top of page

அன்பே! நீ இன்றி!! 12

அத்தியாயம் 12

காரில் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்த தீக்ஷாவைப் பார்த்த சுரேந்தருக்கு………. அவள் கோபமாய் இருக்கிறாள் என்று அவள் முகத்தைப் பார்க்கும் போதே தெரிந்தது……. அதுமட்டும் இல்லாமல்……… அவ்வப்போது வரும் மயக்கமும்………. அன்று வந்திருந்ததால் அவளின் கோபமுகத்தில் களைப்பும் தெரிய……. சுரேந்தர்……………. அவளிடம் பேச்சுக் கொடுத்தான்……………. சுரேந்தர் தன் அண்ணனிடம் அவள் மயங்கிய விசயத்தைச் சொல்லவில்லை……… இது அடிக்கடி நடக்கும் என்பதால்… சொன்னால் அவன் மனம் கஷ்டப்படும் என்பதாலும் சொல்லாமல் விட்டு விட்டான்

“மேடம் என்ன இவ்ளோ கோபம்……" என்றபோது….. அவன் எப்போது பேசுவான் என்று காத்திருந்தவள் போல………… பேச ஆரம்பித்தாள் தீக்ஷா……….

"உங்க அண்ணனை இனி மாற்ற முடியாது…………… ஆனா நீங்களும் கொஞ்சம் கொஞ்சமா அவர் மாதிரியே மாறிட்டு வர்றீங்க………. என் மேல அக்கறையாத் தானே பார்வதி அண்ணா ரிப்போர்ட்ஸ்லாம் கேட்டாரு……………. திட்டிட்டு வந்துட்டீங்க………… பார்வதியையும் திட்டுனீங்களா………… ஆமா அவங்க வீட்டுக்கு வந்து அவங்களையே திட்டுற ரைட்ஸை உங்களுக்கெல்லாம் யார் கொடுத்தாங்களோ?" என்று படபடக்க…….

“ரொம்ப நாளைக்கப்புறம் நான் இன்னைக்குதான் சந்தோசமா இருந்தேன்……… மூட் அவுட் பண்ணீட்டீங்க அத்தான்" என்று முடிக்க

“சாரி………." என்று மட்டும் சொல்லி அவளைப் பார்த்தவன்…………. தொடர்ந்து….. அந்தப் பொண்ணு பேரு சாருமதி தானே………. பார்வதினு சொல்ற…………" என்று தன் சந்தேகத்தைக் கேட்க…..

“ரொம்ப முக்கியம்" என்று மனதிற்குள் நினைத்த தீக்ஷா……….

“ப்ச்ச்…. அவளுக்கு வீட்ல ஒரு பேரு…… வெளில ஒரு பேரு ……… இது ஒரு சந்தேகமா……………" என்று கேட்க…. சுரேந்தர் அசடு வழிந்தான்

“சரி விடு…. ஒரு டவுட் கேட்கக் கூடாதே…. "

“என்ன விடு…. தீக்ஷா கோபமா இருக்கால்ல……….. ஐஸ்கிரீம் பார்லர் போய் எனக்கு ஐஸ்க்ரிம் வாங்கிக் கொடுத்து கூல் பண்ணினால்தான்……….. இந்த தீக்ஷா கூல் ஆவா" என்று சாதாரணாமாக வம்பிழுக்கவே சொன்னாள்….. போகும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை தான்…..

ஆனால் சுரேந்தர்

“அதெல்லாம் முடியாது…….. அண்ணன் திட்டுவாரு…….." என்றவுடன்

“அப்போ நான் கண்டிப்பா போகணுமே…………. வாங்கத்தான்" என்று இப்போது பிடிவாதம் பிடிக்க………..

அவள் விட மாட்டாள் என்பதை உணர்ந்த சுரேந்தர்

“சரி அண்ணாகிட்ட ஒரு போன் பண்ணி சொல்லிறலாம் தீக்ஷா" என்ற போது

அவனது போனைப் பறித்து ஸ்விட்ச் ஆப் செய்து தன் பையில் போட்டவள்………….. தன் போனையும் ஆஃப் செய்து இருவருமாய்……… ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்து,,,,,,,,, அதன் பிறகு கோவிலுக்கு வேறு அவனை இழுத்து சென்று அங்கேயும் பக்திப் பழமாகி 2 மணி நேரத்தைக் கடத்தியவள் மீண்டும் காரில் ஏறி அமர்ந்தபோது அவன் போனை நல்லபிள்ளையாக ஆன் செய்து தந்தாள் தீக்ஷா

“எதுக்கு………… அவர்கிட்ட திட்டு வாங்கவா?" என்று நொந்து போய்க் கேட்டவனை

“ராமர் திட்டி…. லட்சுமணன் ஃபீல் பண்ணுவாரா என்ன?" என்று சிரித்த போது அவன் சிரிக்க வில்லை…………

“யுகி போன் பண்ணினானா……………. யுகி என்கிட்ட பேசறதே இல்லை" என்று வருத்தமாய்ச் சொல்ல…………

“பண்ணினான்…………. உன்னைக் கேட்டான்…………. நெக்ஸ்ட் வீக் வருகிறான்" என்றபோது

“ஹை ஜாலி……. ஆனா வந்தா அவன் கிட்ட நான் பேசவே மாட்டேன்" என்றவள்………. பின் தானே

“ஆனால் இந்த தீக்ஷா யுகி கூட எப்போதும் சண்டை கிடையாது……… யுகி சமத்து………… நானே சமாதானம் பண்றேன்" என்று பேசியபடி வந்தவள் தன் வீட்டில் இறங்கிய போது

“பார்வதி என்னை விட கோபக்காரி…….. நீங்க தாங்க மாட்டீங்க சுரேந்தர் அத்தான்……….." என்று கண்சிமிட்டி போனவளை ஆயாசமாய் பார்த்தபடி……. தன் போனை எடுக்க……….. அதில் பல அழைப்புகள் தன் அண்ணனிடமிருந்து வந்திருக்க… அது சைலண்ட் மோடில் போடப்பட்டிருந்தது தெரிய………. அது தீக்ஷாவின் வேலை என்று புரியாமல் இல்லை…………… சுரேந்தரே விஜய்க்கு போன் செய்தான்

“அண்ணா" என்ற போதே

“அங்கேயே இரு……….. நானும் வருகிறேன்" என்று விஜய்யின் குரலிலே கோபம் புரிய…… அவனை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று சுரேந்தர் யோசிக்க ஆரம்பித்து இருந்தான்

தீக்ஷா வீட்டிற்குள் சந்தோஷமாய் நுழைய………… விஜய் ஹாலில் வழக்கம் போல்……. தான் அமர்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்தபடி வெறித்து உட்கார்ந்திருந்தான்……….. அவளின் அரவம் அவன் உணர்ந்தும் அவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை.. ஆனால் தீக்ஷாவோ அவனைப் பார்த்தபடியே மேலே ஏறினாள்…………

அவள் மேலே ஏறும் போதே "ராதா…….. நான் கிளம்புறேன் மா" என்றவனின் குரலில்………… பாதிப் படி ஏறிய தீக்ஷா

“ஒரு நிமிடம்" என்று அழைக்க

அவளைப் பார்த்தவன்… அவள் ஏதோ அவனிடம் சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்த விஜய்….. என்ன என்பது போல் கேள்விப் பார்வை மட்டும் வீச….. ஆனாலும் கிளம்பும் வேகத்தில் இருக்க

“நான் உங்க கிட்ட பேசனும்………….. உங்க பொன்னான அரைமணி நேரத்தை ஒதுக்க முடியுமா?" என்றவளிடம்

அவன் எதுவும் பேசவில்லை…. அவளிடம் பேசத் தயார் என்பது போல் திரும்ப அமரப் போனான்………

அவனுக்குப் பதில் ஜெயந்தி பேச ஆரம்பித்தாள்

“2 மணி நேரமா……………. நீ பத்திரமா வீட்டுக்கு வந்து சேரனும்னு…….. அந்த தம்பி உக்கார்ந்திருக்கு………… உனக்கு என்ன நக்கலா?" என்றபோது

"எனக்காக அவர் எதுக்கு காத்திருக்கனும்" என்றவள்……….

“என்னிடம் ஏதாவது பேசனுமா உங்களுக்கு…….?" என்று விஜய்யைப் பார்த்து கேட்க

"இல்லை" என்பது போல் விஜய் தலையை மட்டும் ஆட்ட

“பின்ன எனக்காக எதுக்கு காத்திருந்தீங்க?" என்று விஜய்யை முறைத்து பின்..

அம்மா யாருக்கும் சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசாதீங்கனு எத்தனை தடவ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?" ஜெயந்தியிடம் கத்த ஆரம்பிக்க

“ப்ச்ச்………அவங்கள விடு…….. வா………. என்ன விசயம் சொல்லு" என்று அவளைப் பார்க்க…..

“வெயிட் பண்ணுங்க" என்று அலட்சியமாகக் கூறி மேலே ஏறியவளைப் பார்த்து ஜெயந்தி புலம்பியபடி போக………….

விஜய் அமைதியாக அவள் வரவுக்காக காத்திருக்க…… சுரேந்தர் தன் அண்ணனைத் தேடி உள்ளே வந்தான்…வந்தவனிடம்

“ஏன் சுரேந்தர் இவ்ளோ லேட்? ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல……… இங்க ஒருத்தனோட மனச யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா?" என்று அவன் சொன்ன போது…………… அவன் கோபத்தை எதிர்பார்த்து வந்தவன்………. அதைக் கூட தாங்கியிருப்பான், நெகிழ்வாய்……….. ஆற்றாமையாய்……… அவன் பேசிய வார்த்தைகளில் சுரேந்தர் உடைந்து போக….அதைக் கவனித்த விஜய்

“கோபமாத்தான் இருந்தேன் சுரேந்தர்…………. அதுலாம் எனக்கு இருந்து என்ன பிரயோஜனம்?" என்றவன் பார்வை எதிரே இருந்த தீக்ஷாவின் புகைப்படத்தில் நிலைக்க…………… இப்போது, கீழே இறங்கி வந்தாள் தீக்ஷா.

அவள் வந்த உடன் புகைபடத்தில் இருந்த தன் பார்வையை விலக்கி…………… தன் எதிரே அமர்ந்தவளைப் பார்த்தான்

"சொல்லும்மா" என்ற போதே………. அவள் எரிச்சலுடன்

“தயவுசெய்து……. என்னை நீங்க பரிதாபமா பார்த்து…… பாவம் போல பேசாதீங்க….. உங்களைப் பார்க்கும் போதுதான்….. எனக்கு நான் ஒரு நோயாளின்னே தெரியுது…… “ என்றபோது

விஜய் தன்முகத்தை இறுக்கமாக மாற்றி…………

“சொல்லு" என்றவனின் குரல் கடுமையைக் கொண்டு வந்து….. “இப்போ ஒக்கே வா?" என்று தீக்ஷாவைப் பார்த்து கேட்க

அதைக் கண்டு கொள்ளாமல்….. அவள் ஆரம்பித்தாள்….. அவளுக்கு 2 காரியம் ஆக வேண்டும்……. யாரிடம் போய்க் கேட்டாலும் அனைவரும் விஜய்யிடம் கேட்க வேண்டும் என்று சொல்வார்கள்…. அதனால் தானே களத்தில் இறங்கினாள்… பெரும்பாலும் அவள் விஜய்யுடன் நேரிடையாக பேச்சு வைத்துக் கொள்வதில்லை….. அலுவலகம் போகும் போது கூட மௌனம்தான் இருவரின் இடையே ஆட்சி செய்யும், அவனே பேசினால் கூட……….. இவளுக்குப் பேசப் பிடிக்காது….. அவனின் கோப முகம் கூட தாங்கிக் கொண்டாள்……… அவனின் அக்கறை கலந்த பரிதாப முகத்தை ஏனோ இவளுக்கு தாங்க முடியவில்லை…… இன்று தீக்ஷாவிற்கு அவனிடம் காரியம் ஆக வேண்டுமே…. அதனால் அவள் நேரிடையாக விஜய்யிடம் பேச ஆரம்பித்தாள்….. .அதுவும் அமைதியாக…..

"என்னோட ரிப்போர்ட்ஸ்லாம் வேண்டும், சாரகேஷ் பார்க்க வேண்டுமென்று சொன்னார்" என்ற போது, "ஹ்ம்ம் தருகிறேன்………" என்று அவன் முடிக்க

சுரேந்தர் அதிர்ந்து அவனைப் பார்க்க……………. பார்வையாலே அடக்கிய விஜய்

"அப்போ நான் கிளம்பவா?" என்று எழப் போனவனிடம்

“இன்னொன்னும் இருக்கு" என்ற போது

"இனி ஆஃபிஸுக்கு 'பாரு' கூட….. அவளோட பைக்ல வருகிறேன்" என்றவளிடம்………

முதலில் சொன்னது போல் உடனே சம்மதம் சொல்ல வில்லை அவன்………… அதற்குப் பதில்

“அதை நான் யோசித்து சொல்லணும்.... 'பாரு' கிட்ட பேசிட்டு சொல்கிறேன்" என்ற போது,

“ஹலோ என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஒரு மரியாதைக்கு நான் சொன்னேன்……. உங்க கிட்ட பெர்மிஷன் வாங்கலை…….. என்னமோ யோசிக்கிறேனு சொல்றீங்க அவ கூடத்தான் நான் இனி வருவேன் போதுமா" என்று சத்தமாகச் சொல்லி வேகமாய் எழ………

“ஏய்.. எதுக்கு இப்போ கத்துற……. வேண்டாம்னா சொன்னேன்? பாருகிட்ட பேசிட்டு சொல்றேன்னு தான் சொன்னேன்……… புரிஞ்சதா இல்லையா?" என்ற அதட்டலில்

தீக்ஷா அவனைப் பார்க்காமல்….. அருகில் இருந்த சுரேந்தரை முறைக்க…

“அவன எதுக்கு முறைக்கிற?" என்றபடி, ராதாவை அழைத்தவன்…. அவளின் அருகில் சென்று, "வர்றேம்மா ராதா" என்றபடி

“அவ கொஞ்சம் டல்லா இருக்கா….. ஏன்னு தெரியல…… பார்த்துக்கோ……. தனியா விடாத" என்று சொல்லியவன்… தீக்ஷாவிடம் திரும்பி….

"திங்கட்கிழமை நீ என் கூடத்தான் வரணும்……….. அடுத்த நாளில் இருந்து சாருமதியுடன் வரலாம்…. போதுமா?" என்று மறைமுகமாக சம்மதத்தையும் சொல்லி முடித்தவன் சுரேந்தரோடு வெளியேறியும் இருந்தான்………..

----------------

சாரகேஷ் தன் அறையில் குழப்பமாக இருக்க, பார்வதி அவன் முன் அவனுடைய முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்னண்ணா? ஏன் இவ்ளோ யோசனை? தீக்ஷாவுக்கு ஒண்ணும் ஆகாதுண்ணா" என்று மருத்துவன் ஆகிய அவனுக்கே இவள் ஆறுதல் சொல்ல "அவளுக்கு ஹார்ட்லலாம் ப்ராப்ளம் இல்ல பாரு" என்று சொல்லி பார்வதியைப் பார்க்க, "அண்ணா என்னண்ணா சொல்ற…… நார்மலாத்தான் இருக்காளா? அப்போ மூக்கில் இருந்து………… ஏன்னா ரத்தமெல்லாம் வருது?" என்று கவலையாகக் கேட்க, “ஹார்ட்லதான் பிரச்சனை இல்லைன்னு சொன்னேன்... பிரச்சனை இல்லேனு சொன்னேனா? அவளுக்கு பிரச்சனை இருக்கு… அது அவள் சொன்ன நோய் கிடையாது. அது எதற்காக சொல்லி வச்சுருக்காங்கனு தெரியல……. அவளை டெஸ்ட் பண்ணிப் பார்த்தாதான் தெரியும்" என்றவனிடம், “தீக்ஷா ரிப்போர்ட்ஸ்ல தெரியாதாண்ணா?" என்று சொல்ல “இவ்வளவு பெரிய நோய் இருக்குது சொல்லி அவள ஏமாத்தினவனுக்கு... அவளோட ரிப்போர்ட்ஸை மட்டும் மாற்றி தர தெரியாதா என்ன? அவ கொண்டு வருவது வேஸ்டாத்தான் இருக்கும்" என்றவனிடம்

“அண்ணா…. விஜய்க்கு மேரேஜ் ஆகிருச்சுனுதான் நான் கேள்விப் பட்டேன்…….. தீக்ஷாகிட்ட அதைக் கேட்கிறதுக்குள்ள……… அவ மயங்கி நான் பயந்துட்டேன்" என்றபோது, "ஆகி இருக்கலாம், தென் தீக்ஷாவுக்கு………. அம்னீஷியாவும் இருக்கும்னு நினைக்கிறேன், சில விசயங்கள் சொன்னபோது……… அவள் உணர்ந்து சொல்ல வில்லை……. தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்……… அதாவது ராகேஷ் வராத விஷயம் உட்பட" என்ற போது…….

பார்வதியும் கவலையாய் நோக்கினாள்.

“ராகேஷ் வேற யாரையோ லவ் பண்ணினான் என்று அவளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது…….. அவளாக அதை சொல்லவில்லை" என்ற போதே

"அண்ணா" என்று சந்தேகமாய்ச் சொல்ல…. “அவளோட நிச்சயதார்த்தம்…… ராகேஷ் நிலை……. இதெல்லாம் அவள் நினைவில் இல்லை என்பதுதான் நிஜம்... ஒருவேளை, ராகேஸோட மேரேஜ் ஆகி இருக்கலாம்……. அவனுக்கு ஏதாவது ஆகி இருக்கலாம்" "அண்ணா………" என்று தன் அண்ணனை வலியொடு பார்க்க.. அவள் கையை ஆறுதலாகப் பிடித்து அழுத்தியவன்…….

“ஏதோ ஒரு பலமான அதிர்ச்சி அவளோட வாழ்க்கைல நடந்திருக்கு………… சுனந்தா பிறந்த நாளில் நடந்ததை விட….. அதற்கு அந்த விஜய் கூட காரணமாக இருந்திருக்கலாம்……….. அவளோட மறந்திருக்கும் இன்றைய நிலை கூட அவனுக்கு சாதகமாக இருக்கலாம்…" என்று அவளைப் பார்த்தவன்………..

“நீ நாளையில் இருந்து அவன் ஆஃபிஸுக்கு போக வேண்டாம்மா" என்று முடிக்க, "இல்லணா நான் போவேன்………… நான் போகவில்லை என்றால்தான் விஜய்க்கு சந்தேகம் வரும் …. அதுமட்டும் இல்லாமல்……… நான் அந்த ஆஃபிஸ்ல இருந்தால் தான் தீக்ஷா பக்கத்தில நெருங்க முடியும்……… இல்லைன்னா. அவள நெருங்க முடியாது……." என்றபோது

அவள் சொல்லிய விசயமும் சாரகேஷுக்கு சரியாகப்பட, சரி என்று சொன்னவன்……….

“பாரு நீ ..உன் பாதுகாப்பும் எனக்கு முக்கியம் “ என்று அண்ணனாய் சொன்னவன், “ஒருநாள் தீக்ஷாவை நானே டெஸ்ட் செய்து அவளோட நிலைமைய அவளுக்கு சொல்வோம்…..அதுவரை நீ அவகிட்ட எதுவும் சொல்லாதே" என்று சொல்ல, பாரு, தலை ஆட்டினாள்………

--------------------

திங்கட்கிழமை, VD ப்ரோமோட்ட்ர்ஸ் அலுவலகம் வழக்கமான தன் பணியில் இருக்க, பார்வதி தீக்ஷா இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள். தீக்ஷா அன்று அலுவலகம் வர வில்லை…………. பார்வதி போன் செய்து கேட்க…………. வழக்கமான பெண்களின் உபாதை காரணமாக தான் வர வில்லை என்று சொல்லி, மறுநாள் வந்து தன்னை அழைத்துப் போகுமாறு சொல்லி வைத்தாள் தீக்ஷா. விஜய் பார்வதியைத் தன் அறைக்கு அழைக்க……

தன்னை அவன் அறைக்குத் தனியே அழைக்கிறான் என்ற போதே தீக்ஷாவை அவன் வீட்டு மாடியில் அவன் அடைத்து வைத்த ஞாபகம் வந்து………… அவளுக்கு பதட்டத்தில் வியர்வை அரும்ப, இருந்தும் ………… இத்தனை பேர் இருக்கும் அலுவலகம்…. என்ன ஆகப் போகிறது……… என்று தைரியமாக உள்ளே நுழைந்தாள். உள்ளே வந்தவளை பார்த்த விஜய்க்கு…. அவள் அசாதாரணமாக இருப்பது புரிய…… தீக்ஷா தன்னைப் பற்றி சொல்லி இருக்கிறாள் என்பது அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிய…. உட்காரக் கூடச் சொல்லாமல்……….. அவளையே பார்த்தபடி இருந்தான்.

மென்று முழுங்கினாள் பார்வதி…………..

“சார் வரச் சொன்னீங்க?" என்று அவள் எச்சில் முழுங்கி…. சொல்லச் சொல்ல…………. விஜய்க்கு சிரிப்பு வருவது போல் இருக்க..... இருந்தும் அவள் அறியாதபடி அடக்கியவன்…. அவள் பார்வை மாற்றங்களைப் பார்த்தபடியே

“ராட்சசி………. வில்லன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து சொல்லி இருப்பா போல….. இவ இந்த முழி முழிக்கிறா?" என்று நினைத்தவன்,

பார்வதி இன்னும் டென்சனாக ஆக இருப்பதை உணர்ந்து

விஜய், அவளிடம் அமைதியாக பேச ஆரம்பித்தான்.

“இது எல்லாம் உன் ஃப்ரெண்டோட ரிப்போர்ட்ஸ்... எடுத்துக் கொண்டு போய் உன் அண்ணனிடம் கொடு" என்று ஒரு ஃபைலைக் கொடுத்தவன்,

“நீ எந்த வழியில் வருகிறாய்?" என்று அவளைக் கேட்க, ஏற்கனவே மிரண்டிருக்க அவளுக்கு ……….. இப்போது காதை அடைத்தது போல் இருக்க………

"என்..என்ன?" என்று மீண்டும் கேட்க

"எந்த வழியில் வருவாய்னு கேட்டேன்?" என்றபோது அவன் பார்வை அவளிடமிருந்து மானிட்டரில் பதிய, அவளும் தான் வரும் வழியைச் சொல்ல…..

அவள் வழிகளை ஆராய்ந்தவன்……….. இனி அந்த வழி எல்லாம் வேண்டாம் என்று அவளைத் தன்னருகே வரச் சொன்னவன்…………. தன் மானிட்டரில் உள்ள கூகுள் மேப்பில் அவள் வரும் வழியைக் கூற…………..

அவள் அருகில் போய் நின்று……… ஜாக்கிரைதையாக சற்றுத் தள்ளியே நின்று அதைப் பார்த்தவள், 'இவன் என்ன லூசா? 25 கிலோமீட்டர்ல வர வேண்டிய வழியை விட்டு விட்டு, 40 கிலோ மீட்டர் சுற்றி வரச் சொல்கிறான்?' என்று மனதில் நினைத்தபடி, “சார் இது ரொம்ப சுற்று……… நான் வருவது சார்ட்கட்" என்று சொல்ல, இப்போது தைரியமாகவே பேச ஆரம்பித்து இருந்தாள்.

'நான் ஏன் இவனுக்கு பயப்பட வேண்டும்? என்னை என்ன தீக்ஷா என்று நினைத்தானா? என்கிட்ட மட்டும் வம்பு வளர்த்தால் அதுக்கபுறம் இருக்குடா உனக்கு….”நீ சொல்றத சொல்லு…. நான் வழக்கம் போல வருகிற வழிலதான் வருவேன்…. .' என்று தன் வழக்கமான தைரியத்தினை அவளுக்குள் கொண்டு வந்திருந்தாள்.

"நீ மட்டும் வந்தா, நீ சொன்ன வழியில் வா… இது அவ கூட வந்தா மட்டும்" என்று சொல்ல, அதில் இருந்த அதிகாரத்தில் சற்று அதிர்ந்து…….

அவளையுமறியாமல்….

"யார் கூட?" என்று கேட்க, "உன் ஃப்ரெண்ட்தான்…… வேற யார்?"

"தீக்ஷா கூடவா?" என்று கேட்க…….. அவன் தலையாட்ட……………

அப்போதுதான் பார்வதி ஒன்று உணர்ந்தாள்……… அவன் இதுவரை தன் முன் தீக்ஷா என்ற அவள் பெயரையே உச்சரிக்கவில்லை என்பதை…..

அப்போது, “சார் உங்கள பார்க்க………. ரெண்டு பேர் வந்திருக்காங்க. சக்தி பேரண்ட்ஸுனு சொன்னா தெரியும்னு சொன்னாங்க" என்று சொல்லியபடி அவன் பிஏ வர………….

"ஓ" என்ற விஜய், "சரி அவங்கள வரச்சொல்லு" என்று சொல்லியபடி எழுந்தவன்… பார்வதியிடம் திரும்பி,

“பாரு நீ நாளைல இருந்து உன் ஃப்ரெண்ட உன் பைக்ல கூட்டிட்டு வரலாம், இத அவகிட்ட சொல்லிரு" என்று வெளியேற, பார்வதி அங்கிருந்த படியே தீக்ஷாவுக்கு போன் செய்து…….. விஜய் அவள் தன்னோடு வர அனுமதி அளித்த விசயத்தைச் சொல்ல….. சந்தோசமானாள் தீக்ஷா.

அப்போது விஜய்யோடு உள்ளே வந்தவர்கள் இருவரும் மிகவும் சாதாரண தோற்றத்தில் இருக்க… விஜய் அவர்களை அலுவலக வாயிலில் போய் அழைத்து வந்த விதம் பார்வதியை வியக்க வைக்க, ஆவென்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தவளின் கண்களில் எதிரில் இருந்த விஜய்யின் புகைப்படம் எதேச்சையாகத் தெரிய அதிர்ந்து அதை நோக்கியபடி இருந்தாள். இப்போது தன் முன் இருக்கும் விஜய்யைப் பார்க்க, ஏகப்பட்ட வித்தியாசங்கள் அவள் உணர்ந்தாள்

விஜய் அவர்களிடம், "இன்னைக்கு………. சக்தி பிறந்த நாளா? நான் மறந்தே போய் விட்டேன். நீங்க போன் செய்து ஞாபகப் படுத்தி இருக்கலாம்….. அங்கிள்….."

"கோவிலுக்கு போனோம்….. அந்த பிரசாதம் தந்துட்டு…. தீக்ஷாவையும் பார்த்துட்டு போகலாம்னு……" என்று சொல்ல, அப்போதுதான் அங்கு நின்ற பார்வதியைப் பார்த்தவன்

"நீ போகலாம்" என்று கூற, பார்வதி அறை வாசல் கடக்கும் வரைக் காத்திருந்தவன், அவர்களோடு பேச ஆரம்பித்தான்.

“ஒருநாள் தான் மரியாதை……… தீக்ஷா ஃப்ரென்ட்னு சொன்னவுடனே மரியாதையும் போச்சா?" என்று புலம்பியபடி வெளியே வந்தவள் மனதில்……. அவன் தோற்ற மாற்றம் ஏனோ மனதைப் பிசைந்தது.

அந்தப் புகைப்படத்தில்…. அவன் மிகவும் கம்பீரமாக இருந்தான். அவன் அணிந்திருந்த உடையில் இருந்து….எல்லாமே அவனை ஒரு பணக்காரத் தோற்றத்துடன் காட்ட, இப்போது இருக்கும் விஜய்….. சட்டையைக் கூட டக் இன் செய்யாமல், ஏனோ தானோவென்று உடை அணிந்து… ஒழுங்காக சவரம் செய்யப்படாத முகம்…….முகத்தில் கம்பீரம் இருந்தது தான்…. ஆனால் அவன் கண்களில் ஏதோ ஒரு சோகம். அந்தப் புகைப்படத்தில் உள்ள அவன் கண்களில் ஒரு ஆளுமை இருந்தது. ஆனால் அது இப்போது இல்லாதது போல்தான் தோன்றியது பார்வதிக்கு. மனம் ஆராய்ச்சியில் இறங்க ஆரம்பித்து இருக்க, தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவளுக்கு……… விஜய்க்கு என்ன பிரச்சனை என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள். தான் இண்டெர்வியூக்குச் சென்ற விஜய் பில்டர்ஸில் இருந்த பரபரப்பு இந்த அலுவலகத்தில் இல்லை என்பதை வந்த அன்றே உணர்ந்திருந்தாள்தான், ஆனால் இப்போது ஏனோ அது கூட வித்தியாசமாகப் பட்டது………. சும்மா பேருக்கு இந்த அலுவலகம் இருப்பது போல் தான் தோன்றியது………..

கிட்டத் தட்ட அரை மணி நெரம் கடக்க…. பீல்டில் பிரச்சனை என்று அவளுக்கு போன் கால் வர…. அதை சொல்ல விஜய் அறைக்கு போனாள். அவனின் அனுமதி பெற்று உள்ளே போனவள்,

"ஒஎம்ர் கன்ஸ்ட்ரக்ஷன் ஃபீல்ட்ல பிராப்ளம்னு போன் வந்திருக்கு சார்" என்று அதைப்பற்றிய தகவல்களைச் சொல்ல,

“சுரேந்தர் தானே அதை ஹேண்டில் பண்றான்?" என்றபடி….. “ஏதும் பெரிய பிரச்சனையோ” என்று யோசித்தவன்… தன் தம்பி தனியாக மாட்டிக் கொண்டு விட்டானோ என்ற அச்சம் வர….. அதில் கொஞ்சம் வேகமாக எழுந்தவன்…., மறக்காமல் சக்தி பெற்றொரிடமிருந்து… பிரசாதத்தை வாங்கியபடி…. "நான் உங்க ரெண்டு பேரையும் இன்னொரு நாள் பார்க்கிறேன். சாரி இன்னைக்கு என்னால… அதிலும் உங்க பொண்ணோட பிறந்த நாள் அதுவும் உங்க எந்த ஆசையும் நிறைவேற்ற முடியவில்லை. உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியல… என்றவன்…. எதில் வந்தீங்க….. நான் ட்ராப் பண்ணவா?" என்றபோது,

"பரவாயில்லை தம்பி………. போய்ட்டு வாங்க" என்று அவன் அவசரம் உணர்ந்தவர்கள் அவனை வழி அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவன் நினைத்தது போல் பெரிதாக இல்லை…. சுரேந்தர் ஏற்கனவே அந்த இடத்திற்கு போயிருந்தபடியால், அங்கு நிலைமை ஓரளவு சரியாக, தீக்ஷாவின் வீட்டுக்கு கிளம்பினான் விஜய்..

---------------------------------

அவன் அவள் வீட்டை அடைந்த போது மணி நான்கைத் தொட்டிருந்தது. அவன் நுழைந்த போதே சுனந்தாவோடு தீக்ஷா விளையாடிக் கொண்டிருந்தாள். கண்ணாமூச்சி ஆட்டம்… அவள் கண்களைக் கட்டியிருந்தபடியால்…… அவளைப் பார்த்தபடியே உள்ளே வந்தான் விஜய். சுனந்தாவைத் கைகளால் தேடியபடி வந்தவள்……… விஜய் அருகில் அவனைத் தொடும் தூரத்தில் வர, விஜய் அவள் தன்னைத் தொடாதவாறு விலகி…. சற்றுத் தள்ளி நின்றான்..

“மாமா" என்று சுனந்தா சிரித்தபடி அவனிடம் ஓடி வர

படக்கென்று துணியை அவிழ்த்தவள், அவனைப் பார்க்க…………….

“டேய் ஸ்னோ குட்டி……" என்று அவளைத் தூக்கியபடி, “உங்க அத்தை ஆஃபிஸ்க்கு டிமிக்கி கொடுத்துட்டாளா என்ன…………….. உடம்பு சரி இல்லேனு மாமாகிட்ட சொல்லிட்டு…………. இங்க விளையாண்டுட்டு இருக்கா?" என்று அவளைப் பார்க்காமல் சுனந்தாவைப் பார்த்தபடி சொல்ல,

"என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க?" என்று கேட்டாள் தீக்ஷா….. ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக “சைட்ல ஒரு பிராப்ளம்………….. அதுதான் அங்க போய்ட்டு வருகிறேன்…. ராதா அத்தைலாம் எங்க?"

“மேல இருக்காங்க….. ஸ்னோ குட்டி வா நாம வெளில போய் விளையாடலாம்" என்று சுனந்தாவை அவனிடமிருந்து வாங்கியவள், வெளியேறப் போக………….

“இரு………" என்றவன் அவன் கொண்டு வந்த திருநீறை அவளுக்கு நீட்ட,

தயங்கியபடி.. "வேண்டாமே" என்று தயங்க, “கோவில் ப்ரசாதம் வேண்டாம்னு சொல்லக் கூடாது" என்று அவன் மீண்டும் நீட்ட, “வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டீங்களா?" என்று குரலில் அனலடிக்க சொன்னவளிடம்,

“கோவில் ப்ரசாதம் அதுதான்" என்று விஜய் இப்பொது தயங்க,

“அதுனாலதான் வேண்டாம்னு சொன்னேன்" என்று விருட்டென்று வெளியேற எத்தனிக்க, விஜய் சட்டென்று அவள் நிலை புரிந்தபடி……….

“சரி நீ இன்னொரு நாள் வைத்துக் கொள்….. ஆனா மறந்துராத….. என்று அங்கிருந்த மேஜை மேல் அவற்றை வைத்தவன்………………. பாப்பாக்கு வைக்கிறேன்" என்று தீக்ஷா அருகே நெருங்கியவன், அவள் மீது படாமல் சுனந்தாவிற்கு வைக்க முடியாது என்பதால், “பாப்பவை இறக்கி விடு" என்று சொல்லி…… அவள் இறக்கி விட்ட பின் சுனந்தாவின் நெற்றியில் வைக்க……

விஜய்யையே பார்த்தபடி நின்றிருந்தாள் தீக்ஷா…………

அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தும் அவளைப் பார்க்காமல்……………..

“நான் வரட்டுமா?" என்று கேட்ட அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளைத் தாக்க………… பதிலே சொல்லாமல், மனம்………….. ஏதோ சொல்ல………….. அதை தேடிச் சென்றவளை……… பார்த்த விஜய்………..

தன் தவறு புரிந்தவனாய்……… சுனந்தாவை அவள் பக்கத்தில் விட………… அவள் "அத்தை.. அத்தை" என்று பிடித்து இழுக்க, தீக்ஷா தன் நிலைக்கு வர……….. நிம்மதி அடைந்த விஜய், அவளிடம் சொல்லாமலே விடைபெற்றுக் கிளம்பினான். ராதாவைக் கூட பார்க்கவில்லை அவன்… அவன் அந்தப்பக்கம் செல்ல,

சுனந்தா தன் அத்தையின் நெற்றியில் வழக்கம் போல் விளையாட்டாய் முட்ட…… அவள் செயலில்….. விஜய் சுனந்தாவுக்கு வைத்த குங்குமமும் விபூதியும் தீக்ஷா நெற்றியை அடைய…………. சுனந்தா அவளைப் பார்த்து சிரித்தாள்…………. தீக்‌ஷாவுக்கு தன் நெற்றியை அடைந்த குங்குமம் கூட தெரியாமல் சுனந்தாவோடு விளையாட்டில் முமுமுரமாக இருந்தாள்…… இது போல் அவள் அறியா பக்கங்கள் என்று அவள் அறியும் காலம் வருமோ???

--------------

அன்று சாரகேசின் வீட்டில்……………….. பார்வதி விஜய் கொடுத்த ரிப்போர்ட்ஸை எல்லாம் அவனிடம் கொடுக்க………… அதை வாங்கியவன்……… பார்க்காமலே

“இது வேண்டாம் பாரு" அவன் இவ்வளவு தைரியமா கொடுக்கிறான் என்றால், இதில் கோல்மால் தான் இருக்கும் என்றபடி அதை ஃபைல்கள் இருந்த வரிசையில் ஓரமாய் வைத்துவிட்டான்.

விஜய்யைப் பற்றி தன் அண்ணனிடம் எதுவும் சொல்ல வில்லை அவள்…. தன் அண்ணனிடம் சொல்லவும் தோன்ற வில்லை அவளுக்கு.

வேறு ஏதும் பேசாமல் தன் அறைக்கு வந்தவள், தன் தோழி தீக்ஷாவுக்கு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்…… அவள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென்று….. என்று கடவுளிடம் மனமுருகி வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் அவளுக்குத் தெரியவும் இல்லை….

தீக்‌ஷாவைப் பார்த்ததில் இருந்து மனமெங்கும் அவள் எண்ணங்கள் தான் பார்வதியை ஆட்சி செய்து கொண்டிருந்தன….. இன்று விஜய்யும்…..

அந்தப் புகைப்படத்தில் இருந்த விஜய்யின் கம்பீரம் இன்று ஏன் இல்லாமல் போய் விட்டது…. என்று நினைக்க….. அடுத்த நிமிடம் ஒருவேளை அவர் தொழிலில் தோல்வி அடைந்ததாலோ என்னவோ என்று மனமே அவளுக்கு பதில் வைக்க…. அதுவாகக் கூட இருக்கலாம்… என்று அவளே சொல்லிக் கொண்டவள நித்திரையிலும் ஆழ்ந்தாள்…..

1,394 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

1 Comment


ஏன் கவலை அந்த வில்லனுக்கு.... இப்போது மட்டும் ஏன் அக்கறை

Like
© 2020 by PraveenaNovels
bottom of page