சந்திக்க வருவாயோ?-62 Part 3

அத்தியாயம் 62 Pre Final2 - 3

ராகவ்… தன் ஒரு கரத்தால் இறுக அணைத்திருந்தும்… அவளால் தன்னவனின் முழு அணைப்பையும் உணர முடியாமல் இன்னும் இன்னும் அவனை இறுக்கமாகக் கட்டிக் கொள்ள… அப்போதுதான் ராகவ் கவனித்தான்….

“சகிம்மா… வெளில இருக்கோம்…” என்ற இலேசான அதட்டலில் சொன்ன போதே… அழுகையை நிறுத்தியபடி…

”அதுனால எனக்கென்ன…. என் புருசன நான் கட்டிப்பிடிச்சுட்டு இருக்கேன்.. எவன் கேப்பான் எவ கேப்பா” என்று வேகமாகச் சொல்ல… இப்போது கணவன் முறைப்பில்… அவன் ஏன் முறைக்கின்றான் என்பது புரிய

”மரியாதை… அதுதானே… எவங்க கேட்பாங்க… யார் கேட்பாங்க… போதுமா” வாய் சொன்னாலும்… அவனை விட்டு விலகாமல் மெதுவாக தலையை மட்டும் உயர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தாள் தான்… ஏற்கனவே பட்ட அனுபவம்… கொஞ்சம் அவளுக்குள் இப்போது எச்சரிக்கை மணியை அடித்தது போல…

“அது சரி… அப்போ ஏன் இங்க நிற்க…. இன்னும் கொஞ்சம் ரோட்ல போய் நிக்கலாமா…” என்று அவளின் பறந்த கூந்தலை சரி செய்தவனாகப் பேச ஆரம்பிக்க…

“சிவா சார் சொல்லிருக்கார்.. கொஞ்ச நாளைக்கு பப்ளிக் ப்ளேஸ்லலாம் போக வேண்டாம்… எச்சரிக்கையா இருக்கனும்னு… இல்லேண்ணா ரோட்ல என்ன… ஒரு பெரிய மாலுக்கே உன்னைக் கூட்டிட்டு போய் இறுக்க அணைச்சு உம்மா கொடுப்பேன்” என்றவளிடம்

“ஹான்… உன் இலட்சணம் எனக்குத் தெரியும்டி… வீட்ல இத்தனை பேர் இருக்காங்கனு… டேப்லட்ஸ் கொடுக்க மட்டும் என் பக்கத்தில வந்தவ… என்னமா பேச்சு பேசுற… இவ பெரிய மால்ல நட்ட நடு ப்ளேஸ்ல என்னைக் ஹக் பண்ணி உம்மா கொடுக்கிறவ… நம்பிட்டேன்மா” என்றபடியே அவளோடு உள்ளே செல்ல இருவருமாக ஹாலில் இருந்த சோஃபாவில் அமர.. அவளோ அவன் மடியில் அமர்ந்திருந்தாள்…

“என்னடி… ஒரே ஓவர் அலம்பல் பண்ற… நான் இருக்கிற நிலைமைல… சின்னாபின்னமாகி விடுவேன் போல” என்ற போதே… சொன்ன அவன் வார்த்தைகளைக் கவனித்தாளோ… இல்லை அந்த வார்த்தைகளைச் சொன்ன இதழ்களைக் கவனித்தாளோ… அதை எல்லாம் விட்டு விட்டு அவனின் மீசையை மட்டுமே பார்த்துக் கொண்டே இருந்தாள்…

அவளுக்குப் பிடித்த அவன் மீசை அவனுக்கு இன்னும் அதிக கம்பீரத்தைக் கொடுத்திருக்க.. குனிந்து… அவனின் மேலுதட்டை மட்டும் தன் இதழ்களால் அணைக்க… வார்த்தைகள் நிறுத்தம் செய்து தன்னையே இமைக்காமல் பார்த்தவனது கண்களை சளைக்காமல் பார்த்தவளுக்கு அவனின் கையணைப்பு சரிவர கிடைக்காமல் போக… அவனின் கழுத்தைச் சுற்றி தன் கரங்களை போட்டு வன்மையான இதழ் ஒற்றலை கொடுக்க ஆரம்பிக்க… மொத்தமாக ஆடிப் போனவன் அவளது கணவன் தான்… அப்படி ஒரு இதழ் முத்தத்தை இதுவரை அவன் அவளிடமிருந்து அனுபவித்ததில்லை…

கோபமாக… அவசர அவசரமாக… இல்லை… பயந்தவளாக… நாணத்துடனோ… கடைசியாக கண்ணீரோடு கொடுத்திருந்தாளே தவிர… இது போல… நிதானமாக மென்மையாக… மூச்சுக்காற்றுக்கு ஏங்கவெல்லாம் விடாமல் நீண்டு கொண்டே இருக்கும் அவளின் நிதான முத்தம் இதுவரை அவன் அனுபவிக்காதது…

ஒரு கட்டத்தில் ராகவ் மனைவியின் முத்தத்தை ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல்… மெது மெதுவாக அவளுக்குள் கட்டுண்டு போக… அவன் அடிக்கடி சொல்வது போல புதைகுழிக்குள் விருப்பத்தோடே புதைந்து கொண்டிருந்தான்… தன் மயக்கு மோகினியின் மாய வலையில்…. மயங்கிக் கொண்டிருந்தான்

அதே நேரம்

தன்னிடம் சொல்ல முடியாத வேதனைகளை வார்த்தைகளாக சொல்லுவதற்கு பதிலாக… முத்தத்தால் தன் வேதனைகளை கரைத்துக் கொண்டிருக்கின்றாள் என்பது ராகவ்வுக்கு நன்றாகப் புரிய…

தன்னை அவளிடம் மொத்தமாக கொடுத்து விட்டு… மனைவியை ஆள விட…. அவளது இதழ்கள் இதழில் இருந்து நெற்றி… இமை, கண், கன்னம் என பயணத்தை விடாமல் தொடர்ந்து அவனது இதழ்களில் மீண்டும் இளைப்பாற… ராகவின் கரங்கள்.. இப்போது தன்னவளை அணைத்திருக்க மட்டும் முடியாமல்… மெதுவாக தன் ஊர்வலத்தை தன்னவளின் மேனியில் ஆரம்பித்திருக்க…. மோகங்களின் தாப வலையில் ராகவ் முழ்வதுமாக சிக்கிக் கொள்ள…

இப்போது மனைவியின் மென்மையான இதழ் பயணங்களுக்கு நிறுத்தம் செய்தவனாக… அவனின் வேதனையைச் சொல்லும் பொருட்டு… வன்மையாக பதியப் போக… ஒரு நிமிடம் நிதானித்தான்.. தன் வேகத்தை தாங்குவாளா என்று.. சந்தியா கண்மூடி அவன் மேலேயே சரிந்திருக்க… அதன் பின் ஒரு நொடி கூட அவன் தன்னைக் கட்டுப்படுத்தவில்லை… அழுத்தமான வன்மையான இதழ் முத்தத்தை அவளுக்கு வழங்கிக் கொண்டிருக்க… அது தாங்காமல் அவள் மூடிய இமைகளின் மேலிருந்த புருவங்கள் சுழிந்து அவனுக்கு உணர்த்திக் காட்டினாலும் அவன் வன்மையை விடாமல் இருக்க…

இருவருமாக எத்தனை நிமிடங்களை கடந்து கொண்டிருந்தனர் என்றே தெரியவில்லை… அழைப்பு மணி ஓயாமல் அடித்த போதுதான் ஒரு கட்டத்தில் தங்களை விடுவித்துக் கொண்டவர்களாக ஒருவரை ஒருவர் பார்க்க… அப்போதும் சந்தியா அவன் இதழ்களில் இல்லையில்லை அவனது மீசையில் தன் இதழ் ஒற்றலை வைக்க… மயங்கி கிறங்கிப் போனவன் அவன் கணவனே….

”சகி… “ என்று மட்டும் தாபத்தோடு சொன்னவனுக்கு … யாரோ வந்திருக்கின்றார்கள்… என்று சொல்லத்தான் வாய் வரவில்லை

அவன் அப்படி இருக்க

அவளோ இன்னும் விழி திறக்காமல் “ரகு” என்று மட்டும் சொல்லி மீண்டும் அவன் இதழைச் சரணைடைய…. அதில் எல்லாவற்றையும் மறந்தவனாக மீண்டும் தன்னவளிடம் அடுத்த முத்த யுத்ததுக்கு ஆயத்தமாக… ஆனால் இந்த முறை அழைப்பு மணி வெகு வேகமாக தொடர்ந்து ஒலிக்க…

“ச்சேய்” என்று எரிச்சலோடு… வாய் விட்டே சொன்னவனாக … “யார்.. இந்த நேரத்தில” என்று சந்தியாவை விலக்க..

சந்தியாவும் இப்போது சுய நினைவுக்கு வந்தவளாக… அவனிடமிருந்து எழுந்து கொள்ள… தன்னவளை முழுவதுமாக அலசினான்…

இன்றைக்கு நடந்த விழாவுக்காக புடவை அணிந்திருந்தாள் சந்தியா… சற்று முன் இவன் கரங்கள் செய்த திருவிளையாடலில்… கலைந்திருந்த அவளின் உடையை அவனே சரி செய்து… அவளை எழ விட.. அவளும் தான் கலைத்த அவன் கேசத்தை சரி செய்துவிட்டவள் குனிந்து அவனுக்கு மீண்டும் தன் இதழ் உரசலை அவனுக்கு பரிசளித்து விட்டு… வேகமாக போய்க் கதவைக் திறக்க… வெங்கட்டும் நிரஞ்சனாவும் வந்திருந்தனர்…

வெங்கட் தன் நண்பனைப் பார்த்தபடியே உள்ளே வர நிரஞ்சனா சந்தியா இருவரின் பார்வைகளும் ஒன்றோடொன்று உரசி பின் மீண்டது…

நிரஞ்சனா-சந்தியா இருவருக்கும் இடையில் இன்னும் பிரச்சனைகள் தீர வில்லை என்பது நண்பர்கள் இருவருக்கும் புரியாமல் இல்லை…

ஆனால் சந்தியாவிடம் நிரஞ்சனாவைப் பற்றி பேசவே பயமாக இருந்தது ராகவ்வுக்கு…. நிரஞ்சனா என்று ஆரம்பித்தாலே முகத்தை தூக்கி வைப்பவளிடம் என்ன பேசி சமாதானப்படுத்துவது….

மழை விட்டும் தூவானம் விடாத கதையாக… சிவா இவர்களுக்கு சில தகவல்கள் சொல்லி அனுப்பி இருக்க... அதை விவாதித்தபடியே… அடுத்து இரண்டு மணி நேரங்கள்… வெங்கட் நிரஞ்சனாவோடு சென்றிருக்க…

அதன் பின் இருவரும் கிளம்பும் பொது வெங்கட் ராகவ்வை தனியே அழைத்து..

”டேய் சிஸ்டர் கிட்ட சொல்லி… இவ கிட்ட பேசச் சொல்லுடா… டெய்லி அழறாடா” என்ற போது ராகவ் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை… சிவா தகவல் சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் இருவரிடமும் தானே சொல்லி அனுப்புக்கிறான் அதனால் வெங்கட்–நிரஞ்சனா சேர்ந்து வருவது கூடஅவனுக்கு உறுத்தலாகவே இல்லை…

மீண்டும் தனிமை… சமைக்க வேண்டிய வேலை இல்லை… மதிய விருந்து சமையல்… இன்னும் மீதமிருக்க… அதைச் சூடுபடுத்தி எடுத்து வந்தவள்…. கணவனுக்கு ஊட்டி விட்டு… அவனோடு சேர்ந்து தானும் சாப்பிட்டு முடித்தபடி… அவனுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து போட வைத்தவள்… அவனைச் சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லி விட்டு… சமையலறைக்குச் சென்று விட்டாள்

சமையலறையில் பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கோண்டிருக்கும் போதே… தன்னவனை சிரமப்படுத்துகிறோமோ… அவன் கை இன்னும் சரியாக வில்லை எனும்போது அவன் உணர்வுகளை வீணாக சோதிக்கின்றோமா என்று தோன்ற… மனம் சுணங்கியது…

ஏனோ அவனை அருகில் இருக்கும் போது… அவளால் அவனை விட்டு தள்ளி இருக்க முடியவில்லை… தன்னாலேயே எனும் போது… அவனுக்குமே அது கொடுமைதான்… ஆனால் அவனிருக்கும் நிலையில் தான் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமோ… ஆனால் இருக்க முடியவில்லையே… எரிச்சல் எரிச்சலாக வர…

மீண்டும் அறைக்குச் சென்ற போது… இவளுக்காகவே காத்திருந்தவன் போல… சந்தியா உள்ளே நுழையும் போதே… அவளை நோக்கித் தன் கரங்களை நீட்டியவனிடம்..

“ப்ச்ச்” என்று…. சலிப்பாக இதழ் சுழிக்க... அது கூட ராகவ் இப்போதிருந்த நிலையில்… அவனுக்குள் தாபத்தின் அளவை அதிகப்படுத்தும் காரணியாக அமைய…