top of page

அன்பே! நீ இன்றி!! 17

அத்தியாயம் 17:

தீக்‌ஷாவின் புகைப்படத்தின் முன் நின்ற விஜய்யின் அருகில் கோபத்தோடு வந்தான்தான் தீபன்………….. ஆனால் அவன் முகத்தைப் பார்த்தவனுக்கு…………. வந்த கோபம் எல்லாம் போய் விட………. இப்போது தீபனுக்கும் கண்கள் கலங்கியது………..

விஜய் தன் கண்ணீரை…… அவமானத்தை தனக்குள் அடக்கிக் கொண்டிருந்தது அவன் கண்களிலே தெரிந்தது….. யாரையும் அவன் நிமிர்ந்து கூட பார்க்க வில்லை……… பார்க்கவும் விரும்பவில்லை…………… அவன் அடக்கிய கோபமும்… துக்கமும்……. வருத்தமும்…… அவமானமும் அவன் கண்களில் சிவப்பைக் கொண்டு வர…………… அதை எல்லாம்….. அந்த புகைப்படத்தினுள் சிரித்துக் கொண்டிருந்த தீக்‌ஷாவின் புன்னகையில் கரைத்து விடும் ஒரே எண்ணத்தில் இருந்தான்………. ஆனால் அவனைச் சுற்றி இருந்த மற்றவர்கள் யாரும் தான் விட வில்லை…..

தீபன் அவன் நிலையைத் தாங்க முடியாமல்………… கோபத்தைக் காட்டுவதற்குப் பதில்……… அவனிடம் மன்றாட ஆரம்பித்தான்………..

“இந்த போட்டோவை பார்த்துட்டே வாழ்க்கையை ஓட்டிடலாம்னு முடிவெடுத்துட்டீங்களா விஜய்……………….. இதுக்கு மேல நான் அமைதியா இருந்தேன் என்றால்……….. என் தங்கை” என்ற போதே தீபனைப் போலவே மற்ற அனைவரும் ஆளாளுக்குப் பேச ஆரம்பிக்க…….. விஜய் தீபனிடம் கைகாட்டி நிறுத்தினான்…. ஆனால் யார் முகத்தையும் பார்க்காமல்…………...புகைப்டத்தில் இருந்த தீக்‌ஷாவைப் பார்த்தபடியே

“யாரும் எதுவும் பேச வேண்டாம்….. இப்போ நடந்த விசயத்தில் என்னை விட அதிகமா வேற யாருக்கும் துக்கம் இல்லை……….. அவமானமும் இல்லை………. அதுனால……. அவங்கவங்க வேலையைப் பாருங்க….. இது எனக்கும் அவளுக்கு இடையிலான வாழ்க்கைப் போராட்டம்…………. அதன் அடுத்த கட்ட சோதனை……….. இதிலும் நாங்க ரெண்டு பேரும் ஜெயிப்போம்…………… அவ போகட்டும்……” என்றவன் சுரேந்தரை மட்டும் பார்த்துச் சொன்னான்

“அந்த சாரகேஷ் பாவம் டா……….. ஏற்கனவே இவ கிட்ட லெட்டர் கொடுத்து ஏமாந்திருக்கான்………… இப்போ மறுபடியும் ஏமாறப் போகிறான்…………. அந்த வருத்தம் தான் எனக்கு………….. அவ தனியா இருந்தாலே அவ மனசு என்னை நினைத்து ஏங்க ஆரம்பிச்சுரும்….…. அது அவனுக்கே கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுரும்…… அவனே கொண்டு வந்து விடுவான்…… அவன் டாக்டர்ன்றதினால் அவளோட நிலை அவனுக்கும் புரியும்….. ஏதாவது ஆனால் கூட அவன் பார்த்துக் கொள்வான்…”

சற்று நிறுத்திய விஜய்.…..

”அவன் கிட்ட நானே பேசனும்னு இருந்தேன்…. அதுக்குள்ள….. இப்படி நடந்துருச்சு”

என்று அவன் சொன்ன போது அவனை வருத்தமாகவும் அதே நேரத்தில் அவன் சொல்வதும் உண்மைதான் என்பது போல் ………….. அவன் ஒட்டு மொத்தக் குடும்பமும்…………. அவனையே கலக்கத்துடன் பார்க்க

அவர்கள் அனைவரும் பார்ப்பதை உணர்ந்தவன்

“இன்னைக்கு சாயங்காலமே திரும்பி வருவா………..” என்றபடி………… நான் கிளம்புகிறேன் என்றபோது

சுரேந்தர் அவன் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்…… அவன் கைகளை பிடித்த சுரேந்தர்………. விஜய்யின் கைகளின் நடுக்கம் உணர….

“அண்ணா …………. ப்ளீஸ் இப்போ வெளிய போக வேண்டாம்………….. நீங்க ரொம்ப டிஸ்டர்பா இருக்கீங்க………….”. என்ற போது………………

”நான் ஏண்டா டென்சனா இருக்கணும்……….. என்னை விடுடா……… நான் டென்சனாலாம் இல்லைடா…. என்னைப் புரிஞ்சுக்கோ” என்றவனை………..

“தீக்‌ஷாகிட்ட உண்மையை சொல்லிடலாம் அண்ணா…………. சத்தியமா தீக்‌ஷா புரிஞ்சுப்பா…………”

“என்னது புரிஞ்சுப்பாளா………….” என்றவன்…………..

”இவன்தான் உன் புருசன்னு நீங்க எல்லாரும் அடையாளம் காட்டி………….. என்னோட வாழ வைக்கப் போறீங்களா…………..”

“அது சரி….. இவன் உன் புருசன்னு அடையாளம் காட்டுவீங்க…. அவளும் புரிஞ்சுப்பாதான்…… ஆனா அவளோட ’இந்தர்’னு உங்க யாராலாவது உணர வைக்க முடியுமா… சொல்லுங்க….. என்னை அவளோட ’இந்தர்’னு இங்க நிற்கிறவங்க ஒருத்தவங்களால உணர வைக்க முடியுமா….. அது முடியும்னா……….. தாராளமா சொல்லுங்க…… …“ என்று அத்தனை பேரையும் நோக்கி ஆக்ரோசமாய்க் கேள்வி கேட்டவன்…………… சற்று அமைதியாகி

“முடியாதுல………… அது என்னால மட்டும் தானே முடியும்……. அப்போ யாரும் பேசக் கூடாது……” என்றபடி ஹாலில் இருந்த அனைவரின் மேலும் பார்வையைச் சுழள விட்டவன்…..

“என்ன இங்க நடந்திருச்சுனு……. இப்படி இருக்கீங்க……………… அவ வருவா……….. வரும்போது அவகிட்ட இங்க யாராவது ஏதாவது சொன்னீங்க” என்று எச்சரித்தபடி

“போய் அவங்கவங்க வேலையை பாருங்க…………… ” என்று அவர்களைத் தாண்டிப் போனவன் நேற்று இரவும் சாப்பிடவில்லை…. காலையிலும் சாப்பிட வில்லை என்பதால் சற்று தள்ளாட … அதைப் பார்த்த சுரேந்தர்… ராதாவுக்கு சமிக்கை செய்ய…. அவளும் அதை புரிந்து கொண்டு ராதா உள்ளே சென்றாள்…..

”அண்ணா ப்ளீஸ்………..இங்கேயே இருங்கண்ணா” என்று சுரேந்தர் அவன் முன் கெஞ்சினான்……………

”நான் என் ரூமுக்கு போகணும்டா….. இங்க எல்லாரும் என்னைப் பரிதாபமா பார்த்தே கொல்றீங்கடா……” என்ற போதே அவன் குரலில் பிசிறடிக்க ஆரம்பித்து இருந்தது…..

ஒருபுறம் ஜெயந்தி தீக்‌ஷாவின் புகைப்படம் முன் அழுது கொண்டிருக்க…………. அவள் முன் வந்தான் விஜய்………..

“ஒரு விசயம் நடக்கனும்னு இருந்தால் அது கண்டிப்பா நடக்கும் அத்தை……………. அவளுக்கு உடம்பு சரியில்லைனு கூசாம………. அவ மனசு என்ன பாடுபடும்னு உணராம சொன்னீங்களே அத்தை…………. நீங்க சொல்லியும் இப்போ நடந்ததை தடுத்து நிறுத்த முடிஞ்சதா…..” என்று கேள்விகளாலும்….. பார்வைகளாலும் ஜெயந்தியைக் குதறியவன்………….

”ஆனால் என்னோட மனசு அவளை….. என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும் அத்தை……………….. ” என்றபோதே கலைசெல்வி……………

“நல்ல காதல் டா………….. உன்னை இப்படி பைத்தியக்காரனா சுத்த வைக்கப் போகுதுனு முன்னாடியே தெரிஞ்சுருந்தா…………… தீக்‌ஷாவை நம்ம வீட்டு மருமகளா எடுக்கலாம்னு கேட்டு உன் முன்னாடி நின்றுக்க மாட்டேண்டா” என்று அழ ஆரம்பிக்க………….

“ச்சேய்…….. ஆளாளுக்கு அழுது என்னைக் கொல்றீங்க…………… என்னை விட்டுத் தொலைங்க…” என்று வேகமாய் வெளியேற

அப்போது…….. ராதா கையில் பால் டம்ளருடன் வந்தாள்………..

“அண்ணா இதைக் குடிங்க…… அதுக்கப்புறம் போகலாம்… “ என்ற போதே………. அவள் கை நடுங்க……….. அதைப் பார்த்தவன் அவளின் செயலைப் புரிந்தவன் போல்………….. நக்கலாய் ஒரு பார்வை பார்த்தவன்……. பின் கண்கள் உறுத்து அவளை அந்தக் குவளையைத் தட்டி விட்டான்…………..

“அதுல மாத்திரையப் போட்ருக்கதானே…. இதுக்கு பயந்துட்டு தானே உங்க கையால சாப்பிடாமல் …..ரொம்ப நாளா காத்தமுத்து,முருகேசன் கொண்டு வருகிற சாப்பாட்டைக் சாப்பிட்டு வந்தேன்………… மறுபடியும் அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டுமா ” என்று உறுமியவனை……. அத்தனை பேரும் பரிதாபமாய்ப் பார்க்க…………..

“ஏன் இப்டி பார்க்கிறீங்க……….. நான் பைத்தியம்லாம் இல்லை…….. எனக்கு என் ’தீக்’ என்று ஆரம்பித்தவன் நிறுத்தி விட்டு…………. புகைப்படத்தைக் காட்டியவன்

”இதோ சிரிச்சுட்டே இருக்காள்ள…….. அவ நினைப்புதான் எனக்கு இன்னைக்கு ஆறுதல்…….. மறக்க வச்சு தூங்க வச்சுடாதீங்க” என்றபடி கதவின் அருகில் சென்று………….

“யாராவது பார்வதி வீட்டுக்கு போய் அவள பார்க்கனும்லாம் நினைக்காதீங்க……….. இன்னைக்கே வருவா அவ…………. எனக்கு அது தெரியும்…………. என் காதல் மேல அத்தனை நம்பிக்கை எனக்கு…………….. அவளுக்கும் தான்……. என்னை ஏமாத்த மாட்டா அது உங்க எல்லாருக்கும் தெரியும்………………. பார்த்தவங்கதானே நீங்கள்ளாம்………. அப்புறம் ஏன் ஃபீல் பண்றீங்க………… இந்த சாரகேஷ்லாம அவளுக்கு தூசு………….. நானே கொஞ்சம் தடுமாறினேன் தான்……. சாரகேசைப் பார்த்து…….. இன்னிக்கு அவ என்னைத் திரும்பிப் பார்த்தாள்ள அதுவே அவ மனசு என்னை விட்டு எங்கேயும் போகதுன்னு சொல்லிருச்சு……… வருவா……… என்று வழக்கமாய்ப் பேசும் ஒற்றை வரி வார்த்தைகளை எல்லாம் விட்டு விட்டு……. அவன் மனைவி தீக்‌ஷா போல் பக்கம் பக்கமாய்ப் பேசி விட்டு….. வெளியே கிளம்ப…………. குடும்பத்தில் உள்ள் மற்ற அனைவரும் வழக்கம் போல் வாயடைத்து நின்றனர்………..

சுரேந்தர் மட்டும் தன் காரை எடுத்துக் கொண்டு….. அவனைத் தொடர்ந்தபடி போக ஆரம்பித்தான்…..

------------------

தீக்‌ஷா காரில் அமைதியாக வர…………. பார்வதி அவளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள்………… அவளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளின் எண்ணம் தாய், தந்தை…….. தன் அண்ணா, அண்ணி….. சுனந்தா என அவர்களைச் சுற்றியே இருக்க…………. ஒரு வேகத்தில்…… அவர்களை எல்லாம் விட்டு வந்து விட்டோமே…….. அண்ணியை வேறு மரியாதை இல்லாமல் பேசி……. ’ச்சேய்’……… என்று தன்னைத் தானே நொந்துகொண்டும்….. மனம் முழுக்க துக்கப்பட்டும் வந்து கொண்டிருந்தவளுக்கு……… தன் அண்ணி ராதாவை பாசத்துடன் அணைத்திருந்த விஜய்யும் ஞாபகம் வர………. ராதா மேல் மிகவும் பாசம் கொண்டவன் தான் விஜய்………….. ஆனால் சற்று விலகியே நிற்பான்………. இன்று அவனின் மார்பில் சாய்ந்து அழுத ராதாவை நினைத்துப் பார்த்தவளுக்கு……………. அதுவே கண்களில் நிற்க……… இப்போது விஜய்யின் முகம் மனக்கண்ணில் தோன்ற……….. பார்வதியுடன் பேசுவதை நிறுத்தியபடி……………. தனக்குள் சுழலத் தொடங்க ஆரம்பித்தாள்……………

அவளின் முக மாற்றத்தை உணர்ந்த பார்வதி அவள் முகத்தைத் தன்புறம் திருப்பி பேச ஆரம்பிக்க….. தீக்‌ஷாவும் ஏதோ பேசுகிறேன் என்ற பேருக்கு…………. அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டு வந்தாள்………

சாரகேஷ் மனமோ…………….. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ என்று தோன்ற… இன்னொன்றும் தோன்றியது….. தீக்‌ஷா அவனை விரும்பி வீட்டை விட்டு வெளியில் வரவில்லை….. தன்னை…. அவள் தோழியின் அண்ணனை அவமானப் படுத்தி விட்டார்கள்..என்ற கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி வந்திருக்கிறாள் என்பதும் புரியாமல் இல்லை………..

தேவகியோ தன் பிள்ளைகள் இருவர் மீதும் கடுங்கோபத்தில் வந்து கொண்டிருந்தாள்…………. கார் வீட்டு வாசலில் நின்ற போது……… யாரிடமும் எதுவும் பேசாமல் உள்ளே நுழையும் போதே……. அவள் பெற்ற பிள்ளைகள் இருவரும் அன்னையின் கோபம் உணராமல் இல்லை….. பார்வதி தன் அன்னையின் கோபத்தில் தயக்கமாய் தன் அண்ணனைப் பார்க்க……..

அதைப் பார்த்த சாரகெஷ் பார்வதியிடம்…

“நான் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன்…………. நீ தீக்‌ஷாவை உள்ள கூட்டிட்டு போ” என்று வேகமாய் உள்ளே நுழைந்தான்……

தீக்‌ஷா இதை எல்லாம் கவனிக்கும் எண்ணத்திலே இல்லை……………… உள்ளே அழைத்த தன் தோழியிடம் எதுவும் பேசாமலே உள்ளே சென்றாள்………… அவள் நினைவுகள் எல்லாம் இங்கேயே இல்லை………… தன் வீட்டிலேயே இருக்க…………….. தன்னை யாருமே ஏன் தடுக்க வில்லை…………….. தடுக்க வந்த தன் அம்மாவையும் ஏதோ சொல்லி நிறுத்தி விட்டானே என்ற இடத்தில் இருக்க…………… தீக்‌ஷாவுக்கு விஜய்யோடு முதன் முதலில் பேசிய விதம் ஞாபகத்துக்கு வர…………அந்த எண்ணத்திலேயே உள்ளே சென்றவளை பார்வதி அவளது அறையினுள் அமர வைத்து விட்டு தன் அண்ணனையும் அம்மாவையும் பார்க்கச் சென்றாள்…………

அங்கு சாரகேஷ் தேவகியிடம்

“அம்மா உங்க கோபம் புரியுதும்மா…………. நான் அவசரப்பட்டு விட்டேன் தான்….. என்னைச் சுத்தி சுத்தி வந்து ஒரு பொண்ணு விரும்பறேனு சொன்னப்ப கூட….. நான் தடுமாறாமல்….. தங்கைக்காக…… நம் குடும்பத்துக்காக……. நீங்க சொல்ற பொண்ணை திருமணம் செய்து……. பார்வதிக்கு அண்ணா ஸ்தானத்தில் மட்டும் இல்லாமல் அப்பா ஸ்தானத்திலயும் இருந்து…… அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று……… நெனச்சுருந்தேன் மா…….. ஆனால் இன்னைக்கு அவசரப்பட்டு தீக்‌ஷா வீட்ல பிரச்சனை பண்ணி……. நான் எதையுமே யோசிக்காமல்…….. ச்சேய்……………. ஒரு தங்கைக்கு அண்ணனா இருந்தும்…………… தப்பு பண்ணிட்டேன்மா……………” என்று கலங்க………..

அப்போது பார்வதியும் உள்ளே வந்தாள்….

“அய்யோ சாரகேஷ்…………….. அம்மாவுக்கு அந்த பொண்ணு வந்ததுலாம் கோபம் இல்லைடா…………. நீ அந்தப் பொண்ணுக்காக இவ்ளோ பேசியும் அந்தப் பொண்ணு உன்னை விரும்பி வரலையேன்ற ஆத்திரம் தாண்டா எனக்கு……………….. உன்னை விரும்பறேன்னு ஒரு வார்த்தை சொல்லலைடா அந்தப் பொண்ணு………… அதுதாண்டா எனக்கு கவலை…………”. என்ற போது…………. பார்வதி

“அம்மா…………….. இந்தப் பிரச்சனையைப் பற்றி அப்புறம் பேசலாமே…………….”

“அண்ணா….. அம்மா உன்கிட்ட பிரச்சனை பண்றாங்களானு பார்க்க வந்தேன்…………. அம்மாகிட்ட பேசிட்டு சீக்கிரம் வா…… தீக்‌ஷா தனியா இருக்கா…………….. அவளைத் தனியா விட மாட்டாங்க அவங்க வீட்ல……………” என்று மீண்டும் தன் அறைக்கு நுழைய…………… அங்கு முழங்காலில் முகத்தை புதைத்தபடி……. குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்…………… தீக்‌ஷா……

பதறிப் போன பார்வதி……………. தீக்‌ஷா தீக்‌ஷா என்று அவள் அருகில் அமர…………….

“நான் தப்பு பண்ணிட்டேன் பாரு……. தப்பு பண்ணிட்டேன்…………. யாரைப் பற்றியும் யோசிக்காமல் வீட்டை விட்டு வந்துட்டேனே…………… என்னை யாருமே ஏண்டி தடுத்து நிறுத்தலை………….. நான் தேவை இல்லைனு நினச்சுட்டாங்களா…………. நீ இப்டி பண்ணியிருந்தா உங்க அம்மா உன்னை இந்த மாதிரி விட்ருப்பாங்களா பார்வதி……………..” என்றவள் விசும்பலுடன்

“என் அம்மா தடுத்த நிறுத்த வந்தாங்கடி…………….. அவன் ஏதோ சொல்லி நிறுத்தி வச்சுட்டான் பாரு……………… என்னை பழிவாங்கிட்டான்………………… நான் அவன் தங்கச்சியை ஒரு நாள் கேவலப்படுத்தி பேசினேன்………… ரொம்ப திமிரா சொன்னேன்…… காதலிச்சவனுக்காக குடும்பத்தையெல்லாம் தூக்கி எறியற அளவுக்கு எங்க வீட்ல என்னை வளர்க்கலேனு சொன்னேண்டி……………….. இன்னைக்கு நானே…………….” என்றவள்………….. இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தவள்…..

“என்னைப் பழி வாங்கிட்டாண்டி………………“ என்று தோழியின் மடியில் முகம் புதைத்து அழுதவள்……………. பின் தானாகவே…………. சமாதானமானவளாய்……. தன் கண்களைத் துடைத்தபடி……

“வீட்டுக்கு போகனும் பார்வதி……………. ஏதோ ஒரு வேகத்தில் வந்துட்டேன்.…. உன் அண்ணனை அவமானப் படுத்திட்டாங்கனு…… ஆனா அவர் மேல எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை ’பாரு’…… ஆனாலும் எங்க வீட்டை விட்டு என்னால இருக்க முடியல…… அண்ணாகிட்ட ரொம்ப பேசிட்டேன்…. அண்ணியவும்………. அவங்க எவ்வளவு நல்லவங்க தெரியுமா……….” என்று சொல்ல பார்வதி அதிர்ந்து அவளைப் பார்க்க…. அப்போது சாரகேசும்,தேவகியும் உள்ளே வர…… அவள் தன் அண்ணனைப் பார்க்க………..

அவன் தீக்‌ஷாவிடம்…………… அவளைப் புரிந்தவனாய்…..

”தீக்‌ஷா….. எனக்குத் தெரியும்….. உனக்கு என் மேல எந்த ஈடுபாடும் இல்லைனும் புரியுது…… நீ எதை நினைத்தும் குழம்பாதே…… ” என்றவனிடம் கை கூப்பினாள் தீக்‌ஷா

“ரொம்ப நன்றி………….. என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு………… பாரு அண்ணா………… நீங்க எப்போதுமே என் மேல அக்கறையாத்தான் இருக்கீங்க…. இருந்துருக்கீங்க….. ஆனா…………. ஏன்னு தெரியல……….. அன்னைக்கும் நீங்க சொன்னப்ப என்னால ஏத்துக்க முடியலை………….. இன்னைக்கு என் வீட்டுக்கே வந்து பொண்ணு கேட்கும் போது அதை ஏற்க முடியவில்லை…… அன்று முடிவெடுக்க தைரியம் இல்லை…. இன்று முடிவெடுக்க தகுதியில்லை…………..” என்று சொன்னவள்……

“வீட்ல எல்லாரும் உங்களை அவமானப் படுத்தினதுக்கு…… சாரி ’பாரு அண்ணா’………. “ என்று சொல்லி சற்றுத் தடுமாறியவளாய்….. தேவகியைப் பார்த்தவள்……

“உங்க பையன் என்னைப் பிடிச்சுருக்குனு சொல்லியும்…… நான் மறுத்ததுக்கு சாரிம்மா” என்ற படி தேவகியிடமும் சாரி கேட்க

தேவகி எதுவும் பேசாமல் சென்று விட்டாள்…….. தன் மகனை வேண்டாம் என்று சொன்னதாலோ என்னவோ……….. அவளுக்கு தீக்‌ஷா மேல் கொஞ்சம் கோபம் வேறு வர….. அங்கு நிற்காமல் போய் விட்டாள்………………

பார்வதிக்குதான் இப்போது தீக்‌ஷா மேல் கோபம் கோபமாய் வந்தது………

“அந்த ராகேஷ்க்குதான் உன்னைப் பிடிக்கலை….. அதுனால் உனக்கும் அவனைப் பிடிக்கவில்லை….. என் அண்ணன் மேலயும் உனக்கு ஏண்டி காதல் வரலை…. தைரியம் இல்லை தகுதி இல்லைனு டைலாக் மட்டும் பேசுற……….. உனக்கு என்ன தகுதி இல்லை……… அது எல்லாம் இருக்கு…….” என்று எரிந்து விழ… தீக்‌ஷா அவளுக்கு புரிய வைக்கும் விதமாய்

”ராகேசுக்கு……….. என்னை ஏன் பிடிக்கலைனா………… அவங்க வீட்டுக்கு தெரியாமல்….. அவன் வேறொரு பொண்ணை மேரேஜ் பண்ணிட்டாண்டி….. இந்தியாக்கு மீண்டும் வந்ததே அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு போகத்தான்……….. அது கூட அவன் லெட்டர்ல எழுதி இருந்ததினால் எனக்குத் தெரிஞ்சது என்றவள்…… நிமிர்ந்து உட்கார்ந்து…………….. முகம் மலர்ந்தவளாய்………. தன்னை மீறி பேச ஆரம்பித்தாள்

“நான் கதவைத் திறக்காமல் இந்த நிச்சயத்தை…... அவனோட நடக்க இருந்த திருமணத்தை எப்படி நிறுத்தலாம்னு யோசனையில் இருக்கும் போது…. ராகேஷோட லெட்டர் பார்த்து எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா…….. ….சந்தோஷத்தில்……….குத்தாட்டம் போடாத குறையா உட்கார்ந்திருக்கேன்….. ராகேஷ் போய்ட்டான்னு நான் ஏதாவது செய்துக்கிட்டேனோனு எங்க வீட்ல அத்தனை பேரும் பயந்துட்டாங்க தெரியுமா” என்று கலகலப்பாய் சிரிக்க ஆரம்பித்தவளை………

சற்றும் முன் கவலையோடு இருந்தவளா இவள் …. என்று பார்வதி வித்தியாசமாய்ப் பார்க்க……. சாரகேஷ் அவளுடைய முக மாறுதல்களை கவனித்துக் கொண்டே இருந்தான் தான்………….. ராகேஷுடனான நிச்சயம் அன்று தான் அவள் வாழ்க்கையின் முக்கிய திருப்பம் நடந்திருக்கிறது…………. அதை அவள் மறந்து விட்டாள்…………. என்பது இருவருக்கும் புரிய அவள் பேச்சில் இன்னும் கூர்மையாக கவனம் வைத்தனர்…………

தீக்‌ஷாவோ அவர்களை எல்லாம் பார்க்காமல் பேசிக்கொண்டே போனாள்….

”எல்லாருக்கும் மேல என் இந்தர்……… நானே அவனை நினைச்சுக்கிட்டு… அவனை எப்படி சம்மதிக்க வைக்கிறதுனு……. யோசிச்சுக்கிட்டு இருக்கேன்….. நான் செத்துக் கித்து போய்டுவேனோனு தலைவர் பயந்து….. பால்கனி வழியா ஏறி என்னைக் காப்பாத்த வந்தாரு….” என்று நிறுத்தியவள்…..

உதடுகள் துடிக்க சற்று முன் இருந்த சந்தோசம் மாறி….. எங்கோ பார்த்தவளாய்

”ஆனால் என் இந்தரை ஏன் யாரும் காப்பாற்ற வில்லை…. அவர் ஏன் எனக்காக வாழனும்னு நினைக்கலை….. என்னை விட்டு ஏன் போனாரு…… அவர் இல்லாமல் நான் இருக்க மாட்டேனு அவருக்குத் தெரியும்…… நான் ராகேஷ் கூட சந்தோசமா வாழ்ந்தா போதும்னு………. என் மனசு கஷ்டம்படக்கூடாதுனு……. அவர் என்னை காதலித்ததையே மறச்சு வச்சுருந்தவர்……………” என்று சொல்லும் போதே……….. அவள் வார்த்தைகள் நின்று…………. விழிகள் சொருகி…………. பார்வதி மேலேயே மீண்டும் சரியத் தொடங்கினாள்………

“அண்ணா…………ஏதாவது பண்ணுண்ணா………..” என்ற பார்வதி படபடப்பும், கலவரமும் ஆக………

சாரகேஷ் மருத்துவனாய் மாறி அவளுக்கான மருத்துவமுறையை மேற்கொண்டவன்…………. அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோமா…………… இல்லை…… ஒரு அரை மணி நேரம் பார்ப்போமா…………. என்று யோசித்தபடி இருக்க…………..

பார்வதி அழுது கொண்டிருந்தாள்………

“அண்ணா………………. இவ இப்டி பேசுறாண்ணா…………. விஜய்யை இவ லவ் பண்ணினாளா…………. ஏதேதோ சொல்கிறாளே…………………. “ என்று துடித்தவள்…………..

தன் தோழியின் மன நிலை இந்த அளவு மோசமாய்ப் பாதிக்கப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்று மருக ஆரம்பித்தாள் கொண்டிருந்தாள்…………

“விஜய் மேல் இந்த அளவு காதலா இவளுக்கு………… அவருக்கும் தான்………… இன்று இவள் பின்னால் நிழலாகத் தொடரும் விஜய்யை நினைத்துப் பார்த்த பார்வதிக்கு பாவமாக இருந்தது…………. இருவருக்கும் திருமணம் கூட ஆகி விட்டது போல………………. தீக்‌ஷாதான் எல்லாவற்றையும் மறந்து விட்டாள் போல…………. தோழியைப் பார்த்த பார்வதிக்கு அழுகை இன்னும் வர………… எப்படி இருந்தவள்……………… தான் யார்……… தனக்கு நடந்தது என்ன என்று கூட அறியாமல் வாழும் வாழ்க்கையை நினைத்து மனம் தாங்க வில்லை………… இவளிடம் ஏன் மறைக்கிறார்கள்…… ஏதாவது காரணம் இருக்குமோ…. இன்று தாங்கள் வேறு குட்டையைக் குழப்பி வந்து விட்டோமே என்றெல்லாம் யோசித்தவள்………… விஜய்க்கு உடனே போன் செய்ய வேண்டும்………. இதற்கு மேல் தாமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தவளாய்……………வேகமாய் போனை எடுத்து விஜய்க்கு போன் செய்ய ஆரம்பிக்கவும்……….. அவர்கள் வீட்டு அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருக்க………. போன் செய்வதை நிறுத்திவிட்டு………. கதவைத் திறக்கப் போனாள் பார்வதி……………..

-----------------------------

அதே நேரம் வேகமாய் காரை ஓட்டி வந்த விஜய்………………. தன் வீட்டின் கார் ஷெட்டில் காரை நிறுத்தியவன்………….. அதே வேகத்தில் இறங்கியவன்….. அருகில் இருந்த ஸ்கூட்டியைப் பார்க்க……….. வேகம் தானாகவே மட்டுப்பட்ட்து…………. அதன் அருகே வந்தவன்…………. அதைப் பார்த்தபடியே இருந்தான் சில நிமிடங்கள்…………

அதில் இருந்த ’தீக்‌ஷா விஜய்’……………. என்ற வார்த்தைகள் அவனைப் பார்த்து அழகாய் புன்னகைக்க…………… குனிந்து………….. தன் மனைவியின் பெயர் இருந்த இடத்தில் தன் இதழ்களைப் பதித்தான்……………. தன் மனைவியைப் போல………….

அதற்கு மேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை…………… வேக வேகமாய் அடியெடுத்து வைத்து…………….. தன் அறைக்குள் நுழைந்தவன்……………. அங்கு தன்னோடு புன்முறுவலாய் இணைந்து சிரித்துக் கொண்டிருந்த தீக்‌ஷாவைப் பார்த்தவனுக்கு………. அதற்கு மேல் தன் வேதனையை மறைத்து வைக்க் முடியவில்லை…………….. அவள் நிழலை நோக்கி………………………

“ஏண்டி என்னை விட்டுட்டு போன………………… எல்லாத்தையும் விளையாட்டா நினைப்பியேடி…………….. என் காதலை மட்டும் ஏண்டி உன் உயிரா நினைச்ச………….. அப்டி என்னடி என் மேல உனக்கு காதல்……………… ”

என்றபடி குலுங்கி அழ ஆரம்பித்தவனை அவன் மனைவியின் நிழலால் நிறுத்த முடியுமா என்ன????????

அவன் அழுவதை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் தீக்‌ஷா விஜயேந்தர்………………

தானும் அவளும் சந்தோசமாய் கழித்திருந்த அந்த அறையில்………….. தன்னை மட்டும் தனியே…………….. கண்ணீரில்……………. தவிக்க விட்டுப் போனவளை நினைத்து………………………. கண்ணீர் விட ஆரம்பித்தவன்…………………….. சற்று நேரத்தில்

”நான் அழமாட்டேன்டி ………… நீ அழாம என்னை தவிக்க விட்டேல…………… உன் இந்தர் அழ மாட்டேண்டி…………” என்று தனக்குத் தானே புலம்பியவனாய்………….

தனது அறையில் தீக்‌ஷாவும்………… அவனுமாய் இருந்த புகைப்படத்தில்….. தன் நிழலின் மேல் சாய்ந்து…… தன் நிஜத்தை அவள் நிழலோடு இணைந்து சில நிமிடங்கள் நின்றவன்……………

தன் எதிரே அவள் மட்டும் இருந்த புகைப்படத்தில் கண் பதித்தான்…………….. அவள் கண்ணோடு கலந்த அவன்…………. அவனுக்கும்……….. அவளுக்குமான கடந்த காலத்தில் தன்னைத் தொலைத்து……………. அதனோடும் கலக்க…………. அவன் நினைவுகள்…………. அவனை அவனின் முந்தைய 2 வருடத்திற்கு இழுத்துச் சென்றது……………………..

-----------------------

பணம் படைத்தவர்கள் மட்டுமே கூடும் அந்த உயர்தர ஹோட்டலின்…………… பார் பகுதியில் விஜயேந்தர், சுரேந்தர் மற்றும் இளமாறன் மூவரும் ஒரு மேசையில் அமர்ந்திருந்தனர்……………

இளமாறன்…………. 4 வது ரவுண்டின் ஆரம்பத்தில் இருக்க… அந்த மது இருந்த கண்ணாடி க்ளாசை தனது வாய் அருகே கொண்டு சென்றவன்………….. விஜய்யைப் பார்த்து

“விஜய் ப்ளீஸ்……….. நீ ஏன் இன்னைக்கு………… வேண்டாம் என்கிறாய்”

சுரேந்தர் தன் அண்ணனோடே அவன் தொழிலிலேயே அவனுக்கு துணையாக தோள் கொடுக்க ஆரம்பிக்க….. தன் தம்பியோடு அடிக்கடி வெளியே வருவதால்……… ஓரளவு இந்த பழக்கங்களை எல்லாம் குறைக்க ஆரம்பித்திருந்தான்…………….

”விஜய் எதுவும் தொடாவிட்டால்………… சுரேந்தரும் தொட மாட்டான்………….. என்பதால்……… தன் தம்பியோடு வரும் போது மட்டும் தவிர்த்து விடுவான்…..

ஆனால் இன்று மறுத்ததற்கு வேறொரு காரணம் இருந்தது…….

“இல்ல இளா……….. அம்மா என்கிட்ட பேசனும்னு சொன்னாங்க……………. அதனால் தான்………. எல்லாம் ராதா விசயமாத்தான் இருக்கும்………….. சோ அவங்க முன்னால் போதைல போய் நின்னு பேசுனா நல்லா இருக்குமா…………… அதுதான்……… நீ கண்டினியூ பண்ணு…………… இன்னொரு நாள் நான் கம்பெனி தருகிறேன்………. என்று சொல்ல…………… இளா இப்போது சுரேந்தரை பார்க்க……..

அவனும் வேண்டாம்………. என்று மறுக்க….. இளமாறன் குடிமகனாய் தன் வேலையில் கவனம் வைத்து அதை முடித்தவன்…..

“ராதா,,,,,,,,,,, எப்டிடா போயும் போயும் அந்தப் பையன் கிட்ட கவுந்தா………… என்று சொல்லியவன்……….. கம்ப்யூட்டர் கிளாசுக்கு அனுப்புனா……. சொல்லிக் கொடுத்த ஆளையே… என்று போதை பாதி எரிச்சல் பாதி என பேச ……… விஜய் உள்ளுக்குள் எரிந்தான் தன் தங்கை பண்ணிய காரியத்தை நினைத்து……….

”அவள் மட்டும் வெளியில் எங்காவது அவனோடு சுற்றியிருந்திருந்திருந்தால்……….. விஜய்யிடம் மாட்டாமல் இருந்திருக்க மாட்டாள்…… கம்ப்யூட்டர் கிளாஸ் போகிறேன் என்று…… ச்சேய்…………..” என்று தனக்குள் மருக ஆரம்பிக்க

அப்போது வீட்டிலிருந்து போன் வர…………..

“இளா……….. அம்மாதான் நாங்க கிளம்புகிறோம்…….. நாளைக்கு எங்க வீட்டு மாப்பிள்ளையா உன்னை சந்திக்கிறேன்…. ” என்று சிரித்தபடி அவனிடம் சொல்லிவிட்டு….. சுரேந்தரை அழைத்துக் கொண்டு கிளம்பினான்………..

மீண்டும் கால் வர…. பார்த்தான்….. அது அஷோக்

“சொல்லு………….. அந்த பொண்ணை உன் கண்பார்வையில வச்சுருக்கியா…..

“நாளைக்கு ராதா பிடிவாதம் பிடித்தால்…….. அந்த பையனின் குடும்பத்தினை வைத்துதான்…. அவனின் தங்கையை வைத்துதான் ராதாவை வழிக்கு கொண்டு வர வேண்டும்………….” என்ற போது அவன் குரலின் வித்தியாசத்தை உணர்ந்த சுரேந்தர்………… அவன் கோபம் இன்னும் அதிகம் ஆனாலும் ஆகிவிடுமோ என்பதால்

”அண்ணா……… இங்க கொடுங்க……. நீங்க டென்சன் ஆகாதீங்க” என்றபடி அவனின் போனை வாங்கிய சுரேந்தர்…….. அதற்கு மேல் அசோக்கிற்கு கட்டளைகளை விட ஆரம்பிக்க…..

தங்கள் காரை எடுக்க………. அவனைக் கடந்து சென்றான்………. விஜய் என்கிற விஜயேந்தர்………… நம் நாயகன்………..

நம் நாயகன்………….. என்று சொல்வதை விட……… நாயகியின் நாயகன்…………….. பரம்பரை பரம்பரையாக பணம் கொழிக்கும் குடும்பத்தின் இன்றைய தலைமுறையின் மூத்த வாரிசு…………….. அதிக அழுத்தம்……….. அதிக கோபம்……….. தன் குடும்பப் பெருமையில் பெருமிதம் அடைபவன்………….. தன் கீழ் உள்ளவர்களுக்கு சிம்ம சொப்பனம்………… அதிகமாய் பேச மாட்டான்…………… அநாவசிய வார்த்தைகள் அவன் அகராதியிலே கிடையாது…………. பேசும் நபர் கூட தனக்கு சம்மாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன்………… பார்வையாலே அனைவரையும் அடக்கும் விந்தை தெரிந்தவன்………………. அந்தப் பார்வைதான் அவன் நாயகியை ஒரெ நொடியில் தன் பக்கம் இழுத்து அவளை முழுவதுமாய் ஆக்கிரமிக்க வைத்தது….. அவ்வளவு சக்தியுள்ள பார்வை….. அதே பார்வை இன்று அவளின் பிணியாகவும் மாறி இருந்தது,,,,,,

இப்படி பல குணங்கள்………………… அவனுக்கு…………….. குறையாக இருந்தாலும்……………… தன் குடும்பத்தின் மீது அளப்பறிய பாசம் உள்ளவன்…….

தந்தை ராகேவ்ந்தர்………… தாய் கலைச்செல்வி………….

இரு தம்பிகள்……….. ஒரு தங்கை…………

சுரேந்தர் இவனை விட 1 வயது சிறியவன்…………. இரண்டாமவன் 3 வயது சிறியவன்……….. ராதா கடைக்குட்டி………. தன் தம்பி இருவரின் மேலும்…………. தன் தங்கையின் மீதும் தன் உயிரையே வைத்திருப்பவன்……………. அவர்களுக்கு ஒன்று என்றால் அவன் உள்ளம் தாங்காதவன்……………

ராதா…. ஒரே பெண் என்பதால் அனைவருக்கும் அவள் மேல் பாசம்….. விஜய்க்கு அவள் தங்கை உயிராய் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்……….. அவன் குணம் ராதாவை சற்று தள்ளி நிறுத்தி வைத்திருந்தது…………. ஆனால் அவளுக்கு ஒன்று என்றால் விஜய் துடித்துப் போவான்………..

அதே போல் விஜய்தான் அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கான வேர் என்பதால்………….. அவன் வார்த்தைகள் தான் அங்கு வேதம்…………. அவனின் முகச்சுழிப்பை…………. வேதனையைத் தாங்காதவர்கள்…………….. அவனின் குடும்பத்தினரும்……………

சுரேந்தருக்கு தன் அண்ணன் தான் எல்லாமே…………… விஜய் தான் அவனின் ரோல் மாடல்……

இருவருக்கும் 1 வயதுதான் வித்தியாசம் என்பதால்……….. இருவரும் ஓரளவு ஓத்துப் போனர்

ஆனால் யுகேந்தர், ராதா இருவரும் தனிக் கூட்டணி…………. அண்ணன் அதுவும் பெரிய அண்ணன் இல்லையென்றால்……. இருவரின் அலம்பலுக்கு குறைவே இருக்காது…….. சுரேந்தர் சில நேரம் அவர்களோடு சேர்ந்து கொள்வான்………… ஆனால் விஜய் அந்த அளவிற்கு இறங்க மாட்டான்………..

நாயகியினுடனான அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திற்கும்………………… அவனின் உடன் பிறந்தவர்களே காரணமாக இருந்தனர்……………………

-------------

காரை தன் தம்பியின் அருகில் நிறுத்திய விஜய் …………. அவனை அழைக்க…….. சுரேந்தர் காரில் அமர…………….. இப்போது சுரேந்தர்…………. அண்ணா……………. எனக்கு என்னமோ இளாவைப் பிடிக்கவில்லை…………. என்று சொல்லும் போதே விஜய் தன் காரின் வேகத்தை கூட்டியவன்

“ஏண்டா……………தண்ணி அடிக்கிறான்னு பிடிக்கவில்லையா……………. நீயும் நானும் பண்ணாத்தையா அவன் பண்ணிட்டான்”

“இல்லண்ணா………… அது காரணம் இல்லை……….. ராதா இன்னொரு பையனை விரும்பியும் நீங்க கேட்டவுடன் சரி என்று சொல்லி என்று ஆரம்பித்தவனிடம் விஜய் பார்வையை வீச….. சுரேந்தர் அமைதி ஆனான்……….

“நல்ல பையன் தான்…….. ராதாவுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது……………. அவன் தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்……..ஒண்ணும் பிரச்சனை வராது. பிஸ்னஸ் பார்ட்னர் வேறு ஆகப் போகிறான்…… தீனாவை எதிர்க்க நமக்கு ஒரு சப்போர்ட்…………” என்று சொல்லியபடி

ஒரே கல்லில் 4 மாங்காய் என்று சிரித்தான்…..அவன் கணக்குகள் எல்லாம் தவறாக ஆகப்போவதை உணராமல் வெற்றிச் சிரிப்பு சிரித்தான் விஜய்……………

விஜய்….. ’தீனா’ என்றவுடன் சுரேந்தர்………… ஞாபகம் வந்தவனாய்….

”ஆனா இந்த யுகி…………. தீனா தங்கையைப் போய் லவ் பண்றானே அண்ணா…………. ” என்று வெறுப்புடன் கூறியவன்…………

“அதை மட்டும் ஏன் தடுக்க வில்லை நீங்க…. நான் யுகியிடம் சொல்லி அவனுக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று சொல்லுகிறேன் என்றால் அதுவும் வேண்டாம் என்கிறீர்கள்” என்று கேட்க

எதுவும் சொல்லாமலே ஓட்டி வந்த விஜய்…………. சிறிது நேரம் கழித்து தானாக வாய் திறந்தான்

“ஸ்கூல் வாசல்ல அந்தப் பொண்ணுக்காக காத்துகிட்டு நிற்கிறான்………… போயும் போயும் ஒரு பொண்னுக்காக………. அவ பின்னால……….” என்று கடுமையாக ஆரம்பித்தவன்

”கேட்டால் ராதாவுக்காக நிற்கிறானாம்………….. எனக்கு வந்த ஆத்திரத்திற்கு………… ஒண்ணும் சொல்ல முடியலை…… அதன் பிறகு யோசித்துப் பார்த்தால் ஆர்த்தியும் நல்ல பொண்ணுதான்……. நமக்கு தெரிஞ்ச பொண்ணு……….. நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணுதான்……… அவன் அண்ணன் நமக்கு பிஸ்னஸில் இறங்கிய பின்னால் தான் நமக்கு பகை…………. அதுக்கும் முன்னால் ஒண்ணாத்தானே சுற்றி திரிஞ்சோம்………… விட்டுட்டேன்…………….. யுகேந்தர் இந்த வேலையையாவது ஒழுங்கா பண்ணட்டும்னு…………. உனக்கொரு விசயம் தெரியுமா……. இது தீனாவுக்கும் தெரியும்………… அவனும் கண்டுக்கலை………… ஆனா நம்ம வீட்டு ஆள் நமக்கெல்லாம் தெரியாம லவ் பண்றாராம்……” என்ற சிரித்த போது சுரேந்தரும் அவனும் சிரிப்பில் கலந்து கொண்டான்……………….

வீட்டின் அருகே வரும் போது ராதாவின் ஞாபகமும் வர………

“அண்ணா……………ராதா சம்மதிப்பாளா……. அம்மா இன்னைக்குதான் ராதாகிட்ட பேசறேனு சொன்னாங்க…………. அம்மா வேற நம்மகிட்ட பேசனும்னு சொல்றாங்க…………..” என்றவனிடம்

“அதெல்லாம் சம்மதிப்பா…… இல்லை அந்த பையன் குடும்பத்துக்குதான் ஆபத்துனு மிரட்டுவோம்……….. தானா வழிக்கு வருவா…………” என்றபடி………….. முகம் மாறினான் விஜய்……..

“என்ன ஒரு தைரியம் இருந்தால் விஜயேந்தர் தங்கச்சிய பொண்ணு கேட்டு தட்டைத் தூக்கிட்டு வருவாங்க……………. நம்ம முன்னால் நிற்கக் கூட தகுதி இல்லாதவங்க………… இவனுங்க வந்தா என் தங்கச்சி அவங்க பின்னால போய்டுவாளா…………….. அவ விஜயேந்தர் தங்கை…………. எனக்கு ஒரு அவமானத்தை கண்டிப்பா தேடித் தரமாட்டா…… என் பேச்சைக் கேட்பா………….. அப்படி ராதா கேட்கலை…… “ என்றபடி ”அவன் தங்கச்சி பேரு என்ன……..” என்று விஜய் யோசிக்க…………

சுரேந்தர்……………..’ தீக்ஷா’ ண்ணா…………… என்று எடுத்துக் கொடுக்க……

”ஹ்ம்ம்………… தீக்ஷாவா……………. அந்த தீக்ஷாவைக் கடத்தி திக் திக் ஷாக் கொடுப்போம்……………” என்று அவள் பெயரை வைத்தே நக்கலடிக்க

”அண்ணா…………… தீக்ஷா திக் திக் ஷா………… எப்டின்னா……………..இப்டி………” சுரேந்தரும் கலகலப்பாக……………..

”பாவம்டா அந்த பொண்ணு……….. அண்ணன் லவ் பண்ணினதுக்கு………….. அவ மாட்டி இருக்கா…………..” என்ற விஜய்க்கு…………….. ”பாவம் யார்” என்று அப்போது தெரியாமல் போனதுதான் காலத்தின் கோலம்……………..

1,558 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


நான் நினைச்சேன்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page