நினைத்த பிரதீபனுடன் கொண்டு செல்லாமல்…… தன் நண்பன் இளமாறனுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று புரண்டு கொண்டிருந்தான்………

ஒரு பெண்ணிற்கு அண்ணனாக போய்விட்டானே……. மனமே சரி இல்லாதது போல் இருக்க…… உறக்கமும் வரவில்லை………. அப்போது

தன் அறைக் கதவு தட்டப் படும் ஓசை கேட்க எழுந்து போய் கதவைத் திறந்தால்………… அவன் தங்கை ராதாதான்….

உள்ளே வந்தவள்… எதுவும் பேசாமல்……….. வந்த வேகத்திலேயே சட்டென்று அவன் காலில் விழப் போக

அதிர்ச்சியில் திகைத்தாலும் உடனே சுதாரித்தவன் பின்…. அவள் விழும் முன் தன் கைகளில் தாங்கினான் விஜய்

“என்னம்மா இது………. “ என்று தளுதளுத்தவனிடம்

“எனக்கு வேற வழி தெரியலை அண்ணா……….. எனக்கு தீபனைத் தவிர வேற யாரையும் மேரேஜ் பண்ணிக்க பிடிக்கவில்லை அண்ணா………. அதுக்கு நான் உங்க தங்கையாவே இந்த வீட்டில் ஒரு மூலையில் இருந்துறேன் அண்ணா…….” என்று குலுங்கி அழுதவளை ஆதரவாய் பிடித்து சோபாவில் அமர்த்தினான் விஜய்

“ராதா அண்ணனைப் பாரு……… அண்ணா உனக்கு தப்பான வாழ்க்கையை ஏற்படுத்தி தருவேனாமா……… இளாமாறன் உனக்கு எல்லா விததிலும்….. நம் குடும்பத்திற்கும் ஏற்றவன் மா……. புரிஞ்சுக்கோ……….. என்றவன்………. சற்று முன் பாசத்தில் குழைவாய் பேசிய தோரணையை மாற்றி……….. சற்று கடுமையாக

“என் தங்கையாவே இருந்து விடுவாயா…….. நீ அப்டி இருந்தால் கூட அதுவும் நம் குடும்பத்துக்கு அவமானம்தான்………. பிரதீபன மறந்துரு……….. அதுதான் உனக்கும் நல்லது…… நம் குடும்பத்துக்கும் நல்லது……… அந்தப் பையன் குடும்பத்துக்கும் நல்லது…… இதுக்கு மேல எனக்கு எதிரா………. எனக்கு எதிரா கூட இல்லை…………. நம் குடும்பத்துக்கு ஒரு களங்கம் வருகிற மாதிரி ஏதாவது பண்ண நினைத்தாய்……. உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்………. அவனுக்கு ஒரு தங்கை இருக்காள்ள………. அவ இப்போ என் ஆளுங்க கண்காணிப்புல தான் இருக்கா………… இந்த ஒரு வாரத்தில் அவங்க குடும்ப விபரம் எல்லாம் என் கைல……….. நான் பிஸ்னஸ்மேனா எந்த தூரத்திற்கும் இறங்குவேன் என்று தெரியும் உனக்கு……….. இதுவரை……….. தொழில் ரீதியா……… இல்லீகல் வேலைலாம் பண்ணி இருக்கேன்……… முதல் தடவை குடும்பதுக்காக பண்ற மாதிரி சூழ்னிலையில் என்னைத் தள்ளி விட்டுறாத” என்று மிரட்டலில் தொடங்கி கெஞ்சலில் முடிக்க

“அண்ணா” என்று அதிர்ந்த தங்கையிடம்

”புரிஞ்சுக்கோ ராதா……………. உனக்கு பாதுகாப்பு முதலில் அவசியம்………… உனக்கு தெரியாதும்மா ……… நம்ம குடும்ப வாழ்க்கை முறை அவங்க குடும்பத்தோட ஒத்துப் போகாதும்மா………….

நீ நினைச்சுட்டு இருக்க……… சுதந்திரமா வெளியில் சுற்றி வருகிறாய் என்று………… உன்னை ரெண்டு முறை கடத்த கூட ட்ரை பண்ணி இருக்காங்க ராதா…….. அதெல்லாம் உனக்கு தெரியாமலே உன்னை காப்பாற்றி இருக்கோம்……… இளாவைத் திருமணம் செய்தால் எனக்கு உன் பாதுகாப்பை பற்றி எல்லாம் கவலை இல்லை…. ஆனால் நீ சொல்ற வாழ்க்கைல……… அந்தப் பையன் உன்னை அப்டியெல்லாம் வைத்திருக்க மாட்டான்………. எனக்கு எதிரிகள் என்னைச் சுற்றி இருக்காங்க…….. அவங்க எல்லோருக்கும் நீ என்னோட வீக்னெஸ்னு தெரியும்மா……… உன்னைதான் டார்கெட் பண்ணுவாங்க……… நீயே சொல்லு அந்த பையனோட நீ வாழுகிற வாழ்க்கைல எனக்குதான் பயம் அதிகம்……… வேண்டாம் ராதா……….. அவங்களாலும் சமாளிக்க முடியாதும்மா……..” என்று சொன்னவன்

“அவங்க எவ்வளவுதான் படித்திருந்தாலும்……… ஓரளவு வசதியில் இருந்தாலும் நம்ம அளவுக்கு ஏற முடியாது………. நாம தப்பானவங்களவேதான் தெரிவோம் ………… அதேபோல் நாம எந்த அளவுக்கு இறங்கி போனாலும்…….. அவங்களோட ஒத்துப் போக முடியாது……… அவங்களும் நல்லவங்கதான் அவங்க லெவலுக்கு………. நாமளும் நல்லவங்க தான் நம்ம லெவலுக்கு…….. ஆனா அத நிர்ணயிக்கிற அளவுகோலின் அளவுதான் வேறு வேறாய் இருக்கும்………….. ஒரே ஸ்டேட்டஸ் எனும்போது அளவீடு சமமாய் போய்விடும் ராதா……….. வித்தியாசம் பெரிதாக இருக்காது பிரச்சனையும் இருக்காது….புரிஞ்சுக்கோடா” என்று சொல்ல

“என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிப்பேன் அண்ணா” என்று வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தவள் அவன் சொன்ன பிரச்சனை என்ற வார்த்தையைப் பிடித்து…. தட்டுத் தடுமாறி சொன்னாள்….

அவன் முன் பேசுவதற்கு அவளுக்கு வாய் வரவில்லை…… வார்த்தையும் வரவில்லை என்பதுதான் உண்மை………….

நிதானமாய்ப் பார்த்தான்

“சோ ப்ரச்சனை வராதுனு சொல்ல முடியவில்லை தானே உன்னால” என்று இவன் கொக்கி போட……….. அவள் ஏதோ பேச வாய் திறக்க

அவள் வார்த்தைகளை பார்வையாலே தடுத்தவன்………. எழுந்தபடி……..

“ராதா இளமாறன்………. இதில் மாற்றமில்லை………… நீ கிளம்பலாம்” என்றவனிடம் ஒன்றும் சொல்லாமால் தீர்க்கமாய் பார்த்தாள் ராதா கண்ணீரோடு……………….. ”இதுதான் உன் முடிவா என்பது போல”

அவள் சகோதரனும்

“அது முடிவல்ல……… அதுதான் நடக்க வேண்டும்” தன் பார்வையாலே பிடிவாதத்தைக் காட்டினான்………

அதற்கு மேல் அவனிடம் பேசி பிரயோசனமில்லை……… என்பதை உணர்ந்து…… தளர்வாய் எழுந்தாள்தான்…. …….. அதே சமயம் தனக்குள் ஏதோ முடிவெடுத்தவளாய்….. கண்ணீரைத் துடைத்தவள் தன் அறைக்குள் வேகமாய் நுழைந்தாள் ராதா

----------

கிட்டத் தட்ட 2 மணி அளவில் விஜய்க்கு திடிரென்று பயங்கர கனவு வர………… மருத்துவமனை……….. அதில் ஏதோ தெளிவில்லா காட்சிகள்…

உடல் அதிர தூக்கிப் போட…… அதில் விழிப்பு வர…………. முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்ப……… எழுந்து உட்கார்ந்தான் விஜய்…….. இது போல் இதற்கு முன் இரண்டு முறை வந்துள்ளது………….. ஆனால் கனவு என்ன என்பது விழித்தவுடன் ஞாபகத்திற்கு வருவதில்லை…………

அவன் உள்ளுணர்வு ஏதோ சொல்ல……… தன்னை அறியாமல் தன் தங்கையின் அறைக்கு சென்று கதவைத் தட்ட ஆரம்பித்தான்… அது திறக்காமலே போக…… மீண்டும் பலமாய்த் தட்ட அதற்கு பயனே இல்லாமல் போக………. பதட்டம் அதிகமாகி தட்ட ஆரம்பித்தவன் ஓசை கேட்டு வேலை ஆட்கள் வர………. அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் குடும்ப உறுப்பினர்களும் வர.. ஒருவழியாய் கதவை உடைத்து உள்ளே போக… ராதா படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி அலங்கோலமாய்க் கிடந்தாள்……….

அவள் கிடந்த கோலத்தில்……… வேலை ஆட்களை அந்த இடத்திலிருந்து அப்புறப் படுத்திய விஜய்……… தங்கையை அள்ளிக் கொண்டு விரைந்தான் மருத்துவமனைக்கு……….. ஓட்டி செல்லும் போதே அவன் கண்ட கனவு வேறு அவனை இம்சிக்க……… தன் தங்கைக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்று மனம் எங்கும் குற்ற உணர்ச்சியும்……………. வலியும் சூழ பரிதவித்தவன் …. மருத்துவமனையில் அவளைச் சேர்ந்து…. 5 மணி நேர ரண வேதனைக்குப் பிறகு…………… அவளை அபாயக் கட்டத்தில் இருந்து மீட்டெடுத்தான்…………

மகளின் துயரம் தாங்க முடியாத அவர்களின் தாய் கலைச்செல்வி…….. அவள் கணவன் ராகவேந்தரிடம் முறையிட

அதன் பிறகு……………..அவனது தந்தை ராகவேந்தரும்……… தாய் கலைச்செல்வியும் அவனிடம் வந்து பேசி……………. அவள் விரும்பிய பிரதீபனுடனே அவளை திருமணம் செய்ய வைக்க கெஞ்ச………… வேறு வழி இன்றி விஜய் சம்மதித்தான்…………… பிடிக்காமல் இருந்த போதும்………

அவன் சம்மதித்து ஒப்புதல் அளித்தபின்…. ராதாவின் அன்னை………… பிரதீபன் தந்தைக்கு போன் செய்ய……… அவர் வெளியூரில் இருந்ததால்………… தகவல் சென்னையில் இருந்த ஜெயந்திக்கு சொல்லப் பட்டது……………

அடுத்த ஒரு மணி நேரத்தில் ராதாவின் உடல்னிலை சீராக ஆரம்பித்து இருக்க…………… .கண்விழித்தாள் ராதா……..

2 மணியில் இருந்து தவித்த வேதனை முடிவுக்கு வர வீட்டிற்கு போக தீர்மானித்தான் விஜய்………… தன் சக்தியெல்லாம் வடிந்து கிடந்த ராதாவின் நிலை இன்னும் அவனைக் கொல்ல………….. அதைப் பார்க்க முடியாமலே….. வீட்டிற்கு கிளம்பினான் விஜய்……..

தங்கை எடுத்த முடிவில்…. அவள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து………. மீள முடியாமல்………….. விஜய் மனதை அறுக்க…………. தன் தங்கையை நினைத்தபடியே………….. தன் காரில் ஏறி……….. அதை கிளப்ப எத்தனித்தவன் ………… தன் கார் மேல் வந்து மோதிய ஸ்கூட்டியினால் கார் குலுங்க………. காரை நிறுத்தினான்…………..

முதலில் யார் என்ற விதத்தில் பார்க்க

முகத்தில் கண்கள் மட்டும் தெரிய……. துப்பட்டாவினால் முகத்தை மறைத்திருந்தாள் அந்தப் பெண்……… இடித்தவள் ஏதாவது பேசுவாள் என்று அவன் பார்த்திருக்க

இடித்தவளோ………… தான் இடித்த வண்டியையும் பார்க்காமல்……. அவள் டப்பா ஸ்கூட்டரை மட்டும் ஆராய்ந்தாள்..…………. சரி….. அவள் வண்டியை பார்த்தவள்…………. அதன் பிறகாவது தன் காரைக் கவனிப்பாளா என்று பார்க்க……….. இப்போதும் அவள் இடித்த காரினைப் பார்க்காமல்……………. பின்னால் திரும்பிப் பார்க்க……….. ஆவேசமானான் விஜய்………. அதே வேகத்தில்…………. அந்த பெண்ணை நோக்கி இறங்கி வந்தான் கோப முகத்துடன்………

ஆனால்………………….

ஆனால் அவன் பேசுமுன் அவளே ’சாரி’ என்று சொல்லியபடி அவன் மேல் கொஞ்சம் கவனம் வைத்தவள்….. அப்போதும் அவன் காரைக் கவனிக்காமலே அவனைத் தாண்டியபடி அவள் ஸ்கூட்டியில் பறந்தாள்…….. அதை நிறுத்த…..

அவனை விட்டு பறந்து போவதையே குறிக்கோளாய் வைத்திருப்பவள்……… இப்போது மட்டும் நிற்பாளா என்ன………….

தன் காரின் சேதாரத்தைக்கூட கண் கொண்டு பார்க்காமல் போனவளை என்ன செய்யலாம் என்று கோபத்தில் நின்றிருந்தவனின் இதயத்தை கூட சேதாரம் ஆக்க போகிறாள் அந்த மங்கை என்று உணராமல் நின்றிருந்தான் மங்கையின் மன்னன்………

விஜய்… முன்பகுதி நெளிந்த அந்தக் காரை எடுக்க விரும்பாமல்……… தன் வீட்டு டிரைவருக்கு கால் செய்து அவனை வரசொல்லியவன்…………. அடுத்து வேறு யாருக்கோ போன் செய்தான்

”அசோக்…………. எங்க இருக்க………… ” என்று அழைத்த அடுத்த 10 நிமிடத்தில் அவனின் வலது கரமாய் இருக்கும் அசோக் அவனின் ஆட்களோடு வந்து சேர………..

”அதோ அந்த ஸ்கூட்டி இருக்குதுல………… அதை தூக்கி காயலான் கடைக்கு போட ரெடி பண்ணுங்க……………… வந்து தேடட்டும்…….. ஸ்கூட்டி இருந்த அடையாளம் கூடத் தெரியாமல் தேடி அலையட்டும்…. என் காரை இடிச்சுட்டு என்ன ஆச்சுனு கூட பார்க்காமல் தெனாவெட்டா சாரி சொல்லிட்டு போறா………… வருவாள்ள…………. ஸ்கூட்டி என்ன ஆச்சுனு…………. அப்போ இருக்கு அவளுக்கு………“ என்றபடி போனவனிடம் அசோக் ஏதோ சொல்ல முனைய

அவனின் கோபப் பார்வையில் அவன் காரைப் பார்த்தவன்…….. இப்போது பேசினால் அது தனக்கே ஆப்பாகும் என்று உணர்ந்தபடி ஸ்கூட்டியை நோக்கிப் போனான்….

“அவள் கணவனாகிய அவனைக் கூட அடையாளம் தெரியாத நிலைக்கு போகப் போகிறாள்” என்று அவனுக்கு அப்போது யாரும் சொல்ல வில்லை……..

”என்ன ஒரு வித்தியாசம். என்றால் தன் ஸ்கூட்டியைத் தேடி அவள் அலைய வேண்டும் என்று சொன்னான்……… அவனோ தன்னை அவளில் தேடி அலையப் போகிறான் என்பது தான் வித்தியாசம்…….. அதன் பிறகு……………. விஜய் மீண்டும் தங்கை இருந்த அறைக்கு விரைந்தான்…………..

அசோக் தன்னோடு அழைத்து வந்திருந்தவர்களிடம் அந்த ஸ்கூட்டியை கிளப்பச் சொல்ல………… அதற்கான ஏற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டிருக்க

தன் தங்கையின் அறைக்குள் நுழைய முனைந்தவன்…………. அங்கு பிரதீபனின் அன்னையும்………. அவன் தங்கையும் இருப்பதைப் பார்த்து உள்ளே போகப் பிடிக்காமல் காரிடரில் வந்து நின்றான்…………

அதே நேரத்தில்………. பார்த்த மாத்திரத்திலேயே ப்ரதீபனின் தங்கை தான்… தன் கார் மேல் மோதிய பெண் என்பதையும் அவள் அணிந்திருந்த ஆடை மூலமாக உணர்ந்த விஜய்…………. மீண்டும் அசோக்குக்கு போன் செய்தான்…………….

“அசோக் அந்த ஸ்கூட்டிய ஒண்ணும் பண்ண வேண்டாம்………….. பழைய இடத்திலே கொண்டு வந்து வச்சுரு” என்று முடிக்கும் போது……………………. ப்ரதீபனின் தங்கையாகிய தீக்ஷா……….. அவனுக்கு சற்று தள்ளி வந்து நின்றாள்…..

--------------

அசோக் புலம்பியபடியே தீக்ஷாவின் ஸ்கூட்டியை மீண்டும் கொண்டு வந்து வைத்தான்…………. ஆனால் அவள் நிறுத்திய இடத்தில் இல்லாமல் வேறொரு இடத்தில் நிறுத்தியபடி

“அப்பவே நினைத்தேன்………. இது நாம ஒரு வாரமா ஃபாளோ பண்ணிட்டு இருக்கிற பொண்ணோட ஸ்கூட்டினு……….. நம்மள சொல்ல விட்டாதானே……….. அவருக்கு முன்னால யாரும் பேசுனாலே பிடிக்காது நம்ம சாருக்கு” என்று அவள் ஸ்கூட்டியை நிறுத்தியபடியே புலம்பலையும் நிறுத்தினான்………..

யார் முன் எவரும் பேசினாலே ஆகாது என்று அஷோக் புலம்பினானோ……… அவன் முன் பிரதீபனின் தங்கை…… நம் நாயகி…. இல்லையில்லை தீக்ஷா…….. அவன் முன்னே அவன் பேர் சொல்லி பேசியதோட மட்டும் அல்லாமல்……. பட்டப் பேர் சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்………………..

அவள் வந்து நின்றவுடன்… அவளை நேருக்கு நேராய் பார்த்த விஜய்யால் தாங்கவே முடியவில்லை……. அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தவனாய்………… முகத்தை சுழித்தான்……………

கிட்டத்தட்ட காலை 8 மணி…………….. அதுவும் மருத்துவ மனைக்கு……….. தன் தங்கை உயிருக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டு வந்திருந்த அவளின் இலட்சணத்தைப் பார்த்தவனுக்கு…………….. கோபத்தில் மூக்கு விடைத்தது,,,,,,,,,,,

விலை உயர்ந்த சுடிதாரில்………….. ஒப்பனையுடன்………… திருமணத்திற்குப் போவது போல் வந்திருந்தாள்……………….. பிரதீபனின் தங்கை

அது காரை இடித்து விட்டு வந்த போது யாரோ ஒரு பெண் என்று கோபப்பட்டான்,,,,,,,,,,,, அதன் பிறகு…….. பிரதீபனின் தங்கை என்று தெரிந்து ஓரளவு கோபம் தணிந்தான்…………. சொல்லப் போனால்…… ப்ரதீபனின் தங்கை என்ற காரணத்தாலே அவள் ஸ்கூட்டி மீண்டும் உயிர் பெற்று வந்திருந்த்து…………… தன் தங்கை காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தபின்…………… ஓரளவு தீபன் மேலும் கோபம் போயிருக்க………….தீக்ஷாவின் ஸ்கூட்டி தப்பித்திருந்தது………………..

ஆனால் அவள் தன் முன்னால் வந்து நின்ற போதுதான் அவளை நன்றாக கவனித்தான் விஜய்………… இந்தச் சூழ்னிலையில் கூட இவள் இவ்வளவு அலங்காரம் செய்து கொண்டு வந்து இருக்கிறாள்…………. என்று நினைத்த விஜய்க்கு கோபம் பன் மடங்கு வ…..ர தீக்ஷா……………. விஜய் மனதில் மட்டமான இடத்தை அடைந்தாள்…………..

தோழி நிச்சயத்திற்காகத்தான் அவளும் அலங்காரத்தில் வந்திருந்தாள்……… ஜெயந்தியின் அவசரத்தில்………… அப்படியே வந்து விட்டது….. விஜய் உணரவில்லை……….

விஜய் என்ன நினைக்கிறான் என்று உணராமல்…………… அவன் ராதாவின் அண்ணன் என்றெல்லாம் அறியாமல்………… தான் இடித்த காரின் உரிமையாளனோ……….. இல்லை ஓட்டுனரோ……. என்ற நினைவில்….. தீக்க்ஷாவும் அவனைப் பார்த்தபடியே போனில் பேச ஆரம்பிக்க…………

“டேய்…..------------ என்று ஆரம்பித்து…………………

நீயெல்லாம்……… ஒரு ஆளு……….. உன்னை நம்பி இன்னொரு ஆளாடா உனக்கு” என்று அவள் அண்ணனைக் திட்டியபடி…………..அடுத்து ராதாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்து எதிர்முனையில் இருப்பவனை கிழிக்க ஆரம்பிக்க

தானாகவே பின் வாங்கி நகர்ந்தான்………… ஆனால் அவள் பேசப் பேச……….. அவள் வார்த்தைகளில் தீக்‌ஷா அவன் மனதில் கேவலமான இடத்தை அடைந்தாள்……

தன் அண்ணனை இப்படியெல்லாம் ஒரு தங்கை பேசுவாளா……….. நினைக்கும் போதே தன் தங்கை தனக்கு கொடுக்கும் மரியாதை அவன் முன் தோன்ற………. தன் தங்கையை நினைத்து அவனுக்கு கண் கலங்கியது…………. தனக்கு முன் நின்று பேசவே அத்தனை யோசிப்பவள் அவன் தங்கை…………. இவளோ…..????????????? அண்ணனுக்கே இந்த மரியாதை என்றால்……… அவனுக்கு மனைவியாகப் போகும் தன் தங்கையின் மரியாதை………. விஜய் குடும்பத்தில்………. மரியாதை என்பது மிகவும் முக்கியமான ஒன்று………. மனம் கலங்கினான்”

அற்பமாய் தீக்‌ஷாவை அவன் பார்த்தான்……… அடுத்தடுத்து அவள் பேசிய பேச்சில் அவன் அதிர்ந்து யோசித்தபோதே அடுத்து அவள் பேசிய பேச்சில் தன் தங்கையின் தற்போதைய நிலையில் இருந்து………… அது ஏன் என்ற காரணம் வரை அங்கு எந்தவொரு மீடியாவின் துணை இல்லாமலும் காற்றில் அந்த மருத்துவமனை எங்கும்.………… அலைபேசியில் பிரதீபனுக்கும் ஒலிபரப்பப் பட

நாயகியின் நாவண்ணம்……….. நாயகனின் நாதங்களில் அபஸ்வரமாய் சென்றடைந்த்து

……………………

மீண்டும் அவள் உள்ளே போக…………….. தங்கை தேர்ந்த்ரெடுத்த மணவாழ்க்கைக்கு சம்மதம் சொன்னதைக் குறித்து மீண்டும் யோசிக்க ஆரம்பித்தவன்…….. சகோதரர்கள் மற்றும் தந்தை அந்த நேரத்தில் வர………. தன் மனக் குமுறலைக் கொட்ட ஆரம்பித்தான் விஜய்

”அப்பா சத்தியமா சொல்றேன்……………… நம்ம ராதா இந்தக் குடும்பத்தில நல்லாவே இருக்க மாட்டா………… பொண்ணா வளர்த்திருக்காங்க………….. வாயத் திறந்தாலே நாமெல்லாம் காதை மூட வேண்டியதுதான்………………. என்ன பேச்சு பேசுறா…………. என்ன சத்தம்………. அவ அண்ணன்…… அதான் அந்த பிரதீபனுக்கு அவ கொடுத்த மரியாதை……………. கேக்கவே முடியல……….. நேற்று நைட்டில் இருந்து நாம என்ன படுபட்டோம் ராதா உயிர மீட்டெடுக்கிரதுக்குள்ள……. அந்த அவஸ்தை எல்லாம் அவ உணrந்த மாதிரியே இல்ல……. ம்ஹூம் இது சரிப்படாது அப்பா……………. நான் யோசிக்கணும்…………….” என்று விஜய் தீக்‌ஷாவின் பேச்சில் மீண்டும் ஆரம்பித்த இடத்திலே போய் நிற்க…………

அவன் தந்தையும்………… உடன் பிறந்த மற்ற இருவரும்…………. திகிலடைந்தனர்……..

இருந்தும் ராகவேந்தர் கொஞ்சம் சமாளித்து

“நாம் என்னப்பா விஜய் பண்றது………. அவ பிடிவாதம் பிடிக்கிறாளே”

“அப்பா…….. எனக்கு ஒண்ணும் பிடிச்சுக்கலை……… அந்தக் குடும்பம் சரி இல்லையோனு தோணுது……….. ராதா கண்னு முழிக்கிறதுக்குள்ள,,,,,,,,,,,,,, உயிர் போய் வந்துருச்சுப்பா……………. ஆனா அந்தப் பொண்ணு………….. ஃபுல் மேக்கப்போட வந்து நிற்கிறாப்பா……….. இது ஒரு குடும்பம்…………. ச்சேய்….. இந்தக் குடும்பத்துக்குத்தான் மருமகளா போய் ஆகனும்னு நம்ம ராதா விசம் குடிச்சுருக்கா” என்று சொன்னவனுக்கு தீபன் குடும்பம் சரி இல்லாத குடும்பமோ என்று…………….. மனமெங்கும் வேதனை …………………

”பொண்ணையே இப்டி வளர்ந்த்திருந்தா……… பையன……… கேக்கவே வேண்டாம்……….. நம்ம ராதாவுக்கு ஏன்பா இப்டி ஒரு நிலை…………. நம்ம ஸ்டேட்டஸ்க்கும் அவங்களுக்கும் சுத்தமா பொருந்தாது……… நம்ம குடும்பமுறைக்கும் “ என்று சொல்லும் போதே தீக்‌ஷா அவர்களைக் கடந்து செல்ல அவளைப் பின்னால் இருந்தே வெறித்து முறைத்தபடி நின்றான்………பேச்சினை நிறுத்தியபடி……………….

தான் சொன்னதை கேட்டிருப்பாள் என்பதை ஓரளவு அவளின் விறைத்த தோரணையே சொல்ல………… இவளுக்குலாம் ரோசம் வேற வருதாக்கும் என்று வேறு மனதில் நினைத்துக் கொண்டு அற்பமாய்ப் பார்த்தான் விஜய்

அப்போது ராகவேந்தருக்கு…………. ’கலைச்செல்வி’ போன் செய்து ’ஜெயந்தி’ வந்த விசயத்தை சொல்ல……… அவர் மற்ற இரு மகன்களுடன் ஜெயந்தியைச் சந்திக்கச் செல்ல

சுரேந்தர் மட்டும் தன் சகோதரனின் ஆத்திரம் உணர்ந்து அவனை ஆறுதல் படுத்தும் வித்தில் அவன் தோளைப் பற்றிய அழுத்திச் சென்றான்…… தன் நிலையும் அவன் நிலைதான் என்பது போல

அவர்கள் மூவரும் அந்தப் பக்கம் செல்ல….

தங்கள் பெருமையை அவளுக்கு விளக்கி விட வேண்டும் என்று…… அவளை சொடக்குப் போட்டு அழைத்தான் அவன் நின்ற இடத்தில் இருந்தே………

திரும்பாமல் கூட தான் நின்ற இடத்திலேயே…. ஆணி அடித்தால் போல் நின்ற தீக்‌ஷாவை மனமாற அர்சித்தபடி அவளின் முன்னே போக தீர்மானித்தான்

காலம் தோறும் இவன் தான் அவனை நோக்கி போக வேண்டும் என்று இருக்க………….அவள் வருவாளோ……..

அறியாத இளைஞனாய் தானாகவே அவளை நோக்கி தன் முதலடியை எடுத்து வைத்தான் விஜய்……………..

அவள் முன்னே நின்று………… ஆணின் திமிராய்……….. தன் செல்வத்தின் செறுக்குடன் பேச ஆரம்பித்தான்…….

“இந்த லொட லொட பேச்செல்லாம் உங்க வீட்டோட நிறுத்திக்க………… இல்லை அப்டி பேசுறதை நிறுத்த் முடியாதுனா…… இந்த பக்கம் அடிக்கடி வந்துராத…….. எங்களுக்குனு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு………… பெரிய ஆளுங்கள்ளாம் வருவாங்க………… உன் சின்னப் பிள்ளை தனமான பேச்செல்லாம் கேட்கிர மாதிரி ஆகிற போகுது………… ஏற்கனவே உங்களோடலாம் சம்பந்தம் வச்சுக்கிறோம்னு கேவலமா இருக்கு……… எல்லாம் நேரம்……” என்றவன் அதிகம் பேசமால்

“சொன்னது கேட்டுச்சா………….. இப்போ போகலாம்…என்று திரும்பி மீண்டும் ராதாவின் அறை நோக்கிப் போக

அவள் அடங்கிப் போவாள்… அல்லது அழுது வடிவாள் என்று நினைத்தவனின் காதுகளில் அவன் போட்ட சொடக்கின் சத்தத்தை விட ………… கைத்தட்டலின் ஒலி வீரியாமாய் வர…………அதன் பின்னாலே அவன் பெயரும்…………….. ஏலமிடப் பட………… ஏகத்துக்கும் பொறுமை இழந்தவனின்………. கண்களில் ஆவேசமும் நிரம்பி வழிய………. திரும்பிப் பார்த்தான் விஜய்…….

தன் குடும்பப் பெருமையை அவளுக்கு சொல்லி…. அவள் யார்………. என்பதை புரியவைத்து…………….. அவளைக் கேவலப்படுத்த நினைத்த விஜயேந்தரிடமே…… அவன் தங்கை செய்த காரியத்தை வைத்தே…………. தன் பெருமையை அவனிடம் நிலை நாட்டி………… அவனைக் கூனிக் குறுகவும் வைத்தாள்……….. அவனின் நாயகி…………………

1,385 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

1 Comment


மீண்டும் பழைய விஷயங்கள்.... ஆனால் வேறொரு கண்ணோட்டத்தில்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page