
அன்பே… நீ இன்றி??? 1
அத்தியாயம் 1:
“அம்மா டிபன் ரெடியா எனக்கு…. லேட் ஆகிவிட்டது” என்ற பார்வதியின் குரலில் அந்த இல்லம் அதிர்ந்தது.
தங்கையின் குரலில் மொபைலில் பேசிக் கொண்டிருந்த சாரகேஷ் அவசர அவசரமாக கட் செய்தவன்
டைனிங் டேபிளின் அருகில் நின்றிருந்த அவனது அம்மா தேவகியின் அருகில் சென்றான்.
“எதுக்குமா இந்த ஆர்ப்பாட்டம் பண்றா இவள்….. இன்னும் டைம் இருக்குமா … என்னோட தானே வருகிறாள்…. பின்ன என்ன இவளுக்கு? என்றவனிடத்தில் அவனது அம்மா பதில் சொல்லும் முன் ’பார்வதி’ பதில் சொல்ல ஆரம்பித்தாள்
“எனதருமை சகோதரனே…. இன்றுதான் முதல் நாள் என் புதிய அலுவலகத்திற்கு , அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம் அதுமட்டுமில்லமால் நான் தனியாக போனால் கூட எனக்கு இந்த பதட்டம் இல்லை. நீ அட்வைஸ் பண்ணியே கொல்லுவ. அது வேற டென்ஷன் எனக்கு.” என்று சாப்பிட அமர்ந்தவளை கவலையோடு பார்த்தாள்…… தேவகி
” ‘பாரு’ இந்த ஆஃப்ஸிலாவது கொஞ்சம் பார்த்து நடந்துக்கமா ஏற்கனவே பார்த்த அலுவலகம் மாதிரி பிரச்சனையோடு வராதம்மா என்றவளின் குரலில் கவலை தெரிந்தது.
அவளின் கவலையை நோக்கியவன்
“இதுக்குதான் ’பாரு’ வுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்றால்
அவ பேச்சைக் கேட்டுகிட்டு இன்னும் ஒருவருடம் போகட்டும் என்கிறீரிகள்” என்றவனிடதில்
“அண்ணா உனக்கு அவசரம்னா நீ பண்ணிக் கொள். என்னை எதுக்கு இழுத்து விடுகிறாய் ?”
என்றவுடன்
”கிளம்பு ட்ராஃபிக் ஆகிவிடும் , அதன் பிறகு என்னதான் சொல்லுவ என்ற படி வேக வேகமாய் கை கழுவ எழுந்தான். அவன் நழுவுவதை உணர்ந்தவள்
சாரகேஷை பார்த்த படியே எழுந்து, கை கழுவும் இடத்தில் அவன் அருகே சென்று
“என்னண்ணா இன்னும் ரெட்டை சடை, லவ் லெட்டர் ஞாபகமா?” என்று கண்ணடித்தவளிடம்
கொஞ்சம் முறைத்தவன் “அப்டிலாம் இல்லை , அதெல்லாம் முடிந்து போன கதை….. இல்லைனா அம்மாவின் பெண் பார்க்கும் படலத்திற்கு ஒத்துக் கொண்டிருப்பேனா” என்றபடி நகர்ந்தவனை யோசனையோடு பார்த்தாள். மீண்டும் யோசித்தவள்…….
”அப்போ பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டரம்மா கூட இல்லையா” என்று போலியான கவலை படிந்த முகத்தோடு ஓட்ட
பார்வையால் அவளை அடக்கியவன்
”ப்ச்ச் என்ன விடு ’பாரு’ , இந்த ஆஃபிசிலாவது கொஞ்சம் அடக்கி வாசி, ஏற்கனேவே பார்த்த இரண்டு இடங்களுமே உனக்கு நல்ல அனுபவம் கொடுக்க வில்லை என்றவனிடம் ,பதில் சொல்ல வாய் திறந்தவளிடம் ,
“இரு நான் பேசி முடித்து விடுகிறேன் . அதன் பின் பேசு” என்றவன் தொடர்ந்தான்
”முதல் அலுவலத்தில் உன் மேலதிகாரியால் பிரச்சனை…… அவன் பண்ணிய தவறுகளை எல்லாம் நிர்வாகத்தில் முறையிட்டு அவனை வேலையில் இருந்து தூக்க வைத்தாய்…. ஆனால் அதன் பிறகு செல்ல மறுத்து விட்டாய்.. அடுத்த போன அலுவலகத்தில் ஒரு படி மேலே போய் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் என்று அங்கும் பிரச்சனை…. அது கோர்ட் வரை கொண்டு போய் விட்டது. கடைசியில் அந்த அலுவலகமே மூடக் காரணமாகி விட்டாய்….. உனது தைரியம் எனக்கு பிடித்து இருக்கிறது….. ஆனால் அண்ணன் என்ற முறையில் கொஞ்சம் கவலை, பயம்.. மற்றபடி எனக்கு பெருமைதாண்டா உன் மேல” என்றவனிடம்
”ம்ம்ம் புரியுது புரியுது என்றவள், இந்த தடவை உனக்கு அந்த கஷ்டம் வராதுண்ணா” என்றவளை நோக்கியவனிடம் ,
”வா வா போய்க் கொண்டே பேசலாம்” என்று மேஜையில் இருந்த தனது சான்றிதழ்களை சரிபார்த்தவள்………
”வீட்ல ஒரு பேரு சர்டிஃபிகேட்ல ஒரு பேரு……”.. என்று அலுத்தபடி கிளம்பினாள்.
பூசை அறையில் சாரகேஷிடம்
“சாரகேஷ் அந்த இடம் பொருத்தமா இருந்தா பார்க்கச் சொல்லவா……… புரோக்கர் கிட்ட சொல்லிடவா…….” என்றபோது….
”ஏம்மா நான் தான்….. உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் சர்னு சொல்லிட்டேனே” என்று சொல்ல
பாரு என்கிற பார்வதியோ
”அடேங்கப்பா என்ன ஒரு அடக்கம் என் அண்ணனுக்கு…. என்றவள் ’தீ’ என்று ஆரம்பிக்க….
தாயும்…தமையனும் முறைக்க…..
”இல்லம்மா ’தீ’ பிடிக்க ’தீ’ பிடிக்கனு சாங்க் பாட வந்தேன் என்று அவர்களின் முறைப்பில் சொல்ல இல்லை இல்லை உளற…
சாமி ரூம்ல பாடுற பாட்டா ’பாரு’ இது…… உன்னை என்று தேவகி அர்ச்சனையை ஆரம்பிக்க சாரகேஷ் நல்லா வேணும் உனக்கு என்ற பார்வையில் வாய்க்குள்ளாக சிரிக்க….. பார்வதி சாரகேசைப் பார்த்து முறைக்க என்று அந்த நிமிடங்கள் கடந்தது…. அதன் பின்
அன்னையிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, நினைவாகிப் போன தந்தையை வணங்கி விட்டு சாரகேஷுடன் கிளம்பினாள்.
சிறிது தூரம் சென்றவுடன் ,தன் சகோதரனின் கவலை படிந்த முகத்தைப் பார்த்தவள்,
“அண்ணா, இந்த அலுவலகத்தில் எனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது. ஏனென்றால் என் முந்தைய அலுவலக விபரங்கள் தான் இந்த வேலைக்கு காரணம். அதாவது எனது தைரியம். அதை புரிந்துகொள் . அதுமட்டுமில்லாமல் , அந்த ஆஃபிஸ் பற்றி முழு விபரமும் சேகரித்து விட்டேன் என்றபடி தொடர்ந்தாள்.
“VD Promotors” தொடங்கி 6 மாதம் ஆகின்றது. அதன் நிர்வாகத் தலைவர்கள் விஜயேந்தர் மற்றும் அவரது தங்கை கணவர் தீபன்….. இது மட்டுமில்லாமல் விஜய் பில்டர்ஸ் அவரின் மற்றொரு கம்பெனி…… இது அவரது மூலதனத்தில் உருவானது. மற்ற தொழில்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கு. தென் என்றவள் சிறிது இடைவெளி விட்டு ,
“விடி ப்ரொமோடொர்ஸ் துவங்குவதற்கு முன் இவருக்கு தொழிலில் மிகப் பெரிய அடியாம். அதாவது நஷ்டம் இல்லை. கிடைக்கவிருந்த மிகப் பெரிய ப்ரொஜெக்ட் கடைசி நேரத்தில் கை நழுவி விட்டதாம். அது அவரின் கனவு ப்ராஜெக்டாம். அதில் 3 மாதம் அப்செட் ஆனவர் பின் தொடங்கிய தொழில் இதுவாம். வைராக்கியம் , இலட்சியம், தொழில் நுணுக்கம்,வியாபார தந்திரம் என்று எல்லா விதத்திலும் பேசப்படுபவர் என்று விஜயேந்தரைப் பற்றி அடுக்கியவள், சாரகேஷின் முகத்தினை பார்த்த படி என்னுடைய ரெஸ்யூம் பார்த்தவுடனே என்னை பற்றி தெரிந்து கொண்டே எந்தவொரு இன்டெர்வியுவும் வைக்காமல், என்னை மாதிரி ஒரு தைரியமான பெண் தான் இந்த வேலைக்கு வேண்டும்” என்று சொல்லியவர்……. என்று இல்லாத சுடிதார் காலரை தூக்கியபடி பேசியவளை சிரித்தபடி பார்த்தவன் அவளை வம்பிழுக்கும் நோக்கத்தில்
“உன்னை நம்பி வேலைக்கு எடுத்திருக்கார், அங்கே நீ என்ன திருவிளையாடல் பண்ண போகிறாயோ……… பாவம் அந்த மனுஷன்…. இந்த ஆபிஸ் எத்தனை நாளைக்கோ“ என்றவனிடம் முறைத்தவள் , வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
ஆனால் விஜயேந்தர் வாழ்க்கையில் திருவிளையாடல் பண்ணப் போவது தான் தான் என்று தெரியாமல்…….. தன்னால் தான் இந்த முறை அவள் தங்கை அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறப் போகிறாள்…. என்ற விபரம் அறியாமல் சாரகேஷ் பேசினான்
அதன் பிறகு அலுவலக விபரங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்……..
“எத்தனை மெம்பர்ஸ் இருக்காங்க……….. ஆபிஸ் டைம் என்ன” என்று கேட்க
“ஆமாம்………இப்போ கேளு……… ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்று சலித்தபடி
“ஹாஸ்பிட்டலே கதினு போன வாரம் ஃபுல்ல டேரா போட்டுட்டு……….. பெருசா விசாரிக்க வந்துட்ட….” என்றவளிடம்
“சொல்லும்மா… அண்ணா சாரி கேட்டுக்கிறேன்” என்று கொஞ்சி கெஞ்ச
“30 மெம்பர்ஸ்……… வழக்கம் போல 9-6 தான் என்றபடி……….இந்த ஆபிஸுக்கு நான் இன்டெர்வியூக்கு போகல…… விஜய் பில்டர்ஸுக்குதான் போனேன்………. அது பெரிய ஆபிஸ்…… ஆனால்…. அங்கே வேண்டாம் என்று….. சுரேந்தர்…….. அதாவது விஜயேந்தர் தம்பிதான் எனக்கு இந்த ஆபிஸ்ல ஜாயின் பண்ண அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்…… ”
இப்போது சாரகெஷ் விஜயேந்தர் மேரேஜ் ஆனவரா பாரு என்று கேட்க
“ஹ்ம்ம்ம்ம்ம்…. திருமணம் ஆனவர்தான்,,,, அப்படித்தான் கேள்விப் பட்டேன்….. என்று சொல்ல சாரகேஷ் முகம் தெளிய…
”ஆனால்….. மனைவி கூட சேர்ந்து வாழவில்லையாம்…. அப்டினும் சொன்னாங்க நான் பெருசா கேட்டுக்கலை” என்று சொல்ல…………
”ஏன்” என்று கேட்டான் கொஞ்சம் உள்ளே போன குரலில்
அதெல்லாம் விசாரிக்கலை…. தேவை இல்லாத விசயம்னு விட்டுட்டேன் “ எனச் சொல்ல….
தங்கையே தேவை இல்லாத விசயம் என்று சொல்லும் போது சாரகேஷும் அதற்கு மேல் விசாரிக்க வில்லை
அவர்களது கார் ’விடி ப்ரொமோட்டர்ஸ்’ முன் நின்றது. சகோதரனின் வாழ்த்துக்களை பெற்றவள் , இறங்கும் முன்,
“ஆனாலும்…. ரிசல்ட் தெரியாமல் ரீஎக்சாம் எழுத பிடிக்கலைதானே அண்ணா” என்றவளை பார்த்து
“பார்வதி… அவள் தோழியைப் பற்றி சொல்கிறாள்… என்பதை புரிந்ததால் அமைதியாய் அவளைப் பார்த்து மெளனப் புன்னகையுடன் காரைக் கிளப்பினான்.
அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பார்வதி தனது சான்றிதழ்களை சமர்ப்பித்தவள், விஜயேந்தரைப் பார்த்த பின்னால் தான் அலுவலகப் பணியில் பொறுப்பேற்க முடியும் என்பதால் ரிசெப்சனில் காத்திருந்தாள்.
10 நிமிடங்கள் போன நிலையில் ஆக்செஸ் கார்டின் சத்தம் கேட்ட நொடியில் ஹிண்டு பேப்பரில் இருந்து தலை நிமிர்த்தியவள் சந்தோசத்தில் கண் விரித்தவளின் உதடு தானாகவே ’தீக்ஷா’ என்றது.
பார்வதியைப் பார்த்த படியே வந்த ’தீக்ஷா’ வின் நிலைமையும் கிட்டத் தட்ட அதேதான். ஆனால் அவள் இவளைப் போல் மலைத்து நிற்காமல் ……. ஓடோடி வந்து சந்தோசத்துடன் கட்டிக் கொண்டாள்…..
ஏறக்குறைய 7 வருடங்களில் இருவரும் இழந்த நாட்களை அந்த அணைப்பு நிறைவேற்ற முடிய வில்லை. இருவருக்கும் நிறைய பேச வேண்டியிருந்தது. முதலில் உணர்வுக்கு வந்தவள் பார்வதிதான்.
உடனே தீக்ஷாவை முறைக்க ஆரம்பித்தாள்.
அவளின் கோபத்தினை உணர்ந்த தீக்ஷா, சற்று மெல்லிய குரலில் “ என் மேல நீ கோபமாய் இருப்பாய் என்று தெரியும்” சாரி அன்னைக்கு சூழ்நிலையில் எனக்கு என்ன “ என்ற போதே
தீக்ஷாவை முறைத்த பாவனையை மாற்றாமல்……… ”அண்ணா செஞ்ச தப்புக்கு நான்” என்று பேச ஆரம்பிக்க…..
அந்த அலுவலகத்தின் MD…. விஜய் என்று அழைக்கப்படும் விஜயேந்தர் உள்ளே நுழைந்தான்…….. விஜய்