அன்பே… நீ இன்றி??? 11

அத்தியாயம் 11

விழா முடிந்து…………. விருந்தினர் அனைவரும் கலைந்திருக்க………. மீதமுள்ள உறவினர் கூட்டமும் தீக்‌ஷா வீட்டிற்கு அனுப்பப் பட்டிருந்தனர்…………..

விஜய் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் ஹாலில் கூடி இருக்க………….. விஜய் அப்போதுதான் உள்ளே வந்தான்............... அதுவரை எப்படிக் தன்னைக் கட்டுப்படுத்தி இருந்தான் என்றே தெரியவில்லை பிரதீபனுக்கு……… விஜய் உள்ளே நுழையும் போதே………….. பிரதீபன்

“ராதா” என்று காட்டுக் கத்தல் கத்த …………………… அவன் குரல் அந்த பிரமாண்ட ஹால் முழுவதும் பட்டு எதிரொலித்தது……………………

அவனின் கூச்சலில் ராதா தன் அறையில் இருந்து நடுங்கியபடி இறங்கினாள்……… அதுவும் தீக்‌ஷாவின் நிலையை அறிந்த பின்னர் தைரியமாக இருப்பாளா என்ன………..

மேலே தீக்‌ஷாவோ அன்னை மடியில் விழுந்து அழுது கொண்டிருந்தாள்……….

முதன் முறை ஜெயந்தி ராதாவை மருமகளாக எடுத்திருந்திருக்க வேண்டாமோ என்று அவளும்…. மகளோடு சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்…….. ராதாவுக்கு எந்தப் பக்கம் பேசுவது என்றே தெரியவில்லை……………. கணவன் என்ன சொல்வானோ என்றும் தெரியவில்லை…………… அவன் கோபம் முகத்தை….. விழா நடக்கும் இடத்தில் அவள் உணர்ந்தாலும்………….. அப்போது காரணம் தெரியவில்லை……………. அறையில் தீக்‌ஷா அவள் அன்னையிடம் சொல்லி அழுத போதுதான் தீபனின் கோபத்திற்கான காரணம் தெரிய……….. உள்ளம் நடுங்கியது அவளுக்கு…….

யுகி, சுரேந்தர்……….. ராகவேந்தர்……… வைத்தீஸ்வர் தீபன் ஏன் கத்துகிறான் என புரியாமல் விழிக்க………. கலைச்செல்வியோ அப்போதுதான் உள்ளே வந்தாள்…………

கணவனின் குரலில்….. ராதா இறங்கி வர…………. அவளது நடையே அவளின் பயந்த தோற்றத்தை பறைசாற்ற……….

”சீக்கிரம் இறங்கி வாடி…………….. அன்ன நடை போட்டுட்டு வர்ற…………” என்று அவளை விரட்டினான் தீபன்….

சுரேந்திரும்……….. யுகேந்தரும்……. கொதித்து விட்டனர்…… தங்கள் தங்கையை அதட்டியது அவள் கணவன் தான் என்றபோதும்……… அதைத்தாங்க முடியாமல்

“அத்தான்……….. எங்க முன்னாடியே………….. எங்க தங்கச்சிய” என்று சொல்ல ஆரம்பிக்க

“என்னது…………. உங்க தங்கச்சியா ……………… ” என்று சொன்னவனின் வார்த்தைகளில் நக்கல் தாண்டவமாட…… அடுத்த நிமிடமே

”அவ என் பொண்டாட்டி………. என்ன வேணும்னாலும் சொல்வேன்…….. செய்வேன்…………………… “ என்றவன் ………….. கண்களில் அண்ணனின் ரவுத்திரம் இருக்க

அப்போது விஜய்

“தீபன்…………. நான் “ என்று ஆரம்பிக்க……………….விஜய்யினை திரும்பி ஒரு முறை முறைத்த தீபன்…………… ராதாவிடம்,

“என் தங்கை எங்கடி………….. உன்னை கூப்பிட்டது எதுக்குனு தெரிஞ்சுதான பம்மிட்டு வர்ற……… அவளைக் கூட்டிட்டி வராம தனியா வந்து நிக்கிற……… என்ன உன் அண்ணனைக் காப்பாற்ற போறியா” என்று அத்தனை பேர் முன்னிலையிலும் கேட்க….. ராதா………………. வழக்கம் போல் தன் அண்ணன் பாசத்தில்………..

“தீபன்……….. ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க……… அண்ணா தப்பா எதுவும் பண்ணியிருக்க மாட்டார்” எனும்போதே……………. பிரதீபனின் கை அவள் கன்னத்தில் பதிந்து மீள……….. அவள் பிறந்த வீட்டினர் துடித்துப் போனர்……….

ராதாவோ வாயடைத்து நின்றாள்……………. தன் கணவனின் கோபத்தில்………

தன் தங்கையின் நிலை பொறுக்காத…. சுரேந்தர் ஒரே தாவலில் தீபன் சட்டையைப் பிடிக்கப் போக…………… அவனைத் தடுத்த விஜய்……………… தீபனின் முன் நின்றான்…………….. இருவரின் பார்வைகளும் கோப அக்கினியை வெளியிட………………

தீபனால் தாங்க முடியவில்லை…………… மனைவி என்ற உரிமை இருக்கும் தான் அடித்ததிற்கே இவனுக்கு தாங்க முடியவில்லை…………. ஆனால் என் தங்கையை …………. அதுவும் அறையில் பூட்டி… கட்டிவைத்து……… நினைக்கவே அவனுக்கு நெஞ்சமெல்லாம் தகித்தது……………

“உன் தங்கச்சிய கூப்பிடு” என்று விஜய் சொல்லும் போதே அவன் கண்களும் சிவந்து நிற்க

”அவ எதுக்குடா……….. இன்னும் மிரட்டவா” என்று வார்த்தைகள் தடமாற ஆரம்பித்து இருந்தன……………… விஜய் தனக்கு பதில் சொல்வான் என்று தீபன் காத்திருக்க…………………….. அதற்குப் பதில்

“தீக்‌ஷா இறங்கி வாடி” என்று விஜய் கத்த………………..

இப்போது தீபன் விஜயின் சட்டையை பிடித்திருந்தான்………………..

அத்தனை பேரும் மிரண்டனர்………. இருவரின் கோபத்தில்……………..

இத்தனைக்கும் காரணமான நாயகியோ……………… சிவந்த விழிகளுடன் இறங்கி வர………………

தன் அண்ணன் கை……………. விஜய்யின் சட்டை மேல் பதிந்திருக்க……………. பார்த்த தீக்‌ஷா கலவரம் ஆக வில்லை……………. அதற்குப் பதில் என் அண்ணன் எனக்காக இருக்கிறான்…………. என்ற கர்வம் வர…………… அவள் கண்களில் கண்ணிர் நின்றது……….. தைரியமாக இறங்கினாள்……………. விஜய்யைப் பார்த்தபடியே…………………

இறங்கி வந்தவளிடம்………… தீபனின் கையைத் தட்டி விட்டபடி……… மின்னல் வேகத்தில் விஜய்யும் அவள் முன் நிற்க………

தீக்‌ஷா அவன் கோபத்தை சிறிதும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாய்ப் பார்த்தவள்…………….. அவனைத் தாண்டி சென்று தன் அண்ணனின் அருகில் நின்றாள்…..

“என்ன சொன்ன உன் அண்ணன் கிட்ட……………. என் முன்னாலேயே என் தங்கச்சிய அடிக்கிறான்” என்ற போது…..

”அண்ணியை எதற்கு அடித்தாய்………..” என்ற வண்ணம் தீக்‌ஷா தன் அண்ணனைக் கோபமாய்ப் பார்க்க…………. தீபன் தலை குனிந்தான்

ஜெயந்தி ஆரம்பித்து விட்டாள்

“நல்லா இருக்கு தம்பி…………. உங்க நியாயம்…… என் பொண்ணைப் பாருங்க…………… அவள அடிச்சுருக்கீங்க நீங்க……… இதுல என் பையன் அவ பொண்டாட்டிய அடிச்சதுல உங்களுக்கு……….. கோபம் வருதா” என்று ஆரம்பித்தவளிடம்

வைத்திஸ்வரன்…………..

”ஜெயந்தி…………………” என்று தன் மனைவியின் வார்த்தைகளை நிறுத்தியவர்……….. தீக்‌ஷாவிடம்……………… என்ன நடந்ததென்று கேட்க……………….. தீபன் அதை விளக்க…………

அத்தனை பேரும் அதிர்ந்தனர்………………. வைத்தீஸ்வரனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை……………….. ஆனாலும் தன் மகளின் வரம்பு மீறிய……….. இடமறியா பேச்சும்….. இதற்கு முக்கிய காரணம் என்று புரியாமல் இல்லை…………… அதனால் கொஞ்சம் பொறுமையாக….

ராகவேந்தரிடம்

“என் பொண்ணு என்ன வேண்டும் என்றாலும் பண்ணியிருக்கலாம்……. அதுக்காக உங்க பையன் என் பொண்ணு மேல எப்டி கைய வைக்கலாம் சம்பந்தி………………” என்று ஆரம்பிக்க………

பதிலுக்கு ராகவேந்தர் ஆரம்பித்தார்

“என் பையன் தொழில் விசயத்தில் ஏன் உங்க பொண்ணூ தலையிடுறா……….. என்ன தெரியும்னு அவ என் பையன எதிர்த்துப் பேசுவா…….. நாங்க அப்டித்தான் பண்ணுவோம்……. எங்களுக்கு எங்க பிஸ்னஸ் முக்கியம்” என்று விஜய்க்கு ஆதரவாக பேசியவரிடம் அலட்ச்சியமும்…ஆத்திரமும் இருக்க ……….. தீக்‌ஷா குடும்பத்திற்கு தெரிந்து விட்டது…………… இங்கு இனி நியாயம் கிடைக்காது என்று……………. வீட்டின் மூத்தவர் ராகவேந்தர் அவரே நியாயமின்றி பேசினால்…………… வேறு என்ன சொல்ல……… வேறு எங்கு செல்ல

ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க ராதாவுக்கு தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது………

அப்போது…………. தீக்‌ஷாவிடம் மீண்டும் வந்தான் விஜய்

“இதுக்குதான் சொன்னேன்……………. உன் வேலைய மட்டும் பாருனு…………… “ என்று சொல்ல………….

தீக்‌ஷா இன்னும் அடங்க வில்லை……………….. தன் குடும்பத்தின் ஆதரவும் சேர………… இன்னும் ஆக்ரோஷமாகவே பேசினாள்……………

“நீ ஒரு பொண்ணைக் கடத்தி வச்சு மிரட்டுவ…….. அத நான் பார்த்துட்டு சும்மா போகனுமா….. நல்லா இருக்கு நியாயம்………” என்று அவனை மீண்டும் தாக்க

யுகேந்தர் தீக்‌ஷாவிடம் வந்து

“தீக்‌ஷா இதுதான் பிரச்சனையா………….. அதுலாம் அண்ணன் தப்பா எதுவும் பண்ணலை” என்று ஆரம்பிக்க

“நீ சும்மா இரு யுகி…………… இவன்…………..” என்று மீண்டும் மரியாதை இல்லாமல் பேச

“மரியாதையா பேசு தீக்‌ஷா” என்று பல்லைக் கடித்தான் விஜய்……..

“அப்டிதாண்டா பேசுவேன்……….. என்னடா பண்ணுவ…………… பூட்டி வச்சு பொம்பள புள்ள மேல கைய வைக்கிற உனக்கு……… மரியாதை ஒரு கேடா………… பொறுக்கி” என்ற வார்த்தையை முடிக்க வில்லை……………..

விஜய்யின் கைகளால் அவள் பிடித்து இழுக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டிருந்தாள்…………………

விஜய்யின் இந்தச் செயலில் ராகவேந்தரே சற்று நிலைகுலைய…………. யுகேந்தர், சுரேந்தர்…. கலைச்செல்வி……… என அனைவரும்……….. விஜய்யை அமைதிப் படுத்த முயல………. விஜய் அவர்கள் யாரையும் லட்சியம் செய்யாமல்

“என் வீட்ல இருந்து என்னையவே மரியாதை இல்லாம பேசிவியா………………………. உங்களுக்கெல்லாம் இடம் கொடுத்தா………….. நீங்க…….. இப்டித்தான்…………ஏறுவீங்க……………. என்ற அவன் குரல் கூட கீழே தள்ளப்பட்ட தீக்‌ஷாவுக்கு தெளிவில்லாமல் தான் விழுந்தது……………

உள்ளே பிரச்சனை என்பதால் …………….. வேலையாட்கள் அனைவரும்………. வெளியே நின்று கொண்டிருந்தனர்……………

அவர்கள் அனைவரின்………….. முன்னிலையில்………….. தீக்‌ஷா அவமானப்படுத்தப் பட்டாள்……… அவர்கள் அனைவரும் தீக்‌ஷாவைப் பார்த்த பார்வையில் பரிதாபம் இருக்க………… அதில் குன்றிப்போன தீக்‌ஷாவால் எழக் கூட முடியாமல்…………… அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்……………… மேலே தனி அறையில் பட்ட அவமானத்தை விட இது கொடுமையாக இருக்க…………… கை கால்கள் எல்லாம் நடுங்கியது……………… இதயம் படபடப்பாக அடிக்கத் தொடங்க………….. அவள் உணர்வுகள் எல்லாம் அடங்கியது போல் இருக்க……………… ஜெயந்தியும் வைத்தீஸ்வரனும்………….. தங்கள் மகளை ஒடி வந்து தூக்கினர்………… எழுந்தவளின் உடல் நடுங்கியதை அவள் பெற்றோர் உணர………. துடித்துபோனார்கள் இருவரும்……..

தீக்‌ஷாவுக்கு விஜய்யின் செயல்…………. எதையுமே யோசிக்க விடவில்லை………… விஜய் இப்படிப்பட்டவனா என்ற எண்ணம் மட்டுமே இருக்க………. கல்லாய் நின்றாள்……….. கண்கள் கண்ணீரை அவள் அனுமதியின்றி வெளியிட………… அதைத் துடைக்கக் கூட முடியாமல் இறுகி நின்றாள்……………

பிரதீபன் அதிர்ந்து…………….. ராதாவை நோக்கியவன்………….. அதற்கு மேல் அங்கு நிற்காமல்…………. . வெளியேற ஆரம்பிக்க…………

ராதாவுக்கு எல்லாமே கை மீறியது போல் இருக்க…………சுனந்தாவைத் தூக்கியபடி தீபனின் பின்னால் வெளியேறினாள்….