அன்பே… நீ இன்றி??? 10

அத்அத்தியாயம் 10

விழா ஆரம்பமாக………… கேக் வெட்ட இன்னும் 20 நிமிடங்களே இருக்க………. விஜய் மட்டும் அந்த இடத்தில் இல்லை……….. சுரேந்தரும்………… யுகேந்தரும் சற்று தள்ளி நிற்க………… கலைச்செல்வி தீக்‌ஷாவிடம்…….

“இந்த விஜய் எங்க போனான்………….. போன் செய்தாலும் பிஸி ஆகவே இருக்கு ………… வந்திருக்கிறவங்க பாதிபேர் அவன் கெஸ்ட்” என்ற போதே……….

இளமதியும் இளமாறனும் அவர்கள் அருகில் வந்தனர்…… இளமாறனை தன் அண்ணன் திருமணத்தில் பார்த்திருக்கிறாள் தீக்‌ஷா…… அவன் விஜய்க்கும் மேல்……. அதனால் தீக்‌ஷா அவனைக் கண்டுகொள்ளவில்லை…………… அன்று விஜய்யுடன் இளமதி வந்திருந்தபோது பார்த்த அறிமுகத்தில்… தீக்‌ஷா அவளிடம் ஒரு சினேகப் புன்னகையை வைக்க………….. பதிலுக்கு அவள் தீக்‌ஷாவைப் பார்த்த பார்வையிலே……….. தீக்‌ஷா தெரிந்து கொண்டாள்…………. அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று………. அன்று கூட தன்னுடன் உட்காரப் பிடிக்காமல் தான் கிளம்பி விட்டாளோ என்று தோன்ற…….. தீக்‌ஷாவுக்கு அவள் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதெல்லாம் பெரிய விசயமாகத் தோன்றவில்லை………….. அதை விட்டு விட்டாள்………….. ஆனால் இன்னொன்றை யோசிக்க…………. அவளுக்கு இளநகை தோன்றியது……

“சிடுமூஞ்சி மகராசனுக்கு….. ஏற்ற சிடுமூஞ்சி மகராணி…………….. “ என்று அவர்களின் ஜோடிப் பொருத்தம் பற்றி நினைத்தவள்………… விஜய்-இளமதியை ஜோடியாக மனக்கண்ணில் வைத்தும் பார்க்கவும் தவறவில்லை…………….

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஜோடி நம்பர் 1 தான்….. சிடுமூஞ்சி ஜோடி நம்பர் 1” என்றபடி தன் அண்ணியின் அருகில் போக……. அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்தாள் போல….. அவள் அண்ணி………….

”தீக்‌ஷா இந்த ட்ரெஸ்ஸ என் ரூம்ல வச்சுரு…………. பாப்பாக்கு கிஃப்ட் கொண்டு வந்திருப்பாங்க போல,,,,,,,,,, பாப்பா கவரைக் கிழிச்சுட்டா” என்றபடி கொடுக்க…………… அதை வாங்கிக் கொண்டு….. காற்றில் பறந்த தன் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிய