அன்பே! நீ இன்றி!! 13

அத்தியாயம் 13

அடுத்த நாள்………….. தோழிகள் இருவரும் சந்தோசமாய்ப் பேசியபடி அலுவலகம் சென்று கொண்டிருந்தனர்……………… தீக்‌ஷாவின் தோழிதானே பார்வதியும்………… அடங்குவாளா என்ன……….. விஜய்யிடம் அவன் சொன்ன வழியில் வருவதாக தலை ஆட்டி விட்டு…. அவன் சொன்ன வழியில் செல்லாமல் வழக்கமாய்த் தான் செல்லும் வழியிலே சென்றாள்……….

பார்வதி வண்டியை ஓட்ட…………… தீக்‌ஷா வழக்கம் போல் பேசியபடி வந்தாள்…..

”பாரு உன்னைப் பார்த்ததில் இருந்து எனக்கு ஏதோ பழைய தீக்‌ஷாவா ஆனா மாதிரி இருக்கு,………. விஜய் அத்தான் கிட்ட கூட எனக்கு கோபம் வரலை தெரியுமா………..” என்று சொன்னவளிடம்………….

“நீ பாட்டுக்கு நேத்து வராம இருந்துட்ட…….. எனக்குத்தான் பயமாகியிருச்சு “ என்றவளிடம்

“ஏன் பயம்…….. எதுக்கு பயம்” என்று கேட்டவளின் கூந்தல் காற்றின் பறந்து பாருவின் மேல் மோத….. பார்வதி அலுவலகப் பேச்சை மறந்து……. அவளிடம்

“உனக்கு நீளமான முடிதானே தீக்‌ஷா……… அதை ஏன் வெட்டிகிட்ட………..” என்று கேட்க

“அதுவா……………. சும்மாத்தான்……….”. என்றவள்……….. தொடர்ந்து

“அண்ணி வந்த பின்னால்…………. வீட்டில் வேலைக்கும் ஆள் வர……….. அம்மாவுக்கு அண்ணியும் உதவியா இருக்க…………. என்னைக் கண்டுக்கவே இல்லை…………. திட்டக் கூட இல்லை……….. அதுதான் நேர பார்லர் போய் முடிய வெட்டிட்டு வந்துட்டேன்……………. அன்னைக்கு எனக்கு கெடச்ச திட்டு இருக்கே…………….. சும்மா………… வானத்துக்கு எகிறுச்சு………..சூடுதான் போலனு கொஞ்சம் பயம் வேற வந்துருச்சு தெரியுமா…….. இந்த வைஜெயந்தி யோட அராஜகத்துக்கு அளவே இல்லைதான்………….. ஆனா……………. எங்க அம்மா திட்டாம இருந்தாலும் நல்லா இருக்காது…………… அப்போ அப்ப பூஸ்ட் ஏத்திக்கிருவேன் ”