top of page

அன்பே! நீ இன்றி!! 16

அத்தியாயம் 16:

அதிகாலை 5 மணி………………………………… வழக்கம் போல் ஒலித்த அலாரம் சத்தத்தில் விழித்த விஜய் நெஞ்சோடு அணைத்திருந்த தலையணையை விடாமல் அதைக் கட்டியபடியே கட்டிலின் முனைக்கு உருண்டு அதை ஆஃப் செய்தவன்…… தூக்கம் கலைந்த போதும் எழாமல் அப்படியே படுத்திருந்தான்…………..

எப்போது மாடியில் இருந்து கீழே வந்தான்……… என்று அவனுக்கே தெரியவில்லை………………. அர்த்த ராத்திரியில் இறங்கி வந்தவன் அப்படியே உறங்கியும் இருந்தான்……………….. இப்போது அடித்த அலாரம் சத்தத்தில் விழித்தவன்………. தலையணையைக் கட்டியபடி………. சற்று நேரம் விட்டத்தை பார்த்து படுத்திருந்தவனுக்கு மனமும் கொஞ்சம் உற்சாகமாய்த் தான் இருந்தது………… அந்த அகன்ற கட்டிலின் மறுமுனையைப் பார்த்தபடி இருந்தவனுக்கு இன்று ஏதேதோ நினைவுகளில் மனம் தறிகெட்டு அலைய ஆரம்பித்தது…………. அந்த எண்ணங்கள் அவனை ஆள ஆரம்பித்து… அவன் உணர்வுகளைத் தூண்டி விட ஆரம்பிக்க………….. தாங்காமல்…. தலையணையை இறுகப் பற்ற ஆரம்பித்தவன்………..

இனிமேல் படுத்திருந்தால்……………… அது வேலைக்கு ஆகாது முடிவு செய்து குளியலறைக்குள் நுழைந்து………………. ஷவரில் குளித்த முடித்து…………… தலையை துவட்டியபடி வெளியே வந்த போது அவனோடு உணர்ச்சிகளும்…….. அவன் குளித்த நீரோடு அடித்துச் செல்லப்பட்டிருந்தது

கண்ணாடியில் தன்னைப் பார்த்தவன்………. தன் பின்னால் இருந்த புகைப்படத்தைப் பார்த்தபடியே இருக்க….. அந்த பிம்பம் அவனைப் பார்த்து சிரிக்க…………. அதில் உற்சாகமானவன்… அதைப் பார்த்தபடி தன் இதழைப் அந்தப் புகைப்படத்தின் பிம்பத்தில் பதித்து அன்றைய தன் காலையைத் தொடங்க ஆரம்பித்து இருந்தான்…

கிட்டத்தட்ட 9 மணி அளவில்…. வேலையாள் உள்ளே வந்து

“தம்பி… அம்மா சாப்பிட வரச் சொன்னாங்க” என்க

“இதோ” என்றபடி கீழே இறங்கியவனின் நடையில் கொஞ்சம் துள்ளல் இருக்க…………. அவன் இறங்கி வரும் போதே அவன் தாய் கண்ணில் பட…. அவனையே பார்த்தபடி நின்றாள் கலைச்செல்வி………… விஜய் அதைப் பார்வையால் உள்வாங்கியபடியே………….. டைனிங் டேபிளின் முன் அமர்ந்தவன்…………… தன் தந்தை மற்றும் சுரேந்தரைப் பார்த்து சிரித்தபடி…..

”என்னப்பா இன்னைக்கு…… இவ்ளோ ஸ்பெஷல்………… சின்ன மகன் வரப் போகிறான் என்று அம்மாவுக்கு சந்தோஷம் போல……. இன்னைக்கே தடபுடலா இருக்கு” என்றபடி………….. கேலியாய்க் கூறிய மகனைப் பார்த்தபடி அவன் தாய் நிற்க………

“அம்மா………… எவ்ளோ நேரம் என்னையே பார்த்துட்டு இருப்பீங்க…………. பசிக்குதுமா………. எடுத்து வைங்க” என்று கேட்ட போதுதான்………… கலைச்செல்வி………… தன்னிலைக்கு வந்தாள்

விஜய்………… பசிக்கிறது என்று சொன்னவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை……… வீட்டுச் சாப்பாடு கூட சாப்பிடாமல் காத்தமுத்து இல்லை முருகேசன் கொண்டுவரும் சாப்பாட்டை மட்டும் உண்டு கொண்டிருந்தவன்….. அதன் பின் ஓரளவு சரியாகி ஏதோ பேருக்கு………. பசிக்கென்று சாப்பிட்டு கொண்டிருந்தவன்….. இதுவரை அவளிடம் பசி என்று கேட்டதில்லை…… சாப்பாட்டை ருசியோடும் உண்டதில்லை….. இன்று அவனே பசிக்கிறது என்று சொன்னவுடன்………. வேகமாய் பறிமாற ஆரம்பித்தவள் கண்களில் கண்ணீர் வந்து பார்வையை மறைக்க……… விஜய் அதை உணர்ந்தும் …………… அதைப் பார்க்காதவன் போல் சாப்பாட்டில் கை வைக்க………….. அப்போது விஜய்யின் மொபைல் அடிக்க……… அது வைஜெயந்தி என்று காட்டியது…

”இப்போ இவங்க எதுக்கு கால் பண்ணியிருக்காங்க” என்று யோசனையுடன்….. எடுத்த சாப்பாட்டை அப்படியே வைத்தவன்………….. ’என்னவோ ஏதோ’ என்று வேகமாய் போனை எடுக்க………

மறுமுனையில் ஜெயந்தி…… பதட்டத்துடன்… பேச ஆரம்பித்தாள்

”இந்த பார்வதி அண்ணன் சாரகேஷ் நம்ம தீக்‌ஷாவை பொண்ணு கேட்டு வந்திருக்கான்…………” என்றபோது……… அவன் கைகள் போனை இறுகப் பற்றின………

“உங்க பொண்ணு எங்க” என்று கேட்க

“இங்கதான் இருக்கா……….. அவளுக்கே தெரியாது போல தம்பி…………… அழுதுட்டு இருக்கா” என்று சொல்ல………… சற்று நிம்மதியான விஜய்…………….

பதறாமல்……………

“பார்வதி அண்ணன் கிட்ட……… ஏதாவது பேசி அனுப்பி வைங்க……………” என்று சாதாரணமாய்ச் சொல்ல

அவனை சுரேந்தர் புரியாமல் பார்க்க………….

எதிர்புறம் போன் தீபனின் கைகளில் மாறியிருந்தது இப்போது

“என்ன விஜய் விளையாடறீங்களா…. உடனே கிளம்பி வாங்க இங்க…. இல்லை நான் என்ன பேசுவேன்னு எனக்கே தெரியாது” என்ற போதே அவன் குரலின் கோபம் விஜய்யின் காதில் சூடாக விழ………

”விளையாடுகிறேனா……………. நான் வந்தால் தான் அங்கு பிரச்சனை ஆகும்னுதான் சொல்கிறேன்….” என்று விஜய்யும் சூடாக பதில்கொடுத்தவன்

”சாரகேஷ் சொன்ன புரிஞ்சுக்குவான் தீபன்” என்ற போது குரல் மீண்டும் இறங்கியிருக்க…..

தீபனும் தன்மையாக….

“தயவு செய்து விஜய்………… ஏன் விஜய் இப்படி பண்றீங்க….. இப்டி எங்க வாயை எல்லாம் கட்டிப் போட்டு விட்டு……… இதற்கு மேல் என்னால் சமாளிக்க முடியாது…. நீங்க வந்தால் ஒரு பிரச்சனையும் வராது……. உங்க காதல் மேல நம்பிக்கை இருந்தா…. வாங்க…. இல்லை உங்களுக்கு கொடுத்த என் சத்தியத்திற்கும் ஆயுள் கிடையாது என்று முடிக்க

விஜய்யும் அதற்கு மேல் மறுக்காமல்…..

”சரி நான் வருகிறேன்….. அவசரப்பட்டு எதையும் சொல்லிராதீங்க…..” என்று போனை வைத்தான் விஜய்…….

“என்ன விஜய்…. என்னாச்சு தீக்‌ஷாக்கு ஏதாவது என்று கலைச்செல்வி ஆரம்பிக்க………..

“அவளுக்கு ஒண்ணும் இல்லைமா………… பார்வதியோட அண்ணன்” என்றபோது சுரேந்தர் நிமிர… அவனைப் பார்வையாலே ஆறுதல் படுத்தியபடி

விசயத்தை சொன்னவன்…………… சுரேந்தரிடம் நீ அம்மா,அப்பாவை கூட்டிட்டு வா நான் முன்னால் போகிறேன்………… என்ற போது அவன் குரலில் பெரிதாய் வருத்தமும் இல்லை….. பதட்டமும் இல்லை… மிகவும் சாதரணமாக இருந்தான்….

ஆனால் கலைச்செல்வி அழ ஆரம்பித்திருந்தாள்…..

“நாங்க சொல்றதை எல்லாம் கேட்க மாட்டிங்கிறியேடா….. இதுக்குதான் நானும் சம்மந்தி அம்மாவும் தலைப்பாடா அடிச்சுக்கிட்டோம்” என்று கலைச்செல்வி புலம்ப ஆரம்பிக்க

விஜய்யின் தந்தை…. செல்வி….

“அவனைப் போக விடு……” என்று அதட்ட….. அதற்கு மேல் அவன் தாயும் பேசாமல் அழுதபடி மட்டும் நிற்க…

சுரேந்தரோ அதற்கும் மேல்… அவனுக்கு படபடப்பாய் வர

“அண்ணா சாரினா………… என்னாலதான் இது எல்லாம்……… சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விடற மாதிரி பேசி” என்று தன் தவறில் சோகமாய்ப் பேச….

அவனை ஆறுதலாய் அணைத்தவன்…………. சிரித்தான்………… அவனது சிரிப்பினில் வலியும்……. சோகமும்……… விரக்தியும்……….. ஆற்றாமையும்………….. அதையும் மீறி ஒரு நம்பிக்கையும் என்று எல்லாவித உணர்வுகளையும் பார்த்தான் சுரேந்தர்….. சுரேந்தருக்கு மனமெங்கும் துடித்தது…………. ஒரு சிரிப்பினில் வேதனையைப் பார்க்க முடியுமா…………. இன்று தன் அண்ணனின் சிரிப்பினில் அதைக் கண்டான் அவன்……………. அவன் இன்னும் என்னவெல்லாம் அனுவிக்க வேண்டும் அந்தக் கடவுள் நினைக்கிறான்…. போதாதா அவன் பட்ட வேதனை எல்லாம்……………. அவனால் தாங்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான்………..


சுரேந்தர் முகத்தைப் பார்த்தவன்……….. அதில் உள்ள கலக்கம் உணர்ந்த விஜய்……………

”எதுக்குடா….. இப்டி ஃபீல் பண்ற….. அவ போக மாட்டாடா…………… அவகிட்ட இருக்கிற என் மனசு அவளை போக விடாது……. அந்த நம்பிக்கைலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்…………. என்றவனின் வார்த்தைகளில் விரக்தியோடு காதலும் வழிய

கலைச்செல்வி ஏதோ பேச ஆரம்பிக்க………. அதற்கு மேல் அவற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை அற்றவனாய்…………. வேகமாய் வெளியேறினான் விஜய்…………..

---------------

அடுத்த ஒரு மணி நேரத்தில் விஜய்…. தீக்‌ஷா வீட்டை அடைந்தபோது………….. அங்கு ஜெயந்தியின் சத்தம் வெகுவாய்க் கேட்க…………….. முருகேசன் வேகமாய் ஓடிவந்து அவன் அருகே நின்றான்…………….

”தம்பி………. அன்னைக்கு வந்த பையன்………” என்று ஆரம்பிக்க…………. நான் பார்த்துக்கறேன் என்று உள்ளே போனவன்………….. தான் வழக்கமாய் உட்காரும் இடத்தில் சாரகேஷ் உட்கார்ந்திருக்க………………. வேறெங்கும் உட்காராமல் தீக்‌ஷாவின் புகைப்படம் அருகே போய் நின்றான்……..

புன்னகைத்துக் கொண்டிருந்த அந்த தீக்‌ஷாவின் புகைப்படத்தின் ஒரு புறம் விஜய்யும்………… மறுபுறம் தீக்‌ஷாவும் நிற்க……….

அவளின் அருகே போய் நின்ற விஜய்யைப் பார்த்து சாரகேஷ் முறைத்தான்……………..

நிழற்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தவள்………….. நிஜத்திலோ கண்களில் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தாள்……

“நீ எதுக்கு இப்போ அழற………” என்று அருகில் அழுது கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்ட விஜய்யைப் பார்த்தவள் அவனைப் பார்த்து முறைத்தபடி……….. மீண்டும் அழ ஆரம்பிக்க

“இப்போ அழறதை நிறுத்தப் போறியா இல்லையா…….” என்று முகம் கடுக்க விஜய் திட்ட ஆரம்பிக்க………….. சாரகேஷ் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவன் திட்டுவதை உணர்ந்தவன்

“விஜய்………….. எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க………… அவளத் திட்டுகிற வேலை எல்லாம் வேண்டாம்……………..” என்று ஆரம்பிக்க………… அவளின் மீதான சாரகேஷின் அக்கறையில் விஜய் மனம் சற்று துணுக்குற்றாலும்

“இருங்க பாஸ்…………. பேசலாம்……………..” என்று சொன்னவன் தீக்‌ஷாவிடம் திரும்பி

“நீ மேல போ…………. “ என்று கூற…………

“ஏன்……….. எதுக்கு…………. நான் இங்கதான் இருப்பேன்………………” என்று அவனிடம் படபடப்பாகக் கூறியவள்….. சாரகேசைப் பார்த்து

”பாரு அண்ணா…………. உங்களோட நான் அந்த மாதிரி எண்ணத்தில் எல்லாம் பழகலை………………. ப்ளீஸ் இந்தப் பேச்சை விட்ருங்க………..” என்று கூறியவளைப் பார்த்து விஜய்…………. நிம்மதியில் பெருமூச்சு விட்டவனாய்………….

“சொல்லிட்டாள்ள………. அப்புறம் என்ன…………. “ என்று சாரகேஷிடம் சாவகாசமாய்ச் சொல்ல…

அவனிடம் பதில் சொல்ல விரும்பாத சாரகேஷ்…… விஜய்யை அலட்சியமாக சில நொடிகள் பார்த்தவன்……… தீக்‌ஷாவின் புறம் திரும்பி….. அழுத்தமாய்ப் பேச ஆரம்பித்தான்….

“நீ என்னை விரும்பறேனு நான் சொல்லவே இல்லையே தீக்‌ஷா…………. எனக்கு உன்னைப் பிடிச்சுருக்குனு…………. உங்க வீட்ல இருக்கிறவங்ககிட்ட பொண்ணு கேட்கிறேன்………….. உங்க வீட்ல ஓகேனா உனக்கு ஒகேதானே” என்று கேட்க

இப்போது விஜய் தவிர மற்ற பேரின் பொறுமையும் பறக்க ஆரம்பித்து இருந்தது………….அப்போது சுரேந்தர் தன் தாய் தந்தையோடு உள்ளே நுழைந்தான்……..

ஹாலில் உட்கார்ந்திருந்த பார்வதி அவனைப் பார்க்கவே இல்லை……………… அவன் வந்தது உணர்ந்தும் அவன் புறமே திரும்பாமல் உட்கார்ந்து இருக்க

சுரேந்தரோ….

”இருக்குடி உனக்கு……….. இங்க ஒருத்தன நேத்து நைட் ஃபுல்லா தூங்க விடாம பண்ணிட்டு……….பார்க்கவே மாட்டீங்களோ” என்று மனதினுள் புலம்பியபடி உள்ளே வர

சுரேந்தரைப் பார்த்து ஆவேசம் ஆனாள் தீக்‌ஷா…….…….. விஜய் வந்த போது கூட ஆவேசம் ஆகவில்லை அவள்….

எல்லாம் இவனால வந்தது…………….” என்ற சுரேந்தர் மேல் ஆத்திரம் வர அதே வேகத்தோடு

“நேத்து…………… எங்க வீட்டு பொண்ணுனு சொன்னீங்கள்ள….. பொண்ணு கேட்டு……….. வந்து நிற்கிறாரு……. அவருக்கு பதில் சொல்லுங்கத்தான்…….” என்று அவனைப் பார்த்து கோபத்தில் பொறிந்தாள் தீக்‌ஷா…..

சுரேந்தருக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது…. நேற்று தான் அவசரப்பட்டு கோபப்பட்டது எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்று….… இருந்தும் பதட்டப்படாமல்…………

“நான் சொன்னா இவரு தட்டைத் தூக்கிட்டு வந்துருவாரா தீக்‌ஷா………… என்ன நியாயம் இது…………. ” என்று கேட்டவன்…………..

“விடு……….. நானும் போய் இவர் வீட்ல நிற்கிறேன்…………. அப்போ என்ன பண்ணுவார்னு பார்க்கிறேன்” என்று கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள…………. பார்வதி பட்டென்று நிமிர்ந்து பார்க்க சுரேந்தரும் அவளைப் பார்க்க……. மீண்டும் வேறு புறம் திரும்பினாள்……….

சாரகேசுக்கு…. அந்தச் சூழ்னிலையிலும் சுரேந்தர் வார்த்தை அவன் மனதில் பட……….. நேற்று கூட………….. சுரேந்தர் தன் தங்கையை அவன் வார்த்தைகளில் இழுத்ததை உணர்ந்தான் இப்போது……….

விஜய் சுரேந்தரைப் பார்த்து அர்த்தப் புன்னகை ஒன்றை வீச………… சுரேந்தர் அவன் பார்வை புரிந்து பேசாமல் திரும்பினான்………

“இங்க பாருங்க எனக்கு தீக்‌ஷாவைப் பிடிச்சுருக்கு…………. எனக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்கிறதுல என்ன பிரச்சனை ………….. அதை மட்டும் சொல்லுங்க” என்று சாரகேஷ் கேட்க

சுரேந்தர் தீபனிடம்

“தீபன் அத்தான்…………. டாக்டர் சார் கேக்குறார்ல ….. சொல்லுங்க………….. “ என்று இகழ்ச்சியாய் சொல்லி சிரிக்க…………….

பார்வதிக்கு….. சுரேந்தர் தன் அண்ணனைக் கேலி செய்யும் விதத்தில் பேசுவதைப் பார்த்து….. அவளால் தாங்கவே முடியவில்லை…………..

உண்மையைச் சொல்ல விடாத விஜய்யின் பிடிவாதத்தில் ….. ஏற்கனவே பொறுமை இழந்து கொண்டிருந்த தீபன் …சாரகேஷிடம்

“சாரகேஷ்…………. தீக்‌ஷாவுக்கு இப்போ மேரேஜ் பண்ணலை………… அது ஏன்னு சொல்ல விருப்பமும் இல்லை…………….. போதுமா………….” என்று சொல்ல,…… அவனைத் தொடர்ந்து

“ஆமா தம்பி…………. உங்ககிட்ட சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு இதுக்கும் மேல வற்புறுத்தாதீங்க…. நீங்க போகலாம்…………. எங்களுக்கு இஷ்டம் இல்லை” என்று தீபன் ஆரம்பித்து வைத்த விசயத்தை வைத்தீஸ்வரன் முடிக்க………….

சாரகேஷோ….. வேறு யாரிடமும் பேசாமல் தீக்‌ஷாவையே பார்த்தபடி எழுந்து வந்து…………. தீக்‌ஷாவின் அருகில் நெருங்க… அதைப் பார்த்த விஜய்

அதே வேகத்தில் அவளுக்கும் சாரகேஷுக்கும் இடையில் போனான்……………

“சாரகேஷ் பிரச்சனை பண்ணாம போங்க……………… நான் உங்ககிட்ட நேரில் வந்து பேசுகிறேன்…………… இப்போ எல்லாவற்றையும் சொல்ல முடியாது………………” என்று பொறுமையாக விளக்க…………..

“நான் உங்ககிட்ட எதுவும் பேச விரும்ப வில்லை………………… தள்ளுங்க……………… இது எனக்கும் தீக்‌ஷாவுக்குமான பிரச்சனை……………. நீங்க இடையில வராதீங்க” என்று கோப முகத்துடன் கூற………

விஜய்க்கு பொறுமை போய்க் கொண்டிருந்ததுதான்……………… இருந்தும் நிதானம் தவறாமல் பேசினான்…………..

அவன் கொஞ்சம் கோபமாக பேசினாலும்………….. தீக்‌ஷா அவனுக்கு எதிராக ஏதாவது பேச வேண்டுமென்று… பேச ஆரம்பித்து விடுவாள் என்று தெரியும் அவனுக்கு…………..” அந்தக் காரணத்திற்காகவும் பொறுமை காத்தான்………

இப்போது தீக்‌ஷா விஜய்யிடம்……………..

“விஜய் அத்தான் நீங்க தள்ளுங்க” என்று தீக்‌ஷா சொல்ல………….. விஜய் எதுவும் பேசாமல் விலகினான்தான்…………ஆனால்….. அவன் மனம் எங்கும் கொஞ்சம் பய அலை அடிக்க ஆரம்பித்து இருந்தது…………….அதில் அவன் முகமும் வெளிரத் தொடங்கியது

விஜய்யை விலகச் சொன்ன தீக்‌ஷா

சாரகேஷிடம் பேசாமல்………… தேவகியிடம் திரும்பினாள்……….

“அம்மா…………. நான் சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க………….. உங்க மாதிரி ஒரு குடும்பத்துக்கு மருமகளா வர கொடுத்து வச்சுருக்கனும் தான்………….ஆனால் அந்தக் கொடுப்பினை எனக்கு இல்லை………… இதுக்கு மேல என்னை வற்புறுத்தாதீங்க……… பார்வதி சாரிடி……….” என்று மாடி ஏறப் போக

சாரகேஷ் அவளின் முன் கை மறித்து நிறுத்த………… அவளும் நின்றாள்…………

விஜய்யின் இதய ஓட்டம் தாறுமாறாக ஓடத் துவங்க……………. தீக்‌ஷாவின் தாய் பதட்டத்துடன்

“நீங்க நினைக்கிற மாதிரி…………… தீக்‌ஷா ….” என்று ஆரம்பிக்க

விஜய்…………………. “அத்தை” என்று ஜெயந்தியைப் பார்த்து குரல் உயர்த்த……….. வாயை அடக்கினாள்……….. ஜெயந்தி…..

“தீக்‌ஷா உனக்கு என்ன கொடுப்பினை இல்லை……….. அதை நான் சொல்லனும்…………. நீ மற்றது எல்லாம் மறந்துரு……….. உனக்கு ஹார்ட் பிராப்ளம்” என்று சொல்லி விஜய்யை முறைக்க……….. விஜய் சாரகேஷை பார்த்தான்

“உனக்கு ஹார்ட் பிராப்ளம் தவிர………. வேற ஏதாவது பிரச்சனையா………. அதைச் சொல்லு……” என்று அமைதியாக சொல்லி அவள் முகத்தைப் பார்க்க

“அய்யோ…….. அது ஒண்ணு போதாதா……. என்னை விடுங்க………… நீங்களும் என்னை படுத்தாதீங்க பாரு அண்ணா…………… “ என்று உட்கார்ந்து அழ ஆரம்பிக்க………

வைத்தீஸ்வரன்…………… விஜய்யைப் பார்த்து கண்களாலே கெஞ்ச ஆரம்பித்தார்…………. விஜய் எதுவும் சொல்லாமல் இருக்க…………. ஜெயந்தி…………… உட்பட………… அத்தனை பேரும் ’ஏதாவது செய்து சாரகேஷை இங்கிருந்து அனுப்பிவை’……… என்ற விதத்தில் விஜய்யைப் பார்க்க

விஜய்……….. அவர்களின் நிலைமையை உணர்ந்தான் தான்…. அதற்காக தன் பிடிவாதத்தை மாற்ற வில்லை..…………….

“சாரகேஷ்………… இதுக்கும் மேல அவள கட்டாயப் படுத்துனீங்க……….. அப்புறம் நல்லா இருக்காது…………. பொறுமையா பேசிட்டு இருக்கேன் நான்………….. அவள அழ விட்டீங்க……. நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று கோப முகம் காட்ட

சாரகேஷ் பதிலுக்கு கோபத்துடன்

“யாரு அவள அழ விடுறது நீயா…. இல்லை நானா…………. அவ அன்னைக்கு உன்னைப் பற்றி சொல்லி அழுதா……… அது உனக்குத் தெரியுமா…………. பெருசா பேச வந்துட்டான்………. நீ பண்ணினதெல்லாம் சொல்லிட்டா…….. இங்க பாருங்க விஜய்………….. இது எனக்கும் அவளுக்கு உள்ள பிரச்சனை………அவள எப்டி சம்மதிக்க வைக்கிறதுனு எனக்குத் தெரியும்…….. நீங்க தலையிடாதீங்க” என்ற போது……………

விஜய் கண்கள் கோபத்தில் சிவக்க……………… கை முஷ்டி இறுக ஆரம்பித்தது…………. அவனின் கோபத்தை உணர்ந்த சுரேந்தர்………

“அண்ணா” என்றபடி அவனிருகே போனான்…………

அவனைத் தடுத்த விஜய் பேச ஆரம்பித்தான்………

இங்க யாரும்… .எதுவும்… எதையும்…. பேசக் கூடாது……………என்று அத்தனை பேரிடமும் சொல்லித் திரும்பியவனுக்கு…. உள்ளம் கொதித்தது….

அன்று மொட்டை மாடியில் நடந்த விசயத்தை எதையும் மறைக்காமல்….. தீக்‌ஷா அவனிடம் சொல்லி இருக்கிறாள்…. என்பதே சாரகேஷ் சொன்ன விதமே சொல்ல….. விஜய் கோபம் எல்லை மீற ஆரம்பித்தது…

சாரகேஷிடம்

“என்ன சொன்னா இவ……………. என்னைப் பற்றி சொல்லி அழுதாளா………..” என்று கேட்டவன்

ஏய் என்னடி சொன்ன….” என்று அதே கோபத்தோடு கேட்டபடி…… தீக்‌ஷாவின் அருகில் போக…………..

பார்வதி இப்போது இடையில் வந்தாள்

“என்ன சார் ரொம்ப மிரட்டறீங்க………… ஆமா… சொன்னா…………. நீங்கதான் அவளோட பிரச்சனைக்கு எல்லாம் காரணம்” என்று சொன்னவள்……….

“ப்ச்ச்… அதெல்லாம் தேவையில்லை எங்களுக்கு…... எங்க அண்ணாவுக்கு அவள மேரேஜ் பண்ணி கொடுங்க………… இல்லையா ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்கனு ரீசன் சொல்லுங்க……… காரணம் சரினா………..நாங்களும் பிரச்சனை பண்ணல………….” என்று விஜய்யை நேருக்கு நேராய்ப் பார்த்து பேச………………….. விஜய் பார்வதியின் அதிரடியான பேச்சில் அதிர்ந்தாலும்…………. சுரேந்தருக்காக பார்த்தவன்…….

”பார்வதி……….. உன்கிட்ட இப்போ எதுவும் சொல்ற நிலைமையில இல்ல நான்…………. உங்க அண்ணா கிட்ட நான் வந்து சொல்றேன்………… முதலில் நான் கொடுத்த ரிப்போர்ட்ஸ்லாம் உங்க அண்ணனைப் பார்க்கச் சொல்லு….……… அவரே என்னை வந்து பார்ப்பாரு.” என்று மீண்டும் பொறுமையாக பேச

”அதை விடுங்க சார்…………. ரிப்போர்ட்டாம் ரிப்போர்ட்…. எங்க அண்ணாவுக்கு தீக்‌ஷாவோட பிராப்ளம் பெருசு இல்லை……….. எங்களுக்கு எங்க அண்ணா மனசு முக்கியம்………… நாங்க உங்கள விட வசதி குறைந்தவங்களா இருக்கலாம்…………. ஆனா………………… எங்க அண்ணனும் நல்ல நிலைமையில இருக்காரு……….. நல்ல பையன்………… இந்தத் தகுதி போதாதா… ஏன் தர மாட்டேனு சொல்றீங்க…அதுக்கு பதில் சொல்லுங்க” என்று பொறிய ஆரம்பித்தாள்

அவளுக்கு தீக்‌ஷாவைத் தன் அண்ணனுக்கு எடுக்கும் எண்ணத்தை விட…. அவளுக்கு என்ன பிரச்சனை என்று இப்போதாவது சொல்வார்களா……… என்ற எண்ணமே தலை தூக்கி இருக்க………. அட்லீஸ்ட் காரணமாவது வேண்டி நின்றாள்…..

சுரேந்தர் அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்…………. ஆனால் ஒன்றும் பேச வில்லை………

பார்வதி விஜய்யுடன் பேசுவதைப் பார்த்த சாரகேஷ் பதட்டத்துடன்

“பாரு அவன் கிட்ட நீ ஏன்மா பேசுற………… நான் பேசிக்கிறேன்”

“நீ சும்மா இருண்ணா………… என்கிட்ட இவன் பூச்சாண்டிலாம் செல்லாது………..” என்று விஜய்யை நேருக்கு நேராகப் பார்த்து ஒருமையில் பேச ஆரம்பித்தாள்………

”ஏய்………… என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி போகுது…………….. அமைதியா இருக்கேனு பார்க்கிறியா…………. “ என்று பேச ஆரம்பித்தவன் சுரேந்தரைப் பார்க்க……..அவன் முகம் வெளிறியிருக்க………. தன்னை ஓரளவு தணித்தபடி

“எனக்கும் உங்க அண்ணாவுக்கும் தான் இங்க பிரச்சனை…………. நீ இடையில வராத………. வந்து உன்னை அசிங்கப் படுத்திக்காத ……….. அங்க போய் உட்காரு” என்ற போது இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீக்‌ஷா விஜய்யிடம் வந்தாள்

தன் தோழியைப் பார்த்து அவன் சொன்ன வார்த்தைகளில் தீக்‌ஷா அடி வாங்க…. தங்கள் பிள்ளைகள் தலையிட்டதால்…. பேசாமல் இருந்த பெரியவர்களை எல்லாம்…. ஒரு பார்வை பார்த்தவள்….

“இரு பார்வதி…………” என அவள் கை பிடித்து நிறுத்தினாள்

“என்ன விஜய்யத்தான் அவள அசிங்கப்படுத்துவீங்க…………. என்னைப் பண்ணின மாதிரியா” என்று விஜய் முன் வர…………. விஜய் அதிர்ந்தான்

“உங்களுக்கும் சாரகேசுக்கும் இடையில என்ன பிரச்சனை….. இது எங்க குடும்பத்துக்கும் சாரகேசுக்கும் உள்ள பிரச்சனை….. நீங்க எதுக்கு இடையில வருகிறீர்கள்…..” என்று கேட்டபோது

மொத்த குடும்பமே கொஞ்சம் கலவரமாய்ப் பார்க்க ஆரம்பிக்க தீக்‌ஷா ஆரம்பித்தாள்…

விஜய் ஒன்றும் சொல்லாமல்………… சாரகேஷை பார்த்து

“சாரகேஷ் நீங்க போகலாம்…………… பேசப் பேச………. சண்டைதான் வரும்………… தேவகியிடம் திரும்பி……….

“உங்க பொண்ணையும் பையனையும் கூட்டிட்டு நீங்க போகலாம் ஆன்ட்டி………… இல்லை…………… இங்க வேற மாதிரி எதுவும் ஆகி விடும்…………….” என்று கை கூப்ப

தேவகி எழ ஆரம்பித்தாள்….. ஏற்கனவே இஷ்டம் இல்லாமல் வந்தவள்….. இங்கே நடக்கும் கூத்தைப் பார்த்தவளுக்கு……… இன்னும் வேதனைதான் அதிகமாகியது……….. தேவகியின் வேதனை முகம் பார்த்த தீக்‌ஷா….. அதைத் தாங்க முடியாமல்

“ஒரு நிமிசம் ’பாரு’ அம்மா” என்று அமர்த்தியவள்…………. தன் அம்மாவிடமும் அப்பாவிடமும் சென்றாள்………….

“நீங்க தான எனக்கு அப்பா அம்மா……………. தீபன் எனக்கு அண்ணன் தானே……………. நீங்க எதுவுமே பேச மாட்டீங்களா………… விஜயத்தான் எதுக்கு பேசறாரு…………….. அவர பேச வேண்டாம் என்று சொல்லுங்க……….. அவர் யாரு…. இவங்களை போகச் சொல்வத்ற்கு….. பார்வதி என்னோட ஃப்ரெண்ட்………. அவளயும் அவங்க குடும்பத்தையும் அசிங்கப் படுத்தா நெனச்சா………. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்………” என்று முடிக்கும் போது விஜய்யைப் பார்த்து பேச….

விஜய் அதற்கு மேல் பேசுவானா…….. எதுவும் பேசாமல்……………..தான் உட்காரும் இடம் இப்போது காலியாகி இருக்க………… அங்கு வந்து அமர……….. தீபன் அவனிடம்

“விஜய் இதுக்கு மேல தீக்‌ஷாகிட்ட மறைக்க வேண்டாமே…………… அவ உங்களை எதிர்க்கிறேனு……. ஏதாவது” என்று சொல்லும் போதே

“என்ன பண்ணினாலும் பண்ணட்டும்………. நான் சொல்ல மாட்டேன்…….. நீங்க யாரும் சொல்லக் கூடாது………….. “ என்று தளர்வாக பின்னால் சாய்ந்தவன்………. எதிரில் இருக்கும் தீக்‌ஷாவின் புகைப்படத்தில் வழக்கம் போல் தன் பார்வையைப் வைத்தவன்………… அதில் கலந்தான்……………….. யாரையும் கண்டு கொள்ளாமல்………….. நிஜம் கொடுக்காத நிம்மதியை………….. நிழல் அவனுக்கு தந்தது……………

தீபன் இப்போது எழுந்து………..

“தீக்‌ஷா……….. என்ன பேச்சு பேசற………… பார்வதியை யாரும் இங்க அசிங்கப்படுத்தல…………. நம்ம நிலையைச் சொல்றோம்……….. அவங்க கேக்க மாட்டேங்கிறாங்கம்மா………….. “

சாரகேஷோ…..

“என்ன நிலைமை தீபன்………… அதைச் சொல்லுங்க…………” என்று தீபனின் முன்னால் நிற்க

வைத்தீஸ்வரன் சொன்னார்…………”எங்க பொண்ணுக்கு உடம்பு சரி இல்லை………… அவளுக்கு திருமணம் எல்லாம் பண்ண முடியாது…….. போதுமா………….. இதுக்கு மேல என்ன வேணும்”

விஜய் வெறித்தபடி அமர்ந்திருக்க…….. சுரேந்தருக்கும்………. அவனை பெற்றவர்களுக்கும் தாங்கவே முடியவில்லை….. யாரையுமே பேச விட மாட்டான் அவன்……. முடிவுகள் எல்லாமே அவன் கையில் தான் இருக்கும்……………. இன்று……… தாள வில்லை அவர்களுக்கு………

சாரகேஷ்…… அவர்களைப் பார்த்தபடி

“நானும் டாக்டர்தான் அங்கிள்……….. உங்க பொண்ணை நான் பார்த்துக்கிறேன்……… இதைத் தவிர……. வேறு ஏதாவது……….. காரணம் சொல்லுங்க” என்றபோது ஆவேசமானவன் தீபன் தான்

“என்னடா எத்தனை தடவ சொன்னாலும் ஏறாது உனக்கு………….. தர மாட்டோம்னு சொன்னா போவியா…….. வந்துட்டான்………. என்று அவன் கொண்டு வந்த தட்டு தாம்பாளம் எல்லாவற்றையும் வெளியில் வீச………..

விஜய்யும் அதிர்ந்து………

“தீபன்………. என்ன இது………….. வீட்டுக்கு வந்தவங்ககிட்ட……………..” என்று பதறி எழ

தீக்‌ஷா உக்கிரமானாள்…………

“பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டறீங்களா நீங்க………… என்னமா நடிக்கிறீங்க…………..” என்று விஜய்யைக் கேள்வி கேட்டவள்……..

பார்வதியிடம் …………..

“இது உங்களுக்குத் தேவையா பாரு…….. இவங்க யாரும் மனசை மதிக்க மாட்டாங்கனு…………. என்னை மன்னிச்சுடு பாரு……….. நீங்க போங்க… இதுக்கு மேல இங்க இருந்தா…. உங்களுக்கு அவமானம் தான்…” என்று சொன்னவள்

தேவகியைப் பார்த்து……….. கை கூம்பினாள்……………

சாரகேஷ்………….

“தீக்‌ஷா நான் போறேன்………….. போறதுக்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி……….. என்னைய உனக்குப் பிடிச்சுருக்கா இல்லையா………… அதுக்கு மட்டும் பதில் சொல்லு………… உனக்கு உடம்பு சரி இல்லைன்ற காரணத்தை தவிர……….. இங்க யாரைப் பார்த்தும் நீ பயப்பட வேண்டாம் என்று விஜய்யைப் பார்த்து சொல்லி மீண்டும் தீக்‌ஷாவைப் பார்க்க………… தீக்‌ஷாவுக்கு அவன் கேள்வியில் எரிச்சல் வந்தாலும்………. வெளியில் காட்டவில்லை……..

விஜய் தீக்‌ஷாவை…. தீக்‌ஷாவை மட்டுமே பார்த்தான்…………… அவளோ அங்கிருந்த எல்லோரையும் பார்த்தாள்………… விஜயையும் பார்த்தாள்தான்………….. பின்…

“பிடிக்கவில்லை” என்று அவன் முகத்தில் அடித்தார்ப் போல் சொல்லப் பிடிக்கவில்லை அவளுக்கு….. சாரகேஷை நோகடிக்க மனம் வரவில்லை அவளுக்கு…. அதனால்

”தெரியல………… ஆனா எனக்குப் பிடிக்கலைனும் சொல்ல முடியல………. பிடிச்சுருக்குனு சொல்ல முடியல………….. ” என்று பெற்றவர்களைப் பார்த்து தயங்கியபடிச் சொல்ல……

“இது போதும் எனக்கு” என்று சாரகேஷ் சொன்ன போது

விஜய்க்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை………… ஆனாலும் அவன் பிடிவாதமாய் இருந்தான்……………….. அவனுக்கு தெரியும் …………. அவன் பயப்படுவது போல் எதுவும் நடக்காது………… என்பதை அவன் இதயம் சொன்னது……….. இருந்தும் அவன் தனிமை நாடி வெளியேர துடித்தான்……….

விஜய் எழுந்து வெளியே செல்ல ஆரம்பிக்க

தீபன்

“எங்க போறீங்க விஜய்…………. இடையில் எழுந்து போனா என்ன அர்த்தம்…………” என்றவனிடம்

“நான் போறேன் தீபன்…………..” என்றபோதே அவன் குரலா என்று யோசிக்கும் அளவு உள்ளே போயிருக்க

”நீங்க எதுக்குப் போகனும்………….. போக வேண்டியவங்க இவங்கதான்……….” என்று சாரகேசைப் பார்க்க

அவன் ஏதோ சொல்ல வர

தீபன் கை காட்டினான் ………. வெளியே செல்லும்படி…………

“நீங்களா போனிங்கனா நல்லது…… இல்லை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ற சூழ்னிலை வரும்….. எது வசதி…….. ”என்று எள்ளளாகப் பார்க்க

பாரு மட்டும் தீக்‌ஷாவிடம் வந்தாள்………..

“நல்ல மரியாதை கெடைச்சுருச்சு தீக்‌ஷா…………. உன்னை என் அண்ணன் லவ் பண்ணதுக்கு…………. என் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு…………. நாங்க என்ன செஞ்சோம்……… உன்னை எங்க வீட்டு பொண்ணா கூட்டிட்டு போகத்தான் வந்தோம்…………. ஆனா ………. தேவைதான் எங்களுக்கு………… நீ ஒரு வார்த்தை என் அண்ணனை பிடிச்சுருக்குனு சொல்லி இருந்தா……….. அவருக்கு இந்த நிலை வந்திருக்காது…….. அவர் தலை குனிந்து நிற்கிறார்டி…………” என்று கண்ணீர் மல்க கூற…………….

சுரேந்தர் தன் அண்ணனைப் பார்த்தபடி……………

“என் அண்ணா அங்க உயிரே போய் நிக்கிறாரு……. இவளுக்கு இவ அண்ணன் தல குனிஞ்சு நிக்கிறது……….. பெருசா போச்சு………. கடவுளே…………. ” என்று அவன் ஒரு புறம் புலம்பிக்கொண்டிருக்க……..

”அவகிட்ட என்ன பேச்சு…………. கிளம்பச் சொல்லி வெகு நேரமாச்சு…………. வாசல் இந்தப் பக்கம்………..” என்று தீபன் கை காட்ட…………. பார்வதி வெளியேற போனாள் தன் அண்ணனோடு…………. அன்று தீக்‌ஷா தன் குடும்பத்தோடு விஜய் வீட்டிலிருந்து வெளியேறியது போல…………

தீக்‌ஷாவுக்கு மனம் தாங்க வில்லை………….. சில நிமிடம் யோசித்தவள்………….

“ஒரு நிமிசம் பார்வதி” என்று நிறுத்தியவள்…… தன் தந்தையை நோக்கி வந்தாள்….

“அப்பா…………… எனக்கு இந்த நிமிசம் வரை சாரகேஷ் மேல காதல் இல்லை………… அது ஏன் வரலைனும் தெரியல………… “ என்று அவள் ஆரம்பித்த போது விஜய் உதட்டைக் கடித்து………….. அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று மனம் பட படவென்று அடிக்கத் தொடங்க………….. உண்மையைச் சொல்லி விடலாமா என்று கூட யோசிக்கத் தொடங்கி இருந்தான்……. சொல்லி மட்டும் என்ன ஆகப் போகிறது என்று அவளின் தற்போதைய நிலை உணர்ந்து தளர்வானவன்………….. உன்னைய விட்டு அவளால போக முடியாதுடா…………. வந்து சேர்வாடா உன்கிட்ட………… தைரியமா இரு…………….. எவ்வளவோ முடிஞ்சுருச்சு…………. இது ஒரு பிரச்சனையாடா…………………… என்று அவள் இருக்கும் அவனின் இதயம் அவனுக்கு ஆறுதல் சொல்ல………….. தான் இருக்கும் அவள் இதயம் தன்னிடம் அவளைக் கொண்டு வந்து சேர்க்கும் என் அவன் நம்பினான்…………… அது கொடுத்த நம்பிக்கை தைரியத்தை வரவழைக்க…….. வாசற்படியில் சாய்ந்து நின்றான்……………… பார்வையாளனாக மாறினான்….

அவனை நினைத்தே அவனுக்கு சிரிப்பாக வந்தது…………….. தன் நிலை யாருக்குமே கிடைக்கக் கூடாத நிலை…………….. விரக்தியில் உதடுகளை அழுந்த மூட………… அவனது நடுக்கத்தில் அவன் மீசை துடிக்க ஆரம்பித்தது……………. மனம் வேண்டாம் என்று சொன்ன போதும்……………….. தீக்‌ஷா பேச்சில் கவனம் வைத்தான்…………

தீக்‌ஷா பேசிக் கொண்டிருந்தாள்………… அவளுக்கா பேசச் சொல்லிக் கொடுக்க வேண்டும்……

“ஆனா எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியல…………… உங்க பொண்ணுக்குத் தான் பிரச்சனை………… அதைக் கூட பெரிதாக நினைக்காமல்… அவர் பொண்ணு கேட்டு வந்து நிற்கிறார் என்றால்…………. நீங்கதான் அவர் காலில் விழுந்து கும்பிடனும்………… மூலையில உட்காரப் போற பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முன் வந்திருக்கிறார் என்று…. நியாயமா பார்த்தால் ’பாரு’ அம்மாவுக்குதான் இது பெரிய கவலை…….. அவங்களே பையோனட விருப்பம்னு இங்க வந்துருக்காங்க……………. ஆனா……………. நீங்க எல்லாம்…………….. என்ன மரியாதை செஞ்சீங்க…………. என்றவள்

“இவன் என்னமோ என்னை பெரிய டாக்டர் கிட்ட காட்டி…………. என் உயிரைக் காப்பாத்துனான்னு தலையில தூக்கி வச்சு ஆடறீங்க….. போன வருசம் இவன் நம்ம ஸ்னோ பாப்பா பிறந்த நாள் விழால பண்ணினதெல்லாம் தெரியாமல்…..“ என்றபோது அவள் குற்றம் சாட்டியவன்………………………. அவளின் வார்த்தைகளை மட்டுமே கேட்டான்…………… அவன் கண்கள் மூடி இருந்தன…………..

“இவன் பணம் மட்டும் தான் கொடுத்தான்…………….” என்று ஏளனமாக இதழ்களை வளைத்தவள்

“இவர் எனக்கு வாழ்க்கையே கொடுக்கிறேன் என்கிறார்…………… யாருப்பா உங்களுக்கு பெருசு……….. “ என்று கேட்டபோது…………….. அதற்கு மேல் அங்கு நிற்கும் சக்தி இன்றி விஜய் வெளியேறத் தொடங்க

“விஜய் அத்தான்……………… நில்லுங்க” என்று அவன் முன் வந்தாள்……………

”நீங்க எதுக்குப் போறீங்க,……. நீங்கதானே இங்க நாட்டாமை…” என்று போன அவனையும் நிறுத்தியபடி….

தீபனை வெறித்துப் பார்த்தாள்……… தன் அண்ணனா இவன்………… இல்லையில்லை……….. தன் முன் நிற்கும் விஜயேந்தரின் தங்கையின் கணவன்………. பணக்கார வீட்டு மாப்பிள்ளை…………. அதுதான் இந்த ஆணவம்…….. என்று நினைக்கும் போதே ராதா தங்கள் வீட்டுக்கு வருவதற்கும் முன் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வர………… இன்றைய நிலைமையை நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் அவளை மீறி வழிய……..

……….. தன் அண்ணனை நோக்கி…………..

“என் அண்ணா தீபன் எங்கடா போயிட்டான்……………….. நீ இவனோட பணத்துக்கு விலை போயிட்டியாடா…………….. நீ பணக்கார வீட்டு மாப்பிள்ளையா ஆகிட்டடா……………. இவனுங்க உன்னை மாத்திட்டானுங்க…………. உன்னை மட்டும் இல்லை நம்ம அம்மா, அப்பா” என்ற போது விசும்ப ஆரம்பிக்க………… ராதா அவளிடம்


“என்ன தீக்‌ஷா………….இப்படிலாம் பேசுகிறாய்” என்று அவளை அணைத்துப் பேச ஆரம்பிக்க

“ச்ச்சேய்……….. என்னைத் தொடாத…… எல்லாம் உன்னாலதான்………… எங்க வீட்டுக்குள்ள நீ என்னைக்கு காலடி எடுத்து வச்சியோ அன்னைக்கே எங்க குடும்ப நிம்மதி எல்லாம் போச்சு…..என் அண்ணா…………. எங்க வீடு…………. என் அம்மா அப்பா……… எல்லாத்தையும் உன் வசதிக்கு ஏற்றார் போல மாத்திக்கிட்ட……. என்னைய தனியா தவிக்க விட்டுட்ட… எல்லாமே உன்னாலதான்… உன் ஒருத்தியாலதான்…… உன் காதலாலதான்….” என்று ஒருமையில் பேச ஆரம்பிக்க

”தீக்‌ஷா” என்று தீபன் அதட்ட

விஜய் எதுவும் பேசவில்லை……. அப்போதும் மௌனமாகவே இருந்தான்……

தன் அண்ணனின் நிலையைப் பார்த்த ராதா… இப்போது

“ஏய் யாரு.. யாரை மாத்துனா…………. உன்னாலதான் என் அண்ணா” என்று ஆரம்பிக்க………ராதாவை பார்த்து விஜய்

”ராதா” என்று மட்டும் சொல்லி நிறுத்த

ராதாவோ

“என்னால முடியலண்ணா…………..” என்று கேவியபடி அவனிடம் ஓடி வந்து அவனிடம் சாய்ந்து அழ ஆரம்பிக்க………….

“ஏய்….. நீ எதுக்குடா அழற…………. அவ தெரிஞ்சா செய்கிறாள்” என்றபடி தன் தங்கையைத் தேற்ற ஆரம்பிக்க

தீக்‌ஷா அவர்கள் இருவரையும் பொறாமையுடன் பார்த்தாள்……………… அவர்களைப் பார்த்தபடியே…….. தீபனிடம்

“பார்த்தியாண்ணா………… உனக்கு மட்டும் ஏன் அண்ணா என் மேல பாசம் இல்லாமப் போச்சு………….. என்னைக்காவது ராதா அண்ணிய அவங்க அண்ணா 3 பேரும் விட்டுக் கொடுத்திருக்காங்களா………….” என்ற போதே………….

“உனக்கு கூட ராதா அண்ணினா உயிர்தானே………….. அன்னைக்கு நம்ம குடும்பத்தையே அவமானப் படுத்தி அனுப்பியும்……….. அண்ணிய விட்டு பிரிந்துருக்க முடியாம தவிச்சேல…………. நல்லா இருங்க எல்லாரும்………….” என்றபடி………

இது 2 வருசத்துக்கு முன்னால் பிருந்தாவனமா இருந்த நம்ம குடும்பம் இல்லை…………. இந்த வீடே…. இதோ இங்க நிற்கிறானே இவனோட கோட்டை……….. இன்னைக்கு என் குடும்பமே இவன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நிற்குது………… இதுவரை நான் மட்டும் தனியாளா தவிச்சேன்………….. இன்னைக்கு என்னை நம்பி வந்த………… என் ஃப்ரெண்ட் குடும்பத்துக்கு என்னால் அவமானம்…….. எப்டிணா மறந்த….. இவன் அன்னைக்கு என்னை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளினானே மறந்து போச்சா………… அப்போ நாம என்ன வலி வேதனை அனுபவிச்சோம்…….. இன்னைக்கு அதே காரியத்தை நீ சாரகேசுக்கு பண்ணப் பார்த்தாயே அண்ணா…………. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ………. நான் இந்த வீட்டில் இத்தனை நாள் உங்க எல்லாருக்காகவும் தான் இருந்தேன்…………. இதைவிட்டு எப்போதுடா போவோம் என்று இருந்தேன்…….. அதற்கு கூட கொடுத்து வைக்க வில்லை எனக்கு………. சரி சாகும் வரை இங்கேயே ஒரு மூலையில் இருந்து விட்டு நிம்மதியாய்ப் போவோம் என்று நினைத்தேன்……… அது கூட எனக்கு இந்த வீட்டில் இனி கிடைக்காது போல………… இனி இங்க இருக்க மாட்டேன் நான்....... என்றபடி யார் பதிலையும் எதிர்பார்க்காமல் பார்வதியின் கையைப் பற்றியவள்………..கிளம்ப………… தீபன் அவள் பேச்சில் உறைந்து நிற்க…..


விஜய்………….. வாய் திறந்து அவளிடம் கேட்டான்………..

“நீ நிம்மதியா இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் சொல்………… நான் செய்கிறேன். “ என்ற போது அவன் முகம் கல்லாய் இறுகி இருக்க………..

அவனைப் பார்த்து ஏளனமாய் இதழ்களை சுழித்தவள்……… ”என் விருப்பப்படி வாழ வேண்டும்……. நிம்மதியா வாழ வேண்டும்….. எனக்கு அது இங்க கிடைக்கவில்லை போதுமா.. என்னை இங்கிருந்து போக விடுங்க……” என்றவள் யாரையும் எதிர்ப்பார்க்காமல் முன்னே நடக்க………. சாரகெஷ் அவள் அருகில் வர……… அவனிடமிருந்து விலகி பார்வதியின் கையைப் பிடித்தபடி முன்னே போக……… சாரகேஷ் தன் அன்னையோடு சென்றபடி தன் காரில் ஏறினான்………

“தீக்‌ஷா எங்கடி போற…….. நான் சொல்றதைக் கேளுடி…”. என்று ஜெயந்தி முன்னே வர…………. விஜய் அவளைத் தடுத்தபடி………

“அவ போகட்டும் அத்தை…………… நிம்மதி வேண்டுமாம் அவளுக்கு….. அவளோட நிம்மதி எதுனு அவளுக்கு புரியாதா…….. அது புரியும் போது அவளே வருவா…… “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சுனந்தா அத்தை என்று ஓடி வர…….. சுனந்தாவை தீக்‌ஷாவிடம் விடாமல் … விஜய் அவளைத் தூக்கிக் கொள்ள….. இப்போது சுனந்தா….

“அத்தைகிட்ட போறேன்” என்று அழ……..

”அத்தை வந்துருவாடா” என்ற போது விஜய்யே சுனந்தாவின் நிலையில் தான் இருந்தான் என்று சொல்ல வேண்டும்……

இப்போது….. தீக்‌ஷா சுனந்தாவை பார்க்க…. சுனந்தாவின் மீதிருந்த பார்வை விஜய்யிடம் மாற………. ஒரு நிமிடம் தயங்கியவள்………. அங்கிருந்து போக மறுத்த தன் மனதை அடக்கியபடி… காரின் அருகே சென்று ஏறினாள் தீக்‌ஷா………

அவள் போகும் வரை வாசலிலிலே நின்ற விஜய்………. சாரகேஷ் கார் அவன் கண்ணை விட்டு அகல………….. விஜய் தன் மனதோடு மன்றாடத் தொடங்கியவன்…. அங்கிருந்து நகன்று உள்ளே வந்தவன்………… தீக்‌ஷாவின் புகைப்படத்தின் அருகில் போய் நின்று வெறிக்க ஆரம்பித்தான்…….

தீபனோ

”எல்லாமே விஜய்யினால்தான்.. அவன் பிடிவாதத்ததால் தான் இன்று… தீக்‌ஷா வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்திருக்கிறாள்….” என்று கோப முகத்தோடு …. விஜய்யை நெருங்கினான்………….

1,433 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

1 Comment


கன்ஃபர்ம்.... விஜய் ஏதோ ஒரு சூழ்நிலையில் தீக்ஷாவை கல்யாணம் செய்து கொண்டான் ன்னு நினைக்கிறேன்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page