சந்திக்க வருவாயோ?-60

அத்தியாயம் 60:


அதீனா வழக்கு விசாரணை நாள்… அதிகாலை..

அந்த சிறைச்சாலையில் அதீனா இருந்த பகுதி பரபரப்பாக இருந்தது… கரண்… அம்ரீத்… சிவா.. நிரஞ்சனா… இன்னும் சில காவல் துறை அதிகாரிகள்…

நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு… சிவா அம்ரீத் இருவர் மட்டும் சந்தியா அதீனா இருந்த இடத்திற்கு வர…

நடந்து வரும் போதே... அம்ரீத் , சிவாவிடம்…

“சந்தியாவை நிரஞ்சனா கூட அனுப்பிட்டு… நீங்க அதீனா கூட கோர்ட்டுக்கு வரப் போறீங்களா சிவா” சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில்… எதிர்பார்க்காத கேள்வி அம்ரீத்திடமிருந்து…

அதிர்ந்து சிவா அவரைப் பார்க்க…

“சார்” என்ற சிவாவின் குரல் வெளியே வரவே இல்லை…