சந்திக்க வருவாயோ?-51-2

Updated: Jun 28, 2020

அத்தியாயம்:51- 2

சந்தியாவை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்த அன்றைய இரவு… ராகவ் தன் பிறந்த நாள் என்று சொன்ன இரவு…. இன்று ஞாபகம் வந்தது


ராகவ் பேசி முடித்து போனை வைத்த பின்…

----


திருமணத்திற்கு பின் வரும் ரகுவின் பிறந்த நாள்… இருவரும் ஒன்றாக இருக்க முடியவில்லையே… சந்தியாவுக்கு மனம் தவிக்கத்தான் செய்தது… ஆனாலும்… என்ன செய்வது… போனில் வாழ்த்து சொன்னதோடு முடிந்தது…. இந்த நள்ளிரவில்… அவனும் என்னதான் செய்வான்… கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது… அமைதியாக கண்களைத் திறந்த படி விட்டத்தை வெறித்தவளுக்கு உறக்கம் என்பது சுத்தமாகப் போயிருந்தது… ராகவ் மட்டுமே அவளது நினைவுகளில் ஆக்கிரமித்து இருக்க… மொபைலை எடுத்துப் பார்க்க… மணி 3 ஐத் தொட்டிருக்க… ராகவ் 2 மணி அளவில்தான் பேசி முடித்தே வைத்திருந்தான்… அவனோடு பேசிய போது நொடியில் கரைந்தன மணித்துளிகள்… இப்போதோ…. நொடிகள் கடக்கவே பெரும்பாடாக இருக்க… சன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்… வெளியில் தூறல் போட்டுக் கொண்டிருக்க.. சில்லென்ற அந்த சூழ்நிலையாவது தன் தனிமைத் துயரை போக்க முடியுமா என்று அதில் மூழ்க முயற்சித்தாள்…


கதைகளிலும், இலக்கியத்திலும் மட்டுமே கேட்ட… படித்த… தலைவனை நினைத்து தலைவி கொள்ளும் ஏக்கம் இப்போது தனக்குள்ளுமா… சந்தியாவுக்கு அவளையுமறியாமல் மெல்லிய சிரிப்பு அவள் இதழ்களில் …