சந்திக்க வருவாயோ?-57

அத்தியாயம் : 57

இரவு 8 மணி….


நிரஞ்சனாவை அனுப்பி விட்டு வெங்கட்டுக்கு கால் செய்யலாமா வேண்டாமா என்று ராகவ் யோசித்துக் கொண்டிருந்த அதே வேளை... அவனது நண்பன் வெங்கட் தன் முன் இருந்த கணினியில் பார்வையைப் பதித்திருந்தான் …

புதிதாக கிடைத்த பதவி உயர்வு வேறு… அடுத்து தனக்கான வேலை என்ன என்ற ஆவலில்… அவனது இரத்த ஓட்டம் கூட புது உற்சாக வேகத்தோடு ஓடிக் கொண்டிருக்க…. இதோ பதவி உயர்வுக்குப் பின் கிடைத்த முதல் விசாரணை… டெல்லியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தின் மறு விசாரணை….

ஆம்… அதீனாவின் மீதான விசாரணைதான் அது… இன்வெஸ்டிகேஷன் டிபார்மெண்ட்டுக்கு மீண்டும் வந்திருந்தது அந்த கேஸ் தொடர்பான ஆவனங்கள்… அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் கடைசி கட்ட்டவிசாரணை அது முடிந்து தீர்ப்பு என இருக்க…

அதற்கு முன் சிறு குளறுபடி… இவர்கள் துறை விசாரித்த போது அப்ரூவராக மாறாத தீவிரவாதி… இப்பொது அப்ரூவராக மாறப்போகிறாள் என்று…. விசயம் கசிய… இவர்கள் துறைக்கு பெருத்த அவமானம் ஆக… அந்த வழக்கின் விசாரணைக்கு மீண்டும் கோர்ட்டில் விண்ணப்பித்திருக்க… இதோ நாளை அந்த பெண் கைதியை விசாரிக்க ஆணையும் வந்திருந்தது…

அதற்காக தற்காலிக குழு நியமிக்கப்பட்டிருக்க… அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் தான் வெங்கட் நியமிக்கப்பட்டு இருந்தான்… கிட்டத்தட்ட மாலை 5 மணிக்குத்தான் அந்த குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டான்… அடுத்து உடனடியாக இவர்கள் துறை போட்ட மனுவும் உடனடி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு… இவர்கள் கஸ்டடியில் அந்த குற்றவாளியை எடுக்காமல்… சிறைச்சாலைக்கே சென்று விசாரிக்க ஆணை வந்திருக்க…

அதிருப்தியில் வெங்கட்டின் உதடுகள் வளைந்தன….

“அவங்க இடத்துக்கு போய் விசாரிச்சு உண்மையைச் சொல்லுன்னா… என்ன உண்மை கிடைக்கும்… ” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்...

அலுவலகத்தில் … அவனுக்கு கீழ் நியமிக்கப்பட்டிருந்த உதவிக்காவல் ஆய்வாளரிடம் … ஏற்கனவே இருந்த குழுவில் இருந்தவர்… அவர் தன்னிடம் சொன்னவற்றை இப்போது தனக்குள் ஓட்டிப் பார்த்தான்

“நம்ம இன்வெஸ்டிகேஷன்ல அத்தனை வழிகளையும் உபயோகிச்சுட்டோம்…. அவ வாயே திறக்கலை…. எமோஷனலா… ஃபிஸிக்கலா… அவ பொண்ணுன்றதுனால…. என அத்தனை வழிகளையும் விசாரிச்சுட்டோம்.. ஃபைனலா அவளோட கூட்டாளி நாம பண்ணின டார்ச்சர்ல இறந்து போனதும்.. ப்ரஷர்ல நாமளும் இன்வெஸ்டிகேஷன முடித்தோமே தவிர… கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷன்தான்… அதீனா தன்னோட குற்றத்தை மட்டும் தான் ஒத்துகிட்டா… வேற எதையுமே அவ சொல்லலை… அந்த அளவு ட்ரெயின் ஆகியிருந்தா… இமோஷனல் ப்ளாக்மெயில் பண்ண… அவ ஒரு ப்ராஸ்டியூட்டோட பொண்ணு… அந்த அம்மாவும் இறந்துட்டாங்க… வேற எதுவும் கிடைக்கல… 15 வயதிலேயே அவ அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருக்கா… இங்க இருக்கிற பாப்புலர் மியூசிக் ட்ரூப்ல சிங்கரா ஜாயின் பண்ணின 2 வருடத்தில்… போலிஸ் ஆஃபிசர் ஃபேமிலி ஃபங்ஷன் அண்ட் அவார்ட் செரிமனில பாம் செட் பண்ணிருக்கா… கரெக்டா அந்த ட்ரூப் அவங்க நிகழ்ச்சிய முடிச்சு 20 வது நிமிசத்தில் சம்பவம்” என்று முடித்த போது…

வெங்கட்… முன் நெற்றியைச் சுருக்கிய யோசனை பாவத்தில் இருந்தான்…

”சோ…. அந்த பொண்ணோட 15 வயசுக்கு முன்னால என்னவா இருந்தாங்க…. எங்க இருந்தாங்க இந்த டீடையில் என்ன ஆச்சு.. இந்த இடத்தில நீங்க விட்ட கோட்டைதான்… சம்திங் அவங்க கேட்ச் பண்ணிருக்காங்க… “ என்று தனக்கு தகவல் தந்த உதவிக்காவல் ஆய்வாளரிடம் கேள்வியாகக் கேட்க… அந்த உதவி ஆய்வாளருக்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க மட்டுமே முடிந்தது

“ஓகே… பார்க்கலாம் நாளைக்கு அவங்க இருக்கிற ஸ்பாட்டுக்குத்தானே போகிறோம்… “ என்று கேட்க… ஆமாம் என்று அவனும் தலையாட்ட

உதட்டைப் பிதுக்கினான்… வெங்கட்…

“அவங்க ஸ்பாட்டுக்கு போனா… நாம் எப்படி சுதந்திரமா விசாரிக்க முடியும்… “ என்று மேஜையில் கையால் குத்தியவனுக்கு இனி வேறு வழியுமில்லை…. முடிந்த வரை பார்ப்போம் என்று விட்டு விட்டான்…

அதன் பிறகு இதோ அந்த விசாரணைக்கான அனைத்து விபரங்களையும் கையில் எடுத்தவன்… ஒரே மூச்சில் மனப்பாடம் செய்திருந்தவன்… அடுத்த நாள் அவளிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது அவனின் அலைபேசி அழைக்க…

“இந்த நேரத்தில் யார்” என்ற பார்வையுடன் அலைபேசியை எடுக்க… அவனது நண்பன் சந்துரு...

“டேய் மச்சான்….“ என்று ஆரம்பித்தவன்…

“ACP வெங்கட் சார் கிட்ட இந்த ஏழை பால்கார வியாபாரி பேசலாமோ” என்று நக்கலாக ஆரம்பித்து, அடுத்து நண்பனை பாராட்டு மழையில் குளிர்விக்க…

“போதும்டா மச்சான்… இப்படி பாராட்டும் போது குளிரத்தான் செய்யுது… ஆஃப்டர் ப்ரமோஷன் செய்யப் போகிற வேலையெல்லாம் நினைக்கும் போது… கொஞ்சம் பயமாத்தான் இருக்கு… பட் ஐ லவ் சேலஞ்ச்” என்றவன் நண்பனிடம் ஒரு போலிஸ் அதிகாரியாக இல்லாமல் அவன் நண்பனாக மட்டுமே பேசினான்… தன் நண்பன் இல்லாமல் வேறு யாரிடமும் இந்த பயம் என்ற வார்த்தைகளை எல்லாம் உபயோகப்படுத்தியிருப்பானா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்…

நண்பனின் வார்த்தைகளில் சந்துரு சிரித்தவனாக…

“அதெல்லாம் ஜூஜூபிடா உனக்கு…“ என்றவன் சில நிமிடங்கள் பொதுவாக பேசியபடி வைக்கப் போக… அப்போது வெங்கட்

“டேய் ராகவ்கிட்ட பேசுனியாடா… நான் போன் பண்ணினால் எடுக்க மாட்டேங்கிறான்… மே பி மேரேஜ்க்கு நான் வரலைன்ற கோபமா இருக்குமோ…. நான் எவ்வளவோ ட்ரை பண்ணினாலும் அவனை ரீச் பண்ண முடியலைடா… நீ ட்ரை பண்ணுடா… அப்டியே நானும் ஊடால புகுந்து… நம்மாளு கால்ல விழுந்து என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பை கண்டினியு பண்ணிக்கிறேண்டா…” என்று வெட்கமே இல்லாமல் ராகவ்வின் நண்பனாக மட்டுமே வெங்கட் பேச…

“தூ…. இது ஒரு பொழப்பு….” என்று வெங்கட்டைத் திட்டியபடியே… தன் மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்த்த சந்துரு….

“டேய் முதலில் எல்லாம் அவன் நம்ம பேச்சுலர்ஸ் இனம்டா… இப்போ… சம்சாரி ஆகிட்டான்… டைம் வேற நைட் 8… எனிவே ட்ரை பண்றேன்… ஆனால் அவன் ஏதாவது அசிங்கமா திட்டினால் அதை எல்லாம் உனக்குத்தான் பாஸ் பண்ணுவேன்” என்றபடியே… ராகவ்வுக்கு அடிக்க… கடைசி ரிங் வரை அடித்து… அது எடுக்கப்படாமல் போக… மீண்டும் மீண்டும் அடித்து சந்துரு ஓய்ந்தவனாக…

“எடுக்கலடா மச்சான்… விடு.. அவன் கால் பண்ணினா உன்னைப் பற்றி சொல்றேன்” என்ற போதே

“ப்ச்ச்… நான் மூனு நாளா ட்ரை பண்றேண்டா… வாட்ஸப் கூட அனுப்பினேன்… என்னோட மெசேஜ படிக்க கூட இல்லைடா…” என்ற போது தன் நண்பன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்ற வருத்தக் குரல் மட்டுமே வெங்கட்டிடம் இருக்க…

“லூசாடா நீ… அதெல்லாம் ராகவ் கோபம்லாம் படமாட்டான்… மே பி… மேரேஜ் மோட்ல இருந்து வெளிவராமல் இருக்கலாம்..” என்று தன் திருமணமான நண்பனை ஓட்ட ஆரம்பித்து… போலிஸ் நண்பன் வெங்கட்டின் கவலையைக் குறைக்க முயல…

வெங்கட்டோ போலிஸ் மூளையை உபயோகப்படுத்தி இருந்தான் இப்போது

“அதெல்லாம் சரிடா… ஆனால்… அவன் அன்னைக்கு விட்ட பில்டப்க்கும், இப்போ இருக்கிற மோடுக்கும் மேட்ச் ஆகலையே” என்ற போதே…

“உன் போலிஸ் புத்தியை உன்கிட்ட வருகிற கேஸ்ல யூஸ் பண்ணு… இந்த ஃபார்முலாவே வேறடா… கமு கபி டா…. “ சந்துரு உல்லாசமாக சொல்ல…

“என்ன கமு என்ன கபி யோ…. மேரேஜ் ஆகி ஒரு மாசம் ஆகிருச்சுதானே… போனைக் கூட எடுக்கமாட்டாராம் துரை… அதை விடு…. நீயும் என் இனம் தானேடா… உனக்கு மட்டும் அந்த ஃபார்முலா எல்லாம் எப்படி புரியுது… சைட்ல ஏதாவது வொர்க்அவுட் ஆகிருச்சாடா” என்று சந்துருவிடம் ஆராய்சியைத் திருப்ப…

“ஹி ஹி… எங்க எங்க வீட்ல எனக்கு மூத்ததுங்க ரெண்டு இருக்குதுங்களே…. “ என்று ஏக்கப்பெருமூச்சு விட்டவன் தன் நிலையை விடுத்து.. ராகவ் பற்றி பேச ஆரம்பித்தான்

“இல்ல வெங்கட்… கொஞ்சம் ப்ராப்ளம் டா அவனுக்கு… “ என்று ஆரம்பித்து அவன் வீட்டு நிலவரத்தைச் சொல்லி முடிக்க… வெங்கட்டும் சமாதானமாகி இருந்தான்… அதன் பின்

“அவன் மேரேஜ் போட்டோ இருந்தா அனுப்புடா…. எங்கயும் அப்லோட் கூட பண்ணலை…” என்று கேட்க… சந்துருவோ…